கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 1,734 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

அத்தியாயம் ஐந்து – வரலாற்று சம்பவம்

கற்களிலான குகையொன்று. அங்கு பழைய காலத்து சிறிய மின் விளக்கு ஒன்று. அதன் மங்கலான வெளிச்சம், பாதி குகையை மட்டும் கண்களுக்கு புலப்படுத்தியது. அந்த அரை இருளில் குகையில் மூன்று மனிதர்கள். அனைவரும் ஆண்கள் மட்டும்தான். அவர்களில் இருவர், ஒருவனின் பேச்சுக்களை செவிமடுத்து கொண்டிருந்தார்கள். மூவர்களின் உடைகளில் மடிப்பும் அழுக்கும் மட்டுமே பார்த்தவுடன் உறுத்துகிறது. அங்கு நின்ற மற்ற இருவர்களுக்கு கதையை கூறுபவன் – மாநிறம் கொண்ட இந்தியத்தமிழன் ஒருவன். மற்ற இருவர்களும் அப்படித்தான் காணப்பட்டனர். அசரீரி குரல் அவனுடையதுதான். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு, அடையாளமற்ற குகையொன்றில் அடைக்கப்பட்டு கிடக்கும் அவன், வேறு யாரும் அல்ல, அதே சாரவ் தேவன்! அவன் விசித்திர அந்நியன் போல அல்லாமல் சாதாரணமாக நம் போன்ற மனிதனாகவும், மனித நிறத்திலே காணப்பட்டான்.

சாரவ் “நிலையான இடத்தை வந்து அடஞ்சாச்சி, இனிப்பிரச்சன இல்ல, இரண்டாயிரத்து… பதினாரு, சும்மா இருபத்தியேட்டு வருசோ கழிச்சி பயணம் செஞ்சிருக்கே. இது தா காலப்பயணம்.”

அருகில் நின்ற மற்றவன் “ஓ! இது உண்மையிலேயே நடந்திச்சா!” பேச்சில் சிறிய அளவில் கோபமும், வேகமும் ஏறிட்டது.

“ஆமா. சரி ஹரிஜிந்தர் நீங்க சொல்லுங்க.!. உங்களோட நிலைய சொல்லுங்க!”

“புரியல என்னனா இது!”

புருவங்கள் நெரிந்து, முகம் சுருங்கியிருந்தவாரு அருகில் நின்ற ஹர்ஜிந்தர் என்பவனை சாரவ் கண்களால் திரும்பி பார்த்தான்.

பார்ப்பதற்கு பரிதாபம் வரும் உருவம்.

அருகில் நின்ற மற்றவனின் முகம் கோபம் ஏறி இறுக்கமாக இருந்தது. அவன் சாரவ்வை பார்த்தவாரு குகையின் ஓர் பலகை வடிவிலான இருக்கையொன்றில் சென்று அமர்ந்துகொண்டான்

“இப்டி நடந்தா நல்லாதா இருக்கு”

முகம் இருக உதடு மட்டும் அசைந்தது.

சாரவ் ஹர்ஜிந்தனை பார்த்து. “இந்த இடம் முழுக்கு போம்ப் செட் பண்ணி இருக்கு, வெடிச்சு சேதற்றதுக்கு முன்னாடி இங்கிருந்து நம்ம கெலம்பிடனும். வீ நீட் டூ கேட் அவுட் நவ்!!!”

ஹர்ஜிந்தன், சாரவ் கூறிய வார்த்தைகளால் தடுமாறி கண்களில் குழப்பமே பார்வையாகியது. பாவம். முகத்தில் ஓர் வெறுப்பும் சேர்ந்தேயிருந்தது. ஹர்ஜிந்தன் நிலமையையை பார்த்த சாரவ் திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தான்.

குபீர் சிரிப்பின் அசைவால் குகையின் தரையில் சென்று அமர்ந்துவிட்டான்.

குகையில் இருந்த மூவரும் சாதாரணமானவர்கள் அல்ல. ஒருவனை பற்றி காலத்தை கடந்து அறிந்து விட்டோம். என்றும், கூற முடியாது! அறிகிறோம்! மற்றவர்களை பற்றி இனி வரும் கதை நகர்வில் அறிவோம்.

சார்வ் “நா சொல்றத நம்பிடிங்க போல”

ஹர்ஜிந்தர் “ஆமா நா எமாந்துட்டே ஒனக்கு வேற வேலையே கெடயாது சாரவ்”

ஹர்ஜிந்தனின் வார்த்தைகள் அவன் கண்களில் வரும் நீரின் குளிர்மையில் நடுங்கியது, ஒரு வித பயமும் கவலையும் சேர்ந்த குரலே.

பலகையில் சென்று அமர்ந்தவனின் பெயர் ஷாகிதன். சாரவ்வின் மீது கோபத்துடன் எரிச்சலுடன் இருந்தான்.

ஷாகித் “அடே முட்டாள் கொஞ்சமாவது மெச்சூரா நடந்துக்கோ இங்க என்ன சந்தோசமா, ஆட்டமா நடக்குது!”

ஆ… நடக்கு இப்டியே உட்காந்திருந்தா… நா பிளான் பண்ணிட்டே. சாகித், இது நம்ப வழி இல்ல…! சரி எ கூட வா ஒரு விசயத்த காட்டனும்!

எழுந்து வந்த ஷாகித் சாரவ் அருகில் வந்து “சாரவ் விளயாட்டு இல்ல. இப்படி அங்கயு இங்கயு சுத்திக்கிட்டு இருந்தா பிரச்சன ஆயிடு. வெளிய காட்டு மனுஷங்க! அப்ரோ ஹர்ஜிந்தர் மாதிரி என்னால ஆக முடியாது.”

“அதுக்கு செத்துரலாம். நீ நினைக்கிற மாதிரி இது ஊ வீடு இல்ல”

“நம்பல காப்பாத்த கண்டிப்பா இன்டியன் போர்ஸ் வரும்”

“மூணு பேருதானு போனா போகட்டுனு விட்ருவாங்க”

“இல்ல இல்ல. அப்படி…”

“அதே நம்பிகிட்டு இருந்தா இங்கேயே வயசாகுற வரைக்கு இருந்து செத்துற வேண்டியதுதான். நம்பல கொல்லவு மாட்டாங்க. வாழ்க்க பூரா அடிமயா இருந்து இங்கேயே காலோ கழிக்க நா விரும்பல”

“சாரவ் இங்க நம்ப பொறுமையா இருக்கணு”

“எத்தன வருஷோ. நீ ஒரு வருஷோ, நா எழு மாசோ. எனக்கு அப்ரம் வந்தவே பைத்தியமாயிட்டா. நா பிளான் பண்ணிட்டே!”

இவ்வாறு இருவரும் கதைத்துக்கொண்டே செல்கையில் குகையின் ஓர் இருள் இடத்தை அடைந்தார்கள்.

ஷாகித் “இங்க ரொம்ப இருட்டா இருக்கு. இங்க என்ன இருக்கு!”

“உ லைட்டர மறந்திட்டியா”

ஷாகித் தனது பையில் மறைத்து வைத்திருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்தான். சாரவ் அதை வாங்கிகொண்டு குகையின் கற்பாறைகளை தடவியவாரு ஓர் கல்லில் செதுக்கப்பட்ட ஓவியம் ஒன்றை காட்டினான்.

“இது ஒன்னு பழங்காலத்து ஒவியோலா கெடயாது! நானே வரைஞ்சது, செதுக்குனதுன்னு சொல்லலா”

ஷாகிதன் கண்கள் கூர்மையாகி ஓவியத்தை பார்த்தது

“பொய். இது பிஸ்னஸ் பண்றவங்களோட உருவோ, ஆயுதோ வியாபாரிக. எக்ஸட்டா சொல்ரோ”

“எக்ஸட்டா! இது நா வரஞ்சது. எவ்வளவோ மாசமா இதத்தா இங்க வந்து செதுக்கிகிட்டு இருந்தே!”

“எப்டி தெரியும். அதே ட்ரஸ் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருப்பாங்க. எந்த வகையான ஆளுகன்னு தெரியாது. எங்கேயோ பாத்து அப்படியே காப்பி அடிச்சிட்ட!”

இது மொதல்ல வியாபாரி கெடயாது. மேர்சநெரி! நா பாத்து, கேட்டு, சில… சில இன்பர்மேஷன் லா வச்சி

நானே செதுக்குனது. சாரவ்வின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்து கண்கள் சந்தேகத்தின் விளிம்பில் நின்று “ஆமா யாரு அந்த வியாபாரி உனக்கு எப்டி தெரியும்”

நா இங்க ஒரு வருஷமா இருக்கே! நா ஒரு தடவ இந்த ஆட்கல கன்றுக்கே. தெரியா தனமா வெளிய வந்துட்டே போல ஒரு குடிசல்ல பொய் மரஞ்சிக்க வேண்டியதாயிருச்சி. மொத்த கிராமமும் ரணகளம் ஆயிடு. அவ்வளோ அமைதி. அஞ்சி, ஆறு தலைங்க மட்டுந்தா வெளியே நிக்கு. வெல செய்ற யாருமே வெளிய இருக்க மாட்டாங்க. நா பொய் குடிசையல மாட்டுனனாள ஒரு தடவ கண்டே. இங்க பாத்ததிலேயே வித்தியாசமான விஷயோ அது தான்.”

“எதுக்கு வந்தாகனு தெரியுமா!!”

“தெரியா. கொள்ள காரங்ககிட்ட என்ன பேசுவாங்கனு எனக்கு எப்டி தெரியும். இங்க உள்ள கருப்பு காட்டா மட்டும் ஒரு… ஒரு சின்ன துணி பொட்டிலத்த கைல கொடுத்தா.”

“அது டயமன்ட் இல்ல கோல்டா இருக்கு”

“இவங்க ஆயுதோ வாங்கிருப்பாணுங்கனு நெனக்கிறே”

“நெனைக்கிரெயா. அப்ப என்ன நடந்துச்சுனு ஒழுங்கா கவனிக்கலயா.!!! அதுக்கு அப்பறம் எப்ப பார்த்த?”

“அதுதா மொதலும். கடசியும்”

ஷாகித்தின் வார்த்தைகளை கேட்ட சாரவ் மூளை சிந்தனையில் ஆழ்ந்து திரிந்தது. குகை ஓவியத்தை தடவியவாரு முகம் யோசனையின் பிரதியாக மாறியது. அவ்வாழ்ந்த யோசனையினுள் என்றும் மாறாத காயங்களின் வடுக்கள், நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகள் செயலையும் மாற்றிவிடும், நிலையையும் மாற்றிவிடும். அதிக நேரம் குகையின் இருள் பகுதியில் இருந்ததால் இருவரும் வெளியே வந்து ஹர்ஜிந்தன் இருந்த பகுதியை அடைந்தனர்.

“உனக்கு என்ன நேரோனு சரியா தெரியுமா! எப்டி சொன்ன, பண்ணண்டு: இருவதிரெண்டுனு!”

“அது, சும்மா அடிச்சுவிட்ரது.”

சாரவ்வின் செயலில் சந்தேகித்து, ஷாகித் “ஆமா மேர்சநெரி எதுக்கு உனக்கு! அந்த ஒவியோ எதுக்கு! அத வச்சி என்னா பண்ண போறோம்!”

“நேரம் வரும் போது சொல்றே”

“நேரமா எது அந்த பண்ணண்டு: இருவதிரெண்டா!, என்னமோ போ”

சாரவ் குகையின் வாசல் அருகே வந்து நின்றான். அங்கு ஓர் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு, இரும்பு கம்பிகளால் ஆன வாசல் கதவு ஒன்று. கதவின் இரும்பு கம்பிகளில் வெயிலின் வெளிச்சம் வீசிப்படிந்திருந்தது. அதை நோக்கிய சாரவ்வின் மனமும் எண்ணங்களை வீசத்தொடங்கியது. இது முதல் நாள் எண்ணம் அல்ல. சில நாட்களாக இதே எண்ணம் தான். இன்று சற்று அதிகமாகிவிட்டது. அதற்கான காரணங்கள் சாரவ் ஷாகித்திடம் கூறிய வார்த்தையில் உண்டு. “நேரம் வரும் போது தெரியும்”

மூவரும் அமைதியுடன் குகையில் இருந்தார்கள். எந்த சப்தமும் இல்லாத நிசப்தம். சாரவ்வின் இதயம் துடித்த சப்தம் மட்டும் அவன் காதில் ஒலித்தது. எதிர்பாராத நேரத்தில் “டமால்” என்று இரும்பு கம்பியின் கதவு திறக்கப்பட்டது. திறந்த வாசலில் இருந்து மேல்சட்டைகள் அணியாமல், சிலர் அரை கால் சட்டையுடனும், கையில் எந்திர துப்பாக்கிகளை ஏந்தியவாறு, வெறிப்பிடித்த பேய்கள் போல் கரிய

நிறத்திலான ஆப்பிரிக்க இன மக்கள் உள்ளே வந்தனர். சந்தேகமே இல்லை அவர்களின் தோற்றமும் செயலும் சொல்லும், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள் என்று. மூவர் தலையையும் ஒரு மெல்லிய துணி பையினால் மூடினார்கள். கைகளை பின்னே வைத்து உறுதியான கயிறுகளால் கட்டினார்கள். அவர்களது செயலில் மனித தனமே இல்லை. தலையில் துணி பையை வைத்து கழுத்தை நெரித்துவிடுவார்கள் போல இருந்தது. எவ்வித பலமும் அற்ற மூவர், அப்பாவிகள். அந்த ஆப்பிரிக்க தீவிரவாதிகள் பிடியினுள் சிக்கியவர்கள் அடிமைபோல் குகையிலிருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்கள்.

சாரவ்வும் மற்ற இருவரும் குகையில் இருந்து வெளிப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். தலை மூடிய துணியினுள் சூரிய வெளிச்சம் உடலை பற்றியது. காற்றின் உணர்வையும், காற்று அழைத்துவரும் மணல் புழுதிகளும் கூட. சூரியனின் வெப்பம், வதைக்கப்பட்ட மேனியில் இரக்கம் காட்டவில்லை. காற்றின் மூலம் மரங்களின் அசைவுகளை கேட்கும் போது எரியும் மனதின் உணர்வுகள் கொஞ்சம் தணிந்தது. பாசை தெரியாத ஆபிரிக்க மனிதர்களின் சத்தங்கள் ஆங்காங்கே, ஒலித்து கொண்டிருக்கிறது. எவ்வளவு நேரம் மூன்று அப்பாவி அடிமைகளை கொண்டு செல்வார்கள். எங்கு செல்கிறோம் என்று தெரிய பாதையில் கால்கள் செல்கின்றன. ஒரு ஜீப் வண்டியில் மூன்று பேர்களும் ஏற்றப்பட்டார்கள். அந்த வாகனம் சென்று ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு. மூன்று பேரையும் கீழே இறக்கி, ஒரு சரிவான கற் குகையினுள் அவர்கள் கால்கள் தட்டுத்தடுமாறி ஓடியது. சாரவ்வின் நெஞ்சம் பதறியது. அருகில் இருப்பவர்கள் எங்கே. இருபுறமும் இரண்டு பாதங்கள் இல்லாத கால்கள் கற்களின் மேல் நடப்பதை உணர்ந்து கொஞ்சம் தைரியமடைந்தான். உச்சி வெயிலிலிருந்து இருள் குகைக்குள் இப்போது நுழைகிறார்கள். தலை மூடிய துணியில் வெளிச்சம் மறைந்து இருள் ஆரம்பிக்கிறது. உச்சி வெயில் மறைந்து சூழல் உஷ்ணம், உடலை எரிக்கிறது. ஆங்காங்கே வெட்ட வெளியில் கேட்ட மக்கள் சத்தங்கள் இப்போது குகையிலிருந்து ஒலிக்கிறது. கற்கள் உடைக்கும் சத்தங்களும் சேர்ந்தே கேட்கிறது. தலை மூடிய துணி அவிழ்கப்பட்டது. கைகளின் கட்டு அவிழ்கப்பட்டது. பிறகு… உள்ளே உள்ள மற்ற மனிதர்களில் மூவரும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பாதாள குகைகள் மனித சக்திகளால் தோண்ட படுகிறது. கைகளின் சுத்தியல், கடப்பாரைகள் மூலமாக உடல்களின் தசைகள் இறுகும் அளவிற்கு மாலை முழுக்க வேலை. வியர்வையினாலும், அழுக்கினாலும், அளவில்லா அழுப்பினாலும் சோர்வடைந்த முகங்கள். ஒருவரைக்கொருவரை பார்த்துக்கொண்டது. முகத்தில் தெரியும் வியர்வைதுளிகளுடன் என்றும் நீங்காத கண்ணிர்த்துளிகளும் சேர்ந்தே இருந்தது.

அந்த குகையிலிருந்து ரத்தின கற்கள் தோண்டும் பணிகள் இங்கிருந்து இன்னும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டும். அவர்களில், சாரவ்வும் மற்ற இருவரும் நல்ல வேளையாக அங்கு செல்லவில்லை. இல்லாவிடில் உயிரில் இருந்து அனைத்து சக்திகளும் இழந்து உடல் மட்டுமே குகையிலிருந்து வெளியேறியிருக்கும். கற்குகையினுள் ஆயுதங்கள் பதுக்குவதற்கு, இருப்பிடங்களை அமைத்துக்கொல்வதற்கு, புதிதாக பணிகள் கற்குகையினுள் நடைபெறுகிறது. சிறையினுள் கைதியாகவும், தீவிரவாதிகளிடம் அடிமையாகவும் சில மாதங்கள் வாழ்கை இவ்வாறே சென்றுவிட்டது. இரண்டு மனிதர்கள் நண்பர்களாக – குகையில் சந்திக்கும் போது. வானத்தில் தெரியும் நட்சத்திரங்களும், என்றைக்காவது ஒருநாள் பார்க்கும் மேகங்களும் மட்டும் தான் மனதிற்கு நிம்மதியும், முகத்தில் புன்னகையையும் தருகிறது. சாரவ்விற்கு ஹர்ஜிந்தர், ஷாகிதன் தவிர மற்றவர்கள் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் யாரும் சொந்த தேசத்தை இழந்த அகதியான அடிமைகள் அல்ல, அடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்க இன மக்களே. வாழ்க்கை முழுவதும் அடிமை என்று காலம் கடப்பவர்கள். சாரவ் கண்களுக்கு அவர்களை போன்றுதான் ஹரிஜிந்தனும், ஷாகிதனும் தெரிகிறார்கள். சாரவிட்கு தான் மனதில் புதைத்து வைத்திருக்கும் சில மறைமுக திட்டங்கள் மீது மட்டுமே நம்பிக்கை. ஹர்ஜிந்தனின் சோக கதையையும், தனிமையையும் விரும்பாத சாரவ் ஷாகிதனின் கதைக்கு சென்றுவிடுவான். ஷாகிதன் நாற்பத்தி இரண்டு வயதான மியன்மார் நாட்டை சேர்ந்த ஓர் தமிழன். “நே…ரா என் கிட்டயே விந்துருவிங்க! எங்கிருந்து டா! வாரிங்க! தேவ இல்லாம இங்க வந்து மாட்டி சாகுற, பர்மாவுக்கு பொய் நாலு பணம் பாத்தோன இங்க வந்து சாக பாக்குறாய்ங்க” ஷாகிதனை பற்றிய சாரவ்வின் மனதில் தோன்றிய வார்த்தைகள் இது. அவனின் மனைவி மகனுடன் சுற்றுலா செல்ல வந்தவன். குடும்பத்தை இழந்து இப்படிப்பட்ட வாழ்கையில் இருக்கிறான். மனைவி மகன்களை பற்றி கூறும் போது அவனின் நிலையை பார்த்தால், மனம் உடைந்து விடும். கண்ணில் கண்ணீர் சிந்திய நாட்கள் ஏராளம், அவனின் கதையால் மட்டும் அல்ல.

சாரவ் தன் குடும்பத்தை பற்றி யாரிடமும் தெளிவாக சொல்ல மாட்டான். குடும்ப பின்னணி பற்றிய

பேச்சுக்களின் போது அவனது நிலை நம்மை பல கேள்விகளில் தள்ளிவிடும். அவனிடமிருந்து அமைதி மட்டுமே பதிலாக வரும். முகத்தில் ஒரு வேண்டா வெறுப்பும், ஓர் குற்ற உணர்வும் முகத்தில் தெரியும், கண்கள் சுருங்கி, உதடுகள் துடிக்க ஆரம்பித்துவிடும். முகத்தில் சோகத்திற்கு பஞ்சமில்லை. தனது தாயும், அவருக்கு உதவும் ஒரு பணிப்பெண்ணை மட்டுமே; விட்டு வந்ததாக கூறுவான். ஆம் சுற்றுலா பயணம். ஆபிரிக்க நாடுகளின் மக்களை, வாழ்வியலையும் பற்றி தெரிந்து கொள்ள வந்தேன் என்பான். அவனது குடும்பம், வாழ்க்கை, பின்னணி என்றவுடன் அவனது மனதில் இனம் தெரியாத குற்ற உணர்வை கொள்வதற்கு, காரணமற்ற கோபம். ஊரையே சர்வ நாசம் செய்து விடும் கோபம் ஒன்று உட் தீயாக எரிந்துக்கொண்டிருக்கும்.

கதையில் பார்த்த மூன்று மனிதர்களின் வாழ்க்கை இப்படியே கழிந்துக்கொண்டிருக்கிறது. காலமும் கடந்து கொண்டிருக்கிறது. அநேகமான நேரங்களில் இந்த மூவருக்கும் வேலை குகையில் அல்ல சிறையை விட்டு வெளியே வந்தவுடன் வெட்ட வெளியில் தான் இருக்கும். கால்களில் செருப்புகள் அல்ல, அழுக்கான கந்தல் துணிகள், சுட்டெரிக்கும் உச்சி வெயில், உடம்பில் உள்ள சக்திகள் அனைத்தையும் கதிரவன் உறிஞ்சி விடுவான். வேலை ஒழுங்காக நடைபெறாவிட்டால், அந்த மனிதநேயம் அல்லாத மனிதர்கள் கொன்றுவிடுவார்கள். புழுதிகள் சீரும் மனல் வெளிகளில் புட்கள் கால்களில் படும் போது மட்டும் இதமாக இருக்கும். இங்கு பச்சையம் கூட பாலை நிறத்திற்கு பலியாகிவிட்டது. சூரியன் ஆங்காங்கே விட்டு வைத்த செடிகள், உயரமாக வளர்ந்த மரங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த காடுகள் மட்டும் தப்பி பிழைத்து காணப்படுகின்றன. தீவிரவாதிகள் பாரிய தேசத்தை கைப்பற்றி வாழ்கிறார்கள். அவ்வப்போது வந்து செல்லும் வாகனங்களுக்கு தாரில் அமைந்த பாதை அவர்களுக்கு இலகுவாகிவிட்டது. முட்கம்பிகளுடன் பின்னிய பலகை முற்றுகைகள். ஆயுதங்கள், சட்டவிரோத கடத்தல் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த பாதகர்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான உபகரணம், களஞ்சியப்படுத்துவதற்கு பலகைகளால் ஆன பெரிய பெரிய கூடாரங்கள். அது மட்டும் இல்லை, அவர்கள் வாழும் இருப்பிடங்கள் சிலது கட்டிடங்களால் ஆனது. அங்கு சுத்தம் செய்யும் பணிக்கு ஒருத்தனை அமர்த்தி விடுவார்கள். இன்று நம் சாரவ் மாட்டிக்கொண்டான். வேலை செய்து ஓய்வைதேட நேரம் இல்லை. அந்தி நேரங்களில் களைப்பின் அசதியால் உறங்கி விடுவான். காலை கண் விழித்தால் மீண்டும் வேலை, சில நேரங்களில் எப்படியோ தப்பித்து வேலை செய்யாமல் ஒழிந்து விடுவான். ஆனால் மற்ற இருவர்கள் அப்படி அல்ல. இன்று ஆயுத களஞ்சிய கூடாரத்தில் மாட்டிக்கொண்டனர். அவர்களின் இரு முகங்கள் தன் கண்ணில் இன்று தென்பட்டுவிடாதா என்ற ஏக்கம் கண்ணில் உண்டு, மனதில்… போதும். எவ்வளவு காலம் இந்த வாழ்க்கை.

சாரவ் வெளியே வந்து பார்க்கும் சமயமொன்றில் அங்குமிங்கும் திரியும் தீவிரவாதிகள் கூட்டம். தட்டு தடுமாறி அங்குமிங்கும் வேகமாக ஓடத்தொடங்கினார்கள். அந்த கூட்டத்தின் தலைவன் மற்ற அடியாட்களுக்கு எதோ காதுகளில் மந்திரம் ஓதினான் போல, அதன் தாக்கத்தால் தீவிரவாதிகள் கூட்டம் கருங்கடல்களின் பேரலைகள் போல எழுந்து வந்தது. இவ்விடயங்களை கவனித்த சாரவ்வின் மனம் இனம்புரியாத பதற்றத்தை உண்டுபண்ணியது. இது பயமும் இல்லை, ஆனந்தமும் இல்லை. கடலின் அலைகள் போல் எழுந்து வந்த அசுர மனிதர்கள் சாரவ்வின் அருகில் நெருங்கும் போது பயம் தொண்டையை அடைத்தது. வெளியில் திரியும் வேலையாட்கள் சிறையில் அமர்த்தப்பட்டார்கள். வழமைபோல் இருந்த இடம் சிறிது நேரத்தில் சுழல் காற்றானது. பூகம்பம் எதும் ஏற்பட போகிறதா. அல்லது மேலே இருந்து குண்டுகள் விழப்போகிறதா. அந்த திக் கணங்களில் சாரவ் தேடியது இரு ஜீவன்களை மட்டுமே. சாகிதனும், ஹர்ஜிந்தனும் சாரவ்வை கண்டவுடன், அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தார்கள். சாரவ் பணி செய்யும் கட்டிடத்தினுள் மூவரும் ஒழிந்து கொண்டார்கள். கட்டிடத்தின் உட்புறம் பலகையிலான ஓர் ஜன்னல் பக்கம் நின்று சாரவ் வெளியே நடக்கும் விடயங்களை கவனிக்க தொடங்கினான்.

மூச்சு இழைத்தபடி ஓடி வந்த ஷாகிதன் “யாராவது கண்டாங்கனா போச்சி!”

சாரவ் “வெளிய என்ன நடக்குது!”

“யாருக்கு தெரியு, எனக்கு… தெரியாது. இதுக்குள்ள ஏ ஒளியனு”

“தப்பிக்கத்தா”

பதற்றமடைந்த ஹர்ஜிந்தன் “நோ நோ அதுக்கு துளி கூட வாய்ப்பு இல்ல. வெளிய என்ன நடக்குதுன்னு

யாருக்கு தெரியு”

ஜன்னல் மூலையில் பார்வை பதித்த சாரவ் கண்கள் வெளியே நிறைய வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதை கவனித்தது. சாரவ்விற்கு உதித்த சிந்தனையால் ஷாகிதனின் முகத்தை பார்த்தான்.

“உனக்கு ஞாபகோ இருக்கா கல்வெட்டு மேர்சநெரி, வியாபாரிக”

“அட ச்சே! இந்த நேரமா தப்பிக்க போற, நீ செத்தா உன் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வா” என்று கூறி சிறிய சிரிப்பு ஒன்றே வார்தையோடு வெளியேறியது.

அவனின் வார்த்தையும், சிரிப்பும் சாரவ்விட்கு, குற்ற உணர்வுகள் கொண்ட மனதில் சென்றடைந்த வடுக்களை உண்டாக்கும் அம்புகள்.

“நீ ஒரு நாள் சொன்னியே எப்பயாவது இந்த வியாபாரிகள் குரூப் வருவாங்கனு… இப்ப.. இப்ப”

குரலின் சத்தம் உயர்ந்தது.

“அதுக்கு”

சாரவ்வின் பதற்றமடைந்த வார்த்தைகளும், நடத்தைகளும் சாகிதனுக்கு ஓர் குழப்பத்திலான சந்தேகத்தை உருவாக்கியது.

“ஆமா அவங்களுக்கு உனக்கு என்ன சம்மந்தம், அவங்க என்ன உன் ஆளுங்களா!”

“உனக்கு புரியாது”

“புரியாதுனா!”

“கொஞ்ச நேரொ சும்மா இருக்கியா!”

சாரவ்வின் பார்வை மீண்டும் ஜன்னல் வழியாக சென்றது. அங்கு அவன் வரைந்த கல் ஓவிய மனிதர்களை நேரில் கண்டான். வித்தியாசமான உடைகளுடன், வாகனங்களில் இருந்து கீழ் இறங்கினார்கள். அவர்கள் சென்ற வழிகள் சாராவ் பார்வைக்கு எட்டவில்லை. ஜன்னல் வழி பார்வை அவனுக்கு போதுமானதல்ல.

சாரவ்வின் பார்வையை அறிய சாகிதன் ஜன்னல் வழியாக பார்த்தான். பார்வை விலகி சாரவ் பற்றிய பயம் மட்டுமே சிந்தனையின் பார்வையாகிது. தரையில் அமர்தவனின் கண்கள் ஹர்ஜிந்தனையையும் ஏறிட்டது. “ஹாஆமா…! உண்மையிலேயே நீ யாரு சாரவ்! சகிதனின் புரியாத சந்தேகம் சாரவிட்கு அர்த்தமில்லாத கோபத்தை ஏற்படுத்தி, அந்த கோபம் அழுத்தமான வார்த்தைகளாக வெளிவந்தது.

“உனக்கு என்ன வேணும்!, இங்கிருந்து தப்பிகணு அவ்வளோ…தானே அவ்ளோதானே! மூடிட்டு பேசாம இரு. சாரவ்வின் முகத்தில் உண்டான தடுமாற்றமான ஆத்திரமும், துடிப்பும் இருவரின் இதயத்துடிப்பை அதிகரித்தது.

“உன் குடுபத்த பத்தி கொஞ்சங்கூட யோசிச்சு பாகல இல்ல நீ. நீ வெளிய பொய் மிதி வாங்கி செத்துட்டா யாரு பதில் சொல்வா!”

“சாரவ் சாகித் சொல்றது சரி”

இரண்டு பேரும் பதுங்கி நின்று, பயத்தின் வார்த்தைகளின் இருவரையும் பார்க்கும் போது சாரவ்விட்கு ஆத்திரம் கொந்தளித்து எழுந்தது. அவர்களை வசை வார்த்தைகளால் வதைக்க அவன் விரும்பவில்லை.

“வாய மூடு…! ஷட் அப்……!”

அந்த அலறல் அந்த கட்டிட விட்டையே அதிர்ந்துவிட்டது. அவனது சத்தம் வெளியே கேட்டிருந்தால் என்ன ஆகும் என்பது எண்ணி அச்சத்தின் விளிம்பில் நின்றார்கள். அவர்கள் பயந்தது போல ஒரு காலடிச்சத்தம் அவர்கள் இருந்த வீட்டின் கதவை நோக்கி வருவது போல் கேட்டது. நெருங்கி வரும் காலடி ஓசை வீட்டின் இரண்டு உயிர்களின் இதயத்தினுள் நுழைந்து பயத்தினால் அதிர்ந்தது. நாயகன் எனும் சாரவ்வின் காதுகளுக்கு… மனதின் தைரிய ஓசை. கோபத்தின் உச்சத்தின் ஓசை. கோபத்தினால் உருவாகும் தைரியத்தின் ஓசை. திமிரியெளும் ஓசை. வாய்ப்பை பற்றிக்கொள்ளும் ஓசை. அச்சம் தவிர்ந்து பலம் கொள்கிறான்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *