ஏன் முடியாது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 449 
 
 

(1991ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறுப்பினர்கள் 

ஆச்சிமுத்து – சோம்பேறி,வீண்பொழுது போக்குபவர் 

கந்தன்வாத்தியார் – ஆசிரியர் 

காளி – முதியோர் கல்வி பயில்பவர் 

மணிமேகலை – மனவேதனை போகச் சேர்ந்தவர் 

செவப்பாயி – முழு ஆர்வமும் விவசாய முன்னேற்றத்திற்கும் பையனின் நலனுக்கும் பயில்பவர் 

காட்சி-1 

ஆச்சிமுத்து: இந்தா புள்ளே சேப்பாயி! அட ஒன்னத் தாம் புள்ளே! 

செவப்பாயி: இந்தாய்யா ஒனக்கு எதுனாச்சும் இருக்குதா நானு எம்புட்டு வெரசா போயிகிட்டு இருக்குறேன். சும்மா லவுடு ஸ்பீக்கர் மாதிரி அலர்றியே! 

ஆச்சி: ஓஹோ! இந்த பட்டணத்து வாத்தியாரு கந்தன் நடத்துறாரே ரவை பளளிக்கூடம் அதுக்குத்தான் இம்புட்டு வேகமா போறியா? 

செவப்: பின்னே! ஒன்னை மாதிரி வம்படிச்சு பொளுதை வீணாக்க சொல்றியா? 

ஆச்சி : ஊம் ஈண்ணுகெட்டப்றம் சூரியனை கும்பிட்டு என்ன பிரயோசனம்? 

செவப்: கண்ணுகெட்டிச்சுன்னு ஆரு சொன்னா ஒனக்கு? 

ஆச்சி : நீ ஒண்ணு! என்னமோ பாடம் எளுதலேன்னு சொல்லி வாத்தியாரு முதுகுபட்டைய எடுத்துப் புடுவேன்னு சின்னபுள்ளையா இருக்கறப்போ சொன்னாரு….அன்னைக்கு புடிச்ச ஓட்டந்தான்… பள்ளிக்கூடத்து பக்கமே தலைவைக்கிலியே! 

செவப்: சரியான பயந்தாங்கொள்ளி… பெத்தவங்களுக்கு ஒத்தவங்க படிச்சவங்க… கோளி முதிச்சு குஞ்சு மொடம் ஆயிடுமா? வாத்தியாரு அடிச்சாக்க நீ செத்துருவியோ! கொடுத்து வைக்கிணுமே! 

ஆச்சி: இன்னமே நானு படிச்சு, தேறி, எங்க உத்தி யோவத்துக்கு போவப் போறேன்? ஏதோ வயவாக் காட்டுக்குப் போயி பயிரு பச்சைய பாத்துகிட்டு காலத்தை தள்ளிப் புடலாமுன்னு பாக்குறேன்… அத்தோட சிலேட்டையும் புத்தவத்தையும் சின்ன புள்ளை மாதிரி எடுத்துகிட்டு போயிட்டா பாக்குற நாலு பயலுவ என்னிய பாத்தா சிரிக்கமாட்டான்?

செவப்: இப்ப ஒன்னிய தலைல வச்சிகிட்டா கூத்தாடு றாங்க?… இந்த பாரு…படிப்புக்கு மட்டும் வயசு கெடையாது… சாவுற வரைக்கும் படிக்கலாம்… வாத்தியாரு சொன்னாரு. நீ வேணுமுன்னா ஒரு நாளைக்கி வா…பாத்துகிட்டே இரு’ இஸ்டம்னா படி…இல்லாங்காட்டி வுடு… 

ஆச்சி : நம்மை போட்டு வதைக்காதே! இன்னைக்கு ஆடு புலி வெளையாட வாரதா சொல்லிப் புட்டேன்… இன்னொரு நாளு வர்ரேம் புள்ளே… 

செவப்: ஒன்னோட பேசினதுலெ இன்னும் நேரமாயிருச்சு…எனக்கு ஒரு பாடம் போச்சுது-நான் வர்ரேன்…(ஓடுகிறான்) 

காட்சி-2 

(மானூர் நாட்டாமைக்காரர் வீட்டில் முதியோர் கல்வி வகுப்பு நடைபெறுகிறது கந்தன் வாத்தியார் பாடம் நடத்துகிறார்) 

நேரம் இரவு 7.10 

கந்தன் : இந்தப் பூச்சியோட பேரு என்ன? சொல்லுங்கம்மா காளி! 

காளி : புகையான்… 

கந்: சரியா சொல்லிப்புட்டீங்களே!… 

காளி : என்னங்க நாங்க எங்க வயல்ல பாத்துகிட்டே இருக்குறோமே.. 

கந்: இதை பாத்து எழுதுங்க… (புகையான் என்று எழுதிய அட்டையைக் காட்டுகிறார்) 

காளி : பு…கை…யா…ன் 

கந் : அம்புட்டு தாங்க… 

காளி : நானு வூட்டுலேயே எளுதிப் பாத்தேங்க… மவங் கூட எளுதிக் காட்டுறான்… ஐயா… கைய வலிக்குது கொஞ்ச நேரங்களிச்சு எழுதறேங்க 

கந் : ஒங்களை யாரு என்ன சொல்லப் போவுறாங்க.. ஏம்மா மணிமேகலை… 

மணிமேகலை : என்ன வாத்தியாரய்யா? 

கந்: நேத்தே கடியாரம் பாத்து மணி சொல்ல கத்து கொடுத்தேன்…எங்கெ…இப்ப மணி சொல்லுங்க பாத்தலாம்…(ஆறு ஐம்பது அட்டையைக் காட்டுகிறார்) 

மணி : வந்துங்கய்யா…சின்ன முள்ளு ஆறுக்கும் ஏளுக்கும் நடுவாந்தரத்லெ இருக்குது…பெரிய முள்ளுபத்துல இருக்குது… ஆ…நீங்க சொன்னது நெனப்ல இருக்குது…ரெண்டு நம்பருக்கு நடுவாந்தரமா சின்ன முள்ளு இருந்தா முந்துன நம்பருதான் மணி பெரிய முள்ளு எதிலெ நிக்குதோ அத்தோட அஞ்சால பெருக்கோணம்…மணிங்கய்யா.ஆறு அம்பதுங்கய்யா… 

கந் : அம்புட்டுதான்… அம்புட்டேதான்… 

மணி : எம் மாமியாவூட்லெ…எனக்கு நேரம் பாக்கத் தெரியாதுங்கற விசியத்த வச்சுகிட்டு புலி ஆட்டை பாக்கறாப்லவே பாத்துகிட்டிருப்பாங்க…சொல்லி மட்டும் குடுக்க மாட்டாங்க..கூடப் பொறந்த பொறப்பு மாதிரி சொன்னீங்க.. கோடிக் கும்புடு… 

காளி : அது சரி… கம்பங்கொல்லையாரு சம்சாரம் செவப்பாயிய இன்னங் காங்கிலேயே 

மணி : நீ முன்ன போ நாம் பின்னால வாரேன்னு சொல்லிச்சு..தாக்கலும் சொல்லலியே.. 

காளி : நீ ஒரு பக்கட்டு…அது பொம்பளைக்கு பொம்பளை ஆம்பளைக்கி ஆம்பிளை. தகிரியம் ரொம்ப ரொம்ப சாஸ்தி…(செவப்பாயி வருவதைப் பார்த்து) அடடே! வா புள்ளே! ஒன்னிய பத்தி தான் பேச்சு. நூறுவயசு. 

செவப்: ஐயா! வாத்தியாரய்யா! வர்ர வளில் இந்த அசட்டு ஆச்சிமுத்து கிட்ட பேசி கிட்டிருக்கும்படி யாயிருச்சு..கோவிக்காதிங்கய்யா…. நீங்க அனுமதி கொடுத்தீங்கனாக்க காளியம்மா கிட்டே பேசறேன்… 

கந் : நீங்க என்ன வெவரந்தெரியாதவங்களா…ஒங்களுக்கு போயி நாஞ் சொல்லுறதா? நாலு சொல்லிக் கொடுக்கமட்டும் வரல்லீங்க. ஒங்களைப் போல இருக்கறவங்க கிட்டேருந்து நானும் தெரிஞ்சுகிடத்தான் வந்தேங்க… 

காளி : என்னது? என்னது? எங்க கிட்டேருந்து நீங்க தெரிஞ்சுகிதுவா…நல்லா சொன்னீங்க… 

கந்: நெசமாலுந்தான்… ஒங்க கிட்ட போயி பொய்யி என்னத்துக்குங்க? 

செவப் : ஐயா இந்த வகுப்புக்கு வர்ரப்போ வூட்ல இருக்குற மாதிரிதான் தோணுதுங்கய்யா.. ஒங்க ளாட அன்பு இருக்குதுங்களே அது காங்க எங்களை இம்புட்டு தொலவு வரவளைக்கிதுங்க… 

கந்: இந்த பாருங்கம்மா செவப்பாயி நல்லா கவனிச்சுடுங்க… கல்விக்கு அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, பிரியம் ரொம்ப ரொம்ப முக்கியம்… நீங்க இந்த முதியோர் கல்வில ஒங்க வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் வேணு மிங்கறதைத் தான் படிக் கிறீங்க . . இந்த விசயத்தல வெறுப்புக்கு காரணமே இங்லீங்க… 

மணி : வாத்யாருப்யா…முன்ன வந்து வூட்டுக்காரரு வந்த ஒடனே வாயிக்கு வந்தபடியெல்லாம் திட்டு வாரு… அடிப்பாரு…விதியேன்னு அளுவேன்… ஆனாக்க இப்ப ..நீங்க சொல்லிக்குடுத்தாபல யோசனை பண்ணினேன். குடிக்கிறது தப்புன்னு நீங்க சொன்ன கதைங்களையெல்லாம் சொல்லுவேன்…புத்தியில படற மாதிரி சொன்னேன் .. கொஞ்சம் கொறஞ்சிருக்குது… அத்தோட மட்டும் இல்லீலீக… சைகலு கத்துகிட்டு சந்தைக்கி போயிட் வர்ராரு. 

சுந்: நீங்க நல்லா கேளுங்க சொல்றேன். காட்டு மிருகங் களை வேட்டையாடுன ஒருத்தரு ரொம்ப நாளு கழிச்சு புத்தி தெளிஞ்சு படிச்சு ராமாயணமே எழுதினாரு .. அவர் பேரு வால்மீகி.. மாடு மேச்சு கிட்டிருந்த பையன் நெறய படிச்சு பெரிய பெரிய சமாசாரங்களை சொல்லியிருக்காரு… அவர் பேரு திருமூலர்னு பேரு…இன்னும் காளிதாசர்… சொல்லிகிட்டே போகலாம். 

செவப்: அதனாலெ ஒரு வெடா மொயற்சியோட படிச்சா மேதையாயிப் புடலாம்னு சொல்லுங்க…மொயல ஆம செயிச்ச கத மாதிரி இல்லீங்களா? 

கந் : ஆமாம்! அதுல என்ன சந்தேகம் விடாமுயற்சிதான் வேணும்…மனசு வச்சுப்புட்டா ஏன் முடியாது? எல்லாம் முடியும்… 

மணி : புட்டுவச்சுப் புட்டீங்க… செல பேருக்கு ஒடம்பு வளைய மாட்டேங்குது நொண்டிச் சாக்கு எதுனாச்சும் சொல்லி வம்படிக்கறாங்க.. ஊரு கதை பேசறாங்க…இங்க எம்புட்டு நல்லா ெபாழுது போனது தெரியுங்களா?… 

கந் : மனுசாளுங்கவோட சொபாவமே அதுதான்.. நல்ல படியா நயமா பேசி…அவங்க சுகதுக்கத்துலெ அக்கறை காட்டி பேசி அழைச்சுகிட்டு வர்ரதலெ தான் சாமர்த்தியம்… இப்ப ஆரம்பத்துலெ இங்க எல்லாரும் தானாக்கவா வந்தாங்க… 

செவப்: நாங் கூட மொதல்ல பயந்தேங்க ஆனா ஆவன்னால தான் தொடங்கப் போறீங்கன்னு நெனச்சேன்… ஆனா இங்க ரொம்ப சுருக்கமா தேவையானத சொல்றீங்க… 

கந் : அறஞ்செய விரும்பு .. நாய் வீட்டைக் காக்கும்… இதெல்லாந்தான் ஒங்களுக்குத் தெரியுமே…ஸிங்க பாஸ்பேட்டை 2 சதவிகிதம் எடுத்து 98 சதவிகிதம் தண்ணீல கலந்து எலிங்களை ஒழிக்கணும்… எலச்சுருட்டுப் புழு வந்தாக்க என்ன செய்ய வேணும்… இதுங்க போன்ற விஷயங்களைப் படிச்சு தெரிஞ்சுக்க தானெ இந்த முதியோர் கல்வித் திட்டமே…

காளி : நான் கை தெளிப்பானை கண்டேனா வெசைத் தெளிப்பான கண்டேனா…மணிச்சத்து, தழைச் சத்து, சாம்பல் சத்து இதுங்களை எப்படி கலந்து போடறதுங்கறத நீங்க இந்த பள்ளிக்கோடத்ல் சொன்ன பெறகுதானெ ஒரு மாதிரியா வௌங்குச்சு… 

மணி: நீங்க சொன்ன மாதிரி படிச்சுப்புட்டா சீக்கிரமா எளுத்துங்க புரியுது… 

கந்: எப்படி சொல்லுங்க பார்க்கலாம். 

மணி : காகா பாத்திருக்கோம்…படத்துக்குக் கீழே எழுதியிருக்குது… அப்புரம் “பூ”…தெரியுது… அதாவது ரெண்டெழுத்து மூனெளுத்து வார்த்தை சேக்கறது அந்த வார்த்தைங்களும் நமக்கு பளக்கப் பட்டாப்ல இருந்தாக்க கத்துக்கிடலாம்… சரிதானுங்களா ஐயா? 

கந்: ரொம்ப சரி…ஏம்மா செவப்பாயி! அந்த மாதிரி நீங்களா தெரிஞ்சுகிட்ட விசயஞ் சொல்லுங்க… 

செவப் : தக்காளி பழம், ஆனைக்கொம்பன் ஈ பொன்னி கோ ரெண்டு பயத்தங்காய்… 

காளி : ஐயா முன்ன ஒரு நாளு பயிருக்கு பாதுகாப்பு இல்லீன்னா பாழுன்னு ஒரு பெரியவரு சொன்னா ருன்னு சொன்னீங்களே… எம்மவன் விதியேன்னு படிச்சுகிட்டிருந்தான்…முதுகிலெரெண்டு வச்சேன். அந்த சரியான சமாச்சாரம் ஞாவுகத்துக்கு வரல்லே… ஆனாக்க பைய பைய வந்துப்புடும்…

மணி: ஆமாங் காளியக்கா…எனக்கது தெரியும்… திருக்குறள்- “ஏரினும் நன்றாம் எருவிடுதல்”… 

செவப்: கட்டபின் நீரிலும் நன்று அதன் காப்பு… எப்பிடி… 

கந் : எப்படியோ இந்தக் கவ்வித் திட்டத்தோட சாரம் சத்த புரிஞ்சு கிட்டீங்க…அந்த வரைக்கும் எனக்கு ஜெயிப்புதான்… 

(காட்சி முடிவு) 

காட்சி-3 

செவப்பாயியின் வீடு.. காலை 6 மணி… 

செவப்: (பெருக்கிக் கொண்டே பாடுகிறாள்) தலைவாரிப் பூச்சூட்டி உன்னைப்.. பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை… மலைவாழை யல்லவோ கல்வி… கடிகாரம் ஓடுமுன் ஓடு… 

(மணிமேகலை வருகிறாள்) 

மணி : என்ன செவப்பாயி… பாட்டும் கூத்தும் சோக்கா இருக்குதே… 

செவப்: இருக்காதா பின்னே!… நாம் படிக்கறத பாத்து எம்மவன் கருக்கல்லயே எந்திரிச்சு கம்மாய்க்கு குளிக்க போயிட்டான்…அத்தோட அவங்கப்பாரு படிச்சு என்னடா செய்யப் போறேன்னு பொலம்பி கிட்டேயிருந்தவரு… சவுளி கடை மளிய கடைல போயி குந்துடான்னு சொன்னவரு… படீடான்னு சொல்லுறாரே… 

மணி : எல்லாம் ஒன்னோட சாமார்த்தியந்தான்… இத்தினி பேருல நீதான் வெரசா படிக்க கத்து கிடடே… 

செவப்: நீ புருசனை திருத்த கத்து கிட்டியே… 

மணி : அது சரி…நீயா எப்படி சேத்து படிக்கறே? 

செவப்: கா வை எடுத்துக்க, அக்கா, காகா, வருதா… பொறவு தேங்கா மாங்கா…அப்படி பளகணும்… 

மணி : இப்ப பாரு.. பம்பு, பாம்பு பல்லு.. பாலு இப்பிடி கூட சேக்கலாமில்லை 

செவப்: அம்புட்டுதான்… இன்னோன்னு சொல்றேங் கேளு… நாட்டு நடப்பு, ஊருக்கு நல்லது, பயறு பச்சை… இந்த மாதிரி ரேடியோல கேக்கற வார்த்தை, அப்பரம் “இருக்கறது வுட்டுப் பறக்கறது புடிக்காதே”, “கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காவாது” இது மாதிரி பளமொளிங்களை நெனப்பு வச்சுகிட்டு அதுங்க இருக்கற புத்தகங்களை படிச்சாக்க… வெரசா எளுத கத்துக்கிடலாம்… 

ஆச்சி : ஒங்கூட நேத்து அந்தப்பள்ளிகூடத்துக்கே வந்திருக்கலாம்…ஆடுபுலியாடி கையில இருந்த காசெல்லாம் போச்சுது…அடிக்க வேறவர்ரானுவ.. பந்தயம் வச்சு ஏவப்பட்ட தோப்பு… 

செவப் : இந்த மொரட்டுத்தனம்…சூதாட்றபுத்தி, பட படப்பு… எல்லாம் போயி ஊத்துத் தண்ணி மாதிரி புத்தி தெளிவா இருக்கும் .. ஒளுங்கா சேரு… 

ஆச்சி : எங்கிட்ட காசு கீசு கெடையாது. பொஸ்த்தகம் எல்லாம் வாங்க முடியாது…மேக்கொண்டு… இத்தினி வயசுக்கப்புறம் படிக்கப் போனா வெக்கமா இருக்குது… நாலு பேருக்கு முன்னால வாத்தியாரு சொன்னத திரும்பச் சொல்லாட்டி திட்டுவாரு… முட்டிபோடச் சொல்வாரு… முன்னமே தான் சொல்லியிருக்கேனுல்ல… 

செவப்: நீ பொழுது விடிஞ்சு தூங்கறடபோ…நாலு பேரு பேசுவாங்களே… அப்ப வெக்கம் எங்க போவுது… கண்ட கண்ட நேரத்ல கண்ட கண்டத ஊதறத் நிறுத்து….நீ ஒண்ணும் காசு கொடுக்க வாணாம்… பொஸ்த்தகம்… பலபம் … செலேட்டு… ஒண்ணுமே வாங்கவாணாம்…பேசாம வந்து குந்திக்கிட்டிரு… ஒனக்கே புரியும்… 

ஆச்சி: இப்பவே போவோம்… 

மணி : ஏ, கொதி அர்.சி…பொளுது சாஞ்சு…ரேடியோல மாநிலச் செய்தி முடியுது பாரு அப்பத்தான்… வந்து சேரு… இப்ப போயி பிஎச்.சி. பத்துசதம் கடைல வாங்கி களத்து மேட்ல ஐயா இருப்பாரு அவரு சொல்றபடி தெளி… 

செவப்: பாத்தியா மணிமேகலை… வெவசாயம் சம்பந்தப் பட்ட விசயங்களை தெரிஞ்சுகிடத்தான் நான் இந்த முதியோர் கல்வீல சேர்ந்தேன்…இதுக்கு முன்னால ஒத்தரோட மொகத்த பாத்து மூஞ்சிய பாத்து இதுல என்ன எளுதியிருக்கு அதுல என்ன எளுதியிருக்குதுன்னு கெஞ்சி கூத்தாடி கேக்க வேணும்… இப்ப நம்ம கந்த வாத்தியார் கிட்டெ எப்ப வேணுமுன்னாலும் கேக்கலாம்… நாமகூட படிச்சுகிட்டும் வாரோம்… 

மணி : எனக்கு இப்ப வந்து மண்வளப் பரிசோதனை, பயிர்ப் பாதுகாப்பு, ஊடுபயிர் மொறை, நெலத்தடித் தண்ணிய எப்பிடி கண்டு புடிக்கறது… இதுகளப் பத்தி தெரிஞ்சுகிட ரொம்ப ஆசையா இருக்குது… நாப நாட்டாமைகிட்ட சொன்ன ஒடனேயே அவரு விவசாய ஆபீசருக்கு எழுதி பல தகவலுங்களை வரவளைச்சிருக்காரு…நம்ப கந்த வாத்தியாரு அலுப்பு பார்க்காம பொறுமையா வெளக்கி சொல்லப் போவறாராம்… 

செவப் : இதுலேருந்து முதியோர் கல்வித் திட்டத்ல கால நேரம், மணியடிக்கறது, வேலை நிறுத்தம், விடுமுறை நாள்…இதெல்லாங் கெடையாதுன்னு தெரியுதா.. அதனால் நாம் வூடு வூடாப் யோயி நம்ப சனங்க கிட்ட விசியங்களை எடுத்து சொல்லி அவங்களையும் படிக்க வச்சு உளுறவன் கணக்கு பாத்தா ஒளக்குக்கு மேல மிஞ்சும்னு மெய்ப்பிச்சுப் புடுவோம். 

மணி : ஆக கல்விக்கு வயசில்ல.. சரிதானே, 

செவப்: அதுலயும் முதியோர் கல்விக்கு முக்கியமா இல்லே… அதுக்காவ…தள்ளாத வயசுல படிக்கணும்னு அருத்தம் இல்லே. 

மணி : ஏன் முடியாது… கட்டாயம் முடியும். சரிதான்னு இப்ப நல்லாப் புரியுது… 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *