இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 4,335 
 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு | மூன்று | நான்கு

திடீரென என்னைக் கண்டு திடுக்கிட்டவன் போல, கண்டி தலதா மாளிகையின் கிழக்குப் பக்கத்தில் சுமண தாசா திகைத்துப்போய் நின் றது எனக்குப் பேராச்சரியத்தைக் கொடுத்தது. அப்படித் தன்னையே மறந்து சுமணதாசா திடுக்கிட்டதை அன்று தான் நான் கண்டிருக்கின் றேன், அந்தத் திகைப்பிலிருந்து அவனை விடுபட வைத்தவள், அவனுக் குப் பக்கத்தில் நின்ற மெல்லிய அழகிய கறுப்பு நிறமான ஒரு பெண் தான். அவளை, பார்த்தவுடன் மனதிலே பதியத்தக்க வசீகரமான அப் பெண்ணை நான் பல்கலைக் கழக நூல் நிலையத்தில் அடிக்கடி கண்டிருக்கின் றேன். மிக எளிமையான தோற்றமுடைய அவளின், பிரகாசமும் சந்துஷ் டியும் நிறைந்த அமைதியான புன்னகை எவரையும் கவரத் தக்கது. அந்த முகத்திற்கு அவளின் நீளமான அழகிய மூக்கு தனி வடிவைக் கொடுத்தது.

சுமண தாசா என்னை அவளிற்கு அறிமுகம் செய்து வைத்தான். அவள் என்னைப் பார்த்துப் பதிலிற்குப் புன்னகை புரிந்தபோது கன்னங்களிற் குழி விழுந்தன. அவளின் பெயர் தம்மிகா என்று சொல்லிவிட்டு சுமணதாசா அவளைப் பார்த்தான். அவர்கள் இருவரும் ஒரே பாடங்களையே படிப்ப தாக அவன் சொன்னான் ; வேறொன்றும் பேசவில்லை.

அன்று இரவு கதைத்துக் கொண்டிருக்கும்போது கதையோடு கதை யாகத் தர்மபாலாவிடம் இச் செய்தியைச் சொன்னேன். அவனும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போனான். நான் தம்மிகாவைப்பற்றிய அடையாளக் குறிப்புகளை அவனிடம் சொன்னபோது, அவளை தான் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பதாய் தர்மபாலா எனக்குச் சொன்னான். கம்பஹா என்னு மிடத்திலுள்ள விவசாயி அப்புகாமியின் மகள் தம்மிகா. எதிலும் நிதான மும் துணிவுமுள்ளவளென்று மாணவிகள் பலரினால் வியக் கப்படும் தம்மிகா , தனித்து ஒதுங்கித் தனித்துச் சிந்தித்து வாழும் புத்தகப்புழுவான சுமண தாசாவை விரும்பியது எங்களுக்கு மிகவும் புதினமாகவே இருந்தது.

அந்தச் சந்திப்பின் பிறகு நூல் நிலையத்தில் சுமணதாசாவும், தம்மி காவும் அருகருகாயிருந்து படித்துக்கொண்டிருப்பதை அடிக்கடி கண்டு புன்முறுவலாற் பதில் சொல்லி நாணங்கலந்த குறு நகையைப் பதிலாக எதிர்கொண்டிருக்கின்றேன் நான். ஆயினும் அவர்கள் மோகவெறி கொண்ட திரைப்படக் காதலர்களைப் பாவனை பண்ணித் திரியவில்லை.

இளங்காதலர்கள் தனித்து உலாவும் காதலர் பாதையிலோ அல் லது பில்லறிங் செஷனிலேயோ அவர்கள் அலைந்து திரிந்த தாய்க்கூட யாரும் கதைத்ததில்லை. எல்லாம் அந்தப் புன்னகைக்குள்ளும், அமைதி யான கதைகளினுள்ளும், ஒருவரையொருவர் பார்த்து மயங்கியிருக்கும் மௌனத்திற்குள்ளும் அடங்கிப் போயிற்றுப் போலும்.

அன்று பின்னேரம் வரையிருந்து நூல் நிலையத்தில் படித்துவிட்டு வெளியே வந்த என்னை செனற்கட்டிடத் தூண்களின் ஓரமாய் நின்ற தர்மபாலா அழைப்பதைக் கண்டேன். அவனோடு தம்மிகாவும் நின்றாள்.

