முழுமையான முயற்சி தோற்பதில்லை

 

”எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று நொந்து சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“ஏன், என்னாச்சு”

“என்னால் எந்த காரியத்தையும் முடிக்க இயலவில்லை ஏதாவது தடங்கள் வருகிறது. அதன்பின் என்னால் தொடர இயலவில்லை” என்று சொன்னான் வந்தவன். அதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

“சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பெரு நாட்டில் சியுலா க்ராண்டே என்று ஒரு மலை இருக்கிறது. 21000 அடி உயரம். அந்த மலை மேல் ஏற வேண்டும் என்ற வெறி இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்களுக்கு இருந்தது. ஒரு நாள் அந்த மலையில் ஏறத் துவங்கினார்கள். கரடுமுரடான மலை. கடும் குளிர்.பனி. எதையும் பொருட்படுத்தாமல் இருவரும் ஏறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வழுக்குப் பாதையில் சிம்சன் என்பவன் விழுந்துவிட்டான். விழுந்ததில் அவன் காலில் பயங்கர அடி. அவனால் நடக்க இயலவில்லை. அவனை என்ன செய்வதென்று அடுத்தவன் சைமனுக்குப் புரியவில்லை. நண்பனாயிற்றே, அதனால் அவனை அப்படியே விட்டுவிடாமல் கயிற்றில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டே மலை ஏறினான். அதிக தூரம் ஏற முடியவில்லை. ஒரு விளிம்பில் கை வழுக்க சிம்சன் பாதாளத்தில் விழுந்துவிட்டான். மேலே நின்றிருந்த சைமன் கயிறு மூலம் இழுத்துப் பார்த்தான். எந்த அசைவும் தெரியவில்லை. குரல் கொடுத்தான், அப்போதும் பதிலில்லை. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிம்சன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து, அங்கிருந்து அவன் மட்டும் மலை ஏறத் துவங்கினான். இதில் கொடுமையான சங்கதி என்னவென்றால் சிம்சன் விழும்போது அவர்கள் கொண்டு சென்றிருந்த உணவுப் பொருடகலும் விழுந்துவிட்டன.

இந்த சூழலில் பசி பட்டினியுடன் மேலே ஏறத் துவங்கினான் சைமன். அவன் மேலே ஏறிச் செல்ல மூன்று இரவுகள் ஆனது. அவன் மேலே ஏறியது ஒரு ஆச்சர்யம் என்றால். காலில் அடிபட்டு கீழே விழுந்த, இறந்துவிட்டதாக கருதப்பட்ட சிம்சனும் தங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

இந்த இருவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம். ‘நீங்கள் வந்து சேருவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?’என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ’இவ்வளவு வந்துவிட்டோம், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணிதான் பார்ப்போமே என்று முயற்சித்தோம்’ என்று ஒரு சேர சொன்னார்கள்.

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தான் எங்கே தவறு செய்கிறோம் என்பது புரிந்த்து.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: முழுமையான முயற்சி தோற்பதில்லை.

- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com) 

தொடர்புடைய சிறுகதைகள்
”குருவே எனக்கு நிறைய கஷ்டங்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “கஷ்டங்கள் தீர நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார் குரு. “என்ன செய்வது? கடவுளிடம்தான் வேண்டிக் கொண்டே இருக்கிறேன், ஆனால் அவர்தான் எந்த உதவியும் செய்யவில்லை” என்றான் ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, என் பேச்சை யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்னாச்சு?” “என்னுடைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. இதற்கு நான் என்ன செய்வது?” என்று கேட்டான். அவனுடைய பிரச்சனையை புரிந்துக் கொண்ட குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன். “என்ன பிரச்னை, என்னாச்சு?’ என்று வினவினார் குரு. “என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில் வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்’ ...
மேலும் கதையை படிக்க...
“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு. “என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?” ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை?” “என்னை எல்லோரும் எளிதில் ஏமாற்றிவிடுகிறார்கள். நான் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் இளைஞன். அவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை ...
மேலும் கதையை படிக்க...
"பேசுவது தப்பா குருவே” என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் குரு. “நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?” “பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்” என்று சொன்ன ...
மேலும் கதையை படிக்க...
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு. ”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார். “என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் ...
மேலும் கதையை படிக்க...
”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்ரு கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” என்று படபடபாய் சொன்ன இளைஞனின் பிரச்சனை ...
மேலும் கதையை படிக்க...
கடவுளின் உதவிகள்…
புத்திசாலித்தனமான கருத்துக்கள்…
தண்டித்தலைவிட தட்டிக் கொடு…
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…
பேசக் கூடாத இடம்
இலக்குதான் முக்கியம்…
மனம் தளராத முயற்சி…
அவசரப்பட்டால் காரியம் ஆகாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)