இதான்யா டுவிஸ்ட்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,769 
 
 

‘‘அடடே, அண்ணாச்சி… நீ ரம்யா தொடரு டைரக்டருதானே? இங்க என்ன பண்ணி-னிருக்குற?’’

‘‘கார் ரிப்பேர். மெக்கானிக்கைக் கூட்டிட்டு வர டிரைவர் போயிருக்கார். அதிருக்கட்டும், நீங்க ரசிகரா? ரம்யா எப்படிப் போயிட்டிருக்குது?’’

‘‘அட போப்பா! சொல்றேன்னு தப்பா நினைக்காதே, சஸ்பென்ஸ் எங்கே, எப்படித் தர்றதுன்னு தெரியவே இல்லே உனுக்கு!’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘பின்னே, வேலாயின்னு ஒரு ரவுடிப் பொம்பளை நடிச்சிட்டிருந்தா இல்லே, அவளை ஏன் கதையில திடுக்குனு சாவடிச்சுட்டே?’’

‘‘வேற வழி? அது பாவம், நிஜ வாழ்க்கையிலேயே செத்துப்போயிருச்சே..?’’

‘‘எனக்கேவா? அவ புருசன்டா நானு! அது செத்தன்னிக்கி வூட்டாண்ட வந்து எட்டிப்

பாத்துட்டு, பத்தாயிரம் ரூவா தர்றேன்னு சொல்லிட்டுப் போனவன் போனவன் தான்… ரெண்டு வருஷமா எனுக்கே நீ சஸ் பென்ஸ§ வைக்கிறியா? மவனே, இப்ப நீ காலி!’’

‘‘ஏய்! ஏய்! கத்தியை மடக்கு!’’

‘‘அடச் சீ! இது கத்தியே இல்லடா கஸ்மாலம்! நானும் அவ புருசன் இல்ல! சஸ்பென்ஸ§, டுவிஸ்ட்டு எப்படி வைக்கிறதுன்னு உனுக்குச் செஞ்சு காட்டினேன். சரி, வண்டியைப் பார்க்கட்டுமா?’’

‘‘வண்டியை நீ பார்க்கறியா? என்ன சொல்றே?’’

‘‘அட, நான்தான்யா மெக்கானிக்கு. இங்கே நான் இருக்கு றேன். உங்க டிரைவர் என்னியத் தேடிட்டு ரோட்டு மேல போயிருக்கான்!’’

‘‘அப்பவே சொல்லக் கூடாதா?’’

‘‘இதான்யா டுவிஸ்ட்டு! நீ ‘தொடரும்’ போடவேண்டிய இடம் இதான்! சரி, சரி… சர்வீஸ் சார்ஜ் நூறு ரூபா எடுத்து வை!’’

‘‘என்ன விளையாடறியா? போலீஸ§க்கு செல்ல டிப்பேன்!’’

‘‘மவனே, இது என்ன தெரியுமா? இதை இதுக்குள்ளே போட்டு, இதோ பானெட்டை மூடிட்டேன். போலீஸ் வரதுங்காட்டி நீயும் இருக்க மாட்டே, உன் காரும் இருக்காது, உன் மெகா தொடரும் இருக்காது… வர்ட்டா?’’

‘‘அடப்பாவி! குண்டைப் போட்டு மூடிட்டியா? ஐயையோ..!’’

‘‘ஹாஹா..! பய புள்ள ஓடிட்டான்யா! கார்லேருந்து ரேடியோ, ஸ்டீரியோ இதுகளைக் கழட்டறதுக்கு எனக்குக் கொஞ்சம் டைம் வேணுமே! ஒரு கல்லுல கயித்தைச் சுத்தி வெச்சா வெடிக்குமா? இதான்யா டுவிஸ்ட்டு!’’

– 29th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *