பகிர்ந்து செய்தால் பளு குறையும்!

 

“எனக்கு ஆபீஸ்ல ரொம்ப பிரச்னை. எல்லா வேலையும் என் தலைலதான் விழுது. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“ஏன், மத்தவங்க யாரும் உங்க ஆபீஸ்ல இல்லையா?”

“இருக்காங்க குரு. ஆனா அவங்க யாரும் என்னளவு வேலை செய்ய மாட்டாங்க. நானும் அவங்க கூட ரொம்ப பழகிக்க மாட்டேன்!”

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. “”இந்தக் கதையைக் கேள்” என்று அவனுக்கு ஒரு கதையை சொல்லத்துவங்கினார் குரு.

“ஒருத்தன் கிட்ட பொதி சுமக்கிற கழுதைகள் ரெண்டு வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. ரெண்டுக்குமே ஒரே வேலைதான், சுமக்கிறது. அதில ஒண்ணு, அடுத்ததுகூட
எப்பவும் போட்டி போட்டுக்கிட்டே இருக்கும்.

வேணும்னே வேகமாக நடக்கும், நிறைய சுமைய வச்சாக் கூட கவலையில்லாம நிக்கும்.

அதுனால முதலாளிக்கு இந்த கழுதையத்தான் ரொம்ப பிடிக்கும். அடுத்த கழுதையைப்பிடிக்காது. அந்தக் கழுதைக்கு நிறைய அடி விழும். இதுல இந்தக் கழுதைக்கு ரொம்ப சந்தோஷம்.

அடி வாங்குற கழுதை ஒரு நாள் இந்தக் கழுதைகிட்ட, “இதோ பார் நீயும் நானும் ஒரே வேலைதான் செய்யறோம். ஆனா நீ மட்டும் தேவைக்கு அதிகமா வேலை செஞ்சு என்னை திட்டு வாங்க வைக்கிற. இது நல்லதில்ல’னு சொல்லிச்சு.

ஆனா இந்தக் கழுதை கேக்கல. இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் அடி வாங்குற கழுதையை துரத்தி விட்டுட்டான் முதலாளி.

“ஆகா இனி நாம மட்டும்தான் ராஜா’னு இந்தக் கழுதை சந்தோஷமாயிடுச்ச. ஆனா, எல்லா வேலையும் இந்தக் கழுதை மேல விழுந்துருச்சு. வேலை ஜாஸ்தியாக
ஜாஸ்தியாக அதனால வேகமா செய்ய முடியல.

அது மெதுவா செய்யறதைப் பாத்து முதலாளிக்கு கோபம். அதை அடிக்க ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல இந்தக் கழுதை லாயக்குப்படாதுனு அதை துரத்தி விட்டுட்டு
புதுக் கழுதையை வாங்கிட்டு வந்துட்டான்.

அப்பதான் இந்தக் கழுதைக்கு தான் செஞ்ச முட்டாள்தனம் புரிஞ்சுது.”

குரு இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் வந்தவனுக்கும் தன்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி: எதையும் பகிர்ந்து செய்தால் பளு குறையும்!

- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com) 

தொடர்புடைய சிறுகதைகள்
“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’ என்று கேட்டார். “என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன். வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே” என்றார் குரு. “என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே” என்று சொன்னவனுக்கு குரு ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “அப்படியா, என்ன பிரச்சனைகள் வருகின்றன?” “அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா ...
மேலும் கதையை படிக்க...
"பேசுவது தப்பா குருவே” என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் குரு. “நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?” “பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்” என்று சொன்ன ...
மேலும் கதையை படிக்க...
”எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று நொந்து சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்னாச்சு” “என்னால் எந்த காரியத்தையும் முடிக்க இயலவில்லை ஏதாவது தடங்கள் வருகிறது. அதன்பின் என்னால் தொடர இயலவில்லை” என்று சொன்னான் வந்தவன். அதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. ...
மேலும் கதையை படிக்க...
“குருவே, நான் எந்த முடிவெடுத்தாலும் தப்பாகவே போய் விடுகிறது. இப்படி தப்பாய் முடிவெடுப்பதால் நிறைய இழந்து விட்டேன். ஏன் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை?’ தன்னிடம் பதற்றமாய் சொன்னவனை அமைதியாகப் பார்த்தார் குரு. “ஏன் இப்படி பதற்றப்படுகிறாய். அமைதியாய் இந்தச் சம்பவத்தைக் கேள்’ என்று ...
மேலும் கதையை படிக்க...
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு. ”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. என்ன பிரச்சனை? எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குது. எதுவும் சம்பாதிக்க முடியல என்று வருத்ததோடு சொன்னவனின் பிரச்னை குருவுக்கு புரிந்தது.அவனுக்கு ஒரு சம்பவத்தை ...
மேலும் கதையை படிக்க...
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?” ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, நான் செய்யும் எதிலும் வெற்றியே கிடைப்பதில்லை. வெற்றி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பதட்டமாய் கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ அப்படியா?” என்றார் குரு. “ஆமாம். நானும் நிறைய தொழில் செய்துப் பார்த்துவிட்டேன்” என்று சொன்னதும் குருவுக்கு அவன் ...
மேலும் கதையை படிக்க...
திறமை அறிந்தவர்களிடம்…
அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி
மாசுக்களைப் பார்த்தால்…
பேசக் கூடாத இடம்
முழுமையான முயற்சி தோற்பதில்லை
ஆராய்ந்து முடிவெடு..!
இலக்குதான் முக்கியம்…
நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது…
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)