ஒரு வித்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2024
பார்வையிட்டோர்: 100 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொஞ்ச நாளாக ஒரு வித்தை பழகி வருகிறேன். அதாவது பொழுது போகாவிட்டால் திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட வேண்டியது. தெருவிலே யார் போகிறார் என்று கண்ணெடுத்துப் பார்க்கக் கூடாது. நடக்கும் மாதிரி யில் இருந்தே இன்ன ஆசாமி போகிறார் என்று புள்ளி போட்டுவிட வேண்டும். அப்படி முடிவு செய்தபிறகு முடிவு சரிதானா என்று கண்ணெடுத்துப் பார்க்கலாம். 

இந்த மாதிரி ஆள்களைக் கண்டுபிடிப்பதில் கஷ்ட மொன்றுமில்லை. ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொருவருடைய நடையிலும் ஒரு தனி குணமோ போக்கோ இருக்கத்தான் செய்கிறது. 

ஒரு ஆசாமி இருக்கிறார். அவர் நடந்து போகும் பொழுது, பத்தரை மூட்டை மளிகை சாமான் விற்கும் நேரம் வீணாகி விடுகிறதே என்று நினைத்து குதிகால் தரையில் பாவாமல் பரபரப்புடன் நடந்து போகிறார். அவர் ஒரு வியாபாரி. 

ஒரு பெண் தண்ணீர் மொள்ளப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் குதிகால் தரையில் ஒரு அங்குலமேனும் பள்ளம் செய்யாமல் அடிபெயர்த்து வைக்கமாட்டாள். குடும்ப பாரம் தாங்க முடியாமலிருக்கிறது. இருந்தாலும் காத தூரத்திலிருந்து தண்ணீர் முதற்கொண்டு மொண்டுவந்து குடும்பக் கடனைத் தொலைக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்வதுபோல் இருக்கிறது அந்த நடை. அவள் ஒரு ஏழை. அவளுக்கு ஆறு குழந்தைகள். பின்னொரு உல்லாசக்காரி இருக்கிறாள் – நடந்தால் உள்ளங்கால் அழுக்காகிவிடுமே என்று நினைப்பதுபோல் நடந்து கொண்டு. 

ஒரு இளைஞன் இருக்கிறான்-காலின்கீழ் வில் இருப்பது போல நடந்துகொண்டு, ஒரு அசடு இருக்கிறது- கா தேய்த்து நடந்துகொண்டு. இன்னும் எத்தனையோ விசித்தி நடைகள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே யுகம் முழுவதையும் கழித்து விடலாம்.

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *