கல்லூரி கனவுகளுடன் கார்கி காலை ஏழு மணிக்கே ஹாஸ்டலில் தயாரானதை உடனிருக்கும் மாணவிகள் ஆச்சர்யமாக பார்த்தனர்!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்க்கிக்கு நன்றாக படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்ப நிலையை உயர்த்த வேண்டுமென்பது லட்சியமாக இருந்தது!
தாய்,தந்தை இரண்டுபேருமே வசதியில்லாததால் படிக்க முடியாதவர்கள்,தன் பெண்ணை படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்க்காக வேலைக்கு சென்று பெறும் சம்பளத்தை சிக்கனமாக செலவழித்து,சேமித்து,பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
பள்ளித் தேர்வில் முதலாவதாக தேர்ச்சி பெற்று மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்திலேயே முதலிடத்திலுள்ள தொழில்நுட்ப கல்லூரியில், கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்க சேர்ந்துள்ளாள்!
மிகவும் அழகான இளவரசி போன்ற தோற்றம் கொண்ட கார்க்கியைப்பார்த்து உடன் படிப்போரே பொறாமை கொள்ளச்செய்திருந்தது,அவளது செயல்கள். கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வதால் பேராசிரியர்களின் மனதில் சீக்கிரம் இடம்பெற்றது மற்ற மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவளை மற்ற எந்த நிகழ்வுகளிலும் முன்னிலைப்படுத்தாமல் பொறாமையால் தவிர்த்தனர்!
மூன்று மாதங்களில் பலர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் நிலையில், கார்க்கி மட்டும் வகுப்பறை கற்றல் முடிந்ததும் நூலகத்துக்கு சென்று படிக்கும் பழக்கத்தை வாடிக்கையாக்கியிருந்தாள்!
இவளைப்போலவே நளன் எனும் மாணவன் நூலகத்துக்கு வர நண்பர்களானார்கள். பாடங்களிலுள்ள சந்தேகங்களை பகிர்ந்து பலனடைந்தனர். மற்றவர்கள் இவர்களை காதலர்களாக சித்தரிக்கபோக,நளனுடன் பேசுவதையும் தவிர்த்தாள் கார்க்கி!
நளன் அடிக்கடி விடுமுறையெடுப்பதையும்,குடித்து விட்டு ரோட்டில் கிடப்பதையும் கண்டு அவனது நிலையறிய அவனை சந்தித்தாள். நளன் தன்னை காதலிப்பதாக கூறியது கார்கிக்கு பிடிக்கவில்லை!
“நான் உன்னை மற்ற பசங்களுக்கு மாற்றான லட்சிய மாணவனா தான் நினைச்சு பழகினேன். கல்லூரிக்கு வருவது பாடம் படிக்கத்தான். காதல் பண்ண இல்லை. ஆமா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு பொண்ணு,ஓர் ஆணோட பேசினாலே காதல்,கல்யாணம் என கற்பனையில் குடும்பம் நடத்திட வேண்டியது தானா…? நீங்க மட்டுமே விரும்பற பெண் பேசலைன்னா,தண்ணியடிச்சிட்டு படிக்காம லீவு போட்டா படிப்பு..? எதிர்காலம்..? உங்களை குறை சொல்ல என்ன இருக்கு? எல்லாம் சினிமா பண்ணற வேலை. சினிமால பறந்து,பறந்து பத்து பேரை கதாநாயகன் அடிக்கிற மாதிரி உங்களால அடிக்க முடியுமா…?”
என கார்க்கி நளனைப்பார்த்து கேட்டது அவனுக்கு சிந்தனையை திருப்பிப்போட்டது போலிருந்தது!
“இத பாருங்க நளன், நான் படிக்கத்தான் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். எங்க பரம்பரைலயே முதன் முதலா நான் தான் காலேஜ் வாசலையே மிதிச்சிருக்கேன். என்னோட அப்பா,அம்மா உழைக்கிற பணத்தில அவங்க சாப்பிடறத கூட குறைச்சுட்டு எனக்கு பீஸ் கட்டறாங்க. நான் படிச்சு நல்ல வேலைல சேர்ந்து,எனக்குன்னு சில குறிக்கோள்,லட்சியம்னு இருக்கறத நிறைவேத்திட்டு பணம் சேர்த்துட்டு, அந்த சமயம் என்னோட தகுதிக்கேற்ற பையனை கல்யாணம்பண்ணி வாழலான்னு இருக்கேன். படிக்க வந்ததே பாடத்தோட சேர்த்து ஒழுக்கம்,பண்பை வளர்த்துக்கத்தான். அதை இழக்கறதுக்கில்லை. இந்த தண்ணி அது இதுன்னு மிரட்டி பரிதாபம் தேடி ,என்னை பணியவச்சு உங்களோட விருப்பத்துக்கு என்னை பயன்படுத்த நினைச்சிடாதீங்க. அந்த மாதிரி சராசரி பொண்ணு நாங்கிடையாது”என நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லிச்சென்ற கார்க்கியை ஆச்சர்யமாக பார்த்ததோடு,ஒரு நல்ல நட்பை இழந்ததை எண்ணி வருந்தினான் நளன்!
தொடர்புடைய சிறுகதைகள்
இரவு முழுவதும் கண் விழித்திருந்ததில் பகலில் தூங்க வேண்டும் போல் இருந்தது பிரியாவிற்கு!
பிரியா ஆந்திராவைச்சேர்ந்தவள். கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களால் கடத்தி வரப்பட்டு மும்பையில் உள்ள முக்கியப்பகுதியில் முத்திரை பதிக்கப்பட்டவள்.
ஏற்கனவே ஒரு முறை விற்கப்பட்டு நரகச்சிறையில் இருந்தவளை அங்கு வந்த கடத்தல் கும்பலைச்சேர்ந்தவன் மறுவாழ்வு ...
மேலும் கதையை படிக்க...
தன் பெண் அகல்யாவின் கண்களில் கண்ணீர் வடிவதைப்பார்த்து அதிச்சியடைந்த பரமசுந்தரி "என்னாச்சு?" என வினவினாள்!
"அவரு பிடிவாதமா,கோவமா பேசறாரு. தேவையில்லாத கேள்விய கேட்கறாரு. கல்யாணத்துக்கப்புறம் வேலைக்கு போகவேண்டான்னு சொல்லறாரு. அவரோட தொழில்ல சம்பாதிக்கிற பணத்தை அவரோட அம்மா கையில தான் கொடுப்பாராம். கல்யாணத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு கூடியிருந்தது!
வீரச்சக்கரவர்த்தி விஸ்வாமித்திரருக்கும், தேவலோக அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த தேவலோக இளவரசி என்பதை சற்றும் அறியாதவளாய் ,வெகுளியாய் புள்ளிமான் போல் துள்ளி விளையாட ...
மேலும் கதையை படிக்க...
"அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலை நான் கட்டியதால் கிடைத்த புண்ணிய அருளால் எனக்கு கிடைத்த என் அருமை மகளே சிவனவி, மேலை நாட்டிலிருந்து வணிகன் ஒருவன் வந்துள்ளானாமே...அவன் உனக்கு பரிசு பொருட்களையும்,வாசனைத் திரவியங்களையும் கொடுத்து நம் ஓலைச்சுவடிகளைக் கேட்பான்.
கொடுத்து விடாதே. முன் காலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
கிராமங்களில் ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருப்பவர்களை வெள்ளச்சோளம் என்பார்கள்.அவ்வாறு பதிமூன்று வயதிலும் மூன்று வயது சிறுவன் போல் மனதில் தோன்றுவதை தோன்றியபடியே பேசிக்கொண்டு,தன்னை விட வயது குறைந்த குழந்தைகளுடன் விளையாட விருப்பத்தோடு இருப்பவன் தான் குணத்துக்கேற்ற பெயர் கொண்ட குழந்தைசாமி!
ஐந்து வயது வரை ...
மேலும் கதையை படிக்க...
"ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?"என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய ஏழைப்பெண் கண்ணம்மா.
"ஏண்டி கண்ணு,அடி உன்னத்தான்,அடுப்புல இருக்கிற சோத்தக்கிளறி உடு.பத்தாமயே பத்துன வாசமடிக்கும் கூப்பன் அரிசி சோறு.வேற பத்திப்போச்சுன்னா வாயில வைக்க ...
மேலும் கதையை படிக்க...
"என்னைத்தொடாதீங்க" முதலிரவு அறையில் தன் மனைவி காரிகாவின் நெருப்பான பேச்சைக்கேட்டு அதிர்ந்தான் ராகவன்.
'நம்மிடம் என்ன குறை கண்டாள் இவள்...? அப்படி எதுவும் குறை இருப்பது தெரிந்தால் திருமணத்துக்கு முன்பே கூறியிருக்கலாமே..?
முதல் ராத்திரியும் அதுவுமாக இன்பமாக சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் இப்படி துன்பமாக ...
மேலும் கதையை படிக்க...
"ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?" என தன் தாயின் தாயான தவசியம்மாளைப்பார்த்து வெகுளியாக அதே சமயம் அறிவார்ந்த வார்த்தையால் கேள்வியாகக்கேட்டாள் பத்து வயது சிறுமி காம்யா!
"சொத்தக்கத்திரிக்காய் விலைக்கு போகாது ...
மேலும் கதையை படிக்க...
சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. 'சிறுவயதில் இயல்பாக திட்டமிடாமல் செய்த செயல்களை தவறு என்பதா? அறியாமை என்பதா?' என நினைத்தவர் சரியான வார்த்தை பிடிபடாமல் தவித்தார்.
இன்று அறுபது வயதில் நகரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்!
கணேசனுடன் திருமணமான போது,பொது சொத்து பிரிக்கப்பட்டதில் வந்த ஓட்டு வீட்டுடன் கிடைத்த இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து, தங்களுக்கு பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ...
மேலும் கதையை படிக்க...