உதிரிகள் அல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 1,693 
 
 

தொழிற்சாலையின் கஷ்டமாள பகுதிகளிலெல்லாம் அவர்கள் வேலை செய்யவேண்டும். இயந்திரங்களின் காதைச் செவிடாக்குகின்ற இரைச்சல், காற்று வாரி யிறைக்கின்ற புழுதி, கடும் வெயில், மழை, பனி எல் லாம் அவர்களுக்குப் பழகிப்போய்விட்ட சங்கதி.

தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது எங்காவது ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாகப் பிரசன்னமாகி திருத்தவேல பகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களின் மிகச் சிறிய உதிரிப்பாகமொன்று பழுதடைந்தாலும் அல்லது கழன்று போய்விட்டால் அவ்வியந்திரமும் அதனால் அத் தொழிற்சாலையும் நின்றுவிடும். உற்பத்தியைப் பாதிக் காதவாறு எந்த ஒரு திருத்தவேலைகளையும் சீக்கிரமா கச் செய்து முடிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அவர்களது உதிரங்களோடு கலந்திருக்கிறது. தங்களுக் குச் சோறுபோட்டு வாழவைக்கிற தெய்வமாக அத் கொமிலம் தொழிலகத்தைக் கருதி அத்தனை விசுவாசமாக உழைத் தார்கள்.

அப்புலிங்கம் ஒரு நோஞ்சான் . மெலிந்த உடம்புக் காரன். சாதாரணமான வேளைகளில் அவ்வளவு உற் சாகமாகக் காணப்பட மாட்டான். நூற்றுச்சொச்ச மைல்களுக்கு அப்பாலிருக்கும் பெண்சாதி பிள்ளைகளின் நினைவு தான் இப்படி மனதைப் பாதிக்கிற காரணம். ஆனால் வேலையென்று வந்துவிட்டால் பெரியதுணிச்சல் வந்துவிடும். சகல பிரச்சனைகளையும் மறந்து வேலையில் ஒன்றிப் போய் விடுவான். உயரமானதொரு ஏணியில் நின்று சர்க்கஸ் புரிபவனைப் போல வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு என்ன நேர்ந்ததோ. ‘தொப்’ பென்று விழுந்துவிட்டான்.

கூட வேலைசெய்து கொண்டிருந்த பியரத்ன பதறிப் போனான். ஏணியைப் பிடித்திருந்த சுனில் அதை அப்’ படியே ஒரு பக்கம் போட்டுவிட்டு ஓடிவந்தான். ‘ அப்பு!… அப்பு| ‘ என அழைத்தவாறு அப்புலிங்கத்தின் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்கள். அப்பு பேசாமல் சுருண்டு போய்க் கிடந்தான். கண்கள் மூடிக் கிடந்தன. வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த மற்றைய தொழி லாளர்களும் அண்மையில் ஓடிவந்து குழுமினார்கள்.

சுனில், ஒரு வாகனத்தைக் கொண்டு வருவதற் காக தொழிற்சாலையின் போக்குவரத்துப் பகுதிக்குக் குடல் தெறிக்க ஓடினான். ஓடுகின்ற பொழுது கார ணத்தைக் கேட்பவர்களிடமெல்லாம் ஓரிரு வார்த்தை களில் விஷயத்தைச் சொல்லிக் கொண்டு போனான் , அதைக் கேட்டவர்களும் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓட, அதைப் பார்த்து இன்னும் பலர் ஓடிவர, சற்றுநேரத்தில் பெரிய கூட்டமே கூடிக் கொண்டிருந் – தது.

பாத்திரமொன்றில் தண்ணீர் கொண்டுவந்து அப்புலிங்கத்தின் முகத்திலே தெளித்தார்கள். பிய ரத்னவும் இன்னொருவருமாகச் சேர்ந்து அவனை அணை த்துத் தூக்கினார்கள். அப்பொழுது அப்பு கண்விழித்து எல்லோரையும் புதினமாகப் பார்த்தான். பெரிய அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவன் போலத் தெரிந்தது. இருபக்கமும் அணைத்தவாறு அவனை நிறுத் தினார்கள். அவன் நிற்க முடியாதவனாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சோர்ந்தான்.

குழுமி நின்று அவனை எட்டி எட்டிப் பார்ப்பவர் களை இன்னொருவன் ஏசி விலக்கினான்- காற்றுப்பட் டால் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். பொதுவாக எல்லோருமே அவனுக்காக அனுதாபப் பட்டுக் கதைத்தார்கள்-‘பாவம், அருமையான பெடியன்!’ சிலர் அவனது நெருக்கமான நண்பர்களிடம் அவன் தனி ஆளா அல்லது குடும்பஸ்த்தனா என விசா ரித்தார்கள் – இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாகவும் இருப்பதாகப் பதில் வந்தது.

இன்னோர் இயந்திரத்தைப் பரீட்சித்துக் கொண் டிருந்த இவர்களது அதிகாரிக்குச் செய்தி எட்டியதும் அதிர்ச்சியடைந்தார். அவருக்கு, அப்புலிங்கம் விபத் தில் மாட்டிக்கொண்டது ஒரு கவலை. அது இனித் தன்னையும் ஒரு பிரச்சனையில் மாட்டப்போவது இன் ‘னொரு கவலை.

அத்தொழிலாளி வேலைசெய்யும் பொழுது தற் காப்பு வசதிகள் வழங்கப்பட்டிருந்தனவா, அவனுக் குரிய வேலையைத்தான் செய்யுமாறு பணிக்கப்பட்டிருந் ” தான) என்பது பற்றியெல்லாம் இனிமேற்தான் மேலதி காரிகள் அக்கறைப்படப் போகிறார்கள். அந்த அக்கறை கூட. விசாரணைகளிலிருந்து தங்கள் தங்களைக் காப்பாற் றிக் கொள்கிற முயற்சிதான். தொழிலாளர்களின் தேவைகளைப்பற்றி எவ்வளவு வற்புறுத்திச் சொன்னா லும் சிரத்தை கொள்ளாமல் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறு பேசி தங்களது தேவைகளைச் சாதித்துக்கொண்டு போகிற மேலதிகாரிகள், இது போன்ற சந்தர்ப்பங்க ளிலும் இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள நடுத்தர அலுவலர்களின் தலையில் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்.

• தலைவிதி’ என முணுமுணுத்தவாறு அவர் விபத்து நடந்த இடத்துக்கு ஓடினார். ‘என்ன?… என்ன நடந் தது?’ எனப் பதட்டம் அடங்காதவராய் கேட்டார். சிவா மஹாத்தயாவைக் கண்டதும் பியரத்னவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. விஷயத்தைக் கூறமுடியாமல் நாத் தழுதழுத்தது. சகோதரனைப் பறி கொடுக்கப் போகின்ற நேரத்தில் தந்தையைக் கண்ட மகனைப்போல உணர்ச்சி வசப்பட்டான்.–

சிவாவின் தொழிலாளர்கள் அவர்மேல் நிறைய மரியாதை வைத்திருந்தார்கள். தொழிற்சாலையில் இப் படி ஓர் அதிகாரி வந்து கிடைப்பதே அபூர்வம்தொழிலாளரது பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களது நலனில் அக்கறைப்படவும், அவர்களோடு சுகதுக்கங்களில் கலந்து கொள்ளவும் யாருக்குத்தான்’ மனசு வருகிறது?

அதிகாரிகள் என்றால் தொழிலாளர்களின் வசதி யீனங்களைக் கருதாமல் அவர்களிடம் சக்திக்கு மேற் பட்ட வேலை வாங்குவதையே கண்ணாகக் கொண்டு மேலிடத்தில் நல்ல பெயர்களைச் சம்பாதித்துக் கொள் பவர்கள் என இவர்கள் அர்த்தம் கொண்டிருந்தார் கள்.

இயந்திரங்களில் பெரிய திருத்தவேலைகள் நடக்கும் பொழுது மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். இப்படி இரவுபகலாக தொடர்ச்சியாக வேலை செய்தாலும் இடையில் குளிப் பதற்கோ, உறங்குவதற்கோ சந்தர்ப்பம் கிடைப்ப தில்லை. பெண்சாதி பிள்ளைகளுக்கு ஒரு வருத்தம், துன் பம், அவசரம் என்றாற்கூட விட்டுவிலக முடியாது.

தங்களுக்குப் பணியாத தொழிலாளர்களைப் பற்றி யும் போட்டி மனப்பான்மையினால் சக அலுவலர்களைப் பற்றியும் மேலிடத்துக்கு இல்லாதது பொல்லாததுகளை முறையிட்டுக் குழிபறிக்கின்றசெயல் பலருக்குக் கைவந்த கலையாயிருந்தது. தொழிற்சாலையின் முன்னேற்றத்தி லும் உற்பத்திப் பெருக்கிலும் அக்கறையுள்ளவர்கள் போல ‘ நடிக்கின்ற’ அவர்களுக்கு ‘ அக்ட்டிங் புறமோ சன்’ கள் கிடைக்கும். பதவி உயர்வுக்குத் தேவையான ஆகக்குறைந்த தகுதியேனும் இல்லாவிட்டாலும் அவர் கள் சம்பாதித்து வைத்திருக்கிற ‘ நல்ல பெயர்கள்’ பெரிய தகுதியாகக் கருதப்பட்டன. தொழிலாளர்கள் மாடாக உழைத்தபொழுது அந்த அதிகாரிகளுக்கு சம் பள உயர்வுகளும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட் டன. தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டித் தாங் கள் உயர்ச்சியடைகின்ற சுகத்துக்காக இவர்களை மனி தாபிமானமற்ற முறையில் நடத்துவதை சாதாரண மாகக் கருதினார்கள்.

எவ்வித பொருளாதார அடிப்படையும் இல்லாத இவ் ஏழைத் தொழிலாளர்கள், மாதாந்த சம்பளத்தை மாத்திரம் நம்பியே சீவிக்க வேண்டியிருந்ததால் தங் களது குடும்பப் பொறுப்புக்களை நினைத்துக் கொண்டு அடங்கிப் போனது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்ட து.

சுனிலின் அவசரத்தை உணராததுபோல ‘அம்பு லன்ஸ்’ இயங்க மறுத்தது. சாரதி, பெரும் முயற்சி யின் பின்னர் ‘ஓடாது!’ எனக் கையை விரித்தான்— இதுபோன்ற அவசர சந்தர்ப்பங்களிற் கிடைக்கின்ற வழக்கமான பதில் தான். வருடம் முழுதும் திருத்த வேலைகளை மேற்கொண்டாலும் வருத்தம் தீராத புராண காலத்து வண்டி அது. இப்பாரிய தொழிற்சாலையின் அதிகரிக்கின்ற உற்பத்தியைக் காட்டி, மேலிடத்தி லிருந்து ஒவ்வோர் உயர் அதிகாரிகளுக்கும், புதிய வாக னங்களைத் தருவிக்கின்ற நிர்வாகம், ஏன் இன்னும் ஓர் அம்புலன்ஸ் வண்டியைப் புதிதாக வேண்டவில்லை? மூச்! அதைப்பற்றி யாருமே பேசக்கூடாது.

விபத்து நடந்த இடத்துக்கு வேறொரு வாகனத் தைக் கொண்டு வந்தார்கள். பியரத்ன பின் இருக்கை யில் ஏறி இருக்க அப்புலிங்கத்தை அவனது மடியிற் கிடத்தினார்கள். பெரிய பிரயத்தஎப்பட்டு அப்புவின் கால்களை மடக்கிவைத்துக் கதவை மூடினார்கள். சிவா மஹாத்தயாவும், சுனிலும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டதும் வாகனம் விரைந்தது. சம்பிரதாயப்படி தொழிற்சாலையின் வைத்திய நிலையத்திற்கு முதலில் அப்புலிங்கம் கொண்டு செல்லப்பட்டான். இப்பொழுது இருவரின் கைத்தாங்கலில் அவனால் நடக்க முடிந்தது . வைத்திய நிலையத்தினுள்ளிருந்த கட்டிலில் அவனைப் படுக்க வைத்தார்கள். வைத்திய அலுவலர் சோதனை செய்தார். வெளிக்காயங்கள் ஒன்றும் இல்லை. உட். காயங்களைப்பற்றி அறியும் ஆற்றல் அவருக்கு இல்லை. “பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை…. துண்டு தருகிறேன். அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதியுங்கள்… இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்’ எனத்தனது வழமை யான பணியை முடித்தருளினார். அவனைக் கொண்டு போய் ஆஸ்ப்பத்திரியிற் போடுவதோடு தொழிற்சாலை நிர்வாகத்தின் பணியும் முடிந்துவிடும்.

அப்புலிங்கத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தவாறு வாகனத்துக்குக் கொண்டு வந்தார்கள். வாகனம் நக ரத்துக்குப் போவதில் வைத்திய அலுவலருக்கும் ஒரு சந்தோஷம் காத்திருந்தது — அவரது வாகனத்துக்குப் பெற்றோல் தேவை. போகின்ற பொழுது தனது விடுதிக் குப் போய் பெற்றோல் கலனை எடுத்துச் சென்று நக ரத்திலிருந்து ஒரு கலன் பெற்றோல் வேண்டிவருமாறு சாரதியிடம் பணித்தார். பன்னிரண்டு மைல்களுக்கு அப்பாலுள்ள நகரத்துக்கு, பெற்றோலுக்காக சொந்த வாகனத்திற் போய்வருவது கட்டுப்படியாகாத விஷ யம்.

அப்புலிங்கத்தை வாகனத்துள் ஏற்று கின்ற பொழுது அவன் மீண்டும் மயக்கமடைந்தான். உயரத் திலிருந்து விழுந்த ஒருவனை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் பொழுது படுக்கவைத்துக் கொண்டு செல் லும் வசதியுள்ள அம்புலன்ஸ் போன்ற வாகனங்களைத் தான்பாவிக்க வேண்டுமென தொழிலாளர் பிரச்சனைகள் பற்றி கருத்தரங்கு நடத்திய தொழிற்சாலைப் பரிசோத கர் முன்னர் கூறியது சிவாவிற்கு நினைவு வந்தது. அதை இப்பொழுது சொன்னால் யார் தான் கவலைப்படப் போகிறார்கள்? இருக்கின்ற வாகனத்தையாவது நேர காலத்துக்குவிடலாமென்றால் ஆயிரம் தொல்லைகள்பாதுகாப்பு அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒடி வந்து நியாயம் கதைத்தார் – விபத்தடைந்த நோயாளி யோடு சகதொழிலாளி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதென தொழிற்சாலை நிர்வாகம் விதித்திருக் கின்றது. அதனால் பியரத்னவை இறங்குமாறும் தங்களில் இருவர் துணைக்குச் செல்வதாகவும் கூறினார். பியரத் னவிற்கு கோபம் நெருப்பாகப்பற்றியது. ”உங்களுக்கும் நகரத்தில் ஏதோ அலுவல் இருப்பதாற்தான் இப்படிக் கரிசனைப் படுகிறீர்கள். அப்பு லிங்கத்திற்கு என்ன நடந்தது எங்கே அடிபட்டது என வைத்தியர் விசா ரித்தால் என்ன பதிலைச் சொல்ல முடியும்? நிர்வாகத் தோடு கதைக்க எனக்குத் தெரியும்…” என முகத்தில டித்தது போலக் கூறினான். பின்னர் நீ வாகனத்தை எடு!” என சாரதியோடு எரிந்து விழுந்தான்.

வாகனம் உறுமலெடுத்து நகர்ந்தது.

வைத்தியசாலையை அடைந்ததும் சுனிலும் பியர த்னவும் அப்புலிங்கத்தை மிகவும் பக்குவமாக அணைத்து இறக்கினார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களின் உதவியுடன் தள்ளு வண்டியிற் கிடத்தி வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள்.

அப்புலிங்கம் ‘வார்ட்’டில் அனுமதிக்கப்பட்டான். அவளைச் சோதித்துப் பார்த்த வைத்தியர் உடனடி யாக சேலைன் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் செய்தார். அவனோடு யாரும் தங்கிநிற்பதற்கு அனு மதி மறுக்கப்பட்டது.

பியரத்னவிற்கு மனசு கேட்கவில்லை. அறிமுகமான ஆஸ்பத்திரி ஊழியர்களின் உதவியுடன் அப்புவிற்குப் பணிவிடை செய்வதற்காக தங்களில் ஒருவர் நிற்பதற் குரிய அனுமதியைப் பெற்றான். ப

சுனிலைத் தங்கவைத்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றான். பியரத்ன வெந்நீர்போத்தல், தலையணை, பெற்சீற், சீனி போன்ற பொருட்களைக் கொண்டு வந் தான். மாலையில் வந்த சக தொழிலாளாகள் ஹோர் லிக்ஸ், பிஸ்கற், சிகரட் போன்றவற்றைக் கொண்டு வந்தனர். அப்புலிங்கத்தோடு யாரும் கதைக்க முடிய வில்லை. உறக்கத்திலிருந்தான். அவனோடு கதைகொடுத் துக் குழம்பக்கூடாது என்பது வைத்தியரின் உத்தரவு என சுனில் மற்றவர்களுக்கு விளக்கினான்.

இரவு ஏழு மணியாகிவிட்டது. காலை பத்துமணிக்கு வந்த பயணம். தொழிற்சாலைக்குப் போகவேண்டும் என்ற உணர்வு அப்பொழுது தான் பியரத்னவிற்குத் தோன்றியது. அங்கு என்னபாடோ தெரியாது. செய்த வேலையை போட்டது போட்டபடியே விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. சிவா மஹாத்யா வேறுயாரை யாவது அவ்வேலைக்கு ஒழுங்கு செய்திருப்பார். மாலை யில் அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் வரவில்லை. வந்திருந்தால் நிலைமையைக் கேட் டறிந்திருக்கலாம்.

சுனிலிடம் விஷயத்தைக் கூறிவிட்டு பியரத்ன தொழிற்சாலைக்குச் சென்றான். அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது,

வாசலிலேயே பார்த்திருந்த பாதுகாப்பு அதிகாரி இவனைத் தொழிற்சாலைப் பெரியவரிடம் கூட்டிச் சென்றார். தொழிற்சாலையில் தொழிலாளரை சேர்ப்ப திலும் நிறுத்துவதிலும் மட்டும் பெரியவராகக் கணிக் கப்படும் அவர் நாயை விரட்டுவது போல இவனை ஏசினார் -‘கெற் அவுட்.’.

அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டான்.

செய்து கொண்டிருந்த வேலையை அரைகுறையாக விட்டு யாருடைய அனுமதியுமின்றி வெளியே சென் றது குற்றம். தொழிற்சாலையில் நடக்கும் மற்றைய சம்பவங்களோடு ஒப்பிடும் பொழுது இதுவும் ஓர் அற்பவிஷயம் தான். சிவா மஹாத்தயாவினாலும் சமா ளிக்கமுடியாத ஒரு நிலையாகப் போயிருக்கும் என அவனால் நிச்சயமாக நம்பமுடிந்தது.

வெளியே வந்தான். உடலிலிருந்து தசைப்ப குதியைப் பிய்த்தெடுப்பது போன்ற வேதனைத்துடிப்பு . மனைவி, பிள்ளை குட்டிகள் — வைத்தியசாலை சுனில்? பாவம், அவனுக்கும் இந்தக் கதிதானா? பிரக்ஞையற்ற நிலையிற் கிடக்கும் அப்புலிங்கம்…

பியரத்ன வைத்தியசாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான். தொழிற்சாலையில் அதிகாரத்தில் உள்ள வர்களின் சதிராட்டங்களில் வெளியேற்றப் பட்ட எத்தனையோ தொழிலாளர்களுள் ஒரு வனாக தானும் சேர்க்கப்பட்டதில் ஒரு தெம்பு. அவர் களெல்லாம் இன்றைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லா மலா இருக்கிறார்கள்? அவர்கள் தெரிந்து வைத்திருக் கிறதொழில் — தெய்வம் போல மதிக்கிற தொழிலுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் சாப்பாடு போடுகிற சக்தி இருக்கிறது.

ஆனால், இப்பாரிய தொழிற்சாலையின் முதுகெலும் பாக இருக்கின்ற தொழிலாளர்கள் வெளியேற்றட்படு வதால் தொழிற்சாலைக்கு ஏற்படுகின்ற இழப்பைப்பற்றி பார் தான் கவலைப்படப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டே நடந்தான்.

– மல்லிகை 1979 ஓக்டோபர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *