மாற்றம் – ஒரு பக்க கதை
மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது.
திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று.
மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள்.
முகம் சுழித்தனர் ஊரார்.
கலெக்டருக்கு மனு போட்டார்கள்.
அரசியல் செல்வாக்கு கலெக்டரின் கைகளைக் கட்டிப் போட்டது.
மதுக் கடையை அகற்ற முடியாது என்பதை உணர்ந்தார் கலெக்டர்.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றினார்.
ஏதோ அவரால் ஆனது.
- மார்ச் 01 – 15 2022 கதிர்ஸ்
தொடர்புடைய சிறுகதைகள்
“டாக்டர் பசுபதி. பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது.
“ரொம்ப கைராசி டாக்டராம்..”
“நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்…”
“அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்.”
இல்லம் முழுதும் இதே ...
மேலும் கதையை படிக்க...அரவிந்தனும், ஆறுமுகமும் இரட்டையர்கள். சில மணித்துளிகள் முன்னால் பிறந்த அரவிந்தன் மூத்தவர். ஆறுமுகம் இளையவர்.
பொழுது விடிந்தால் அவர்களுக்கு அறுபது அகவை பூர்த்தியாகிறது.
வறுமையில வாடிய மூத்தவர் அரவித்தன் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
தம்பி ஆறுமுகத்தின் தடபுடலான மணிவிழா ஏற்பாடுகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...சிவன் கோவில் ஸ்பீக்கரில் 'திருநீற்றுப்பதிக' சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது.
"திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்" என்றார் ஆன்மீகப் பேச்சாளர்.
"அப்ப... ஐந்து வருஷம் ...
மேலும் கதையை படிக்க...‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி.
ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் ...
மேலும் கதையை படிக்க...அந்தத் தொழிலதிபர் கார் நிறுத்தி, பின் கதவைத் திறக்க, அய்யப்பன் துணி அடைக்கப்பட்ட இரண்டு ஷாப்பர் பைகளை எடுத்து அயர்ன் வண்டி மேல் வைத்தான்.
முதல் போணி அய்யப்பனைத் தேடி வந்துவிட்டது.
காதல் வலையில் விழுந்துவிட்ட அய்யப்பனுக்கு ‘காதலியை எப்படி இம்ப்ரஸ் செய்யலாம்?’ என்பதொன்றே ...
மேலும் கதையை படிக்க...பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர்.
கூண்டோடு வந்தது சிங்கம். கூண்டைத் திறந்தனர் பணியாளர்கள். கர்ஜித்துக் கொண்டே பாய்ந்தது சிங்கம். பார்வையாளர் மொத்தமும் திகிலில் இருந்தார்கள்.
ஹ ஹீ..ஹ..கீ...ய்...என்று வாயால் வித்தியாசமாகக் கத்தி கையில் ...
மேலும் கதையை படிக்க...“சாயாவனம்...சாயாவனம்..., உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு...”
ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள்.
வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை ...
மேலும் கதையை படிக்க..."ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே...?" கேட்டாள் தோழி உரிமையுடன்.
வைஷ்ணவியின் கண்கள் கலங்கின.
"சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?".
"என் புருஷன் விக்னேஷ் கோபிச்சிக்கிட்டு எங்கேயோ போயிட்டாருடீ...?"- கண்ணீர் பெருகியது.
"கவலையை விடு..!" என்ற தோழி, அரும்பாடு பட்டு, துப்பறிந்து நேரில் சந்தித்து விக்னேஷைச் சமாதானப் படுத்தி ...
மேலும் கதையை படிக்க...(நந்து சுந்து நடத்தி விட்டலாச்சாரியா கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.)
வழக்கம்போல வீட்டுக்கு வெளியே புளிய மரத்தடியில் அமர்ந்து மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார் அப்பாசாமி.
"ஷ்ஹ்ஹ்க்க்யூவ்வ்வ்...!!!" விகாரமான அப்பாசாமியின் கத்தலால் ஓடோடி வந்தாள் மனைவி .
பதறிய அம்மாமணி கணவர் நெற்றியில் புறங்கையை ...
மேலும் கதையை படிக்க...'பாப்கான் வாலா'
மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா.
இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா இவன்.
அப்பாவின் அகால மரணத்துக்குப் பின் ‘பி.காம்’ மோடு படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் தன் தாய் மாமன் டிக்கெட் கிழிக்கும் சினிமா தியேட்டரில் ‘பாப்கார்ன் ...
மேலும் கதையை படிக்க...