(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
என்ன இருந்தாலும், முடிவிலே இயற்கையின் முன்னிலை யில் நாம் ஊமைகளாகி விடுகிறோம். அந்தி நேரத்து மேற்கு வானில் தோன்றும் வர்ண ஜாலங்களுக்கும் அல்லது சாதாரண இலை,செடி, பூ அல்லது ஊர்வன, நடப்பன, பிறப்பன முதலியவைகளின் வர்ணத்திற்கும், ஓவியக்காரனின் வர்ண வேலைப்பாட்டுக்கும் எட்டு ஏணி வைத்தாலும் எட்டுமா?
காலத்தையும், தேசத்தையும் தந்தி இல்லாக் கம்பியும், ஆகாயவிமானமும் விண்வெளி விமானமும் ஓரளவுக்கு வென்று விட்டன.
இருந்தாலும் இயற்கையின் சக்தியை இவைகளெல்லாம் அளவெடுப்பதாகத்தான் தோன்றுகிறது.
இயற்கையின் அந்தரங்கத்தை விஞ்ஞானம் அறிய அறிய அது திரௌபதையின் துகிலைப்போல் முடிவற்று வளர்கிறது!
புயல், சூரைக் காற்று, பூகம்பம், பிளேக், காட்டுத்தீ நீர்வீழ்ச்சி, பெரும் வெள்ளம் – இவைகளுக்கு எதிரில் மனித சக்தி எம்மட்டு?.
இருந்தாலும் உயிர் தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை.
உயிரியக்கு ஓய்வதில்லை.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.