கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 1,643 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

அத்தியாயம் ஆறு – சந்திரன்

கதவு தடால் என்று இடிக்கப்பட்டவுடன் வேகமாக திறந்தது. துப்பாக்கியை ஏந்திய கரிய முகம். கண்டதும் சாரவ்வின் அசுரத்தனமான பார்வை. அந்த பார்வை மட்டும் போதும் அவனை கொல்ல. இத்தனை கால வாழ்கை பாதையில் செல்லும் போது அவனின் ஒரே ஒரு செயல் மட்டும், வேறு வழியில் இட்டுச்செல்லும். அந்த தருணம் – அவனால் உணர முடிகிறது. உடல் யந்திரமாக மாறி செயல்களை மட்டும் தோற்றுவித்தது. அந்த செயல்கள் அனைத்தும் மிருகத்தனம், அசுரத்தனம், ஒரே நொடியில் அவ்வளவு வேகம், வேகத்திலும் அவ்வளவு நுணுக்கம். நீண்ட காலமாக மனதில் எரியும் தீ, திட்டம் தீட்டி சென்றுவிட்டதுதான் காரணம். கதவு திறந்த ஆபிரிக்கனின் துப்பாக்கியை எந்தும் பழக்கத்தில் மூவரை கண்டதும் சரமாரியாக நீட்டினான். துப்பாக்கியை பார்த்தால் பயம் இல்லை. அந்த மிருகத்திற்கு பயம் இல்லை. சீறிப்பாயும் வேகம். எத்தனை வருடமாக அடங்கிருந்தது; இப்போது சீர. சீரும் வேகம் துப்பாக்கியை மேலே உயர்த்தி முகத்தில் ஒரே அடி. இரத்தம் பாய்ந்தது. கால் முட்டியில் ஒரு உதை. கால் உடைந்தது. உயிர் போகும் வலியில் கதறினான், அவனது கதறல் பயத்தின் ஒசையாக இரு உயிர்களுக்குள்ளும் பாய்ந்தது. துப்பாக்கியை இழுத்து பறித்து ஒரே வீச்சில் அவனை கீழே வீழ்த்தினான். சுருண்டு போய் கீழே வீழ்ந்தான்.

கையில் துப்பாக்கி, முதல் அனுபவம். இல்லை அவன் செயல்… யந்திரத்திற்கு சிந்தனை இல்லை. திட்ட மிட்ட செயல் மட்டுமே அவனை ஓட்டம் காண வைத்தது. சீரும் வேகம் குறையவில்லை, கால்கள் ஓட்டம் மூவர் எப்போதும் அடையப்படும் சிறையின் குகைக்கே சென்றது. குகையினுள் கால் தட்டு தடுமாறி ஓடியது. பள்ளத்தில் வேகத்திற்கு வேகம் அதிகமானது. முன்னால் கருப்பு உருவம். மனித உருவம். கோபம் மட்டுமே எதிரியை வீழ்த்த முடியும். ஓடி வருவதை கண்ட எதிரில் நின்றவன். அவன் பாசையில் ஒரு கூச்சல், நம்மை பயம் கொள்ள செய்யும். மிருகமாக மாறிய யந்திரத்தை அல்ல. கையில் இருக்கும் துப்பாக்கி எதிரில் இருப்பவனுக்கு எமன். துப்பாக்கியை மறுபக்கம் பிடித்து. அவன் தலை மீது ஒரு மோதல். வேகத்தினால் வந்த மோதல் அவன் தலையை இரும்பு கதவின் கம்பியில் சென்று மோதியது. மண்டை ஓடுகள் வெடிக்கும் சத்தமா! அவ்வளவு வேகம். சாரவ் மிருகத்தின் தீயின் வேகம். வேகம் குறையாத கைகள் துப்பாக்கியை இருக்க பிடித்து. இரும்பு கதவின் பூட்டை உடைத்தது. உள்ளே சென்ற போதும் கூட வேகம் குறையவில்லை, இருள் பகுதியை அடையும் வரை.

இவ்வளவு நேரம் தலை தெறிக்க ஓடியது எதற்கு? எந்திர துப்பாக்கி கூட தர முடியாத பலத்தை தரும் ஆயுததிற்கு. கோடாரி! இரு பக்கமும் கூர்மையான ஆயுதம். அடிமையாக வாழ்ந்த காலத்தில் சில நேரங்களில் கொல்லனாக மாறியதுண்டு. சிறந்த ஆயுததிற்கு மட்டுமே! அது என்ன செய்து விடும். மறு கையில் எதிர் பாராமல் கிடைத்த துப்பாக்கியே உண்டு! அவனுக்கு இரண்டு கைகள் உண்டு. கவசம் போல் மாற வேண்டும். குகையிலிருந்து ஓட்டம், வெளியே வந்தான். மிருகத்திற்கு நுணுக்கம் அதே நுணுக்கம். மறைந்து மறைந்து வாகனங்கள் நின்ற பாதை அருகே சென்று விட்டான். இருந்தாலும் அவன் இருக்கும் இடத்திலிருந்து தூரம் தான். வாகனங்கள் புறப்படும் சத்தம். அவன் கண்களுக்கு புலப்படும், ஜீப் வண்டியொன்றின் ரோதைகள் சுழன்று நகர தொடங்கிவிட்டது. மறைந்து நின்று சென்றவன். திமிறி எழுந்து ஓடினான். ஓடும் வேகம் கால் பதிக்கும் மண்ணின் சப்தம் திபு திபு என்று நிலத்தையே அதிர்வித்தது. அவன் பாதி ஓடிய தூரத்திலேயே அனைத்து வாகனங்களும் கிளம்பி விட்டது. வாகனங்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ஓட்டம் அதிகமானது. வெட்ட வெளியில் தீவிரவாதிகள் பார்வைகளுக்கு மத்தியில் ஓடினான். அவர்களின் கூச்சல் மொத்த ஊரையே அழைத்து விட்டது. மொத்தம் ஐம்பது பேர்கள் சுற்றி வளைத்து ஓடி வந்தார்கள். அவர்களின் துப்பாக்கி குண்டுகள் அவனை என்ன செய்துவிடும்!

என் உயிர் போகாது என்று நம்பிக்கை, லாபத்திற்காக பணயக்கைதி நான். என் உயிரை வீணாக போக விட மாட்டார்கள். என் இரண்டு நண்பர்களை காட்டிலும் நான் அவர்களுக்கு அதிக லாபம் பணயம். அவர்கள் ஓடி வருவது உணர்ந்த மனம் ஒரு வித நடுக்கத்தில் துப்பாக்கியை விழ வைத்தது. கையில் நம்பிக்கை ஆயுதம் மட்டும். சுற்றி வளைத்து வரும் முரடர்கள் சாரவ்வின் வேகத்திற்கு ஈடு இல்லாமல் அவனை சுற்றி பிடிக்கும் போது மொத்த கூட்டமும் சாரவ்வுடன் சேர்ந்து தலை தெறிக்க கீழ விழுந்தது.

கீழே விழுந்த அதிர்வுகளை அந்த பிரதேசம் ஒரு போதும் கண்டிராது. கட்டிடத்தினுள் உடல் பயத்தினால் உறைந்து போய் நின்ற இருவரின் காதுகளுக்கு கூட கேட்டது. சாரவ்வின் கால்கள் கைகளை மடக்கி

பின்னினார்கள்; எழ விடாமல். கையின் கவசமாகிய கோடாரியின் ஒரு முனையில் குருதிகள் படிந்து இருந்தது புழுதிகள் பறந்த பார்வையில் பட்டது. கூர்மையாக செய்த கொல்லனுக்கு தெரியாதா அதன் கூர்மையும் பலமும். கீழே விழுந்தவர்களின் சதைகள் துண்டாகியிருக்கும். செம்மண்ணில் படிந்த சிவப்பு நிறம் மட்டுமே அந்த நொடியில் மிருகத்தின் நம்பிக்கை. திட்டமிட்ட யந்திரத்தின் நம்பிக்கை. மீண்டு எழும் வேகத்தின் பலம். வலது கையில் உறுதியாக பிடித்திருந்த கோடரியை பின் பக்கம் ஒரே வீச்சு, துண்டான சதைகளை உணர்ந்தான். குருதி புழுதிகளுடன் கலந்து பீய்ச்சிட்டது. கோடாரியின் வீச்சின் பயமோ மடக்கி பிடித்த கைகள் பலம் இழந்தன. திமிரி எழ துடிக்கும் சாரவ் உடல் புழுதியிலிருந்து காளை போல் சீறியது. சீரிய வேகத்தில் கால்கள் தட்டு தடுமாறியது. கால்களை மடக்கி பிடித்த ஒருவன் மீது கோடாரியினால் ஓர் வீச்சு, தலையை துண்டாக்கியது . கீழே உருண்டு எழுந்து மீண்டும் சீறினான். “ஹர்ர்” என்ற கதறல்; அடக்கி வைத்திருந்த கோபம். கையில் இருந்த கோடரியால் அருகில் நிற்கும் உயிர்கள் பலியாயின. கைகள் கால்கள் துண்டிக்கப்பட்டு விழுந்தன. கண் முன் தெரியாத சுழல், கோடாரி கைகள் வரும் திசையில் வீசின. காற்று புழுதிகளாலும், நிலம் குருதிகளாலும் ஆன சூழல் கண் இமைக்கும் நொடியில் உருவாகியது. முகத்தில் பாய்ந்த எதிரிகளின் இரத்தச்சூடு அவன் உடலில் எரியும் வெப்பத்திற்கு ஈடு இல்லை. அது முற்று முழுதாக மனித அரக்கத்தனத்தின் உருவம் தான்.

பாதி உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்டு கிடக்கும் உயிர்கள். உயிரற்ற உடல்கள் மத்தியில் ஒருவன், சாரவ்வின் அசுர தனத்தை மீற முடியாமல் அவன் கையில் சிக்கிவிட்டான். கழுத்தில் கோடாரியை வைத்து இறுக்கி விட்டான். கொஞ்சம் இழுத்தல் கூட கழுத்து பிளந்து விடும். சாரவ், கழுத்தை பிடித்துக்கொண்டு அவனின் தலையை கோடரியில் சாய்த்து இழுத்து கொண்டான். அவன் பயத்தின் கெஞ்சல் – தெரியாத பாசையில். அவன் கால்கள் நடக்கவில்லை. தர தர என்று இழுத்துக்கொண்டே சென்றான். பின்னால் நிற்கும் கூடிவிட்ட எதிரி ஆப்பிரிக்கா படைகள் இந்த கோரத்தை பார்த்தால் என்ன செய்யும். அவன் கையில் சிக்கிய அவர்களில் ஒரே ஒரு உயிருக்காக மட்டும் போராடுமா! அவன் கையில் இருக்கும் ஒரு உயிர்க்காக அவனை தப்பிக்க விட்டு விடுவார்களா! புழுதிகள் ஓய்ந்த நிலத்தில், பின் வழியாக திரும்பி பின்பக்கமாக நடந்தான். முதுகில் தோட்டாகள் பாய்ந்தால் என்ன செய்வது. அவன் ஒருவனை கையில் வைத்திருப்பது அந்த மிருகங்களின் கண்களுக்கு தெரியவேண்டுமே.

சாரவ் நின்ற தூரமும் தீவிர வாத தேச தூரமும் நூறு கிலோ மீற்றர் இருக்கும். இவ்வளவு தூரமும் ஓட்டத்தால் கடந்து விட்டன. தார் பாதையின் மத்தி அது. நேரம் நேரம்! எதிரே உள்ள மலையை கடக்க மனம் துடித்தது. நேரம் இல்லை. மலையை கடக்க வேண்டும் அது மட்டுமே அவனது திட்டம். இத்தனை கால அடிமை வாழ்க்கையில் இந்த ஒரு கணம் மற்றும் மலையை கடந்தால் போதும். அதற்கு முன், இந்த உயிரற்ற உடல்களும். கையில் சிக்கிய உயிரும் ஒன்றுமே இல்லை. அந்த நொடி எதுமே தேவையில்லை. தார் பாதைகள் கால்களில் படும்போது பின்னே உள்ள மலை மட்டுமே அடுத்த திட்டம்.

என் கையில் ஒரு உயிர். எதிரே கூடி இருந்த தீவிர வாதிகள் துப்பாக்கி முனையில் சிக்கியிருந்த இரு உயிர்களுமா ஒன்றும் இல்லை!

அந்த கருங்கூட்டத்தின் மத்தியில் கைகள் கட்டப்பட்டு மண்டியிட்டிருந்த இரு உயிர்கள். இரு முகத்தில் இருக்கும் குருதிகள் காயங்கள் மனதை இரும்பாக்கியது. கடந்து செல்லும் நேரம் திரும்ப வருமா. இந்த நொடி மலை மீது ஏறா விட்டால் இந்த காலம் மீண்டும் வருமா. சற்று முன் சென்ற வாகனங்கள் சென்று ஓய்ந்து விட்ட பாதை. தூர சத்தம் கூட கேட்க வில்லை. இந்த நொடி, மலையின் உச்சியில் நான் நின்றிருக்க வேண்டும். யந்திரமாகிய அசுர செயல் மட்டுமே சந்தர்ப்பத்தை தவற விடாது. அரக்கன் போல் மாறியது திட்டம் நிறைவு பெற மட்டுமே. இத்தனை காலம் என்னுடன் வாழ்ந்த அந்த இரு உயிருக்கும் அந்த அரக்க குணம் வராதா. மூர்க்கத்தின் பலம் வராதா. வரும். நேரம் வரும் வெளியில் வரும். இப்போது…

கழுத்தில் வைத்திருந்த கோடாரியை ஒரே இழு இழுத்தான். உயிர் பிரிந்து விழும் உடல் அவன் பார்வைக்கு ஒரு விடயம் அல்ல. மொத்த தேசத்தின் கையில் மண்டியிட்டு கிடக்கும் இருவரிடம் மட்டுமே பார்வை பதிந்திருந்தது. அந்த நொடி தீவிரவாதி கூட்டத்தின் கூச்சல், அது இது வரை கேட்காத ஒப்பாரி ஓலம் போல். கடல் அலைகள் சத்தம் போல். தேசத்தையே உலுக்கியது. அவர்களின் கோபம் இரு உயிர்களை அந்த நொடியே பறித்தது. டும் டும் டும். துப்பாக்கி சத்தம். ஒரு தோட்டா பாயும் போதே உயிர் உடலை விட்டு பாய்ந்திருக்கும். அவன் கண் முன் நடந்த முதல் கொடூரம். அப்போ இத்தனை பேர்களை தன் கையில் கொன்றது ஜடங்களா. இரு உயிருக்கு மட்டும் அத்தனை மதிப்பு. தோழமை உணர்த்திய மதிப்பு. தன்னுடைய

வாழ்க்கையில் பயணித்த மனிதர்கள், இந்த நொடி ஒன்றுமே இல்லாமல் ஆகியது. அந்த நொடி பழிதீர்க்கும் கோபம் உருவெடுக்க வில்லை. அதிர்ச்சியும் வேதனையும் மட்டுமே ஆ…! என்று கதறியது. அவ்வளவு உறுதியான திட்டம். உணர்ச்சிகள் அற்ற யந்திரம் தான் அது. மிருகம் கூட அப்படி இராது. அவனால் தான் இரு அப்பாவி உயிர்கள் பிரிந்தது என்ற உணர்வு கூட இல்லை. அவனது கதறல் அர்த்தமற்றது. அடுத்த நொடியே பின் திரும்பி ஓடினான்.

அதே மிருக வேகம். மலையில் சென்று மோதியது. கையில் கோடரியால் மலையின் மீது அங்கும் இங்கும் கொத்தினான். ஆழமாக ஒரு கொத்து விட்டு இழுத்தான். அதிலிருந்து உறுதியான கையிறு ஒன்று புதைந்தது மண்ணிலிருந்து வெளி வந்தது. கயிறை பிடித்து மேலே ஏறத்தொடங்கியவுடன் மலையிலிருந்து எழுந்து எழுந்து வந்தது. மேலிருந்து கீழ் வரை உறுதியான கயிறு ஒன்று மலையின் மேற்பரப்பு மண்ணில் புதைந்து இருந்தது. அது தான் திட்டம். உணர்ச்சிகளையெல்லாம் கூட கொன்ற, மலையின் உச்சிக்கு செல்லும் திட்டம்.

மேலே ஏறிச் செல்லும் போது துப்பாக்கி குண்டுகள் குறி தவறி பாய்ந்து மலையை சிதைக்கின்றது. மலையை இந்த சிறிய குண்டுகள் ஒன்றும் செய்து விடாது. அவர்களின் தோட்டாக்களில் தன் பெயர் எழுதவில்லை என்ற அவ்வளவு நம்பிக்கை அந்த யந்திரதிற்கு. ஏறும் போது துளி கூட மனம் தளரவில்லை. கை கால்கள் மலை பாறைகளில் மோதி காயங்களை உருவாக்கியது. பாறை மண்கள் அவனை துவைத்து எடுத்தது. என்ன ஒரு உறுதி மனதிலும், உடலிலும்.

உச்சிக்கு சென்றுவிட்டான். அங்கிருந்து பார்த்தால் அந்த பயங்கரவாத தேசம் மறைந்து இருக்கும். ஓலச் சத்தம் மட்டும் தூரத்தில் ஒலித்தது. உச்சிக்கு சென்றவனின் வேகம் அடங்கவில்லை போல. வேகமாக ஓடி மலையின் மறு முனையின் நுனிக்கு சென்றுவிட்டான். வேகமாக சென்ற பாதங்கள் தட்டி விட்ட பாறைகளை உருட்டி சென்றது. அந்த நுனியிலிருந்து பார்த்தால் அதே போல் தாரிலான பாதை. அந்த நுனியிலிருந்து உயிர் மட்டும் பாய்ந்திருக்கும் போல, உடல் எப்படித்தான் அந்த நேரம் அமைதியாக நின்றதோ. அவன் நின்ற மலை உச்சியிலிருந்து பார்த்தால் வலது பக்கம் தார் பாதையினூடாக வாகனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. மலை உச்சி நிலத்திலிருந்து முப்பது அடி இருக்கும். அவன் வந்து நின்ற வேகத்திலேயே முன்னால் இரண்டு வாகனங்கள் அந்த பாதையை கடந்து விட்டன. இறுதியாக வரும் லாரி. பின் பக்கம். மூட்டைகளை அடுக்கி இருந்தது. கீழே இறங்குவதற்குள் அது சென்று விடும். அந்த லாரி வரும் வேகத்தில் சரியான நேரம் பார்த்து. லாரியின் பின் பக்கம், மூட்டைகளில் விழும் வகையில் சரமாரியாக குதித்தான். லாரியின் வேகத்திற்கு ஈடு இல்லை. பின் பக்கம் குதித்தவன் மூட்டைகளில் விழுவான் என்றே ஒரு கணக்கு வைத்தான். விழுந்தவன் சற்று விலகி பின்பக்க மூடும் கதவில் மாட்டிக்கொண்டான். பாய்ந்த அவனுக்கு பாயும் நொடி, காற்றில் மிதக்கும் நொடி உணர்ச்சிகள் இழந்த மிருகத்திற்கு பயம் எங்கே இருக்கும், என்று எண்ணக்கூடாது. யந்திரத்தின் செயல் அந்த காற்றில் மறைந்திருக்கும். மிருகமாக மாறிய அசுர குணம் காற்றில் கரைந்திருக்கும். சாரவ்வின் கண்ணீர் துளிகள் காற்றின் வேகத்தில் மழைதுளிகளாகியிருக்கும். உணர்ச்சியற்ற யந்திரதிற்கு இனி எந்த திட்டமும் இல்லை. அடிமை நிலை இல்லை கைதியில்லை, பழகிய இரு உயிர்கள் இல்லை. அந்த வாகனம் செல்லும் பாதையே இனி அவனது வாழ்க்கை பாதை.

உயிர் பிரிந்து விட்டதா? இது கட்பணை உலகம். நான் தான் உறுதியான கைகள் மூலம் இரும்பு பிடி பிடித்தேனே. லாரியின் மூட்டையில் மேல் உடல்கள் வீழ்ந்தது மட்டும் நினனவில் உண்டு. சிறையில் காணும் கனவுகள். இது உண்மையிலேயே கனவு இல்லையா! நிஜமா! என் மூளையில் மறைந்து போயும் காலத்தின் நினைவுகள் ஏன் இப்படி தூண்டி விடப்படுகிறது. கொடூரமான ஒரு காலமா அந்த கடந்த காலம். அந்த கொடூர செயலின் பாதை எங்கே சென்றது. இதே ஒரு நினைவு தான். அதற்குள் ஒரு நினைவா? தாங்காது, முடியாது…

விழிப்பு! காதுகளுக்கு ஒலிகள் ஏதும் பாயாவில்லை. கண்களுக்கு எதும் புதிதாக தென்படவில்லை. கட் குகைதான், சூழல் என்ற உணர்வு. அசுரத்தனமான உடல் வெப்பம் இப்போது இல்லை. உடல் நீண்ட நேர தூக்கத்தில், இல்லை மயக்கத்தில் இருந்ததால் என்னமோ அப்படி ஒரு ஓய்வு, அப்படி ஒரு சாந்தம். சூழல் குளிர்மையானது. தேகத்திற்கு இனிமையை தருகிறது. ஆப்பிரிக்க நாட்டின் வெப்பத்தில் எரிந்து போன தேகம் இந்த நொடி குளிர்மையை உணருகிறது என்றால்…

கை, கால்கள் நன்றாகத்தான் உள்ளது. காயங்கள் சிகிச்சையில் மறைந்து விட்டது. மயக்கத்தில் படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான். இரணடு பக்கமும் தீ பந்தங்கள். குகையின் மேலே ஒரு பிடியில் மாட்டியிருந்தது. ஒளிக்கு மட்டுமே அது. குகையின் தரை செம்மண் அல்ல. கண்கள் ஏமாற்றுகிறதா! இல்லை இது புதிது. ஆனால்… மீண்டும் சிறையா! வேண்டாம். உடல் நீண்ட நேர ஓய்வைத்தேடி மீண்டும் இரும்பைப் போல் தான் உள்ளது. ஆனால் உட்கார்ந்து இருந்தவனுக்கு எழுந்து நிற்க முடியவில்லை. கால்களில் அவ்வளவு அலுப்பு. இருந்தாலும் மனம் விடாது. எழுந்து நின்று கை கால்களை முறுக்கினான். தன்னை ஒரு பலசாலியாக உணர்ந்தான். உடலளவில் மட்டுமே.

“நல்ல ஓய்வு போல”

அமைதியான குகை எதிரொலித்தது. சற்று திடுக்கிட வைத்தாலும். தமிழ் வார்த்தை மனதிற்கு தைரியம் தான். குரல் வந்த திசையில் உடல் திடுக் என்று திரும்பியது.

நடுத்தரமான வயது. கால் ஊன்றி நிற்க கையில் தடி ஒன்று. முகம் சொல்லும் தமிழன் என்று. நீளமாக வளர்ந்த மயிரும் அறை நரைத்த தாடியும். குகைக்கு அரசன் தான் பார்த்தவுடனேயே தெரிந்தது. இருந்தாலும் பயம் மனதில். சாரவ் திரும்பி பார்த்தவுடனேயே சாரவ்வை நோக்கி நடந்து வந்தான். ஊனமுற்ற கால் தரையை தேய்த்து கொண்டு வந்தது. விபத்தில் பாதித்தது தான். அவனின் தோற்றத்தை பார்த்த சாரவ். அஞ்சத் தேவையில்லை. சாரவ்வின் மனதும் பல கேள்விகளை உருவாக்கிக்கொண்டது.

“உங்க பேர் என்னதுனு தெரிஞ்சிக்கிலாமா?”

“இது எந்த எடம்”

“எந்த எடம்னு சொன்னா என்ன செஞ்சுடுவிங்க. கண்டிப்பா நீங்க தேடின பாத தா இது”

“என்ன ஒலர்ர. முதல்ல நீ யாரு”

“அமைதியா இரு. உன் கேள்விக்கெள்ளா பதில் இருக்கு”

அவன் பார்வையிலிருந்த சாரவ்வின் கண்கள் சுற்று முற்றும் பார்த்தது, semangal செம்மண்களை பூசி படர்ந்த கற்குகை அல்ல, உடலுக்கு உஷ்ணமும் அல்ல, அவன் நின்றிருந்த இடம் தாராளமான பரந்து, விரிந்த சூழல். அந்த இடத்திலிருந்து சுற்றிலும் நான்கு சுரங்க வழி பாதைகள் நீன்று இருந்தன.

“யார் நீங்கனு சொல்றீங்களா?”

“சந்திரன்.

இரண்டு வருஷம் இந்த இடம் எனக்கு நெரயா கத்துக்குடுத்துருக்கு. இது ஒரு கைவிடப்பட்ட சிறை.

இங்க நா மட்டும்தா”

“சிறை” என்று சொன்னதும் மனம் திக் என்றது. உடல் குப் என்று அனலானது.

“சிறை…

“நீங்க எந்த இடம்

தமிழ் இவ்வளு தெளிவா இருக்கு?

எப்டி இங்க மாட்னிங்க. இது கண்டிப்பா ஆப்பிரிக்கா இருக்க முடியாது”

“ரா எனும் உலகத்தின் எழுச்சி, அதாவது வோர் நு சொல்லுவாங்க, அவங்களோட சிறை”

“வோர்” அந்த வார்த்தை நினைவுகளை சிதறடிக்கும். ஞாபகம் வேறு சிந்தனையில் சென்றது. திரை காட்சி போல் எழுகின்ற கடந்த கால வாழ்வில், ஒரே ஒரு வார்த்தை, அனைத்தையும் சிதைக்கின்றது. சேஃப், மிஷன்,

ஜான், இதெல்லாம் வேண்டாம். ஆப்பிரிக்கா, ஷாகிதன், ஹர்ஜிந்தன், சந்திரன் இது மட்டுமே பயணம், தற்செயலாக மூழ்கிய சிந்தனையில், அவ்வளவு ஒரு பாதிப்பு, கண்கள் மூடிய சாம்பல் நிற மனிதன் வாழ்வில் எழும் முதல், மறைந்து போன நினைவுகளை, மீட்டு எடுக்க, எண்ணம், அலை போல் பாயாமல் ஓய்ந்தது. “வோர்” என்பது எனக்கு வார்த்தை மட்டுமே, அதில் அர்த்தம் ஏதுமில்லை; முதல் முறை கேட்ட காதுகளுக்கு, வலிகள் தாங்கிய சாதாரண சாரவ் வாழ்வில்.

சிறை என்றால் தப்பிக்க வழி செய்ய வேண்டும், திட்டங்கள் தீட்டினால் மிருகமாக மாறிவிடுவான் என்ற ஒரு பதற்றம் சீறிச்சென்றது. ஷாகிதன், ஹர்ஜிந்தன் என்றால் குற்ற உணர்வுகள் மட்டுமே நினைவில் வரும். சந்திரனிடம் அந்த கதைகளை கூறும்போது, கேட்கும் அவனுக்கு முகம் மாறிவிடும். சாரவ் பற்றிய நினைவுகள் சந்திரனுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

“போன உயிரு திரும்ப வராது,

அவங்க நேரம் அவ்வோலோதானு நெனேச்சிக்கோ..”

“என்னாலதான் எல்லாமே எல்லா,

நா நா சொன்னே இருந்தாலும். அவங்க தப்பிக்க முடியல.

அந்த நொடி எ மனசுல அவுங்க ஒரு கணோ வீரே மாதிரி எழுந்து விடுவாங்கனு அவ்வளவு உறுதி எழுந்துச்சு.

ஹ! கண் முன் உயிர் பிரிந்தது.

நா எதிர்ப்பார்க்கவே இல்ல.

ஒரே ஒரு தாங்க முடியாத பாரோ மனசுல ரகசியமா இன்னு வரைக்கு இருக்கு, ஹர்ஜிந்தன் பத்தி சாஹித் கிட்ட சொல்லுவோனு இருந்தே, அவே கடைசியாக பேசின வார்த்த கூட ஞாபகோ இல்ல.

ஹர்ஜிந்தன் ஒரு பிரைவட் ஹார்மி ஃபோர்ஸ் சோல்ஜர். என்ன கண்டு பிடிக்கவே அங்க வந்தாங்க, திரும்பி யாருமே உயிரோட போகல, ஹரிய தவிர, போரே நடந்திருக்கு போல அவே தலையில அடிப்பட்டனால சில விசயோ அவனுக்கு ஞாபகம் இருக்காது, பித்து பிடிச்ச மாதிரி இருப்பா, பாக்கும் போது, மனசுல ஒரு உறுத்தல். இருந்தாலு, எல்லாத்தையும் சாதாரண விசயமாதன், எதையும் பெருசா பொருட்ப்படுத்துனது இல்ல, எதயு நெனச்சி அவ்வோலோ வருத்த பட்டது இல்ல. எல்லாத்தையு இழந்தோன தா, அதோட அரும தெரியு, இப்ப என்ன பாட படுத்துது”

சாரவ்வின் மனதின் பாரங்கள், சந்திரனிடம் குறைந்தன, இருவரின் வார்த்தைகள் மட்டுமே குகையினுள் இரண்டு வாரங்களாக ஒலித்து கொண்டிருந்தன. காலங்கள் சாரவ்வை அனுபவத்தில் ஆழ்த்தியது, அவனது உணர்வுகள், கரைந்து சென்றன, எப்போதும், அழியாமல் மனதில் தான். மனதில் எழுந்த காயங்கள் மறைந்து, நாட்கள் ஓடியது. குகைகள் ஒன்றும் சிறை அல்ல. தீ பந்தத்திற்கு குறை அல்ல, குகையின் வித்தைக்காரன் சந்திரன் அனுபவசாலி, காலின் ஊனம் ஓரு குறையாக இருக்கும் பார்ப்பவர்களுக்கு, ஆனால் அவனுக்கு அல்ல, வேகமாக ஓடுவான். நாள் முழுவதும் குகை முழுக்க சுற்றி திரிவான்.

குகை வாழ்க்கையில் சொர்க்கத்தை காண ஒரு இடம் உள்ளது. சாரவ் முதன் முதலில் பார்த்தவுடன் அசந்து விட்டான். குகையின் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலத்து நூல்கள். காலத்தின் தாக்குதலில் இருந்து என்றும் அழியாத அறிவுக்களஞ்சியமாக குகை அரசன் பாதுகாப்பில் பராமரிப்பில் நூலகமாக உருவாகி இருந்தது. சாரவ்விற்கு நூல்கள் படிப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. வோர் அவர்களின் பற்றிய குறிப்புகளும் அங்கு உள்ளது. அனைத்தும் தமிழ் எழுத்துக்களை பதித்த நூல்கள்.

உணவுக்கு பஞ்சமில்லை. குகையின் மேலே இருந்து வீசப்படும். மேலே வோர் சமூக கூட்டங்களில் ஒரே ஒருத்தன் தான்; காவலுக்கு. வேட்டையாடி நாட்களை களிக்கும் வேடன் போல ஒரு வோர் மனிதன். கீழே குகையினுள் இருக்கும் சந்திரனுக்கு உணவுகள் அவனால் வீசப்படுகிறது. குகையினுள் காலம் களிக்க நாம் என்ன மிருகங்களா! சந்திரன் முதல் முறையில் சிறையில் அடைக்கப்பட்ட போது, தனிமையிலும் பயத்திலும் வியந்தான். சற்று நேரத்தில் இன்னொருவனும் அடைக்கப்பட்டானாம். அவன் மூலம் தோண்டப்பட்ட குழி ஒன்று உள்ளது. அது மேல் வழியாக செல்லும். அவன் தப்பித்து விட்டான். சந்திரன் பிடிபடும் போது காலை உடைத்து விட்டு மீண்டும் குகைக்குள்ளே தள்ளிவிட்டார்கள்.

இந்த புத்தகங்களை பாதுகாக்க தானா என்னை அடைத்தார்கள் என்று எண்ணினேன். ஏன் என்னை இந்த சிறையில் என்பதற்கு பதில் கிடைக்கவில்லை. மனித சஞ்சாரங்களை காணாத நாட்கள் ஓட, கைவிடப்பட்ட குகையை பற்றிக்கொள்ள. குகையை பராமரிக்க சிரையாலி ஆனேன் என்று தெரிந்தது. சாரவிற்கு சந்திரனின் கதை புதிய கதை, புதிய அனுபவம்.

சந்திரன் பற்றிய பின்புலங்கள் சாரவ்விற்கு திருப்தி பெராதவை.

எந்த இடம் என்றால் “பேரு” என்பான்.

“ஓ! பேரு அது எங்க இருக்கு?”

“பேரு வளம்”

“அப்டின்னா.

தமிழ் நாடா இல்ல சிலோனா?”

“நா சொன்னாலும் உங்களுக்கு புரியாது”

“ஆமா இது வரைக்கும் சொன்னதுமே புரியல!”

“நாம் இருக்கிறதே நாலு பக்கமும் கடல் சூலும் ஒரு தீவு தான். இங்கிருந்து மட்டும் தான் எங்களோட பூமியான பேருவுக்கு போக முடியும். ஏ உங்க மாதி ஆளுக வாழ்ர உலகத்துக்கும் இந்த தேசம் ஒரு பாலம் மாதி இருக்கும்”

பேரு.

அந்த பெயர் மட்டும்தான் ஆச்சர்யம், மற்ற விடயங்களை பற்றி கூற மாட்டான். நல்லவன், வயதானாலும் இந்த இடத்தில் நாட்கள் ஓடி வாழ்க்கை களிகிறது என்று முகத்திலும், மனதிலும் கவலை ஒரு துளி இல்லை. நாட்கள் சந்திரனை படிக்க வைத்தது. மிகவும் அறிவாளி, ஆங்கில காற்றியில் அவன் துளி கூட சுவாசிக்காதவன். ஆனால் சிறைக்கு ஜெயில் என்பான், அது மட்டுமே. அவனை பார்க்கும் போது சில தருணம் பரிதாபமாகவும் இருக்கும். நூலகம் மட்டும் தான் அவனது வேலை, படிப்பது மற்றும் பாதுகாப்பது. அறுநூற்று ஐம்பது புத்தகங்களை படித்து விட்டானாம். நான் படித்தது, ரா என்பதற்கு அர்த்தம், அது ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல, ரா என்றால் இருள், உலகத்தை பாதாள குழியில் தள்ளும் சர்வாதிகார கூட்டம். இன்னும், நவ அஸ்திரம் பற்றி குறிப்பு உண்டு. அந்த தமிழ் வசனங்களை வாசிப்பது கடினம். பழைய வடிவ தமிழ் எழுத்துக்கள். சந்திரனிடம் விளக்கம் கேட்பேன், அவனும், சொல்லுவான். ஆனால் எனக்கு புரியாது. அழிவு மட்டுமே நிலைத்திருக்கும் தலையில்லாத அமைப்புக்குள் ஒன்றாக இருக்கிற இந்த வோர், ஆங்கில பெயர்தான். ஆங்கிலம் என்பது மேல் நாடுகளில் எவ்வளவு ஆக்கிரமித்துள்ளது என்று வியப்பில் தவித்து கூறுவான். சந்திரனை கேள்விகளால் சுரண்டி சில மர்மங்களுக்கு விடைகளை வாங்கிவிடுவேன். அவனது பின் புலமும் மர்ம புதிராகத்தான் உள்ளது. பேரு என்பது மர்ம தீவு என்பான். மாசு படாத வாழ்வியல் என்றெல்லாம் கதை அமைப்பான். ஆனால் பொய் இல்லை என்று முகம் சொல்லும். எல்லாம் அறிந்த ஞானி சீடனுக்கு கூறுவது போல் இருக்கும் காலங்கள் ஓடின.

ஏன் இவ்வளவு காலம் காத்திருப்பு. நான் வந்து நான்கு வாரமாகிறது, நாட்களை அவ்வளவு தெளிவாக குறித்து வைத்திருக்கிறான் அந்த ஞானி. மேலே ஒரே ஒரு மனித வோர் மிருகம் தான் சுற்றித் திரிகிறது. அவனை சமாளிக்க முடியாதா! வீரன் தான். சண்டை வேண்டாம். அமைதியாக சென்று ஓடிவிட வேண்டியது தான். எனக்கு தப்பி பிழைத்து சொந்த தேசம் செல்ல ஒரே ஒரு வழி உண்டு. ரகசிய வழி, உனது பேரு உலகம் எந்தளவு மர்ம ரகசியமோ அதே போல் இதுவும் ஒரு ரகசியம் தான். கூற மாட்டேன். என்னதான் பேரு என்பது ரகசியமாக இருந்தாலும் அந்த “பேரு” ஆச்சர்யத்தில் மூழ்க மனம் செல்லவில்லை, சாகச கதை படிக்க பிடிக்கவில்லை போல மனம் உள்ளது. அதிசய மனிதன், அதிசய தீவு, அதிசய சமூகம், இதெல்லாம் புது அனுபவம் தான். ஆனால் ஆர்வம் உடலில் ஏற வில்லை. இங்கிருந்து தப்பிப்பது மட்டுமே உடலின்

ஓட்டம். கைவிடப்பட்ட சிறை தானே ஆரம்பத்தில் வோர் சமூகத்தினர் அதிகமாகத்தான் இருந்தார்கள். எல்லோரும் இறந்து விட்டார்கள். சந்திரன் இறுதியாக கண்டது மூன்று ஆட்களை. இப்போது ஒரு ஆள்தான். எங்கு சென்றாலும் அவன் பிடித்து விடுவான். இரவில் கூட கண் தெரியும் போல. அப்படியே இங்கிருந்து தப்பித்தால் என்ன செய்வது, எங்கு சென்றாலும், காடாகத்தான் இருக்கும். இந்த குகை ஒன்று தான் உயிர் வாழும் வழி. மேலே இருக்கும் வோர் ஆளை பார்க்க ஆட்கள் வருவது குறைவு. அவனையும் தீர்த்துக்கட்ட ஆட்கள் உலவுகின்றது.

“அர்த்தமற்ற பழிவாங்கல். நமக்கு எதற்கு ஆனால், அவனுக்கு அந்த சமயத்தில் உதவி செஞ்சா”

“அந்த மாதிரி நேரத்துல நீ அவன் கூட இருந்தா. உன்னால அவே உயிர் தப்பினா போது. அதுக்கு அப்பறம் உன் கைல தான் இருக்கு. ஒருத்தனுக்கு ஒருத்தன் சேந்தா பலம் தானே”

“இதெல்லாம் நடக்குற கதயா. பேசாம அவன இங்க கட்டி போற்றுவோ”

“இதுதான் நடக்காத கத, அதெல்லா முடியாது. பயங்கர பல சாலி, வோர் வீரர்கள நீ பார்த்தது இல்ல, இது ஒன்னு ஆப்பிரிக்கா கெடயாது.

ஆனா… உங்கிட திரம் இருக்கு”

“ஜெயில்ல, ம் சிரைல உள்ளவே எப்பிடி.

அவனுக்கு உதவினு இருந்தா எப்டி ஏத்துப்பா. அவே வோர் வீரே தானே. நா அப்டி இல்லயே. அவே எதிரிக என்ன கொன்னுடாங்கனா”

“உன்ன பத்தி தெரிஞ்சு தா இத உன்கிட்ட சொல்றேன். இப்படி ஒரு யோசனையை உன் கிட்ட சொல்லி நேரத்த வீணடிக்க முட்டால் நா இல்லனு உனக்கு நல்லா தெரியு இனிமே இது உன்னோட திட்டம். நீ தான் யோசிக்கனும்”

தப்பிக்கும் வழி, உயிர் பிழைக்கும் வழி ஆகிவிட்டது. சந்திரனின் வார்த்தை மட்டுமே சாரவ்வின் அடுத்த பாதையின் ஓட்டம்.

இதை கூறி மூன்று நாட்கள் ஓடி விட்டது.

கற்களை பெயர்த்து தோண்டப்பட்ட குழி. இந்த வழியை தோண்டிய மனிதன், எவ்வளவு உடல் பலம் கொண்டவன்! இரண்டு நாட்களில் முடித்து விட்டானாம். சாதாரண மனிதனுக்கு இது சாத்தியமாகுமா! குழியின் பாதை நீண்டு சென்று கொண்டே இருக்கிறது. ஒரு வழியாக மேலே சென்றால். துய காற்று, புட் தரைகள், விடுதலை என்று உடல் ஆகிவிடும். ஒரு அடி அடுத்து வைக்க மனம் துள்ளும் ஆனால் சந்திரன் வார்த்தைகள், மனதை திரும்பி வந்த வழியே போக வைத்துவிடும். குழியில் சென்று திரும்பி வருவது இலகு அல்ல, அவ்வளவு எரிச்சல். கற்கள் உடம்பை கீரிட்டு செல்லும். குகைக்கு உள்ளே வந்து படுத்து விடுவான். வெளியே திரியும் மிருகத்தை எதிர்க்க ஆட்கள் எப்போது வருவார்கள். ஒவ்வொரு இரவும் மேலே சென்று பார்த்தால் தான் தெரியும். குழியிலிருந்து குகைக்கு திரும்பியவுடன் உடலுக்கு ஒவ்வொரு இரவும் ஓய்வுதான். கடவுளே! இந்த குழி பாதை பற்றி அந்த வோர் பாதகன் கண்ணுக்கு இவ்வளவு காலம் தெரியவில்லை இனியும் தெரிய கூடாது என்று மனம் அந்த நாட்களில் துடிப்பது ஒரு பக்கம், எதிரிகள் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற பயம் ஒரு பக்கம் என்று மனம் எப்போதும் ஓய்வை தேடவில்லை. எப்போதும் அந்த நாலுக்காக துடிக்கும்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *