கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 4,626 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்பில் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக விட்டு விட்டுத்தான் வலித்தது – சுள்னிடு வதுபோல எந்தநேரம் அது வருமென்று சொல்லத் தெரியாது. எந்த சேரமும் வரலாம். நடு இரவில் நல்ல சித்திரையிலிருக்கும் போது கூட வரலாம். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சுண்டிச் ….. …. சுண்டி வலித்து … இந்த வாழ்க்கையே அர்த்த மில்க் என்று நினைக்கத் தூண்டும்படி …, குரல் விட்டுக் கத்த வேண்டும் போல. அம்மா……. அம்மா என்று முனங்க வேண்டும் போல…..:

அவன் முகத்தில் மெல்லிய இழையாய் ஒரு வேதனையின் சாயல் கவிவது தவிர வேறொன்றும் தெரியாது. இடது கையின் விரல்கள் அந்த இடத்தைத்தடவுவதையே அறியாது செய்த வேலையை செய்து கொன்டேயிருப்பான், ஒவ்வீசில் பைல்களப் புரட்டிக் கொண்டிருப்பாள்: றெயிலிலோ வஸ்சிலோ பிரயாணம் செய்து கொண்டிருப்பான். கடற்கரை வெளியில் மாலை கவிந்து வரும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பான்; நண்பர்களுடன் சர்ச்சை செய்து கொண்டிருப்பான். சமயங்களில் சிரிக்கவும் கூடச் செய்வான். அந்தச் சிரிப்பில் நெருடலாக அந்த வேதனை.

அது தொடங்கி மூன்று மாதங்களாகி இருக்கலாம். அதைச் சகித்து சகித்துப் பழகி … இப்போது சகிக்க முடியாததாகி, ஒரு எல்லைக்கப்பால் சகிக்க முடியாத நிலையில் இதற்குப் பரிகாரம் காணவேண்டு மென நினைத்தான். அந்த நினைப்பே ஒரு ஆனந்தம்போல இருந்தது. ஆனால் வழமையான அசமந்தத்தில் பழக்கமாகிவிட்ட வேதனைச் சகிப்பில் நாட்கள் நீண்டு…நீண்டு…செல்ல…

அவன் நண்பன் அவனை ஏசுவான், “இந்த விஞ்ஞான யுகத்தில் ஏன்ரா அப்பா தேவையில்லாமல் கஷ்டப்படுகிறாய்”.

“எவ்வளவு தான் கொள்கைகள் பேசினாலும் நீ சரியான சோம்பேறி”

“முதலில் உன்னைத் திருத்திக் கொண்டு தான் பிறகு மற்றவைக்கு சொல்ல வேணும் காணும்”

எல்லா உந்துதல்களினாலும் ஒரு நாள் புறப்பட்டான். பத்துமணிப் பொழுதென ஞாபகம். ஒரு மைலனவு தூரத்தை நடந்துதான் சென்றான். வெயில் உறுத்தாத மப்புக் கவீந்த வானம்; தட்டு வீட்டில் வாழும் குடும்பங்கள்; வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தைகள் : தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரி, சைக்கிள் மணியோசை, ஸ்டோன் வாங்கில் காத்திருக்கும் குழந்தையை ஏந்திய இளம் தாய், உயிர் ததும்பும் பகல் நேர இயக்கம்.

“இவ்வளவு காலம் இந்த உணர்வு ஏன் என்னை உறுத்தவில்லை?”.

மார்பின் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டிச் கண்டி இழுப்பது போன்ற அந்த உணர்வு… வாய்விட்டுக் கத்த வேண் டும்போல………. மூன்று நிமிடத்தில் அது அடங்கிற்று.

வானம் வெளித்து வெய்யிலின் அகோ ரம்; குளிர்பானத் தொழிற்சாகயின் முன் வீதியோரம் நீண்ட உயர்ந்த மதில்; சோடாக் குடிக்கும் பெண்ணின் படம் போட்ட பெரிய விளம்பரம். கால்வாய்க் கும் வீதிக்குமிடையில் செழித்த சோளப் பயிர்களின் பச்சைப் பரப்பு. நீர் பாச்சும் தொப்பி போட்ட மனிதன். பெருங் கிய அணுகலில் அவன் முகத்தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வைத் துளிகள் அரச அலுவலகங்கள். மும்மொழிகளிலு மான அறிவிப்புப் பலகைகள். ஓடும் பஸ்கள்; வீதியோரம் மலர் சொரியும் மேல் மரங்கள்.

ஆஸ்பத்திரியின் ஒரு பக்கத்தில், அடக்கமான ஒரு அறையின் நடுவிலிருந்த கதிரையில், கம்பீரமான உடையில் அந்த மனிதர் அடையாளம் காட்டப்பட்டார். சுற்றிலும் மருந்துக் குப்பிகளும் பரிசோனைக் குழாய்களும் மூக்கைத் துளைக்கும் மருந்து நெடியுமாய்.

ஒரு புன்முறுவலுடன் நண்பன் தந்த அறிமுகக் கடிதத்தை நீட்டினான். மேலோட்டமான கண் பரவலின் பின் ஊர். பேர், உற்றார், சுற்றம்: சூழல் பற்றிய விசாரணை.

டாக்டரின் அறை முன்னால் குவிந்து நின்ற சனங்களினூடாக இவனைக் கூட்டிச் சென்று டாக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

“எனக்குத் தம்பி மூறையானவர் கல்வித் திணைக்களத்தில் வேலை செய்கின்றார்”

அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர், “என்ன வருத்தம்”?

அவனும் டாக்டரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னான், அந்த வசீகரிக்கும் கண்களின் ஆழத்தில் ஏதோ சோகம் சுவிந்திருப்பது போல இருந்தது. முழுமையாக அனைப்பது போன்ற கருணை நிறைத் திருப்பதை போலவும் பட்டது. டாக்டரின் மூக்கு கொஞ்சம் நீளம் தான்.

மீண்டும் அவனை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தில் கடுமை தெரிந்தது!

“நல்லாய் குடிகிறனிரே ஐஸே? கசிப்பு அடிக்கிறனீரா?”

“இல்லையே” என்று பரிதாபமாகத் தலையாட்டினான். “நான் சிமோக் பண்ணிறது கூட இல்லை”

“இறைச்சி, தல்ல காரமான சாப்பாடு சாப்பிடுகிறனீராக்கும்”

“நான் ஒரு வெஜி ரேறியன்” மெதுவாகச் சொன்னான்.

அவன் சொன்ன எதையுமே நம்பத் தயாரில்லாதவரைப் போல டாகடர் அவனைப் பார்த்தார். தலையை ஆட்டினார். அவனை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு அவன் அண்ணரை நிற்கச் சொன்னார்.

தள்ளாடியவனாக வெளியே வர்தான். மார்பின் வலது புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டி இழுப்பது போல…

சோர்ந்து வாடித் துவண்டிருக்கும் குழந்தை. லொக்கு, லொக்கென இருமி கோழை துப்பும் கிழவன். தலையைச் சுற்றி பண்டேஜ் கட்டுப் போட்டிருக்கும் அரும்பு மீசை இளைஞன். அயர்வு மேலிட்ட ஒரு கர்ப்பிணிப் பெண். இன்னும் சிலர்….. கொஞ்சத் தூரத்தில் மூங்கில் கழியின் மேல் பலகை பரவி அதன் மேல் நின்று செங்கற்களை அடுக்கி மாடி எழுப்பும் இரண்டு தொழிலாளர்.

டாக்டரின் அறை வாசவில் காத்து நின்ற அவனை நோகசி அண்ணர் வந்தார். முகத்தில் ஒரு சோர்வுக்களை. எதுவுமே பேசவில்லை.

டாக்டர் என்ன சொன்னாரென்று அண்ணரிடம் விசாரித்த போதும் அவர் தெளிவான பதிலைத் தரவில்லை. எதேதோ சொல்லி மழுப்பினார், சிலலேன் அவன் அறியக் கூடாதவையாக- அவன் அறிந்கால் வேதனைப் படலாம் என அவர் எண்ணியிருக்கலாம் உண்மையாகச் சொல்லப் போனால் அவன் கூட அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை அந்த அக்கறையின்மைக்கு வழமையான அசமந்தம் அல்லது என்ன நடந்தாலென்ன என்ற பீடிப்பற்ற போக்குக் காரணமாக இருக்கலாம்.

அடுத்த முறை ஆஸ்பத்திரியில் அண்ணரைச் சந்தித்த போது அவன் சற்று உற்சாகமடைந்தவனாக இருந்தான். முகம் தெளிவடைந்து இருந்தது. கண்களில் படிந்திருந்த ஆயர்வு அகன்று விட்டது. சொக்கையில் கொஞ்சம் சதைப்பிடிப்பு ஏற்பட்டது போலவும் இருந்தது. பேச்சில் கூட ஒரு மிருதுவும், நளினமும், உறுதியுமாய்…

அண்ணர் ஆச்சரியப்பட்டுத்தான் போனார், டாக்டரும் அப்படித்தான் ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அந்த வசீகரிக்கும் கண்களால் அவனை ஆழமாகப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

“நீர் நல்லாய் யோசிக்கிறனீர் போலை பிரச்சினைகளை இட்டு ‘வொறி’ பண்ணக் கூடாது. ஆருக்குத்தான் பிரச்சினைகளில்லை”.

அவன் எதுவுமே பேசாது நின்றான். மனத்தில் ஏதேதோ எண்ணங்கள். சோர்ந்து வாடி துவண்டிருக்கும் குழந்தை, கோழை துப்பும் கிழவன், செங்கற்களை அடுக்கி மாடி கட்டும் தொழிலாளர், தொப்பி போட்ட மனிதனின் முகத்தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வை…

“மை டியர் போய்” டாக்டரின் குரலில் ஒரு கம்பீரம் தொனித்தது. “யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை, சும்மா மனத்தைப் போட்டு அலட்டாதேயும் நெடுகவும் வொறி பண்ணிறதும் குடற்புண் வர ஒரு காரணமென்று உமக்குத் தெரியுமா?”.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும் போது புது மனிதனாகத்தான் வெளியேறினான். உலகம் முழுவதுமே ஒருவித மயக்கும் அழகில் பொலிவதாக நினைத்தான். வாழ்க்கை மிகவும் அர்த்தம் நிறைந்தது என்றும் நினைத்தான். மூன்று மாதமாக நினைவில் வராத அவளின் புன்னகை பூத்த முகம் கூட நினைவில் தெரிந்தது. ஏதோ பாடல் கூடமுணுமுணுப்பாக கிளம்பிற்று! நடையில் கூட ஒரு கம்பீரம்.

அதே வீதி: அதே பாதை.

வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தைகள்.

சாறத்தின் அடிப்பாகத்தை இடது கையால் தூக்கிக் கொண்டு வீதியை வெறித்து நோக்கும், ஒருவாரமாக ‘சேவ்’ எடுக்காத விரக்தி நிறைந்த கண்களையுடைய இளைஞன்.

நொண்டிப் பிச்சைக்காரன்;

தட்டு வீட்டின் கதவு நிலையில் சாய்ந்து கொண்டு, ஏக்கத்தோடு போவோர் வருவோரைப் பார்க்கும் கல்யாணமாகாத முப்பது வயதுக் கன்னிப் பெண்.

சிவப்பு எழுத்தில் மதிற் ‘சுவரில்’ பளிச்சிடும் ‘சிலியில்’ மக்களை நசுக்கம் பாஸிச ஆட்சியின் கொடுமைகன் சித்திரிக்கும் சுவரொட்டி.

அவனின் முகம் இருண்டது. பாடலின் முணுமுணுப்பு திடீரென்று அடங்கிற்று. கண்களில் வேதனையின் சாயல் கவிய இடது கை விரல்கள் மார்பின் வலதுபுறத்தில் கீழ்ப்பக்கமாக தடவுவதாக-

ஒரு வாரமாக இல்லாத அந்த வலி மீண்டும் நெருடுவதாக அவன் உணர்ந்தான்.

“சைய்—என்னமாய் வலிக்கிறது”

இதற்கு நிரந்தரமாகவே ஒரு தீர்வு காண வேண்டுமென உறுதி கொண்டான்.

– 1974 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)https://noolaham.net/project/1029/102876/102876.pdf இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *