அபத்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 959 
 
 

(1977 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மானேஜரின், ஏர் கண்டிஷன் அறைக்குள் நின்று கொண்டிருந்த சுமதிக்கு, வியர்த்துக் கொட்டியது. அங்கிருந்து வேகமாக வேளியேறி, தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தாள். ஏவுகணை மாதிரி வேகமாக வந்து, குண்டு மாதிரி தொப்பென்று’ இருக்கையில் அவள் விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, பைலுக்குள் இருந்த தலையை எடுத்த தலைமைக் குமாஸ்தாவே, சிறிது அதிர்ந்து போனார். உள்ளங்கை கீழே விழுந்துவிட்டதா என்பதை ஊர்ஜிதப் படுத்துவதுபோல், சுமதி, தன் வலதுகையை உதறிக் கொண்டாள்.

சுமதி, அருகிலிருந்துவசந்தியின் தோளைத்தட்டிக்கொண்டே, “வாரீங்களா அக்கா. கேன்டின் வரைக்கும் போயிட்டு வரலாம்.” என்றாள்.

“ஆபீஸ் டயம்ல கேன்டின் போகலாமா? நீ வந்து இரண்டு மாதத்துக்குள்ள வேலையை மட்டுந்தான் கத்துக்கிட்டன்னு நினைச்சேன். இதையும் கத்தாச்சா?”

சுமதி, பேசாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்; “வேலையை மட்டுந்தான் கத்துக்கிட்டென்னு நினைச்சேன்” என்ற வசந்தியின் வார்த்தைகளில், மண்டிக்கிடந்த பொறாமைத் தீயின் சூடு அவளுக்குத் தெரியாததால், அது, அவளைச் கடவில்லை. இவளைப் பார்க்கும் போதெல்லாம், வசந்திக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, மனதில் அழிக்க முடியாத ஒரு பாரத்தை சுமந்துகொண்டிருப்பது போன்ற ஒரு கனம் ஏற்படுவது, கமதிக்குத் தெரியாது.

ஒரு மாதத்திற்கு முன்பு, “இந்தா பாரு வசந்தி! நீ வேலையில் சேர்ந்த மூணு வருஷமாகுது. ஆனால், சுமதி, ஒரு மாதத்துல உன்னைவிட, பிரமாதமா டிராப்ட் போடுறாள்” என்று தலைமைக் குமாஸ்தா, நகைச்சுவைக்கும் நடைமுறைக்கும் இடைப்பட்ட குரலில் சொன்னபோது ஏற்பட்ட பொறாமை, சிக்கலான பைல்களை மானேஜரே, கமதியிடம் இதைக் கொடுங்கள் என்று சொன்ன போது, ஒரு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிட்டது. ஆகையால், அதன் வெளிப்பாடாகதான் ஆபீஸ்நேரத்தில்வெளியேபோகாதவள் என்ற ஒழுங்குணர்வு உள்ளவளாக, தன்னைக் காட்டிக் கொள்கிற தோரணையில், வசந்தி, பைலில் எதையோ, ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.ஆனால்,சுமதியால், சம்மா இருக்கமுடியவில்லை.

“வாங்கக்கா. போயிட்டு வரலாம்.”

“சுமதி. உனக்குத் தெரியுமோ தெரியாதோ… நான் ஒரு டிஸ்ஸிபிளினேரியன் . கேன்டீன் போறதுக்குன்னே ஒரு டயம் இருக்கு. லஞ்ச் டயம்”

“முக்கியமான விஷயம் பேசணும். இல்லன்னா, நான் சுடப்பிடுவேனா அக்கா..?”

வசந்தி, அவளுக்கு பதிலளிக்கவில்லை. அலட்சியத்துடன், வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“இவள் என்ன, எதுக்கெடுத்தாலும், ‘அக்கா. அக்கா…’ன்னு சொல்லி மானத்தை வாங்குறாளே. இவளைவிட, ஒரு வயகதானே அதிகம். அதனால, அக்காவாகிவிட முடியுமா?”

வசந்தி பொருமிக் கொண்டாள். லஞ்ச் டயம் வந்தது.

சுமதி வேலையில் கெட்டிக்காரியாக இருந்தாலும், இதர விஷயங்களில், தன்னை நம்பி இருக்கிறாள் என்பதை செக்ஷனில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக, அந்த ஒட்டப் பல்லு தலைமைக் குமாஸ்தாவுக்கு காட்டிக்கொள்ளும் விதத்தில்,”வாரியா போகலாம். அப்போதே நச்சி எடுத்தியே.” என்று சொல்லிக்கொண்டு, சுமதியின் பெருவிரலைப் பிடித்துக்கொண்டு, கேன்டீனுக்குப் போனாள்.

“என்னமோ. முக்கியமான விஷயமுன்னு சொன்னியே. சொல்லு.”

“நம்ம மானேஜரு எப்படிக்கா..?”

“தங்கமான மனுஷன். அவரைவிட, ஒரு நல்ல மனுஷன் இருக்க முடியாது.”

“நான் எதுக்குக் கேட்டன்னா…” என்று கமதி பேச்சை இழுத்தபோது, பியூன் செல்லச்சாமி, ஒரு போண்டாவை வாயில் வைத்துக் கொண்டு வந்தார். அவர் வாய் பேசியதா, போண்டா பேசியதா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்.

“இரண்டு லேடீஸ் சேர்ந்துட்டா உலகமே அவர்களுக்கு மறந்துவிடுமாம். மூணு லேடிஸ் சேர்ந்தால்தான் வம்பாம்.”

“நீ மூணாவது வந்துட்டே. இனிமேல் வம்புதான்.”

“நான் என்ன பொண்ணா..?”

“ஒன்றுமில்ல செல்லம்… நம்ம மானேஜரு எப்படிப் பட்டவர்னு சுமதி கேட்டாள். நான் எப்படிப்பட்டவர்னு விளக்கப்போனேன். நீ வந்துட்டே, நீயே அவளுக்குச்சொல்லு.”

செல்லச்சாமி, தனக்கு, வசந்தி கொடுத்திருந்த பொறுப்பை உணர்ந்து அகமகிழ்ந்தான்.

“என்னம்மா… நீங்க? இந்த மூணுமாசத்தில் மானேஜரு அய்யாவை புரிஞ்சுக்கவியா. தங்கத்தை ஒரு தட்டிலேயும். இவர ஒரு தட்டிலேயும் வச்சா. இவரு இருக்கிற தட்டுதான் கனமா இருக்கும். பத்தரை மாத்துத் தங்கம். இதுக்கு முன்னால.. ஒரு கம்பப் பயல் மானேஜரா இருந்தான். என்னை அவன் பொண்டாட்டி துணிங்கள கூட, ஒவர்டயம் கொடுக்காம துவைக்கச் சொல்லுவான். நைட்ல பத்து மணி வரைக்கும், அவன் குடிக்கிற கிளாஸ்ல, நான்தான் விஸ்கியை ஊத்தணும். என்னைப் பார்த்தவுடனே, அவன் சாராய வாய் ‘டா போடும். ஆனால், இந்த மனுஷன், மிஸ்டர் செல்வமுன்னுதான் சொல்லுவார். நானே ஒரு தடவை அவரு வீட்டுக்கு போய், காய்கறி வாங்கிட்டு வரட்டுமான்னுகேட்டேன்.’இனிமேல், வீட்டுப்பக்கம் வராதே’ன்னு. சிரிச்சுக்கிட்டே அனுப்பிட்டாரு புண்ணியவான் இவரும்மா.”

பேசிக் களைத்த சொற்பொழிவாளன்போல், செல்லச்சாமி, சோடாச் சாப்பிடப் போய்விட்டார். கமதி, நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு, பரிதாபமாக வசந்தியைப் பார்த்தாள்.

“எதுக்காக திடீர்னு மானேஜரைப் பத்திக் கேட்டே..?”

“சும்மா சொல்லு.”

“கொஞ்ச நாளாயே மானேஜரு, என்னை ஒரு மாதிரி பாக்குறாரு.. இன்னைக்கு பைலை என் கையில் கொடுக்கிற சாக்கில், என் உள்ளங்கையை லேசா அழுத்தினாரு… எனக்கு கையும் ஒடல. காலும் ஒடல.”

வசந்தி, அவளை ஒரு மாதிரி பார்த்தாள்.

“இப்படில்லாம் பழி போடாதே சுமதி. அவரு கை தற்செயலாய் பட்டிருக்கும். உதாரணமாய், ஒன்று சொல்றேன் கேளு. ஒரு நாள், பஸ் ஸ்டாப்பில் நின்னேன். சரியான மழை. அந்தப் பக்கமா இவரு வந்தாரு. காரிலே ஏறிக்கோன்னு சொல்லி இருந்தா, ஆபத்துக்கு தோஷமில்லன்னு நானும், அவர் கூடயே போயிருப்பேன். ஆனால், என்ன செய்தாரு தெரியுமா..? காரை விட்டு இறங்கி, என்னிடம் வந்து, நீங்க கார்ல போய் வீட்ல இறங்கிட்டு, வண்டியை அனுப்புங்க… நான் அதுவரைக்கும் இங்கேயே நிக்கிறேன்’னு சொன்னார். இவ்வளவுக்கும் என்வீடு, அவர் போற வழியில்தான் இருக்கு. வழியில் என்னை இறக்கி விடுறதுக்குப் பதிலாய். அவரே வழியில் இறங்கிட்டாரு. அவ்வளவு பெரிய மனுஷன்.”

சுமதி, சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள், உடனே வசந்தி, “என்ன… நான் இவ்வளவு சொல்லியும், உனக்கு நம்பிக்கை வரலியா?” என்றாள்.

“நீங்க சொல்றது சரிதான், அக்கா. நான் இன்டர்வியூக்கு வந்திருந்த போது, சுமதி, உன்னைவிட சரோஜ் என்று ஒரு பிரில்லியண்ட் கேர்ல் வந்தாள். அவளை போடணுமுன்னு நினைச்சேன். ஆனால், நீ, உன் வறுமையை சொன்னதும், நோயாளியான உன் அப்பா, உன்னை நம்பி இருக்கதச் சொன்னதும், என் மனசு மாறிட்டு… என் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்துக்கோன்னு சொன்னாரு…”

வசந்திக்கு, பற்றி எறிந்தது. அவள் அருமைத் தங்கை சரோஜிக்கு வேலை கிடைக்காமல் போனதுக்கு, இந்தப்பழிகாரிதான் காரணமா?

“என்னக்கா. பேசாமல் இருக்கீங்க..? ஐ அம் ஸாரி. அந்த பெரிய மனிதரை தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நான்தான் அசடு.”

“அவரு தரோ ஜென்டில்மேன். நீ அவரை மயக்காமல் இருந்தால் சரிதான். போவோம் டயம் ஆயிட்டு. நான் டிஸ்பிளினேரியன்.”

சுமதி, துடித்துப் போனாள். அவள் மயக்குறாளாம். நெருப்புக் கட்டிகளை நெஞ்சில் சுமந்துகொண்டவள்போல், அலுவலகத்திற்குள் வந்தாள். எந்த வேலையும். அவளுக்கு ஒடவில்லை. வசந்திக்கே, அவளை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று தோன்றியது. இதற்கு பிராயச்சித்தமாக, மாலையில் சுமதியிடம் அவள் பிரச்சனையை முழுவதுமாகக் கேட்டு, தக்க ஆலோசனைகள் கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள்ளயே ஒத்திகைப் பேச்சாய் பேசிக்கொண்டாள்.

“அசடே… நிலைமை எனக்குப் புரியுது. நாளைக்கு மானேஜரிடம் போய், ‘ஸார். நேற்று. வசந்தியிடம். உங்களைப் பத்தி தப்பாச்சொன்னேன். அவள், உங்கள் ஏகபத்தினி விரதத்தை, கார் உதாரணம் மூலம் சொன்னாள். ஐ ஆம் ஸாரி. என்னை உங்க தங்கை மாதிரி நினைத்து, விகற்ப இல்லாமல் தொட்டிட்டிங்க. இதை, நான் பெரிசா நினைத்திட்டேன். உங்களை, என் அண்ணன் மாதிரி நினைச்சு மன்னிப்பு கேட்கிறேன்’னு சொல்லு. ஒருவேளை மானேஜருக்கு, உன்மேல், தப்பான எண்ணம் இருந்தாலும், மாத்திக்கிடுவாரு…”

வசந்தி, தனது மனோ ஒத்திகையை முடித்துவிட்டு, கமதியை கனிவோடு பார்த்தபோது, “சுமதி… நேற்று நீ போட்டிருந்த டிராப்டை பார்த்துட்டு, மானேஜர் ரொம்ப பாராட்டுறாரு. வசந்திக்கும் சொல்லிக் கொடு…” என்றார் தலைமை குமாஸ்தா குத்தலாக.

மாலையில், வசந்தி, சுமதியிடம் பேசவில்லை. இவளும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

வீட்டிற்கு வந்தகமதிக்கு, அம்மாநினைவுபடுத்தியபிறகுதான், அப்பாவுக்கு மருந்து வாங்கி வரவில்லை என்று தோன்றியது. மருந்துக் கடைக்குப் போகப்போன அவளை, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். ஆபீசில் ஒரு ‘பார்டியில் சாப்பிட்டுவிட்டதாக, சொல்லிவிட்டு, அன்றிரவு அவள் சாப்பிடவில்லை. வசந்தியின் வார்த்தைகள், நெஞ்சிலிருந்து கண்ணுக்கு வந்து, நீராக வடிந்தன. மானேஜர், தற்செயலாக தொட்டிருக்கலாம். நாற்பது வயதான அவர், அவளை மகளாகவோ தங்கையாகவோதான் நினைத்திருப்பார்.கமதி,மானேஜரை தப்பாக எடை போட்டுவிட்டு குற்ற உணர்வுடன் துங்க முயற்சி செய்தாள். ஆனாலும்,கமதி கொடுத்த தீப்புண்வார்த்தைகள், அவள் முயற்சியை முறியடித்துக் கொண்டிருந்தன.

துாங்கும்போது கடைசியாக நிற்கும் எண்ணம், விழிக்கும்போது முதல் எண்ணமாக வருமாம். சுமதிக்கும், விழிப்பு தட்டியதும் வசந்தியின், ‘நீ மயக்காமல் இருந்தால் சரி. என்ற அக்கினித் திராவக வார்த்தைகள் உடலை எரித்தன. அவள், தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொண்டாள். ஆபீஸில் ஸ்டெனோகிராபர் துரை, ஒரு தடவை அவளிடம், ‘சுமதி. நீங்க ரொம்ப கவர்ச்சியாக இருக்கீங்க, உங்க… நெற்றியில் சுருண்டு கிடக்கும் முடியை பார்த்தால்..” என்று கன்னாபின்னா என்று பேசியதும், அன்றிலிருந்து, அவனை, தான் ஏறிட்டுப் பார்க்காமல் இருப்பதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவசர அவசரமாகக் குளித்துவிட்டு, முகத்துக்கு பவுடர் போடப் போன கமதி, ஆசையை அடக்கிக் கொண்டாள். நெற்றியில் மோதிரம் போல் படிந்த தலைமுடியை எடுத்து, உச்சியில் ஒரு முடிக்கற்றைக்குள், அது மீளாதவாரு சொருகிக் கொண்டாள். செக்கச் சிவந்த மேனி முழுவதையும், அம்மாவின் பழைய காலத்து புடவையினால் மறைத்துக் கொண்டாள். அலுவலகம் போக வாசலைத் தாண்டிய அவளை,”என்னடி இந்தக் கோலத்துல போறே.” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் எடுபடவில்லை. வசந்தி சொன்னது வக்கிரமாக இருக்கலாம். அதிலும் ஒரு பாடம் இருக்கே..

மானேஜர், அவளுக்குக் காத்திருப்பதுபோல், அவள் வந்தவுடனே கூப்பிட்டார். அவரை தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமே என்ற கூச்சத்தோடு அவள் போனாள். அதை, அவர் நாண்மாக எடுத்துக் கொண்டார்.

“சுமதி! இப்படிவா. ஒன் டிராப்ட்ல இந்த வாக்கியம் எனக்கு விளங்கல. எப்படின்னு சொல்றீயா?” சுமதி, அந்த அண்ணனிடம் நெருங்கினாள். கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு, லேசாகக் குனிந்து, அவர் கோடிட்ட வாக்கியத்தை படிக்கப் போனாள். திடீரென்று, கை வளையலை, அவரின் கை அங்குமிங்குமாக உருட்டியது. அந்தச் சாக்கில் அவள் திரண்ட சதையைப் பிடித்துக் கிள்ளியது. சுமதிக்கு வியர்த்துக் கொட்டியது. கைகை உதறிக்கொண்டே, வெளியே வந்தாள். பொங்கி வந்த கண்ணிரை துடைத்துக் கொண்டாள்.

லஞ்ச் டயம் வந்தது.

தலைமைக் குமாஸ்தா, தனியாக இருந்தார்.

“என்னம்மா. சுமதி. கேன்டின் போகலியா..?”

“பசிக்கல வார்.”

“இந்த வயசில. இந்தச் சமயத்தில பசிக்காமல் இருந்தால், அதுக்கு என்ன அர்த்தமுன்னா.”

“ஸார். நம்ம மானேஜரு எப்படி?”

தலைமைக் குமாஸ்தா,நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். இரண்டு கண்களையும் பாதி மூடிக் கொண்டு பேசினார்.

“என்னோட இருபது வருஷ சர்வீஸ்ல, இந்த மாதிரி உத்தம புருஷன பார்க்கலம்மா. சாட்சாத் ரீராமச்சந்திர மூர்த்தின்னா, ராமச்சந்திரமூர்த்திதான்.போன வருஷமே. நான் ரிட்டயர்டாகணும். ‘ஸார், பிள்ள குட்டிக்காரன். என்ன பண்ணுவேன்னு. கம்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.அவ்வளவுதான். மனுஷன். உடனே, என்ன நான் சொல்றது.புரியுதா.உடனே எம்டிக்கு டிரங்கால் போட்டாரு. ரெண்டு நாள்ல எனக்கு எக்ஸ்டென்ஷன் வந்துட்டு. அணையப்போன விளக்கில, எண்ணை ஊத்தின மகான் அவரு. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போது, அவர் காலுல மானசீகமா விழுறேன்.”

சுமதி, ஏதோ பேசப் போனாள். அதற்குள் கேஸியர் வந்தார். தலைமைக் குமாஸ்தாவின் வார்த்தைகள், தன் காதிலும் விழுந்தன என்பதை நிரூபிப்பதுபோல், “உங்களுக்கு அவர் மகான் மட்டுந்தான். ஆனால், எனக்கு அவரு கண்கண்ட தெய்வம். ஒரு நாளு அவசர செலவுக்கு, கேஷ் பாக்ஸிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய எடுத்துட்டேன். திடீர்னு, அவர் கேஷை ‘செக் பண்ண வந்தார். விஷயத்தைச் சொன்னேன். இனிமேல் அப்படிச் செய்யாதீங்க. செலவுக்கு வேணுமுன்னா என்கிட்ட வாங்கிக்கலாம் என்று சொன்னாரு. பழைய மானேஜருன்னா, வீட்டுக்கு அனுப்பியிருப்பான்.”

சுமதி, ஏதோ சொல்லப்போனாள்; ஒட்டுக்கேட்டு பழக்கப்பட்ட பெருமாள், வந்த வேகத்தில், “என் பொண்ணுக்கு வாழ்வு கொடுத்தவரே. இந்த கலியுகக்கர்ணன்தான். பிராவிடண்ட்பண்டை நம்பி. என் மகள் கல்யாணத்த நிச்சயிச்சிட்டேன். பணம் வரல. கடைசில இவர்கிட்ட சொன்னேன். சொந்தப் பணத்தை கொடுத்து. என்னோட மானத்தை காப்பாத்துனாரு..” என்றார்.

சுமதியால், தாளமுடியவில்லை. மானத்தைக் காப்பாத்தின அந்த மகாராஜனின் விசுவாச பிரஜைகளிடம், தன் சொல் ஏறாது என்பதை புரிந்து கொண்டவளாய், வெளியே வந்தாள். வெறி பிடித்தவள்போல், தன் வளையல்களை உடைத்தெறிந்தாள். கமதி, இரண்டு நாட்களுக்கு லீவ் போட்டாள். மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும், அலுவலகம் வரும்படியும், வேலை நிறைய இருப்பதாகவும், ஆபீஸ் நோட் வந்தது. சுமதி, போனாள். அப்பாவுக்கு மருந்து வாங்கியாக வேண்டுமே… ராமபிரானாக கருதப்படும் அவர் ஏடாகூடமாக நடந்தால் முகத்தில் அடித்தாற்போல் கேட்டுவிடுவது என்றும் தீர்மானித்தார்.

அலுவலகத்தில், இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அவள் போனதும், மற்றவர்களை மானேஜர் அறைக்குள் கூப்பிட்டார். ‘ஓ.கே. ஸார். இப்பவே எடுத்துட்டு வந்திடுறோம். என்று சொல்லிவிட்டு, அவர்கள் வேனில் புறப்பட்டார்கள்.

வேனின் சத்தத்திற்கு இணையாக சும்தியின் இதயம் அடித்துக் கொண்டது. மானேஜர், கூப்பிட்டால், போகப் போவதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டாள். மானேஜர், கூப்பிடவில்லை. நேராக அவளிடம் வந்தார். அவள் வலதுகையை எடுத்து, தன் தோளில் போட்டுக் கொண்டு, ‘சுமதி பிலி மீ… என்னால உன்னை மறக்க முடியல. ஐ வாண்ட் யூ. ஐ வாண்ட் யூ…’ என்றார். சுமதி என்ன நடக்கிறது என்று புரியாமல் சூன்யமாக நின்றாள். பிறகு, கீழே வீசி எறிவதற்காக அவர் கைகளை பிடித்து இழுத்தவளுக்கு, உதடுகள் வரை சூடான வார்த்தைகள் கொதித்து முட்டின. அந்தச் சமயத்தில் –

எதிரே சக ஊழியர்கள். பத்து நிமிடத்திற்கு முன்பு மேனேஜர் அனுப்பி வைத்த அதே ஊழியர்கள். ‘ஸார். கடுமையான டிராபிக் ஜாம். வேனுல போக முடியல’ என்று சொல்ல வந்தவர்கள் விக்கித்து நின்றார்கள்.

சுமதி, அவர்களிடம் முறையிடப் போனாள். ஆனால், அந்த சகாக்கள் அவளைப் பார்த்தப் பார்வை கொடுரமாக இருந்தது. ஏழை சொல் அம்பலம் ஏறுமோ, இல்லையோ, ஒரு அபலைப் பெண்ணின் சொல் ஏறாது என்பது அந்தக் கொந்தளிப்பான சமயத்திலும், அவள் சிந்தனையைத் தட்டியது.

சுமதி, முகத்தை கைகளால் தாங்கிக்கொண்டே அழுதாள். உலகத்துபாவமூட்டைகள் அனைத்தும், அவள்தோளில் உட்கார்ந்து அழுத்தியது. அந்த அழுத்தம் தாங்க முடியாமல், அவள் தோள் குலுங்கியது.அதனால், லேசாக சாய்ந்த அவள்மேனியை புவியீர்ப்பு விதி கீழே இழுத்தது. தள்ளாடிக் கொண்டே வீட்டிற்குப் போனாள்.

மறுநாள், சுமதி வரவில்லை. அலுவலகத்தில், ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. மானேஜர், அறைக்குள் முடங்கிக் கிடந்தார். தலைமைக் குமாஸ்தா, நெடிய மெளனத்தை கலைத்தார். “கடைசியில், இந்த சுமதி. இவ்வளவு மோசமா, இருந்திருக்காளே. தங்கமான மனுஷன். அவரோட மனசை கெடுத்திட்டா… பாருங்களேன்.”

“ஆனால் அவரும் அப்படி…” என்றார், இதுவரை மானேஜரால் எந்தவித பலனும் அடையாத ஒரு குமாஸ்தா. தலைமைக் குமாஸ்தா பதிலடித்தார்.

“என்னய்யா. அவருமுன்னு இழுக்கியரு. அவ்வளவு பெரிய விஸ்வாமித்ரரையே அந்த மேனகை மயக்கிட்டான்னா, இவரும் மனுஷன்தானே. அடிமேல் அடி அடிச்சா, அம்மியும் நகரும்.”

“அவள் டிரஸ்சையும், பவுடரையும் பார்க்கும்போதே, எனக்குத் தெரியும். மானேஜரை மயக்கிடுவான்னு.” என்றான் கமதியிடம் தோல்வி கண்ட துரை.

“ஆற்றையும் நம்பலாம். குளத்தையும் நம்பலாம். ஆனால் பதினாறு முழம் கட்டிய பெண்களை நம்பினால்.” என்று விவேக சிந்தாமணி பாட்டைப் பாடினார் பெருமாள்.

இதைக்கேட்டு,வசந்தியின் பெண்மை சீறியது. முன்னதாகவே சுமதி, தன்னிடம் யோசனை கேட்டாள் என்று அவள் எடுத்துரைக்க ஆயத்தம் செய்தபோது,”இப்ப நம்ம வசந்தியுந்தான் இருக்காள். மூணு வருடமாய் வராள். மானேஜரு முகத்தை நிமிர்ந்து பார்த்திருப்பாளா? பெண்ணுன்னா இவள்தான் பெண்.” என்றார் தலைமைக்குமாஸ்தா.

வசந்தி, பெட்டிப் பாம்பாகி விட்டாள். ஒருவேளை சுமதி, ராஜினாமா செய்து அதனால் ஏற்படும் காவியிடத்தில், தன் தங்கையை இப்போதாவது சேர்த்துவிடலாம் என்ற ஒரு முன்னெச்சரிக்கை.

“மானேஜரு, இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்காரு. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டாரு? விஸ்வாமித்திரரே மயங்கலியா? நீங்கபோய் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வாங்க” என்று பெருமாள், தலைமைக் குமாஸ்தாவிடம் சொல்ல, அவர் எல்லோரின் ஏகமனதாக தீர்மானத்திற்கு அடிபணியும் ஜனநாயகவாதிபோல் எழுந்தார்.

மாலையில், மருந்துவாங்க பஜாருக்கு வந்த சுமதியை, ஆபீஸ் செளக்கிதார் பார்த்துவிட்டான். இளம் வயதுக்காரன், உள்ளதை உள்ளபடியே சொல்பவன். ஆகையால், அவனை ‘லூஸ்’ என்பார்கள். சுமதியிடம், அலுவலகப் பேச்சையும், ஏகமனதான தீர்மானத்தையும், கூட்டாமல் குறைக்காமல் சொன்னான்.

பம்பாயில் மானேஜிங் டைரக்டர் படேசிங், தனக்கு வந்த கடிதத்தின் தலையும் புரியாமல், வாலும் புரியாமல், மீண்டும் அதைப் படித்தார். “அன்புள்ள அய்யா, வணக்கம். தங்கள் அலுவலகத்தின் சென்னைக் கிளையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் சுமதி எழுதுவது. இந்தக் கடிதத்தையே என் ராஜினாமாவாக ஏற்றுக் கொள்ளவும். ராஜினாமாவிற்கான காரணத்தை, நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் சொன்னாலும், நீங்கள் நம்பப் போவதில்லை. சில்லறை விஷயங்களில், பெருந்தன்மையாக இருக்கும் ஒருவர், மகத்தான பாவத்தை செய்தாலும், அதை நம்ப, இந்த சமுதாயம் மறுக்கிறது. பழியை செளகரியமாக இன்னொருவர் மேல் போட்டு விடுகிறது. குறிப்பிட்ட ஒருவர், இன்னொருவரை அவருக்கும் தனக்கும் உள்ள உறவை வைத்தும், அவரால் தனக்கு கிடைக்கும் நன்மையை வைத்துமே எடை போடுகிறார். ஒரு மனிதனின் செயலைப் பற்றிய தீர்ப்பு, சுயநலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் பப்ளிக் ரிலேஷன் சரியாக இருந்தால், அவர்மாக மருவற்றவராகிறார். சமுதாய நியதிகளையும், குற்றங்களையும், கயபலனை பின்னணியாகக் கொண்ட உறவின்மூலம், நாம், தீர்மானிப்பது வரைக்கும், இந்தச் சமுதாயம் உருப்படப் போவதில்லை. “ஒருவன் தொன்னூற்றொன்பது தடவை குற்றம் செய்தாலும், நூறாவது தடவை குற்றம் செய்வான் என்ற அவசியமில்லை” என்றார் காந்திஜி, இதேமாதிரி, ஒருவன் தொன்னுாற்றொன்பது பேருக்கு நன்மை செய்து விட்டதால், அவன் நூறாவது நபருக்கு தீமை செய்ய மாட்டான் என்று நம்புவதும் அபத்தம்; என்ன செய்வது? அபத்தங்களே, சமுதாய விதிகளாகின்றன. “ஒருவர், எல்லோருக்கும் பரோபகாரியாக இருந்து, யார்மீதும் தீய எண்ணம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவருக்கு ஒரே ஒரு நபர்மீது தீய எண்ணம் வரும்போது, அவர், அதன் ஏகாதிபத்யவாதியாகி விடுகிறார். எல்லோரையும் தீய நோக்கில் அணுகுபவர்கள், தங்கள் வெளிப்பாடுகளை பகிர்ந்தளிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர்மீது மட்டும் தீய நோக்குகொண்ட ஒருவர், அதை ஒருவரிடமே மொத்தமாக கொடுக்கிறார்; இந்த சாதாரண மனோவிதியை புரியாத மனநோயாளிகள் மத்தியில் நான் பணிபுரிய விரும்பவில்லை.”

தங்கள் உண்மையுள்ள,
சுமதி.

– தாமரை – மே, 1977 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *