ஆன்மீகமும் மருத்துவமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 6,398 
 
 

ஐயா என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்க குழந்தை பேச்சி மூச்சில்லாமல் அமைதியாயிட்டான் கொஞ்சம் என்னாச்சுனு பாருங்க ஐயா

மருத்தவரும் குழந்தைக்கு என்னாச்சிமா ?

இரவு முழுவதும் அழுத்துக் கொண்டே இருந்தான் நானும் அவனுக்கு பால்லுட்டி அமைதியாக்கினேன் கொஞ்ச நேரத்திலேயே குடித்த பாலை வாந்தியெடுத்து விட்டான் மூச்சு திணரல் வேற அதிகமானது! குழந்தையோட கண்கள் விரல்களெல்லாம் இறுக்கமாகிவிட்டது ஐயா! காய்ச்சலும் இருந்தது

ம்ம்ம் என தலையை ஆட்டிக் கொண்டே குழந்தையை பரிசோதனை செய்தார்..!! குழந்தையை உடனே பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்க அதான் நல்லது. குழந்தையோட இதயத் துடிப்பு மிகவும் குறைவாக துடிக்கிறது இரத்தவோட்டமும் சரியாகயில்லை கொஞ்சம் தாமத்தித்தாலும் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்து தான். பெரியாஸ்பத்திரிக்கு சிபாரிசு கடிதம் தருகிறேன் அதை நீங்கள் அங்கே காண்பித்தால் போதும் உடனடியாக வைத்தியத்தை தொங்கிடுவார்கள் சரியா.

என்னய்யா நீங்க இப்படி சொல்லிட்டிங்க? இப்போ பஸ் கூட இல்லையே? எப்படியா எங்க குழந்தைய கூட்டிப் போக முடியும்? இங்க தான் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்தாச்சே எங்களுக்கு என்ன செய்யனும் என்றதே தெரியலையே என் மகன் அவ்வளவு தானா?

கண்ணீருடன் கை கூப்பு உதவி கேட்டாள் அழகி

நீ எதற்கும் சங்கடப்படாதமா நானே அதற்கான ஏற்பாடு செய்றேன். இங்கே இருக்கும் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை கூட்டிச் செல்லலாம் பணம் எதுவும் தேவைப்படாது. ஒருவேலை பணம் கேட்டாலும் நீங்க தரக்கூடாது அது உங்களுக்கான இலவச சேவை வாகனம் சரியா..!! நான் இப்போது குழந்தைக்கு முதலுதவி மட்டுமே செய்துள்ளேன் பெரியாஸ்பத்திரியில் மற்றதை கவனித்துக் கொள்வார்கள் உடனே நீங்கள் புறப்படுங்கள்

ஐயா நாங்க அவ்வளவு துராம் போறதுக்கு. இங்க நீங்களே மருத்துவம் பார்க்கலாமே?

அது முடியாதுமா!! இங்க சாதாரண காய்ச்சல் தலைவலி சுகப்பிரசவம் அடிப்பட்டு வருபவர்களுக்கு முதலுதவி செய்யும் மருதுவமனை மட்டுமே இது ஆராம்ப சுகாதார மையம் அவ்வளவுதான் தானே தவிர இந்த மாதிரியான பெரிய வழக்கு பார்க்கும் வசதிகள் இங்கே இல்லை.

இப்போது உங்கள் குழந்தைக்கு

ஸ்கேன் எக்ஸ்ரே போன்ற நவீன கருவிகளின் உதவியோடு தான் சிகிச்சை தேவை ஆகையால் தான் அங்கே சொல்லுங்கள் நேரத்தை வீணாக்காமல் புறப்படுங்கள் பிறகு குழந்தை இன்னும் சோர்வடைவான்

ஆம்புலன்ஸில் குழந்தைக்கு செயற்கை சுவாச கருவியை பொருத்தியதுடன் துணைக்கு அழகியும் கணவன் மாரிமுத்து மற்றும் ஒரு செவிலியரையும் அனுப்பி வைத்தார் மருத்துவர்

ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில்

பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தடைந்தது. குழந்தையை இறக்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த பிறகு ஆம்புலன்ஸ் ஒட்டுநரும் செவிலியரும் அழகிக்கு தைரியம் சொன்னார்கள் குழந்தைக்கு எதுவும் ஆகாது நல்லா தைரியாக இருங்க இங்க இருக்க டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் உண்மையை மறைக்காமல் சொல்லுங்க அப்போதான் குழந்தையோட உயிர காப்பாற்ற முடியும் சரியாங்களா. நானும் குழந்தைக்கு என்ன மருந்து கொடுத்திருக்கோம் என்ற விவரத்தசொல்லிட்டேன் இருந்தாலும் அவர்கள் உங்களிடமும் கேள்வி கேட்பார்கள் அப்போது குழந்தைக்கு என்னலாம் ஆச்சியேன எதுவும் மறைக்காமல் உண்மையை சொல்லுங்கள் சரியா

அழகியும் நிச்சயமா நான் உண்மைய சொல்றோன் ரொம்ப நன்றிங்கமா

இதுவும் எங்களோட வேலை தான். எங்களுக்கு நன்றிலாம் வேண்டாம் குழந்தையை நல்ல படியா வெளிய வந்தாலே போதும்.சரி பார்த்துக்கோங்க நேரமாச்சி நாங்கள் புறப்பாடுகிறோம்

சரிகங்கமா பத்திரமா போங்க..!! எங்க குழந்தை கண்விழிச்சதும் தகவல் சொல்றேன்

சரி சரிங்க என கிளம்பினார்கள்.

அவசர சிகிச்சை பிரிவு டாக்டர்கள் அழகியை அழைத்து குழந்தைக்கு என்னலாம் நடந்தது என கேட்க ஆரம்பித்தார்கள்

உங்க பேர் என்னமா?

அழகிங்க ஐயா

உங்க கணவன் பெயர் அப்பறம் அவர் என்ன தொழில் செய்கிறார்?

என் வீட்டுக்கார் பேர் மாரித்துங்க.கூலி வேலை தான் பார்க்கிறோம்

குழந்தை பிறந்து எத்தனை மாதமாகிறது?

இரண்டு மாதக் குழந்தைங்க!

எங்களுக்கு என்று ஓத்தைக் குழந்தை இவன் மட்டும் தான்யா

ம்ம்ம் புரியுதுமா. ஆனா குழந்தையோட உடலில் போதுமான சத்துக்களே இல்லை காய்ச்சல் ரொம்ப நாட்களாக இருந்துள்ளது அத்துடன் மஞ்சள் காமாலை நோயும் உள்ளது! ஏன் நீங்கள் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை? ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை கொடுத்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டீர்கள் ஏன் அதை நீங்கள் செய்யவில்லை?

ஆமாம் கேட்க மறந்துவிட்டோம் குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது? பிறக்கும் போதே குழந்தைக்கு மஞ்ச காமாலை இருந்துள்ளது அதை எப்படி கவனிக்காமலும் சிகிச்சை கொடுக்கலும் விட்டார்கள் என்றே தெரியவில்லை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும் அது எந்த மருத்துவமனை என்று உண்மையை சொல்லுங்கள்..!!

ஐயா நாங்க எங்கையும் பிரசவம் பார்க்கலங்க!! எங்க கிராமத்திலே ஒரு பாட்டி இருக்காங்க அவங்க பார்த்தாங்க எனக்கு மட்டுமில்ல எங்க ஊர் பெண்களுக்கு அவங்க தான் பார்ப்பாங்க

என்னமா காலம் எப்படி மாறிட்டே போகுது நீ இன்னும் பாட்டி வைத்தியம் பார்த்திருக்க. நீங்க பண்ண தவறால இப்போ அந்த குழந்தையோட உயிருக்கு தான் ஆபத்து வந்திருக்கு பாரு?

இதுவே நீ மருத்துவமனையில் பிரசவம் பார்த்திருந்தால் குழந்தையின் ஆரோக்கியம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் இதயத் துடிப்பு என எல்லாம் சரியாக இயங்குகிறதா அல்லது வேறு எதாவது நோய் உள்ளதா என்று முறையா ஆராய்ந்து பார்த்திருப்போம். ஆனால் நீங்க தான் இன்னமும் மாறாமல் பாட்டி வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அதன் விளைவை இப்போது அனுபவியுகள். குழந்தையின் உடல் ரொம்ப பலவீனமாக உள்ளது எப்போது என்ன நடக்கும் என்பதை எங்களால் சொல்ல முடியாதுமா.!!?

ஐயா நீங்களே இப்படி சொன்னா எப்படிங்க!?! உங்கள நம்பி வந்திருக்கோம் எங்கள கைவிற்றாதீங்கயா

சரி குழந்தைக்கு நான்கு நாட்களாக காய்ச்சல் இருக்கே ஏன் நீங்க மருத்துவமனைன்னு கொடு வந்து பார்க்கவில்லை?

ஐயா குழந்தைக்கு மஞ்ச காமாலை நோய் இப்பது எங்களுக்கும் தெரியும்! அதற்கனா பத்தியத்தில் தான் நான் இருக்கிறேன். அவன் பிறக்கும் போதே கை கால் பாதங்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருந்தது நோயின் தீவிரத்தை அறிந்தே பச்சிலை மருந்து சாப்பிடுகிறேன் பத்தியமிருந்ததால் அந்த நோய்யின் தீவிரத்தன்மை குறைந்தது. குழந்தையும் ஆரோக்கியமாக விளையாடினான் அடுத்த கொஞ்ச நாட்களிலேயே காய்ச்சல் வந்துவிட்டாது மூச்சு திணரலும் அதிகமானது..!!

எங்கள் ஊர் வழக்கப்படி வைத்தியத்தை பார்த்தோம் அதிலும் குணமாகவில்லை என்பதால் இனியும் தாமதிக்கமால் உடனே இங்கே வந்துவிட்டோம்

அச்சசோ…!!! அழகி நீ சொல்வதைப் பார்த்தால் இதுவரை மருத்துவமனை பக்கமே வந்ததில்லையோ?

ஆமாம் ஐயா…!!! நாங்கள் எதற்கும் மருத்துவமனை பக்கம் வந்ததில்லை! எல்லாம் எங்களுக்கு தெரியந்த கை வைத்தியத்திலேயே குணமாகிவிடும். அதுமட்டும் இல்லாம் உடல்நலக் குறைவு எங்களுக்கு வந்ததேயில்லை ஆரோகியமான சாப்பாடு வேலைனு வாழ்க்கைய ஒட்டுகிறோம்.

மனித வாழ்வுக்கு உணவு இன்றியமையாதது அந்த உணவு முறையை இந்த நவீன வளர்ச்சி மாற்றிவிட்டது.

வளர்ச்சி மனிதர்களுக்குத் தேவை தான் ஆனால் அதன் வளர்ச்சி மனிதர்களை அடுத்த தலைமுறைகளுக்கு நல்லதை எடுத்து செல்லக்கூடியாத இருக்க வேண்டுமே தவிர நோயாளியாகவோ திருடனாகவோ நேர்மையின்மை மனிநேயம் இல்லாமலும் இருக்கக்கூடாது.

அதிக வேக உணவுமுறையால் அதிக மருத்துவமனைகளை பெற்றதா வளர்ச்சி? இந்த வியாபாரத்தைத் தான் நீங்கள் வளர்ச்சி என்கிறீர்கள் ஐயா

உணவில் கலப்படம் ஏற்பட்டால் போதும் அனைத்திலும் லாபத்தை காணமுடியும் தொழில் முனைவோர்களின் எண்ணம். இங்கு உணவை வைத்தே உலக வர்த்தகமே நடைபெறுகிறது! ஒரு நாட்டின் வளர்ச்சியை உணவு உற்பத்தியை வைத்து தான் தீர்மானிக்கிறது. இந்த நகர வாழ்வு வேண்டாம் என்று தான் நாங்கள் காடுகளோடு ஒன்றி வாழ்ந்துக் கொண்டிக்கிறோம் காட்டில் விளையும் பழங்கள் பயிர்களை உணவாங்கி ஆரோக்கியத்துடன் இயற்கையோடு ஒன்றி இருக்கிறோம்.

அங்கையும் தற்போது அழிவை நேரியில் பார்த்து பயப்படுகிறோம் இன்னும் 50ஆண்டுகளில் காடு மலைகள் ஆறுகள் இல்லாத பூமியாக மாறப் போகிறது இந்த நவீன வளர்ச்சியால்

நீ நல்லா பேசுறீங்கமா? அவ்வளவு ஆரோக்கியமானவங்க ஏன் இங்க வந்தீங்க? நீங்களே வைத்தியத்தைப் பார்த்துக்க வேண்டியது தானே?

மன்னியுங்கள் ஐயா. நாங்கள் பார்த்த வைத்தியத்தில் குணமாகததால் தான் இங்கே ஒடி வந்தோம். குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணரல் வருகிறது அடுத்த நிமிடகே இரண்டு கண்களும் வெளியே வந்து கை கால் விரல்கள் அனைத்தும் விரைத்துக் கொள்கிறது அவனது உடலும் பனிக்கட்டியை போன்று சில்லென்றாகிவிடுகிறது ஐயா. குழந்தைக்கு வேற எதோ பிரச்சனையிருக்கு என்று உணர்ந்தேன். எங்களின் வைத்தியத்தில் சரியாகவில்லை அதான் உங்களை தேடி வந்துள்ளாம்.

இந்த குழந்தையை எங்களுக்கு 10வருஷம் கழித்து தான் பிறந்துள்ளது ஐயா

ஒ பத்து வருஷமா குழந்தை யில்லைனு சொல்றீங்க அப்பறம் எப்படி குழந்தை பிறந்தது?

அது தெய்வத்தோட அனுகிரகம்!!

என்னது தெய்வத்தோட அனுகிரகமா? நீங்க எந்தவொரு சிகிச்சையும் எடுத்துக்கவில்லை? மாத்திரை மருந்துனும் சாப்பிடவில்லை பிறகு எப்படி நடந்தது? இது சாத்தியமே இல்லை? எங்களாலும் இதை நம்ப முடியாது?

உண்மைதான்யா நாங்க எந்த மருத்துவரிடமும் போய் பரிசோதனை செய்யவில்லை ஆனால் சோதனையைக் கொடுப்பவனான சிவ பெருமானின் அருளால் பிறந்தக் குழந்தை தான் ஐயா அவன்

ஒ!!! இந்த கலியுகத்தில் அதுவும் இந்த நவீன காலத்தில் போய் கடவுள் வந்து வைத்தியம் பார்த்தாரா உனக்கு?

உண்மை தான் ஐய்யா. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பெளவுர்நமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் அதுவும் ஒரு பசுவும் அதன் கன்றுக்குட்டியுமாக.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வந்து அண்ணாமலையாரை வணங்கிய பிறகு நாங்கள் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்துள்ளோம் நீ தான் இறைவா எங்களுக்கு துணையாக வந்து கிரிவலம் செல்லும் வழியில் எவ்வித ஆபாத்துக்களும் நிகழாமல் எங்களை பாதுகாத்துக் குழந்தை வரமும் தர வேண்டும் என இருவரும் வேண்டிக் கொண்டு கிரிவலப் பாதைக்கு வந்தவுடன் கணவனின் தோலில் மீது பசுவின் கன்றை சுமந்துக் கொண்டு கையில் பசுவையும் ஒட்டிக் கொண்டு கிரிவலத்தை சுற்றிவரவேண்டும் இடையில் கன்றுக்குட்டியை எங்கையும் கீழே இறக்கி விடக்கூடாது. கன்றுக்குட்டி கணவனின் தோலின் மீதே இருக்க வேண்டும். கிரிவலம் முழுவதும் சுற்றி வந்த பிறகு பசுவையும் கன்றையும் இறங்கிவிட்டு மீண்டும் கோயிலுள்ளே சென்று கணவன் மனைவி இருவரின் பெயர்களில் அர்ச்சனை செய்துவிட்டு

துர்வாசக முனிவர் முன்பு

சொல்ல வேண்டும் நாங்கள் கிரிவலத்தை நிறைவு செய்விட்டோம் எங்கள் மீது கருணை காட்டுங்கள் என்று வேண்டுதலை வைத்து வெளியேற வேண்டும்.

இதல் விளக்கம்:-

பசுவை போன்று என் மனைவியும் தாய்மையடைய வேண்டும் குழந்தைச செல்வத்துடன் வந்து உன்னை தரிசிக்க வேண்டும் உலகில் குழந்தை செல்வத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறில்லை பசுவின் சிறப்பைப் போன்று என் வாழ்விலும் பசுமையும் குழந்தை செல்வமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதை காட்டும். இந்த பழக்கம் என் மூதாதையர்களின் பழக்கம் ஏறத்தாழ 100வருஷத்திற்கு முந்திய வழிபாட்டு முறை. இப்போது யாருக்கும் இதைப் பற்றி தெரிய வாய்ப்பே இல்லை!

கடவுள் பக்தி ஒரு பக்கம். நாட்டு வைத்தியம் ஒருபக்கம் எதுலாம் சாப்பிடனும் சாப்பிடக்கூடாது என்று முறையான பத்தியமிருந்து மனதளவிலும் உடலளவிலும் வலிமை பெற்றேன் என் மதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டேன் பிறகு அடுத்த மூன்று மாத்திலேயே நான் கர்ப்பம் ஆனான் ஐயா. இது தான் சத்தியம் நிதர்சனமான உண்மை.

ஒ கடவுளே இதை

என்னால நம்பவே முடியவில்லையே ? அது சரி கடவுள் கருணை கிடைச்சது சரி ஆனால் அறிவியல் படி பார்த்தால் இதை என்னால் ஏற்க முடியாது?

அது உங்கள் விருப்பம் ஐயா! கடவுள் பக்தி ஒருபுரம் இருந்தாலும் எங்களின் தலைமுறை வழி வைத்தியர்களின் ஆலோசனைகளையும் அவர்களின் வழிமுறைகளை என் முழு மனதோடு செய்தேன் அதன் பயனையும் அனுபவித்தேன். ஆனாலும் அந்த சந்தோஷம் நிலைக்க வில்லையே?!

யாருக்காக தவமிருந்து பெற்றேனோ அவனே

தற்போது வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடுகிறான் இதை பார்க்கம் முடியவில்லை ஐயா.

இவ்வளவு பேசுறீங்களே? குழந்தையை இப்போ அந்த கடவுள் காப்பாற்ற சொல்ல வேண்டியது தானே ஏன் இங்கே எடுத்து வந்திங்க?

வாஸ்தவம் தான் ஐயா எப்பொழுதுமே முதலில் கை வைதியத்தை செய்து பார்க்க வேண்டும். அடுத்து எங்கள் பரம்பரை வைத்தியம் அதுக்கும் சரியாகவில்லை என்றால் இந்த ஆங்கில மருவத்தைதான் நாடிவர வேண்டும். ஆங்கில மருந்தால் தீர்க்க முடியாத நோய்களை பச்சிலை மருந்து சரியாக்கும் பச்சிலை மருந்துக்கு சரியாகவில்லை என்றால் அந்த நோயின் தாங்கம் அதிகம் ஆங்கில மருந்தால் தான் குணப்படுத்த முடியும் என்று புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்குள்ளது ஐயா.

சரிமா குழந்தைய ஏன் இரவு முழுக்க வைத்திருந்து காலையில் தூக்கி வந்தீங்க?

ஐயா எங்கள் கிராம் மலைமேல் உள்ளது சாலை வசதிகள் இல்லை அந்த காட்டுக்குள் நடந்தே தான் வரவேண்டியுள்ளது அந்த இரவில் பச்சைக் குழந்தையை எப்படி ஐயா தூக்கிக் கொண்டு வர முடியும்?

கொஞ்ச தொலைவென்றாலும் பரவாயில்லை அது நான்கு கிலோ மீட்டர் வரை நடந்து வர வேண்டும் அடர்ந்த காடு மலை மேல்லிருந்து கீழே தூக்கி வர வேண்டும் இதுவே குழந்தையென்றால் பரவாயில்லை எளிதாக தூக்கி வந்துவிட்டாம். இதுவே வயதானோர்கள் என்றால் மூங்கிலில் தூலிக் கட்டித் தூக்கிக் கொண்டு மலை இறங்வோம் வரும் வழிகளில் யானைங்கள் காட்டு ஏருமைங்க அவ்வளவு ஏன் சிறுத்தை நடமாட்டம் கூட இருக்கிற மலைங்க அது. இப்படியுள்ள கிராமத்தில் இருந்து எப்படி ஐயா இரவில் வர முடியும் சொல்லுங்க?

அஹஹா……!! சரிமா நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க! நான் பேசி முடிச்சதுக்கு அப்பறம் நீங்க பேசுங்க சராயா?

ஐயா நீங்க சொல்லும் போதே எனக்கு பயமாக உள்ளதே?!

அது வந்து குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருந்துக் கொண்டே இருந்தது ECG இயத்துடிப்பை அளவிடும் கருவியைக் கொண்டு சோதனை செய்ததில் இயத்துடிப்பு குறைவாக பதிலாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக ஸ்கேன் எனப்படும் உடற்கூற்றாய்வு கருவியைக் கொண்டு பார்த்தோம் அதில் தான் தெரிந்தது குழந்தையின் இதயத்தில் ஒர் சிறிய ஒட்டை உள்ளது. அதனால் தான் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்துள்ளது வலிப்பு நோய் போன்று கை விரல்களை இறுக்கமாக முடிக்கொள்ளும் கண்கள் வெளியே வந்துவிடும் அதே மாதிரி தானே குழந்தையில் உடலிலும் மாற்றம் தெரிகிறது.

ஐயா என்னைய்யா இப்படி சொல்லிட்டிங்க?!!?! அப்போ என் குழந்தை உயிர் பிழைக்கமாட்டானா? இதற்கு தீர்வே இல்லையா?

இதற்கு தீர்வு இதய அறுவை சிகிச்சை சிகிச்சை தான் ஒரே வழி! ஆனாலும் அதை இப்போது செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சிகிச்சையை தாங்கும் அளவிற்கு குழந்தையிடம் சக்தியில்லை அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு மூன்று வயாதாகும் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை மருந்து மாத்திரையை சாப்பிட வேண்டும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்

எதுவும் அறியா சிசு இந்த உலங்கத்தை இன்னும் பார்க்காத உயிர் ஆனால் அதற்குள் இந்த நிலையா.. என கண்ணீர் வடித்தாள்

கனம் ஏறிய மார்க்கத்தின் பின்னே

இதயம் துடிக்கிறது தாயின் பாலில்

முறியாத நோய்யா வெள்ளை நிற

மாத்திரையில் தீரும் ? நிலையில்லா

மானிடப் பிறவியே அன்பை நிலைக் கொண்டு வாழ கற்றாய்

நிலையில்லா உயிர்க்கு ஏன் அன்பைக் கொடுத்தாய் ஆண் பெண் ணென பிரித்தாய் அதில் தாய்மைக் கொடுத்து மரணத்தை திரும்ப பெருகிறாய்யோ இறைவா

என்று கண்ணீர் விட்டு அழுதாள்

அழகி கவலைப் படதீங்க நான் இன்னமும் முழுசா சொல்லி முடிக்கவில்லையே? அதற்குள் ஏன் இவ்வளவு துயரம் ம்ம்ம்!

குழந்தை வளர வளர இதயத்தில் இருக்கும் ஒட்டையும் வளரும் அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்துவிடலாம்! சில சமயம் அதுவாகவே சீராகிவிடும் நல்ல தசை வளர்ச்சியால் கூட இதய ஒட்டை காணாமல் போகும் இதைப் போல பல குழந்தைகள் நலமாகியுள்ளார்கள் அறுவை சிகிச்சை சிகிச்சையும் செய்துள்ளார்கள் அதனால் நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை சரியா

நீங்க சொல்றதை கேட் முடிகிறது ஆனால் இது தான் உண்மை என்றால் அவன் விதிப் படி நடக்கட்டும் ஐயா. கடவுளும் அவனுக்கு துணையிருப்பார். ஆன்மாவிற்கு கடவுளும் உடல் நோய்களுக்கு மருத்தவமும் அவசியம் ஐயா. நீங்கள் சொல்வதை போன்றே நாங்கள் செய்கிறோம் சொல்லுங்கள்

நீ ஏதற்கும் கவலைப்படாதே அழகி உன் நம்பிக்கை வீண் போகாது. நீ செய்தது ஒன்று தான் என்னதான் கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும் சரி உடல் நோய்களுக்கு மருத்துவத்தில் தான் சரியாகும் என்பதை உணர்ந்து செய்துள்ளாய்.

ஆன்மீகமும் மருத்துவமும் வெவ்வேறு தான் ஆனால் நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்று தான் அது நம்மிடம் நிலையாக இருந்தாலே போதும் நம்மையே நடக்கும்.

எங்களையும் மீறி ஒரு சக்தி இருக்கதான் செய்கிறது. நாங்கள் முடியாது இனி இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று சொன்னவர்களும் இன்று நலமுடன் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

நகர வாழ்வு தொடர்பில் இல்லாத பெண்ணாக இருந்துக் கொண்டு இவ்வளவு அறிவாற்றலோடு பேசுவதும் இயங்குவதும் நான் முதல்முறையாக பார்க்கிறேன்.

அழகி உங்கள் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அத்துடன் அந்த மருந்தும் சேர்த்துக் கொள்ளுகள் குழந்தை நலமுடன் வாழ்வான். அதை நீங்களே பார்ப்பீர்கள்

நன்றி ஐயா உங்களின் பேச்சுக்களால் எனது மனபயம் போனது

தவ மிருந்தேனே பூ வாக மாற

பூ கனியாக வேண்டுமென

கால் பாதங்கள் காலமறியா

சிவத் தொண்டனே வந்தேனே!

உன் அருளாள் பிறந்தானோ என்றால்? அவன் உயிரை காக்க

வைத்தியனாய் வா ஆதிரையானே

ஆதிமுதல் ஒளிக் கடவுளே

ஒம் சிவாயா நம எனும்

பிரபஞ்சத்தின் உயிர் அணுவே

இதயத்தின் உணர்வே நாடியின்

ஈர்ப்பு திசையே வா

உடர்மரபு தலைமுறை மூனிவா

எம் தலை மகனை காத்திடவா

கன்றில்லா தாய் மடியில்

கனத்தோடு தெங்கியிருக்கும்

அமிதமே நஞ்சாக்கிவிடுவதா நஞ்சுண்ட நீலகண்டனே காப்பாற்றை வா

கலியுகதாதிபதியே கலகம் கொண்ட மனதிற்கு தெளிவூட்ட வா

அதிசியத்தை காட்டின ஆமீகத்திலும் மருத்துவம் கொண்ட ஈசனே என் குழந்தை காக்க வா

என்று பாடினால் அழகி பிறகு மருத்துவரிடம் சொன்னாள் ஐயா எங்களுக்கு மருத்தோவத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கையுள்ளது

என் வேண்டுதல் ஒருபுறம் இருந்தாலும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது தான் நன்மையை தரும்.

இறைவன் நேரடியாக வரவில்லையென்றாலும் மருந்து மாத்திரை வடிவில்லாவது குணமாக்குவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ஐயா

ஆமாம் அழகி நீ தான் பேசுகிறாய் ஆனால் உன் கணவர் இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை அவருக்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையால் பேசவில்லை ஐயா

சரி எல்லாம் நல்லதே நடக்கும் ஒரு வாரம் கழித்து குழந்தையை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

உங்களின் உதவிக்கு எங்களின் நன்றிகள் ஐயா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *