எல்லோருமே இண்டர்வியூ முடித்து காத்திருந்தனர்.
இவள் மட்டும் பாக்கி. வியர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்தாள் உமா.
இண்டர்வியூ முடிஞ்சிட்டது. செலக்ஷன் மட்டும் தான் பாக்கி.
டைமுக்கு வரமுடியாத உன்னால… வேலைக்கு எப்படி கரெக்டா வரமுடியும்? என்றார் டாக்டரில் ஒருவர். ஸ்டாப்பிங்ல ஒரு அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பிட்ஸ் வந்திடுத்து.
அந்தம்மாவுக்கு முதலுதவி செய்து… இதே ஹாஸ்பிட்டல்ல சேர்த்து வர்றேன். அதனால தான் லேட் என்றாள் உமா.
அப்போது காபி ட்ரேயுடன் வந்த ஒரு பெண்ணை பார்த்து அதிர்ந்தாள் உமா. அவள் பிட்ஸ் வந்து உமாவினால் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட அதே பெண்.
இவுங்க இந்த ஹாஸ்பிட்டலோட ஸ்டாப் தான். ஸ்வீப்பரா வேலை பார்க்குறாங்க. இண்டர்வியூக்கு வந்த ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு விதமா டெஸ்ட் பண்ணினோம்.
எல்லோருமே நோயாளிக்கு உதவி செய்றதை ஒரு வேலையாதான் நினைச்சு செயல்பட்டாங்க. நீங்க மட்டும் தான் கடமையும், மனித நேயமும் கலந்த சேவையா நெனைச்சு செயல்பட்டு இந்த பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தீங்க..
அதனால நர்ஸ் போஸ்ட்டுக்கு உங்களையே அப்பாயிண்ட்மென்ட் பண்ணியாச்சி. பெஸ்ட் ஆப் லக் என்றார் தலைமை டாக்டர்.
உமா ஆனந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்.