தம்மிகாவைத் தனியே கண்டு நன்றாகக் கேலி செய்யவேண்டும் என நினைத்திருந்த நான் வலியக்கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சி யடைந்த மனத்தோடு அவ்விடம் சென்றேன். நான் கேலியைத் தொடங்க முன் தர்மபாலா என்னைக் கையமர்த்தி நிறுத்திவிட்டு வழமையான நிதா னத்தோடு சொன்னான்:

“சில தினங்களிற்குமுன் சுமண தாசா வீட்டிற்கென்று போய்விட்டு வந்தான். வந்த பிறகு தம்மிகாவோடு முகங்கொடுத்துக் கூடக் கதைப் பதில்லையாம். அவள் எவ்வளவோ கேட்டுங்கூட ஒன்றுஞ் சொல்கிறானில்லை; சினக்கிறானாம் …”

தம் மிகாவை நான் பார்த்தேன். மென்மையான அவளின் முகத் திலே கவலையின் சலனமில்லாதபோதும், புன்னகையின்மையினால் இலே சான வாட்டமிருப்பது தெரிந்தது. எதையோ நினைத்துக்கொண்டு இடது ஆட்காட்டி விரலினால் அவள் தன்னுடைய மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கதைத்துவிட்டு, தனக்கு முக்கியமான அரசியல் வகுப்பிருப்பதாய்க் கூறியவண்ணம் தர்மபாலா அங்கிருந்து போய்விட் டான். தம் மிகாதான் மண்டபத்திற்குப் போவதாய்க் கூறி என்னிடமிருந்து விடைபெற்றாள்.

நான் அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

செனற் கட்டிடத்திலிருந்து கீழிறங்கும் படிகளால் நடந்து தென் புறமாய் அவள் போய் மறையும் வரை ஏதோ நினைவாய் அவளிலேயே தொட்டு முடிந்தது என் பார்வை. இப்போது உயர்ந்து தெரியும் பசு மரங் கள், கொத்துப் பூக்கள், கற்றூண்கள், வெறுமையான வீதி இவையே என் முன் தெரிந்தன.

நான் பிரமையிலிருந்து விடுபட்டேன். நூல் நிலையம் முழுவதும் சுமண தாசாவைத் தேடினேன். அவன் வழமையாக இருந்து படிக்கும் இடங்களி லெல்லாம் வேறு யார்யாரோ இருந்து படித்துக்கொண்டிருந்தார்கள். கடைசியில் மனம் அலுத்துக் களைத்துப் போன நான் விடுதிமண்டபத்திற் குப் பாய், சுமண தாசாவின் அறைக் கதவைத் தட்டாமலே திறந்து உள்ளே போனேன்.

அறையின் இடது புறக் கட்டிலில் சுமண தாசா குப்புறப்படுத்துக் கிடந்தாண்.

அப்படி அவனை நான் ஒரு நாளும் கண்டதில்லை.

வேறு நாளாயிருந்தால் அவனது நித்திரையைக் குழப்பாமலே நான் பேசாமற் திரும்பிப்போயிருப்பேன். அன்றோ என்னால், எனக்கிருந்த மன நிலையில் அது முடியாத ஒன்றாக இருந்தது.

குப்புறப் படுத்திருந்த அவனுடைய தலைமாட்டில் விக்ஸ்டப்பியும் , தலைவலி மாத்திரையின் உரித்த ஈயக் கடுதாசிகளும் கிடந்தன.

நான் அவனைத்தட்டி எழுப்பினேன்?

களைத்த முகத்தோடு கட்டிலிலிருந்து அவன் நிமிர்ந்து எழுந்தான். கண்களில் சோர் விருந்தது. நெற்றி, விக்ஸ் தேய்த்ததால் பசைப்பிடிப் பாயிருந்தது. தன் பரந்த நெற்றியைத் துடைத்துத் தடவியபடியே கேள்வி நிறைந்த கண்களினோடு சுமண தாசா என்னைப் பார்த்தான். என் மனத்தி னுள்ளே அவனை யொட்டி எழுந்த குழப்பங்களைக் கேட்டேன். அவன் நான் சொல்லி முடியு மட்டும் தலைகுனிந்திருந்து விட்டு, என்னைத் தயக்கத்தோடு நிமிர்ந்து உற்றுப்பார்த்தபடி சொன்னான்:

“என்னை மறந்துவிடும்படி தம்மிகாவிடம் சொல்லப் போகின்றேன்..”

எனக்கு என்னையறியாது ஆத்திரம் பொங்கியது. பொங்கிய சினத் துடன் கேட்டேன்.

“ஏன் அப்படிச் சொல்லப் போகின்றாய்?”

“அம்மாவிடம் கேட்டேன். தனக்கு இஷ்டமில்லையாம்” நான் அவனைப் பார்த்து அலட்சியம் மேலோங்கச் சிரித்தேன்.

“உனக்கென்று மூளையில்லையா? ஏன் உன்னுடைய அம்மாவைக் கேட்டு அனுமதிபெற்ற பின் காதலித்திருக்கலாமே …..?”

என் சொற்களினால் அடிபட்ட உணர்வோடு அவன் என்னைத் தலை தாழ்ந்து பார்த்தான். முகமெல்லாம் சோகை பிடித்தாற்போல வெதும்பியிருந்தது. நலிந்த குரலிற் சொன்னான்:

“சிவா நான் எதிலும் ஆசைப்படத் தகுதியற்றவன். என் ஆசைகள் எல்லாம் தீய்ந்து போன கனவுகள் தான்”

நான் அவனையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தேன். இளமை அழுவது பார்க்கச் சகிக்காத ஒன்று. எனக்கு அனுதாபம் சிறிதளவேனும் நெஞ்சில் துளிர்க்கவில்லை. முன்பெனில் அவனுக்காக வருந்தியிருப்பேன். தர்மபாலாவினுடைய நட்பளித்த மனத்தெளிவிற்குப்பின், என் நெஞ்சம் கோழைத்தனங் களிற்கும், அடிமை மனோபாவத்திற்கும் இரக்கம் காட்டு வதைத் தவிர்த்துவிட்டது.

“சுமணா, ஏன் ஓயாது இப்படியே விரக்தியோடு கதைத்துக்கொண்டிருக்கின்றாய்? வறுமையில் தானே துணிவு பிறக்கின்றது. உலகையே மாற்றி புதுவாழ்வு காண வேண்டுமென்ற செயலுக்கான ஆவேசம் பிறக்கின்றது. இவ்லையா?”

சுமணதாசா என்னைப் பரக்கப் பார்த்தான்.

“நல்ல கேள்வி சிவா… நீயோ, தர்மபாலாவோ ஏன் தம்மிகாவோ கூட உலகிளை முழுமையாகப் பார்க்கின்றீர்கள். தர்மபாலாவிற்கு தான் வரித்துக்கொண்ட அரசியற் கொள்கைதான் எல்லாவற்றிலும் முதன்மை யானது. அதை அந்தரங்க சுத்தியாக ஏற்றுக்கொண்டு புதிய உலகிற்காகப் போராடுபவர்களோடு அவன் தன்னையும் பிணைத்துக்கொண்டிருக்கிறான். நீயும் அவனோடு சேர்ந்து மாறிக்கொண்டிருக்கிறாய். ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் மூவரும் உலகின் மாற்றம், அரசியல் யாவிலும் அக்கறையும் ஆர்வமும் வைத்திருக்கிறீர்கள். ஆனால் நானோ சிறுவயதிலிருந்தே என் தாயே உலகமாகவும், எனது நல்வாழ்க்கை ஒன்றே என் கொள்கையாக வும் கொண்ட சுயநலக்காரனாயும் வளர்க்கப்பட்டு விட்டேன். தம்மிகா கூட என்னிடமுள்ள இக்குணத்தை அடிக்கடி சுட்டிக்காட்டியிருக்கிறாள்”

கடைசியாகச் சொன்ன வசனங்களை அவன் அழுத்திச் கொல்லிக் கொண்டே பெருமூச்செறிந்தான். சுமண தாசாவின் தவறுகள் அவனுக்கே தெரிகின்றன. தவறை உணர்தலே திருத்தத்தை நோக்கிச் செல்லும் தொடக்கம்.

நான் நினைத்திருந்ததுபோல சுமணதாசா கண்மூடித்தனமாய் புத்தகங்களில் ஆழ்ந்து போய்க் கிடக்கவில்லை; தான் பழகும் ஒவ்வொருவரையும் ஆழமாய் அளந்து வைத்திருக்கின்றான் என்பதை அன்று தான் உணர்ந்தேன் நான்.

“இவ்வளவிற்கு உணர்ந்திருந்தும் பிறகு ஏன் இப்படி வாழ்வையும் முடிவுகளையும் கொண்டவனாயிருக்கின்றாய்? வானத்தை மண்ணிலிருந்து எட்டித்தொட நினைக்கும் வாழ்வினைக் கனவுகாண்பதைவிட, மண்ணிலிருந்து மண்ணின் வாழ்வைப் புதிதாக்கி அனுபவிக்க நினைப்பதில்லையா நீ?”

சுமண தாசா ஒன்றுமே பேசவில்லை. தன் மேசைக்கு மேலே ஒட்டி யிருந்த புத்தர் படத்தை வெறித்துப் பார்த்திருந்தன அவன் கண்கள். மேசையின் முதுகெல்லாம் புத்தகங்களும், குறிப்புக்கொப்பிகளும் நிறைந்து கிடந்தன. பெக்கில் இரண்டு காக்கிக் காற்சட்டையும், ஒரு பழுப்பு நிறச் சறமும் தூங்கின. கண்ணாடியின் அருகே சீப்பும், தரங்குறைந்த பற்பசையும், பிறஸ்சும் ஒழுங்காய் அடுக்கியிருந்தன. அவன் யோசனையில் ஆழ்ந்திருந்தபோதும் அவனோடு நான் அனேக விஷயங்களைக் கதைத்துக்கொண் டிருந்தேன். என்னுடைய கதைகளுக்கெல்லாம் ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தான் அவன்.

ஒரு மாதங் கழிந்த பின்பு தர்மபாலாவோடு நான் சுமணதாசா வைப் பற்றிக் கதைத்தேன். இந்த இடைக்காலத்திற்குள் தம்மிகா தர்ம பாலாவோடு மிக நெருக்கமாகப் பழகிவிட்டாள். அவனோடு சோஷலிச சங்கத்தில் நடைபெறும் அரசியல் வகுப்பிற்குச் செல்லக்கூடச் சம்மதந் தெரிவித்திருந்தாளாம். நான் தம்மிகாவை நினைத்துப் பார்த்தேன். மெலிந்த அவன் உடலினிற்குள் உள்ள வைராக்கியமான இதயமும் துணி வும் பெண்களிடையே அபூர்வமானது தான்.

“அவள் மிகவும் தெளிந்த சிந்தனையுள்ளவள். அரசியலிலே தெளி வான பிரக்ஞை பெற்ற தகப்பன் அவளை நன்றாகச் சிந்திக்க வைத்திருக் கின்றார். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி அவளோடு நான் அனேக விஷயங்களைக் கதைத்தேன். வர்க்கபேதமற்ற சமுதாயத்திலே தான் காதல் என்ற விஷயம் அர்த்தம் பெற முடியும் என்பது தெரிந்திருந்தும் ஏனோ அவள் சுமணதாசாவை விரும்பிவிட்டாள். அதைத் தவறு என்று இப் போது அவளே உணர்ந்திருக்கலாம்”

சொல்லிக்கொண்டுபோன தர்மபாலா வேறேதோ யோசனையோடு தொடர்ந்தான்.

“ஆனால் சுமணதாசாவோ இன்றைய அமைப்பின் நெருக்குதல்களுக் குட்பட்டு தன் வாழ்வை விட்டு விலகி மேல்தட்டு வாழ்க்கை வாழ்வதற் குப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கிறான். தான் மட்டுமே தப்ப முயலுகின்ற தனிப்புத்தி இனிமேல் சாத்தியப்படமாட்டாது. தன் னைச் சேர்ந்தோரையும். தன்னை நேசிப்போரையும் அடக்கி ஒடுக்கி வைத் திருக்கும் நாசகாரமான சக்திகளை உடைத்தெறிவதன் மூலமே நலமான வாழ்வு உதயமாக முடியும் என்ற உண்மையினை இவன் அறியவில்லை. தான் தான் வாழவேண்டும் என்ற சுயநல புத்தியுள்ளவர் களில் சிலர் ஒரு மாதிரித் தம்பி தாம் முன்பிருந்து வந்த இடத்தையும், வாழ்வையும் அலட்சியம் செய்யலாம். ஆனால் பெரும்பாலானவர்களோ அந்த ஆசை நிறைவேறாது விரக்தியும் இன்னலுமடைந்து தோற்று மடிகிறார்கள்”

– தொடரும்…

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *