புலம்பல்

 

சந்திரனுக்குப் பயணம் வைத்த பூலோக மனிதனைக் கண்ட அண்ட கோளங்கள், ஒரு கணம் மண்டைகள் நொறுங்க அந்தகாரித்து நடு நடுங்கின.

இவனுக்குத்தான் பூலோகத்தில் எத்தனையோ சோலிகளிருக்கின்றனவே. எல்லாவற்றையும் விட்டு விட்டு, இந்த மூளை கெட்ட வேலையில் இவன் ஏன் இறங்கினான்?’ என்று சலிப் போடு கேட்டது சூரியகாந்தி.

இந்த மனிதனால் நாங்கள் எவ்வளவு பக்தியோடு பூஜிக்கப் பட்டோம். அந்த ‘அந்தஸ்தை’க் கூட இவன் கெடுத்து விட்டானே’ பாவி இதற்கெல்லாம் காரணம் அந்த டார்வீன் தான். அவன் தலையிலே இடி விழ’ என்று சொல்லி ஒரு பாட்டம் அழுதது அம்புலிமாமா.

‘நான் எவ்வளவு சுதந்திரத்தோடு ஏகாந்தமாய்த் திரிந்தேன் தெரியுமா? அதிலே மண்ணைப் போட்டு இந்த மனிதன் என்னைச் சின்னாபின்னமாக்கி விட்டானே’ என்று சற்றுக் ‘கடுகடு’த்தது வாயு மச்சான்.

‘அண்ட கோளங்களுக்குத் திசையையும் ஒளியையும் கொடுத்து வருகின்ற எங்களுக்கே இவன் வழி காட்டத் தொடங்கி விட்டானே?’ என்று ‘நம்பிக்கையிழந்து’ கேட்டன தாரகை முனிகள்.

அயலானை நேசிக்கத் தெரி யாத மடையர்களே நான் மட்டும் ‘பூமாதேவி’ என்ற மனிதனின் ஆசார வாக்கிற்குள் அடைபட்டுச் சித்திரவதைப்படுகின்றேன். அப்படி நீங்களும் இனி அனுபவித்தால் என்னவாம்?’ என்று வியாகுலத்தோடு சற்று ‘ஆவேசமாக’வே கேட்டது பூமித்தாய்.

அப்படி நீ என்ன சித்திர வதைப்பட்டாய்? என்று ஏக காலத்தில் கேட்டன அண்ட கோளங்கள்.

உடனே பூமித்தாய் சொல்விற்று.

மனிதன் பேதமில்லாமல் சமத்துவமாய் வாழ்வான் என்று நம்பினேன். ஆனால், அவன் கால கதியில், ‘தன்னிச்சை’ கொண்டு தனி ஏசு ஆதிக்கம்’ செய்யக் கிளம்பி, நெஞ்சைப் பிளந்தது போல என்னை வெட்டிக் கூறு போட்டுவிட்டதால், ஒருவனை ஒருவன் அடித்துச் சாகத் தொடங்கிவிட்டான். இப்போ அவனுக்குப் புகலிடம் தேவை. அதற்காகவே அண்ட கோளத்தைப் பிடிக்கக் கிளம்பினான். வந்தவனுக்கு இடங்கொடுங்கள், ஆனால், கூறுபோட விடாதீர்கள்.

அண்ட கோளங்கள் இக் கூற்றினை எல்லாம் கேட்டு அசந்து போய் ஏக காலத்தில் பெருங் குரலெழுப்பிக் கேட்டன.

பூமித்தாயே இதெல்லாம் உண்மைதானா? இந்த மனிதன் அப்படிப்பட்டவனா? உனக்கு இது எப்படித் தெரியும்?

பூமித்தாய் அமைதியாகப் பதில் சொன்னாள்.

நான் இந்த மனிதனுடன் தான் அன்றாடம் செத்து வாழ்கிறேன்!?

அண்ட கோளங்கள் ஒன்றும் பேசாமல் ஒன்றையொன்று பார்த்து விழித்தன.

அப்போது அத்த அண்ட கோளங்களெல்லாம் அதிர்ந்து இடியுண்டது போல் ‘திடீ’ ரென்று டார்வீனின் குரல், ஓங்காரித்துக் கேட்டது.

சா பிணங்களே! ஏன் வீணாகப் புலம்புகின்றீர்கள்? மனிதன் இந்த அண்ட சராசரங்களனத்தையும் வெல்வான்.

அண்ட கோளங்கள் ‘மூச்சு’ விடவில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
(1987 வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எமது நாட்டு மக்களோடு நான் கொண்ட நிபந்தனை யற்ற உறவு என் படைப்புகளில் ஆத்மார்த்த சுருதியாக வெளிப்படுவதை என்போலவே எனது வாசகர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது வாசகர்களுக்கும் எனக்கும் ...
மேலும் கதையை படிக்க...
(பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினத்தை (29.8.1926 - 08.12.1995) முன்னிட்டு) நாட்டுப் பிரச்சினையளப்பற்றி வந்த பழைய பேப்பர்ச் செய்தியளிருந்தாத் தட்டிப் பாத்திட்டு எனக்கும் தா. நானும் இப்ப வாற செய்தியளைப் படிச்சுப் போட்டு உனக்குத்தாறன். ‘இந்த நாளையப் பிரச்சனைகளை வச்சு எழுதின ...
மேலும் கதையை படிக்க...
எனது தந்தையின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) அவரது ‘மேய்ப்பர்கள்’ சிறுகதையை அனுப்புகிறேன் - நன்றியுடன் நவஜோதி “ஏ புள்ள காவேரி,அந்தாளு அந்தால வந்து இம்புட்டு நேரமாக் காத்துக்கிட்டிருக்கு. நீயி என்னா செஞ்சிக்கிட்டிருக்கே? எந்திரிச்சுப் போ புள்ள” “என்னாத்தே சொல்றே? அவரு ...
மேலும் கதையை படிக்க...
மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக்கொண்டிருந்தது. காகங்கள் அதன் ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா, உங்க இருக்கிறியளோ?" குரல் கொடுத்துக் கொண்டு விறாந்தைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் சின்னத்துரை. "என்னடாப்பா?" என்று கேட்டவாறு வெளியே வந்தார். 'சக்கடத்தார்' குருசுமுத்தர். "அவே, உங்களைத் தான் கூட்டியரட்டாம்" "ஆற்ராப்பா?" "மரியானண்ணையும் பாக்கியமப்பாவும்" மதியூகமில்லாதவன் தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளும் போது, அதில் கணை தொடுப்பது எளிது என்பதை ...
மேலும் கதையை படிக்க...
கடல் அலைகள் குமுறுகின்றன!
செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது. கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல் உறுமிபோல் ஊளையிட்டுக் கேட்டது. மேகத்திரைகள் கொண்டல் பக்க வாட்டாகக் கவிந்து மேற்கு வானம் ஒரே கணவாய் மை நிறமடித்துத் தெரிகிறது. வானத்தில் இடி ...
மேலும் கதையை படிக்க...
அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது. மேசை ...
மேலும் கதையை படிக்க...
திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம். அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை. முகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான "சுரண்டல் வித்தை" என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக "அநித்தியம்" என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன." ...
மேலும் கதையை படிக்க...
நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் ...
மேலும் கதையை படிக்க...
மகாகனம் பொருந்திய…
சிதைவு
மேய்ப்பர்கள்
கடல் சிரித்தது
கொக்கும் தவம்
கடல் அலைகள் குமுறுகின்றன!
பிறழ்வு
எரிசரம்
தனி ஒருவனுக்கு…
எவளுக்கும் தாயாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)