ஆண்டவன் படைப்பிலே….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 5,216 
 

நான் என் மணைவியுடனும், மருமகளுடனும் குமரன் சில்க் ‘·பேலஸ்க்கு’ புடவைகள் வாங்க மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி சுமார் மூனரை மணிக்கு கடைக்குப் போய் சேர்ந்தேன்.

என் மனைவியும் மருமகளும் அந்தக் கடையில் இருந்த எல்லா வித புடவைகளையும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இவர்களுடன் கால் கடுக்க நின்றுக் கொண்டு இருந்த நான் எனக்குக் கால் வலி ஆரம்பிக்கவே நான் அங்கே போட்டு இருந்த ஒரு ‘ப்லாஸ்டிக்’ சேரில் உட்கார்ந்துக் கொண்டேன்.

அவர்கள் ரெண்டு பேரும் பார்த்தாள்,பார்த்தார்கள் மாறி மாறி புடவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.கடைக்காரரும் சளைக்காமல் அவரிடம் இருந்த எல்லா புடவைகளையும் அவர்களுக்குக் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு வழியாக என் மனைவி நாலு புடவைகளையும்,என் மருமகள் நாலு புடவைகளையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

புடவைகள் எடுத்து முடிக்கும் போது நான் மணியைப் பார்த்தேன்.

மணி ஏழரை அடித்து விட்டு இருந்தது.

புடவைகள் ‘செலக்ஷன் முடிந்ததும், அவர்களுடம் நான் எழுந்துப் போய் அந்தப் புடவைகளுக்கு ‘மாட்ச்சிங்க் ப்ளவுஸ்’வாங்கும் அடுத்த இடத்திற்கு கிளம்பிப் போனதும் நானு அவர்களுடம் கூடப் போய் அங்கேப் போட்டு இருந்த ‘ப்லாஸ்டிக்’ சோரில் உட்கார்ந்துக் கொண்டேன்.

புடவைகளுக்கு ‘மாட்ச்சிங்க ப்ளவுஸ்’ காட்டிக் கொண்டு இருந்த ‘சேலஸ்மனுக்கு’ வயது ஐம்பத்துக்கு மேல் இருக்கும்.

அவர் பாவம், யார் புடவையைக் கொண்டு வந்தாலும் உடனே அதை கையில் வாங்கிக் கொண்டு உடனே ”என்னம்மா பாடி கலரா,இல்லை பார்டர் கலரா” என்று கேட்டு விட்டு புடவையை அலமாறியில் வைத்து இருக்கும் ‘ப்லவுஸ்’ துணிகள் மேல் வரிசையாக வைத்துப் பார்த்து விட்டு அவருக்கு எந்த ‘ப்லவுஸ்’ துணி மாட்ச்சிங்காக இருக்கோ அதில் ரெண்டை கொண்டு வந்து புடவை கொடுத்த அம்மா முன் வச்சு “எதுங்க குடுக்கட்டுங்க” என்று கேட்பது வழக்கம்.

என் மனைவியும்,மருமகளும் அவர்கள் வாங்கிக் கொண்டு வந்தப் புடவைகளை ஒன்றின் பின் ஒன்றாக காட்டி அந்த ‘சேல்ஸ்மன்னிடம்’ காட்டி ‘மாட்ச்சிங்க் ப்ளவுஸ்’ வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

அவரும் பாவம்,இவர்கள் ரெண்டு பேரும் மாற்றி, மாற்றிக் கேட்ட ‘மாட்ச்சிங்க் ப்லவுஸ்’ துணியைக் கொண்டு வந்து காட்டி அவர்கள் ‘ஓ.கே’. பண்ணினதும் அதை உடனே அவ்ர்கள் கேட்ட அளவுக்கு துண்டுப் போட்டு கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது இவர்களுக்கு நடுவில் சமீபத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தன் கணவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மூன்று புடவைகளைக் கொடுத்து அதற்கு ‘மாட்ச்சிங்க் ப்ளவுஸ்’ கொடுக்கும் படி கேட்டாள்.

இந்த பெண் கேட்கும் போது மணி எட்டடித்து விட்டது.

அந்த ‘சேல்ஸ்மன்’ உடனே புடவைகளை வாங்கிக் கொண்டுப் போய் ‘மாட்ச்சிங்க் ப்ளவுஸ்’ தேர்வு பண்ணி விட்டு கொண்டு வந்து அந்த பெண்ணிடம் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் அந்தப் பெண்ணோ “ ‘மாட்ச்சிங்க்’ சரி இல்லை,ரொம்ப ‘லைட்டா’ இருக்கு,இன்னும் கொஞ்சம் ’டார்க்காக்’ குடுங்க” என்று கேட்டாள்.

அந்த ‘சேல்ஸ்மன்னும்’ பாவம் அசராமல் அந்தப் பெண் கேட்டது போல ‘டார்க்கா’ கொண்டு வந்துக் காட்டினார்.

ஆனால் அந்தப் பெண்ணோ “இது வேண்டாங்க, ‘மாட்ச்சிக்கா’ இல்லை.வேறே கொடுங்க” என்று மாறி மாறிக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

பாவம் காத்தாலே ஒன்பது மணிக்கு கடைக்கு வேலைக்கு வந்த ‘சேல்ஸ்மன்’ நின்றுக் கொண்டே வரும் அத்தனைப் பெண்மணிகளுக்கும் ‘மாட்ச்சிங்க் ப்ளவுஸ்’ காட்டி, காட்டி, மிகவும் சோர்ந்து இருந்தார்.

அவர் முகத்தில் அந்த சோர்வு நன்றாகத் தெரிந்தது.

மணி வேறே ஒன்பது அடித்து விட்டது.

வந்த இளம் பெண்ணோ இது ‘மாடிச்சிங்கா’ இல்லை, அது ‘மாட்ச்சிங்கா’ இல்லை, என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர்,கொஞ்சம் சலிப்புடன்,அந்த இளம் பெண்ணைப் பார்த்து “மாடம்,கடவுள் படைப்பிலேயே அவர் ‘மாட்ச்சிங்க்’ அமைப்பது இல்லை,அப்படி இருக்கும் போது மனுஷன் படைச்சு இருக்கிற இந்த ‘ப்லவுஸ்’ துணியிலே எப்படிங்க ‘மாட்ச்சிங்க்’ வரும்” என்று சொன்னவுடன்,அந்த இளம் பெண் சட்டென்று இந்த ‘ப்லவுஸ்’ துணியிலே என்பது சென்டி மீட்டர் ‘கட்’ பண்ணுங்க” என்று சொன்னதும்,அந்த ‘செல்ஸ்மன்’ ‘ப்லவுஸ்’ துணியை வெட்டி அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

அந்த ‘ப்லவுஸ்’ துணியை வாங்கிக் கொண்டு அந்த இளம் பெண் தன் கணவரை அழைத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாக போய் விட்டாள்.

அங்கு இருந்த அனைவரும் அந்த இளம் பெண்ணையும் அவள் கணவரையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்தப் பெண் சற்று கருப்பாகவும்,நாலடி மூனு அங்குலம் உயரமாய் இருந்தாள்.

ஆனால் அவள் கணவரோ நல்ல வெளுப்பாக,ஆறடி ஐஞ்சு அங்குலம் உயரமாய் இருந்தார்.

ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் ஆண்டவன் அமைத்த கணவன் மணைவி ஆயிற்றே!!!.

ஆண்டவன் படைப்பிலேயே கணவன் மணைவி ‘மாட்ச்சிங்கா’ இருப்பது இல்லையே!!!!!.

நாம் இதை தினம் தோறும் இந்தக் கடையில் பார்த்த மாதிரி பல கணவன் மணைவி ஜோடிகளைப் நடை முறையில் பார்த்து வருகிறோமே!!

இல்லையா சொல்லுங்க?.

அந்த ‘சேல்ஸ்மன்’ பாவம் காலை ஒன்பது மணியில் இருந்து நின்று வந்த அலுப்புத் தாங்காமல் தானே ‘இதை’ச் சொன்னார்.

அவர் சொன்னது எவ்வளவு நிஜம் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *