“மெகா சீரியல் ஹீரோயின் மாதிரி சோகமா இருக்கீங்களே, ஏங்க?”
“நம்ம கம்பெனி டூத் பேஸ்ட்டுக்கு மக்கள்கிட்ட நல்ல பேர் இருக்கு. ஆனாலும், டர்ன் ஓவர் அதிகம் வரமாட்டேங்குது. அதான், கம்பெனி லாபத்தை அதிகரிக்க என்ன பண்ணலாம்னு இன்னிக்கு ஒரு மீட்டிங் போட்டிருந்தேன். ஒரு பயலும் உருப்படியான யோசனையே சொல்லலை!”
“இது சரவணபவன் சட்டினி மாதிரி தம்மாத்தூண்டு பிரச்னை. இதை ஏன் பொருட்காட்சி அப்பளம் மாதிரி பெரிசுபடுத்தறீங்க?”
“போடி வாயாடி!”
“வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்னு தெனாலிராமன் சொல்லியிருக்கானே, அதை ட்ரை பண்ணிப் பார்க்கிறதுதானே?”
“என்னடி சொல்றே?”
“நம்ம கம்பெனி டூத் பேஸ்ட்டோட வாய் த்ரிஷா தொப்புள் மாதிரி ரொம்பச் சின்னதா இருக்கு. அதை இன்னும் ஒரு சுத்து பெரிசுபடுத்துங்க. உபயோகம் அதிகமாகும். தேஜாஸ்ரீ புடவை மாதிரி ரொம்ப இறங்கியிருந்த சேல்ஸ் கிராஃபும் ரகஸியா மிடி மாதிரி மேலே போகும்..!”
“வாவ்… சூப்பர் ஐடியாடி!”
– 15th ஆகஸ்ட் 2007