குருவிடம் வந்தான் ஒருவன். “”குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும் கெட்டிக்காரனாக்க விரும்புகிறேன். ஆனால்…”
“என்ன ஆனால்?… என்னாச்சு?”
“அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்றுக் கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் நடனம் படிக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர இயலவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே?”
அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் குரு.
ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய்ச் சென்று நல்ல கருத்துக்களை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை.
ஒருமுறை ஒரு மலை கிராமத்துக்குச் சென்றார். அங்கு ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான் அதிகம். அவர்களை மாலையில் ஒரு இடத்தில் கூடச் சொன்னார். அங்கு
அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.
அவர்களிடம் பேசுவதற்காக நிறைய விஷயங்களை யோசித்து வைத்திருந்தார். ஒரே பிரசங்கத்தில் அவர்களையெல்லாம் அறிவாளிகளாக மாற்றிவிட வேண்டும் என்பது அவர் திட்டம்.
ஆனால், மாலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற போது ஒரே ஒரு இளைஞன்தான் வந்திருந்தான்.
பிரசங்கிக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை.
அந்த இளைஞனிடம், “உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய முடியாது. அதனால் நீ போகலாம்” என்றார்.
அதற்கு அவன், “”ஐயா, நான் மாடுகளுக்குத் தீனி போடலாம்னு வருவேன். அப்போது சில நாள் எல்லா மாடும் அங்கே இருக்காது. ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். அதுக்காக எல்லோரும் இல்லைனு தீனி போடாம போகமாட்டேன்” என்றான்.
அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட பிரசங்கி உற்சாகமடைந்து, அவனுக்கு போதனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவனை போதனைகளால் நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது.
நல்ல போதனைகளைத் தந்துவிட்டோம், ஒரு ஆடு மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனைப் பார்த்து, “”எப்படியிருந்தது?” என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆடு மேய்ப்பவன் சொன்னான்.
“ஐயா, ஒரு விஷயம். ஒரு மாடு இருந்தாலும் தீனி போட்டுட்டுதான் போவேன்னு சொன்னேன். ஆனா கொண்டு வந்த தீனியையெல்லாம் அது ஒண்ணுக்கே போட்டு வாய்ல குத்தி திணிக்க மாட்டேன்!”
குரு இந்தக் கதையைச் சொன்னதும் பிரச்னையுடன் வந்தவனுக்குத் தன் தவறு புரிந்தது.
அப்போது குரு அவனிடம் சொன்ன WIN மொழி: திணித்தால் வராது திறமை.
- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
தொடர்புடைய சிறுகதைகள்
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?”
ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே, நான் எந்த முடிவெடுத்தாலும் தப்பாகவே போய் விடுகிறது. இப்படி தப்பாய் முடிவெடுப்பதால் நிறைய இழந்து விட்டேன். ஏன் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை?’
தன்னிடம் பதற்றமாய் சொன்னவனை அமைதியாகப் பார்த்தார் குரு.
“ஏன் இப்படி பதற்றப்படுகிறாய். அமைதியாய் இந்தச் சம்பவத்தைக் கேள்’ என்று ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, என் பாச மகள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். அவள் மீது அத்தனை அன்பாய் இருக்கிறேன் ஆனால் அவள் விலகிப் போகிறாள்” என்று வருத்ததோடு சொன்னான் ஒருவன்.
“அப்படியா, என்னாச்சு” என்று அமைதியாக வினவினார் குரு.
“என்னால் அவளைப் பிரி்ந்து சிறிது நேரம் ...
மேலும் கதையை படிக்க...
”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“சொல்லுப்பா, என்ன ஆச்சு?”
“என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன்.
அவன் ...
மேலும் கதையை படிக்க...
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு.
”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு ஒரு பிரச்சனை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“என்னப் பிரச்சனை?”
“என்னை எல்லோரும் ஏமாற்றிவிடுகிறார்கள். நானும் ஏமாந்துவிடுகிறேன்” என்று சொன்னவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
‘ஒரு பணக்காரன் தன்னுடைய பெரிய காரில் போய்க் கொண்டிருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு.
“என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
“என்ன சங்கதி’ என்றார்.
“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை’ என்றான் வந்தவன்.
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.
“ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை ...
மேலும் கதையை படிக்க...
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
குறைகளையே பெரிதுப்படுத்தினால்…
அவசரப்பட்டு யாரையும் நம்பக் கூடாது
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது