கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 15,093 
 

ரமா அடுப்பில் ஏதோ கிளறிக்கொண்டிருந்தாள்.

மாணிக்கத்தை இன்னும் காணலை.‘பேருதான் மாணிக்கம். குணத்துல ஒன்ணுமில்லை. வீட்டுக்குக் காசு கொடுத்து 6 மாசமாச்சு. கார்ல சம்பாதிக்கிற காசு பூரா குடி, குடி… அப்படியே குடிச்சாலும் வந்தோமா, சோத்தைத் தின்னோமா, குப்புறப்படுத்து தூங்கின மானு இல்லாம வீடே அதிர்றமாதிரி கூச்சல், அடி உதை. கண்ணுல தென்படுறதையெல்லாம் போட்டு உடைப்பான். கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிவச்ச பொருளெல்லாம் கண்ணு முன்னாடியே சுக்கு நூறாக போயிடும்.

மாணிக்கத்துக்கு எதிர்த்துப் பேசினா பிடிக்காது. அதுக்காக பதில் சொல்லாம இருக்க ரமா என்ன சூடு சுரணையில்லாதவளா? வாக்குவாதம் வீட்டை ரணகளமாக்கிடும். தடுத்தோமுன்னா அவ்வளவுதான் உடம்புல காயம் ஏற்படாம நாம தூங்க முடியாது. அன்றைக்கும் அப்படித்தான்.
வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது.

இன்னிக்கு அவன்கிட்ட எதுவும் வாய் கொடுத்து மாட்டக்கூடாது. பாவம் மோகனுக்கு நாளையிலிருந்து ஏதோ பரீட்சையாம்… படிச்சிட்டு இருக்கு.

இந்தாடி….காலையிலேயே சொன்னேன் இல்ல… நா நைட்டு வரப்ப கேட்டை பூட்டியிருக்கக் கூடாதுனு… நாளையிலேர்ந்து பூட்டியிருந்துச்சு தெரியும் சேதி” என்று கையோங்கியபடியே வந்தான்.
கேட் பூட்டியிருக்கலையே! இருந்தாலும் ரமா சரி சரி” என்றாள்.

புள்ளைங்க எங்கேடி? படிக்குதுங்களா? இல்லே தூங்கப் போயிருச்சுங்களா? 15 வயசு ஆவுது பெரிய கழுதைக்கு… பத்தாவது படிக்கிறான். ஆனா எப்போ பார்த்தாலும் தீனி தீனி, அப்புறம் தூக்கம்தான். இவனெல்லாம் எங்கே உருப்படப் போறான்? இனிமே தினமும் படிச்சிட்டு பதினொரு மணிக்குத்தான் தூங்கணும். சொல்லிவை… புரியுதா?”

மோகன் ரூமில் படித்துக்கொண்டிருந்தான். இருந்தாலும் ரமா சரி சரி… புரியுது, சொல்றேன்” என்றாள் மெதுவாக.

தட்டில் சோறும் குழம்பும் முட்டையும் வைத்தாள் ரமா.

சோறு சாப்பிடப் போனவன் முட்டையைப் பார்த்துட்டு என்ன இது தினமும் முட்டை? நாந்தானே சம்பாரிச்சுக் கொட்டுறேன். ஒரு மீனு மட்டன் கொழம்பு ஆக்கிவைக்கக்கூடாதா? இதை எவன் தின்னுவான்? இந்தா நீயே எல்லாத்தையும் கொட்டிக்கோ” என்று சொல்லிக்கொண்டே தட்டை அவளிடம் தள்ளினான்.

மெதுவாகத் தட்டை தன் பக்கம் இழுத்து, சரி சரிங்க நானே சாப்பிடறேன்”னு சாப்பிட ஆரம்பித்தாள்.
மறுநாள் காலை 7 மணிக்கு மோகன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான். ரமா துணி துவைத்துக்கொண்டிருந்தாள். மாணிக்கம் முகம் துடைத்தபடியே, ரமா காப்பி தர்றியா?” என்று வந்து நின்றான்.

பால் வாங்க காசு இல்ல, சர்க்கரை தீர்ந்து போச்சு… புள்ளைங்களுக்கே கடன் சொல்லி இட்லி வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கேன். காசு எதுனா கொடுத் தீங்கன்னாதான் எதுவும் செய்ய முடியும். எங்கிட்டே சுத்தமா காசு இல்லை” என்றாள்.

சரி சரி புரியுது. வேலையை விட்டு வரும்போது வாங்கிட்டு வர்றேன்” என்று வேலைக்குக் கிளம்பினான்.

மோகன் அம்மா அருகே வந்து, என்னம்மா, நேத்து ஆச்சர்யமா கலாட்டா எதுவுமில்லை” என்றதும், ஆமா கண்ணு. சரி சரி டெக்னிக் இனி சரியாக்கிடும்னு நெனைக்கிறேன்” என்றாள் கண் சிமிட்டி.

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *