இட்லிக்காரி

 

எப்போதும்போல அன்று காலையும் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, இட்லிகளை வேக வைத்தாள் அந்த இட்லிக்காரி.

கணவன் சில வருடங்களுக்கு முன் இறந்தபிறகு, வீட்டிலேயே இட்லிகள் செய்து விற்க ஆரம்பித்தாள். வியாபாரம் சூடு பிடிக்கவே இட்லி தவிர வடை, தோசை என்று காலை ஒன்பது மணிவரை விற்றாள். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது.

ஒரே மகன் வயது பதினெட்டு. சரியாகப் படிக்காமல் சோம்பேறியாக இருந்தான். அவனை தனக்கு உதவியாக இருக்குமாறு இட்லிக்காரி சொன்னதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நல்ல வேலை தேடி வீட்டைவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டான்… பயமறியா வயசு. இட்லிக்காரி தவித்துப் போனாள். அவனைத் தேடியும் பயனில்லை.

மனதைத் தேற்றிக்கொண்டு தன் இட்லி வியாபாரத்தைத் தொடர்ந்தாள். வியாபாரம் ஆரம்பிக்கும் முன், அன்றும் எப்போதும்போல முதல் இட்லிகளை ஏட்டில் இருந்து எடுத்து, அதில் இரண்டு இட்லிகளை மட்டும் ஒரு சிறிய இலையில் எடுத்து, வீட்டின் சுற்றுச் சுவரின் மேல் வைத்தாள். இது அவளுடைய தினசரி தர்ம பழக்கம்.

இதைத் தெரிந்துகொண்ட ஒரு கூனல் முதுகுக் கிழவன் தினசரி காத்திருந்து அந்த இட்லிகளை எடுத்துச் சென்று விடுவான். அப்படி எடுத்துச் செல்லும்போது தனக்குள் ஏதோ முனகிக்கொண்டே போவான். இது ஒரு அன்றாட வழக்கமாயிற்று.

ஒருநாள் இட்லிக்காரி மதில் அருகிலேயே நின்று, அந்தக் கூன் முதுகுக் கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்துக் கேட்டாள்.

அவன் முனகியது, “நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” தினந்தோறும் இதையே முனகிக்கொண்டே போவான்.

இட்லிக்காரி கடுப்பானாள். ‘தினமும் இட்லி வைக்கிறேன். எடுத்துட்டுப் போறான… சரி. ‘நீ மவராசி, ரொம்ப நல்லா இருக்கணும்னு’ கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழலைன்னாலும்; இட்லி நல்லா இருக்குன்னு பாராட்டலைனாலும்; ரொம்ப நன்றி தாயேன்னு சொல்லக் கூடவா அவனுக்குத் தோணலை!?

ஏதோ, “செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும்” என்று தினம் தினம் உளறிட்டுப் போறானே? என்று எண்ணி எண்ணி மறுகிப் போனாள் இட்லிக்காரி.

‘இவன் என்ன பித்தனா இல்லை சித்தனா… பரதேசிப் பய’ என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள். நாளடைவில் நன்றி கெட்ட அந்தக் கூனக் கிழவனை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள்.

சிறிது நாட்களில் அவளது கோபம் தலைக்கேறி, பின்பு அதுவே கொலை வெறியாக மாறியது.

ஒருநாள், ‘அந்தக் கூனல் கிழவன் செத்து ஒழியட்டும்’ என்று முடிவு செய்து, இட்லியில் விஷம் கலந்து அதை மதில் மேல் வைக்க முடிவு செய்தாள்.

இட்லியில் விஷமும் கலந்து விட்டாள். ஆனால் மனம் ஏனோ கலங்கியது. கைகள் நடுங்கின. ச்சே! அவன்தான் அப்படி என்றால், நான் ஏன் ஒரு கொலைகாரியாக மாற வேண்டும்? நீண்ட யோசனைக்குப் பின் மனம் மாறி, அந்த விஷம் கலந்த இட்லிகளை சாக்கடையில் எறிந்துவிட்டு, வேறு நல்ல இட்லிகளை மதில் மேல் வைத்துவிட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம்போல் அன்றும் கூனக் கிழவன் வந்தான். இட்லிகளை எடுத்துக் கொண்டு வழக்கம்போல், “நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” என்று சொல்லிக்கொண்டே சென்றான். அவனை அப்படியே ஓங்கி அறையலாம் போலிருந்தது இட்லிக்காரிக்கு!

அன்று மதியம் சற்று அசதியுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவு தட தடவென தட்டப்படும் சத்தம் கேட்டு, இட்லிக்காரி பதட்டத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

அங்கு அவளுடைய ஒரே மகன் கசங்கிய உடைகளோடு சோகமாக வெளியே நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு ஆறு மாதங்கள் முன்பு வேலை தேடி வீட்டை விட்டுச் சென்றவன் இப்படி சோகமாக காணப்படுவது அவளுக்கு வேதனையாக இருந்தது.

“அம்மா, வீட்டுக்குத் திரும்பி வரும்போது என் மணிபர்ஸ் காணாமல் போய்விட்டது, கையில் ஒரு பைசா கிடையாது. தெரிஞ்சவங்க யாருமே கண்ணில் படவில்லை. அதனால் வெகு தூரம் நடந்தே வந்தேன். நல்ல வெயில் வேற. அகோரப் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ரோடிலேயே மயங்கி விழுந்து விட்டேன் அம்மா…

அப்போது யாரோ ஒரு கூன் முதுகுக் கிழவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து, என்னைத் தூக்கி உக்கார வச்சு இரண்டு இட்லிகளைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

நான் அவைகளை ஆசையுடன் சாப்பிட்டேன். பிறகு அந்தக் கிழவருக்கு நன்றி சொன்னபோது, அவர் தன் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் காண்பித்தபடி, உன் நன்றிகள் அந்தப் புண்ணியவதிக்குப் போகட்டும் என்று யாரோயோ குறிப்பிட்டுச் சொன்னார்…” என்றான்.

“………………….”

“மேலும் அந்தக் கிழவர், இந்த இட்லிகளை நான் தினமும் யாருக்காவது சாப்பிடக் கொடுப்பேன்… இன்றைக்கு உனக்கு வாய்த்திருக்கிறது…” என்றும் சொன்னார்ம்மா.

“…………………….”

“அந்த இரண்டு இட்லிகளைச் சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது.”

இதைக் கேட்டதும் இட்லிக்காரி பேயறைந்தது போல அதிர்ச்சி அடைந்தாள்.

‘விஷம் கலந்த இட்லிகளை அந்தக் கூனனுக்கு மதில் சுவர் மேல் வைத்திருந்தால், அது என் ஒரே மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே…! என்று நினைத்து அந்தத் தாய் உள்ளம் பதை பதைத்தது… அவள் கண்கள் பனித்தன… ஆண்டவா!

“நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” கூனன் தினசரி முனகலின் பொருள் இப்போது இட்லிக்காரிக்கு நன்கு புரிந்தது…

அவைகள் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்…!

எல்லோருக்கும் எல்லாம் புரிவதில்லை. புரியும் போது வாழ யாரும் இருப்பதும் இல்லை.

தெரியாமல் செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்; ஆனால் தெரிந்தே செய்த பாவம், ஏழு ஜென்மத்திற்கும் நம் தலைமுறைகளையும் தாக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை நம்முள் வளர்த்துக் கொள்வோம். வாழ்வில் சிறக்க ஒரே வழி, முகம் கோணாத எதிர்பார்ப்பு இல்லாத தர்மம் மட்டுமே…! 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘அதிதி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சுபத்ரா, மாருதி, மொரிகா, பட்டாதிகா, விஜயங்களா, லீலாவதி போன்ற பெரிய நிபுணர்கள் பெண்கள் குலத்தில் அவதரித்தது பலருக்கும் தெரியாது. பெண் அரசிகளின், ராணிகளின், வீராங்கனைகளின் பட்டியல் மிக நீண்டது. வீரத்தாய் பற்றிய ...
மேலும் கதையை படிக்க...
அது 1954. பாளையங்கோட்டை. இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில் சாஞ்சவன் திரும்பி எந்திரிக்கவே இல்லை. “பாத்தீங்களா... பனங்காட்டுப் பயல் பொறந்ததுமே அப்பனை எமபட்டனத்துக்கு அனுப்பிச்சிட்டான்.” “பெத்தவனையே முழுங்கியவன் வேற எவனைத்தான் முழுங்க மாட்டான்?” “எனக்குத் தெரியும் பூரணிக்கு ...
மேலும் கதையை படிக்க...
‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு மெலிதாக பவுடர் அடித்துக் கொண்டார். அவர் இன்று காலை பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ‘கொரோனா’ பற்றிய விழுப்புணர்வை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘முதல் கதை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) என் முதல் கதை ‘திசை மாறிய எண்ணங்கள்’ விகடனில் வெளியான பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. இதனிடையில் எனக்கு பெங்களூர் டைட்டான் வாட்சஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு நல்ல ...
மேலும் கதையை படிக்க...
திங்கட்கிழமை. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தொடர் ஆடிட் இருப்பதால் அந்த வங்கி சுறுசுறுப்பாக காணப்பட்டது. தலைமை அலுவலகத்திலிருந்து ஆடிட்டர் ரங்கராஜன் வந்திருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். எந்தத் தவறைபும் கண்டு பிடித்து விடுவார். அவர் ஆடிட் வருகிறார் என்றால் வங்கி மனேஜர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆடிட் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘படித்துறை விளக்கம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “ரொம்ப ஆசைப்பட்டு ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். அழகான இளம் மனைவியோடு சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாழப் போறோம்ன்னு நிறைய கற்பனை பண்ணினார். ஆனா அவரால் அப்படி சந்தோஷமாக வாழ ...
மேலும் கதையை படிக்க...
குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்பாவாவ் ஷிப்யார்டில் நான் ஹெச்,ஆர் ஹெட்டாகச் சேர்ந்தபோது எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. காரணம் அந்த ஷிப்யார்ட் இருக்கும் இடம் மிகவும் பின்தங்கிய இடம். எனக்கு பேசப்பட்ட மாதச் சம்பளம் மிகவும் கொழுத்த ஆறு இலக்கம் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கொசுத்தொல்லை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மொத்தம் ஐந்து கொசுவலைகள் தைக்க வேண்டும். டெய்லர் சிவன்பிள்ளை எங்களுடைய படுக்கை அறைகளை நேரில் வந்து பார்த்து அளவெடுத்து ஒரு பெரிய பேப்பரில் குறித்து எடுத்துப் போயிருந்தார். வீட்டில் நானும் என் தம்பி ...
மேலும் கதையை படிக்க...
நானும் என் தோழி நாராயணியும் கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் இப்போது எங்களின் எழுபதுகளில் இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தபோது எங்களுக்கு இருபத்தியெட்டு வயதுதான். அந்த இளம் வயதில்கூட, சாகசத்தைவிட வாழ்க்கையில் அமைதிக்காகவும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை. பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார். அவருக்கு லிவர் கேன்சர். தன்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. வயது எழுபத்தைந்து ஆகி விட்டது. ...
மேலும் கதையை படிக்க...
அர்த்தநாரீஸ்வரர்
கருப்பட்டி
கொரோனா விதிகள்
அடுத்த ஜென்மம்
ஒரு நீதிக் கதை
தர்ம சபதம்
ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட்
டெய்லர் சிவன்பிள்ளை
தோழியுடன் வாழ்க்கை
மரண சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)