இடையில் வந்த குழப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 3,717 
 

காட்சி-1

நண்பா தயவு செய்து எனக்கு எதிரா நிக்கறவனுக்கு சப்போர்ட் பண்ணாத !

அதெப்படி, அவனால எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கே

அப்ப நம்ம நட்புக்கு மரியாதை தரமாட்டே?

நட்பு வேறே, பிசினஸ் வேறே, நான் அவன் கூட உறவாடறது என் பிசினசுக்குத்தான்

அப்ப நீ அவனுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு. பிரச்சாரம் பண்ணாதே

நான் இந்த ஊர்ல பிரபலமான பெரிய மனுசன், அதை அவன் பயன்படுத்த நினைக்கிறான்.

காட்சி-2

இவனெல்லாம் ஒரு நண்பன் !

என்ன செய்ய வேண்டும்?

கையை காலை முறிச்சுடு

இன்னைக்கு முடிச்சர்றேன் !

எப்படி?

இராத்திரி அவன் வைப்பா…. வீட்டுல

வீட்டுக்குள்ளேயா?

இல்லை வெளியே வரும்போது

அடிக்கப்போறியா?

இது விபத்து !

அப்படின்னா !

கார் பிரேக் பிளேட்,

புரியுது. என் பெயர் வெளிவரக்கூடாது

கவலைப்படாதீங்க.

காட்சி-3

அக்கா எனக்கு பணம் வேணும்?

எங்கிட்ட பத்து பைசா இல்லை

எனக்கு கண்டிப்பா பணம் தேவை.

இனிமே எங்கிட்ட பணம் கேக்காதே

அவ்வளவுதான, நான் பார்த்துக்கறேன்.

ஒரு மாதமாக வருமானமில்லை

உன்னைய பாக்க வர்றவங்கிட்டேநோட்டு நோட்டா வாங்கிக்குவே

நான் காசுக்கு அல்லாடணுமா?

என்னடா முணு முணுங்கறே?

ஒண்ணுமில்லை, நான் வெளியே போறேன்

காட்சி-4

தினமும் குடியும்,கூத்தியும்தானா?

தப்புத்தான், விட முடியலையியே?

பசங்க பெரிசாயிட்டாங்க

இந்த பழக்கத்தை விட்டுடறேன்

எப்ப?

கொஞ்சம் கொஞ்சமாய்

ஊர்லே பெரிய மனுசன்னு பேர் எடுத்து இப்படி பண்ணறீங்க !

சே!..கிளம்பும்போதே காரும் மக்கர் பண்ணுது

காட்சி-5

இரவு பத்து மணி !

வீட்டருகில் நின்று கொண்டிருக்கும் கார்

காருக்கடியில் ஒரு உருவம் !

அப்பா வேலை முடிஞ்சுது, தொலைஞ்சான் இன்னைக்கு !

காட்சி-6

இரவு மணி பதினொன்று !

சுற்றும் முற்றும் பார்த்து முகமூடி உருவம்

காரின் பின் புறம் கதவு திறந்து பதுங்கிக்கொண்டது

காட்சி-7

இரவு விடியல் மணி ஒன்று

அன்பே போயிட்டு வரட்டுமா?

இந்த போதையில போகணுமா?

ஐயோ என் வீட்டுக்காரி இங்க வர்றதுக்கே சண்டை பிடிக்கிறா !

பத்திரமா போகணும், நாளைக்கு பாக்கலாம் !பை..

கதவு சாத்தப்படுகிறது

காட்சி-8

போதையில் தள்ளாடி தள்ளாடி வந்த பெரிய மனுசன்

கார் கதவை தடுமாறி திறக்க முயற்சிக்கிறார்.

அப்பாடி..எப்படியோ உக்காந்தாச்சு..சாவி எங்கே?

சட்டை பையில் துழாவி சாவியை பொருத்துகிறது

அப்படியே கையை தூக்கு !

யார்றா அது பின்னாடி?

பேசாத, கொஞ்சம் அசைஞ்சா பின்னாடி இருக்கற கத்தி பேசும்

உனக்கு என்னா வேணும்?

மரியாதையா கீழே இறங்கு,

போட்டிருக்கற செயின் வாட்ச் எல்லாத்தையும் கழட்டு

இந்தா என்னைய விட்டுடு,

உன் டிரெஸையும் கழட்டு

ஐயோ அசிங்கமா இருக்குமே?

கழட்டு இல்லை குத்திடுவேன்

இங்க பாரு என்னைய ஒண்ணும் பண்ணிடாதே கழட்டிடறேன்.

அப்படியே போய் தள்ளி நில்லு

ஐயோ என் கார்….

உன் காரா..இனிமேல் அது என் கார்..நீ அண்டர்வேரோட ரோட்டுலயே நில்லு

உள்ளே உட்கார்ந்தவன் வேகமாய் காரை எடுத்து புயல் வேகத்தில் பறக்க……

காட்சி-9

டமார்…!

காட்சி-10

அசிங்கமா இல்லை உங்களுக்கு?அண்டர்வேரோட ரோட்டுல

ஐயோ நான் என்ன பண்ணுவேன், என்னை கொன்னுடுவேன்னு மிரட்டினான்,

என் காரை கூட கொண்டு போயிட்டான்..

நீங்க எல்லாம் வெளியில பெரிய மனுசனாட்டம்….

பின்னாடி ஏறுங்க. நல்ல வேளை உங்களுக்கு தெரிஞ்ச போலீசா போயிட்டேன்

காட்சி-11

மருத்துவமனை

அக்கா..அக்கா என்னைய பாக்க வரமாட்டியோன்னு நினைச்சேன்

உனக்கு எங்கிருந்துடா கார் கிடைச்சுது? அதைய கொண்டு போய் மோதிருக்கறே?

ஐயோ அக்கா உன்னுடைய ஆளை மிரட்டி கொண்டு போய் வித்துடலாமுன்னு நினைச்சேன்.

நீ நாசமாகறதும் இல்லாம என் பிழைப்புலயும் மண்ணை அள்ளி போடறே?

உன்னையெல்லாம்… கோபித்து கிளம்புகிறாள்

ஐயோ..அக்கா. கோபிச்சுட்டு போறதுக்கு முன்னாடி ஆஸ்பத்திரி பில்லை

கட்டிட்டு போ..

காட்சி-12

வேறொரு இடத்தில்

உன்னைய நம்புனா?

சாரி பாஸ், நான் கரெக்டாத்தான் பிரேக் லைனை கட் பண்ணி வச்சேன், இடையில் ஒருத்தன் வருவான்னு நினைக்கலே, இன்னொரு சான்ஸ்..

ஆளை விடு..இப்ப வேண்டாம், அவன் ரோட்டுல அண்டர்வேரோட இருந்ததை எவனோ போட்டோ பிடிச்சு பத்திரிக்கையிலே போட்டு நாறடிச்சுட்டான். இது போதும் அவனுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *