கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 1,332 
 
 

பாகம் ஒன்று

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

அத்தியாயம் மூன்று – இறுதி ஆட்டம்

கண்களை கூசச்செய்யும் வெண்ணிற ஒளிகளிலான மின் விளக்குகள் அறை முழுவதும் மேலும் கீழுமாக நிரம்பி, மொத்த அறையும் விளக்குகளின் ஒளியால் சூழ்ந்து இருந்தன. ஆனால் இது சாதாரண மின் விளக்கோ, மின்சார சக்தியின் பொருளோ இல்லை. இது வோரின் மர்மம். இத்தருணத்தில் யோகித் இருந்தால், ஜான், ம் சேஃப் ஆட்கள் இந்த அதிசயத்தை பார்த்திருக்க வேண்டும்! அதை அவன் தொடுவதற்கு முன் சற்று யோசித்தான். கையை காவு வாங்கி விட்டால்! பையில் கைபற்றி வைத்திருந்த உலோக வெற்று ஜாடி ஒன்றை கையில் எடுத்தான். அதன் வடிவமும் பளிச்சிடும் பொருளின் வடிவமும் ஒரே மாதிரி உள்ளது. வெற்று ஜாடியின் உதவியுடன் பளிச்சிடும் பொருளின் மேலாக வைத்து மூடி, ஒரு தடவை திருகி கையில் எடுத்தான். பொருளின் வெளிச்சம் மங்கலானது, பளிச்சிடும் பொருள் ஜாடிக்குள் நுழைந்து விட்டது. இந்த ஒளியின் ரகசியம் என்னவென்றே தெரியவில்லை! தனது பையில் அறுபத்தி இரண்டு ஜாடிகளை மட்டுமே தாங்க முடியுமாயிருந்தது. கிடைத்தவற்றை எடுத்துகொண்டு வெளியேறினான். சுரங்க வடிவிலான பாதை முழுவதும் சிவப்பு நிற ஒளிகளால் நிறைந்து இருந்தது. இது அபாய எச்சரிக்கை ஒளி, பெரும் ஆபத்து, மயக்கமுற்று சிப்பாய் ஒருவனின் கதவை திறக்கும் அனுமதி அட்டை ஒன்றை பற்றிக்கொண்டு சுரங்க பாதையின் வேறு வழியாக ஓடினான். ஓடும் போது கதவு ஒன்று தென்பட்டது. அனுமதி அட்டையை செலுத்தி கதவை திறந்தான். அது கப்பலின் வெளிப்பகுதி அல்ல. மீண்டும் ஒரு பலமான இரும்பு கதவே. தனது பலம் மூலம் பிடியை தடால் என்று இழுத்தான்.

கப்பலின் வெளிப்பகுதி. சூரியன் முற்றாக மறைந்து இருள் சூழ்ந்துவிட்டது. கடலின் அலைகள் சாந்தமாக இருந்தது. ஆனால் கப்பலில் அபாய எச்சரிக்கை ஒலி காதை கிழிக்கும் அளவிற்கு பயங்கர அலையாக உள்ளது. எம கிங்க எதிரி வீரர்களின் அட்டூழியம் அதிகரித்துவிட்டது. அபாய எச்சரிக்கை ஒலியால் யுத்தம் பெரு யுத்தமாயிற்று, கப்பலில் உயிரற்ற உடல்கள் சிதறி கிடந்தன. அதில் சேஃப் வீரர்களின் சில பேர்களின் உடல்கள் இருப்பதை கண்டு சாரவ் அதிர்ச்சியடைந்தான். அதிர்ச்சியின் பதற்றத்தால் மேல் மாடத்திலிருந்து கிழே தடால் என்று குதித்தான். அசகாய வியூகங்களால் சேஃப் படைவீரர்கள் வோரின் எதிரி வீரர்களை கடினமான போராட்டங்களின் பின்னரே வீழ்த்தியிருந்தார்கள். கூச்சல் சப்தங்கள் கேட்ட இடங்கள் அமைதியாயிருந்தன. ஆங்காங்கே பிணங்களும், குருதியும் சிதறி கிடந்தன. “எதிரி கூட்டம் மடிந்து விட்டன ஆனால்…! எங்கே தலைமை கூட்டம்…!” இதயம் பயத்தினால் அடித்துக்கொண்டது. கப்பல் பிரம்மாண்டம் ஆயிற்றே! ஆங்காங்கே நோட்டம் இட்டுக் கொண்டே ஓடினான். கப்பலின் ஓர் இருள் மூலையில் சேஃப் படை வீரர்கள் கூட்டம் இருப்பதை கண்டு இதயம் சாந்தமானது. சாரவ், கூட்டம் அருகே வந்தவுடன் அபாய எச்சரிக்கை ஒலி, ஓய்ந்தது. ஆனால் அந்த சேஃப் கூட்டம் இருந்த இடத்தில் வீரன் ஒருவனின் இறுதி மூச்சு சப்தம் ஓயவில்லை. சாரவ் திடுக்கிட்டு சென்று, கூட்டத்தின் முன்னே சென்று நின்றான். அறை உயிருடன் கிடக்கும் வீரன் ஒருவனின் இறுதி மூச்சு அங்கணமே நின்றது. பக்கத்தில் நின்ற வீரர்கள் சாரவ்வை விட்டு தள்ளி நின்றனர். கூட்டத்தில் இருந்த வைத்திய வீரன் அந்த வீரனின் உயிரை காப்பாற்ற போராட்டம் மேற்கொண்டது தெரிகிறது. ஜானும் அங்கேதான் இருந்தான். சாரவ் உயிரற்ற உடலின் அருகே வந்து மண்டியிட்டான். அவனால் தான் ஓர் உயிர் பிரிய காரணமாயிற்று என்று அவனது குற்ற உணர்வு அவனை வாட்டி வதைத்தது. தன்னிடம் இருந்த துப்பாக்கியையும், பையயும் கீழே விட்டான். தன் முகத்தில் அணிந்திருக்கும் முகமூடியை கழற்றினான்.

கடலின் இரைச்சல் கூட ஒரு கணம் நின்றது, வானத்தில் மிதக்கும் மேகங்கள் கூட நின்றது, சந்திரன் கூட மேகங்களை தாண்டி ஒளியாக வெளிவந்து பார்த்தான், வேகமாக வீசிய புயல் காற்று கூட அமைதியானது, சுற்று சூழலும் வானமும் மட்டும் அல்ல கப்பலில் இருந்த சேஃப் படை வீரர்களில் சில பேர்களின் நிலை குலைந்தது.

நம் நாயகனின் பலத்தை பார்த்தோம் ஆனால்… அவனது உருவம் எத்தகையது என்பதை காணவில்லை. நம் போன்ற மனிதர்களுக்கு விசித்திரமாக மட்டும் அல்ல அந்நியனாகவும் தோன்றும் காரணம் இப்போது விளங்கும். விசித்திரனின் உருவம் சரி.., அவனது நிறம் மட்டும் அந்நியமாகும். அவனது மேனி நிறம் முழுவதும் சாதாரண மனிதர்கள் போல் அல்லாமல், முழுவதும் சாம்பல் நிறம். சந்திரனின் வெளிச்சத்தால் சாரவ்வின் உருவம் நன்றாகவே புலனானது. மற்ற மனிதர்களை போல தானும் சாதாரணமானவன் தான்

என்று, மற்ற மனிதர்கள் தன்னை புரிந்து கொள்ள அவன் விரும்புகிறான். ஆனால் இப்போது எதைப்பற்றியும் பொருட்படுத்தவில்லை தனது முகத்தை மறைத்து வெளி உலகிற்கு வந்த சாரவ் தனது முகமூடியை கழற்றி எறிந்து இறந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்தினான். சேஃப் வீரர்களில் புதிய சில பேர்கள் சாரவிட்கு அறிமுகம் இல்லாதவர்கள். அவர்கள் சாரவ்வின் நிறத்தை கண்டு திகைத்து நின்றார்கள்.

அருகில் இருந்த ஜான் கோபமாக கத்தத் தொடங்கினான் “அபாய சைகைய குடுதுட்டு ஒலிஞ்சிருந்து கடைசில வார, எல்லாரும் செத்ததுக்கு அப்பறம்…, இதுக்குதா அப்பவே சொன்னே…”

மண்டியிட்ட சாரவ் கண் கலங்கியது “எ முன்னாடி இப்படி உயிர் போக கூடாது”

மனதின் வலியால் வார்த்தைகள் சிதறின.

அவன் கீழே வீழ்த்திய பையை அருகில் இருந்த வீரன் ஒருவன் பார்த்தான். பையிலிருந்து போரானிய குவளை வெளியே எட்டியிருந்தது. அதை கண்டவுடன் சட்டென்று அந்த பையை கையில் எடுத்து அதிலிருந்து குவளை ஒன்றை எடுத்து மற்ற வீரர்களிடம் காட்டினான். எல்லோரும் போரனிய வெளிச்சத்தில் மயங்கி போனார்கள். போரனிய உலோகங்களை கைப்பற்றுவது சேஃப் இனர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. அதை பார்த்த ஜானுக்கு ஓர் நம்பிக்கை தோன்றியது, “இந்த சாரவ் நெனச்சத முடிசிட்டான், அதுக்காகத்தானா…, பயங்கர ஆளு, ஆனா…” அதே நம்பிக்கையில் ஓர் தளர்வும் எற்பட்டது.

படை வீரர்கள் கப்பலை சுற்றி சென்றார்கள். ஜான் போரானிய குவளைகளை எடுத்து உற்று நோக்கியபடி இருந்தான். அவனது கண்களில் பயத்தினாலும், ஆச்சர்யத்தினாலும் மாற்றம் உண்டானது. ஜான் “நா தா அப்பவே சொன்னேனே இதெல்லாம் தேவயில்லாத விசயம்னு, ஆனா போரானியத கைபற்றது சாதாரண விஷயம் கெடயாது” என்று ஜான் மெலிந்த குரலில் கூறினான். அவனின் அழுத்தமான கோபக் குரல் காற்றிலே கரைந்துவிட்டது. மண்டியிட்ட சாரவ் எழுந்து வந்தான். சாரவ்வின் முகம் கவலையாகவும் அவன் பார்வை இறந்த வீரனின் பக்கமாகவே இருந்தது. அதை எண்ணி வருந்தினான். ஜான் சாரவ்வை கவனித்தவாறு “இன்னொரு ஆளும் கடல்ல… ம்,இது இங்க சாதாரணம். சாரவ், ஆன இது… இத கண்டு புடிகிறது சாதாரண காரியம் கெடயாது, போரானியத வேபனா மாதுற டெக்னாலஜி, ரொம்பவே ரகசியமான விசயம்”

“ஓ..! இனி கப்பலே நம்ம கைல தா, மொத்தமா தூக்கிரலாமே”

“அஹ்.. ஆ… அது கஸ்டம்… இங்க வெற என்னா இருக்குனு தெரியல, அந்த வித்தியாசமான சொல்ஜெர் மாதிரி வேற ஆபத்து கண்டிப்பா இருக்கும். ஏ இன்னு கொஞ்ச நேரத்துல இந்த ஷிப் வெடிச்சு சேதர்னா கூட ஆச்சர்யம் இல்ல, இங்க ரொம்ப நேரம் இருக்கிறது சேப் இல்ல, நம்ப அடுத்து போக வேண்டிய இடம் தான் முக்கியம் அதுக்கு அப்புறம் கப்பல பாத்துக்கலாம்”

“போர எடாம!… எப்படி தெரியு, அப்ப இதோட முடியாது?”

“வோர் கப்பல்ல மட்டும்தா இந்த வழிக்கான மேப் இருக்கு அத வச்சி தான் சொல்ல முடியும்”

கப்பல், கோட் தீவின் கடல்களில் மிதப்பதால் சேஃப் வீரர்களின் கைபற்றல் என்றும் சொல்ல முடியாது. வானில் அந்த அசுர விமானம் மற்றும் கப்பலில் ஜான் படை வீரர்கள் மட்டுமே. போரில் இறந்த உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. படைவீரர்கள் கப்பலில் பாதுகாப்பான இடத்தில் மறைந்துக்கொண்டனர். விமானம் கப்பலின் மேலே பின் தொடர்ந்து பறந்து வந்தது. கப்பல் போகும் இடம் “அருங்கல்” எனும் கிராமம். அரக்கர்கள் குடிகொண்ட மர்மங்கள் நிறைந்த கிராமமாகும்.

சாரவ் கிராமத்தினுள் நுழைவதற்கு ஆர்வமாக இருந்தான். ஜானிடம் பெற்றுக்கொண்ட உயர்ரக எந்திர துப்பாக்கியும் கையில், அதோடு வோரின் எமகிங்க எதிரி வீரர்களின் கூறிய ஈட்டி ஒன்றையும் தன் உடையில் சொருகிக் கொண்டான். கப்பலின் முன் பகுதியில் எதற்கும் அஞ்சாமல் நடுவில் வந்து நின்று சுற்று புறங்களை கவனித்து கொண்டிருந்தான். கப்பல் அருங்கல் கிராமத்தை அடைய இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது.

சுற்று முற்றும் விண்ணை தொடும் மலைகள் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது. பேருவில் மற்ற இடங்களை விட இங்கு மலைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இருபுறமும் பரந்து விரிந்து விண்ணை முட்டி நிற்கும் மலைகளுக்கு நடுவில் பெரிய காடுகள் நிறைந்த நிலப்பரப்பு உள்ளது. காடுகளுக்கு பின்னே தான் அரக்கர்களின் குடியிருப்பு உள்ளது. கப்பல் இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் எவ்வித சப்தமும் இல்லாமல் கீழ் இறங்கினார்கள். இருள் சூழ்ந்து சந்திரன் கூட கோட் தீவின் இருளால் மறைந்துவிட்டான். இருளும் காடும் சேஃப் வீரர்கள் உள் நுழைவதற்கு உதவின. ஜான் இரண்டு படைகளாக வியூகம் வகுத்து செல்ல திட்டமிட்டான். இரண்டு படைகளும் நான்காக பிரிந்து காட்டின் முன் வழியாக சென்றார்கள். கப்பலின் மத்தியில் நின்ற சாரவ் எங்கே?… அவன் ஜான் படைகள் செல்வதற்கு முன்பே காட்டிற்குள் நுழைந்து கிராமத்தின் எல்லையை அடைந்துவிட்டான். அங்கு எந்தவித மனித நடமாட்டங்களை காண முடியவில்லை. மின் விளக்குகள் குறைவாகவே காணப்பட்டன. கிராமத்தின் பரப்பளவு நினைத்ததை விட பெரிதாக உள்ளது. திடுக்கிட்டு வானத்தை பார்த்தான் “எங்கே நமது விமானம்!” அவனுக்கு யோகித் அளித்த யோனடிக் ச்சிப் ஞாபகத்திற்கு வந்தது. அவன் பின்னே ஜானும் அவனது வீரர்களும் வந்து சேர்ந்தார்கள். ஜான் “முன்னுகே வந்துட்டு உள்ளுக்கு போகளையோ” என்றான்.

“இங்க என்ன ஆபத்து இருக்குனு உங்களுக்குத்தானே தெரியும்”

ஜான் தொலைக்காட்டியினூடாக கிராமத்தில் நடக்கும் விடயங்களை கவனித்தான். அருகில் இருந்த சாரவிட்கும், வீரர்களுக்கும் எந்த ஓர் காட்சியும் சரியாக புலப்படவில்லை, அனைத்தும் அவ்வளவு தொலைவில் உள்ளது. அங்கு ஓர் உருவத்தை பார்த்தவுடன்.

“ஏஜென்ட்… டி-ஃபோர்டி த்ரீ. இவன் செத்துட்டானே இவ.. இல்ல இல்ல இன்னு நெறய பேர் இருக்காங்க…”

அவனது முகத்தில் பயம் உண்டானது. வார்த்தைகளில் நடுக்கம் ஏற்பட்டது.

“இல்ல ஹா… ம் இல்ல, ஸ்னைப்பர்..ட்ட இருந்து மெசேஜ் கெடசாச்சு ஸ்னைபெர் த்ரெட் இல்ல. உள்ள போகலாம்” என்று வீரர்களுக்கு தொலைதொடர்பு கருவி மூலம் தகவல் தெரிவித்தான்.

“எனிமி டிராஸ்ட்ரோ ஃபோர்ஸ், பேக்கப்க்கு ஆள் வேணும், நீட் பேக்கப்.. நீட் பேக்கப்…”

ஜான் “போகலாம்” என்று கூறியவுடனேயே வீரர்கள் ஓட்டம் பிடித்து விட்டார்கள். ஜானின் நடவடிக்கையை பார்த்தவுடன் சாரவிட்கு ஏதும் புரியவில்லை.

“யார் அந்த டி-ஃபோர்டி த்ரீ?”

ஜான் எதுவும் கூறவில்லை, துப்பாக்கியை ஏந்திக்கொண்டு அவனும் கிராமத்தை நோக்கி ஓடினான். எதிர்ப்பார்த்ததை விட பெரிய ஆபத்து என்று மட்டும் புரிந்தது. சாரவ் மட்டும் அந்த எல்லையிலேயே நின்று கொண்டிருந்தான்.

அவன் சிந்தனையில் யுக்தி ஒன்று தோன்றியதால் ஓடினான்… காடுகளில் அவன் பாதங்கள் மின்னல் போன்று சென்றது. வேகம் அதிகரித்தது, சாதாரண மனிதனை விட வேகம் அதிகரித்தது. கும்மிருட்டு கொண்ட அடர் காட்டில் வழி தெரியா பாதையில் அதே மின்னல் வேகம் காற்றை கிழித்து கொண்டு சென்றது. பின் வேகம் குறைந்தது. அவன் பார்வை தேடியது தென்படவில்லை போல! மீண்டும் ஓடினான். எங்கே அந்த கோபுரம், இதோ! இப்போது சர்வேந்திரன் சிறிய மலை மேட்டின் உச்சியில் நின்றுக் கொண்டிருந்ததால் வோர் கட்டிடங்கள் தெளிவாக தெரிந்தது. அந்த காவற் கோபுரம், இல்லை… கலங்கரை விளக்கம். இல்லை இது அதையெல்லாம் விட பெரிதாக உள்ளது. அவ்வளவு பிரம்மாண்ட கட்டிடம். அந்த கோபுர கட்டிடத்தின் முன் அரசனை பாதுகாப்பதை போல் சிப்பாய் வீரர்கள் வாசலிலே…; என்னிடம் உதை வாங்க காத்திருக்கிறார்கள்.

சாரவ் அந்த கோபுரத்தை நோக்கி செல்கையில் காவலில் இருந்த எதிரி வீரர்களின் தூரம் குறைந்துகொண்டே வந்தது, தூரம் மட்டுமல்ல சாரவ்வின் வேகமும் குறைந்து கொண்டே வந்தது.

அவர்களின் கண்களில் படாமல் பதுங்கிசென்று கோபுர கட்டிடத்திற்குள் நுழைந்து விடுவோம்… அங்கு யோனடிக் என்ற அரசனின் சேஃப் ஆட்சியை நிகழ்த்துவதற்கு எதிரிகளின் கண்களில் படாமல் மறைந்து செல்வதற்கு இருளும் ஒரு நண்பன் போல் உதவியது. சாரவ் அவ்வாறு செல்லும் நேரத்தில், யாரோ ஆரம்பித்துவிட்டார்கள்! குண்டுவெடிப்பு சத்தம் ஒன்று, நிலங்கள் அதிர்ந்து போயின, தூரத்தில் நெருப்பு பிளம்புகள் தெறித்தன. இருளுக்கும் அமைதிக்கும் எதிரிகள் வந்துவிட்டார்கள், சேஃப்பிற்கு இந்த வோர் எதிரிகள் எழுந்துவிட்டார்கள். மறைந்து மறைந்து சென்றே அரைமணி நேரம் ஆகிவிட்டது போல! இரண்டாம் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது! இனி பொறுக்க முடியாத சாரவ் மறைந்திருந்த இடத்திலிருந்து வேகமாக ஓடிவந்து எதிரிகளை தாக்க தொடங்கினான்.

மறைந்திருந்த இடத்திலிருந்து கத்தியை குறி வைத்து வீசினான், பின் எதிரிகளுக்கு சாரவ்வின் அடிகள், இல்லை இடிகள். இருளில் கூட முடிந்தவரை தனது திறமையால் அவர்களை தாக்கிக்கொண்டிருக்கும் போது, எதிரி சிப்பாய் ஒருவன் சாரவ்வின் முகத்திலே தனது துப்பாக்கியால் ஒரு குத்து விட்டான். எதிர்பாராத நேரத்தில் தலையில் இடி வந்து தாக்கியது போல உள்ளது. இருள் நேரத்தில் குறி தவரியது தான் காரணம். அவன் ஆரம்பத்தில் வீசிய கத்தி எதிரியை சென்று தாக்க வில்லை. நண்பன் போல் உதவிய இருள், எதிரியாகிவிட்டது. அடுத்தடுத்து எதிரிகள் அதிகரித்து விட்டார்கள். கையில் துப்பாக்கிகள் வேறு. ஈட்டிகளை ஏந்திய எமகிங்கர்கள் அல்ல அவர்கள். நாம் கொன்று குவித்ததை போல் என்னையும்…! மரணம் என்ற பயம் சரணடைய வைத்தது. துப்பாக்கியை கீழே விட்டு இரண்டு கைகளையும் தூக்கி நின்றான்.

“நீல்… நீல்… நீல் டவுன்! என்று எதிரி படையின் குரல்கள்

சரி சரி…! சரிடா…!

எதிரியில் ஒருவன் “வந்துருக்கவங்களா உன் ஆளுகங்களா?”

“இல்லனு சொன்ன நம்பிருவியா!”

அந்நேரத்தில் சேஃப் இன் குண்டு வெடிப்பு ஒன்று பின்னே நெருப்பு பிழம்பாக பாய்ந்தது. பாய்ந்தது நெருப்பைப்போன்ற நான்கு சேஃப் வீரர்களும் தான்; சாரவ்வை கைப்பற்றி வைத்திருந்த எதிரி அணியின் மேல். எதிரியின் துப்பாக்கிகள் சாரவ்வின் முனையிலிருந்து மாறும் போது அவர்கள் பிடியிலிருந்து துப்பாக்கியை வீசி எறிந்தான். எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் சேஃப் வீரன் ஒருவனின் உடலை சாரவ் கண் முன்னே துளைத்தது. குண்டு வெடிப்பால் உருவான ஒளிகள் சாரவ்விற்கு எதிரிகள் அல்ல, சேஃப் வீரர்களின் உதவினால் சாரவ் எதிரிகளை சமாளித்துவிட்டான். எதிரிகள் அணிந்திருந்த உடையில் இருளில் பார்வையிடும் சாதனம் (நைட் விஷன்) இருந்ததை கவனித்தான். சேஃப் வீரர்கள் கோபுரத்தின் காவலில் நின்ற படை வீரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டர்கள். வீரன் ஒருவன் ” யூஸ் யூர் வெபன்ஸ்” என்று கூறிவிட்டு அனைவரும் அவ்விடத்தைவிட்டு சென்று விட்டார்கள். அவன் கூறியது போல் நான் நடந்திருந்தால், ஒரு உயிர் போயிருக்காது. என்னை காப்பாற்ற வந்த நால்வரில், மூவர்தான் திரும்மினார்கள். இனி மூன்று கூட ஒன்றாகளாம். இது என்ன…! இருளில் கிடக்கும் சேஃப் இன் வீரனின் இறந்த உடலை அவனால் பார்க்கமுடியவில்லை. எத்தனை உயிர்கள் போர்க்களத்தில் மறைகின்றன. இனி அப்படி நடக்காது சேஃப் விமானம்தான் வானத்தில் தோன்ற வேண்டும்.

கோபுரத்தின் உள்ளே சென்று ஏணிப்படியில் ஏறத்தொடங்கிவிட்டான். அதன் உயரம் அறுபது அடி. கை கால்களின் வேகம் உச்சிக்கு செல்லும் வரை சற்று கூட குறையவில்லை. உச்சியில் ஏவுகணையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப அறைக்குள் நுழைந்தான். இந்த தொழில்நுட்பங்கள் போர்களத்தில் சிதைந்து விட்டதா! அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கின்றன. மின்கம்பிகள், இதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை. சுற்றி பார்க்கவே சில ஆண்டுகள் ஆகிவிடும். இதில் சிப்புக்கு பொருத்தும் பகுதியை கண்டுபிடிக்க ஒரு யுகம் ஆகிவிடுமே! ஆனால் பொறுமை காத்தான். எவ்வித குழப்பமும் இல்லாமல் நின்று நிதானமாக யோசித்து செய்யவும் நேரம் இல்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இதோ என் கண்களில் சிக்கிய இதே வடிவிலான ச்சிப்புகள் ம்..க்கழற்றி மாற்றிட வேண்டியதுதான். …., …., ஒன்றும் ஆகவில்லை. ஆம் ஒன்றும் ஆகவில்லை மீண்டும் கழற்றி வேறு ஒன்றில் பொருத்தினான். அப்படிப்பொருத்தும் போது அதனில் இருந்து வெளிச்சம் பற்றியது. பெருமூச்சு விட்டான். அவன் மனம் சாதனையை நிகழ்த்தியது போல்

மிகுந்தது. அந்த மகிழ்ச்சியில் கீழே இறங்கும் தருணத்தில் சறுக்கி விழுந்துட்டான். விழுகி்ற போது ஏணிபடியை பிடிக்காவிட்டால் அறுபது அடி கீழே விழுந்து சிதறியிருப்பான். ஒரே சறுக்களில் நாற்பது அடியை கடந்துவிட்டேன். இங்கிருந்து காலை வைத்து பக்குவமாக இறங்க நேரம் இல்லை. கையையும் காலையும் படியிலிருந்து விட்டு கீழே ஒரேடியாக பாய்ந்தான். கீழே சிறு அடியுடன் வந்து விழுந்தான். இல்லை இறங்கினான் என்றே சொல்ல வேண்டும். அவன் கீழ் பாய்ந்ததில் கோபுரமே ஆச்சர்யமடைந்துவிட்டது, இப்படிப்பட்ட மனிதனை எப்போதும் கண்டிருக்காது. கட்டிடம் முழுவதும் அதிர்ந்து விட்டன. அதிரும் வேகத்திலேயே வெளியே வந்தவன். அங்கு வோர் வீரர்கள் கோபுரத்தை சுற்றி வளைத்து கொண்டிருந்தார்கள். எதிரியின் குண்டுகள் சாரவ்வை தாக்குவதற்கு முன் வானத்திலிருந்து நெருப்பு மழைகள் போல துப்பாக்கி சூடு மழைகள் எதிரிகளை நாசம் செய்து விட்டது. குண்டுகள் பாயும் சத்தம் தலையில் இடி இடித்தது போல் உள்ளது. வானத்தில் சாரவ் எதிர்பார்த்த அசுர போர் விமானம், கோபுரத்தின் ஏவுகணை, அருங்கல் நிலங்களை அழித்துவிட்டது.. போர்களத்தின் சூழலில் சில எதிரிகளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு, எதிரிகளின் தாக்குதல்…

கடத்தப்பட்ட மக்கள் அருங்கலின் கட்டிடத்திற்குள் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அறிந்து கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றான். இங்கு மனித குரல்கள். அந்த டி ஒன்று இரண்டு மூன்று… இல்லை நாற்பத்து மூன்று இங்குதான் உள்ளான்? அந்த மேல் தளத்தில் ஓர் அறை என் கண்களுக்கு தனியாக தெரிந்தது. உள்ளுணர்வு மனித குரல்களின் ஓசைகளால் அமைதியாக ஒளிந்துக்கொள் என்றது. அதிஷ்டதேவதை மின்சாரத்தை கொன்று இருள் வடிவத்தில் இந்த சாரவ் தேவனுக்கு தக்க நேரத்தில் உதவியது. ஒரு மேசையின் அடியில் சென்று மறைந்தது கொண்டான். ட்டும்.. ட்டும்..!!! என்ன சத்தம் அது. ஆம் வெளியே நம் ஏவுகணையின் தாக்குதல் சத்தம். இல்லை! ஏவுகணை நிலத்தை இடித்துக்கொண்டு இருக்காது! ட்டும்.. ட்டும்..!!!

இருள் சூழ்ந்த அறையில் வெளிச்சத்தின் கண்கள் சிமிட்டுகிறது. அந்த சத்தம் மின் விளக்கிட்கு உயிர்கொடுக்கும் ஜெனரேட்டர் சாதனத்தின் சத்தம் தான். விட்டு விட்டு துடித்தது வெளிச்சத்தில் மாட்டிய இருள் மட்டும் அல்ல, சாரவ்வின் இதய ஓசையும் தான். தான் இருப்பது தெரிந்தால் போதும் கதை முடிந்தது. அருகில் கடத்தப்பட்டு வைத்திருக்கும் பதினேழு உயிர்களின் கதி என்னவாகும்! இனி முன் செய்த தவறு செய்ய மாட்டேன் வெளிச்சத்தின் துடிப்புகள் மூலம் இருள் மரித்துக்கொண்டு வருகிறது. இனி மரியப்போவது இருள் மட்டும் அல்ல அந்த.. குரலுகளுக்கு சொந்தமான மனிதர்களும் தான். சூழலும் அனுபவமும் மனிதனை எப்படியும் மாற்றிவிடும்.

மின்விளக்குகள் பூரணமாக ஒளி வீசியது. ஜெனரேட்டர் சத்தம் ஓய்ந்தது. சமயம் பார்த்த சாரவ் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து வெளிச்சம் வரும் நேரத்தில் மேசையின் பக்கத்தில் இருந்த ஒருவன் மீது குறி வைத்து வீசினான. இது தோள் பட்டைக்கான குறி அல்ல, தலையை குத்தி நின்றது. இரத்தம் சொட்ட சொட்ட மரண பீதி, கண்களின் இறுதி பார்வையாக, மடிந்தான். அந்த வினாடியில் அருகில் நின்ற மற்றவர்கள் சாரவ் மறைந்திருந்த இடத்தைநோக்கி துப்பாக்கியால் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டார்கள். துப்பாக்கி தாக்குதலுடன் மறைந்திருந்த சாரவ் வெளிவந்து மேசையின் மேல் பாய்ந்து காலால் ஒரு உதை விட்டான். அவனுடன் சேர்ந்து துப்பாக்கியும் பறந்தது. தனது துப்பாக்கியால் அனைவரையும் கொன்று தீர்த்தான். அங்கிருந்தவர்கள் எத்தனை பேர் என்று சண்டையின் போது தெரியவில்லை கண்ணில் படும் அனைவரையும் மரண தாக்குதலில் தள்ளிவிட்டான். துப்பாக்கிகளுடன் பார்ப்பவர்களை அடித்தே கொன்று விடுவோம் போல் உள்ளது. தன்னை நோக்கி வரும் தோட்டாக்களை பொருட்படுத்தாமல் அருகில் வருபவர்களுக்கு எலும்புகள் நெருங்கும் அளவிற்கு அடி, ஒரே அடியில் உயிர் பிரிந்தவனும் கீழே கிடக்கிறான். அரம்பத்தில் சென்ற தோட்டாக்கள் அவன் தோளில் தக்கி விட்டது. தலையில் குறிவைத்து சுட்டவனிடம் கையை கவசமாக்கிவிட்டான். ஒன்று, இரண்டு, மூன்று… என ஆறு தோட்டாக்கள் ஒரேயடியாக உள்ளங்கையில் தாங்கி, அதே கையில் துப்பாக்கியை பிடிங்கி, அவன் வயிற்றில் ஒரு உதை விட்டான். சாரவ் உடை முழுவதும் இரத்தக்கறைகள். அவன் பாதி உயிர், உடலை விட்டு பிரிந்து விட்டது போல் உள்ளது. எந்திர துப்பாக்கிகள் என்று கூட பாராமல், கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டான். முரடன் அல்ல, மூடன் போல. வலியின் தாக்கத்தால் நடக்க கூட முடியவில்லை. இவ்வளவு சேதங்களை வாங்கிய உடல் உயிரை தாக்குபிடித்தது சாத்தியமற்றது. ஆனால் விசித்திர அந்நியனுக்கு… இந்த குருதி யுத்தம் அனைத்தும் குறுகிய வினாடியில் நடந்து முடிந்தது. இல்லாவிட்டால் சேஃப் படையினர் இங்கு வந்ததிற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். பதினேழு பேர்களின் உயிர்கள் பிரிந்திருக்கும். அனைத்தும் அருகில்

இருந்த ஓர் அறைக்கு. அறைக்குள் இருக்கும் பதினேழு பேர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு. சாரவ்வின் துப்பாக்கியின் குண்டுகளால் அறை திறக்கப்பட்டது. அந்நேரத்தில் சர்வேந்திரனின் உயிர் பிரிந்தது உடல் மட்டும் தரையில் விழுந்தது; காப்பாற்றப்பட்ட பயணகைதிகள் கண்ட காட்சிகள் அதுவே.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *