(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறுபராயத்திலிருந்தே விஜயன் பட்டணவாசி. கிராமத்திலி ருந்த தன் மாமன் வீட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான். அவன் அடிக்கடி மாமா வீட்டிற்கு வருவது வழக்கம். இப்பொழுதெல்லாம் திலகவதி அவனோடு முன் போல பழகுவதில்லை. கண்ணில் படுவதே வெகு அபூர்வம். பெண்பிள்ளைகளோடெல்லாம் கூடிவிளையாடும் பாடசாலை மாணவனுக்குத் தன் மாமன் மகள் திலகவதியின் நடவ டிக்கைகள் வியப்பையும் வெறுப்பையுந் தந்தன. “பட்டிக்காட்டுச் சனி யன்” என்று மனத்துள்ளேயே சபித்துக்கொண்டான். அவள் கண்ணில் படும் போதெல்லாம் விஜயனின் உள்ளம் படபடக்கும். அவனோடு அவள் ஊடாடிய காலத்தில் அவள் இவ்வளவு அழகாயிருக்கவில்லை. பருவத்தின் பூரிப்பும் அவள் அங்கங்களில் இப்படிக் குமுறிக் கொண் டிருக்கவில்லை. ஸ்ரீதிலகவதியை விட அவன் எத்தனையோ அழகிக ளோடு பழகியிருக்கிறான். உடலும் உடலும் உராய றெயில்களிலும் பஸ் களிலும் பிரயாணஞ் செய்திருக்கிறான். ஆனால் இவளில் மட்டும் அவ னைப் பித்தனாக்கும் சக்தி எப்படி ஏற்பட்டதென்று அவனால் உணர முடி யவில்லை. அவளிடமிருந்து வெகுதொலைவில் அவள் விலகியிருப்பதே அந்தக் கவர்ச்சிக்குக் காரணமென்பதை அவனால் அறிய முடியவில்லை. அவளை நேருக்நேர் சந்தித்து ஒரு வசனமாவது பேசவேண்டுமென்று சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
இராச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு கையிலொரு சிகரட்டோடு ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டு படுக்கையறையினுள்ளிருந்தான். புத்தகத்தில் அவன் பார்வையிருந்த தேயல்லாமல் உள்ளம் திலகவதியைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. தற்செயலாக ஜன்னனூடே வெளியே நோக்கிய அவன் கண்களுக்கு கிணற்றடியில் யாரோ தண்ணீர் அள்ளுவது தெரிந்தது. “காமாலைக் கண்ணுக்குச் காண்பதெல்லாம் மஞ்சள்” என்பது போலத் திலகவதியின் நினைவோடேயே இருந்தவனுக்குத் தண்ணீர் அள்ளும் அந்த உருவம் அவளைப் போலவே தென்பட்டது. உடனே அறையை விட்டு வெளிக் கிளம்பிக் கிணற் றண்டை சென்றான். அவன் எண்ணியது போல உண்மையில் திலகவதிதான் நின்று கொண்டிருந்தாள். கள்வனைப் பிடிப்பவன் போல வேகமாகச் சென்றவன், அவளை நெருங்கி யதும் பேசாமல் நின்றான்.
தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்த திலகவதி போவதா நிற்பதா என்று தெரியாமல விழித்தாள். அவள் உள்ளத்தில் ஒருவித உணர்ச்சியும் எழவில்லை. அம்மாவுக்கு மட்டுந் தான் அவள் பயந்தாள்.
“திலகவதி என்மீது கோபமா?”
“ஏனத்தான் அப்படிக் கேட்கிறாய்? நீ எனக்கு என்ன பிழை செய்தாய்?”
“நான் வந்து இன்று ஐந்து நாளாகிறதே! இன்றுவரை நீ என்னோடு கதைக்க வேயில் லையே!”
“அத்தான் வருவதாகக் கடிதம் போட்டிருக்கிறான். அவன் முன்னாலே நீ போகக் கூடாது” என்று அம்மா எச்சரித்திருக்கிறபோது நான் எப்படியத்தான் உன்னோடு கதைக்க முடியும்?…”
“என்ன!மாமி அப்படிக் கூறினாளா? ஏன்?”
“எனக்கெப்படித் தெரியும்?”
“உனக்கு என்னோடு கதைக்க வேண்டுமென்று ஆவலில்லையா திலகவதி?”
“எனக்கு எவ்வளவு ஆசை! நேற்றுப்பின்னேரம் அழுகையே வந்து விட்டது. எங்கள் வீட்டுக்குப் பின்னால நிற்கிற நாவல்மரம் இப்போது பழுத்துக் குலுங்குது. உன்னையுங் கூட் டிக் கொண்டு போனால் ஏறிப் பறித்துக் கொடுப்பாயல்லவா? நேற்றுப் பக்கத்து வீட்டுப் பையன்களெல்லாம் பறித்தார்கள்; எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. போனவருஷம் நீ வந்தபோது… உனக்கெல்லாம் ஞாபகமிருக்கிறதா அத்தான்!”
“அதற்குள் எல்லாம் மறந்துவிடுவேனா திலகவதி! மாமி எழுந்திருக்க முன் நாங்கள் போய் பழம் பறிக்க முடியாதா?”
“ஓ! ஆனால் அம்மா ஐந்துமணிக்கே எழுந்து விடுவாளே!”
“எழுந்திருக்கட்டுமே நாங்கள் அதற்கு முன்னமே போய் சீக்கரமாய் வந்துவிடுவோம்.”
“அதோ, அம்மா வருகிறாளத்தான், நான் போகப் போகிறேன்.”
“போய்வா திலகவதி, மறந்துவிடாதே. நாளை நீதான் வந்து என்னை எழுப்பவேணும்.
அவள் “ஓம்” என்று தலையை அசைத்துவிட்டு வேகமாய் நடந்தாள். அத்தானோடு தனி மையில் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தையிட்டு அவள் மிகவுங் குதூகலமடைந்தாள். ஆனால் வேறுவித உணர்ச்சி ஒன்றும் அவளிடம் மலரவில்லை. அத்தானுக்கும் அவளுக்கு மிடையே அம்மா திரைபோடாதிருந்தால் அவள் சந்தோஷமாக அத்தானோடு கைகோர்த்து விளையாடு வாள். அவன் மாமரத்திலேறிப் பறிக்கும் மாங்காய்களை அவள் முந்தானையில் பொறுக்கு வாள்.பனங்கொட்டைகளைப் பிளந்து அவன் பூரான் எடுக்கும் போது இவள் தட்டிப் பறித்துச் சாப்பிட்டுவிடுவாள். உடனே இருவருக்கும் சண்டை உண்டாகிக் கோபமாய் விடுவார்கள். கோபத்தை மறந்து உடனே கைகோர்த்துக் கொண்டு ஓடுவார்கள். இவைகளுக்கெல்லாம் எதிராக வந்த அம்மாவின் தடையுத்தரவு அவளுடைய இளம் உள்ளத்தைப் புண்படுத்தியது. இவ்வித உத்தரவுக்குத் தகுந்த காரணத்தைக் கண்டுபிடிக்கக் கூடிய வலிமை அந்த உள்ளத் திற்கு ஏற்படவில்லை.
விஜயனின் நிலை திலகவதியினுடைய நிலைக்கு நேர் விரோதமாக இருந்தது. அவனு டைய உள்ளம் விளையாட்டுகளிலும் மாங்காய் பறிப்பதிலும் செல்லவில்லை. பட்டண வாசத் திற்கு ஏற்றவாறு அவனுள்ளம் பண்படைந்திருந்தது. திலகவதியின் கிணற்றடிச் சந்திப்பில் அவனுள்ளம் சிறிது திருப்தியடைந்ததென்றாலும், அத்தருணம் அவன் எதையோ தான் புத்திக்கு குறைவால் இழந்துவிட்டவன்போல அங்கலாய்த்தான். உடல் கொதித்துக் கொண் டிருந்தது. நாக்கு வரண்டு போயிருந்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந் தான். கண்கள் கொஞ்சம் அயர்ந்தவுடன் நாவற்பழம் பறிக்கப் போகத் திலகவதி வந்து எழுப்பு வது போன்ற உணர்ச்சியோடு கண் விழிப்பான். அடிக்கடி வெளியே சென்று வானத்தைப பார்த்தான்; விடிவெள்ளி காலித்து விட்டது. இன்னும் திலகவதி வரவில்லை. அவன் மனம் அமைதியின்றித் தவித்தது. அங்குமிங்கும் நடந்தான்.
அவன் மனம் இருக்கை கொள்ளவில்லை. உள்ளத்தில் பலவித உணர்ச்சிகள் தலை காட்ட உள்விறாந்தையை நோக்கிப் பூனைபோல் நடந்தான். திலகவதி ஒரு மூலையில் நிம்ம தியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் குறட்டை விட்டுத் தூங்குவதைப் பார்த்ததும் அவ னுக்கு ஆத்திரமாக இருந்தது. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அவன் தவிக்கிறான்; அவள் கவலையில்லாமல் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறாள்!
“திலகவதி” என்று கூறி மெதுவாக அவளைத் தொட்டான். அவள் திடுக்கிட்டு எழுந்தாள். “நாவற்பழம் பறிக்கப் போகவில்லையா?
“மறந்தே விட்டேனத்தான். வா; மெல்ல அம்மாவுக்குத் தெரியாமல் சீக்கிரம் போய் வருவோம்.”
இருவரும் புறப்பட்டனர். விஜயனின் நெஞ்சு ஏனோ படபடவென்று அடித்தது. இராத்திரி நித்திரையில்லாததினாலோ என்னவோ கண்கள் கோவைப்பழம் போற் சிவந்திருந்தன. இரு வரும் அமைதியாகவே சென்று கொண்டிருந்தனர். இடைவழியில் அவளின் இடக்கரத்தைப் பற்றினான் விஜயன். “என்ன அத்தான்,” என்று ஒருவித பதட்டமுமில்லாமல் நடந்தபடியே கேட்டாள் திலகவதி.
“ஒன்றுமில்லை.இருட்டாயிருக்கிறது; பாதை தெரியவில்லை.”
இடையிடையே அவள் கையை நெரித்து நெரித்துப் பிடித்தான். “ஏனத்தான் இறுக்கிப் பிடிக்கிறாய்? கை நோகிறது!”
“சனியன்; ஒன்றுமே விளங்காத மூடம்!” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.
மரத்தடியைப் போயடைந்தனர். கீழே பரவிக் கிடந்த பழங்களை அவள் ஆர்வத்தோடு பொறுக்கினாள். அவன் இமைவெட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒருவித உணர்ச்சி அவனை உன்மத்தனாக்கியது. அவளின் கையைப் பிடித்து அருகே இழுத்தான். அவள் ஒன்றும் விளங்காமல் திகைத்துப்போய் நின்றாள். திடீரென்று அவள் உதடுகளில் மாறி மாறி முத்தமிட்டான். அவளையறியாமலே அவன் கைகள்… வெகு சிரமத் தோடு அவள் தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு வேகமாக ஓடினாள். “போக்கிரி நாயே! நீயுமொரு மனிதனா?” என்ற சொற்கள் அவள் வாயிலிருந்து கூரிய அம்புகள் போற் புறப்பட்டன.
அவன் அசையாமல் நின்றான். உணர்ச்சிகளெல்லாம் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டன. இருதயம் கனத்தது. கொஞ்ச நேரத்துள் அவள் எவ்வளவு கொடியவனாக மாறிவிட்டான். அவள் போய்த் தாய், தந்தையரிடங் கூறியவுடன் என்ன ஆபத்து நேரப் போகி றதோ! ஒருவருக்குத் தெரியாமல் பட்டணத்திற்கே போய் விட்டால்?…. அதுதான் பெரிய ஆபத்தாக முடியும். நேராக வீட்டுக்குச் சென்றான்.
மேலும் பத்துநாட்கள் அங்கேயே தங்கினான். ஆனால் ஒரு நாளாவது அவளை அவ னால் பார்க்க முடியவில்லை. உயிரற்ற பிரேதம் போலவே நடமாடினான். எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு பட்டணம் புறப் பட்டான்.
இரண்டு மூன்று விடுமுறைகள் வந்துபோய்விட்டன. அச்சம்பவத்திற்குப் பின் ஒரு முறையாவது அவன் கிராமத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பரீட்சையில் தேறியதும் உத்தி யோகம் அவனுக்காகக் காத்துக்கிடந்தது. எத்தனையோ பேர் தங்கள் பெண்களைக் கொடுக்க முன்வந்தனர்.”கிராமத்தில் அவன் மகள் அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்” என்று தாயார் திட்டமான பதிலை எல்லோருக்குங் கூறிக்கொண்டு வந்தாள். “திலகவதி மட்டுமல்ல வேறுயாராயிருந்தாலும் கிராமப்பெண் என்ற கதையே என்னோடு பேசக்கூடாது” என்று தன் முடிவான தீர்மானத்தை அவன் தெரிவித்துவிட்டான். திலகவதியின் தாய், தந்தையர் பலமுறைவந்து வேண்டியும் விஜயன் திடமாகவேயிருந்தான். “என் பெண்ணின் கழுத்தில் கல்லைக் கட்டிக் கிணற்றில் தள்ளினாலும் இவனுக்கு இனிக் கொடுப்பதில்லை” என்று ஆக்கிரோஷத்தோடு கூறிவிட்டு மாமா சென்றுவிட்டார்.
நாட்கள் மாசங்களாகி உருண்டு கொண்டிருந்தன. விஜயன் வீட்டாருக்கும், திலகவதி வீட்டாருக்கும் கடிதப் போக்குவரத்தே நின்றுவிட்டது. ஒருநாள் திடீரென்று ஒரு கடிதம் கிராமத்திலிருந்து விஜயன் பேருக்கு வந்தது. ஆச்சரியத்தோடு கடிகத்தைப் பிரித்தான். மணி மணியான எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அக்கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கிறதென் பதை அறிய முதலில் கையெழுத்தையே பார்த்தான். “திலகவதி” என்றிருந்ததும் கடித்தைப் படித்தான்.
அன்புள்ள அத்தானுக்கு,
எங்கோ உள்ள ஓர் கிராமப் பெண்ணின் கடிதந்தானே என்று அலட்சியமாகக் கடிதத் தைக் கிழித்து எறிந்துவிடாமல் படித்துப் பார்ப்பீர்களென்று நம்புகிறேன். கடந்த சில மாதங் களாக அப்பாவின் உடல்நிலை சரியில்லாமலிருக்கிறது. இறந்தாலும் உங்கட்குத் தெரிவிக்கக் கூடாது என்று அப்பா கூறுகிறார். ஆயினும் நாளுக்கு நாள் அப்பாவின் நிலை கவலைக்கிட மாகி வருவதால் அவருடைய அனுமதியின்றி உங்கட்கு இக்கடிதத்தை வரையத் துணிந் தேன். பட்டணவாசிகளின் வயிற்றுக்கும் கிராமத்து ஏழைகளின் கையிற்கும் எவ்வளவு சம்பந்தமிருக்கிறது என்பதை உணராமல், நீங்கள் கிராமமக்களையும். ஜென்மபூமியாகிய கிராமத்தையும் வெறுத்தாலும், உடன்பிறந்த ஒரே சகோதரனின் அந்தியகாலத்திலும் குறு கிய மனப்பான்மையோடு கோபத்தைப் பாராட்டி மாமிக்குத் தெரிவியாமலிருப்பது நியாயமல்ல என்று எண்ணி என் கடமையைச் செய்துவிட்டேன். அதற்காக மன்னிக்கவும்.
குறிப்பு:- உங்களையும் பார்க்க ஆவலாயிருக்கிறது. உங்களையுங் கண்டு நான்கு வருடங்கள் கழிந்துவிட்டனவல்லவா? அவசியம் வரவும்.
திலகவதி
கடிதத்தை மடித்து மேசையில் வைத்துவிட்டுச் சிந்திக்கலானான் விஜயன். அந்த அசட்டுத் திலகவதியின் கடிதம் இதுவென்று அவனால் நம்பவே முடியவில்லை. “அதோடு என்னையும் வரும்படியல்லவா எழுதியிருக்கிறாள்…”
கடிதத்தைப் பார்த்ததும் வாயிலும் வயிற்றிலுமடித்துக்கொண்டு ஓலமிட ஆரம்பித்து விட்டாள் விஜயன் தாயார். அன்றே புறப்பட்டுக் கிராமத்திற்குச் சென்றனர்.
திலகவதியின் தாய் மாசக்கணக்காகப் புருஷனுக்குச் சேவை செய்ததால் துரும்பாக மெலிந்து போயிருந்ததாள். திலகவதிதான் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தாள். திடீ ரென்று வண்டி வந்து நின்றதும் வாசலுக்கு ஓடிப் போனாள். விஜயனும் தாயாரும் இறங்கி னார்கள். திலகவதியைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் வீறிட்டெழ ஓவென்று கத்திவிட்டாள் விஜயனின் தாயார். திலகவதியும் விக்கி விக்கி அழுதாள். விஜய னுக்குக் கூடக் கண்களில் நீர் வந்துவிட்டது. மறுநாள் இரவு முற்றத்தில் உலாவிக்கொண்டி ருந்தான் விஜயன். பின்னால் யாரோ வருங் காலடிச் சத்தங் கேட்டுத் திரும்பினான். திலகவதி நின்று கொண்டிருந்தாள்.
“யார் திலகவதியா?”
“ஆமத்தான். உங்களிம் மன்னிப்புக் கேட்கலாமென்று வந்திருக்கிறேன்.”
“மன்னிப்பா எதற்காக?”
“அன்று உங்களை நான் கடுமையாகப் பேசிவிட்டதற்காக”
“என்னைக் கேலி செய்கிறாயா திலகவதி? அன்று அவ்விதம் கேவலமாக நடந்து கொண்டதற்காக நானல்லவா மன்னிப்புக் கோரவேண்டும்.”
“நீங்கள் அவ்விதம் எண்ணியிருந்தால் எங்களைக் கோபிப்பதற்கு வேறு காரணம் இருக்கவேண்டுமே?*
“நான் உங்களைக் கோபித்திருந்தால் இப்பொழுது வந்திருப்பேனா?”
‘உண்மையை ஒழிக்கவேண்டாமத்தான். நான் இப்பொழுது வந்தது நீங்கள் என்னை விவாகஞ் செய்ய வேண்டுமென்று கேட்பதற்காகவல்ல. உங்களோடு சிறிது நேரம் கதைப்ப தற்காகவே வந்திருக்கிறேன். நீங்கள் என்னை வெறுப்பது மட்டுமல்ல. கிராமப் பெண் களையே வெறுக்கிறீர்களென்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். பட்டிணப் பெண்களைப் போல அவர்களுக்குப் பகட்டாக ஆண்களோடு கைகோர்த்துக்கொண்டு திரியத் தெரியாவிட்டா லும், பதிசேவையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். ஆங்கில முறையில் அவர்களுக்குக் காத லிக்கத் தெரியாவிட்டாலும் நளாயினி, சாவித்திரி, சீதையைப் பற்றிய கதைகளை அவர்கள் ஐந்தாம் வகுப்பிற்குள் அறிந்திருப்பார்கள். எனது அத்தான் நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சற்குணன் என்று உலகங் கூறும்போது நான் எவ்வளவு சந்தோஷமடைவேனென்று இப்பொழுது நான் நிரூபிக்க முற்படவில்லை… பெண்கள் மலருக்குச் சமானமானவர்கள் என்று கூறிக்கொண்டு ஆண்கள் வண்டுகளாக மாறிவிடக் கூடாது. அன்று உங்கள் செயலால் நான் உங்கள் மீது வெறுப்புக் கொண்டேனென்பது உண்மை. ஆனால் அதற்குப் பிரதியாக நீங்கள் என்னைப் பயித்தியக்காரியாக்கி விட்டீர்கள். என்னுள்ளத்தில் ஏதோ ஒருவித உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விட்டீர்கள்!…. அத்தான், அன்று உங்கள் கைக்குள் நான் அடங்கி விட்டேனென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் என்கதி என்னவாவது? நீங்களென்னை விவாகஞ் செய்துகொண்டாலும் நான் உலகத்தின் கண்ணில் விழிக்க முடியுமா? பெண்களின் மகாசக்தி பொருந்திய விலைமதிக்க முடியாத மாணிக்கமென்ன வென்று இவ்வளவு கற்ற உங்களுக்கு நானா எடுத்துக் கூறவேண்டும்? உங்களுடைய இஷ்டம்போல நீங்கள் வேறு யாரையாவது மணந்துகொள்ளுங்கள். ஒரு பாபமுமறியாத என்னைக் கோபித்து என் நெற்பமான இதயத்தை வதைக்க வேண்டாம்…” – மேலும் அவள் என்னவோ கூற ஆரம்பித்தாள். பின்னால் விஜயனின் தாயார் வரவே அவள் உள்ளே போய் விட்டாள்.
நோயாளி கொஞ்சம் சுகமடைந்ததும் விஜயனும் தாயாரும் பட்டணம் போய்விட்டனர். அவனுடைய தாய். தந்தையர் அவனுக்குப் பல இடங்களிலும் பெண் பார்த்தனர். விஜயன் வெட்கத்தோடு தலை குனிந்தபடியே “அம்மா. திலகவதி இருக்கும் போது நாம் ஏன் பெண் தேடி அலைய வேண்டும்” என்று மெதுவாகக் கூறினான்.
“என்ன! உண்மையாகவா!” என்று கண்களை அகல விரித்தபடியே கேட்டாள் தாய். அவள் குரலில் ஆனந்தம் தாண்டவமாடியது.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. மாமாவோடு பேசிக் கொண்டிருந்தான் விஜயன். அடிக் கடி அவன் கண்கள் மன்றாடும். பாவனையிலும் மன்னிப்புக் கோரும் பாவனையிலு மிருந்தன. இவர்கள் கதைப்பதைக் கதவோரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள் திலகவதி. அவள் இமைரோமங்களில் நீர் துளித்துப் போயிருந்தது. வெற்றி கொண்ட வீரனைப் போல் எழுந்து சென்றான் விஜயன்.
“நாவல்பழம் பறிக்கப் போகலாமா?” என்று அவள் கன்னத்தைக் கிள்ளியபடியே கேட்டான் விஜயன்.
“அம்மா விழித்துக்கொண்டால்…” என்று கூறிச் சிரித்தாள் திலகவதி. அதிகஞ் சிரிக்க முடியாமல் அவன் உதடுகள் மூடப்பட்டுவிட்டன.
– வரதர் புதுவருஷ மலர் – 1950.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.