சர்க்கஸ் – ஒரு பக்க கதை

 

பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர்.

கூண்டோடு வந்தது சிங்கம். கூண்டைத் திறந்தனர் பணியாளர்கள். கர்ஜித்துக் கொண்டே பாய்ந்தது சிங்கம். பார்வையாளர் மொத்தமும் திகிலில் இருந்தார்கள்.

ஹ ஹீ..ஹ..கீ…ய்…என்று வாயால் வித்தியாசமாகக் கத்தி கையில் இருந்த சாட்டையில் ‘பட்…பட்…பட்…’ என்று ஓசையெழுப்பினார் ரிங்மாஸ்டர். சப்த நாடியும் ஓய்ந்த நிலையில் அந்த ஆண் சிங்கம் பிடரி குலுங்கி ரிங் மாஸ்டர் முன் வந்து வளர்ப்பு நாயாய் வந்து நின்றது.

ரிங் மாஸ்டர் ஒரு சக்கரத்தை அதன் முன் நீட்ட அதற்குள் பாய்ந்து மறுபுறம் குதித்தது சிங்கம்.

மீண்டும் நீட்ட மீண்டும் அதற்குள் புகுந்து வந்தது.

அடுத்து சக்கரத்தைச் சுற்றி நெருப்பு மூட்டியபின் அதே போல் வளையத்திற்குள் புகுந்து வந்தது சிங்கம்.

அரே… அரே… அரே… அரே… என்று கோமாளி கூவிக் கூவி ரிங் மாஸ்டர் காட்டிய வளையத்தில் பூர முடியாமல் கீழே விழுந்து பார்வையாளர்களை மகிழ்வூட்டினான்.

அடுத்து சிங்கம் வாயைப் பிளந்தது. ரிங் மாஸ்டர் தலையை சிங்கத்தின் வாயில் நுழைத்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் தலையை அதன் வாய்க்குள் வைத்திருந்தார் ரிங் மாஸ்டர்.

மூச்சைப் பிடித்துக்கொண்டு டென்ஷனாக உட்கார்ந்திருந்த கூட்டம் ரிங் மாஸ்டர் சிங்கத்தின் வாயிலிருந்து தலையை எடுத்ததும் கூட்டம் கைதட்டி ஆரவாரித்து.

அன்றைய காட்சி முடிந்து விடுதிக்கு வந்தார் ரிங் மாஸ்டர்.

விடுதி அறையில் நுழைந்ததும் கொசு வலைக்குள் புகுந்துகொண்டு, மொஸ்கிடோ மேட்டால் பட் பட் என்று கொசுவை அடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினார்.

- கதிர்ஸ் (ஜனவரி 1-15-2022) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தத் தொழிலதிபர் கார் நிறுத்தி, பின் கதவைத் திறக்க, அய்யப்பன் துணி அடைக்கப்பட்ட இரண்டு ஷாப்பர் பைகளை எடுத்து அயர்ன் வண்டி மேல் வைத்தான். முதல் போணி அய்யப்பனைத் தேடி வந்துவிட்டது. காதல் வலையில் விழுந்துவிட்ட அய்யப்பனுக்கு ‘காதலியை எப்படி இம்ப்ரஸ் செய்யலாம்?’ என்பதொன்றே ...
மேலும் கதையை படிக்க...
‘கடன் அன்பை முறிக்கும்!’ ‘கடன் கேட்காதீர்!’ ‘இன்று ரொக்கம் நாளை கடன்!’ இப்படியெல்லாம் போர்டு மாட்டிக்கொண்டு நிறைய மளிகைக் கடைகளும், பல சரக்குக் கடைகளும் இருந்தன அந்தத் தெருவில். அதே தெருவில் புதிதாக ஒரு மளிகைக் கடை துவங்கினர் எம் பி ஏ பட்டதாரி அமலன். அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
"வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…" என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார். "சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…" அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி. "வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ...
மேலும் கதையை படிக்க...
ட்ராஃபிக் சிக்னல் கவுண்ட் டவுன் 5......4........3..... வாகனங்கள், டூ வீலர்கள் ஆக்ரோஷமாக உறுமத் துவங்கின. ...2.. முதல் கியரில் சிலர் தயாராக...,சிலர் க்ராஸ் செய்து ... வேகமெடுத்தனர். பாலனின் அவெஞ்சரும் வேகமெடுத்தது. அடுத்த சிக்னலை நிற்காமல் கடப்பதே அவன் நோக்கம். .....80....90....100...101...102... வலதுபுறத்தில் ஒரு புல்லட் ...
மேலும் கதையை படிக்க...
ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம். மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர். மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா. ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட ...
மேலும் கதையை படிக்க...
வருகிற பொங்கலன்று அயல் நாட்டில் தொழிற் பயிற்சி பெற்ற மகனிடமும் மருமகளிடமும் கம்பெனிப் பொறுப்பை கொடுத்துவிட தீர்மானித்துவிட்டார் தொழிலதிபர் மோகனசுந்தரம். தென்னகத்திலேயே சிறந்த ‘ஆர்க்கிடெக்ட்’டை வரவழைத்து பழைய மோஸ்த்தரில் இருந்த வீட்டை ‘மாடர்ன்’ ஆக்கும் பணி விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருந்தது. வீட்டின் முன் பகுதியில் இருந்த ...
மேலும் கதையை படிக்க...
மாலை ரிசப்ஷன். முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது. மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் ...
மேலும் கதையை படிக்க...
ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது. ‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ ...
மேலும் கதையை படிக்க...
"தீபாவளிக்கு ரஜினி படம் பார்ப்போமா... ?" என்று கேட்டார் ஸ்ரீதரன். "பார்க்கலாம்..பார்க்கலாம்..." என கோரஸ்ஸாகக் கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக. "குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருந்தனர்." வீட்டில் அம்மா, அக்கா , தங்கை அனைவரும் சேர்ந்து வேகவேகமாக சமையலை முடித்தனர். குழந்தைகள் அவசர அவசரமாக ஆன்லைன் ...
மேலும் கதையை படிக்க...
சிவன் கோவில் ஸ்பீக்கரில் 'திருநீற்றுப்பதிக' சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது. "திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்" என்றார் ஆன்மீகப் பேச்சாளர். "அப்ப... ஐந்து வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
அயர்ன் அய்யப்பன்
வியாபார வெற்றி ரகசியம்
தொங்கல் – ஒரு பக்க கதை
தலைக்கு வந்தது – ஒரு பக்க கதை
ஜாதின்னா என்ன?
பொங்கல் வேலை
ஃபார்மல் – ஒரு பக்க கதை
சிற்றன்னை
ரஜினி படம் – ஒரு பக்க கதை
விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)