ரேவதி… வேலைக்காரி கெளம்பரா பாரு. என்ன மெனு னு அடுப்பையே பாத்துட்டிருக்கா வெச்சகண்ணு வாங்காம. நேத்து உப்புமா இருக்கு பாரு குடுத்தனுப்பு சீக்கிரம். ஒரே நெஞ்சடைச்சுது. நேத்து சாப்பிடவே முடியல.
பாமா விழியோரம் லேசான கண்ணீர். சரி விடு, அவங்க அப்பிடித்தான். இன்னிக்கி நேத்தா பாக்கிற. அந்த உப்புமா காய்கறி தோல் வாசல்ல இருக்க பக்கட்ல கொட்டிடு. அதற்க்காகவே காத்திட்டிருந்தது போல் இரண்டு பசுக்கள் ம்ம்ம்மா என்று கத்தின வழக்கம்போல். வெயிட் பண்ணு தாளிச்சிட்டிருக்கேன். தரேன்.
பாமா பையனுடன் வாசலில் தாழ்வாரத்தில் போய் உட்க்கார்ந்தாள். அவளது பையன் வெளியில பசங்க கிரிக்கட் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ரேவதியின் பையன் பரணைமேல் ஏறி உபயோகம் இல்லாமல் இருந்த இவனது சிறுவயது பேட்,ஸ்டம்ப் எடுத்துட்டு வந்து பாமாம்மா இந்தாங்க அவனுக்கு குடுங்க என்றான்.
பழைய துணி வாங்கறது எவர்சில்வர் பாத்திரம் என்று சொல்லிக்கொண்டே வியாபாரி சென்றார் தெருவில்.
கொஞ்சம் இருப்பது. அம்மாடி ரேவதி… பசங்களோட பழையட்ரெஸ் எடுத்து வெச்சியே எடு மாமியார் கத்தினாள்.
பாட்டி அதெல்லாம் நேத்தே எடுத்துட்டுபோய் குடுத்தாச்சு ஆஸ்ரமத்துல என்றாள் ரேவதியின் காலேஜ் படிக்கும் பெண். எப்படியோ போங்க என சலித்துக்கொண்டாள் பாட்டி.
அப்பா வாசல்ல எலக்ட்ரீசியன் uncle வந்திருக்கார். வாங்க uncle. அப்பா உள்ள தான் இருக்கார்.
வேலையை முடிச்சிட்டு வெளியில் போகும்போது எலக்ட்ரீசியன் uncle அப்பாவிடம் ஏதோ கேட்டுக்கொண்டே இருந்தார்.
சார் அதோ அங்க இருக்கே அந்த சைக்கிள் உங்க பொண்ணோடதா. ஆமாம்பா ஏன். தூசி படிந்து டயர் பஞ்சர் ஆக நிக்க வைக்கப்ப ட்டிருந்த சைக்கிளை பாத்து கேட்டார். புதுவண்டி 6000 ரூபாய் கேக்கறான். அவளோ வசதி இல்ல. அதான்…
காயத்ரி.. இங்க வா.. இவர் ஏதோ கேக்கிறார் பாரு.. அய்யோ அங்கிள் எடுத்துக்கோங்க ஒண்ணும் வேணாம். நான் ஓட்றதே இல்ல. வேஸ்டாதான் நின்னுட்டிருக்கு. யாருக்காவது use ஆகும்.
ஓகே எடுத்துக்கோப்பா. அவளே சொல்லிடரடா. use ஆனா போதும். மிகவும் மகிழ்ச்சியானார் எலக்ட்ரீசியன் அங்கிள்.
அம்மா நான் last year engineering books லாம் போய் காலேஜ்ல குடுத்துட்டு வரேன். என் friend கேட்டான்.
ஏண்டி பழையபேப்பர் காரனுக்கு போட்டா காசாவது கிடைக்கும் இல்ல பாட்டி கேட்டாள்.
வரேன் பாட்டி… டாட்டா என்று கன்னத்தில் கிள்ளிவிட்டு கிளம்பினாள். ஈவ்னிங் நாம வெளியில போறோம் என்னோ பர்த்டே celebration ரெடியா இரு பாட்டி..
அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் அனைவரும் பிறந்தநாள் கொண்டாடினர். தன்கையாலேயே பரிமாறினாள் உணவை எப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் inmates களுக்கு.
(இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே)
தொடர்புடைய சிறுகதைகள்
தலை திரும்பல சார். தொப்புள்கொடி சுத்திட்டிருக்கு. சிசேரியன்தான் பண்ணனும். இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க என்று என் மாமாவிடம் sign வாங்கினார் அந்த லேடி டாக்டர்.
எனக்கு பொண்ணு பொறந்தா நீதான் கட்டிக்கணும் என்று சொன்ன அக்காவின் வாக்குப்படியே எனக்கு மனைவியாகப்போகிற மீனாட்சி ...
மேலும் கதையை படிக்க...
ஊரே மெச்ச நடந்தது சரவணன்-மீனாட்சி நிச்சயதார்தம். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னால் மீனாட்சிக்கு சிறு தீவிபத்தில் கழுத்துக்கு கீழ் வெந்துபோக தசைகள் சுருங்கி சற்று விகாரமானது.
பெண்வீட்டார் போனை சரவணன் வீட்டில் யாரும் எடுக்கவில்லை. சரவணன் கூட மீனாட்சியின் போனை தவிர்த்தான். நிச்சயம் ...
மேலும் கதையை படிக்க...
மேடம் உங்க பேர் மீனாட்சியா?
Yes சொல்லுங்க. காவேரி hospital லேந்து பேசறோம். உங்க father சுந்தரேசன் mobile ல last dialled உங்க நம்பர்தான் இருந்தது. ஒண்ணுமில்ல.. பதறாதீங்க. அவருக்கு ஒரு சின்ன accident.
அய்யோ என்னாச்சி half an hour back ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரேசன் tvs50 யை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றார். இவருக்கு முன்னால் பத்து பேர். என்ன பெரியவரே இந்த வயசான காலத்துல நேர்ல வந்துதான் கரன்ட் பில் கட்டணுமா? EB க்குன்னு ஒரு App இருக்கு, அதுல கட்லாமில்ல எனக் கேட்டார் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
திருவிழாவில் ஜேஜே என்ற திரளான கூட்டம். திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள்.
அம்மா,நான்,தங்கச்சி உட்டட எல்லாரையும் அரவணைத்து கூட்டிக்கொண்டு வந்தார் அப்பா.
பாத்து சூதானமா என்னையே ஃபாலோ பண்ணிட்டே வாங்க. கூட்டத்தில மிஸ் ஆயிடுவீங்க. பின்னாடி திரும்பி பாத்து பாத்து போய்கொண்டே இருந்தார்.
கூட்டம் குறைவாக ...
மேலும் கதையை படிக்க...
மார்கழி மாதம். கடும் குளிர். தூக்கமே பிடிபடல எனக்கும் என்னவருக்கும். கட்டிலில் போர்வைக்கு போர்.
மெலிதான பஜனை ஓசை பக்கத்து தெருவில் பாடுவது தெளிவாக கேட்கிறது. மொபைலில் டைம் பார்த்தேன். காலை 4.30 மணி. வாசலில் டூ வீலர் சத்தம்.
அது சரி, எப்படி ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் சடலம் நடுக்கூடத்தில். சடங்குகள் முடிந்து மரப்படுக்கையி லிட்டார். சி(ச)தை எரிந்தது.
அன்றிரவே ஆரம்பமானது சொத்து தகராறு. இரண்டு மகன்கள். ஒரு மகள். அம்மா போய் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மூத்தவன் வாதம் செய்தான் சொத்தை சமமாக பிரிக்கவேண்டும் என்ற சொன்ன ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரேசன், கண்ணாடி பேழையில் கிடத்தப்பட்டிருந்தார்.
பாட்டி...நான் ஒண்ணு பண்றேன். தாத்தாவோட friends யாரு என்னன்னு நமக்கு தெரியாது. அவரோட WhatsApp status, Facebook account ல போய்.. Death news update பண்ணிடறேன். ப்ரீத்தி சொல்வதை கேட்டு காமாட்சி தலை ஆட்டினாள் சோகமே ...
மேலும் கதையை படிக்க...
ஹரி-ஹரினி கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் புறப்படத்தயார் ஆனாரகள். புது ஜோடிகள் காரிலும் மற்றவர்கள் வேனிலும் ஏறுவதற்கு முன்பு ஹரினி,
அவளது தம்பி, தங்கை, பாட்டியிடம் தேம்பி தேம்பி அழுதாள். சீக்கிரமா என் கொள்ளு பேரன பாக்கனும் ஹரினி இந்த பாட்டி கண் மூடறதுக்குள்ள.
அம்மா ...
மேலும் கதையை படிக்க...
அப்பா.. சாய்ங்காலம் சத்ஸங்கத்துல சுகி சிவம் பேசறார். போறோம். ஏம்மா காயு, காலேஜ் இருக்கு லேட் ஆகும்னு சொன்னியே. No problemப்பா.. நம்ம இங்க போகலாம்.
மிகவும் உருக்கமாக கேட்டிக்கொண்டிருந்த சரவணன் கையை பிடித்து அழுத்தினாள் காயு அப்பா கண்களில் கண்ணீர் வருவதை ...
மேலும் கதையை படிக்க...
வஞ்சம் – தஞ்சம் – ஒரு பக்க கதை
அன்புள்ள அப்பா – ஒரு பக்க கதை