கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 5,713 
 

வடபாதி கிராமம்,

அழகான கிராமத்திற்கே உரிய குடிசை வீடுகள்,வாசலில் கோலங்கள்,

கட்டப்பட்டிருக்கும் ஆடுகள்,மாடுகள்,

மேயும் கோழிகள்,தீவனத்திற்க்காக குவிக்கப்பட்ட வைக்கோல்,அதன் மீது சாத்தப்பட்ட ஏணி,தென்னையும் பணையும் நிறைந்த, தனித்தனியாக மூங்கில் படலில் வேலியிட்ட வீடுகள்,

ஆற்றுக்கு கரையிலே ஒரு தத்ரூபமான ஐயனார் குதிரை மீது அமர்ந்து,தலையில் கிீரீடமும்,ஒரு கையில் நீண்ட வீச்சு அருவாளும் மறு கையில் அபயமும,முறுக்கு மீசையும் உடைய சிலை, அருகில் வெள்ளை யானை சிலை, அதற்கு முன்னே ஒரு வேலும் ஒரு சூலமும் நின்று கொண்டிருக்கும்.

இவைகளின் கம்பீரத் தோற்றம் அனைவரையும் ஒரு நிமிடம் உறைய வைக்கும்,ஆதலால் இரவு 10 மணிக்கு மேல் இந்த பகுதியில் நடமாட்டமே இருக்காது.

இரவில் ஐயனார் குதிரை மற்றும் ஐராவதம் மீதேறி ஊர் வலம் வந்து தங்களையும்,கிராமத்தையும் காப்பதாக நம்பினர், ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளதால் வடபாதியாகவும்,தென் பகுதி தென்பாதி எனவும் பிரிந்துள்ளது, இரு கிராமத்திற்கும் பகையே இந்த கோவில் நிர்வாகம், இரு கிராமத்திலும் களவுபோவது, இவர்கள் ஊரில்.தற்பொழுது அடிக்கடி களவு போவதுதான் இவர்களின் பெரிய கவலை,அது கூட தென்பாதி மீது தான் சந்தேகம்,எவனாவது கையும் களவுமா மாட்டட்டும்,அப்புறம் வச்சுக்கலாம் னு அமைதியா இருந்தாங்க!
இப்படி நமக்கு நிகழ்வது சாமி குத்தமாக கூட இருக்கலாம் என சாமியாடியை கூப்பிட்டு கேட்கலாம் என்றால் அவரும் நீண்ட நாட்களாக ஊரில் இல்லை ,வரட்டும் கேட்போம் எனவும், கிராமத்து பெரிசுகள் கூடி முடிவெடுத்தனர். அதுவரை கிராமத்து இளந்தாரி பசங்க நாலு பேரை ராத்திரில கண்கானிக்க உத்தரவிட்டார் ,ஊர் பெரியவர்.

நல்ல பலனளித்தது, அதற்கு பிறகு எந்த திருட்டும் நடக்கவில்லை ,என எல்லோரும் சந்தோஷமாக இருக்கையில், ஒரு நாள், ஒரு வீட்டில் ஆடு கானமல் போக, ஊரே கூடி நின்று பேசியது ஐயனார் கோவிலில்.திருடியவன் ஆட்டை நன்கு சமைத்து சாப்பட்டுவிட்டு போன சுவடுகள்,மது பாட்டில்கள்,பீடித் துண்டுகள்,இவைகள் அய்யனார் சிலையருகே கண்டனர். ஐயனார் சிலையும் நனைந்து இருந்தது.

எலே,மூக்கா ,ராத்திரி மழை பேஞ்சுதா? எனக்கேட்டார்

இல்லைங்க! அப்புறம் எப்படி தண்ணி சாமி மேல,

அந்த பசங்கல கூப்பிட்டு விடுங்க! வந்தார்கள்,

என்னய்யா நீங்க காவ காக்கிற லட்சனம்! ஒரு ஆட்டை அடிச்சு சாப்பிட்டு போற வரைக்கும் நீங்க என்ன பன்னிக்கிட்டு இருந்தீக!

பெரிசு,எங்களுக்கு என்ன தெரியும்,நாங்கள் ஐயனார்க்கு பயந்துகிட்டு கிழக்காலே காவல் பார்த்துகிட்டு இருந்தோம். ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர்.

சாமி குத்தம்தான் ஆயிருக்கு, அதான் சாமியே அடிச்சு சாப்பிட்டு இருக்கு என ஒரு கிழவி கூற, இனி இந்த மாதிரி வாரா வாரம் வெள்ளிக்கிழமை யில் படையல் ஊர்கூடி போடுவதாக வேண்டிக்கொண்டு கலைந்தனர்.

இப்படி, தானா படையலைப் போட்டா நாம ஏன் போய் ஆட்டை களவாடுறோம், என பேசி கலைந்தனர் நால்வரும்.

வாராவாரம்,ஐயனாருக்கு படையலிட்டனர்,அனைவரும் போன பிறகு நால்வரும்,சாமிக்கு மேல நீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு, குடித்து,கறி சாப்பிட்டு ருசித்தனர்,யாரோ வரும் சப்தம் கேட்க நால்வரில் ஒருவன் நல்ல பெரிய மீசையும்,கருத்த உடம்பும், கட்டுடலுடன் இருப்பான்,அவனை யானை மீது ஏறி நின்று பார்க்கச் சொன்னார்கள், அவன் ஏறி நின்று பார்த்ததை, வந்த நபர் பார்க்க ஐயனாரே நிற்பதாக கருதி ஓட்டம் பிடித்து மயங்கி விழுந்தார்,நிதானித்து நடந்த அனைத்தையும் சொல்ல,

மறுநாள் சாமி வந்து சாப்பிட்டதை அனைவரும் நம்ப, இன்னும் படையல் பொருள்கள்அதிகமாகிப் போனது. சாமியாடி ஊருக்கு வந்து சேர்ந்தார்.

ஐயனார் கோவிலுக்கு வந்தவர், சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை படையல் இட கூட்டம் சேர்ந்தது, சாமியாடிக்கு வியர்த்து,சாமியாடினார்,

ஏய்!நாக்கை துருத்தி மடக்கி கடிக்க,அனைவரும் பயங்கண்டு ஒதுங்கினர்,அந்த நால்வருக்கும் லேசான பயம் வயிற்றை பிசைந்தது.

ஏய்! ஏன்டா சாமியாடி இல்லாத போது என்னைய பட்டினி போட்டிங்க! இல்லையே சாமி ! நாங்கதான் படையல் போட்டோமே! நீங்களும் வந்து சாப்பிட்டதாலே இன்னும் அதிகமா செஞ்சோமே சாமி! தப்பு செஞ்சியிருந்தா மன்னிச்சிடுங்க! என பதறினர்.

எனக்கு எங்கடா போட்டிங்க?, எனக்கு கிடைத்தது வாழைப்பழம் மட்டும் தான்டா!

அந்த ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி அதுக்கு ஒரு வாழைப்பழம் கொடுத்ததை தான் சாமி சொல்லுது எனப் புரிந்தது. அந்த நால்வரில் மூவருக்கு.

சாமி! நீங்க சொல்லுங்க! நாங்க என்ன பண்ணனும்?

தென்பாதி கூட சேர்ந்து ஒத்துமையா இருந்து ஒரு விழா எடுங்கடா! அதற்கு அப்புறம் ரெண்டு ஊரும் சேர்ந்துதான் எல்லா விழாவும் கொண்டாடனும். அதுக்கு நாலு பசங்க எதிர்பாங்க அவங்களை சமாதானமாக போகச் சொல்லுங்கடா! என கட்டளையிட்டு மலையேறினார்.

ஏங்க ,தென்பாதியிலே இருக்கிற சரசு மக தேவியை நம்ம பயலுக்கு கட்டி வைக்கிறதா சின்ன வயசிலேந்து ஆசை காட்டிகிட்டு இருந்திங்க! இப்ப இரண்டு ஊரும் பேச்சு வழக்கு இல்லாம இருக்கு, என்ன செய்யறது ஒன்றும் புரியலை. என்றாள்
சாமியாடி மனைவி.

ஏண்டி கவலைப்படற,அதுக்குத்தான் இரண்டு ஊரும் ஒத்துமையா இருந்து விழா எடுக்கனும்னு குறி சொல்லிட்டேன்ல,இனிமே பிரச்சனையில்லை. அதை சாக்கா வச்சி சம்மதம் பேசி முடிச்சிடலாம், ஆனாலும் நம்ம பய, நண்பர்கள் மூன்று போரோட சேர்ந்து ஆட்டை,மாட்டை திருடி ரொம்ப பயம் காட்டிட்டாங்க போல,
ஊரே நடுங்குது.என்றார் சாமியாடி.

ஐயனாரே! என்னைய மன்னிச்சுடுப்பா, ஊரை பகைச்சுக்காம அந்த கல்யாணத்தை நடத்த உன்னை தவறா பயன்படுத்திக்கிட்டேன். அதுக்கு தண்டனை ஏதும் குடுத்திடாதப்பா! என வேண்டினார்.

பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது,அதில் சாமியாடி மகனும் இருந்தார். நண்பர்களில் மூவர் எதிர்த்தனர் ஒருவன் எதிர்ப்பது போல நடித்தான், ஊர் ஒன்றாக சேர்வதற்கும் அனைத்து விழாக்களையும் இனி சேர்ந்தே நடத்துவது என தீர்மானித்து,

சான்றாக சரசுவின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்ய புதிதாக சம்மதம் தெரிவிப்பது போல சம்மதித்தார், சாமியாடி.

தென்பாதி மக்களிடமும் எதிர்ப்பு வந்தது,ஒருவன் மட்டும் சமாதானமாகவே இல்லை, அத்தனை களவுகளுக்கும் எங்களையே குத்தம் சொன்னிங்க இப்ப மட்டும் எப்படி சமாதானம் பேசறீங்க ,சம்மந்தம் பன்றீங்க எனக் கேட்டான் ஒருவன்.

அதை சமாளித்து ஒரு வழியாக பேசி சமாதனமாயினர்.

காவலும் அன்றிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டது. களவும் நின்று போனது,சந்தோஷமாக நகர்தன நாட்கள்..

வெள்ளிக்கிழமை படையல்…இட்டனர்.

சனிக்கிழமை காலை பார்த்தனர்.

அனைத்தும் படையலும் அப்படியே இருந்தன.

ஐயனார் கையில் இருந்த அருவாளை மட்டும் காணவில்லை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *