உனக்கும் ஒரு பக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2024
பார்வையிட்டோர்: 1,902 
 
 

(1984 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாயர் கடை கடன். வீட்டுக்குத் தீபாவளிக்கிப் போனதும் உபசாரம் எல்லோருமே நல்லா சாப்புட்டாங்க. அப்பா எட்டு இட்லி காலையிலே முழுங்குறார். தங்கை திமிசு மாதிரி இருக்கா. நான் எளைச்சு நறுங்கிப்போய்ட்டேனாம்! அம்மா சொல்றா. “இப்பல்லாம் கதை எழுதுறியாண்ணா?” ங்கிறா தங்கை. “எழுதிட்டேயிருகிகேன்’னேன்! “ஒண்ணுமே பத்திரிகையில் காணுமே’ன்னா! போடமாட்டானுங்க. விறுவிறுப்பு வேணுமாம். மர்மமா இருக்கணுமாம். என்ன அடுத்ததுன்னு கதை அப்படியே பாயணுமாம். நவீனமா இருக்கணுமாம். சுருக்கமா – கதையே வேணாமாம். அலுப்பே கூடாதாம். உண்மையே இருக்கக் கூடாதாம். சுளுவ்வா ஜில்ன்னு அப்படியே பாத்ததும் முத்தம் குடுக்கற மாதிரி ஒடனே நடக்கணுமாம் கண்ணுக்கு நேரா!

“நீ அப்படியே இருக்கேண்ணா! எப்பண்ணா அண்ணி வரும்?”

“போற நிலமையைப் பார்த்தா அண்ணி வரமாட்டா உனக்கு புருஷன்தான் வருவான் போல இருக்கு”ன்னேன். “போண்ணா”ன்னு ஓடிட்டா. இப்படித்தான் அவ படிக்கிற நாவலில் எல்லாம். தங்கசிங்க எல்லாம் ஓடும். நான் ரொம்ப பெருமிதமா சிரிக்கணும்! அப்பா ஒழைக்கிறாராம். நான் தீக்கறேனாம் அம்மா அழுவுரா! தெரியுது! செய்யாரு உட்றா? உட்டா?! ஜனம் எவ்வளவு?! எத்தன பேர்! போஸ்ட் க்ராஜுவேட், எத்தனை பி.ஏ.. பி.எஸ்சி., இதில் சிபாரிசு எத்தனை? பி.ஏ. எத்தனை? கால்கேர்ள் எத்தனை? எவ்வளவு பேர்?! இத்தனைக்கும் மேலே நீந்திப் போக எத்தனை எத்தனை பேர்? ‘வறுமையின் நிறமா’ நிழல்களா! சிவப்பு?’ சிவப்பு கொண்டுவர முடியுமா? அப்பனுக்கும், ஆத்தாளுக்கும், பூத்துநிக்கிற தங்கைக்கும் சிவப்பு அடுப்லதான்! எனக்கும் உங்களுக்கும் சிவப்பு கனவுலதான். எழுதுற தம்பீ! உனக்கு சிவப்பு மைலதான்! நேரே சத்தியமா சிவப்பா நீ? பாவம்! படிக்கிற அம்பீ உனக்கு சிவப்புன்னா நிழல்! வெறும் நிழல்! நடைமுறை இல்லாத நிழல். கதை ஒரு பக்கத்துக்கு மேல முடியுது மன்னிச்சுக்க. நீ படிச்சாலும், ரசிச்சாலும். வெளியிட்டாலும், வெளியிடலைன்னாலும்- இல்லெ- இந்த சமாச்சாரமே உனக்குப் புரிலைன்னாலும் எழுதி வந்த அத்தனைக்கும் மேலே இது! பசிக்கும் மேலே இது! பாவம் நீ மட்டும்தான்!

– மஞ்சு, 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *