அங்கே பொய்கள் இலவசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,491 
 

“இந்த நிலமையில் நீ போய்த்தான் ஆகணுமாய்யா..?”

பார்வதி பரிவுடன் சந்திரனிடம் கேட்டாள். அவன் உடல் தளர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தான். அவனுடைய கண்களெல்லாம் ஆழத்தில் இருந்தன. உடல் அனலாய்க் கொதித்தது. நெற்றியில் அமிர்தாஞ்சன் மணத்தது.

அவன் தட்டுத தடுமாரி எழு, பிடித்து அமர வைத்தாள். அவிழ்ந்த முடியை உதறிக் கொண்டை போட்டுக கொண்டு, “இந்தா மாத்திரை!” என்று நீட்டினாள்.

அவன் விழுங்கினதும், “பேசாம படுத்து ரெஸ்ட் எடுய்யா!”

“வாணாண்டி, நான் எப்படியாவது போயேயாக வேண்டும். இண்ணைக்கு பார்வையிட மந்திரி வரார். அவர் வர்றதுக்கு முன்னாடி பில்டிங்குல்ல பெயிண்டிங்கும் வரவேற்பு வாசகங்களும் எழுதி முடிச்சாகணும். என் சட்டையை எடு!”

“உடம்புல இத்தனை அவஸ்தையை வச்சுகிட்டு நீ எப்படிய்யா..?”

“படுத்துக் கிடந்தாதான் அவஸ்தை. வெளியே காத்தாட கிளம்பினா எல்லாம் சரியாப் போகும்” என்று அவள் நீட்டின சட்டையை மாட்டிக் கொண்டான். தலை சீவின போது கண்களில் சிவப்பு தெரிந்தது, எரிந்தது, அப்படியே மல்லாக்க விழுந்து கிடந்தால் தேவலாம் போலிருந்தது.

என்ன செய்ய முடியும்..? வேறு வழியே இல்லை. போய்த்தான் தீர வேண்டும். அவன் ஒரு பெயிண்டர்,. கட்டிடங்களுக்கு பெயிண்டர் கூட ஆட்களை வைத்து அடித்துக் கொள்ளலாம். ஆனால் வரவேற்பு வாசாகங்களுக்கு இவன் தான் வேண்டும.

கலை நயத்துடனும், கவர்ச்சியுடனும் எழுத வேறு நபர் இல்லை, இண்ணைக்கு மதியத்துக்குள்ளே முடித்து கொடுத்திடணும் என்று மேஸ்திரிகறாராய்ச் சொல்லியிருந்தார்.

“நான் வேணுமானா போய் உடம்புக்கு முடியலேன்னு சொல்லிரட்டா…?

“வேண்டாம். தப்பா நினைப்பாங்க. அது சரியில்லை. அதை முடிச்சுக்க கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கிருக்கு. ”

“பொறுப்பையும் கடமையையும் பார்த்தா முடியுமா… சுவரை வச்சுதான் சித்திரம்…?”

“பரவாயில்லை. இண்ணைக்கு மட்டும்தானே… அதையும் கூட நாலு மணி நேரத்துலு முடடிச்சுரலாம்!”

சந்திரன் பெயருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டு கிளம்பினான். “என்னய்யா இது வாங்கிட்டு வந்த இட்லி அப்படியே இருக்கு – ரெண்டு சாப்பிட்டு எப்படிய்யா வேலை செய்வே..?! அவன் டிபன் பாக்ஸை எடுத்து. “இரு பார்சல் பண்ணித்தரேன்” என்றாள்.

“வேணாண்டி வாயெல்ல்ம் ஓரே கசப்பாயிருக்கு. சாப்பிடப் பிடிக்கலை” என்று செருப்பு மாட்டினான். சைக்கிளைத் தூக்கி வெளியே நிறுத்தினான்.

“மேஸ்திரி திட்டுவார்ன்னு பார்க்காம லீவ் கேட்டுப்பார்ய்யா…”

“சரி”

“லீவ் தரலேன்னாலும், முடியலேன்னா வந்திருய்யா..”

அவன் பதில் சொல்லாமல் சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தான். நான்கு மதியிலேயே மூச்சு வாங்கிற்று. கால்கள் குடைந்தன. உடல் அசந்து கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

மந்திரிக்கு வேண்டி ரோடு போட்டுக கொண்டிருந்தார்கள். மந்திரி வருவதற்க ஐந்து நிமிடம் வரை ரோடு தீவிரமாய் போடப்படும். அவர் வந்து போய்விட்டால் எல்லமே கிடப்பில்.

அலங்காரங்கள் கலர் கலராய் வரவேற்றன. கொடிகளும், Tகினி பேப்பர்களும் காற்றில் ஆடினதைப் பார்ப்பதற்கு அவனுக்கு பிரமிப்பாயிருந்தது. எத்தனை சித்து வேலைகள்!

மேஸ்திரி அவனைக் கேட்டிலேயே மறித்து, “ஏம்ப்பா இத்தனை லேட்டு..?” என்று விரட்டினார். அந்த காலையிலேயே அவருடைய சட்டையும் வியர்த்திருந்தது.

“ஐயா.. உடம்பு சரியில்லை” என்று சைக்கிளை விட்டு இறங்கினான்.

“உடம்புக்கு என்ன… (கேடு)?”

“ஜுரம்”

“சரி சரி, வளர்த்தாம சைக்கிளை நிறுத்திட்டு வா. அங்கே பெயிண்டிங்கெல்லாம் ஆசசு. உன் வேலை தான் பாக்கி!”

“ஐயா! எனக்கு உடம்பு முடியலேய்யா. மேலே ஏறி எழுத முடியும்னு தோணலோ!”

“என்னப்பா காலை வாரரே..? முடியாதுன்னு கடைசி நேரத்துல சொன்னா எப்படி இனிமே போய் யாரைக் கொண்டு வரமுடியும்..? உனக்கு ஜுரம் வரதுக்கு நல்ல நேரம் பார்த்தது பார்! எல்லாம் என் தலையெழுத்து! மசமசன்னு நிக்காம போய் ஆக வேண்டியதைப் பாரு!”

“ஐயா! இப்போ என்னால முடியும்னு தோணலே. தலையைச் சுத்துது. நாளைக்கு எழுதறேனே!”

“நாளைக்கா..? நாளைக்கு எதுக்கு? மந்திரி போன பிற்பாடு எதுக்கு மயிரு.” என்று அவர் தான் கற்ற கெட்ட வார்த்தைகளை எடுத்து விட்டார். “போ போய் வேலையை முடி!” சொல்லிவிட்டு மேஸ்திரி காணாமல் போனார்.

சந்திரன் பில்டிங்கிடம் போனான். அங்கே சாரம் கட்டியிருந்தார்கள். பெயிண்டிங் வேலையெல்லாம் அநேகமாய் முடீந்திருந்தது. இவன் மந்திரிக்கு வாழ்த்துய்யா எழுத வேண்டியதுதான் பாக்கி!.

பெயிண்ட், ஸ்கேல், பென்சில், பிரஷுடன் சாரத்தின் மேல் ஏறினான். அவனுக்கு களைப்பாயிருந்தது. வெயில் கண்களைக் கூசியது. சட்டைப் பையிலிருந்து வாழ்த்துப்பாவை எடுத்துப் படித்துப் பார்த்தான்.

சாரத்தில் நிற்கவே சிரமப்பட்டான். கால்கள் பலமிழந்து நடுங்கின ஸ்கேல் வைத்துக் கோடு போடு எழுத ஆரம்பித்தான்.

“ஆச்சா” என்று மேஸ்திரி அரைமணி நேரத்திலேயே ஓடிவந்தார்.

“இன்னும் இல்லைங்க”

“எவ்ளோ நேரம் பிடிக்கும்..?

“ஒருமணி நேரம்…”

“என் பிராணனை வாங்கம சீக்கிரம் முடிப்பா. பாஸ் பார்வையிடறதுக்கு வரப்போறார். எல்லாம் என் தலையெழுத்து, கஸ்மாலங்கள்!”

மேஸ்திரி அவன் பேரில் ரொம்பவும் சலித்துக கொண்டு வேறு இடத்திற்கு ஓடினார். சந்திரன் தம்கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்தான். அவனுக்குக் கண்கள் சோர்ந்து போய் வந்தன.

ஒரு வழியாய்ச் சமாளித்துக கொண்டு எழுதி முடிந்த போது இரண்டு கார்கள் சர்சர்ரென வந்து நின்றன.

ஒரு காரிலிருந்து பாஸ் இறங்கி அங்கிருந்தே பில்டிங்கின் வியூவைப் பார்வையிட்டார். அதிகாரிகளை அழைத்து என்னவோ சொல்லிவிட்டு, அந்த பில்டிங்கை நோக்கி வந்தார்.

மேஸ்திரி ஓடிவந்து, “ஏய் சந்திரா.. முடீச்சுட்டாயா… ! சீக்கிரம் இறங்கு! சாரத்தை அவிழ்த்து மாற்றணும்!”

அவன் அவசரமாய் பெயிண்ட்டை எடுத்துக் கொண்டு இறங்க முயல, பலகீனத்தில் ஒரு நொடி கால் தவறிவிட, பெயிண்ட் டப்பா ஆடிக்கொண்டு கீழே கவிழ்ந்தது.”

அந்த நேரம் பார்த்து எம்.டி அங்கே வர, பெயிண்ட் அவரது சட்டையில் ஊற்றி… “வாட்டீஸ் திஸ்?” என்று கத்தினார். அவருடைய கோபம் மூக்கைத் தொட்டது.

“கன்ட்ரி புரூட்ஸ்! இடியட்ஸ்!” என்று அவர் தன் செகரட்டரியைத் திட்டி விட்டுச் சட்டென காருக்குள் நுழைந்து புழுதி கிளம்பினார்.

செகரட்டரி மேஸ்திரியிடம் “என்னய்யா இது…? இது தான் பெயிண்ட் அடிக்கிற லட்சணமா..?”

அவர் கையை பிசைய, “அவனை அழைச்சுகிட்டு ரூமுக்கு வா!”

செகரட்டரி போனதும் மேஸ்திரி ஆவேசத்துடன் சந்திரனின் பக்கம் திரும்பினார். அவன் தட்டுத்தடுமாறி இறங்கி வர, பளாரென அறைந்தார்.

அவனுக்குக் கன்னம் கடுகடுத்தது. செவிகள் குப்பென அடைத்துக் கொண்டன. சந்திரன் அப்படியே செயலிழந்து நின்றான்.

“ஏய் எருமை மாடு! உனக்கென்ன கண்ணா அவிஞ்சு போச்சு..? பார்த்து இறங்கறதுக்கு என்ன கேடு..?”

அவன் “ஐயா..” என்க, “மூச்… ! ரூமுக்கு வா, உன்னை பேசிக்கிறேன்!”

அறைக்குள் முதலாளி இன்னமும் கோபத்திலிருந்தார்.

அவருடைய சட்டை மாறியிருந்தது. கோட் போட்டுக கொண்டு கௌரவத்துடன் அமர்ந்திருந்தார்.

அவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. “ஏன்ய்ய.. உனக்கெல்லாம் பொறுப்பு இருக்கா.. மதியம் மந்திரி வந்தாக் கூட இப்படிதான் அவர் மேல பெயிண்டை ஊத்துவாயா…?”

சந்திரன் வாயைத் திறக்க, அவனைத் தடுத்து, “சொல்லுய்யா? என் மேல பெயிண்டை ஊத்தற அளவுக்கு நான் இங்கே யாருக்கு என்ன கெடுதல் பண்ணினேன். டெல்மி!”

“ஐயா! என்னை மன்னிச்சிருங்கய்யா, நான் வேணுமின்னே பண்ணலை!”

“அப்புறம்…?

“எனக்கு உடம்பு சரியில்லைய்யா..”

“உடம்பு சரியில்லென்னா என்னத்துக்கு வேலைக்கு வரே.. பேசாம வீட்டிலேயே முடக்கிக்க வேண்டியது தானே!” செகரட்டரி முந்திக் கொண்டு பதிலளித்தான்.

“நான் அப்பவே சொன்னேன் சார்! வேணாம். வேறு ஆள் பார்த்துகிறேன். நீ போய் ரெஸ்ட் எடுன்னு சொன்னால் கேட்டால்தானே..? பிடிவாதமா மேலே ஏறிப் போனான்.”

மேஸ்திரி கூசாமல் பொய் சொன்னார். சொல்லிட்டு சந்திரனைப் பார்க்க திராணியில்லாமல் தலையைத் திருப்பிக் கொண்டார்.

“இந்த மாதிரி பொறுப்பில்லாத பசங்களை வெச்சுகிட்டு என்ன பண்றது. பேசாம சீட்டுக் கிழிச்சு அனுப்பிடு!” முதலாளி சும்மா இருக்க, செகரட்டரியே கட்டளையிட்டான்.

சந்திரனுக்குச் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. “பொறுப்பையும் கடமையையும் பார்த்தா முடியுமா.. சுவரை வச்சுதானே சித்திரம்…?” காலையில் பெண்டாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வர. பதில் பேசாமல் வெளியேறினான்.

வெளியே கட்டிடத்தில் அவன் சற்றுமுன் எழுதின, “ஏழையின் பங்காளனே, உழைப்பாளியின் உறுதுணையே வருக!” என்று வாசகங்கள் அவனைப் பார்த்து சிரித்தன.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *