வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 3,308 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-25

அத்தியாயம்-19

சகஸ்ரம் உள்ளே அரைத் தம்ளர் காப்பிக்காகச் சென்றவன், சொன்னபடி சீக்கிரம் திரும்பவில்லை. 

ஈசுவரன் மெல்ல.எழுந்து கூடத்தினுள் பிரவேசித்து, சமையலறையை நோக்கி நடந்தார். சகஸ்ரத்தின் வீட்டுக் கூடம் எப்போதுமே இருட்டாகத்தான் இருக்கும். சமையல் அறை வெளிச்சத்தில் பார்த்தபோது, கூடத்தின் எல்லையில் சுவரோரமாய் ராஜி படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளுக்கு வாரத்தில் ஒரு தடவையாவது ஒற்றைத் தலைவலி வரும். வந்தால் அவ்வளவுதான். கிடைத்த ஒரு மூலையில் படுத்துவிடுவாள். மணிக்கணக்காக எழுந்திருக்க மாட்டாள். இந்த மைக்ரையினுக்கு மருந்து கிடையாது. அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று அவள் பிடிவாதமாக இருந்ததால் எந்த முறை சிகிச்சையையும் அவள் ஏற்கவில்லை. ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதி, நாட்டு வைத்தியம் என்று முன்பெல்லாம் பார்த்துப் பார்த்து அவளுக்கு அலுத்துப் போயிற்று. ‘பாவம் ராஜி’ என் று தம்முள் முணுமுணுத்துக்கொண்டே அவர் சமையலறைக்குள் சென்றார். 

அங்கே சகஸ்ரம் தலையில் துவாலையைக் கட்டிக் கொண்டு காஸ் அடுப்பின் எதிரே நின்று கொண்டிருந்தான். 

”என்னடா சேயறே?” 

“குக்கால் இட்லி வேகறது. இப்பத்தான் ஃபில்டர்ல வள்ளம் விட்டிருக்கேன். தேங்காய்ச் சொரவி சட்னி அரைக்கண்டதுதான் பாக்கி, அண்ணா… நீ மௌலிட்டே பேசிண்டிரு. பத்து நிமிஷத்தில் இட்லி, சட்னியோட வரேன்” 

“நாங்க வந்தப்ப, ‘ராஜி’ ராஜின்னு கூப்பிட்டியே?”

“கார்த்தால வரை ஒண்ணும் இல்லை. இப்ப வந்தப்பத்தான் படுத்துண்டாச்சுன்று தெரிஞ்சுது. நீ போ அண்ணா நாம பேசப் போறதைக் கேக்கறப்ப மௌனி தெம்பா இருக்கணும், அதுக்கு அவன் வயறு நறயஞ்சிருக்கணும்.’ 

“இந்த டிபனை நான் நம்மாத்ல சேயச் சொல்லி யிருப்பேனே, சகஸ்ரம்” 

“எந்த ஆமானால் என்ன? அண்ணா, நீ போ. என்னவோ ஏதோன்னு மௌலி அரண்டு போயிருக்கான்”

பதில் பேசாமல் ஈசுவரன் திரும்பினார். சகஸ்ரம் படித்தவன் அறிவாளி.இதற்கெல்லாம் மேலாக நல்லவன்; பரோபகாரி, ஊரில் யார் என்ன கேட்டாலும் தன்னால் முடிந்தால் சளைக்காமல் உதவி செய்வான். பாவம் இப்படிப்பட்டவனுக்கும் பகவான் ஒரு கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார். 

ராஜி படுத்திருக்கும் திசையைப் பாராமலே ஈசுவரன் திரும்பினார். மௌலி நாற்காலியில் அதே நிலையில் இருந்தார். 

“சகஸ்ரம் இப்ப வருவன்”. 

”என்ன ஈச்சா, ஏதோ சூத்திரம்னு சொன்னேன் இல்லியா? சகஸ்ரம் இப்ப வருவன்னு… ஏன் அவசரப் படறாய்…? இப்பவே நங்கவரம் மடங்கப் போற தில்லையே?”

“சரி அவன் வாட்டும்” என்றார் மௌலி.

”அதுவரையில் நாம பேசிண்டிருப்போமே”

“பேசலாமே!” 

“பாரதி தன் சின்ன வயசுப் பிடிவாதங்களை மனசு தொறந்து சொன்னா. அதனால் ஏற்பட்ட சங்கடங்களையும் விவரிச்சா, காலேஜ்ல சஸ்பெண்ட் கூடப் பண்ணினாளாம்”. 

“ஆமாம் தன் காரியத்தைச் சாதிச்சுக்சுணும்ங்கற வெறி வந்துட்டா கடைசி வரையில் மூர்க்கத்தனமா இருப்பா”. 

“ஜெயிக்கவும் ஜெயிப்பா இல்லியா?” 

”முக்காலே முணு வீசமும்”. 

“அப்ப அந்த பாக்கி வீசத்திலே தோத்திருப்பாள்னு அர்த்தம்”. 

“ஆமாம், தோல்வியும் இருந்திருக்கு. ஒரு தடவை எச்ஸ்கர்ஷன் போறதா இருந்தது. ஒண்ணரை மாசம் முன்னாடியே காலேஜ்லே சொல்லியிருந்தா. போகணும்னா. சரின்னேன். ஹரித்வார், டேராடூன் முசூரி, ரிஷிகேஷ்னு பத்ரிநாத் வரை முப்பது பெண்கள் பஸ்ல போறதாப் பிளான். போறதுக்கு ஒரு மாசம் இருக்கறப்ப டைபாய்ட் வந்தது. இருபது இருபத்திரண்டு நாள்ளே குணமாச்சு… ஆனாலும் அவ கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துக்கணும்னு டாக்டர் சொன்னார். பத்து நாள் போதுமான்னு டாக்டர்ட்ட கேட்டாள். ஒரு மாசம்னார் டாக்டர். எக்ஸ்கர்ஷன் பிளானை அவர்ட்ட சொல்லி அபிப்ராயம் கேட்டேன். அசையப்படாது. உடம்பு வீக்கா இருக்கு. இந்த இடங்களுக்கெல்லாம் பஸ் போனா நிச்சயமா ரிலாப்ஸ் ஆகுப்னார். ஆனா பாரதி கேக்கலே. போய்த்தான ஆகணும்னு பிடிவாதம் செஞ்சா. நான் செஞ்சினேன். சுசீலா தறகொலை செய்துப்பேன்னு கூட மிரட்டினா. ஆனா அப்பவும் பாரதி தன் முடிவை மாத்திக்கலே.” 

“அப்றம் என்ன செய்தேன்?” 

“சுசீலா இன்னம் உசிரோடதான் இருக்கா”. 

“இவபிடிவாதத்துக்கு ரண சிகிச்சை தான் மருந்துன்னு பட்டது. வெளிப்பூச்சா சரி உன் இஷ்டம் போலச் செய்வேன். உல்லன் ஸ்லெட்டர், ஜீன்ஸ் தலைக்குந் தொப்பின்னு அவ தயார் பண்ணிட்டா. ஒருநாள் கார்த்தால ஆறு மணிக்கு அவ காலேஜ் வாசல்ல இருக்கணும் ஆட்டோவில் கொண்டு விடறதாச் சொல்லியிருந்தேன். அவ ரொம்ப சந்தோஷமா விடியறதுக்குக் காத்திருந்தா” 

“அப்றம்?'”

“அவளுக்குன்னு ஒரு தனி ரும் உண்டு”. 

“நான் டில்லி வந்தப்ப அதில்தானே இருந்தேன்.” 

“நாலு மணிக்கு எழுப்ப சொல்லியிருந்தா. சரின்னோம். நாங்க ரெண்டு பேரும் மூணே முக்காலுக்கு அவ ரூம் கதவை வெளியே பூட்டிட்டு, லோடி கார்டனுக்குப் போயிட்டோம். ஆறுமணிக்குத்தான் திரும்பி வந்தோம்.” 

“கூண்டுல அடைச்ச புலி மாதிரி உங்க ரெண்டு பேர் மேலேயும் பாய்ஞ்சு கடிச்சுக் கொதறி இருப்பாளே?”

”அதான் இல்லை ஈச்சா…”

“என்ன சொல்றாய் நீர்” 

அவள் காலேஜ் எக்ஸ்கர்ஷன் பத்தியேபேசலை, தயார் பண்ணி வைச்ச துணிகளையெல்லாம் பெட்டியிலேர்ந்து எடுத்து அலமாரியிலே ஒழுங்கா வைச்சா. சாப்பிட வேண்டிய நேரத்திலே சாப்பிட்டா. ஆனா என்ன ஏழெட்டு நாளுக்கு எங்க ரெண்டு போட்டேயும் சௌஜன்னியமாப் பேசலே.”

“டேய் மௌலி. இவ ரொம்ப க்ரேட்டுடா! நினைச்சதை சாதிச்சுக்க பிடிவாதம் சேதா. இனிமே கெடைக்கவே சான்ஸ் இல்லேன்னு தெரிஞ்சதும் தனக்குள்ளேயே அடங்கிப் போயிட்டா, மனசை எப்படித் தேத்திக்சுறதுன்னு எத்தறையோ பேருக்கு – ஏன் எனக்கும், ஒனக்கும் தான் தெரியறதில்லே. ஆனா பாரதியாலே முடியறது. ஒளவையார் தான்னு நெனைக்கறேன். என்னா, ஒண்ணு கெடைக்கலேன்னா, அதை மறந்துடுன்னா கரெக்டா?” 

“கிட்டாதாயின் வெட்டென மற” என்றான் மௌலி. 

“சூத்திரம்னா என்னென்னு கேட்டியே, இதுதான் சூத்திரம். தந்திரமாச் சேயற ஒரு காரியம். ஆனா அது ஒருத்தரோட நல்லதுக்காக இருக்கணும். சகஸ்ரம் எல்லோருடைய நல்லதுக்கும் ஒரு சூத்திரம் சொன்னான்”

“அவனை இன்னும் காணோமே?* 

“இப்ப மிக்ஸியோட சத்தம் கேட்டுது பில்லியா?”

“ஆமாம். ராஜி என்னமோ அரைக்கறாள்”. 

”அது ராஜி அல்லா, அல மைக்ரையின்ல துடிச்சுப் போய்ப் படுத்துண்டிருக்கா… சகஸ்ரம்தான் சட்னிக்கு அரைக்கிறான். இப்ப தாளிச்சுக் கொட்ட கரண்டியை அடுப்புமேல வைச்சுருப்பன்.. ஹாங், ஒண்ணு ஒன்னைக் கேக்கணும்னு நெனைச்சேன்!” 

”என்ன அது ஈச்சா?” 

“இந்த பிஎச்.டி. படிப்பு பத்தி பாரதி உங்கிட்ட பிடிவாதம் பிடிச்சிருக்காவா?”

“எம்.ஃபில் ரிஸல்ட் எப்ப வந்ததோ அந்த க்ஷணத்தி லிருந்து அவ விட்ட மூச்சே அதுதான்.” 

“ஏன் மாட்டேன்னு சொன்னாய்?”

“நான் மாத்திரம் காரணம் இல்லை, ஈச்சா!”

“சுசீலாவும் இல்லியா?”

“ஆமாம். உங்கிட்ட நான் ஒண்ணரை லட்சம் கடன் வாங்கியிருந்தேன். நங்கவரத்து வீடு சிதிலமாயிருந்தது. சில இடங்கள்லே இடிச்சுக் கட்ட வேண்டியிருந்தது. சுவர்ன்மெல்ட்லேர்ந்து ரிடையராயிட்டா அறைகுறை உசிரோட தவிக்கிற பாம்பு மாதிரித்தான்… வெளியேதான் யாரும் மதிக்க மாட்டான்னா. வீட்லேயும் நிஷித்தமா பேசுவர். கட்டின பெண்டாட்டிகூட அதுவரையில் காட்டி வந்த மதிப்பையும் மரியாதையும் குறைப்பா, பிரைவேட் கம்பெனியில் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்குப் போவாம்னு அட்வைஸ் பண்ணுவா. முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சதெல்லாம் மறந்து போகும்” 

“லோக ரீதியாப் பேசறதிலே ஆருக்கு என்னடா லாபம் மௌலி! பாரதி விஷவத்துக்கு வா.”

“ரிடயரானப்புறம் அவளை மேற்படிக்கு அனுப்ப எங்கிட்ட பணவசதி இருக்கலே. பெத்த புள்ளை எப்பவாவது ஒரு கடுதாசி போடறானே ஒழிய அதுக்குள்ள ஒரு டாலர் நோட்டைக்கூட வைச்சு அனுப்பினதில்லை. பாரதிக்கு டீச்சர் வேலைன்னா பிடிக்காது. இருந்தாலும் ஏதானும் காலேஜ்ல வெச்சரரா வேலை செய்ஞ்சு, பிஎச்.டிக்குப் போறேன்னா…” 

“அது நல்ல ஐடியாவாச்சே?” 

“கவர்ன்மென்ட் க்வார்ட்டர்ஸைக்காலி பண்ணிட்டா பிளாட்பாரம்தான் கதி.கரோல்பாக்ல ஒரு பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு என்ன வாடகை தெரியுமா? ரெண்டாயிரம். க்ரீன பார்க்ல மூணு. நான் என் பென்ஷன்ல ரேஷன் வாங்குவேனா இல்லே வாடகை கொடுப்பேனா?”

“அப்ப அவளை அங்கே விட்டுட்டு நீங்க மாத்திரம் நங்கவரம் வந்திருக்கணும்.” 

“இதைத்தான் பாரதியும் சொன்னா. ஆனா சுசீலா: கேக்கலே. அவ டில்லியிலே ஒருநாள் கூடச் தனியா இருக்கப்படாதுன்னா. உடனடியாக் கல்யாணம் பண்ணனும்னா. சத்தியமாச் சொல்றேன். ஈச்சா என்னைத் தப்பா எடுத்துக்காதே. என் பொண்ணை தங்கம்மா இருக்கற வீட்டுக்கு அனுப்ப எனக்கு இஷ்டமிருக்கலை. நீ நல்லவன் உனக்கு தாராள மனசு. எப்பவும் வெள்ளை. உன் பேர்ல எனக்குக் தனி மதிப்பும் மரியாதையும் அபிமானமும் உண்டு. பிள்ளையும் உன்னைக் கொண்டிருப்பதாகவே பட்டது. ஆனா தங்கம்மா பதினெழு பதினெட்டு வயசிலே எப்படி எப்படி இருந்தாள்னு எனக்குத் தெரியும். அப்படிப்பட்டவ உங்கிட்ட வந்தப்புறம் கம்ப்ளீட்டா மாறிட்டாள்னு நெனைச்சேன்”

ஈசுவரன் சிரித்தார். 

”பழைய கதை! விடு. விட்டுத் தள்ளு.ஜன் மகுணத்தை யாராலும் மாத்த முடியாது. கெட்ட பழக்கங்கள் சிகரெட், குடி, தேவடியாள் இதெல்லாம் நடுவிலே வந்தா நடுவிலேயே போக்கிக்கலாம். ஆனா சோரையோட வந்த குணம் சோரை உறைஞ்சு போறப்பத்தான் போகும். இப்ப தங்கம் ப்ரோப்ளம் இல்லை. பாரதிதான் ப்ரோப்ளம்” 

“சகஸ்ரம் வர்றான்.”

“மின்னால இட்லி திம்போம்” என்றார் ஈசுவரன். 

“நீ தொடங்குடா.நான் அப்ஸர்வர் மாதிரி வாயைத் தொறக்காம ஒக்கார்ந்திருக்கேன்!” என்று சசுலரன் சகஸ்ரத்திடம் சொல்ல, சசுஸ்ரம் “மௌலி உனக்கு நெஞ்சுறுதியும் தைரியமும் இருக்கா?” என்று கேட்டான். 

ஒருகணம் மௌலிக்குக் கோபம் வந்தது. சகஸ்ரம் நட்புரிமையோடு கேட்பதை அவர் உணர்ந்திருந்தாலும் அவமானப்படுத்துவது போலத் தோன்றியது. 

”எம் பேர்ல ஒனக்கு இப்ப தேக்ஷ்யம் உண்டாறது நேக்குத் தெரியறது. பட் ஐ டோண்ட் கேர். இப்ப நம்ம எல்லார்க்கும், முக்கியமா அண்ணா குடும்பத்துக்குக் காரியம்தான் முக்கியம்.” 

“சரி சொல்லு” 

“நீ இந்நைக்கோ, நாளைக்கோ ஒன் பொண் பாரதியைக் கூட்டிண்டு போறாய்”. 

“எங்கே?” 

“அப்பன் பொண்ணை எங்கே கூட்டிண்டு போவன்? ஒண்ணு புக்காத்துக்கு, இல்லைன்னா பொறந்தாத்துக்கு! பாரதி இப்ப புக்காத்திலேதானே இருக்கா?” 

“கூட்டிக்கிட்டுப் போய்…” 

“ஒன் இஷ்டம் போலச் செய்.”

“புரியவே சகஸ்ரம்” 

“நீயும் ஒன் ஒய்ஃபும் ஆசைப்பட்டா நங்கவரத்திலேயே வைச்சுக்கோங்கோ. பிஎச்.டி படிச்சுத்தான் ஆகணும்னா. அவ அதைப் படிக்க நங்கவரத்திலேந்து அனுப்பு. அது கழியலேன்னா மூணு பேருமா காவிரியிலே விழுங்கோ, எங்களுக்கு அவ இங்கேந்து போனாப் போரும்!” 

“என் பொண் என்ன தப்பு செய்ஞ்சா?” 

“அவ தப்பு சேதிருந்தா நடக்கற கதையே வேறே. நாங்களே வண்டி ஏத்தி அனுப்பிச்சிருப்போம் அவ இப்ப நல்லவளாத்தான் இருக்கா. எல்லார்ட்டேயும் சிரிச்சுத்தான் பேசறா, ஆனா இதெல்வாம் மாத்திரம் போறாதே?”

“இன்னும் என்ன வேணும் மௌலி?” என்றார் ஈசுவரன். 

“ஒடம்பு இங்கேயும் மனசு பிஎச்.டியிலேயும் இருக்கப் படாது. ரெண்டும் ஒரே எடத்தில இருக்கணும். நம்ப கண்ணுக்கு அவ நல்ல பொண்ணா, புத்திசாலிப் பொண்ணா, வீட்டுக் காரியங்களை வேகத்திலே மனசிலாக்கிண்டு திருப்தியா சேயற பொண்ணாத் தோணினானும் அவ மனசு இங்கே இல்லை. பிஎச்.டியில் இருக்கு. அதைப் படிக்கணும்ங்கற ஆசையிலும் மோகத்திலும் பாரதியை எங்க கோந்தைக்கு வாங்கிக்கலை” 

“கூடிய சீக்கிரம் அவ முழுகாம இருந்தா இந்தப் பிரச்னை தானாத் தீர்ந்துடாதா?”

“பாரதி முழுகிண்டுதான் இருப்பா, மாசாமாசம் தொழுத்துப் பொரையில் மூணு நாள் ஒக்கார்ந்துண்டு தான் இருப்பா”. 

“இதை உன்னால் எப்படி அவ்வனவு நிச்சயமாக தீர்மானமாச் சொல்ல முடியும், சாஸ்ரம்?” 

“என்னால் அடிச்சுச் சொல்லக் கழியும்.”

“அப்ப அதாய் நான் தெரிஞ்சுக்கறேன்.” 

“சொல்லண்டாம்னு பார்த்தேன். நீ சொல்ல வைக்கிறாய், சரி சொல்லியூடறேன். அவர்களுக்கு இன்னும்…”

“சாநதி முகர்த்தம் நடந்ததே?” 

“வாத்தியார் மந்திரங்களைச் சொன்னார் அம்படத்தான்! அதுக்கு அப்புறம் என்ன நடக்கணுமோ அது இன்னித் தேதி வரை நடக்கலை. என்னையோ எங்கிட்ட த்தக் குஞ்சப்பாகிட்ட எல்லா ரகசியங்களையும் சொல்ற கோந்தையையோ நீ நம்பண்டாம். நீ பெத்த பொண்ணையே தனியாக் கூப்பிட்டுக் கேளு. ஒனக்கும் கூச்சமா இருந்தா நங்கவரத்துக்குக் கூட்டிண்டு போய் உன் ஒய்ஃபை விட்டுக் கேக்கச் சொல்லு.” 

“சரி நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். உன் பேச்சைக் கேட்டு நான் என் பெண்ணை அழைச்சுட்டுப் போனா அப்புறம் அவ கதி?” 

“முணு சாய்ஸ் தந்தேனே நங்கவரம் பிஎச்.டி காவிரி.”

“அப்புறம் நீங்க என்ன செய்லிங்க?” 

“அதை நாங்க பார்த்துக்கறோம். நீ விசாரப் படண்டாம். கோர்ட்டும் வக்கீலும் இருக்கு, பலமான பாயிண்ட் இருக்கு.’* 

“என்ன அது பலமான பாயிண்ட்?”  

“கல்யாணமாச்சு ஆனா கன்ஸுமேஷன்- கல்யாணத்தின் முடிவான நிறைவு அது- ஆகலையே? எங்க வக்கீல் ஆறு மாசத்திலே டிவோர்ஸ் வாங்கித் தருவன்” 

மௌளி சீற்றத்துடன் எழுந்தார். 

“இதைச் சொல்றத்துக்கா என்னை லெட்டர்போட்டு வரவழைச்சீங்க, கோர்ட்டுன்னு வந்தா நானும் ஒரு கை பார்த்துக்கறேன்” மௌலி எழுந்தார். 

சகஸ்ரம் சுலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான்.இது வரை மௌனமாய் பார்வையாளராக இருந்த ஈசுவரனும் சிரித்தார். 

அவர்களுடைய பிரிப்பு மௌலியின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது. 

“சகஸ்ரம் நம்ப மௌலிக்குப் புத்தி போறாது”. 

“இல்லாட்ட இப்படி தேஷ்யப்பட்டு எழுந்து நிப்பானா? ஒக்காரு மௌலி. இதுதான் என்னோட சூத்திரம்.” 

“என்ன?” 

“ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்… இல்லைன்னா… சர்ஜரி”

“கொஞ்சம் புரியறது” என்றார் மௌலி உட்கார்ந்து, கொண்டே சிரிப்பு வந்தது. ஆனால் அது அசட்டுச் சிரிப்போ என்று அவருக்கே தோன்றியது. 

“நீ சாப்பிட்டப்புறம் என்ன சேயறாய்.. பாரதியை மச்சு மேலுக்குக் கூட்டிண்டு போறாய், அந்தாத்தில அல்ல. அங்கே ஒன் தங்கை இருக்கா குறுக்கே வந்தாலும் வருவள்,

“மன்னியால நம்ப பிளான் குட்டிச் சுவராகப்படாது. நான் இப்ப சொன்னதையெல்லாம் ஒன் பாணியிலே பாரதிக்கு ஏற்றபடி அவகிட்டப்பேசணும். மனசிலாச்சா?” 

“ஆச்சு சகஸ்ரம்,” 

“எங்க குடும்பத்துக்குப் பாரதி வேணம். எங்க ஆசை நிறைவேறனும்னா இதுதான் ஒரே வழி”. 

“ஒருவேனை எல்லாத்துக்கும் அவ துணிஞ்சா? நாராயணன் வேண்டாம். பிஎச்.டிதான் வேணும்னு அவ நின்னா?” என்றார் மெளலி, 

“அப்ப பகவான் விட்ட வழின்னு இருந்துக்கறோம்!” என்றார் ஈசுவரன். 

அத்தியாயம்-20

பாரதிக்குத் தகப்பனார் எதற்காகத் திடீரென்று பாலக்காட்டுக்கு வந்திருக்கிறார் என்று இன்னும் புரியவில்லை. பாசம் காரணமாக அவர் நிச்சயமாக வரவில்லை. இந்த வீட்டில் சேர்த்துவிட்டு அவரும், அம்மாவும் ஊர் திரும்பி இன்னும் முழுதாக இருபது நாள் ஆகவில்லை. அப்படியே பாசம் பொங்கி வழிந்த காரணத்தினால் வந்திருந்தால் கூடவே அம்மாவையும் அழைத்து. வந்திருப்பார். வெறுங்கையுடனும் வந்திருக்சு மாட்டார். காரணத்தை அவளிடமும் சொல்லவில்லை. கூடப்பிறந்தவளிடம் நம்பும்படியான விதத்தில் கூறவில்லை. மாமனார் அப்பாவை சகஸ்ரத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே என்ன பேசப் போகிறார்கள்? அல்லது பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தப் பத்து நாள்களில் எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறாள். அத்தை மட்டும்தான் இன்னும் அப்படியே இருக்கிறாள். ஆரம்பத்தில் அவளைத் தூக்கி எறிந்து பேசியதை இனைமும் மனதில் ஊறப் போட்டுக் கொண்டிருக்கிறாளோ என்னவோ? ஆனால் நாளடைலில் அத்தைக்கும் அவளைப் பிடித்துப் போகும். பாட்டிக்கு அத்தையைப் பிடித்துப் போகவில்லையா? அதுபோல ஆனால் இந்த சுமுகமான வேளையின் அப்பா ஏன் வரவேண்டும்? 

பி.எச்.டி., நடீரென்று மடையில் அடித்தது. இது பற்றிய கருத்தை அவள் இன்னும் மாற்றிக் கொள்ள வில்லை. அதே துடிப்பும், ஆர்வமும் இம்மியும் குறையாமல் அப்படியே இருக்கின்றன. கைலாசமும் தேவகியும் மனத்தைச் சற்றே குழப்பினார்கள். உண்மை, ஈசுவரனும், சகஸ்ரமும் திசை திருப்பப் பார்க்கிறார்கள். சந்தேகமில்லை. நாராயணன் தன்னுடைய முடிவைத் திட்டவட்டமாகக் கூறியாகிவிட்டது. இப்படியெல்லாம் இருந்தும் அவள் தன் ஆசையை அடக்கிக் கொள்ளவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம். ஈசுவரன மற்றும் சகஸ்ரம் சித்தப்பாவிடம் மீண்டும் மீண்டும் வெளியிட்டிருக்கிறாள். ஏன், கமலம் சித்தியிடம்கூடத் தன் அபிலாஷையைக் கூறியிருக்கிறாள். 

ஆசை வேறு, லட்சியம் வேறு என்று தேவகி சொன்னதை அவள் மனப்பூர்வமாக ஆமோதித்தாள். கைலாசம் காட்டு இலாகா சம்பந்தமாகப் படிக்க ஆசைப்பட்டுத்தான் அந்தத் துறைக்கு வந்தார். அவருடைய ஆசை நிறைவேறியது. அதன் பலனை அவர் பல ஆண்டுகள் அனுபவித்திருக்கிறார். இதன் பின்னர்தான் ஒரு லட்சியம் அவரை ஆட்கொண்டிருக்கிறது. 

கணவன் நாராயணனுக்கும் திடீரென்று ஒரு லட்சியம் பிறந்திருக்கிறது. வசதி இருக்கிறது. சிந்திக்க நேரம் இருக்கிறது. அநாதை ஆசிரமத்தை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு கிழவனோ, கிழவியோ உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அத்துக் காட்சி அவனுடைய மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அவனுடைய கொடை வள்ளல்தனம் லட்சியத்தால் ஏற்பட்டது என்று ஈசுவரன் உயர்த்தினாலும் அவளால் முழுதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாராயணனிடம் இயல்பாக தயாள குணம் இருக்கலாம். அதற்கு ஒரு வடிகால்கிடைத்த போது அவன். அதைப் பயன்படுத்திக் கொண்டான். பரோபகாரம் என்பது அவ்வப்போது எழக்கூடிய செயல். நாராயணன் உண்மையான லட்சியவாதி என்றால் தன்னுடைய பங்கு முழுதையும் தானமாக அளித்து, ஏழை எளியவர்களுக்குத் தொண்டு அல்லவா செய்ய வேண்டும்? 

விவசாயத்தில் தீவிர ஈடுபாடு ஏன் கொள்ள வேண்டும்? சம்மேளனங்களில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? மந்திரியைப் பார்க்க ராத்திரியில் ஏன் ஓடவேண்டும்? 

அவளுக்கு இப்போது லட்சியம் இல்லைதான். எந்த லட்சியமும் இல்லாமலேயே அவள் வாழ்ந்து முடியவும் கூடும். ஒரு லட்சியம் அவளுள் பிறப்பதற்காக அவள் பிஎச்.டியைத் தேடிப் போக தேடிப் போக வேண்டிய அவசியமும் இல்லை. 

அவளிடம் இருப்பது ஆசை. வெறும் ஆசைதான். டாக்டர் பாரதி என்று எழுதிப் பார்த்துக் கொண்டால் நிச்சயம் பெருமையாகத்தான் இருக்கும். மற்றவர்கள் அவளைக் கண்டு பொறாமைப்படும்போது எத்தகைய குதூகலமும், திருப்தியும் கிடைக்கும்? 

அவள் பிஎச்.டி. ஆசையைக் கைவிட மாட்டாள். அதற்கு ஆகாவும் அனுமதியும் கிடைக்கவும் கிடைக்கும். இப்போது அவளைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் உருவாகி வந்து கொண்டிருக்கிறது. அவள் கெடுத்துக் கொள்ள மாட்டாள். நல்ல பெண்ணாக தொடர்ந்து இங்கேயே இருப்பான். ஈசுவரன், சகஸ்ரம், நாராயணன், தேவகி இவர்கள் எல்லோருமே ரெயில்லே ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்புவார்கள். அவள் டாக்டர் பட்டம் வாங்கித் திரும்பி வரும்போது மாலை போட்டு வரவேற்க தேவகி நிச்சயம் வருவாள். 

“என்னடீ! மச மசன்னு நிக்கறே?” 

திடீரென்று அத்தையின் குரல் அவளைத்தாக்க, பாரதி ஏறிட்டுப் பார்த்தாள். 

“என்ன அத்தே?”

“உன் அப்பா சாப்பிடப் போறார், தெரியுமோ இல்லியோ?”

“தெரியும்.” 

“நான் காய்சுறிகளை நறுக்கி வைச்சாச்சு. இனிமே நீ பார்த்துக்கோ.” 

“என்ன சமையல்…?” 

“என்ன சமையல்னு நேத்து எங்கிட்டக் கேட்டியா? முந்தாநாள் கேட்டியா? பாட்டிட்டேயும், உன் மாமனார்ட்டேயும்தானே ஏழெட்டு நாளாக் கேட்டுச் சமைக்கிறே… நீ எதைப் பொங்கி, என்ன போட்டால் எனக்கு என்ன?”

பாரதிக்கு வரும் கோபத்தை அடக்கிப் பழக்கமில்லை இருந்தாலும் சிரமப்பட்டுத் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டாள். அப்பா வந்திருக்கிற தினம். மாமியாரிடம் வாயாடுவானேன்? 

தங்கம்மா சமையலறையை விட்டு வெளியேறியது நிம்மதியை அளித்தது. நறுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளைப் பார்த்தாள். 

வெண்டைக்காய். 

அவரைக்காய், 

சாம்பார், கறி, கூட்டு என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். அப்பாவுக்கு வெண்டைக்காயே பிடிக்காது. ஆனால் என்ன செய்ய? தங்கம்மா சாம்பாருக்கான அளவில் தானே வெட்டி வைத்திருக்கிறாள்? 

பன்னிரண்டு மணிக்கு மேல் அப்பாவும், மாமனாரும் வந்தார்கள். 

“பொண்ணே, எல்லாம் ரெடியா?” 

“ரெடி அத்திம்பேர்,” 

“தங்கம் எங்கே?” 

“தொழுவத்திலே இருக்கா”. 

“சரி அவ வர்றப்ப வரட்டும். நீ எல்லாத்தையும் கொண்டு வந்து டேபிள் மேல னவ”. 

“சரி”. 

“பாயசம் வைச்சிருக்காய் இல்லியா?”

“இல்லையே” 

“என்ன நீ, ஒன் அப்பா மின்னு மின்னால வந்திருக்கான், எனக்கு அவன் சம்பந்தி அல்லவா?” 

“விருந்து சாப்பிடறதுக்குன்னு நங்கவரத்திலேர்ந்து உங்க சம்பந்தி வந்திருக்கிறதா எனக்குப் படலை. அத்திம்பேர்!” 

ஈசுவரன் வாய்விட்டுச் சிரித்தார். 

“பார்டா மௌலி! ஒன் பொண் என்னை எப்படி மடக்கறான்னு.” 

”பாரதி நீ உன் மாமனார்ட்ட இப்படியெல்லாம் பேசப்படாது” என்றார் மெளலி.

“நீ பேசாதைக்கு இருடா. நாங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ், மாமனார் ஸ்தானமாடா இப்பப் பெரிசு? என்னை அவ மனசிலாக்கிண்டிருக்கா. நானும் அவ மனசை. எலையைப் பாரு. பாரதி பரிமாறத் தொடங்கியாச்சு” 

மௌலி அதன் பின் வாய் திறக்கவில்லை. 

அவர் சாப்பிட்டு விட்டு முற்றத்தில் கை அலம்ப வந்த போது தங்கம்மா வந்தாள். 

“அண்ணா!” 

“என்னம்மா?” 

“கை அலம்பி முடிச்சதும் நீ கொஞ்சம் மாடிக்கு வா” 

“வரேனே”

“உங்கிட்டப் பேசணும்.” 

மௌலி தங்கையைப் பார்த்தார். அவளுடைய முகத்தில் பிரதிபலிப்பது கோபமா, வெறுப்பா, விரக்தியா, வேதனையா? ஒன்றும் தெரியவில்லை. 

மாடி அறையில் அண்ணாவும், தங்கையும் சந்தித்துக் கொண்டார்கள். தங்கம்மா ஆரம்பிக்கட்டும் என்று மௌலி காத்துக் கொண்டிருந்தார். பெண் பாரதியைப் பற்றிப்பொதுவாக என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அவர் சகஸ்ரத்தின் வீட்டில் தெரிந்து கொண்டாகி விட்டது. அதனால் இப்போது மனம் கலங்கவில்லை.

“அண்ணா!” 

“சொல்லு தங்கம்மா?” 

“உன் பெண் சரியில்லே” 

“விவரம் தெரியாத பெண் பாரதி, தங்கம்மா! கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டேன் போலிருக்கு. டில்லியிலே பொறந்து வளர்ந்தவ. இங்கே அட்ஜஸ்ட் செய்ஞ்சுக்கக் கொஞ்சம் டயம் கொடு” 

“நான் இதைப் பத்தியெல்லாம் பேச உன்னை இங்கே கூப்பிடலே. அவளுக்கு வாய்க் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி, வந்த ரெண்டு நாள்லே அவ எங்கிட்ட எப்படி எப்படி என்னென்னவெல்லாம் பேசினான்னு உனக்குத் தெரியாது. அந்தச் சமயத்திலே மட்டும் என் கையிலே டேப்ரிகார்டர் இருந்திருந்தா நீயும் அவ பேச்சைக் கேட்டு ரசிச்சிருக்கலாம்”. 

”அவ உன்ளை எதிர்த்துப் பேசறது தப்பு ரொம்பத் தப்பு, கண்டிக்கறேன்” 

“எனக்கே பெப்பே காட்றவள் உன் பேச்சையா கேட்கப் போறா..? கார்த்தால எத்தனை மணிக்கு தூங்கி எழுந்திருப்பா, தெரியுமா? ஒன்பது, ஒன்பதே கால்… ஒருநாள் பத்து”. 

“ஏன் என்னாச்சு அவளுக்கு!” 

“உன் பொண்ணானே. என் மானமே போறது. நங்கவரம் மானத்தையும் அவன் காசு கொடுக்காமக் கூடிய சீக்கிரம் வாங்கிடுவா! அதனால…?” 

“அவளை நீ அழைச்சுட்டுப் போயிடு,”

“எத்தனை நாளைக்கு” 

“அதை இப்ப சொல்ல மாட்டேன்.” 

“என் பொண்ணை உன் பிள்ளைக்குக் கொடுக்க எனக்கோ சுசீலாவுக்கோ ஆரம்பத்திலே இஷ்டம் இல்லை. ஈச்சாதான் மொதலை எழுதினான்”. 

“எல்லாம் அவராலே வந்த வினைதான்”.

“நான் ஏன் இஷ்டப்படன்னு நீ கேக்கலியே, தங்கம்மா?” 

“சரி இப்பச் கேக்கறேன், சொல்லு”. 

“நீ வீட்ல எப்படி இருந்தவன்னு எனக்குத் தெரியும். அம்மாவையே அடிக்கக கை ஓங்கினவன் நீ. அப்பா செத்துப்போனப்ப உன் கண்ல மட்டும்தான் நீர் வரல்லே. அவர் செத்த நாலாம் நாள் நீ சினிமா பார்க்கப் போனே!. இப்படிப்பட்டவகிட்ட என் பெண் மாட்டிக்கப்படாதுன்னுதான் நினைச்சேன். ஆனா ஈச்சாவோட நங்கவரம் வந்தப்ப நீ முழுசா மாறிட்டதாத் தோணித்து. குழையக் குழையப் பேசினே. என் பொண் ஜெனிச்ச அன்னிக்கே அவ உன் பிள்ளைக்குத்தான்னு நெகிழ்ந்தே…உன் குணமே மாறிட்டதுன்னு நான் கணக்குப் போட்டேன். அந்தக் கணக்கு தப்புன்னு இன்னிக்குத் கார்த்தாலே நான் வந்ததுமே புரிஞ்சுது. தலையிலே இடி விழுந்தாப்ல ஆயிடுத்து…” 

“எதுக்கு அண்ணா வளவளன்னு பேசணும்? உன் பொண்ணை அழைச்சுட்டுப் போ” 

“நீ மாத்திரம் சொன்னாப் போதாதே…என் மாப்பிள்ளை சொல்லட்டும்.” 

”அவன் என் புள்ளை. நான் கிழிச்சு கோட்டைத் தாண்டமாட்டான்!” 

“அதையும் பார்த்துடுவோம்,.ஈச்சாவும் சொல்லட்டும்”.

“அவர்ட்ட நீ இது பத்திப் பேசத் தேவையில்லை!” 

“எப்படித் தேவை இல்லாமப் போகும்? அவர் தானே சம்பந்தி? என் பெண்ணோட தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்கும் இருக்கே?”

”அவர் சம்மதிக்க மாட்டார்.” 

“ஏனாம்” 

“அவங்க ரெண்டு பேரும் சகஜமாப் பழகறா.” 

“அப்ப அதுதான் காரணமா உன் முடிவுக்கு? சீ! என்ன அற்பத்தனமான, ஈனத்தனமான எண்ணம், உனக்கு!” 

“நீ உன் பெண்ணைக் கூட்டிட்டுப் போயே ஆகணும்”. 

“பாரதி வர்றதுக்கு மறுத்தா?” 

”மறுக்க மாட்டா… சொல்லப் போனா துள்ளிக் குதிச்சுக்கிட்டு உன் பின்னாலே வருவள்”. 

“எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே?”

“அவளுக்கு இந்த ஊர் பிடிக்கலே. இந்த வீட்டுச் சாப்பாடு பிடிக்கலே. எல்லாத்துக்கும் மேலா அவ கண் பிஎச்.டியிலே நிலைச்சு நிக்கறது, அந்தப் படிப்பைப் படிக்க என் புள்ளை சம்மதம் கொடுக்க மாட்டான். அவனோட அப்பாவும் கூடாதும்பார்.” 

“சரி, நான் அழைச்சுட்டுப் போறேன்னே வைச்சுக்கோ… அதுக்கு அப்புறம்?” 

“அதான் அப்பவே சொன்னேனே. நான் அப்புறமா முடிவு எடுக்கறேன்னு”. 

“என் பெண்ணை வாழாவெட்டி ஆக்கறதுன்று நீ கங்கணம் கட்டிட்டு நிக்கறே!” 

“நான் கங்கணமும் கட்டலே, வளையலும் போட்டுக்கலே. உன் பெண் இந்த வீட்ல இருக்கறதே என் கண்ணுக்கு எரிச்சலா இருக்கு”. 

“அப்பவேறு ஒரு வழிதான் இருக்கு”. 

“என்ன வழி?” 

“தனிக்குடித்தனம்!” 

தங்சும்மா கேலியாகச் சிரித்தாள். 

“என் பிள்ளையோட அப்பாவே கல்யாணமாகி முப்பது வருஷமானப்புறமும் தனிக்குடித்தனம் வைக்க. நினைக்கலே”

“இப்ப நினைக்க வைக்கிறேன். என் பொண் அவ புருஷனோட வேற ஒரு வீட்ல தனியா இருக்கட்டும்.”

“அது என் பொணம் விழுந்தப்புறம்தான் நடக்கும்” தங்சும்மா சீறினாள். 

“அப்ப உன் பொணம் விழுந்தப்புறம் தான் பெண் இந்த வீட்டை விட்டுப் பிறந்த வீட்டுக்குப் போவா! நீ இப்ப இதையெல்லாம் இந்த மாடி ரூம்ல தனியா உட்கார வைச்சுப் பேசறே. சாது மாதிரி இருக்கேங்கிற தாலே சாமர்த்தியமும், தைரியமும் இல்லேன்னு எடை போட்டுடாதே. இன்னிக்குச் சாயங்காலமே இந்தப் பள்ளிப்புரம் கிராமத்திலே இந்த வீட்டெதிரே நின்னுண்டு கோஷம் போட்டு கூட்டம் சேர்ப்பேன். நீ இப்ப சொன்னதையெல்லாம் அவாகிட்ட சத்தம் போட்டுச் சொல்லி என் பெண்ணுக்கு நியாயம் கேட்பேன்… அடிபட்ட புலியைப் பார்ச்கணும்னு உனக்கு ஆசை இருந்தா இன்னிக்கு சாயங்காலம் பாரு!”

“என் மானத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவரத் துடிக்கிறியா?”

“உனக்கு மட்டும்தான் மானம் இருக்கோ? எனக்கு இல்லியோ? என் பெண் பாரதிக்கு இல்லியோ?”

“கத்தாதே” 

”நீ கத்த வைக்கிறே?” 

“கீழே என் மாமனார், மாமியார் இருப்பா. அவரும் இருப்பார்”. 

“இருக்கட்டுமே! உன் மனசிலே எவ்வளவு அழுக்கு இருக்குன்னு அவங்களுக்கும் தெரியட்டுமே”. 

“சரி… சரி… இப்ப நீ உன் பெண்ணைக் கூட்டிட்டுப் போக வேண்டாம்.” 

“இப்ப என்ன இப்ப? எப்பவுமே கூட்டிட்டுப் போக மாட்டேன்” 

“நான் கீழே போறேன். நம்ம நாத்தம் மத்தவாளுக்குத் தெரிய வேண்டாம்.” 

“நான் என்னிக்குமே நாறாதவன். நாறவும் மாட்டேன். ஒரு தங்கமான மனுஷனுக்கு நீ பெண்டாட்டியா வாய்ச்சியே! பாவம் அவர் பாவம் பண்ணினாரோ?” 

தங்கம்மா சரசரவென்று கீழே இறங்கிப்போசு மாடிப்படிகளில் விரைந்தாள். 

கீழ்ப்படிக்கு அருகே ஈசுவரன் நின்று கொண்டிருந்தார். அவரைத் தாண்டிச் செல்ல அவள் யத்தனிக்கையில்-
“தங்கம்!” என்றார் ஈசுவரன். 

அவள் தாண்டிச் சென்றாள்.

“எங்கே ஓடறாய்! நில்லு”.

“என்ன வேணம்?” 

“உன் அண்ணாகிட்ட என்ன பேசிண்டிருந்தாய்?”

“ஒண்ணுமில்லை”. 

“ஒண்ணுமில்லா தைக்கா அரைமணிக் கூறு மச்சு மேல் இருந்தாய்?” 

“இப்ப ஒங்ககிட்டச் சொல்லும்படியா விசேஷமா ஏதும் இல்லை” 

“பாரதியைப் பத்தியா?” 

தங்கம்மா பதில் சொல்லாமல் சென்றாள். 

சற்றைக்கெல்லாம் மௌலி இறங்கி வந்தார். 

”என்ன அண்ணாவும், தங்கையும் ரொம்ப நேரமா சொகாரியம் பேசிண்டிருந்தேள்? நானும் தெரிஞ்சுக்கலாமா, மௌலி?” 

“சொசுாரியம்னா ரகசியம்தானே?”

“ஆமாம்.”

“ரெண்டு பேருக்குள்ளே இருந்தாத்தான் ரகசியம். உன் பாஷையில் சொகாரியம்! மூணாம் மனுஷனுக்குத் தெரிஞ்சா பரஸ்யமாயிடறது… சரி, இப்ப நான் சகஸ்ரத்தின் வீட்டுக்குப் போறேன்.” 

“சரி நீ போய்க்கோ… இப்ப பாரதி அங்கதான் இருக்கா… நான் என் கடை, பங்க் இதையெல்லாம் சுத்திப் பார்த்துட்டு நாலு மணிக்கு மின்னால வந்துடறேன்.” 

“நீ எப்ப வேணம்னாலும் வா. நான் வந்த காரியம் முடியாமல் நங்கவரம் திரும்பறதா இல்லை!” 

”மௌலி நீயா இப்படி அடிச்சுப் பேசறாய்? சாது மிரண்டா…” 

“காடு கொள்ளாது. எனக்கும் தெரியும். நான் வரேன் ஈச்சா!” 

“ஆல் தி பெஸ்ட்.” 

மௌலி பதில் கூறாமல் வெளியேறி, தெருவைத் தாண்டி சகஸ்ரம் வசிக்கும் வீட்டுக்குள் பிரவேசித்தார். 

இரண்டு கட்சிகள். ஒரே திசையில் அவர் செல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் நோக்கங்கள் வெவ்வேறு! 

அவராகச் செயல்பட மூன்றாவது திசை இருக்கிறதா? தேடினார். புத்தி மழுங்கியதுதான் மிச்சம், 

அத்தியாயம்-21

ராஜியின் ஒற்றைத் தலைவலியின் கடுமை குறைந்திருந்தாலும், அவளால் வீட்டுக் காரியங்களைக் கலனிக்க இயலவில்லை. 

“சித்தப்பா, நீங்க எதுக்கு இங்கே சாதம் வடிக்கணும் நான் அங்கேயிருந்து உங்களுக்கும், சித்திக்கும் கொண்டு வந்திருப்பேனே!” என்றாள் பாரதி. 

“ஸெல்ஃப் ஹெல்ப் இஸ் தி பெஸ்ட் ஹெல்ப். கேள்விப்பட்டிருக்காயா, பாரதி?” 

“நீங்க ஓர் அபூர்வ மனுஷர்தான். நீங்க ஊருக்கெல்லாம் உதவி செய்யறீங்க. ஆனா இன்னொர்த்தர்ட்டேந்து எந்த உதவியும் எதிர் பார்க்சுறதே இல்லை.” 

“ஸ்டாண்ட் ஆன் யுவர் ஓன் லெக்ஸ், கேள்விப்பட்டிருக்காயா?” 

பாரதி சிரித்தாள். 

“இந்த மாதிரி அஞ்சாறு இங்கிலீஷ் அறிவுரைகளை வைச்சிக்கிட்டு ஊரையே உங்க பக்கம் மடக்கிப் போட்டிருக்கிங்க… அது சரி, என்ன சமையல்?” 

“ரைஸ், டால், கர்ட்,” 

“அரிசி, பருப்பு, தயிரா?” 

“லிட்டில் கீ ஆல்ஸோ! டச் பண்ணிக்க மஸ்டர்ட் மாங்கோ” 

“கொஞ்சம் நெய்யும், தொட்டுக்க கடுகு மாங்காய்! வயிறு நிறைஞ்சுதா?” 

“நிறையாம… சித்திகூட ரெண்டு மூணு வாய் தயிர் சாதம் சாப்பிட்டாளே… அதிருக்கட்டும், மெளலி வந்திருக்கானே? என்ன விசேஷம்?” என்று கேட்டான் சகஸ்ரம். 

“எனக்கே தெரியாது. அத்தை கேட்டதுக்கும் சரியா பதில் சொல்லலே. ஆமாம், அப்பா உங்க வீட்டுக்கு வந்தாரே, உங்ககிட்டச் சொல்லலையா?”” 

“சொல்லியிருந்தா நான் அபத்தமா உங்கிட்ட ஏன் வந்திருக்கார்னு கேட்டிருப்பேனா. பாரதி?” 

“உண்மையான காரணம் ஒருத்தருக்குத்தான் தெரியும் போல இருக்கு” 

“ஆரு, அண்ணாவா?” 

“ஆமாம்”. 

“ஆனாக்கா, அண்ணா எங்கிட்ட ஒண்ணும் சொல்லலை. இப்ப என்ன சேயறான் மௌலி?” 

“அண்ணாவும், தங்கையுமாப் பேசிண்டிருக்கா. நான் சாப்பிடப் போனப்ப அத்தை மாடிக்குப் போனா, நான் கை அவம்பி இங்கே வந்து கால்மணி நேரமாறது. என்ன தான் பேசிக்கிறாங்களோ?” 

”உன்னைப் பத்தியாக இருக்குமோ, பாரதி?”

“இருக்கலாம். அத்தைக்கு என்னமோ என்னைப் பிடிக்கலை. இப்பவெல்லாம் அவளை எப்படியாவது திருப்தி செய்யணும்னு பார்க்கறேன். முடியலை.” 

“மன்னியைத் திருப்தி படுத்த யாராலும் கழியாது. என்னைக் கண்டாக்கூட மன்னிக்குப் பிடிக்காது. ஏன் தெரியுமோ பாரதி? நான் ஆரையும் முகஸ்துதி பாட மாட்டேன். பாடிக் காரியம் சாதிச்சுக்க ஆவஸ்யம் இல்லை. பட்பட்டுன்னு நான் மன்னிட்ட மின்னெல்லாம் பேசியிருக்கேன்” 

“ஒவ்வொருத்தர் சுபாவம் ஒவ்வொரு மாதிரி.”

“ரொம்பக் கரெக்ட் பாரதி. உங்கிட்ட சில குணங்கள் பிடிச்சிருக்கு, ஆனா சிலது பிடிக்கலே.” 

“உதாரணம்?” 

“ஆராவது உங்கிட்ட வந்து பேசினாத்தான் நீ பேசறே?” 

“இது கெட்ட குணமில்லையே, சித்தப்பா…?” 

“கெட்ட குணம்னு சொல்ல வரலே, எனக்குப் பிடிக்கலேன்னுதான் சொன்னேன். ஒன்னை மாதிரியே எல்லோரும் இருந்துட்டான்னு வைச்சுக்கோ, அப்புறம் என்ன ஆகும்? எல்லாரும் ஊமைகளாத் திரிவா. நீயாக ஒருத்திட்டப் போய் பேசறதிலே தப்பு இல்லை. அதனாலே நீ குறைஞ்சும் போயிட மாட்டாய்! மனுஷாளுக்கு மனுஷாள்தான் வேணும்”. 

“அப்புறம் வேற என்ன பிடிக்கலே?'”

“சொன்னா தேக்ஷ்யப் படப்படாது”. 

“நான் என்னிக்காவது உங்ககிட்ட கோவிச்சுட்டிருக்கேனா?” 

“ஒன் பிடிவாதம்” 

“அது என் கூடப் பொறந்த வியாதி”. 

“கண்டுடாமைக்கும், கஷண்டிக்கும் தான் மருந்து இல்லை, மத்த எல்லாத்துக்கும் உண்டு” 

“எனக்குப் புரியலே, சித்தப்பா.” 

“பொறாமை, வழுக்கை”. 

பாரதி சிரித்தாள். 

”எனக்கே தெரியாது சித்தப்பா. எனக்கு ஏன் பிடிவாதம் அளவுக்கு மேலேயே இருக்குன்னு, சின்ன வயசிலே அம்மா, அப்பா, சரியா வளர்க்கலையோ என்னமோ?” 

“வயசு வந்தப்புறம், தப்பு ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுப்புறம், நாமே நம்மை கரெக்ட் பண்ணிக்கலாம். இல்லியா பாரதி…? அதா ஒன் அப்பா மௌலி வர்றான். ஒனக்கு அவர்ட்ட தனியாப் பேசணுமானா. மச்சு மேலுக்குப் போ? ஏஸியைப் போட்டுக்கோ. ஆரும் ஓங்களை டிஸ்டர்ப் சேய வரமாட்டா.” 

“எனக்கு ஒண்ணும் அவர்ட்ட் ஸ்பெஷலா பேச இல்லை.” 

“வா மௌலி! என்ன இத்தற நேரம்? அண்ணா அப்பவே காரை எடுத்துண்டு போயாச்சே?” 

“தங்கை தங்கம்மா இருக்காளே? அவகிட்ட பேசிண்டிருந்தேன்.” 

“சரி ஒக்காரு”

“நான் பாரதிகிட்ட இன்னும் ரெண்டு வார்த்தை சரியாப் பேசலே.”

“ரெண்டோட ஏன் நிறுத்திக்கறாப், மெளலி. ரெண்டாயிரம் வார்த்தை பேசேன். என்னால் இந்த ஈஸிச்சேரை விட்டுப் போகக்கழியாது. அதா, மச்சுமேல் இருக்கு. அங்க போய் ஆசை தீரப் பேசிக்குங்கோ”

ஒரு நிமிடம் பாரதி அப்பாவைப் பார்த்தாள்.

“பாரதி”. 

“என்னப்பா?” 

“வா, மாடிக்குப் போகலாம்”. 

“இங்கேயே பேசலாமே அப்பா!”

“நாம பேசறது சகஸ்ரத்துக்குத் தொந்தரவா இருக்கும்” 

“அப்படியா, சித்தப்பா?” 

“அப்படீன்னு இல்லை. ஆனா என்கூடப் பேச ஆரும் இல்லைன்னா – கொஞ்சம் கண் அசருவேன், அம்படத்தான்”. 

“சரிப்பா! மாடிக்கே போசுலாம்.”

மாடி அறை சதுரமாக நேர்த்தியாக இருந்தது. ஏஸி அறையாக இருந்ததால் எல்லா ஜன்னல்களையும் அடைத்து வைத்திருந்தார்கள். மங்கிய வெளிச்சத்தில் அவள் விளக்கைப் போட்டாள். ஏஸியையும் முடுக்கி விட்டாள். கொஞ்சம் நாராசமாக ஆரம்பித்த சப்தம் மெல்ல மெல்ல அடங்கிப் போயிற்று. 

கட்டிலில் பாரதி உட்கார, அவள் எதிரே ஒரு பிரம்பு நாற்காலியில் மெளலி அமர்ந்தார். 

“என்னப்பா பேசணும்?” 

“சொல்றேன்” 

“அதுக்கு முன்னாடி எதுக்குத் திடீர்னு இங்கே வந்தீருக்கீங்கன்னு சொல்லுங்க” 

“என் பேச்சிலே இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் பாரதி” 

“ஓகே, நான் ரெடி”. 

வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கோவையாக்கிக் கொண்ட மெளலி ஆரம்பித்தார். 

“நான் இப்பச் சொல்லப் போறது ஷாக் அடிக்கற மாதிரி இருக்கலாம். அனாவசியத் தலையிடாப் படலாம். ஏன், பைத்தியக்காரத் தனமாகவும் தோணலாம்.” 

“அதை நான் முடிவு செய்துக்கறேன், அப்பா” 

“நம்ம ஊர்ல காவிரியை நீ நின்னு நிதானமாப் பார்த்ததில்லே. நீரோட்டம் ரொம்ப அமைதியா சாதுவா இருக்கும். ஆனா உள்ளே காலை வைச்சுட்டா கரெண்ட் இழுக்கும் அது மாதிரி…!” 

“அது மாதிரி?”

“அது மாதிரித்தான் நீ புகுந்திருக்கிற வீடும் இருக்கு”.

“எதை வைச்சுட்டுச் சொல்றீங்க?” 

“இந்த லெட்டரை வைச்சுட்டு! இந்த லெட்டர்தான் என்னை இங்கே இழுத்த கரென்ட். வெளியே நின்று பார்க்கறப்ப எல்லாம் அமைதியா, ஏன் சுமுகமா இருக்கு. ‘பொண்ணே, பொண்ணே’ன்னு மாமனார் நெகிழறார். ‘வா மௌலி, வா மெளலி’ன்னு சகஸ்ரம் குலாவறான். நீயும் ரொம்ப சௌக்கியமா இருக்கறாப்ல நடமாடறே.” 

234/ வானமெல்லாம் ஆசைக் காற்றாடி 

“நீங்க உங்க கண்ணாடியை மாத்தணும் அப்பா… அந்த லெட்டரை இப்படித் தாங்கோ. 

கொடுத்தார். 

ஒரே மூச்சில் படித்தாள். 

பிறகு “இதில எழுதியிருக்கறதெல்லாம் உண்மை தான்” என்ற பாரதி தொடர்ந்து, “ஆனா அத்திம்பேர் இவ்வளவு கடுமையா இருப்பார்னு நான் எதிர் பார்க்கலே!” என்றாள். 

“பேசறப்ப சில சமயங்கள்லே வார்த்தைகளோட கடுமை தெரியாது பாரதி! நீ பிஎச்.டி. பண்ணனும்னு பிடிவாதமா இருக்கே. உன் புருஷன் வீட்ல எல்லாரும் எதிர் துருவத்திலே நிக்கறாங்க. இது எப்படி எத்தனை நாளுக்கு ஓடி எப்ப முடியும்னு ஈச்சா கேள்வி கேக்கறார்”. 

“நீங்க என்ன சொல்றீங்க?”

“நீ பிஎச்.டி.யைப் பத்தி ரொம்ப நாளா எங்கிட்டப் பேசி என்னை நிம்மதியில்லாமச் செய்திருக்கே. அப்ப மாட்டேன்னேன்” 

“இப்ப?” 

“நீ ஆசைப்பட்டது எதையும் நான் நிறைவேத்தினதில்லே. இதையாவது இப்பவாவது நிறைவேத்தறேனே?”
“நிஜமாவா அப்பா?”

“நிஜமா” 

“கல்யாணத்துக்கு முன்னால பணம் இல்லேன்னு கையை விரிச்சிங்களே?” 

“அப்ப அது உண்மை. ஆனா இப்ப இருக்கு.”

“அமெரிக்காவிலேர்ந்து அண்ணா அனுப்பினானா?” 

“இல்லை.”

“பின்னே?”

“உன் கல்யாணம் முடிஞ்சதும், கல்யாணச் செலவில் ஒரு பங்கை நான் ஏத்துக்கறதுதான் நியாயம், முறைன்னெல்லாம் சொல்லி நாப்பதாயிரத்துக்கு மேல் ஈச்சா தந்தான்”. 

“அப்படியா?”

“அவனோட பெருந்தன்மை ஆருக்கும் வராது, பாரதி! ஆனா அதே ஈச்சாதான் உன் ஆசைக்கு சம்மதிக்க மாட்டேன் என்கிறான்.” 

“நான் என் கோணத்திலேந்து பார்க்கறேன். அவர் தம் கோணத்திலேந்து…” 

“யார் எந்தக் கோணமானா என்ன, பாரதி? விதியின் கோணம் சரி இல்லை. நீ இந்தப் பாலக்காட்டுக்கும், பள்ளிப்புரத்துக்கும் இந்தப் புகுந்த வீட்டுக்கும் குட்பை சொல்லிட்டு என்னோட புறப்படு” 

“அப்பா. என்னப்பா புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க?”

“உன் ஆசையை நிறைவேத்தறதுன்னு வந்தா, வேற வழி என்னம்மா?”

“நீங்க இப்ப செய்ய முன் வந்திருக்கிற காரியம் அத்திம்பேருக்குத் தெரியுமா?”

“இந்தக் காரியத்துக்காக நான் வரலே, ஈச்சாலோடப் பேசிப் பார்க்கலாம்னு வந்தேன். உனக்கு ஒண்ணு தெரியுமா? பாரதி!”

“என்னப்பா?” 

“அவருக்கு உன் பேர்ல கொள்ளை ஆசை. நீ ரொம்ப புத்திசாலியாம். கெட்டிக்காரியாம், உன்னால் நங்கவரத்துக்கும் பெருமைதான் வருமே தவிர, அவமானம் வராதாம். இதை அவரே அவர் வாயாலேயே சொன்னார்”.

“அவருக்கு என் பேர்ல ஒரு தனி வாத்ஸல்யம் உண்டுன்னு எனக்கே தெரியும்ப்பா”. 

“இன்னும் என்ன சொன்னார் தெரியுமா, பாரதி?”

“சொல்லுங்க”

“நாராயணன் எதையும் மனசிலேர்ந்து கொட்ட மாட்டானாம், ‘பாரதி நல்ல பொண்ணு, அவளை நடத்தறபடி நடத்தினா வீட்டுக்கே பெருமை கிடைக்கும். ஆனா அம்மாவுக்குத்தான் தன் மருமகளை சரியாகக் கொண்டு நடத்தத் தெரியலே’ன்னு சொல்லியிருக்கான். யார்ட்ட தெரியுமா? இந்த சகஸ்ரத்துகிட்ட. அவன் அதை அப்படியே அண்ணா ஈச்சாவிடம் ஒப்பிச்சிருக்கான்.” 

பாரசி ஓரிரு நிமிடங்கள் மௌனமாக அவரைப் பார்த்தாள். 

“ஆனா என்ன செய்யறது பாரதி, பொன் ஊசின்னா கண்ல குத்திக்க முடியுமான்னு ஈசுவரன் எங்கிட்டக் கேட்கிறர்…” 

“அதாவது..” 

“நீ படிக்கறதுன்னு உன் வழியிலே நீ போறதுன்னு முடிவு எடுத்தா, அவர் தம் வழியிலே வேறு முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாம்,” 

‘வேற முடிவுன்னா?”

“விவாகரத்து”. 

“யூ மீன் டிவோர்ஸ்,” 

“ஆமாம்”. 

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” 

”என் பொண்ணுக்குக் கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு மாசம் ஆகலே… அதுக்குள்ள டிவோர்ஸ் பத்திப் பேசறியே ஈச்சான்னேன். அதுக்கு என் இடத்திலே நீ இருந்தா என்ன செய்வேன்னு திருப்பிக் கேட்டார். என்னாவே பதில் சொல்ல முடியலை.” 

“டிவோர்ஸ்னா அவ்வளவு சுலபமா? பண்டாரா ரோடு விமல்நாத் ஞாபகம் இருக்காப்பா? அவரோட பொண் அபர்ணாதேவி என் க்ளாஸ்மேட், அபர்ணாவோட அக்கா பேர்ல கல்யாணமான மூணாம் மாசமே அவ புருஷன் டிவோர்ஸ் கேஸ் போட்டான். ஆனா ஜட்ஜு கொடுக்கலையே? பாலக்காட்ல ஜட்ஜுகள் தனி ரகமா இருப்பாங்களா என்ன?” 

“ஆனா உன் கேஸ் அப்படிப்பட்டதில்லே, பாரதி!”

“எப்படிச் சொல்றீங்க?’ 

“உனக்குக் கல்யாணம்தான் ஆகியிருக்கு,”

“புரியலே.” 

“உன் கழுத்திலே தாலி மட்டும்தான் ஏறியிருக் மத்தபடி.. மத்தபடி…” 

“ஓ. புரியறது. ஆமாம் இதை யாரால் நிரூபிச்சு முடியும்?” 

“ஏன் உன்னாலேயே கூட! கோர்ட் கண்டிலே ஏத்தி எதிர்த்தரப்பு வக்கீல் துருவித் துருவிக் கேள்வி கேட்கறப்ப உன்னால் பொய் சொல்ல முடியுமா, பாரதி? கல்யாண கன்ஸமேன் ஆகாமப் போனா கேஸ் போறவன் ஈஸியா ஜெயிச்சுடுவான்”

“நாராயணன் நல்லவர் ” 

“இப்ப நீ நல்லவ இல்லியா?”

“அவர் கேஸ் போட மாட்டார்”. 

“அவன் தானாப் போட மாட்டான். அவனுடைய அம்மா என் தங்கை ஒருத்தி போதும், உன்னைக் கோர்ட்டுக்கு இழுக்க நீ மெட்ராஸ்லேயோ டில்லியிலேயோ பிஎச்.டி. பண்ணிட்டிருப்பியா, இல்லே சம்மன்ஸ் அனுப்பறப்ப வெல்லாம் பாலக்காட்டு கோர்ட் வாசப்படி ஏறிட்டிருப்பியா?”

பாரதி பதில் சொல்லவில்லை. 

மௌலி தொடர்ந்தார். “நீ ஏன் கலலைப்படறே, பாரதி? டிவோர்ஸ் ஆன கையோட நாராயணனுக்கு வேறு ஒருத்தி மனைவியாக வந்தா வந்துட்டுப் போகட்டுமோ. நீ உன் பிஎச்.டியை முடிச்சுட்டு உன் மனசுக்கும் பிடிச்ச ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன். நீ டாக்டர் பாரதின்னு தெரியறப்ப எத்தனை பி.எச்.டிக்கள் உன்னைத் தேடிக் கொண்டு வருவார்கள்!” 

“இப்பத்தான் எனக்கு எல்லாம் புரியறது. சரி, இப்ப நான் என்ன செய்யணும்?”

“என்னோட இன்னிக்கு ராத்திரியே புறப்படு. அப்புறம் ஒரு நாள் நாம் மெட்ராஸ் போகலாம். மெட்ராஸ்லே கிடைக்கலேன்னா என்ன, டில்லி, பாம்பே, கல்கத்தான்னு எவ்வளவோ இருக்கு”. 

“நான் இது பத்தி யோசிக்கணும்”

“இதிலே யோசனை செய்ய என்ன இருக்கு பாரதி?“

“யோசனை செய்ய என்ன இருக்குன்னு எனக்குத் தானே தெரியும்?”

“சரி உன் இஷ்டம்.” 

“அத்திம்பேர் எதுக்காக உங்களை வரவழைத்து இதில் ஈடுபடுத்தணும்? நேரடியா எங்கிட்டேயே சொல்ல வேண்டியது தானே?” 

“வாஸ்தவமான பேச்சுதான் பாரதி! ஆனா ஈச்சா உங்கிட்டே அழுதுகிட்டு சொல்வானா, இல்லே கோபமா முரட்டுத்தனமா சொல்லுவானா? அவன் உன் பேர்ல அலாதிப்பிரியம் வைச்சிருக்கான். இந்த விஷயத்தைப் பேச ஆரம்பிக்கவே அவனுக்குத் தொண்டை அடைச்சுக்காதா?” 

“அதான் உங்களை தூது விட்டிருக்கார், இல்லே?” 

“நல்லவேளை, இப்ப என்கிட்ட பண வசதி இருக்கு. அது மட்டும் இல்லாமப் போயிருந்தா என்ன செய்திருப்பேன்? பூர்விகமான நங்கவரம வீட்டை வித்திருப்பேன்” 

“நீங்க ஊருக்குப் போங்கப்பா. நான் ஒரு நிமிஷத்திலே என் வாழ்க்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது”. 

“கல்யாணமே வேண்டாம்னு சொன்னவதானே நீ? முடிவு எடுக்க என்ன கஷ்டம்?” 

“கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தாப்ல தான் மனசு அப்புறமும் இருக்கணுமா? அது மாறப்படாதா?” 

“கல்யாணத்துக்கு முன்னாலே பிஎச்டி. மேல் இருந்த தீவிரம் கல்யாணத்துக்கு அப்புறமும் குறையாம அப்படியே இருக்கறப்ப…”

“போதும்ப்பா. நான் யோசனை பண்ணி முடிவு எடுத்துக்கறேன். நீங்க ஊரைப் பார்க்கப் போங்க!” 

“இப்ப ஈச்சாவுக்கு நான் என்ன பதில் சொல்றது பாரதி?” 

“பாதிக்கப்பட்டிருப்பவள் நான்! அவராலதான் நேரடியா இதைப் பத்தி பேச முடியலே. ஆனா என்னால முடியும்”. 

“நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு பரிபூரணமான அங்கீகாரம் என்கிட்டேந்து நிச்சயமா வரும் பாரதி!” 

“நான் பிஎச்.டிக்குத்தான் ஆசைப்பட்டேனே தவிர, யாருடைய அங்கீகாரத்துக்காகவும்-எனக்கு அப்பாவா இருக்கிற உங்களையும் சேர்த்துத்தான்-ஆசைப்படவும் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை!” 

அவர் முன்னால் இறங்க, அறை விளக்கை அணைத்து ஏளியையும் நிறுத்திவிட்டு பாரதி மாடிப் படிகளில் கால் வைத்தாள். 

சகஸ்ரம், “என்ன மௌலி? பொண்ணோடப் பேசிப் பேசி மடுக்கலையாக்கும். அதாவது அலுக்களை போலிருக்கு” என்றான் 

பாரதி,வந்தவள் வாசலை நோக்கி நடந்தாள்.

“பாரதி என்ன நீ, என்கிட்டச் சொல்லிக் கொள்ளாதைக்கு விர்ர்னு போறாய்?” என்றார் சகஸ்ரம். 

அவளுடைய காதுகளில் எதுவும் விழவில்லை. மனதில் ஊழிக்காற்று போல எழுந்துவிட்ட சத்தம் ஓங்காரமாக அவளுடைய உடம்பையே தாக்கிக் கொண்டிருக்கையில் மற்றவர்களுடைய குரலா அவளுடைய காதில் விழும்?

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *