“ஏம்மா… எங்க போற”
பலத்த சிந்தனையிலிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
டிக்கெட் எடுக்காம என்னம்மா யோசனை.. ம் பஸ்ஸில் ஏறி உட்கார சீட் கிடைச்சிட்டாப் போதும் உலகத்தையே மறந்துட வேண்டியது. எல்லா யோசனையும் அப்பதான் வருமோ.
நான் அமர்ந்திருப்பது பஸ் என்பதும் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததில் இருந்து டிக்கெட்டே வாங்காமல் சிலையாய் சிந்தனையில் அமர்ந்திருக் கிறேன் என்பதும், அதை கவனித்த கண்டக்டர் பொறுமையிழந்து கத்து கிறார் என்பதையும் அப்போதுதான் உணர்ந்தேன்.
நான் இப்படி சூழ்நிலை மறந்த நிலையில் இருந்ததற்கு, நேற்று என் உயிர்த்தோழி ராதிகாவிடமிருந்து வந்த கடிதம்தான் காரணம்.
அதைப் படித்தபோது என் கண் கள் பனித்தன. மூன்று வருட மனச் சுமையையும் அவள் கொட்டியிருந் தாள்.
“இப்பவும் நான் ஏன் பெண்ணாய் பிறந்தேன். முன் ஜென்ம பாவமா? இது மனதார நான் நினைத்தவை அல்ல. சுற்றியிருப் அல்ல. சுற்றியிருப் போர் அப்படி நினைக்க வைக்கிறார். கள். முன்பு நந்தவனமாய் தெரிந்த இந்த உலகம் இப்போது நரகமாய் தெரிகிறதே. நல்ல மனிதர்களாய் தெரிந்தவர்கள் இப்போது ராட்சசர் களாய் தெரிகிறார்களே. நான் மிக வும் தன்னம்பிக்கையோடு இருக்க நினைத்து நிமிர்ந்தபோது சுற்றியிருப் போர் என்னை முக்காடிட்டு குனிந்து, விதி எனச் சொல்லி, மூலையில் முடங்கிக் கிடக்கவே ஆசைப்படுகிறார்களே ஏன்? அதில் அவர் களுக்கு என்ன சுகமோ, நான் அறியேன். இந்த கிராமத்து மக்களின் அறியாமையால், நான் ரொம்பவும் புழுங்கி சாகிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை, அவர்களின் பிள்ளை களுக்கு ஏற்பட்டால்தான், அவர்கள் எனது நிலையை புரிந்து கொள்ள முடியும் என்பதால், நான் அவர் களை எதிர்த்து ஏதும் பேசுவதில்லை.
எப்பவும் ரோட்டில் நடக்கும் போது கண்மூடி நடக்கிறேன்- எந்த பஸ்ஸாவது என் மீது மோதி, என் உயிரை எடுத்துக் கொள்ளாதா என்ற நப்பாசையுடன்.
அன்று எனக்கு ஒரு ஆசை, என் நெற்றியில் பொட்டு வைத்துப் பார்க்க வேண்டுமென்று. சாந்து சாந்து ‘பொட்டு வைத்துக் கொண்டேன். என் அம்மா என்னை பார்த்து, ஒரு நொடி பூரித்து, பிறகு முகம்வாடி, கிணற்றடிக்கு சென்றுவிட்டார். நான் எட்டி பார்த்தேன். அங்கு என் அம்மா துணி துவைப்பது போன்ற பாவனையில் அழுது கொண்டிருந் தார். நான் பொட்டு வைக்காததால்,’ அன்றிலிருந்து தான் பொட்டு வைப் பதையும் நிறுத்திக் கொண்டவள் என் தாய். கணவனை இழந்த பெண், நெற்றிப் பொட்டையும் இழக்க வேண்டுமென்பது யார்? எதற்காக, எப்போது, எழுதி வைத்த சட்டம்?
பேசாமல் சென்னையில் ஏதாவது வேலை ஏற்பாடு செய்கிறாயா பிரியா? அங்கு வந்து விடுகிறேன். யாருக்கும் பாரமாய் இல்லாமல், லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு வேலைக்கு போய் வரலாம். என் மனம் துடிக்கிறது. சென்னை நகர மக்களின் இயந்திரத்தனமான வாழ்க்கையில், இந்த மாதிரியான பேச்சுக்கள் இருக்காதே? என்ன சொல்கிறாய் பிரியா?
பிரியா, உன்னிடம் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். உன் கருத்து கேட்க வேண்டுமென நினைக் கிறேன். என் தந்தை, எனக்கு மறு திருமணம் செய்து வைக்கலாமா என நினைக்கிறார். என்னிடம் விருப் பம் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பொட்டு வைக்கக்கூட சுதந்திரம் இல்லையே என்கிறபோது, திருமணம் செய்து கொண்டால், பொட்டு வைத் துக் கொள்ளலாமே, இருக்கின்ற கலர் புடவைகளையெல்லாம் கட்ட லாமே, நாலு மனிதர்களுடன் சகஜ மாய் பேசலாமே- என்கிற ரீதியில், என் தந்தையிடம் சரி எனச் சொல்லலாமா என அற்பத்தனமாய் கூட யோசித்தேன்.
என் நிலையை உன்னால் மட் டுமே புரிந்து கொள்ள முடியும். என்ன சொல்கிறாய் பிரியா ? எனக்கு சென்னையில் ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர முடியுமா? அல் லது அப்பாவிடம் “சரி” சொல்லவா? எனக்கு குழப்பம். அதனாலே உனக்கு இந்தக் கடிதம். இன்னும் உன்னிடம் நிறைய பேச வேண்டுமென நினைக்கிறேன்.
இப்படிக்கு
மடிந்து கொண்டிருக்கும்
ராதிகா.
கடவுள் ஏன் சிலசமயங்களில் இப்படியெல்லாம் மனிதர்களை அலைக்கழிக்கிறார். அதுவும் நல்ல மனிதர்களை ஏன் இப்படி இரக்க மற்ற முறையில் சோதித்துப் பார்க் கிறார். சோதித்து பார்ப்பதுதான் அவர் தொழிலா? என்னவோ… கடவுள் என்பவர் உண்மையில் மனித உருவமா? அல்லது பேராற் றல்மிக்க சக்தியா? எந்த சக்தியால் இந்த உலகம் இப்படி இயங்குகிறது. எந்த சக்தியால் இந்த மனிதர்கள் இப்படி ஆட்டி வைக்கப்படுகிறார் கள். அந்த பேராற்றல்மிக்க இந்த சக்தி இவளுக்கு ஒரு நல்ல விடிவு காலத்தை உண்டாக்கக் கூடாதா? இவள் வாழ்விலும் ஒளி வீசச் செய் யக்கூடாதா? எப்போது? எப்படி? என்றெல்லாம் என் மனம் பலவாறு சிந்தனை வயப்பட்டுக் கொண்டிருந் தது. இப்படிப்பட்ட பலமான சிந்தனையில் பஸ்ஸில் டிக்கெட் வாங்க மறந்தே போனேன்.
ஆம்… மாலை மணி 5.30 இருக்க லாம். அப்போதுதான் நான் வீடு திரும்பியிருந்தேன். என் கணவர் இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. டி.வி.யாவது பார்க்க லாம் என்ற எண்ணத்தில் அதை ஆன் செய்தேன்.
கண்மணிப்பூங்கா முடியும் நிலை. பிறகு இன்னும் சில நொடிகளில் முற்போக்கு எழுத்தாளர் ரவிசங்க ருடன் ஒரு பேட்டி. பேட்டி கர்ண் பவர் தமிழன்பன் என அறிவிப் பாளர் சொன்னார். கேட்டவுடன் ராதிகா பற்றிய கவலை மறந்து, சற்று உற்சாகமானேன். என் காது களை தீட்டிக் கொண்டேன். கண் களை அகல விரித்துக் கொண்டேன். மனதை ஒருமுகப்படுத்திக் கொண் டேன். தமிழன்பன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம்.
ரவிசங்கர்- தமிழன்பன்- டி.வி. யில் தோன்றினர். ரவிசங்கருக்கு வயது 35 இருக்கலாம். நல்ல களையாய் இருந்தார். நல்ல உயரம்.
வழக்கமான பார்மாலிட்டிகள் முடிந்து தமிழன்பன் கேள்விகளை கேட்கத் துவங்கினார். கேட்ட கேள்விகள் மிக அருமை. அதற்கு ரவிசங்கர் கூறிய பதில்கள் அவரை முற்போக்கு எழுத்தாளர் என நிரூபித்துவிட்டது.
அவரது சொந்த வாழ்க்கை பற்றி தமிழன்பன் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியதோடல்லாமல் எனக்கு திகைப்பூட்டியது. நான் அன்று முழுவதும் நினைத்துக் கொண் டிருந்த, என் தோழி ராதிகாவின் பிரச்னைக்கு வடிகால் கிடைத்து விட்டது போல ஒரு நிமிடம் உணர்ந்தேன்.
நினைத்து, நினைத்து ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இன்று முழுவதும் என்னை அலைக் கழித்த என் மன எண்ண அலைகள், மின் காந்த அலைகளாக மாறி டி.வி. யைப் போய் தாக்கி விட்டனவா என்ன? என மன உளைச்சலுக்கு விடை மாதிரி இன்று ரவிசங்கரின் பேட்டி.
கடைசியில், ரவிசங்கர் முதன் முதலில் எழுதிய நாவல் ஒன்றின் தன்னுரையில், தன் வீட்டு முகவரி யை ‘குறிப்பிட்டிருந்ததை கண்டறிந் தேன். ரவிசங்கர் வீட்டிற்கு இரண்டு நாள் படையெடுப்பிற்குப் பிறகு, ஒரு நாள் மாலை 5 மணிக்கு அவரை சந்திக்க முடிந்தது. காலிங் பெல் ஓசை கேட்டு, ஒரு 55 வயது மதிக் கத்தக்க அம்மா கதவை திறக்காம லேயே ஜன்னல் கம்பி வழியே எட்டிப் பார்த்து, “யாரது?… என்ன வேணும்” என்றார்.
ரவிசங்கரர் சார் வீடு இதுதானே?
“ஆமா. இதுதான். என் மகன் தான். அவனைப் பார்க்கணுமா? என்ன விசயமா?” என்றார்.
நான் அதற்கு பதில் சொல்லாம லேயே “அவர் வீட்டில் இருக்காரா” என்றேன்.
“ம்… நாலு பேரோட பேசிண்டு இருக்கான்” என்று சொல்லி நிறுத்தினார்.
“வந்த நேரம் சரியில்லையோ” – என்ற எண்ணம் என் மனத்திற்குள் ஒரு நிமிடம். இருந்தாலும், “நான் பார்க்க வந்திருப்பதாக கொஞ்சம்… உங்க மகனிடம் சொல்லுங்கள்” என்றேன்.
அந்த அம்மா உள்ளே போனார் சிறிய வீடு. சுற்றிலும் தோட்டம். நிறைய விதவித மலர்ச்செடிகள். பல வண்ணங்களில் குரோட்டன்ஸ்,
மூலையில் ஒரு மாமரம். கற்பனை வெள்ளம் கரை புரண்டோட ஏற்ற சூழலில்தான் வீடு அமைந்திருக்கிறது. ரசித்துக் கொண்டிருந்தேன்.
“கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னார்” குரல் கேட்டு திரும்பினேன்.
கதவைத் திறந்து அங்கிருந்த சேரில் உட்காரச் சொன்னார். சிறிய சிட் அவுட். அளவாய் புன்னகை செய்தார். “உங்க பேரு என்ன? எங்கிருந்து வர்றேள்” என இரண்டு கேள்விகள் முறைக்காக கேட்டு விட்டு, “வெயிட் பண்ணுங்கோ- வருவான்” எனச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார்.
உள்ளே போன அவர், “ஒரு ஆண்ட்டி… வந்திருக்காங்க, போய் பாரேன்” என்றவுடன் ஒரு ஐந்து வயது பையன் எட்டிப் பார்த்தான். என்னைப் பார்த்து வெட்கப்பட்டு, 28 உள்ளே தலையை இழுத்துக் கொண்டான். மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்த்தான். கையால் சைகை செய்து கூப்பிட்டேன். நானே அவன் கையை பிடித்து இழுத்தேன். சிரித்துக் கொண்டே வந்தான்.
உன் பேரு என்ன?…ம்… ஆண்ட்டிக்கு சொல்லுவியா?
சசிக்குமார், சசிக்குட்டின்னு எங்க அப்பா கூப்பிடுவார்.
உங்க அம்மா… எப்படி கூப்பிடுவாங்க?
சசிக்கண்ணு, சசிக்கண்ணு-ன்னு கூப்பிடுவாங்க. மழலையோடு சொன்னதை ரசித்தேன்.
உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?
அப்பாதான் பிடிக்கும். அம்மா தான் என்னை விட்டுட்டு சாமிக் கிட்டே போயிட்டாங்களே- சொன்ன தைக் கேட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில்
“என்ன சசி, ஆண்ட்டிய பிரெண்டு பிடிச்சிட்டியா?” என்றபடி ரவிசங்கர் வந்தார். நான் வணக்கம் சொன் னேன். “உள்ளே வாங்க” என்றார் புன்முறுவலுடன்.
நல்ல விசாலமான ஹால். ஒரு பக்கம் ஷெல்ப்பில் புத்தகங்கள், சோபா. டீப்பாய்.
“என்னைப் பற்றி நானே அறிமுகம் செய்த பின்பு என்ன விசயமா- வந்தீங்க” என்றார். நான் தயங்கி னேன். அங்கு அந்த நால்வர் இன் னும் இருந்தனர்.
“நான் பர்சனலா உங்ககிட்டே ஒரு விசயம் டிஸ்கஸ் பண்ணனும்னு வந்தேன். நீங்க பிஸியா இருக்கீங்க போலத் தெரியுது.”
அவர் அவர்களைப் பார்த்து- “சரி நாளை பார்க்கலாம்” என்றார். அந்த நான்கு பேரில் ஒருவன், போகும்போது ரவிசங்கரைப்
பார்த்து கண்சிமிட்டிச் சென்றதை நான் பார்க்கத் தவறவில்லை. எனக் குள் ஒரு பெருமூச்சு- மனிதர்களின் மன இயல்பை நினைத்து.
“அப்புறம்.. என்ன விஷயம்.. இப்ப சொல்லலாமே” என்றார். அப்பப்பா… உங்க வீட்டு அட்ரஸ்-ஐ கண்டு பிடிக்கிறதுக்குள்ளே போதும்.. போதும்-ன்னு ஆயிடுத்து. உங்க ளோட இன்டர்வியூவை டி.வி.யில் பார்த்தேன். அதன் பிறகுதான் உங்களை நேரில் பார்த்து பேச ணும்னு தோணுச்சு. இப்போ விஷயத்திற்கு வர்றேன். உங்களோட கதைகளெல்லாமே ரொம்ப வித்தி யாசமா அதே சமயத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லுது. உங்களோட எழுத்துக்கள் முற்போக்கா இருக்கு. பேச்சும் இப்படித்தான் இருந்தது. ஆனா நீங்க முற்போக்காளராக இருக்கீங்களான்னு எனக்கு தெரியணும்.”
“என்ன சொல்றீங்க.. எனக்கு ஒண்ணும் புரியல.”
“இல்ல, நீங்க எழுதுகிறபடி, உங்க சொந்த வாழ்க்கையிலேயும் நடந்துக்குவீங்களான்னு கேட்டேன்.”
“ம்.. ஆமா, அப்படித்தான் நடந்துக்குவேன். நான் வேற, என் எழுத்து வேற இல்ல மேடம். என் கருத்தைத் தான் எழுத்திலே சொல்றேன்.”
“இல்ல.. உங்களோட ‘உணர்வு’ என்ற சிறுகதையில் திருமணத்திற்கு ஒரே சாதியில் வரன்கள் பார்ப்பதையும், அதனால் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றியும், ரொம்பவும் தெளிவாச் சொல்லியிருக்கீங்க. அதனால், எந்த சாதியில் பெண்ணுக்கோ, ஆணுக்கோ பொருத்தமான வரன் கிடைக்கிறதோ- அப்படியே திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என்று ஆணித்தரமா சொல்லியிருக்கீங்க. இந்த கருத்தை உங்களோட பர்சனல் லைப்பில் பின்பற்றுவீர்களான்னு கேட்டேன்.”
“ஓ.. யெஸ்.. என்னோட மனைவி கூட வேறு ஜாதிதான்.”
“அப்படியா.. என்ன லவ் மேரேஜ்..ஆ..”
“ஆமா.. அது மாதிரி தான்”.
“உங்க டி.வி. பேட்டியில் உங்க மனைவி ஒன்றரை வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டதா சொன்னீங்க.. எப்படி இறந்தாங்க?”
“மறக்க நினைக்கிறதை ஞாபகப் படுத்துறீங்க. சரி. ஓ.கே. அது ஒரு கோரமான ஆக்ஸிடெண்ட்.”
“ஓ.. சாரி.. அதுக்கு மேலே எதுவும் மாட்டேன். இருந்தாலும் “வாழ்க்கை நிரந்தரம் இல்லை”ங்கிற உண்மையை இந்த மாதிரி சமயங்களிலே நினைச்சு, மனதை சமாதா னப்படுத்திக்கணும். வேற வழியில்லை. சரி.. இப்போ குழந்தைக்காக ரீமேரெஜ் பண்ணிக்கிறது பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்னு சொன்னீங்க. இனிமே நீங்க எப்படிப்பட்ட பெண்ணாப் பார்த்து செலக்ட் செய்வீங்க. இதுல உங்க முற்போக்கை காட்டுவீங்களா?”
“இதுல என்ன முற்போக்கை காட்ட… அம்மா பாத்துட்டு இருக்காங்க. ஏதோ ஓரளவு பிடிச்சா மேரேஜ் பண்ணிக்க வேண்டியது தான்.”
“நான் என்ன சொல்ல வந்தேன்னா.. உங்களை மாதிரி, கணவனை இழந்த இளம் பெண்கள் எத்தனையோ பேர் இருப்பாங்க. அந்த மாதிரி பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டா? அல்லது புதுப்பெண்ணா பார்க்கிறீங்களா?”
“என்ன் இப்படியெல்லாம் கேட்கறீங்க… எப்படி கிடைக்குதோ அப்படி…”
“அப்படின்னா… புதுப்பெண்ணா கிடைச்சாலும் மேரேஜ் பண்ணிப்பீங்க.. அப்படித்தானே.”
“ஆமா.. கிடைச்சா பண்ணிப்பேன்.”
“நீங்க நல்லா எழுதுறீங்க…உங்க ளோட எழுத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு. அழகாகவும் இருக்கீங்க. அதனால நிறைய இளம் பெண்கள் உங்களை மேரேஜ் பண்ணிக்க முன் வரலாம். அதுல சந்தேகமே இல்ல. அதே சமயத்திலே… உங்க நிலையிலுள்ள.. விதவை பெண்களை.. மேரேஜ் பண்ணிக்க எத்தனை இளைஞர்கள் முன் வருவாங்க சொல்லுங்க.
நீங்க ஏன் அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென நீங்க திடமா நினைக்கல. இது ஒன்றும் பெரிய தியாகம் இல்ல. முற்போக்குன்னு கூட சொல்ல முடியாது. நீங்களும் இதே நிலையில் தான் இருக்கீங்க. பட்… ஆம்பளையா இருக்கீங்க. இது ஒரு மனிதாபிமானம் அவ்வளவுதான். புதுப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதை விட இந்த மாதிரியான பெண்கள், உங்களுக்கு ரொம்பவும், ஆறுதலாய் புரிந்து கொண்டு நன்றியுணர்வோட வாழ்க்கை நடத்துவாங்க. வாழ்க்கையும் அமைதியா இருக்கும்.”
“எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் இல்லீங்க…”
“அப்போ எனக்கு தெரிஞ்சு அப்படி யாராவது இருந்தா… சொல்லவா?”
“என்னது… சுத்தி சுத்தி இப்படி வந்துட்டீங்க.இல்ல…சரின்னு … சொன்னா ஏதாவது ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்துருவீங்க போலிருக்கே.”
“ஏதோ ஒரு பெண்ணை அழைச்சிட்டு வர மாட்டேன் மிஸ்டர் ரவிசங்கர். அப்படியே அழைச்சிட்டு வந்தாலும், தங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெண்ணாத் தான் அழைச்சிட்டு வருவேன்.”
“என்ன சொல்றீங்க நீங்க..?”
“இல்ல.. எனக்கு தெரிஞ்சி ஒரு பெண் ராதிகான்னு பேரு. உங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமா இருப்பாங்க. விதவை தான். வயசு 24 ஆகுது. ஹஸ்பென்ட் ஜான்டீஸ் வந்து மூன்று வருஷத்திற்கு முன்னாடி இறந்து போயிட்டார். ரொம்பவும் அழகா இருப்பா. பி.எஸ்சி. படிச்சிருக்கா. அவளோட அப்பா இப்போ ரீ-மேரேஜ் பண்ணலாமான்னு நினைக்கிறார். இதப்பத்தி உங்ககிட்டே கேட்கலாம்ன்னுதான் இவ்வளவு முயற்சி பண்ணி, உங்ககூட இப்போ, இப்படி பேசிட்டு இருக்கேன்.”
“கொஞ்சம்.. மெதுவா பேசுங்க. அம்மாவிற்கு கேட்டுடப் போறது.”
“என்ன… அம்மாவிற்கு ரொம்ப பயப்படுவீங்க போலிருக்கு.”
“அப்படின்னு இல்ல… அவுங்க ரொம்ப தீவிரமா எனக்கு பெண் தேடிட்டு இருக்காங்க. முதலில் என் இஷ்டப்படி மேரேஜ் பண்ணிட்டேன். இப்போ வாவது அம்மா இஷ்டப்படி செய்யட்டுமேன்னு அவுங்க பொறுப்பில் விட்டுட்டேன். நீங்க சொல்ற விஷயம் யோசிக்க வேண்டிய விஷயம்.”
“இதுல என்னங்க யோசிக்க வேண்டியது இருக்கு. பெண்ணைப் பார்த்துட்டு பிடிக்குதா, பிடிக்கலையா ஒத்து வருமான்னு யோசிங்க.”
“அதுக்கில்லீங்க.. எனக்கு ஒன்றும் இல்ல. அம்மாதான் முதலிலேயே வேறு சாதிப் பெண் மருமகளா வந்துட்டாள்ன்னு ரொம்ப வருத்தப் பட்டாங்க. அதனாலத்தான் இப்போ வாவது அவுங்க ஆசைப்படி பண்ணிப்போம்ன்னு நினைக்கிறேன்.”
“அதாவது உங்க ஜாதிப் பெண் ணா இருக்கணுங்கிறீங்க. அப்படித்தானே. அம்மா நினைக்கிறாங்க. அதனாலதான்.”
“என்ன ரவிசங்கர்… இப்படி பேசறீங்க… டி.வி.யில நீங்க பேசியதை கேட்டுட்டு ரொம்பவும் நம்பிக்கையோடு வந்தேன். ஜாதியை ஒழிக்கனும்,கலப்பு திருமணம் செய்துக்கனும், குழந்தைகளை ஸ்கூலில் சேர்க்கும்போது ஜாதி கேட்கக்கூடாது. விதவைகளின் திருமணத்தை எல்லோரும் வரவேற்கணும்னு இன்னும் என்ன என்னவோ சொன்னீங்க. இப்ப என்னடான்னா… உங்க ஜாதிப் பெண்ணா இருக்கணும்னு சொல்றீங்க. பெண்ணா புதுப் கிடைச்சா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றீங்க. எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு. நீங்க வெளி வேஷம் போடறீங்க.”
“என்ன… இப்படி சொல்றீங்க. இதை எப்படி வேஷம்ன்னு சொல்லுவீங்க. அப்படின்னா நான் முதலிலேயே எங்க சாதிப் பெண்ணா பார்த்துல்ல கல்யாணம் பண்ணியிருக்கணும். அப்படியில்லையே.. இப்போ அம்மாவிற்காகத்தான்.”
“அம்மாவிற்காக, குழந்தைக்காக… என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லாதீங்க மிஸ்டர் ரவிசங்கர். நான் சொன்ன விசயத்தை முதலில் உங்க அம்மாகிட்டே பேசுங்க. நல்லா புரிய வைங்க. வீட்டில உள்ள உங்க அம்மாவையே நீங்க புரிய வைக்க முடியல். தயங்குறீங்க. அப்புறம் எப்படி மத்த அம்மாக்களுக்கு உங்க கதைகள் மூலம் புரிய வைக்க போறீங்க… சொல்லுங்க.
ஒவ்வொருத்தரும் இப்படித்தான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறாங்க. எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக நீங்களே இப்படி அம்மாவிற்கு பயந்திட்டு இருந்தா… மத்தவங்க எம்மாத்திரம். முதலில் நீங்க முற்போக்கா இருங்க. பிறகு மத்தவங்களுக்கு எழுதுங்க. முதலில் உங்க குடும்பத்திற்கு புரிய வையுங்க. அப்புறம் சமுதாயத்திற்கு புரிய வைக்கலாம்.”
“என்னங்க.. இப்படி புரிஞ்சுக்காம பேசறீங்களே…”
“எனக்கு நல்லா புரியுது ரவிசங் கர். நல்லா புரியுது.. எல்லாமே புரியுது. உங்க மனைவி வேறு ‘ஜாதியா இருந்தாலும், காதல் ஏற் பட்டதால், அந்தக் காதல் மோகத்தி லே, நீங்க பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண் டிருப்பீர்கள். “லவ் இஸ் பிளைன்டு’ ‘ன்னு சொல்ற மாதிரி… அது உங்க சுயநலம்! செல்பிஸ்னஸ்! வேற எந்த முற்போக்கும் இல்ல. அப்போ ஜாதி வித்தியாசம் பார்க்கலேன்னா.. இப்பவும் வேறு சாதிப் பெண்ணை மேரேஜ் பண்ணிக்கலாமே. இப்போ என்ன அம்மாவிற்காக.”
“ஓ… சாரி… உங்களோட விவாதம் பண்ண நான் வரல. இப்போ நீங்க என்னதான் சொல்றீங்க.”
அது வந்து…
“என்ன சார், அது வந்து… போயி… நான் சொல்ற அந்த பெண் உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றவளா இருப்பா. உங்களைப் போன்றவர்கள்தான் அப்படிப் பட்ட. ஒரு பெண்ணுக்கு நல்வாழ்வு தர முடியும் என நினைத்ததால் வந்தேன். முதலில் அந்தப் பெண்ணைப் பாருங்க… அப்புறம் பிடிக்குதா, இல்லையான்னு முடிவு செய்யலாம்.. என்ன சொல்றீங்க.”
“யோசிக்:கிறேன்… அம்மாவிடமும் கேட்கிறேன்… பார்க்கலாம்.”
“உங்க பேச்சிலே திடமில்லையே.”
சிரிக்கிறார் அசடு வழிகிறது முகத்தில்,
“சரி.. மிஸ்டர் ரவிசங்கர். நான் வர்றேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த அட்ரஸ்-க்கு லெட்டர் போடுங்க” – முகவரி அட்டையை நீட்டினேன்.
அப்போதும் அந்த அசட்டு சிரிப்பு. தன்னுடைய வேஷம் களையப்பட்டதால் ஏற்பட்ட அவமான, அசட்டு சிரிப்பு.
பஸ் ஸ்டாப்பிற்கு வந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. இருட்டை சாதகமாக்கிக் கொண்டு, பலமாய், ஆழமாய் சிந்தித்தேன்.
ம்… ராதிகாவிற்கு என்ன பதில் சொல்வது… வேலை வாங்கித் தரு கிறேன் எனச் சொல்லி சென்னை வரச் சொல்வதா? அல்லது அவளின் தந்தை சொல்கிறபடி யாரையாவது திருமணம் செய்து கொள் என்று சொல்வதா? கண்மூடி யோசிக்கை யில்….
மடிந்து கொண்டிருக்கும் ராதிகாவிற்கு!
தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நில். உண்மையில் உன்னைப் புரிந்து கொண்டு உன்னை மனப் பூர்வமாய் ஏற்றுக் கொள்ள, எவனாவது முழு மனதுடன் முன் வந்தால் அப்போது நீ திருமணத்தைப் பற்றி யோசி. ஆனால் அப்படிப்பட்ட ஆண்களை சந்திக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களின், பாராட்டுதலுக்காக மேடையேறி நடிக்கும் வேஷக்காரரைப் போன்ற மனிதர்கள்தான் இங்கு அதிகம். அப்படிப்பட்ட வேஷதாரிகளை நம்பி ஏமாந்து விடாதே.
மற்றவர்களைப் பற்றி வீண் பேச்சு பேசி, அதில் அற்ப சுகம் காணும் மனிதர்கள் அன்றும் இன் றும் என்றும் உண்டு. கிராம மக்கள் மட்டுமல்ல. நகர மக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மத்தவங்களின் வம்பு பேச்சுக்கு பயந்து அரண்டு போனா நாம் வாழ முடியாது ராதிகா. வாழவே முடியாது.
சென்னை வா. உனக்கு இன்னும் வயதிருக்கிறது. ஐ.ஏ.எஸ். எழுது. உனக்கு எல்லா வகையிலும் நான் உதவி செய்கிறேன். நிச்சயம் நீ முயற்சி செய்தால் வெற்றி பெறுவாய். இப்போதைக்கு உன் தகுதிக்கு ஏற்ப ஒரு பார்ட் டைம் ஜாப் நான் ஏற்பாடு செய்கிறேன். சென்னையில் பல வசதிகள் உண்டு. ஐ.ஏ.எஸ். கோச்சிங் கிளாஸில் சேர். முயன்றால் முடியா தது இவ்வுலகில் எதுவு மில்லை. உன்னோட முழு கவனமும் அதிலே யே இருக்கட்டும். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.
ஏற்பட்ட அவமானங்களை வைராக்கியமாய் மாற்றிக் கொள். ஏற்படும் தடைகளை வெற்றியின் படிகளாய் மாற்றிக்கொள். அப்புறம் பார். எத்தனை பேர் உன் கீழ் கை கட்டி, வாய் பொத்தி நிற்பார்கள். எத்தனை புகழ் மாலை சூட்டுவார் கள். எத்தனை பேர் உன் காலடியில் தவம் கிடப்பர். நினைத்துப் பார். இப்போது உனக்காக, யாரிடமும் போய் என் பெண்ணை ஏற்றுக் கொள்வீர்களா? என கெஞ்சும் நிலையை உன் தந்தைக்கு ஏற்படுத்தாதே.
பக்க பலத்துடன் உன் தோழி
பிரியா
மனதில் வந்த வரிகளை இன்றைக்கு பிரியாவுக்கு எழுதிவிட்டுத் தான் தூங்கப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன்.