வெட்கம் (எழுதாத சட்டம்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,437 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சனிக்கிழமை வேகமாக எழுந்த உற்சாகத்துடன் தன் பணியை செய்யத் தொடங்கினாள். பூங்கொடி ஒரு பணிப்பெண். முப்பது வயதான பூங்கொடி மின்னலைப் போல வேலைகளை செவ்வனே செய்பவள். பணிவானவள். பத்தாம் வகுப்பு வரை படித்தவள். அவளின் அருமை அந்த வீட்டு எஜமானன் சரவணனுக்கு மட்டுமே தெரிந்தது.

வீட்டு எஜமானியான கோகிலா பூங்கொடியை ஒரு பெண்ணாகவே கருதவில்லை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி வாட்டி எடுத்தாள் பூங்கொடியும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஆசபாசங்கள் இருக்கும் என்பதை ஏனோ மறந்து, பூங்கொடி நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என பழைய காலத்து மாமியார் போல கொடுமை படுத்தினாள்.

சரவணன்-கோகிலா தம்பதிகள் ‘தோ பாயோ’வில் ஐந்து அறை வீட்டில் வசிக்கின்றனர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் வயது எட்டு, ஆறு இரண்டு பையன்களும் சுட்டித்தனம் செய்து வீட்டை குட்டை ஆக்கினர். இதுநாள் வரை இரண்டு பேரையும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்குச் சென்று ‘ந்த கோகிலா-சரவணன் இருவரும் பணிப்பெண் ஏஜென்ஸி மூலமாக பூங்கொடியை வீட்டு வேலைக்கு பயிற்சி பெற்றவள் என்று தேர்ந்தெடுத்தனர் பூங்கொடி தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவள் அழகிய பருவக் கொடியான அவள் நேரம் இந்த நாட்டில் கோகிலாவிடம் வந்து மாட்ட வேண்டும் என்று இறைவனின் விருப்பம் போலும்.

பூங்கொடி நன்றாக சமைக்கத் தெரிந்தவள். அன்று ஒருநாள் பூங்கொடி சமைத்த வஞ்சல மீன் குழம்பு சமையலை பாராட்டி சரவணன் ரப்பிட்டது பெரிய குற்றமாகி விட்டது கோகிலாவுக்கு.

“எப்படி நீங்க ஒரு வேலக்காரிய பாராட்டலாம்” என்றுகுற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்த கோகிலா, அன்றிலிருந்து இன்றுவரை அது ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருந்தது.

பூங்கொடி தன் மனதிற்குள் அழுது கொண்டு வெளியே கண்ணீரை காட்டாமல் ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என சளைக்காமல் வீட்டு வேலைகளை செய்ததுடன் கோகிலா போட்ட சட்ட திட்டங்களையும் ஏற்றுக் கொண்டாள். வாரத்தில் ஐந்து நாள் இந்த வீட்டு வேலைகளை செய்து முடிப்பதுடன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோகிலாவின் அக்கா கண்ணம்மா வசிக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு வீட்டை கழுவி கழிவறைகளைச் சுத்தம் செய்து, குவிந்துகிடக்கும் ஒரு மூட்டை துணிகளுக்கும் ‘அயர்ன்’ இஸ்திரி போட்டு கொடுத்து விட்டு வர வேண்டும் என்ற சட்டம்தான்.

பூங்கொடி முகம் சுளிக்காமல் “சரிம்மா நீங்க என்ன வேல சொன்னாலும் செய்யறேன்” என்றாள். அன்றிலிருந்து பூங்கொடிக்கு இரு வீட்டு வேலையாயிற்று.

பூங்கொடியின் மகன் பூபதி தமிழகத்தில் ‘கான்வன்ட் ‘ பள்ளியில் சேர்க்கப்பட்டு எட்டாம் வகுப்பில் படித்து வந்தான் தன் மகன் பூபதி எப்படியாவது படித்து பட்டம் பெற்று இந்த சமூகத்தில் உயர்ந்த பதவியில் பேரும் புகழோடும் வாழ்ந்தால் போதும், அதற்காக யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு தன் பணியை உயர்வாகக் கருதி செய்து வந்வுள் ஆனால், கோகிலாவோ பூங்கொடியை வதைத்து வாட்டி எடுத்தாள்.

ஒரு நாள் அப்படித்தான் கோகிலா தன் தோழி ஒருத்தியை தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள். அங்கு வந்த அந்த தோழி கல்பனா என்பவள் பூங்கொடியைப் பார்த்து,

“ஏய் கோகிலா இந்தப் பெண் பூங்கொடியைப் பார்த்தா வேலக்காரி மாதிரியே இல்ல, நல்ல படித்த பெண் மாதிரி அழகா ‘ இருக்கா” என்று சொன்னதுதான் குற்றம். அந்தத் தோழி வெளியே சென்றவுடன், பூங்கொடியை அழைத்து “இனிமே நீ இந்த மாதிரி கலர் சட்டையெல்லாம் போடக் கூடாது தெரியுதா என்று சத்தம் போட்டதுடன் பெரிய உலக அழகின்னு நெனப்பு, போ போய் வேலையைப் பார்னு ‘ சொன்னதுடன் பொறாமையால் இன்னொரு பெரிய தவறையும் செய்து விட்டாள். ஆம், சமையலறையில் சமைத்துக் கொண்டு நின்ற பூங்கொடியின் நீண்ட கூந்தலை கத்திரிக்கோலால் வெட்டிவிட்டாள் கோகிலா சட்டென்று திரும்பிய பூங்கொடி அதிர்ச்சியுடன் “அம்மா என்ன காரியம் பண்ணிட்ம்ங்க” என்று அழுதாள். “என் புருசனுக்கு என்னோட நீண்ட தலைமுடி ரொம்ப பிடிக்கும், அதைப் போய் வெட்டிட்டீங்களே”, என வேதனையுடன் அழுது கொண்டே சொன்னாள் பூங்கொடி.

பதிலுக்கு கோகிலா “உம் புருசனுக்கு புடிக்கும்னா நீஉன் கணவணோடு அங்கேயே இருக்க வேண்டியதுதானே, இங்கு வந்து என் புருசனை மடக்கிப் போட பார்க்கிறியா?”, என நாக்கில் நரம்பில்லாமல் பேசினாள்.

ஒவ்வொரு நாளும் பூங்கொடிக்கு ஒரு யுகமாக கழிந்தது. சரி முதலாளியம்மாதான் இப்படி கொடுமை படுத்துகிறாள் என்றால் ஒரு நாள் அப்படித்தான் கோகிலாவின் இளைய மகன் பிரபுவை குளியலறையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அப்போது நிம்ரென்று பூங்கொடியின் இரண்டு கன்னங்களிலும் தண்ணீரை ஊற்றி மாறி மாறி வேகத்துடன் அறைந்து விட்டான். அந்த பையன் விரல்கள் பூங்கொடியின் கன்னத்துல் பதிந்ததுடன் பூங்கொடியின் கன்னம் வீங்கிவிட்டது. அன்று முழுவதும் பூங்கொடிக்கு தலைவலி. வீட்டு வேலைகளை முடிக்க முடியாமல் படுத்து விட்டாள்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய கோகிலா, வீட்டு வேலைகள் முடிக்காமல் கிடப்பதை பார்த்து பூங்கொடியை சத்தம் போட்டு திட்டினாள் பூங்கொடி நடந்த விபரத்தை எடுத்துச் சொல்லியும் கேளாமல், கோகிலாவோ “நீ ரொம்ப சோம்பேறி ஆகிட்டே, என புகார் செய்தாள். ஒரு மருந்து எடுத்துக் கொடுத்து ஆறுதல் சொல்லவில்லையே என பூங்கொடி மனதிற்குள் பட்ட வேதனை இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

எழுதாத சட்டமாக இருக்கும் இந்த (பணிப்பெண்களுக்குச் செய்யும்) கொடுமைகள் என்று தீருமோ ! எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு பூங்கொடி இந்த வீட்டுக்கு மாடாக உழைக்கக் காரணம்) தன் லட்சியக் கனவு பலக்க வேண்டும் என்றுதான் பூங்கொடியின் கணவன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன்தான் ஆனால் போதிய வருமானம் கிடைக்க வழியில்லை. தன் மகன் பூபதி நன்றாக படித்து முன்னேற வேண்டும் அதற்காக மனைவி பூங்கொடியை பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்தான் இத்தனை அன்பு பாசமுள்ள கணவனையும், மகனையும் பிரிந்து வந்அ ஏச்கம் பேச்சும் கேட்டு வேலை செய்த பூங்கொடிக்கு கோகிலாவின் அக்கா கண்ணம்மா வீட்டில் அன்பு கிடைத்தது.

கண்ணம்மா இளகிய மனம் படைத்தவள். பூங்கொடி வந்தால் மறக்காமல் தன் கையால் சமைத்த உணவை பூங்கொடிக்கு சாப்பிடக் கொடுத்து சந்தோஷப்படுவாள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த கோகிலாவும் கண்ணம்மாவும் இரு வேறு மனம் கொண்டவர்களாக பிரதிபலிப்பதைப் பார்த்து பிரமித்தாள் பூங்கொடி.

வேலைகளை வேகமாக முடித்த பூங்கொடி கோகிலாவிடம், “அம்மா, கோழியை பொறிச்சு சம்பல் வச்சுட்டேன். கீரையை பிரட்டல் பண்ணி ஐயாவுக்கு மிளகு ரசம் பிடிக்குமேன்னு அதையும் செஞ்க தயாரா வச்சுட்டேன் துணியை துவைச்சு காய போட்டுட்டேன். இப்போ நான் (பீஷான்) கண்ணம்மா அக்கா வீட்டுக்கு போகட்டுமா, என பணிவுடன் கேட்டாள்.

கோகிலா பூங்கொடிக்கு உத்தரவு வழங்கிய பின், தோ பாயோவிலிருந்து பேருந்து மூலம் பீஷானுக்கு பறந்து வந்தாள் பூங்கொடி . ஐந்து நாள் கோகிலாவிடம் பட்ட வேதனையை மறக்க கண்ணம்மாவின் ஆறுதல் மொழி பயன்பட்டது. கண்ணம்மா மனித மனங்களுக்கு மரியாதை கொடுத்தாள். பூங்கொடிக்கு கண்ணம்மா கொடுத்த அன்பு அவர்கள் வீட்டில் வேலைப்பளு தெரியாமல் வேலையை முடிக்க உதவியது. கோகிலாவோ வீட்டு வேலைகளை முடித்த பிறகு உணவை உண்ண வேண்டும் என சட்டம் இயற்றி இருந்தாள். ஆனால் கண்ணம்மா பூங்கொடிக்கு வயிற்றுக்கு சாப்பிட்டு விட்டு நீ வேலை செய்தால் போதும்” என்பாள். கண்ணம்மாவின் இரக்க மனதை அறிந்து கொண்ட பூங்கொடி கோகிலாவின் எரியும் நெருப்பான பேச்சையும் தனக்கு செய்த கொடுமைகளையும் கண்ணம்மாவிடம் சொல்லி அழுதாள்.

மனசு கேட்காமல் கண்ணம்மாவுடம் ஒரு நாள் தங்கை கோகிலாவிடம் நேரில் வந்து பூங்கொடியின் நீண்ட தலைமுடியை நீ வெட்டியது குற்றம்தான் என கேட்டாள். அதற்கு கோகிலா சொன்ன பதில் “அவ தல முடி பூரா சாப்பிடுற சாப்பாட்ல விழுந்து கிடக்கு, பூங்கொடி தலையில் பேன் இருந்துச்சு, அதான் முடிய வெட்டி சுத்தமா அழகா இருக்கட்டுமேன்னு செஞ்சேன்”, என்று ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல’ கூறி தப்பித்துக் கொண்டாள்.

பூங்கொடி வேலைக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. இதுவரை கோகிலா பூங்கொடிக்கு தன் பழைய சட்டைகளைத்தான் கொடுத்திருக்கிறாள். புதியது என்று எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. ஆனால், கண்ணம்மா தன் வீட்டில் பகுதி நேரமாக வேலை செய்யும் பூங்கொடிக்கு சிராங்கூன் ரோடு ‘ராயல் சாரி பேலஸ்’ கடைக்குச் சென்று தொன்னூறு வெள்ளிக்கு மைசூர் சில்க் புடவை ஒன்று வாங்கிக்

வந்தாள். கொடுத்தாள். வாரந்தோறும் முப்பது வெள்ளி பணமும் கொடுத்து சேலையை கையில் வாங்கிய பூங்கொடி மகிழ்ச்சி பொங்க “அம்மா எனக்காம்மா இந்த சேல, எனக்குப் பிடிச்ச நீலக்கலர்ல வாங்கியிருக்கீங்க, ரொம்ப வெல இருக்குமே, அம்மா என் புருசன்கூட எனக்கு இந்த மாதிரி சேல வாங்கித் தந்ததில்லே, உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு” என்று கூறி கண்ணம்மாவை வாயார வாழ்த்தினாள்.

கண்ணம்மாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவருமே கல்லூரியில் படித்து வந்தனர்.

வழக்கம் போல செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டு மாலை ஆறு மணிக்கு கோகிலாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் பூங்கொடி. பூங்கொடியின் கையில் பார்சல் ஒன்று இருப்பதைப் பார்த்த கோகிலா அதட்டலுடன் “என்ன அது?” என்று கேட்க பூங்கொடியும் மறைக்காமல் கண்ணம்மா கொடுத்த புதிய சேலையை எடுத்துக் காட்டினாள்.

சேலையைப் பார்த்த கோகிலா அதிர்ச்சியுடன் “என்ன மைசூர் பட்டா இந்தச் சேலையை உடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு?” என்று வயிற்றெரிச்சலுடன் கூறியதுடன் “போ போய் வேலையைப் பார்” என்று பூங்கொடியை மிரட்டினாள். அதோடு நில்லாமல் உடனே அவள் அக்கா கண்ணம்மாவுக்கு போன் போட்டு “இதோ பாரு இனிமே பூங்கொடிக்கு இந்த மாதிரி புது புடவை வாங்கிக் கொடுக்க வேண்டாம் தெரியுதா, ஏன் பணத்தை வீணாக்கிற?” என்று கண்ணம்மாவுக்கு கணக்குப் பாடம் சொன்னாள்.

இதைக் கேட்ட பூங்கொடி மனதிற்குள் அழுதாள். இவ்வளவு நேரம் கிடைத்த மகிழ்ச்சியை இழந்து துக்கத்துடன் காணப்பட்டாள். சமையலறையில் கிடந்த , பாத்திரங்களை கத்தமாக கழுவி அடுக்கி வைத்தாள். குப்பை மேடாக கிடந்த சமையலறையை கோபுர கலசமாக மாற்றினாள். இரவில் வீடு திரும்பிய சரவணன் தமிழ் நாட்டிலிருந்து வந்த கடிதம் ஒன்றை பூங்கொடியிடம் கொடுத்தான். ஆவலுடன் கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். அது அவள் கணவன் ராமையாவிடமிருந்து வந்திருந்தது.

வேலைகளை முடித்துவிட்டு இரவில் படுக்கும் முன்பு கணவனின் கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள். அவள் கண் முன்னே கணவன் இருப்பது போல இருந்தது.

அன்பிற்கினிய மனைவி பூங்கொடிக்கு,

நீ எப்படி இருக்கிறாய்? எங்களைப் பார்க்க தேட்டத்துடன் இருப்பாய் என எனக்குத் தெரியும். கவலைப்படாதே பூங்கொடி. நாம் எல்லாம் ஒன்றாக வாழும் நல்ல நாள் விரைவில் வந்து விடும் என நம்ழூர் ஜோஸியர் சொன்னார். நம்பிக்கையுடன் இருக்கிறேன். மகன் பூபதி அடிக்கடி உன்னை பார்க்க வேண்டும் என்று அழுதான். அதனால் இரண்டு நாள் காய்ச்சல் வந்து வைத்தியரிடம் காட்டி இப்போது குணமாகிவிட்டது. இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்.

தினந்தோறும் உன்னை நினைத்து வாடுகிறோம். இன்னும் ஓராண்டு ஒரு நொடியில் வந்து விடாதா என்று இறைவனிடம் கெஞ்சுகிறேன். என்ன பாவம் செய்தோம் , நாம் இருவரும் இப்படி பிரிந்து வாழ. பல தியாகங்களைச் செய்து மகனை படிக்க வைக்கிறோம். ஆண்டவன் நம்மை கண் திறந்து பார்த்து ஆசி கூறி விட்டால் நம் கஷ்டம் தீர்ந்து விடும். உன் கையால் சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது.

முடிந்தால் ரூபாய் இரண்டாயிரம் பணத்தை உடனே அனுப்பி வைக்கவும். மகன் பூபதி பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அங்கு உன்னை வீட்டுக்கார அம்மா அன்புடன் நடத்துகிறார்களா? விபரம் அறிய விரும்புகிறேன். கவலைப் படாதே பூங்கொடி. நாம் ஒன்று சேரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அன்புடன் கணவர்
ராமைய்யா

கடிதத்தை படித்து முடித்த பூங்கொடியின் மனசு நெருஞ்சி முள்ளாக குத்தி வலித்தது. கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மகன் பூபதியை உடனே சென்று பார்த்து கட்டிப்பிடிக்க மனம் ஏங்கியது. தன் கைப்பட சமைத்து கணவனுக்கும் மகன் பூபதிக்கும் பரிமாற கொள்ளை ஆசை. ஆனால் நினைத்தவுடன் இந்தியாவுக்கு செல்ல முடியுமா?

சில மனிதர்களின் வாழ்க்கையை இறைவன் ஏன் போராட்டமாகவே வைத்துள்ளான். வாழ்க்கை என்ற கடலில் நீந்தத்தான் இறைவன் மனிதர்களை இவ்வுலகில் படைத்திருக்கிறான் என்றாலும் சில பெண்களை மட்டும் கொந்தளிக்கும் அலைகடலில் தவிப்பதைக் காண கல் மனம் படைத்தவர்களையும் கரைய வைத்துவிடும். ஆனால், கோகிலாவி ன் மனம் க ரைய வி ல்லையே ? அழுது கெண்டே தூங்கிவிட்டாள் பூங்கொடி. இரவில் அவள் கனவில் தமிழகத்துக்குச் சென்று மகன் பூபதிக்கு தன் கையால் சமைத்து வயிராற சாப்பாடு போட்டாள். அவள் ஆசைகளை கனவில்தான் நடக்க சாத்தியமாயிற்று

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல பூங்கொடி அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள். காலை ஏழு மணிக்கு சரவணன் எழுந்து பூங்கொடியிடம் தேநீர் கலந்து கேட்டு அருந்திவிட்டு வழக்கமாகச் செல்லும் சிராங்கூன் சாலைக்கு தன் சொந்தக் காரிலேயே வீட்டுக்குத் தேவையான மளிகை, உணவுப் பொருட்களை வாங்க சென்று விட்டான். காலை மணி ஒன்பது ஆயிற்று. இன்னும் கோகிலா படுக்கையறையிலிருந்து எழுந்து வரவில்லை.

திடீரென்று படுக்கையறையிலிருந்து ‘ஐயோ அம்மா!’ என சத்தம் கேட்டது. பூங்கொடி ஓடிச் சென்று பார்த்தாள். கோகிலா காலைப் பிடித்துக் கொண்டு “ஐயோ! வலிக்கிறதே, எழுந்திருக்க முடியலே” என துவண்டு படுத்தாள்.

“அம்மா, அம்மா என்னம்மா ஆச்சு?” என பதற்றத்துடன் பூங்கொடி கோகிலாவை தூக்கிக் கொண்டே கேட்டாள். “ஐயாவுக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வரச்சொல்,” என கோகிலா சொன்னதைக் கேட்டதும், பூங்கொடி சரவணனின் கைத்தொலைப்பேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்த சற்று நேரத்தில் சரவணன் மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்து கோகிலாவை தூக்கி தன் காரில் வைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று அவசர பிரிவில் கோகிலாவுக்கு சிகிச்சை நடைபெற்றது.

சற்று உடல் பருமனாக இருந்த கோகிலாவை ஏற்கனவே மருத்துவர் உடற்பயிற்சி செய்யச் சொல்லி ஆலோசனைக் கூறியிருந்தார். உடல் பருமனைக் குறைக்க கோகிலாவும் மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மருத்துவர் கோகிலாவை பரிசோதித்து விட்டு தவறான மாத்திரைகள் உட்கொண்டதால் உடல் பலவீனம் ஏற்பட்டு கால் தற்காலிகமாக நடக்க இயலவில்லை. மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ரத்தப் பரிசோதனை செய்த பின்பு கோகிலாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

சரவணனுக்கு போன உயிர் திரும்பி வந்தது. மனைவிக்கு ஒன்று என்றால் எந்தக் கணவனுக்கும் மனம் தாங்காது.

பூங்கொடி வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்தாள். வீட்டில் சேட்டை செய்யும் இரண்டு பையன்களை பார்த்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கோகிலாவையும் பார்த்துச் சென்றாள். கோகிலாவின் அக்கா கண்ணம்மாவும் பூங்கொடிக்கு உதவியதுடன் கோகிலாவை மருத்துவமனைக்கு வந்து பார்த்து ஆறுதல் சொன்னாள்.

ஒரு வாரத்தில் வீடு திரும்பிய கோகிலா ஒரு மாத விடுப்பில் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்க மருத்துவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பூங்கொடி கோகிலாவுக்கு கோழி சூப் போன்ற பத்திய உணவை சமைத்துக் கொடுத்து ஒரு தாயை விட மேலான அன்பை செலுத்தினாள். நேரத்திற்கு மருந்து கொடுத்து கோகிலாவை கவனித்ததுடன், தன் எஜமானி கோகிலா விரைவில் எழுந்து நடந்து பழையபடி சுறுசுறுப்புடன் இருப்பதற்காக மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து விளக்கேற்றினாள். எல்லாவற்றையும் கவனித்த சரவணன் பூங்கொடிக்கு ஏதாவது உதவி செய்ய எண்ணினான்.

சரியாக ஒரு மாதத்தில் கோகிலா எழுந்து நன்றாக நடக்க ஆரம்பித்தாள். பூங்கொடியின் பிரார்த்தனை வீண் போகவில்லை.

கோகிலாவே தன் கணவன் சரவணனிடம் பூங்கொடிக்கு என்ன தேவையோ கொடுத்து உதவும்படி மனமார கேட்டுக் கொண்டதுடன் பூங்கொடிக்கு தான் எவ்வளவு கொடுமைகள் செய்தும் அவள் தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டதை நன்றியுடன் நினைத்துப் பார்த்தாள். தான் அப்படி ராட்சசியாக நடந்துக் கொண்ட விதத்திற்காக வெட்கப்பட்டாள் கோகிலா.

“பூங்கொடி உனக்கு என்ன வேணுமோ கேள்” என்றாள் கோகிலா. பூங்கொடி தனக்கென்று எதுவும் கேட்காமல் தன் மகன் பள்ளிப் படிப்பிற்காக உடனே பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டாள்.

சரவணன் உடனே ரூபாய் ஐயாயிரத்தை பூங்கொடியின் கணவர் ராமையா பெயருக்கு இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததுடன், பூங்கொடிக்கு தன் மனைவி கோகிலாவை கொண்டு நகைக்கடையில் நான்கு பவுனில் இரண்டு தங்க வளையல் வாங்கி பூங்கொடியிடம் கொடுத்தாள். பூங்கொடி நன்றியோடு தங்க வளையல்களை வாங்கிக் கொண்டாள். இப்போது கோகிலா, பூங்கொடியை தன் சகோதரியைப் போல் நடத்துகிறாள்.

சரவணன்-கோகிலா தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூரின் ‘பொட்டனிகல் கார்டன்’ என்ற இடத்திற்குச் சென்ற போது மறக்காமல் பூங்கொடியையும் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பூங்கொடி அந்த பூந்தோட்டத்தைப் பார்த்து தான் முன்பு கண்ட கனவு பலித்திருப்பதைக் கண்டு பரவசமடைந்தாள்.

பணிப்பெண்கள் யாவரும் ‘முதலாளிகளின் அடிமை’ என்ற ‘எழுதாத சட்டம்’ அழிக்கப்பட்டது. விலக்கப்பட்டது. மனம் மாறி மனித நேயத்துடன் இருக்கும் கோகிலாவுக்கு இறைவன் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.

– ‘கோல்டன் பாயின்ட் எழுத்துப் போட்டி 2003’ தமிழ் முரசு 18.10.2003, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *