இதுவெல்லாம் குற்றமா?

 

பரபரப்பாக அந்த சாலை இருந்தது. வாகனங்கள் பொறுமையின்றி ஒலிக்க வைத்த ஹாரன் சத்தமும், அதை விட மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்ல அவர்களை திசை திருப்பி கடைக்குள் இழுக்க நடைபாதை ஓரமிருந்த கடைகளின் ஆட்கள் கூவி அழைத்த அழைப்பும், அங்கிருந்த மின் கம்பத்தின் ஓரமாய் நின்றிருந்த இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அவனை பொறுத்தவரை இப்பொழுது அவன் நினைவுகள் இந்த உலகத்திலேயே இல்லை. அவனுடைய பார்வை அவனுக்கு முன்னால் நின்றிருந்த பின்புறம் திறந்த ஆட்டோவின் மீதே ஈடுபட்டிருந்தது.

யாரும் அந்த வண்டியை சட்டை செய்வது போல தெரியவில்லை. அதனை தாண்டி சென்று கொண்டிருந்த பலருக்கு அந்த ஆட்டோ இடைஞ்சலாக இருந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் அந்த ஆட்டோ அவனை தாண்டி வந்து ஓரமாக நிறுத்தும் போதே இவனுக்கு மகா எரிச்சலாக வந்தது. அந்த ஓட்டுநரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விடத்தான் நகர முயற்சித்தான்.

ஆனால் அதற்குள் அந்த ஓட்டுநர் கதவை திறந்து எங்கோ இறங்கி ஓடி விட்டான். சே..இவன் அவனை அழைக்க வாயெடுத்தவன் பின்புறம் திறந்திருந்த ஆட்டோவுக்குள் இருந்ததை பார்த்தான்.

குண்டு குண்டாய் மாம்பழங்கள், நல்ல சிவப்பு,மஞ்சள் கலந்து ஐம்பது அறுபது இருக்கலாம், ஒரு மலையாய் குவிந்து இருந்தது.

அதை பார்த்ததிலிருந்து அவன் எண்ணம் எல்லாம் அதன் மீதே இருந்தது. அதற்கு பிறகு அந்த பாதையில் இருந்த கடை சிப்பந்திகளின் இரைச்சலோ, வாகனங்களின் வழி விட சொல்லி ஒலிக்க விட்ட ஹாரன் சபதங்களோ எதுவும் தலையில் ஏறவில்லை.

மாம்பழங்களை எப்படி எடுக்கலாம்?, எப்படியும் ஒவ்வொரு பழமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோவாவது தேறும். அந்த ஓட்டுநரிடம் கேட்கலாம், அவன் தந்தால் உண்டு, முடியாது என்று சொல்லிவிட்டால்..!

மெல்ல அந்த ஆட்டோ பக்கமாக நகர்ந்தான்.ஆட்டோவை ஓட்டி நின்று கொண்டு சுற்று முற்றும் ஒன்றும் தெரியாதவன் போல் பார்த்தான்.

அவ்வளவு கூட்டம் அங்கு இருந்தும் ஒருவரும் அவனை கண்டு கொள்ளாமல் வருவதும் போவதுமாக இருந்தனர். இறங்கி போன ஓட்டுநர் வருகிறானா என்பது போல அவன் ஓடிய திசையை நோக்கி பார்த்தான். காணவில்லை. இனி நேரம் கடத்த முடியாது, அவன் சீக்கிரமே வந்து விடலாம்.

தன் பேண்ட் பாக்கெட்டில் எப்பொழுதும் மடக்கி வைத்திருக்கும் பிளாஸ்டிக் பையை ஆட்டோவின் மீது சாய்ந்தாவாறே பிரித்தான். மெல்ல கையை விட்டு ஒரு பழம் எடுத்து பைக்குள் போட்டான்.

ஒன்று..இரண்டு..மூன்று..ஹூஹூம் மனசு கேட்கவில்லை. மட மடவென இன்னும் இன்னும் போட பை வீங்கி அவனுக்கும் ஆட்டோவுக்குமே இடவெளி அதிகமாகி காட்ட ஆரம்பித்து விட்டது.

கை வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது. இடது கையால் எவ்வளவு நேரம் இந்த பையை பிடித்திருப்பது. அதுவும் பையை தூக்காத மாதிரியாகவும் இருக்க வேண்டும், ஆனாலும் தூக்கி கொண்டிருக்க வேண்டும்.

எப்படியோ பத்து பழமாவது போட்டிருப்போம், சப்தமே காட்டாமல் அப்படியே ஆட்டோவை ஒட்டியே நகர்ந்து அங்கிருந்த கடையின் முன்புற சுவற்றில் அந்த பையை சாய்த்து வைத்து விட்டு ஒன்றுமே தெரியாதவன் போல் முன்னர் இருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான்.

எங்கிருந்தோ ஓடி வந்த அந்த ஓட்டுநர் அவசரமாய் கதவை திறந்து தன் இருக்கையில் உட்கார்ந்து ஆட்டோவை அங்கிருந்து ஓட்டி சென்றான்.

ஆட்டோ அங்கிருந்து நகர்ந்தவுடன் தான் இவன் மனசு நிம்மதியாயிற்று. அப்பாடா, நல்ல வேளை பின்புறம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் பழங்கள் குறைந்திருப்பதை கண்டு பிடித்திருப்பான். அருகில் நாம் நின்றிருப்பதால் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டிருப்பான். நிம்மதியாய் மூச்சு வந்தது.

அரை மணி நேரம் ஓடிய பின்னால் அவனது செல்லுக்கு ஒரு அழைப்பு. “யோவ் உன்னைய டிராபிக்க பார்க்க சொன்னா, மாம்பழம் லவட்டிகிட்டிருக்கே? அதுவும் யூனிபார்மோடோ?”.

ஐயோ நாம மாம்பழம் எடுக்கறதை பார்த்துட்டாங்களா? இது எப்படி? அவன் திணற “யோவ் நீ செய்யறதை அக்கம் பக்கம் இருக்கற காமிராதான் காமிச்சுக்கிட்டிருக்குதே. உனக்கு தெரியாதா?”

அடக்கடவுளே, மனசு பக்கென்று உணர கவலைப்பட்டான். அந்த கவலை எல்லாம், அவன் செய்ததை பார்த்து விட்டார்களே என்பதல்ல, இனி இந்த பழங்கள் பங்கு பிரிக்கப்பட்டு நமக்கு ஒண்ணோ இரண்டோதான் கிடைக்குமே என்கிற கவலைதான் இருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
டெல்லி மத்திய அலுவலகம், தன் தந்தை அனுப்பிய மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருந்தான்.பாலு என்கிற பாலசுப்ரமணியன், தன் தந்தை அனுப்பிய எழுத்து நடை அழகான ஆங்கிலத்தில் இருந்தது.ஆனால் தகவல் தன் மனதை பாதிக்கக்கூடியதாக இருந்தது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.அவரை பெற்றவளை நல்ல வசதியான காப்பகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி" தலைமையாசிரியர்" என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி "குட்மார்னிங் சார்" என சொல்ல மெல்ல தலையசைத்து என் நாற்காலியில் உட்கார்ந்தேன். மணி! கொஞ்சம் பேனை போடு என்று சொல்லிவிட்டு சுழலும் ...
மேலும் கதையை படிக்க...
விடியற் காலை நான்கு மணிக்கு வேண்டா வெறுப்பாய் எழுந்தவன் வாக்கிங்க் போய்த்தான் ஆக வேண்டுமா, என்று யோசித்தேன். ஐம்பதை தாண்டி விட்டாலே வர தயாராய் இருக்கும் சுகர், பி.பி போன்ற வியாதிகளை நினைத்து வாக்கிங் கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.யாருடைய தூக்கத்தையும் கெடுக்காமல் ...
மேலும் கதையை படிக்க...
ராஜசேகர் இல்லம், விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து அவர் தங்கை,கணவர்,மற்றும் அவர்கள் குழந்தைகள் உடன் அவரின் இரு குழந்தைகள் அனைவரும் வால்பாறை செல்வதற்காக ஒரு ஆடம்பர வேனில் கிளம்பினர். அவரின் மனைவி மட்டும் இவருக்காக தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார், ராஜ சேகருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு அப்பா வீட்டிற்கு வந்திருந்த என் பெண் அப்பா உன் பீரோவை சுத்தம் பண்ணப்ப இந்த பேப்பர் கட்டு கட்டி இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
பேருந்தின் அந்த மதிய நேரத்து பயணம் சுகமான தூக்கத்தை வரவழைப்பதாக இருந்தது. அதுவும் வளைந்து வளைந்து அந்த மலை மேல் ஏறிக்கொண்டிருந்த பேருந்து அளவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததில் அப்படியே தூங்கி விட்டேன் போலிருக்கிறது. சட்டென விழிப்பு வந்து பார்த்த பொழுது பக்கத்தில் ...
மேலும் கதையை படிக்க...
இந்த இராத்திரி குளிருக்கு மதமதப்பாத்தான் இருக்கு ! புது சரக்கு, இன்னும் கொஞ்சம் கிடைச்சிருந்தா, நினைக்கும்போதே எச்சில் ஊறியது அவனுக்கு, கூடாது, இன்னும் கொஞ்சம் அடிச்சிருந்தா பிளாட் ஆயிடுவோம். அப்புறம் தொழில் கெட்டு போயிடும், பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் அப்படியே காலை ...
மேலும் கதையை படிக்க...
எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள். சொல்லட்டுமே, விருதுகளை வெறுத்தவன், ஆரவாரமான வரவேற்புகளை நிராகரித்தவன், இது போதாதா என் தலைக்கனத்துக்கும், பிடிவாதத்திற்கும். இவன் எழுதும் இலக்கியம் புரியவில்லை, இப்படி ...
மேலும் கதையை படிக்க...
தாத்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஆகி விடுவார் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது, கவலையில் ஆழ்ந்து விட்டான் ரமேஷ். அப்பாவின் அப்பா, இது நாள் வரை தன் பாதுகாப்பில் இருந்தார். ஆனால் இப்பொழுது ரமேஷுக்கு அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து படிக்க உட்கார்ந்துடறானுல்ல ! நீயும் இருக்கியே, புக் எடுப்பனான்னு அழிச்சாட்டியம் ...
மேலும் கதையை படிக்க...
அப்பத்தா
வளர்மதி டீச்சர்
உழைப்பில் இத்தனை பலனா?
தொழிலாளியும்முதலாளியும்
மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
கோபத்தை கட்டுப்படுத்து!
தண்டனை
கல்பனாவின் மேல் ஏன் இந்த வெறுப்பு?
தாத்தா
யாரை நோக முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)