லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது பத்து வயது மகன் ராகுல் சதா பேச்சுக் கொடுத்தவாறே இருந்தான்.
அவன் வாயை மூட எண்ணியவள், மேகஸினிலிருந்து உலகப் படம் ஒன்றைக் கிழித்தெடுத்து, கத்திரியால் அதைப் பல துண்டுகளாக வெட்டி, அவனிடம் கொடுத்து ஒட்டச் சொன்னாள். அவன் அதைச் சரியாக ஒட்ட ஒரு மணி நேரமாவது ஆகுமென்று யோசித்தவாறு அவள் மீண்டும் படிக்கத் துவங்க, ஐந்தே நிமிடங்களில் வெற்றியுடன் திரும்ப வந்தான் ராகுல்.
‘ எப்படிடா இவ்வளவு சீக்கிர்ம ஒட்டினே? என்றாள் ஆச்சரியத்துடன்.
என்னோட ஃபேவரிட் நடிகை ஹன்சிகாவோட போட்டோ பின்பக்கம் இருந்தது, அதைப் பார்த்து சுலபமா ஒட்டிட்டேம்மா’ என்றான்
அவன் அமைதியாக.
‘எந்தப் பிரச்னைக்கும் மறுபக்கம் உண்டு’ என்பதை உணர்ந்தாள் சம்பா.
– ஷேக் சிந்தா மதார் (பெப்ரவரி 2013)