என்னடா, ”ஒன் முகம் இப்படி ஜொலிக்கிறதே” என கேட்டான் ஆனந்தன். ”டேய் ஸ்மார்ட் போன் ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கு வந்துவிட்டதே, அதான், இவ்வளவு சந்தோஷம். நம்மள மாதிரி நடுத்தர மக்களுக்கு நல்லதுதானே” என்றான் சந்தோஷ்.
அடப்போடா, ”நீயும். ஒன் ஸ்மார்ட் போனும்” என அலுத்துக் கொண்டான் ஆனந்தன்.. ”என்னடா அலுத்துக்குற, ஒனக்கு சந்தோஷம் கிடையாதா?” அப்படின்னு ஒரு வார்த்தைக் கேட்டான் சந்தோஷ் . அந்த ஒரு வார்த்தைக்கு…..இப்படி ஆரம்பித்தான் ஆனந்தன்.
டேய் ”மொபைல் வந்த்தலே பாதிப்பேருக்கு புழைப்பு வீணாய் போச்சு.”
”டைம்பீஸ் வியாபாரம் படுத்துபோச்சு, ரிஸ்ட் வாட்ச் ஷோரூம்ல தூங்குது, கேமிராக்கள் அப்படியே புத்தம்புதுசா வீட்ல பீரோவுல தூங்குது…இப்படி முப்பத்துமூணு பொருட்கள் புழக்கத்தில இருந்து வெளிநடப்பு செய்திடுச்சு”.
”எலக்ட்ரானிக் பொருட்கள் விலைக்குறைஞ்சா குதிக்கறீயே! குடிக்கிற தண்ணீர் ஒரு லிட்டர் இருபது ரூபாய் ஆயிடுச்சு. இன்னும் ஒரு இருபது வருஷத்தில இருநூறு ரூபாய் ஆகி, ஸ்மார்ட் போன் இருபது ரூபாய்க்கு வந்திடும்”. அப்ப என்ன பண்ணுவே !
சாப்பிடுகிற உணவுதானியங்கள் விளைச்சல் குறைஞ்சு போச்சு. விளைநிலங்கள் எல்லாம் ரியல்எஸ்டேட்காரர்களிடம் கையடக்கமாகிவிட்டது. யாராவது விவசாயத்தைப் பத்தி கவலைப்படுறாங்களா? இல்லையே? ஏன், எல்லோருக்கும் நாகரிகத்தின் பெயராலே, மிண்ண்ணு பொருட்களின் ஆதிக்கத்திற்குள் அடைக்கலமாகிவிட்டனர். விவசாயிகள் அவர்களின் வாரிசுகளை படிக்க வைத்து ஆளாக்கி விட்டனர். கைத்தறி தொழிலாளர்கள், அவர்கள் வாரிசுகளை வேறுபடிப்பு படிக்க வைத்து ஆளாக்கி விட்டார்கள். ஏன் இந்த நிலை. அவர்கள் கஷ்டம், தங்களின் வாரிசுகளுக்கு நேரக்கூடாது என்பதால்தானே.
ஸ்மார்ட் போன் வாங்கி என்ன பண்ணுவே? அதில் பேஸ்புக், வாட்ஸ்அப் இப்படின்னு நண்பர்களோட அரட்டை அடிப்பே, அதுக்கு பதிலா ஏதாவது ஒரு கிராமத்துக்கு போய் ஒரு விவசாயியப் பார்த்து, ஆறுதலா நாலு வார்த்தைப் பேசினால், அவரும் விவசாயத்தை சந்தோஷமாப் பார்ப்பார். நமக்கும் ஆத்மதிருப்தி கிடைக்கும் என்றான் ஆனந்தன்.
வெறும் எலக்ட்ரானிக் பொருட்கள் விலைகள் மட்டும் குறைந்தா போறாது, வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளும் கட்டுக்குள்ள இருக்கணும். ஸ்மார்ட் போன் இருநூற்று ஐம்பதுக்கும், வெங்காயம் முந்நூறுக்கும் விற்றால், அதுதான் வாழ்க்கையா… இல்லை வளர்ச்சியா… இப்படி அடுக்கிக்கொண்டே போனான் ஆனந்தன்.
ஆனந்தா, விட்டுடு, நாமே சேர்ந்தே போய் ஒரு விவசாயியைப் பார்த்து ஆறுதல் சொல்லலாம் என கிளம்பினான், இருநூற்று ஐம்பது ரூபாய்க்கான ஸ்மார்ட் போனின் மீதான ஆசையை துறந்து விட்டு!
பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, கட்டுரைகள் அனுப்பலாமா ?