கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 1,543 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

அத்தியாயம் நான்கு – காலம் முடிந்தது

மங்கலான பார்வைகள். பார்வையில் இரு உருவங்கள். எதோ கதைக்கிரார்கள். என்னைப்பற்றிய… ஓய்வை தேடிய கண்கள் இருளை அடைந்தது. இருளில் ஒரு நிசப்தம், இந்த போர் காலம் முடிவுக்கு வந்து விட்டது. பின் பல காலமும் கழிந்து விட்டது. உன்னால் போராட வேண்டிய காரியம் ஒன்று உள்ளது, நீ வந்த காரியம் ஒன்றுள்ளது, உன் மரணத்திற்கு முன்… இது ஆத்மாவின் குரல். உடலை பிரிந்து செல்ல எனக்கு நேரம் வரவில்லை என்றது.

பல வருட ஆண்டுகளுக்கு பின் ஒரு விழிப்பா!. இல்லை. இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. சாரவ் கண் விழித்து பார்த்த போது அவன் மேசையின் மீது படுத்திருந்தான். முகமூடி அகற்றி அருகில் வைக்கப்பட்டிருந்தது. உடல் வலி இப்போது இல்லை. உடலை துளைத்த குண்டுகள் அகற்றப்பட்டிருந்தன. காயங்களுக்கு மருந்து செலுத்தி குணப்படுத்தப்பட்டிருந்தது. மேஜையிலிருந்து எழுந்து வந்தான். சுற்றிலும் உயிரற்ற உடல்கள். அவனால் கொல்லப்பட்ட உடல்கள் ஆங்காங்கே கிடந்தன. அவர்களில் சிப்பாய் வீரர்களோடு கோட்டும் சூட்டும் அணிந்த சில மனிதர்கள். கொள்ளை கும்பலில் மாபியாக்கள், வியாபாரிகள் போன்று. மரணத்தை தேடி வந்தவர்கள்.

கீழே கிடந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு. தனது முகமூடியையும் அணிந்து கொண்டு கட்டிடத்தின் கீழே ஓடினான். போர் சத்தம் இல்லை. விமானம் வானில் வட்டமிடும் சத்தமில்லை. நிலங்களை காவு வாங்கும் ஏவுகனையின் சத்தமும் இல்லை. வெளியே வந்தவன் போர் முடிந்த சூழலையே கண்டான். ஆனால் அறுங்கல் தேசத்தின் நிலம் அவன் கண் எதிரே இரண்டாக பிளந்து இருந்தது. பிளவின் நடுவில் வெடிப்புகளினால் உருவான எரியும் தேசம் உருவெடுத்திருந்தது. பிளவை கடந்து செல்ல முடியாதவாறு சாரவ்வின் நிலை. பிளவின் அப்பக்கம் சேஃப் வீரர்களை காணமுடியவில்லை. ஜான் பேக் அஃப் என்று அழைத்த ஆட்கள் எங்கே! அவர்களில் பாதி வீரர்களின் உயிரற்ற உடல்கள் போர்க்களத்தில் சூழலால் தகனமாகி இருந்தது. சாரவ் நின்றிருந்த இடம் மலை பிரதேசம். அவன் கோட் காடுகளை கடக்க மலையிலிருந்து இறங்கி, பின் வழியிலாவது தப்பிக்க வேண்டும் என்று எண்ணினான். விசேட தொடர்பு சாதனத்தின் ஊடாக பேசுவதற்கு முயற்சி செய்தான். மறு முனையிலிருந்து…

“ஸ்ஸ்ச்ச்…, …., ….”

“ஜான்”

“யாரு இது”

சாரவ்

சாரவ்!

……, ……,

இறு இறு… நீ அங்க நிக்காத, அந்த வழியாக நிக்காத ஓடிடு…. ஓடு!!!

ஜானின் வார்த்தைகள் சாரவ்வை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவனால் அங்கு ஜானின் குரலை மட்டுமே கேட்க முடிந்தது பிளவின் அப்பக்கத்தில் அவனை காண முடியவில்லை. அப்போது அவன் பின்னே… கட்டிடங்களை பிளந்து கொண்டும், நிலங்களில் இருந்து துளைத்துகொண்டு வரும் சாத்தான்கள் போல் விபரீதங்களை நிகழ்த்துவதற்கு வருகைதந்தார்கள் அதே எமகிங்கர்கள். இவர்களின் அட்டூழியம் ஊரையே நாசம் செய்து விடும் போல. நிலத்தையே அழித்துவிட்டது. சேஃப் படைகளை கண்களுக்கு தெரியாத இடத்தில் மறைத்துவிட்டது. இந்த ராட்சசர்களுக்கு மரணத்தை காட்ட வேண்டும். ஜானின் ஒடிடு என்ற வார்த்தை, ஜானின் குரல் அல்ல, பயத்தையும் வேகத்தையும் உருவாக்கும் சக்தி; சாரவ்வின் உடலிலில் சென்று அதிர்வை ஏற்படுத்தியது. அதீத கோபம், அதி உடல்

பலத்தை கொண்டுவந்தது. கும்பலாக வரும் கொடூரர்களை தனது கைத்துப்பாக்கியின் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டான். தோட்டாக்கள் தீரும் வேளையில் எதிரிகள் அருகே நெருங்கிவிட்டார்கள். அனைவருக்கும் மரண அடி… எதிரியின் ஈட்டியொன்றை சாரவ் பற்றிக்கொண்டான். எதிரிகளின் குருதி களத்தில் பீய்ச்சிட்டு பாய்ந்தது. மனிதர்கள் அல்ல மிருகங்கள். கை கால்கள் மட்டும் உண்டு. அதனால்தான் அறிவற்று சாரவ்விடம் சென்று அகோரமான மரணத்தையே தண்டனையாகப் பெறுகிறார்கள். எத்தனை பேரை கொன்றாலும், சிறிதும் பயம் அற்று அதே துடிப்போடு கிளம்பி விடுகிறார்கள். கொடூர படையின் கூட்டம் அதிகரிப்பினால் நிலத்தின் பிளவை கடந்து மறு பக்கத்திற்கு செல்ல சிந்தனை செய் என்று மனம் சொல்லியது. அவன் தப்பிப்பதற்காக மலை இறங்கும் பின் வழியை நினைத்து கூட பார்க்கமுடியாத எதிரிகளின் சுற்றி வளைப்பு. அவனது மன உறுதி பயங்கரமானது. உயிர் தப்புவதற்கு பிளவின் நடுவே உருவாகியிருக்கும் தீயின் தேசத்திலே பாய்ந்தான்.

அங்கு நெருப்பில் வீழ்ந்து அழியும் நிலையில் இருக்கும் இரும்பில் உருவான ஒடுக்கமான பாலம் ஒன்று சர்வேந்திரனை தாங்கி பிடிப்பதற்கு உருவெடுத்து உள்ளது போல! அவன் பாய்ந்த அதிர்வில் பாலம் சற்று கீழே இறங்கிவிட்டது. பாய்ச்சலினால் உருவான இரும்புகளின் அதிர்வுகள் இன்னும் நிற்கவில்லை.

பாலம், பாரம் தாங்கும் இரும்பு ஒன்றின் கூர்மையான மேற்பகுதியில், நிலத்தின் பிளவின் இருப்பகத்தின் இருமுனையையிலிருந்து தொடாமல், இரு பக்கமும் சரி சமமாக, மேலும் கீழுமாக உசலாடிக்கொண்டிருந்தது. பாலம் தடால் தடால் என்று கீழ் இறங்குவதற்கே எத்தனிக்கிறது. பாலத்தின் மருமுனையை நோக்கி செல்லும் போது, மற்ற முனை மேலெழுந்து வந்தது. காலன் நம் பின்னே இப்படித்தான் உருவெடுத்து வருவான் போல. சாரவ்வின் வேகத்தால் ஒரு பக்கம் அழுத்தம் அதிகரிக்க, பாலம் பிளவடைந்த நிலத்தின் மட்டத்தை விட கீழ் இறங்கிவிட்டது. பாலத்தின் முனையிலிருந்து மேலே பாய்வதற்கு எங்கே வழி! அச்சமயத்தில்…

பாலத்தில் தடால்!! என்ற ஓர் அதிர்வு. சாரவ்வை அந்த அதிர்வு திடுக்கிட வைத்தது. பாலம் சம நிலையை அடைந்தது. அந்நேரத்தில் பின்னே எழுந்து வந்த இரும்பு காலனை தடுத்து உதவியது யார் என்று அவன் திரும்பி பார்த்த பொழுது, உடல் முழுவதும் கவசங்களை அணிந்து கொண்டு எந்திர மனிதன் போல் ஒரு உருவம் காட்சியளித்தது. சாரவ்வின் மனதில் இவன் டி, நாற்பத்து மூன்றா ஆ! என்று சந்தேகம் ஏற்பட்டது. முதன் முதலில் ஜான் முகத்தில் ஏற்பட்ட பயமும் தடுமாற்றமும் என்னால் உணர முடிகிறது. இந்த கவசத்தை பார்த்தா! கவச உருவம், பாலத்தின் வலது பக்க இரும்பு தூண் பிடியை இரும்பு காலால் ஒரு உதை விட்டான். பாலம், நிலங்களின் இரண்டு முனைகளை கைவிட்டு தொண்ணூறு பாகையில் சுழன்று நேராக நின்றது. அவனோடு சேர்த்து என்னையும் கொன்று விடுவான் போல, இந்த வோர் ராட்சதர்கள் பயம் என்றால் அர்த்தம் தெரியாதவர்கள்! ஏற்கனவே உசலாடிய பாலம் கீழே விழுவதற்கு தத்தளித்து கொண்டுள்ளது! இதில் இவன் வேறு…

அப்போது ஜானின் குரல் சாரவ்வின் காதில் பதற்றத்துடன் ஒலித்தது.

“அது டி ஃபோர்ட்டி த்ரி டிராஸ்ட்ரோ ஹேட் அவெனாளதான் எல்லா காரியமு வீணா போச்சி. அந்த புருடல் சோல்ஜெர்ஸ் எல்லா அவனோட ஃபோர்ஸ் தா”

“ஆமா முதல்ல நீ எங்கிருந்து பேசுற, நீங்க எங்க இருகிங்கனு என்னால பார்க்க முடியல ஹோஸ்டேஜஸ் லா எங்க?”

என்று கூறியவாறு அறுங்கலை சுற்றி அவன் பார்வை முன்னூற்று அறுபது டிகிரி வட்டமிட்டது.

“ஹாஸ்டாஜஸ் ரெஸ்கியூடட். சேஃப். மொதல்ல நீ அங்க இருந்து எப்பிடியாவது தப்பிச்சுடு”

“இல்ல அவே கிட்ட வந்துகிட்ருக்கா!!! நீங்க இங்க இருந்து போயிடுங்க…!”

இதயத்தில் பட படப்பு சத்தம் வெளியே கேட்டது. முன்னால் நின்ற கவச உருவத்தை பார்த்தவுடன் எரிச்சலும் கோபமும் மனதில் குறையாத தீயாக மெலேழுந்தது. அதோடு தொண்டையை சிக்கிக்கொண்டு பயம் வாயை அடைத்தது. அந்த பயம் உயிரை பற்றி. ஆனால் எதிரில் நின்றவன் பயம் என்றால் என்ன என்று தெரியாத கூட்டத்தின் தலைவன்.

நெருங்கி வந்த டிராஸ்ட்ரோ அவனது சண்டை யுக்திகளை கையாண்டான். நிலத்திலே மிதந்து கொண்டு காற்றை கிழிக்கும் வேகம். அவனது வேகத்திற்கும் மார்ஷ்யல் ஆர்ட்ஸ் யுக்திக்கும் ஈடு கொடுக்க முடியாத சாரவ், இரும்பு கவசங்களால் பலத்த அடி வாங்கினான். இரும்பின் அடிகளால் எலும்புகள் நொருங்கிவிடும் போல, பாலத்தின் இரு முனைகளுக்குமே பயத்தின் நடுக்கம் போல, அதிர்ந்தது. ஒரு கட்டத்தில் சாரவ் கைக்குள் அவனின் வேகம் மாட்டிக்கொண்டது. கையால் அவனது கையை பூட்டு போட்டு வலது கையை முறுக்கி முக கவசம் நொறுங்கும் அளவிற்கு நான்கு குத்து குத்தினான். அவன் தலையை கொண்டு பாலத்தின் தூணின் இரும்பில் சென்று மோதினான். பாலம் அதிர்ந்து மீண்டும் கடிகார முள் போல ஆடியது. திமிறி எழுந்த கவசன் சாரவ்வை இரும்பு கவச பிடியால் கீழே தள்ளினான். சாரவ் உருண்டு சென்று பாலத்தின் எதிர் முனையில் கீழே விழும்போது கையின் இரும்பு பிடியால் விளிம்பின் அந்தரத்தில் தொங்கினான். அக்கணத்தில் மத்தியில் நின்ற டிராஸ்ட்ரோவின் கால்கள் மருமுனையை நோக்கி ஓடியது. பாலம் ஊசலாடாமல் சமநிலையில் நின்றது. சாரவ் பாலத்தின் முனையை பற்றி தொங்கியவாரு மேலேறி வந்தான். டிராஸ்றோவின் கவசம் நெளிந்தும். நாயகனின் கை குறுதியால் நனைந்தும், எதிர் எதிர் முனைகளின் யுத்தம் நிறைவடைய போவதில்லை போல சாரவ்வும், டிராஸ்றோவும் இரும்பு பாலத்தின் இரு முனையில் நின்றார்கள்.

அப்போது அறுங்கலில் மரு முனையில் நிலம் அதிர்வது போலானது. நில நடுக்கம் ஏற்பட்டு விட்டதா! ஆம் நிலங்களை அளிப்பதற்கு, எஞ்சியுள்ள சேஃப் படையினை நாசம் செய்வதற்கு, மலைமீது இருந்து இறங்கிய எம எதிரிகள் என்ற மிருகங்களின் ஓட்டங்களால் ஏற்பட்ட நிலநடுக்கம். எம கிங்க வீரர்கள் இதுவரை பார்க்காத அளவுக்கு அதிகரித்துவிட்டார்கள். இவர்கள் இறந்தவுடன் உயிர் பிழைத்து வந்து விட்டார்களா! வெட்ட வெட்ட முளைக்கும் புற்கள் போல், முட் புதர்கள் போல் வளர்ந்து கொண்டே வருகிறார்கள். என்ன கெடு காலம்டா இது! அந்த மிருகப்படைகள் சேஃப் வீரர்களை துரத்துகிறது. வானத்தில் வானூர்தி சேஃப் வீரர்களை காப்பாற்ற வந்தவுடன் மனம் அடைந்த சந்தோசத்தை, அமைதியையும் எப்படி சொல்வது. வெப்பத்தின் போர் சூழலில் இதயம் மட்டும் குளிர்ந்தது. வானம் என்றவுடன் நினைவுக்கு வந்தது; ஏவுகணை. அது குண்டுகளால் தகர்த்தப்பட்டு இடிபாடடைந்து உள்ளதை கவனித்தான். சாரவ்வின் வருகைக்கு காத்திருக்கும் வானூர்தி, அதோடு நம் வீரர்கள் மிருகங்களுக்கு இடையில் சிக்கி கொண்டு தவிப்பதை பார்க்க முடியாமல் சாரவ் பாலத்தை கடக்க துடித்தான். டிராஸ்ட்ரோ, சாரவ்வின் சண்டையின் போது சேஃப் வானூர்தியொன்று வானத்தில் வந்து டிராஸ்ட்ரோ மீது தாக்குதலை ஏற்படுத்தியது. அதி உயர் இயந்திர திறன் கொண்ட துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் டிராஸ்ட்ரோவின் கவசங்களை சிதைத்துவிட்டது. அந்நேரம் கடிகார முள் போல அசைந்த இரும்பு பாலம் சாரவிட்கு சரியான திசையில் அமைந்தது இச்சமயத்தை பயன்படுத்தி சாரவ் பாலத்தின் விளிம்பிட்கு சென்று சீரும் வேகத்தில் பாய்ந்தான். அதே நேரத்தில் டிராஸ்ட்ரோவும் பாலத்தின் மரு முனைக்கு சென்று பாய்ந்து தப்பித்துவிட்டான். மலை பக்கத்திற்கு சென்று வானூர்தி துப்பாக்கியின் குண்டுகளுக்கு இரையாகாமல் எங்கேயோ சென்று மறைந்து விட்டான். சாரவ் பாய்ந்த நிலத்தில் எதிரிகளின் கொடூர கூட்டம் வளைத்துவிட்டது. அவர்களது பிடியிலிருந்து வேகமாக ஓடினான். சாரவ்வை பின் தொடர்ந்த வானூர்திக்கு எதிரியில் ஒருவன் இராட்சத ராக்கெட் ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்கினான். அந்த குண்டு நேராக சென்று வானூர்தியில் மோதியது. மிருகங்களுக்கு இடையில் ஓடியவன் தட்டு தடுமாறி தரையில் விழுந்து விட்டான்.

“எல்லாரும் இங்கிருந்து போயிடுங்க” என்று கத்தியவாரு கூச்சலிட்டான்.

சாரவ்வை மடிக்கிபிடித்து கூட்டமாகிவிட்டது எதிரிகள். வோரின் தாக்குதலில் சிக்க கூடாது என்பதற்காக, சாரவ்விட்காக காத்திருந்த ஜானும் அவனது படைகளும் அங்கிருந்து வானூர்தி மூலம் மேலே சென்று விட்டார்கள். ஏவுகணை ராக்கெட் தாக்குதலில் இருந்து அவ்வானூர்தி மட்டும் தப்பி பிழைத்தது.

போதும்… போதும்… ஆ!!!…… ம் இதெல்லாம் எனது போர்களத்தின் மன வெளிப்பாடுகள்… ஆரம்பத்துல இருந்தே. அதுதான் அவ்வளோ தெளிவா இருக்கு; கதை. நா சொன்ன கத. என்னோட கொஞ்சம் கரடு முரடான, ஒரு… நினைவு, ஒரு நிகழ்வு. இல்ல வார்த்தைக்கு வந்துருவோ!, ஒரு ஒரு ஒரு புது சப்டர்க்கு வந்துருவோ, இவ்வொளோ நேரோ பழைய கதைய கேட்டாச்சு. ஓ! கடவுளே!! இது புது கத, ம்.. ஒரு…. ஆமா,… ம்… பேசுறதுக்கு யாரு இல்லாட்டி இப்பிடி தானியாதான் பேச முடியும்! வேற என்ன முடியும். நாலு பக்கமும் மூடுன செவத்துல. பண்ணென்டு நாளா வேற என்ன செய்ய முடிஞ்சது! இங்க, இங்க இருந்த ஒரு ஆள் கிட்ட கேக்குறே “தப்பிச்சு பொய்ட்டியா, இல்ல நீ உயிரோட இல்லையா!” அந்த கேள்வி ஒரு சுவரில் பட்டு காற்றில் மறைந்தது.

இது சிறை. ஒரு இரும்புக்கதவு அடைக்கப்பட்ட சிறையில் அங்கு கண்கள் மட்டும் தெரியும் படியாக கதவில் ஒரு துளை, அதில் இருந்து பார்த்தால்… முடிவில்லாத பாதை கண்ணாடி பிரதிபலிப்பது போல் தரைகள், இந்த சிறையை தாண்டி வேறு எதுவும் என்னால் பார்க்க முடியவில்லை, ஒளியை விலுங்கிக்கொண்டிருக்கும் இருள்கள் மத்தியில் கதிரவன் மட்டும் அருகில் இருக்கும் சிறு ஜன்னலின் குறுகிய இடைவெளியின் உதவியுடன், ஒளியால் சிறையில் தனது வரிகள் போன்ற இருப்பிடத்தை கைப்பற்றியுள்ளார். உடலில் சேஃப் சிறப்பு உடைகள் இல்லை சாதாரண மேல் பனியன் மட்டும். வேறு எந்த பொருட்களும் இல்லை. உடலின் சாம்பல் நிற தோல்களை தவிர வேறு எந்த திறனும் அற்றவன் போல சிறையில் நின்றான் சேஃப் இன் விசித்திர வீரன். ஏஜென்ட் சாரவ் என்ற வீரனை காணமுடியவில்லை. சுற்றியுள்ள நான்கு சுவருகளும் அவனது நிலையை அழித்துவிட்டது. சிறையின் ஓர் இடத்தில் சென்று சாய்ந்து அமர்ந்து கொண்டான். அனைத்தையும் பறிகொடுத்தவன். மீதமுள்ளது நினைவுகள் மட்டுமே. அவனது மனம் சில நினைவுகளை அசைப்போடத்தொடங்கியது.

ஆரம்பத்திலிருந்தே, சேஃப் இனர்கள் எனது இருப்பிடத்திற்கு வருகை தந்ததிலிருந்து, இதுபோன்ற போருக்கான பயணத்திற்கு செல்ல நேரிடும் என்று, எனக்கு தெரியாது. ஆரம்பம். அப்போது, காலையிலே எல்லாமே அழகாகத்தான் இருக்கும், தோட்டம், பயிர்… இன்னும். சேஃப் வருவார்கள் என்று எனக்கு தெரியும். வானூர்தி சத்தம் கிட்ட நெருங்கி விட்டது. சரியான நேரத்தில், சரியாக நிட்க வேண்டும்…. ஜார்ஜ் எனக்கு மரனம் கிடையாது.

கண்விழித்த நினைவுகள் அனைத்தும் மூடிய கண்களின் இருளுக்கு சென்று விட்டது. ஞாபகங்கள் கனவு போல் தோன்றியது அரைத்தூக்கத்தில் இருந்த கண்கள் உறக்கத்தை தேடியது. ஆனால் நினைவுகள் மறையவில்லை அதனால் என்னவோ கண்கள் முன்னே சில ஒளிகள் தோன்றி மறைந்தன. தலை வலி மூளையை கசக்கி பிழிந்து விடுவது போல் உள்ளது. உள்ளங்கையில் வாங்கிய குண்டுகள் கூட இவ்வளவு வலியை தரவில்லை, தலையிலும் தோட்டாக்கள் பாய்ந்து விட்டதோ! ஆ…!!! என்ன சத்தம் இது! இதயத்துடிப்பு என்று எனக்கு தெரியாதா! மங்கலான பார்வைகள் எதோ காட்சியை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. எங்கும் நிசப்தம்! இதயத்துடிப்பும் அதனுடன் சேர்ந்த ஒரு குரலின் சத்தமும்.

“எட்டு, ஏலு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று… ஹம்…. ஆ!!! இது நா தான்! சாரவ்!” கண்மூடிய இருளின் இருந்து வரும் குரல் தலைக்குள் அசரீரி போல ஒலித்தது. குரல் கொடுத்த சக்தியால் மங்கலான பார்வையின் காட்சியை தோற்றுவிக்க கண்களின் இருளை கடந்து சூரியனின் வெளிச்சத்திற்கு செல்வது போல் உள்ளது. அதே சமயத்தில் அந்த குரலும் ஒலிக்க தொடங்கியது.

“ஆஹா… இது. வருஷோ எய்ட்டி எய்ட், ஜூலை, மந்த் பண்ணன்டாம் தேதி நேரம் ம்… மதியோ பண்ணெண்டு: இருபத்திரண்டு” அசரீரியாக ஒலித்து குரல் பின் சரியான நிலையில் முடிந்தது. வெளிச்சத்திற்கு சென்ற பார்வையில் காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. என்ன நடக்கிறது என்று சாரவ்… காலத்தை கடந்து தனது கடந்த காலத்திற்கு சென்று விட்டான்.

இல்லை இப்போது எழுத்தின் மூலம் அவனது உணர்வுகளுக்கு செல்வது கடினம். மனிதனின் மூளையை ஆராய்ந்து வர்ணித்து கூறுவதற்கு அறிவியலால் கூட முடியாது. இது இரண்டாயிரத்து பதினாரு அல்ல. பேரு, வோர் சிறை, சேஃப். இதையெல்லாம் கைவிட்டு நேயர்களை புதிய உலகத்திற்கு மட்டுமே அழைத்து செல்ல முடியும். கதையின் நாயகன் சென்ற உலகத்தை. இந்த கதையில் நாம் இனி பயணிக்கப்போவது இரண்டாம் உலகத்தில் என்று கூறலாம்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *