கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 1,438 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

அத்தியாயம் எட்டு – காலம் ஆரம்பித்தது

வீழ்ந்து கிடப்பவனை அருகில் பார்க்க, உசார் என்று உடல் மாறியது. அவன் உடலை போர்த்திக்கொண்டிருக்கும் துணிகள், அதன் மேல் கவசம், புல்லட் கூட துளைக்காது போல, அதே அதே பழங்காலத்து கவசங்கள். தலை, கை உடல் முழுக்க, அருகில் பார்த்துவிட்டேன் என்ற ஒரு நிறைவு மனதில் எட்டிச் சென்றது. முகத்தை மூடியிருந்த துணி அவிழ்ந்து கிடந்தது. கைகள் ஒரு கணம் வில் அம்பை சரமாரியாக அவன் உடலை நோக்கி நீட்டியது. திடீரென்று எழுந்து விட்டால்! கண்டிப்பாக யார் என்று பார்க்கமாட்டான். கையில் இருக்கும் வில்லை பார்த்தால், என் மீது மிருகம் போல் பாய்ந்து விடுவான். முகத்தில், நீரை, தெளித்து, மயக்கம் களைக்க நினைத்தால் உடல் பதறுகிறது. சாரவ் கால்கள் பின்நோக்கி அடி வைத்தன. போரில் பாறைகள் சிதறிய கல் ஒன்று காலில் தட்டுப்பட்டது. எட்டி ஒரே உதை விட்டான். வீழ்ந்து கிடந்தவன் தலையில் பாய்ந்து தலையை நிமிரச் செய்தது. இடி வந்து விழுந்தது போல ஒரு விழிப்பு. நிலத்தில் படுத்திருந்த உடல் மேல் ஏழ வில்லை. ஒரு நொடி எதோ சித்தம் கலைந்தன. சீருவது போல் நிமிர்ந்து எழுந்தான். கைகள் தாக்குவதற்கு தயாராக நின்றது. சாரவ்வின் பிடி கொஞ்சம் கூட தளரவில்லை, உடல் குப் என வியர்த்தது. அம்பை முறுக்கிய கை சூடேறியது. இருவரும் எதிர் எதிரே.

இதயத் துடிப்போடு சில நொடிகள் கடந்தன.

தீ எரியும் ஒளியை தவிர வேறு ஒளிகள் இல்லை. கும்மிருட்டு. போர் முடிந்த சூழலில் அமைதி தாண்டவமாடியது. அருகில் எரியும் தீ ஒளியாக மாறி, இரு உருவங்களை இரு பார்வைக்கு, வெளிச்சத்தில் புலனாக்கியது. அடி பட்டு வீழ்ந்து கிடப்பவன் சற்றும் தளராமல் திடுக்கிட்டு எழுந்தவன் வேகத்தை பார்த்தால், கையில் இருக்கும் ஆயுதம் தான் உயிர் கவசமானது. சாரவ்வின் வார்த்தைகள் வெளிவர தயக்கமுற்றது. அவனும் ஏதும் வாய் அசைப்பதாக இல்லை. சண்டைக்கு மட்டுமே குறியாக உள்ளான்.

“யார் நீ?”

நல்ல வேளையாக கேட்டான்.

“பக்கத்துல செத்து கெடக்கிறவங்கள பாத்தா உனக்கு தெரியு”

தீயில் எரியும் பார்வை போன்ற கண்கள் கீழே வீழ்ந்து கிடக்கும் உயிரற்ற உடல்களை பார்த்து திரும்பியது.

“என்ன ஒலர்ர”

“அது அது…, உன்ன நாந்தா காப்பாதிருக்கே”

அடுத்த வார்த்தை என்பது அவனுக்கு தேவையற்றது போல் மல்யுத்த வீரன் போல் அடி எடுத்து வந்தான்.

“ஏய்…! இரு இரு இரு! கீழ மூனு பேரு செத்து கிடக்குறான்களே. அவுங்க மட்டும் அம்பாலா தாக்கப்பற்றுக்காங்க. உனக்கு புரியலையா. அவுங்க வோர்…! உன்ன கொல்ல வந்தாங்க”

“அப்ப நீ யாரு”

“நா உன்ன கொல்லனுனு நெனச்சி இருந்தா நீ மயக்கதுல இருக்கும் போதே உன்ன கொன்றுக்கலாம். இது கூட உன்னோட ஜீப்ல உள்ள ஆயுதம் தான். ம்… மன்னிக்கணு உ வாகனத்துல உள்ளது. நா இல்லாட்டி உன்ன கொன்றுப்பாங்க. உன் உயிர காப்பாத்திருக்கே!”

சரமாரியாக எந்திய கைகள் கீழ் பணிந்தது. வில்லும் அம்பும் கைகளில் இருந்து கீழே விழுந்தது.

“நா இல்லாட்டி உன்ன கொன்றுப்பாங்க. அத மட்டு ஞாபகோ வச்சுக்கோ”

“நீ…”

“நா இங்க எப்டி வந்தேன்னு முக்கியோ இல்ல. பேரு, அந்த வோர் குகை, ஒன்பது அஸ்திரம். அப்ரம் நீ ஒரு கூலி படை. பணத்துக்காக குற்றம் செய்றவே தானே”

சாரவ்வின் வார்த்தைகள் அவனை தாக்கிவிட்டது. போர்க்களத்திற்காக உருவாகிய எரியும் கோபங்கள் வார்த்தைகள் மூலம் குறைகிறது. கல் போல இருந்த சிந்தனைகள் கரைய ஆரம்பித்தது. கால்கள் அங்கும் இங்கும் நடந்தது. சிறிது நேரம் வார்த்தைகள் ஏதும் இல்லை. யோசனைகள் மட்டுமே.

“நீ…”

“நா தா உன்ன காப்பாத்திருக்கே. உனக்கு இந்த இடங்களை பத்தி தெரியாது போலயே. இங்க எங்க வோர் ஆபத்து எங்க இருக்குனு தெரியுமா. எனக்கு தெரியும். அந்த வாகனம் மட்டும் தா இருக்கு. இங்க இருந்து தப்பிகனு. இங்க ரெண்டு பேரும் நின்னுக்கிற்றுக்கது ஆபத்து. நானும் அவுங்க சிரையில இருந்து தப்பிச்சவே தா. நீ போர வழியில தா நானு வரனுனு எழுதி இருக்கு. நா இல்லாட்டி நீ செத்துருப்ப!!!”

சாரவ்வின் வார்த்தைகளும் தீ வெடிப்பில் சிக்காத ஒரு வாகனமும் மட்டுமே தான் அவனை செல் என்றது.

பாகிர்.

பாகிர் பிரசாத் என்பது அந்தக் கொலை காரனின் பெயர். ஜீப் வாகனம் புறப்பட்டு விட்ட முடிவில்லாத நீண்ட நேர பயணம், அந்த ஆளைக் கற்றுக் கொடுத்தது. கொலைகாரன் என்ற பட்டம் அழிந்து நட்பு ஒன்றின் முதல் அடி உருவானது. அருகில் எந்த பகைவர்களும் இல்லை. முன்னே செல்லும் ஆட்களும் இல்லை. அவன் செல்லும் பாதையில் பயணிப்பது, சாரவ் மட்டுமே; அவனது அருகில் இருந்து. முரடன். வார்த்தைகளால் மாறி விடுபவன். பயம் அறியாதவன். சூடேரிய கைகள் மூலம் உறுதியும் கூர்மையும் ஆன அம்புகளால் தாக்கப்பட்டவர்கள் உயிரற்ற உடல்கள் ஆனார்கள். சாரவ்வின் வார்த்தை அம்பால் தாக்கப்பட்டவன் அவனுக்கு உயிர் காத்த நண்பன் ஆனான்.

பயணம், குளிர் பயணம். கண்கள் மயக்கத்தில் சென்று விட்டது. ஞாபகங்கள் அரை குறையாக மறைந்து விடும் போல. இந்த பயணம். நேராக இந்த சிறைக்கு வந்ததா! கடந்த கால ஞாபகங்கள் எல்லாம் காட்சியாகிவிட்டது. கனவுகளில் உதித்த அந்த இரண்டாம் உலகத்தில் சூரியன் மறைந்துவிட்டார். இறுதியாக எதுவும் தெரியவில்லை. கடல் அலைகள் மட்டும் கொந்தளிக்கும் சத்தம்.

பிறகு…

மூழ்கிவிட்டான். நீரின் அடிக்குள் மூழ்கும் போது எல்லாம் மறைந்து விட்டது. மங்கலான பார்வைகளாக மாறிய காட்சிகள் அழிகின்றன. இரண்டாம் உலகத்திலிருந்து மீண்டு விட்டது மனம். இத்தனை காலமும் ஞாபகங்களை மறக்கடித்து வைத்து இருந்ததா! இங்கு யாருக்காவது ஞாபகத்தில் மூழ்கிய அனுபவம் உண்டா? எனக்கு உள்ளது. அது கனவு போல் இருக்காது.

“ஆ இப்ப ஞாபகத்துக்கு வருது!”

என்று போல் இருக்காது. நேற்று என் வாழ்க்கையில் நடந்தது போல். கண் முன் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் என்னை அவன், நான் என்கிற அவன், அவன் உலகத்துக்கு அழைத்துச் சென்றான். இப்போது ஒன்றாகி விட்டது. நான் சாதாரண மனிதனாக வாழ்ந்த காலம். ஞாபக உலகத்தின் காலம் இந்த கொஞ்ச மணி நேரம் தானா!

சிறைக்கு வந்து பன்னிரெண்டு நாட்களாக போகிறது. சலிப்பு தட்டிவிட்டது. அனுபவம் புரட்டிப் போட்டது. கடந்த கால பாடம் சிறையிலிருந்து தப்பிக்க சொல்லி தரவில்லை… பலத்தை தந்தது. ஆ! தலை வலி, அது மட்டும் போகாது போல. இத்தனை வருட வாழ்க்கையில் இந்த நாள் மட்டும் இப்படி ஞாபகங்கள் கண் முன் தோன்றுகிறது. சேஃப் கூட கண்டு பிடிக்க முடியாத என் கதையை இந்த நாலு சுவர் கண்ணுக்கு புலனாக்கியது. வோர், உலக எழுச்சி ரா இது இது. சாதாரண விஷயம் கிடையாது. சம்பந்த பட்ட இடத்தில் தான் சம்பந்தம் இருக்கும்.

அவனது மனம் மயக்கத்தில் வீழ்ந்த ஞாபகங்கள் மூலம் கலங்கி விட்டது. மூளையின் நரம்பில் ஒரே வார்த்தை மட்டுமே ஓடியது. அதிக யோசனை காரியமாகவில்லை. தலை வலி குறைந்தபாடில்லை. வோர் எதிரிகளிடம் மாட்டிய சாரவ் மரணமற்று இன்னும் உயிர் வாழ்வதற்கு காரணம், சிறை தண்டனை ஆகாது. யோசனைகள் துப்பறியும் மூளையானது.

அவன் வோர் எதிரிகளிடம் சிக்கிய போது வானத்தில் சேஃப் விமானம் ஒன்று தப்பிப் பிழைத்தது. அது அந்த அசுர விமானம். எதிரி தாக்கும் ஏவுகணை அதை ஒரே இராட்சத குண்டால் அழித்து விட முடியுமா! அவ்வளவு ஆபத்தான ஆயுதங்கள்! போரான் டெக்னாலஜியை எப்படி ஆயுதமாக மாற்றினார்கள் வோர் விஞ்ஞானிகள்! அதன் பின் அவனுக்கு சுய நினைவு இல்லை. கண் மூடி திறந்தவுடன். சிறை மட்டுமே சூழ இருந்தது. தலையில் பட்ட அடிகள் மூளையில் புதைந்துள்ள ஞாபகங்களுக்கு கட்சிகளாக உயிர் கொடுத்ததா! அல்லது இது கற்பனையா! அசை போடும் நினைவுகள் அர்த்தமற்ற கனவுகளை உருவாக்கியதா! மனித உரு அழிந்த அந்நிய வாழ் நாள் முழுவதும் கடந்த கால மனித வாழ்வை எப்படி வாழ்ந்திருப்பேன் என்ற உணர்வு என்றும் மனதில் அடங்காத அலையாகத்தனே எக்காலமும் இருந்தது.

சிறையினுள் ஒரே ஒரு ஜன்னல் மட்டும். வரிகளாக தெரியும் இடைவெளி. சூரியன் சக்திகள் அளவு நில ஒளிகளுக்கு இல்லை. கும்மிருட்டில் மேலே டியூப் மின் கலன்கள் நான்கு சுவரிலும் சுற்றி ஒளிகளாக மின்னுகிறது. இரவு, உறக்கம் எனும் வழியில் விடியலை நோக்கியது.

பருவ மாற்றம், வானம் மேகங்களை துடைத்து மங்கிய நிறத்தில் சூழ்ந்திருந்தது. வழக்கம் இன்றி இன்று குளிர் பருவமானது. சற்று நேரங்களில் பனி மழை தூறிவிடும் போல். பதி மூன்று நாட்களும் அமைதி. சிறையின் கதவின் அடியில் காலை உணவும் பல் துலக்கும் குச்சியும் இருந்தன. ஒவ்வொரு நாளும் வரும் வோர் சிப்பாய் ஒருவனை கதவின் துளை வழியாக கவனித்து விடுவான். இன்று சற்று அதிக நேரம் தூக்கத்தில் மூழ்கிவிட்டான்.

உடல் சோம்பல்களை விரட்டி முறித்தது. தலை வழி இல்லை. அருகில் இருக்கும் ஜன்னலின் குறுகிய இடைவெளிகள் வழக்கமான பளீர் ஆகாயத்தை காட்டவில்லை. மந்த வானமாக உள்ளது. கண்கள் விழித்த சற்று நேரங்களில் வெப்பத்தை தரித்துக்கொள்ள ஆரம்பித்தது; சிறைக்கு வந்ததிலிருந்து முதன் முறையாக.

நிசப்தம். வெளியில் வீசும் காற்று ஜன்னல் ஓரத்தில் இன்று ஊமையாகிவிட்டதா! காதுகள் செயல் இழந்து விட்டது போல் மாற்றம் நொடியில். இதயத்தின் லப் என்ற துடிப்பு மட்டும் ஆத்மாவில் இருந்து கேட்பது போல் அசரீரி. இதயம் நின்றால் இப்படித்தான் இருக்குமா! அசைய முடியவில்லை. ஒரு மைக்ரோ செக்கண்ட் அசைவை கூட உணரமுடிகிறது. நொடிகள் நிமிடங்களாக உணரப்பட்டது. உடலில் இருந்து இன்னுமொரு உருவம் வெளிவருவது போல் ஒரு உணர்வு. கண்ணிலும் மின்னல் போல் தெரிந்தது. பல உருவங்கள் பிரிக்கின்றன. உடலில் இருந்து வரும் உருவங்கள் மாய விம்பங்களை போல் அங்கும் இங்கும் தல்லாடுவது போல் ஒரு வினாடிக்கு ஆயிரம் அசைவுகள் கண்கள் எதிரே தோன்றுகிறது. அதன் வெளிப்படும் தன்மை உறுதியற்ற பிம்பம் போல் காற்றில் கரைந்து விடுகிறது. காதில் எந்த ஒலிகளும் புலனாகவில்லை செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் வெப்பச்சூட்டில் எரிந்து விடுவது போல் தீயாக கொதித்தது. கண்களை இறுக்க மூடிக் கொண்டான். உடல் வளைந்து சிறையில் அமர்ந்து “ஆ…!” என்று கதறியது. கண்களை மூடிக்கொண்டு, ஓடிச்சென்று நீருக்குள் முகத்தை முங்கினான். உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருக்க வேண்டும். எரிமலை மேல் நீர் துளிகள் உருவாகுமா? அவன் சாம்பல் நிற தேகத்தின் அம்சம் அப்படி. உடல் ஒரு வித குளிர்மையை மட்டும் அதிகமாக உணர்ந்தது. வோர் சிறை சூனியத்தால் கட்டுப்பட்டு விட்டது போல் ஒரு பீதி இதயத்தில் அடித்துச் சென்றது. லப் டப் சத்தம் வேகமானது. கைகள் ஒரு கணம் இதயத்தில் நின்று சோதனை செய்து பார்த்தது. இதயம் நிற்கவில்லை, அது விடயமில்லை. இது எந்தக் கோளாறும் இல்லை. சக்திகள் தான்.

நேற்று வந்த ஞாபகம் கடந்த கால பயணம் போல. இன்று நடந்த கண் மாயமும் ஒரு சக்திதான். நான்கு சுவர் சிறையில் பிடிக்கப்பட்ட அவன், தனது மெய் உணர்தான். குழப்பமில்லாமல் ஓர் நிலையில் நின்று சிந்தித்தான். உலகமாக மாறிய குறுகிய சிறை குழப்பத்தில் உருவாகும் உடல் அசைவை ஒழித்து ஒர் இடத்தில் நின்று அவனை நிலை தடுமாறாமல் சிந்தனை செய் என்றது. முதலில் அவன் உடலில் இருந்து

பிரிந்து வந்த விம்ப உருவங்கள் கீழே இறங்கி மறைந்து கண்களைப் பிடித்துக் கொண்டு ஓடியது, சிறை கதவின் முன் நின்றது போன்ற வெளிப்படை அழுத்த மற்ற உருவங்கள் காற்றில் கரைந்து சென்றதை மறக்க முடியவில்லை. அது அவனது சக்தி போல் உணர்ந்தான்.

கண்கள் எதிர்கால நொடிகளை, நிமிடங்களாக மாற்றி அசைவுகளை காண்பிக்கிறது. கடந்த கால ஞாபகங்களை தோற்றுவித்தது.

காலம் எனும் இயற்கை சக்தியில் மனிதன் சிராக செல்கிறான். நான் மட்டும் மனிதத் திறனுக்கு அப்பாற்பட்ட சக்தியில் மிளிர்வது போல் ஒரு பயம். கட்டுப்பாடற்ற விசித்திர திறனில் சிக்கி தவிப்பது போல் ஒரு பதட்டம் சிறையின் நான்கு பக்கத்திலும் சூழ்ந்து விட்டது போல் எண்ணங்கள் எழுந்து சென்றது.

பல் துலக்கிய குச்சி குப்பைக்கு சென்றிருந்தது. காலை உணவு வைத்தபடி உள்ளது. அதற்குள் அந்த நொடி. அந்த நிகழ்வு. அதைப் பற்றிய சிந்தனை. பீதிகள் கரைந்து பதற்றம் ஏறும் முகம் உருவாகியிருந்தது. நெற்றியும் பார்வையும் மூளையை சிந்தனைத் தளத்தில் வைத்திருந்தது. இப்போது சிறை கதவு “டும்டும்டும் டும்” இரும்பு ஒலியை அதிர வைத்தது. சிந்தனைகள் கலையவில்லை. முகம் ஏறிட்டு கதவைப் பார்த்தது. எழுந்து வந்து சிறை கதவின் துளை வழியாக பார்த்தான்.

“தடால்” என்ற சத்தம்.

கதவு இரண்டாக பிளந்து நகர்ந்து இரு சுவற்றிலும் ஒழிந்தது. திறந்த கதவின் வெளியில் இரு சிப்பாய்கள். வழக்கமான உடைகள் தான். முகம் முற்றாக மூடி கண்கள் கண்ணாடிக்குள் ஒழிந்திருந்தது. ஒருவன் கைகளில் ஒன்றும் இல்லை. மற்றவன் கைகள் மட்டும் இரு மூட்டைகளை ஏந்திக் கொண்டிருந்தது.

“என்னா…”

மாய கண்கள் சக்தி கட்டுப்பாட்டில் நிகழ்ந்தது. அவன் உடலில் இருந்து வலது கை காற்றில் கரையும் பிம்ப உருவமாக மேலெழுந்தது. எழுந்த கை முன்னால் நின்ற ஒருவனின் முக தாடை எலும்புகள் நொருங்கும் அளவுக்கு அதிர்வை உருவாக்கும் அடி. நொடியை தோற்கடித்து பிம்ப உருவத்தின் பின்னால் நிஜ உருவம் (வலது கை) செயலானது. அந்த நொடி கூடா எதிர்பார அசைவு அது. வேகத்திலும் அதிர்விலும் தாடை எழும்பு நொருங்கிய சத்தம்.

அடுத்த அடுத்த நொடிகள் கண்களில் படம் போல் ஓடியது. உடலில் இருந்து விலகும் பிம்பங்களை உடல் அசைவின் வேகத்தினால் முந்தினான். வலது பக்கம் இருப்பவனுக்கு முறுக்கிய கையால் அடி. மற்றவன் கைகள் எதிரே வரும் போது பிடித்து முறுக்கி வயிற்றில் ஒரு உதை. அடுத்த அடுத்த நொடிகள் சதைகள் கிழிந்து எலும்புகள் அதிரும் அளவிற்கு அடிகள். தலையை பிடித்து நிலத்தில் ஒரு அடி மயக்கத்தை உறக்கமாக கொடுக்கும் அடி. இரண்டு சிப்பாய்களும் வாழ் நாள் காணாத அடிகளில் மயங்கி வீழ்ந்தார்கள். எதிரில் தாக்க வரும் ஒரு சிறு அசைவை கூட அவனால் கணித்து விட முடியும். அதற்கு ஏற்றது போல் எதிர்கால நொடியில் உருவாகும் இவனது செயல் விழித்துக் கொள்ளும். வேகமும் அசாத்திய திறனும் அசாத்திய மனிதனாக, வீரனாக மாற்றியது. சில நொடிகளில் இவ்வனைத்து அசகாய தாக்கல் சப்தங்கள் ஒலித்து ஓய்ந்தது. இதயப் பட படப்பு சாந்தமானது. அருகில் வேறு யாரும் இல்லை.

அன்றுதான் முதல் நாள், சிறையில் இருந்து வெளிவந்த நாள். மனித சஞ்சாரம் அற்ற பிரம்மாண்ட அரங்கம். கதிரவன் சக்தியை இழந்த காலை வேளை. அந்த நாள் ஒரு இருள் கைப்பற்றும் மந்தமாக இருந்தது. தீயவர்களின் அரங்கம் இருளை மூலைகளில் குடி வைத்திருந்தது. வலது, இடது பக்கங்கள் ஒரே ஒரு அகலமான பகுதிகள் மட்டும் கண்ணாடிச் சுவர். வெளிச் சூழல் வெளிச்சம் கண்ணாடி விம்பத்தில் மங்கிய வெண்மை ஒளியை பூசியிருந்தது. குளிர் படலங்கள் படிந்திருக்கவில்லை. பிரம்மாண்ட அரங்கில் பிரம்மாண்ட தூண்கள் தனது நிலையான வரிசையாக வலப்பக்கம் இடப்பக்கம் என இரு பக்கமும் வீற்றிருந்தது. தூண்களின் வரிசைகள் கண்ணாடிச் சுவர் ஒளியில் உருவகித்து எதிரே உள்ள இருளில் மறைந்து கொண்டு நீண்டிருந்தது. மனித சப்தங்கள் துளி கூட இல்லை. இருந்தாலும் பயம். சினரயில் இருந்து வெளிவந்த பயம். இரு வோர் சிப்பாய்களை மயக்கத்தில் வீழ்த்திய பயம். வெளியே அடுத்த அடிகளுக்கு கால்கள் நகர வில்லை. நகர்ந்தால் எங்கு செல்வதென்று பதட்டம் தான் ஓடும். திரும்பினான். இரண்டு மனிதர்களையும். தரையில் இழுத்துக்கொண்டு சிறைக்குள் தள்ளினான். திறந்த கதவு எப்படி திறந்தது என்ற

ஆச்சர்யம். உறுதியான இரும்புகள். பதிமூன்று நாளில் முதல் நாளில் அவன் கைகள் ஓங்கி அறந்து அறைந்து கூட அறைந்த அச்சை பதிந்துக் கொண்டது மட்டுமே, துளி அசைவில்லை. சிப்பாய் வீழ்ந்து கிடந்த இடத்தில் சிறைக்கான நவீன சாவி கிடந்தது. அவன் கை பார்த்தவுடன் பற்றிக்கொண்டது. அவசர அவசரமாக சிப்பாய் ஏந்தி வந்த முட்டையை அவிழ்த்தான். சேஃப் ஏஜன்ட் சிறப்பு உடை, மூன்று யோனடிக் ச்சிப், ஒரு கத்தி. சிறப்பு உடையில் குருதி விடாபிடியாக படிதிருந்தது. யோனடிக் ச்சிப்கள் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது. பார்த்தவுடன் யோதித் எனும் முகம் நினைவில் நின்றது. அந்த சிறை அந்த மூட்டையில் புதைந்த பொருட்களை அவனுக்கு பெரும் சொத்தாக மாற்றியது. தப்பிப் பிழைக்க ஒரே பார்வைதான் யோசனையாக மாறியது. அடி பட்டு முகத்தில் குருதி சிந்திய உயிர்கள் விழிக்கும் முன் அவர்களில் ஒருவனின் உடைகளை கழற்றி சாரவ் தரித்துக் கொண்டான். உடல் முழுவதும் சாம்பல் நிற தேகம் மறைந்து விட்டது. கத்தியையும், யோனடிக் ச்சிப்களை மட்டும் பையில் சொருகிக்கொண்டு வெளியே வந்தான். சேஃப் சிறப்பு உடை ஒன்றும் பொக்கிஷம் அல்ல. மயக்கமுற்ற இரு சிப்பாய்களும், மூட்டையில் சிறப்பு சேஃப் உடையும் மட்டும் சிறையில் சிக்கிக் கொண்டது. நவீன சாவியை சாவித்துவாரத்தில் இட்டு வலப்பக்கம் ஒரு திருகு. தடால் சத்தம். சுவரின் மூளையில் ஒழிந்த இரு கதவுகளும் ஒன்றாக இணைந்தது. முற்றாக மூடும் போதும் தடால் சத்தம். வேடம் தரித்த் வோர் சிப்பாய் உடைகள் பயத்தை போக்கு என்றது. அரங்கத்தை விட்டு வெளியே செல்வது மட்டும் தான் நோக்கம். கீழ் தளத்திற்கு செல்லும் வழிகளை தேடுவதற்குள் விடியல்

ஆகிவிடும் போல் உள்ளது. அந்த சிறையின் அருகில் நிற்காதே என்று மனம் ஒரு பக்கமாக இழுத்து சென்றது.

நடந்தான். வலப்பக்கம் வரிசை கட்டிய பிரம்மாண்டம் எனும் தூண்கள் அருகில் சென்றான். இன்னும் கொஞ்சம் அடி வைத்தால் இருள் விழுங்கிவிடும். இருள்களை கக்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட அரங்க மத்தியில் சற்று தொலைவில் நிலத்தின் அடியில் இருந்து “டம் டும்” ஏன்ற தொலை ஒளி சத்தங்கள் ஒரு கணம் ஒலித்து ஓய்ந்தவுடன் சற்று மனமும் திடுக்கிட்டது. ஒழிந்துக்கொள்ளத் தேவையில்லை. வோர் சிப்பாய் உடைகளுக்கு ஏற்றவாறு நிமிர்ந்து பகிரங்கமாக நடந்தான். நடந்து செல்கையில் இடது அருகில் சிறை போன்ற கதவு. கதவின் ஜன்னல் கண்ணாடி அறையில் இருந்து வரும் செக்கச் சிவந்த மின் ஒளிகள் அந்த அறைக் கதவின் இருள் போர்வையை விலக்கியிருந்தது. கதவின் கண்ணாடி வழியாக வெளியே பரவியிருந்த ஒளி, ஒரு கணம் கண்களை கூசி திரும்பு என்றது. அதற்கு நேர் எதிராக இருபக்க தூண்களை கடந்து ஒரு இருபது மீட்டர் தொலைவில் அதன் பிரதிபலிப்பு போல் அதே போன்ற கதவு. அதே சிவப்பு ஒளிகளை வீசிக்கொண்டிருந்தது. சிவப்பு ஒளிகள் படர்ந்த தொலைவில், அரங்கத்தின் மத்தியில் இருக்கும் இறங்கு படிக்கட்டுகள் இருளுக்குள் மறைந்திருந்தன. சிவப்பு ஒளிகளுக்கு படிக்கட்டுகள் பாதாளத்துக்குச் செல்லும் கொடூர பாதைப் போல் அமைந்தது.

டம் டம் டும் தடால்!

மீண்டும் அதே அதிரும் சத்தங்கள். அது தொலை ஒலி அல்ல. சற்று அருகில் கேட்ட காதுகளுக்கு உடல் பயமாக அதிர்ந்தது. அந்த அரங்கில் இவ்வளவு நேரம் அதிரும் சத்தங்களைத் தவிர வேறு எந்த சிப்பாய் வீரர்களின் துளி சஞ்சாரம் கூட இல்லை. யாராது அந்த பாதாளத்தில் இருந்து வந்தால்! அதற்கு ஏற்றது போல் சத்தம் டும் டும் டும் என மீண்டும் அதிகரித்தது. அவன் தரித்திருக்கும் வோர் சிப்பாய் வேசம் அவன் பதற்றத்தை அவ்வளவாக போர்த்தவில்லை. அருகில் இருக்கும் அந்த சிவப்புகளை பூசிய கதவின் பக்கம் ஒரு வேக திருப்பம். கதவின் உள்ளே தலையை மெதுவாக பொருத்தி பார்த்தான். உள்ளே மனித உயரத்தில் வர்ண ஒளிகளை மின்னிக்கொண்டு செவ்வக வடிவப் பெட்டிகள் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றிருந்தது. பெட்டிக்குள் ஒளிந்திருப்பது டிஜிட்டல் முறையில் களஞ்சியப் படுத்திய தரவுகள். அது தரவு தள அறை. உள்ளே மனித சஞ்சாரம் ஏதும் இல்லை என்பதை வைத்த பார்வைகள் துப்பறிந்தது. அதற்குள் நுழைய உடல் துள்ளியது. அதோடு பதட்டம் ஒன்று ஏறியது. சிறைக்கு பொருத்தப்பட்ட அதே “தடால்” கதவு வடிவம். அருகில் அதே சாவித்துளை. பையில் இருந்து சாவியை எடுத்து அதனுள் வைத்து இடது பக்கம் ஒரு திருகு.

தடா…ல்!

சத்தத்தில் வரவேற்றது. ஒரு நொடியில் அந்த சிவப்பு அறைக்குள் காற்றுப் போல் புகுந்தான். உள்ளே வந்த அடுத்த நொடி. வரவேற்ற கதவு மூடியது.

தடால்!

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *