வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,334 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

என் அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு சொன்னது போல் நான் சாரதாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனேன்.

என்னையும் சாரதாவையும் சந்தோஷமாக வரவேற்று ஹாலில் இருந்த ‘சோபா’வில் உட்கார சொன்னார்கள் என் மாமனாரும் மாமியாரும்.ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது சாரதா அவள் அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு காலியாக இருந்த ஒரு ரூமுக்குள் போனாள்.

எனக்குத் தெரியும் சாரதா ஏன் அப்படி பண்ணீனாள் என்று.நான் சும்மா இருந்தேன்.எதிரே இருந்த ‘டீ பாயில்’ இருந்த ஒரு மாதாந்திர புஸ்தகத்தை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும்.மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

என்ன ‘பூகம்பம்’ வெடிக்கப் போகீறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

என் மாமனார் என்னைப் பார்த்து “மாப்பிள்ளே,நான் உங்க ஆத்துக்கு ஜாதகப் பா¢வர்த்தணை பண்ணிக்க வந்தப்ப,உங்க அம்மா அப்பாவைப் பாத்தேன்.அவா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவளா இருந்தா.பாக்க உங்க குடும்பம் ரொம்ப சிரேஷ்டமான குடும்பம் மாதிரி இருந்தது.உங்க அப்பாவும் வேலைக்குப் போய் வறார்.நீங்களும் வேலேக்குப் போய் வறேள்.உங்க ஆத்லே நீங்கோ ஒரே பிள்ளை. உங்க தங்கைக்கு கல்யாணம் ஆயி வேறே ஆத்துக்குப் போய் இருக்கா.உங்க ஆத்லே எந்த பிக்கல் பிடுங்கல் இல்லே.இந்த ஆத்லே சாரதாவுக்கு சம்மந்தம் பண்ணீண்டா சாரதா சந்தோஷமா வேலை க்குப் போய் வந்துண்டு இருப்பான்னு,நானும் பதமாவும் நினைச்சித் தான் இந்த சம்மந்ததை பண்ணீண்டோம்” என்று தன் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “என் பொண்ணு சாரதா உங்க ஆத்லே இத்தனை கஷ்டப் பட்டுண்டு வறாளே.அவ உங்க அம்மா பண்ற அத்தனை கெடு பிடியிலே தவிச்சுண்டு வறா.முதல்லே என்னமோ வேலைக்குப் போக வேணாம்ன்னு சொன்னா.இப்போ என்னடான்னா வெள்ளீ கிழமைலே மடிசார் புடவை கட்டிண்டு உங்க அம்மாவோடு லலிதா சஹஸ்ரனாம பூஜை பண்ணணும்ன்னு சொல்றா. நீங்களே சொல்லுங்கோ.சாரதாவுக்கு லலிதா சஹஸ்ரனாம பூஜை எல்லாம் பண்ற வயசா.அவ இன்னும் சின்னப் பொண்ணு.இல்லையா.அவளை உங்க அம்மா இப்படி ‘கம்பெல்’ பண்றது சரியே இல்லே.நீங்கோ சித்தே உங்க அம்மா கிட்டே கொஞ்சம் சொல்லக் கூடாதா” என்று பெண்ணைப் பெற்ற ஆதங்கத்தில் சொல்லி விட்டு மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

இவருக்கு நான் என்ன பதில் சொல்றது என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

என் மாமியார் “சாரதா எங்களுக்கு ஒரேப் பொண்ணு.அவ சந்தோஷம் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.நீங்கோ சாரதாவுக்கு ஒன்பது கஜம் மடிசார் எப்படி கட்டிக்கறதுன்னு கத்துக் குடுக்க எங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து இருக்கேள்.அவ மடிசார் புடவை எப்படி கட்டிக்கறதுன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம் தான் நான் இல்லேன்னு சொல்லலே.நீங்களே எங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்ததாலே நான் அவளுக்குக் கத்துக் குடுத்து இருக்கேன்.சாரதா வேலைக்குப் போகணும்ன்னு ரொம்ப ஆசைப் படறா.ஆனா உங்க அம்மாவுக்கு அவ வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்களாம். B.Com.படிச்ச எங்க பொண்ணு இப்படி உங்க ஆத்லே மக்கறதே நினைச்சுண்டா பெத்த என் வயிறு பத்திண்டு எரியறது.நாங்க பொண்ணேப் பெத்த அம்மா அப்பா.நாங்க உங்க ஆத்துக்கு வந்து கேக்கறது சரி இல்லே.அப்படியே நாங்க உங்க ஆத்துக்கு வந்து சாரதா சொல்ற கஷ்ட த்தே எல்லாம் கேக்கறோம்ன்னு வச்சுக்குங்கோ,அதுக்கு உடனே உங்க அம்மாவும், அப்பாவும் எங்க ளேப் பாத்து ‘எங்க ஆத்து மாட்டுப்பொண்ணே எப்படி வச்சுக்கறதுன்னு நன்னாத் தெரியும்ன்னு சொல்லிட்டா…..” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தன் புடவை தலைப்பால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு “நான் இப்படி பேசிண்டு இருந்தப்ப ரொம்ப ‘எமொஷனல்’ ஆயிட்டேன்.அதான் என் கண்லே இருந்து அழுகை வந்துட்டது. நான் சொன்னா மாதிரி நாங்க உங்க ஆத்துக்கு வந்து உங்க அம்மா அப்பாவே ஒன்னும் கேக்க முடியாது.நீங்கோ தான் எப்படியாவது உங்க அம்மா கிட்டே மெல்ல நாங்க பட்டுண்டு வற ‘துக்கத்தை’ சொல்லி சாரதாவை மறுபடியும் வேலேக்கு அனுப்புங்கோ ‘ப்ளீஸ்’” என்று கைகளைக் கூப்பிக் கொண்டு கேட்டாள்.

எனக்கு ரொம்ப தர்ம சங்கடமாக இருந்தது.

‘என்னடா இது.நாம சாரதாவுக்கு ஒன்பது கஜம் புடவையை எப்படி மடிசார் வச்சுக் கட்டிக்கறது ன்னு கத்துண்டு வறதுக்கு இவா ஆத்துக்கு அழைச்சுண்டு வந்தா,மாமனாரும், மாமியாரும் மாத்தி மாதி நம்மே கேள்வி மேலே கேள்வி கேக்கறா.மாமியார் என்னடான்னா கையைக் கூப்பிண்டு கேக்கறா. இப்போ நாம இவாளுக்கு என்ன பதில் சொல்றது’என்று யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தேன்.

மாமியார் ரெண்டு தட்டில் மைசூர்பாக்கையும் கொஞ்சம் ‘மிக்ஸ்ஸரையும்’ கொண்டு வைத்து ஒரு தட்டை என் எதிரே வைத்து விட்டு,இன்னொரு என் மாமனார் முன்னாலே வைத்து விட்டு, “மெல்ல சாப்பாடிண்டே இருங்கோ.நான் சமையல் ரூமுக்குப் போய் சூடா ‘காபி’ போட்டுக் கொண்டு வறேன்” என்று சொல்லி விட்டுப் போணாள்.

என் மாமனர் மைசூர்பாக்கை விண்டு சாப்பீடுண்டு கொண்டு இருந்தார்.’நாம சாப்பிடாம இருந்தா நன்னா இருக்காது’ என்று நினைத்து,நானும் அந்த மைசூர்பாக்கை விண்டு சாப்பிட ஆரம் பித்தேன்.அந்த மைசூர்பாக்கை நான் முழுக்க சாப்பிட்டு முடித்தேன்.அந்த மைசூபாக்கு எனக்கு இனிக்கவே இல்லை.பிறகு ‘மிக்ஸஸரையும் சாப்பீட்டு முடித்தேன்.அப்போது என் மாமியார் கொண்டு வந்து வைத்த ‘காபி’யையும் குடித்து முடித்து விட்டு காலி ‘டவரா டம்ளரை’’ டேபிளில்’ வைத்தேன்

என் மாமியார் என் எதிரில் உட்கார்ந்துக் கொண்டாள்.

நான் என் தொண்டையை கனைத்துக் கொண்டு “நீங்கோ ரெண்டு பேரும் சொல்றது ரொம்ப நியாயமானது தான்.நான் இல்லைன்னு சொல்லலே.என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்து மனுஷா.அவா ரெண்டு பேரும் ரொம்ப ஆசாரமானவா தான்.என் அப்பா தினமும் குளிச்சுட்டு,சுவாமி மந்திரங்கள எல்லாம் சொல்லி விட்டு ஒரு சின்ன பூஜையை பண்ணி விட்டு ‘ஆபீஸ்’க்குக் கிளம்புவார்.எல்லா ஞாயித்திக் கிழமையும் மத்தியானம் பதினோறு மணி வரைக்கும் பூஜை பண்ணீ அப்புறமாத் தான் சாப்பிட உக்காருவார்.எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து,என் அம்மா குளிச்சுட்டு நாள் பூராவும் மடிசார் புடவையை தான் கட்டிண்டு வறதைத் தான் நான் பாத்து இருக் கேன்.எனக்கு பிடிக்காவிட்டாலும், நான் அவா சொல்ற வழக்கப்படி தான் இன்னி வரைக்கும் வாழ்ந்து வந்துண்டு இருக்கேன்.எனக்கு இப்போ கல்யாணம் ஆயி சாரதா எனக்கு ‘வைப்பா’ எங்க ஆத்துக்கு வந்து இருக்கா” என்று சொல்லி விட்டு எதிரே இருந்த ‘க்லாஸ்’ டம்ளா¢ல் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் குடித்தேன்.

மறுபடியும் என் தொண்டையை கனைத்துக் கொண்டு “என் தர்ம சங்கடத்தே நீங்கோ ரெண்டு பேரும் நன்னா புரிஞ்சுக்கணும்.நீங்கோ ரெண்டு பேரும் சொல்றா மாதிரி நான் என் அம்மா கிட்டே அம்மா ‘சாரதாவுக்கு இது பிடிக்கலே’ ‘அது பிடிக்கலே’ ’அவளை நீங்கோ மடிசார் புடவை கட்டிண்டு பூஜை எல்லாம் பண்ண கூப்பிடாதீங்கோ’, ’அவ ஆபீஸ்க்குப் போய் வேலை பண்ணி வரட்டும்’ன்னு சாரதா ஆசைப் படறதே எல்லாம் சொன்னா, உடனே என் அம்மா என்னேப் பாத்து ‘என்னடா ராமு,நீ உன் பொண்டாட்டி பேச்சே கேட்டுண்டு ஆடறே.நாங்க என்ன உன் பொண்டாட்டிக்கு ‘சாதம்’ போட லையா,தூத்தம் குடுக்கலையா,இல்லே ஆம்படையானோடு ‘ஒன்னா’ படுத்துக கூடாதுன்னு சொன் னோமா.இல்லே,அவ கஷ்டப் படற மாதிரி நானும் அப்பாவும் அவளே கோவிச்சுண்டோமா.இந்த ஆத்துக்கும்,அவளுக்கும் நல்லதே தானே சாரதாவை நான் பண்ணச் சொன்னேன்’ ன்னு சொன் னா,நான் என்ன பதில் சொல்றது சொல்லுங்கோ” என்று சொல்லி விட்டு நான் கொஞ்சம் ஜலத்தை குடித்து விட்டு மறுபடியும் சொல்ல ஆரம்பித்தேன்.

“இந்த நாள் வரைக்கும் சும்மா இருந்த நீ,இப்போ உன் மாமனார் ஆத்துக்குப் போய் வந்த பிறகு என்னமோ எங்க ரெண்டு பேருக்கும் ‘ஆர்டர்’ போடறே.நன்னா இல்லேடா ராமு நீ பண்றது.நீ பேசாம முன்னே இருந்தா மாதிரி,உன் வேலையை கவனிச்சுண்டு இரு. எது நல்லது,எது கெட்டதுன்னு எங்க ரெண்டு பேருக்கும் நன்னாத் தெரியும்.அவாளுக்கு என்ன.எங்க பொண்ணே ‘இப்படி வச்சுக்குங்கோ’’ அப்படி வச்சூக்குங்கோ’ன்னு தான் சொல்லுவா.அவா சொல்றதே எல்லாம் கேட்டுண்டு வந்து இங்கே சொல்லி நீ எங்களே மாத்தாதே’ன்னு என்று எனக்கு பதில் சொன்னா,நான் என்ன பண்றது சொல்லுங் கோ” என்று சொல்லும் போது துக்கம் என் தொண்டையை அடைத்தது.

உடனே என் மாமனார் ”அப்போ எங்க சாரதா,உங்க ஆத்லே உங்க அம்மா சொன்னதேத் தான் பண்ணிண்டு வரணுமா.சாரதாக்கு ஒரு ஆசையும் இருக்கக் கூடாதா.அவ உங்க ஆத்லே ஒரு ஜடமா இருந்துண்டு வரணுமா.உங்க அம்மாவும் அப்பாவும் இப்படி பிடிவாதமா அவா சொன்னதை தான் சாரதா பண்ணீண்டு வரணும்ன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா,நான் சாரதாவை உங்க ஆத்லே சம்மந்தமே பண்ணி இருக்க மாட்டேன்.நீங்களும் இப்போ உங்களால் உங்க அம்மா அப்பா வை மாத்த முடியாதுன்னு சொல்றேள்.அப்போ பெண்ணைப் பெத்த நான் என்ன பணறது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவருக்கு கண்களில் நீர் சுரந்தது.

அதை அவர் துடைத்துக் கொண்டு இருந்தார்.

“மாப்பிள்ளே,நீங்கோ தான் எப்படியாவது உங்க அம்மா அப்பா கிட்டே மெல்ல சாரதா ஆசை யையும்,எங்க துக்கத்தையும் மெல்ல சொல்லி,எங்களையும் சாரதாவையும் சந்தோஷமா இருந்துண்டு வர பண்ணனும்.எங்களுக்கு உங்களே விட்டா யார் இருக்கா சொல்லுங்கோ.நான் முன்னம் சொன்னா மாதிரி நாங்க உங்க ஆத்துக்கு வந்து உங்க அம்மா அப்பாவைக் கேக்க முடியாது” என்று தன் கண் களில் வழியும் கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

நான் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “உங்க ரெண்டு பேருடைய கஷ்டமும்,சாரதா கஷ்டமும் எனக்கு நன்னா புரியறது.எனக்கு ஒரு ஆறு மாசம் அவகாசம் குடுங்கோ.நான் எப்படி யாவது என் அம்மா அப்பா கிட்டே சொல்லி இதுக்கு ஒரு நல்ல வழி பண்றேன்.அது வரைக்கும் நீங்கோ கொஞ்சம் கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு சோபாவை விட்டு எழுந்தேன்.

உடனே “நல்லது மாப்பிள்ளே.நீங்கோ ஆறு மாச அவகாசம் எடுத்துக்கோங்கோ.ஆனா மறக்காம சாரதா ஆசையை கொஞ்ச பூத்தி பண்ணுங்கோ” என்று இருவரும் சொல்லி என்னையும் சாரதவையும் அவர்கள் வீட்டில் இருந்து அனுப்பினார்கள்.என் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருக்கும் போது நான் சாரதாவைப் பார்த்து “உங்க அம்மாவும் அப்பாவும் என்னை நன்னா ‘ப்ரெயின் வாஷ்’ பண்ணி அனுப்பி இருக்கா.நீயாவது உங்க அம்மா அப்பா கிட்டே என் நிலைமையை கொஞ்சம் சொல்லி புரிய வக்கக் கூடாதா.எங்க ஆத்து நிலைமை உனக்கு நன்னாத் தெரியுமே சாரதா.நீ அதே உங்க அம்மா அப்பா கிட்டே கொஞ்சம் விவரமா சொல்லி இருக்கக் கூடாதா” என்று கொஞ்சம் கெஞ்சும் குரலில் கேட்டேன்.

சாரதா எனக்கு கொஞ்சம் ஆதறவாக பேசுவாள் என்று நினைத்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் உடனே சாரதா ”நீங்கோ என் அம்மா அப்பா கிட்டே ‘எனக்கு ஒரு ஆறு மாசம் அவகாசம் குடுங்கோ.நான் எப்படியாவது என் அம்மா அப்பா கிட்டே சொல்லி இதுக்கு ஒரு நல்ல வழி பண்றேன்.அது வரைக்கும் நீங்கோ கொஞ்சம் கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ’ ன்னு சொல்லி ட்டு வந்து இருக்கேள்.அந்த மாதிரி பண்ண ஏதாவது ஒரு வழியே கண்டு பிடியுங்கோ.மறுபடியும் ’வேதாளம் முருங்கை மரத்தைலே ஏறீன’கதை மாதிரி னழைய மாதிரியே சொல்லி உங்க கையை விரிக்காதேள்.இந்த வயாசன காலத்லே எங்க அம்மாவாலேயும் அப்பாவேயாலும் என் கஷ்டத்தை தாங்கிண்டு வர முடியாது.நான் அவாளுக்கு ஒரேப் பொண்ணு என்கிறதே மறந்துடாதேள் ”என்று கொஞ்சம் மிரட்டி சொன்ன போது நான் ஏமாந்துப் போனேன்.

நான் என் மனதில் ‘இவ அம்மா அப்பா சொன்னா மாதிரி தானே இவளும் சொல்லுவா. மாத்தியா சொல்லப் போறா இவ.அந்தக் குட்டையிலே ஊறின மட்டை தானே இவளும்’ என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.

அன்று இரவு சாரதா என்னைப் பார்த்து” ஏதாவது யோஜனைப் பண்ணீனேளா.என்ன பண்றதா இருக்கேள்” என்று கேட்டு மறுபடியும் என் பொறுமையை சோதித்தாள்.நான் அவளிடம்”நான் யோஜனைப் பண்ணீண்டு தான் இருக்கேன் சாரதா.கொஞ்சம் பொறுமையா இருந்து வா.நான் நிச்சியமா அவா ரெண்டு பேர் கிட்டேயும் சொல்றேன்” என்று சொன்னதும் சாரதா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் படுத்துக் கொண்டாள்.

ரெண்டு மாசம் ஓடி விட்டது.

சாரதாவும் பொறுமையாக என் அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு செய்துக் கொண்டு இருந்தாள்.

சாரதாவுக்கு அவள் உடலில் ‘மாற்றம்’தெரிந்தது.அவன் தன் மனதிலே ‘அடக் கடவுளே,இது என்ன புது வேதனை.’வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைஞ்சுப் போச்சாம்’ என்கிறதே கதைப் போல ஆயிடும் நம் கதை போல இருக்கே.இந்த மாதிரி ஆகாம நாம பாத்துண்டு வந்து இருக்கலாமே.நாம ஏமாந்துப் போயிட்டமே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள்.

அன்று இரவு சாரதா “என் உடம்ப்லே கொஞ்சம் மாத்தாம் தெரியறது.இந்த நேரம் பாத்து என் உடம்ப்லே இந்த மாத்தம் தெரியணுமா.யார் இப்போ இதே ‘வா’ ‘வா’ன்னு கூப்பிட்டா.எல்லாம் என் போறாத வேளே.என்ன நடக்கக் கூடாதோ அது நடந்துடுத்து. நான் சொன்னதே நீங்கோ உங்க அம்மா அப்பா கிட்டே மூச்சே விடாதேள்.நாம முதல்லே ஒரு ‘லேடி’ டாக்டரைப் பாத்துட்டு அவ எனக்கு குழந்தே தான்னு ‘கன்பர்ம்’ பண்ணீனா,நாம உங்க அம்மா அப்பா கிட்டே சொல்லாம ‘இதே’ கலைச்சுண்டு வந்துடலாம்.இந்த குழந்தே நமக்குப் இப்போ வேணாம்.இன்னும் மூனு வருஷம் போக ட்டும்.அப்புறமா நாம குழந்தயே பெத்துக்கலாம்” என்று சொன்னவுடன் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘சாரதாவுக்கு இப்படி ஆயிடுத்தா.அவ இவ்வளவு பூர்வ பீடிகை போடறாளே.இவ சொல்றதுக்கு நாம என்ன பதில் சொல்லப் போறோம்’ என்று கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.எனக்கு சாரதா சொலவதில் உடன் பாடு கொஞ்சம் கூட இல்லை.’இந்த சமாசாரம் அப்பா அம்மா கிட்டே மறைக்கக் கூடிய சமாசாரமா.அப்புறமா அவாளுக்குத் தெரிய வந்தா என்னேப் பத்தி என்ன நினைச்சுக்குவா’ என்று நினைத்து எனக்குள் புழுங்கினேன்.

கொஞ்ச நேரம் ஆனதும் நான் “என்ன சாரதா,நீ பேசறே.அந்த மாதிரி நாம பண்ண நான் ஒரு உன்னே ஒரு ‘நர்ஸிங்க் ஹோமிலே’ சேக்க வேணாமா.நீ சொல்றா மாதிரி பண்ண அந்த லேடி டாக்டர ஒத்துக்க வேணாமா.அப்படியே அந்த லேடி டாக்டர் பண்ண ஒத்துண்டா,அதே முடிச்சுண்டு நீ ஆத்துக்கு வந்து ஒரு ரெண்டு நாளாவது ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வர வேணாமா.அப்படி நீ ரெண்டு நாள் ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வந்தா என் அம்மாவும் அப்பாவும் ‘ஏன் சாரதா இப்படி சோர்வா படுத்து ண்டு இருக்கா.அவளுக்கு என்ன உடம்புடா ராமு’ன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்றது. எல்லாத்துக்கும் மேலே உங்க அம்மா அப்பாவுக்கு ‘இந்த’ விஷயம் தெரிய வேணாமா.அவா ரெண்டு பேரும் நாம பண்றது ‘சரி’ன்னு சொல்லுவாளா.இல்லே நாம பண்ணது ‘தப்பு’ன்னு சொல்லுவாளா. நீ இதே எல்லாம் பத்தி கொஞ்சம் கூட யோஜனைப் பண்ணாம உனக்குத் தோணினதயே சொல்றயே” என்று கேட்டேன்.

கோவம் வந்து சாரதா “இதேப் பத்தி எல்லாம் நீங்கோ இத்தனை யோஜனை பண்றேள்.ஆனா எங்க அம்மா அப்பா கிட்டே சொல்லிட்டு வந்ததே பத்தி இன்னும் யோஜனை பண்ணாம இருந்து வறேளே.உங்களுக்கு வேணும்ன்னா நன்னா யோஜனைப் பண்றேள்.வேணாட்டா அதேப் பத்தி கொஞ்சம் கூட யோஜனை பண்ண மாட்டேங்கறேளே” என்று கத்தினாள்.

நான் நிதானமாக “சாரு.கோவப் படாதே.அது உன் உடம்புக்கு நல்லது இல்லே.நாம இந்த ஞாயித்துக் கிழமை ஒரு டேடி டாக்டர் கிட்டே போய் உன் உடமபை காட்டிண்டு வரலாம்.அந்த டாக்டர் உன் உடம்பே ‘செக் அப்’ பண்ணி சொல்லட்டும்” என்று சொல்லி சாரதாவுக்கு ஆறுதல் சொன்னேன்.

அந்த ஞாயிற்றுக் கிழமையே நான் என் அம்மா அப்பா கிட்டே ஒன்றும் சொல்லாமல் சாரதாவை அழைத்துக் கொண்டு ஒரு ‘லேடி’ டாக்டர் இடம் அழைத்துக் கொண்டு போய் ‘செக் அப்’ பண்ணி னேன்.அந்த லேடி டாக்டர் சாரதாவுக்கு எல்லா ‘டெஸ்டுகளும்’ ப் பண்ணீ பார்த்து விட்டு என்னைப் பார்த்து “’கங்கிராஷ¤லேஷன்ஸ்’ சார்.உங்க ‘வைப் இப்போ ‘ப்ரெக்னட்டா’ இருக்காங்க.இது அவங் களுக்கு பேருக்கு மூனாவது மாசம்.நான் எழுதித் தர மாத்திரைகளை எல்லாம் அவங்களே தவறாம சாப்பிட்டுக் கிட்டு வந்து னரச் சொல்லுங்க.இன்னும் ரெண்டு மாசம் போனதும் மறுபடியும் ‘செக் அப்’ க்கு வாங்க” என்று சொன்னாள்.

பிறகு சாரதாவைப் பார்த்து “நீங்க ஜாக்கியறதையா இருந்து வாங்க.எந்த ‘வெயிட்டும்’ தூக்காதீங்க.அதிகமா மாடிப் படி எல்லாம் ஏறாம இருந்துக் கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு அந்த டாக்டர் ‘பீஸையும்’ ‘டெஸ்டுகள்’ பண்ண ‘அம்மவுண்டையும்’ சொன்னாள்.

நான் டாக்டர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு சாரதாவை அழைத்துக் கொண்டு டாக்டர் ‘ரூமில்’ இருந்து வெளியே வந்தான்.சாரதாவின் கண்களில் இருந்த கோவத்தை நான் கவனித்தேன்.

வெளீயே வந்த என்னைப் பார்த்து “அந்த டாக்டர் உங்களேப் பாத்து ‘’கங்கிராஷ¤லேஷன்ஸ்’ சார்.உங்க ‘வைப் இப்போ ‘ப்ரெக்னட்டா’ இருக்காங்க.இது அவங்களுக்கு பேருக்கு மூனாவது மாசம்’ன்னு சொன்னதும்,நீங்கோ ரொம்ப சந்தோஷப் பட்டு,அந்த டாக்டர் கேட்ட பணத்தைக் குடுத்து வந்து இருக்கேளே.நான் சொன்னதே நீங்கோ ஏன் அந்த டாக்டர் கிட்டே கேக்கலே.அந்த ‘லேடி’ டாக்டர் சொன்னதே கேட்டதும் உங்களுக்கு அபா¢ மிதமான சந்தோஷம் வந்துட்டதா என்ன. நான் சொன்னதே அந்த ‘லேடி’ டாக்டர் கிட்டே நீங்கோ கேக்காம,அவ கேட்ட பணத்தைக் குடுத்து ட்டு,என்னே டாக்டர் ரூமில் இருந்து வெளியே அழைச்சுண்டு வந்து இருக்கேளே.நான் இப்போ சும்மா இருக்க மாட்டேன்.வாங்கோ என்னோடு.இப்பவே நாம ரெண்டு பேரும் அந்த டாக்டர் கிட்டே போய் நான் கேட்டதை கேக்கலாம்” என்று சொல்லி என் கைகளைப் பிடித்து டாக்டர் ரூமுக்கு அழைத்துப் போனாள் சாரதா.

அதற்குள் அடுத்த ‘பேஷண்ட்’ டாக்டரைப் பார்க்க போய் இருக்கவே சாரதா டாக்டர் ரூமின் வாசலிலேயே நின்றுக் கொண்டு இருந்தாள்.அந்த ‘பேஷண்ட்’ வெளியே வந்ததும் சாரதா அங்கு நின்றுக் கொண்டு இருந்த ‘நர்ஸை’த் தள்ளிக் கொண்டு டாகடர் ரூமுக்குள் போனாள்.

எங்களை மறுபடியும் பார்த்த டாகடர் ஆச்சரியப் பட்டுக் கொண்டு “என்ன மாடம்,நீங்க இன்னும் ஏதாச்சும் சந்தேகம் கேக்கணுமா” என்று சாரதாவைப் பார்த்துக் கேட்டு விட்டு சாரதா கழுத்திலே தொங்கிக் கொண்டு இருக்கும் தாலியையும் கவனித்தாள்.

சாரதா தயங்கிக் கொண்டே” டாக்டர் எங்களுக்கு இப்போ இந்த குழந்தே வேணாம்.நீங்க தயவு செஞ்சி இந்த குழந்தையை ‘அபார்ஷன்’ பண்ண முடியுமா” என்று கேட்டாள்.

உடனே டாக்டர் ராமனைக் கைக் காட்டி”இவர் உங்க புருஷன் தானே” என்று கேட்டாள். அதற்கு சாரதா “ஆமாம் டாக்டர்” என்று சொன்னதும் டாக்டர் “மேடம் ஒரு குழந்தேயே ‘அபார்ஷன்’ பணறது என்கிறது ரொம்ப பொ¢ய சமாசாரம்.உங்க ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி குழந்தையை ‘அபார்ஷன்’ பண்ணீக்கிறதிலே பூரண சம்மதமா.நான் குழந்தேயே ‘அபார்ஷன்’ பணறதுக்கு முன்னாடி முதலாவதா உங்க ரெண்டு பேருடைய சம்மதம் ரொம்ப முக்கியம்.ரெண்டாவதா ’அபார்ஷன்’ பண்ண வேண்டிய உண்மை காரணமும் தெரியணும்”என்று சொல்லி சாரதாவையும் ராமனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சாரதா ஆடிப் போய் விட்டாள்.

’இந்த டாக்டருக்கு நாம என்ன பதில் சொல்றது’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.நான் எந்த வித சலனம் இல்லாமல் உட்கார்ந்துக் கொண்டு இருந்தேன்.கொஞ்சம் நேரம் ஆனதும் அந்த டாக்டர் “மேடம் எனக்கு நிறைய ‘பேஷண்ட்ங்க’ காத்துக் கிட்டு இருக்காங்க.நான் அவங்களே ‘அட்டெண்ட்’ பண்ணணும்.நீங்க ரெண்டு பேரும் என் ரூமுக்கு வெளியே போய் நல்லா யோஜனைப் பண்ணிட்டு,இந்த ’பாரத்திலே’ உங்க ரெண்டு பேருடைய கை எழுத்தையும் போட்டு கிட்டு வந்து எனக்கு ‘அபார்ஷன்’ பண்ண வேண்டிய உண்மைக் காரணத்தையும் சொல்லுங்க”என்று சொல்லி எங்க ரெண்டு பேரையும் வெளியே அனுப்பி விட்டாள்.

நானும் சாரதாவும் டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்தோம்.சாரதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது.சாரதா கோவத்திலே “நாம கேட்டா இந்த டாக்டர் பேசாம எனக்கு ஒரு ‘அபார்ஷனே’ பண்ண வேண்டியது தானே.என்னமோ ஒரு பொ¢ய ‘லெக்சரே’ அடிக்கறாளே.நாம இந்த டாகடர் கிட்டேயே வந்து இருக்கக் கூடாது”என்று கத்தினாள் சாரதா.
நான் சாரதாவிடம்”சாரு,நீஅந்த டாக்டர் சொன்னதே ஒரு ‘லெக்சர்’ன்னு சொல்லாதே.எந்த டாக்டர் கிட்டே போனாலும் அந்த டாக்டர் ‘அபார்ஷன்’ பண்றதுக்கு முன்னாடி அதுக்கு வேண்டிய எல்லா முன் எச்சரிக்கை எல்லாத்தையும் சொல்லுவா.நீ வீணாக் கோவப் படறே…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது” நீங்கோ பேசாம அந்த டாக்டருக்கு ஒரு PAயாவா இருந்துண்டு வாங்கோ” என்று கத்தினாள் சாரதா.

கொஞ்ச நேரம் ஆனதும் ”இந்த டாக்டர் தான் நான் கேட்டுணடதே பண்ணலே.நீங்களும் ஒரு ‘ஹெல்பும்’ பண்ண மாட்டேள்.வாங்கோ எங்க அப்பா அம்மா ஆத்துக்குப் போகலாம்.அவா எனக்கு ஒரு சரியான வழியே சொல்லுவா” என்று சொன்னதும் நான் உடனே” சரி,சாரு.வா உங்கத்துக்குப் போகலாம்.நீ உங்க அம்மா அப்பாவையே ஒரு வழி கேளூ” என்று சொல்லி விட்டு சாரதாவை அவள் வீட்டுக்கு அழைத்துப் போனேன்.

நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும் சாரதாவின் பெற்றோர்கள் எங்களை கொஞ்ச நேரம் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு,எங்களைஉள்ளே வரச் சொல்லி சோபாவில் உட்காரச் சொன்னார்கள்.

நான் மட்டும் தான் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டேன்.சாரதா அவ அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு காலியாக இருந்த ஒரு ‘ரூமு’க்குள் போய் கதவை சாத்தி தாழ்பாள் போட்டுக் கொண்டாள்.நான் எதிரே இருந்த ‘டீ பாயில்’ இருந்த ஒரு மாதாந்திர பத்திரிக்கையை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.என் கவனம் அந்த பத்திரிக்கையில் எங்கே போயிற்று.எப்படி போகும்.வெறுமனே அந்த மாத்தாந்திர பத்திரிக்கையின் பக்கங்களை நான் புரட்டிக் கொண்டு இருந்தேன்.

முக்கால் மணி ஆயிற்று.அவர்கள் மூன்று பேரும் வெளியே வந்தார்கள்.இப்போது என்ன பூகம்பம் வெடிக்கப் போகீறது என்று அவர்கள் மூன்று பேருடைய முகங்களையும் நான் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

கதவை வேகமாக திறந்துக் கொண்டு முதலில் சாரதா வந்தாள்.

“இவா கிட்டே வந்து கேட்டா,இவா என்னவோ தர்மம்,பாவம் புண்ணீயம்ன்னு எல்லாம் சொல்லி என்னே ‘ப்ரெயின் வாஷ்’ பண்றா.நாம இங்கே வந்ததே ‘வேஸ்ட்’”என்று கத்திக் கொண்டே ‘சோபா’ வில் ‘பொத் ‘என்று உட்கார்ந்துக் கொண்டாள்.

என் மாமனாரும் ரூமை விட்டு என் மாமியாருடன் வந்து ‘சோபா’வில் உட்கார்ந்துக் கொண்டர் அவர் நிதானமாக என்னைப் பார்த்து ”சாரதா தான் இன்னும் ரொம்ப ஜாக்கிறதையா இருந்துண்டு வந்து இருக்கணும்.இதேத் தான் நானும்,பதமாவும் அவ கிட்டே சொல்லி அவளே ரொம்பக் கோவிச்சு ண்டோம்.அதுக்கு அவ என்னடான்னா ’எனக்கு அந்த ஆத்து அமக்களத்லே எல்லாமே மறந்துப் போச்சு எனக்கு மனசு அமைதியா இருந்தாத் தானே ‘எல்லாம்’ ஞாபகம் இருக்கும்.நான் மறந்து போயிட்டு இருக்கேன்.என்னே என்ன பண்ணச் சொல்றேள்’ன்னு கத்தறா.எனக்கும், பத்மாவுக்கும் சாரதா ஒரு ‘அபார்ஷனே’ பண்ணிக்கி றது ‘சரி’ இல்லேன்னு படறது.உங்க அம்மாவும், அப்பாவும் நிச்சியமா சாரதா ‘அபார்ஷன்’ பண்ணிக்கிறதே ஒத்துப்பான்னு எனக்குத் தோணலே.நீங்க என்ன நினைக்கறேள்” என்று என்னைப் பார்த்து கேட்டார்.

அதற்குள் என் மாமியார் “நான் சாரதா கிட்டே‘சாரதா,உடம்ப்லே ஒரு குழந்தேன்னு வந்துட்டா, அதேக் கலைக்கறது ஒரு ‘சிசு வதம்’ மாதிரி.நாம அந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு’ ன்னு சொன் னேன்.அதுக்குத் தான் அவ அப்படி கத்திண்டு ரூமே விட்டு வெளியே வந்தா.இவருக்கும் என்னேப் போலவே ‘அபார்ஷன்’ பண்ணிக்கிறதிலே உடன்பாடு இல்லே.நீங்கோ தான் எப்படியாவது சாரதாவுக் கு நல்ல புத்தி சொல்லணும்.நாங்க சொன்னா அவ கேக்க மாட்டேங்கறா” என்று சொன்னாள்.

உடனே சாரதா “அவர் என்ன எனக்கு புத்தி சொல்றது.நான் நாலு பேருக்கு புத்தி சொல்லு வேன்.வாங்கோ நாம கிளம்பலாம்”என்று சொல்லி சோபாவை விட்டு எழுந்தாள்.“இரு சாரதா ரெண்டு பேரும் கொஞ்சம் ‘காபி’ குடிச்சுட்டுப் போங்கோ.நான் இதோ ஒரு நிமிஷத்லே காபிப் போட்டுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய் மூனு பேருக்கும் சுடாக ‘காபி’யே போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

காபியைக் குடித்து விட்டு ”அப்போ நாங்கோ போயிட்டு வறோம்” என்று சொல்லி விட்டு சாரதாவை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தேன்.சாரதா கோவமாக என்னைப் பார்த்து ”என் அம்மா அப்பாவே ‘இப்படி’ சொல்லிட்டா.’கட்டிப் பெட்டி’யான உங்க அம்மா அப்பா மட்டும் என்னே ‘அபார்ஷன்’ பண்ணிக்க ‘அலவ்’ பண்ணப் போறாளா என்ன.நான் இந்த குழந்தையே பெத்துண்டு ஆகணும்.வேறே வழி இல்லே” என்று சொன்னாள்.

நான் நிதானமாக “சாரதா,நீ என்னவோ இந்தக் குழந்தேயே பெத்துக்க முடிவு பண்ணீ இருக்கே.இனிமே நீ சந்தோஷமா இருந்துண்டு வரணும்.அப்போ தான் பொறக்கற குழந்தே நன்னா பொறக்கும். மனசிலே எந்த வெறுப்பையும் வச்சுக்காம இருந்து வா” என்று சொன்னதும் சாரதா என்னை ஒரு முறை முறைத்துப் பார்த்தாள்.

வீட்டுக்கு வந்ததும்” நான் என் அம்மா அப்பாவிடம் அந்த ‘லேடி’ டாக்டர் சொன்ன எல்லா விவரங்களையும் சொன்னேன்.உடனே என் அம்மா அப்பாவும் சந்தோஷமாக “அப்போ இந்த ஆத்லே சீக்கிரமா சாரதா எங்களுக்கு ஒரு பேரனையோ,பேத்தியையோ பெத்துத் தறப் போறாளா.கேக்கவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கோரஸாகச் சொன்னார்கள்.

நான் சாரதாவுக்கு எந்த ‘லேடி’ டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொடுத் தேன்சாரதாவும் அந்த மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்தாள்.நான் மாசம் ஒரு தடவை சாரதாவை அந்த லேடி டாக்டா¢டம் அழைத்துப் போய் ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தேன்.

சாரதா தினம் இரவு படுத்துக் கொண்டதும் என அம்மா அப்பாவைப் பற்றி நிறைய ‘கம்ப்லெயி ண்டுகள்’ சொல்லி வந்தாள்.நான் அவள் சொன்ன எல்லா ‘கம்ப்லெயிண்டுகளையும் கேட்டு விட்டு, அவளிடம் என் ‘இயலாமையை’ சொல்லி வருத்தப் பட்டேன்.

சாரதாவுக்கு எழு மாதம் ஆனதும் சார்தாவின் அம்மாவும் அப்பாவும் அவளை அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் ‘கிரமமாக’ ‘வளைக் காப்பு’ விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவுக்கு என் நானும்,அம்மாவும் அப்பாவும்,என் தங்கை ராதாவும் போய் இருந்தோம்.ஒரு வாரம் அவர்கள் வீட்டில் இருந்து விட்டு சாரதா எங்கள் வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த மாசமே என் அம்மாவும் அப்பாவும் வீட்டு வாத்தியாரை,வீட்டுக்கு வரச் சொல்லி சாரதாவுக்கு ‘சீமந்த’ விழாவைக் கொண்டாடினார்கள்.அந்த விழவுக்கு சாரதாவின் பெற்றோர்களும், ராதாவும்,அவள் கணவரும்,குழந்தைகளும், ராதாவின் மாமனாரும் மாமியாரும் வந்து இருந்து அந்த ‘சீமந்த’ விழாவை சிறப்பித்தார்கள்.

சாரதாவுக்கு பிரசவ வலி எடுத்ததும் நான் சாரதாவையும்,அம்மா அப்பாவையும், அழைத்துக் கொண்டு போய் அருகில் இருந்த ஒரு பொ¢ய ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தேன்.அங்கு இருந்த ‘லேடி’ டாக்டர் சாரதாவை ‘லேபர் வார்டுக்கு’ அழைத்துப் போனாள்.நானும் அம்மாவும் அப்பாவும் அந்த ‘நர்சிங்க் ஹோமில்’ போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தோம்.என் அம்மாவும் அப்பாவும் தங்கள் கண்களை மூடிக் கொண்டு சுவாமி மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.நானும் என் மனதில் சுவாமியிடம் ‘சாரதாவுக்கு நல்லபடி பிரசவம்ஆகி, அவளும் குழந்தையும் சௌக்கியமாக இருக்க வேண்டும். சாரதாவுக்கு பிரசவத்திலே எந்த ‘காம்ப்லிகேஷனும்’ இருக்கக் கூடாது.அவளுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *