கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 2,078 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனி என்ன சொல்லியும் இவன் திருந்தப் போவதில்லை என நினைத்த உதயா. எழுந்து “சரி கோபால். நான் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உங்கள் விருப்பம்” என்றவாறு கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே வெடிகுண்டு நிரம்பிய பைகளை எடுத்துக் காரில் வைத்த கோபால், கைப்பேசி அழைக்க. எடுத்துப் பேசினான்.

“உதயா உன்னைப் பார்க்க வந்தாளா?’ எனக் கேட்டது எதிர்க்குரல்.

”ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” கோபமாகக் கேட்டான் கோபால்.

“உதயா. உன்னை நேசிக்கும் உன் பெண் தோழி. நம் கூட்டத்திலிருந்து வெளியேறியவள். அவள் உன்னையும் கண்டிப்பாக இங்கிருந்து இழுத்துச் சென்று விடுவாள் என்று எதிர்பார்த்தேன். நான் நினைத்தது சரியா தவறா என்று நீதான் முடிவு சொல்லணும்”.

”பாருங்க தோழரே ! இந்த கோபால் ஒரு பெண் சொன்னவுடன் இந்த புரட்சிப் படையை விட்டு வெளியே செல்லுமளவிற்கு சாதாரண கோழையல்ல. இந்த நாட்டின் ஜனநாயக சட்ட அவலங்களைக் களைய இந்த படைக்கு அஸ்திவாரமிட்டதே நான். எனவே என்னைப்பற்றிக் கவலைப்படாமால் நீங்கள் அடுத்த திட்டத்தை முடிவு செய்யுங்கள்”.

“நான் இன்று ஹெலிக்காப்டரில் வரும் பிரதமரையும், சில மந்திரிகளையும் தீர்த்துக்கட்ட போட்ட திட்டப்படி, கணேஷ். ஹரிசந்திரன். பாபு மூவரையும் முன்னாலே போகச் சொல்லி விட்டேன். இனி நான் செக்யூரிட்டி உடையில் போய் வெடிக்குண்டுகளை வைக்கவேண்டியதுதான் மிச்சம். சாயங்காலம் செய்தித்தாளும். தொலைக்காட்சிகளும் அலறப் போகுது பாருங்கள்” என்று எரிச்சல் கலந்த சிரிப்போடு சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்துவிட்டுக் காரில் ஏறினான்.

கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பின் சீட்டிலிருந்து எழுந்த உதயாவைப் பார்த்ததும், “ஏய் நீ எப்படி என் காரில்…” கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே கத்தினான் கோபால். ”காரை நிறுத்து கோபால். இந்தச் சதி திட்டத்திற்கு நான் உன்னை அனுமதிக்க மாட்டேன்” என்று கையில் ரிவால்வரோடு மூச்சிறைக்க சப்தமிட்டாள் உதயா.

பயந்துபோன கோபால் “ஏய்.. உதயா… என்ன விளையாட்டு? காரிலே வெடிகுண்டு இருக்கு. நீ சும்மா துப்பாக்கியாலே சுட்டாலே காரே வெடிச்சு சிதறிரும். நல்ல பெண்ணில்லே.. கொடுத்துவிடு” என்றான்.

“கோபால் நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை. இந்தக் கூட்டத்திலிருந்ததற்கு எனக்கும் கூட நல்ல தண்டனை. இந்த நாட்டைக் காக்க இதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை, மன்னித்துவிடு” என்றபடியே கைத்துப்பாக்கியால் சுட கார் முழுவதும் வெடித்துத் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

– தென்னரசு, ஜூலை 2015

பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *