கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 2,430 
 
 

(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-13

வீட்டை விட்டுக் கிளம்பிய விசுவத்திற்கு, முதலில் எங்கு போவது என்ற யோசனையே இல்லை. ரயிலடிக்குச் சென்றான். டிக்கட் வாங்குமிடத்தில், கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு ஏதோ சிந்தனையில் மனத் தைச் சிதறவிட்டுக் கொண் டிருக்கையில் “ஸார்! எந்த ஊருக்கு டிக்கட்” என்று அதட்டும் குரல் கேட்டான் டிக்கட் கொடுக்கும் குமாஸ்தா. அதேசமயம் யாரோ விசு வத்தை இடித்துத் தள்ளிக் கொண்டு “ஸார்! திருச்சிக்கு. இரண்டு டிக்கெட் என்று கத்தவே விசுவமும், “திருச் சிக்கு ஒரு டிக்கெட்!” என்று கூறி வைத்தான். ரயிலில் உட்கார்ந்த பின்பே அவன் தான் ஏன் இப்படி ஓடுகிறோம் தனக்குப் புத்தி ஸ்வாதீனமில்லையா என்ன என்றெல்லாம்’ எண்ணமிடத் தொடங்கினான்.பாட்டி அம்மணியம்மாள் தன்னைப்பற்றி என்ன எண்ணுவாள்?” ஸேவாஸதனத்தில் நடந்த விஷயங்களைப் பற்றிச் சரோஜா பாட்டியிடம் கூறி னாளோ, இல்லையோ? நல்ல வேளை! கடிதம் எழுதிவைத்து விட்டு வந்தேனே? முன்பே கமலுவின் குணத்தில் சந் தேகப் பட்டேன். அந்தக் கமலுவுடன் நட்புப் பாராட் டும் கண்ணன், ராமுவோடு வந்திருப்பது நல்ல வேடிக்கை யாகத்தான் இருக்கிறது! மொத்தத்தில், அவள் கமலுவோ கல்பகமோ, யாராயிருந்தாலும், நடத்தை சுத்தமில்லை யென்றுதான் எண்ணவேண்டும். ஆனால், தன் கணவன் வந்து கூப்பிடுகையில் அவள் போகாத காரணம் என்ன? ராமுவிற்குத் தன் மனைவியையா அடையாளம் தெரி யாது. ஏற்கெனவே தனக்கு விவாகமாகி யிருப்பதை அவள் ஏன் என்னிடம் கூறவில்லை? நானும் கேட்காமல் போனேன். பேசாமல் நாலு நாட்களில் ஊருக்குப்போய், ராஜத்தை மணந்து கொள்ள வேண்டியதுதான். அப் போது, பாட்டியின் மனமாவது குளிரும். ஹும்! ராமு வைக் குற்றம் சொல்லி என்ன பயன்? உண்மையில், அவள் நடத்தையில் சந்தேகப்பட்டுத்தானே அவன் சரோ ஜாவை மணந்தது? அந்த நிலைமையில் நான் இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன். கமலு பார்ப்பதற்கு எவ் வளவு நல்லவளாய்க் காணப்படுகிறாள்! அப்பா! விஷஸர்ப் பம்! அவளைப்பற்றி என்னதான் கெடுதலாக எண்ணின போதும், அவள் முகம் கண்ணெதிரே வந்து நிற்கிறதே! அந்த எண்ணத்தைப் போக்கடித்தா லல்லா துநான் ராமு விற்குத் துரோகம் செய்தவன் ஆவேன்? தெய்வமே! ஏன் அப் பெண்ணை எங்களிடம் சேர்ப்பித்தாய்? இப் பாழும் மனத்தால், அவளை ஏன் நினைக்கச் செய்தாய்? என்று பலவிதமாய் நினைத்தவாறு கண்ணயர்ந்தான் விசு. 

விழித்திருக்கையில் யாரை மறக்க முயல்கிறோமோ, அவர்களைக் கட்டாயம் சொப்பனத்தில் சந்திப்பது சகஜம். கண்ணை மூடிய விசுவிற்கு, அருகாமையிலேயே இருந் தாள் கமலு. அச்சமயம் அவளே கல்பகம் என்ற எண் ணம் ஒன்றும் அவனுக்கில்லை. திடுக்கிட்டு எழுந்திருக் கையில், ரயில் திருச்சி ஜங்ஷனில் நின்றது. இறங்கி, பேசாது நடந்தான். ஆமாம், கால்போன போக்கில்தான் பூம், பூம்!” என்று மோட்டார் ஹார்ன் அடித்ததுகூட அவன் காதில் விழவில்லை. 

அடுத்த நிமிஷம் மோட்டார் அவன் மீது மோதியது. விசுவம் கண்ணைத் திறந்தபோது, “காயம் ஒன்று மில்லை வெறும் அதிர்ச்சிதான்!” என்று யாரோ சொல் வது அவன் காதில் விழுந்தது. எதையோ நினைவிற்குக் கொண்டு வர முயற்சித்தான். முடியவில்லை. மறுபடியும் மயக்கத்தில் ஆழ்ந்தான். 

ராஜம் விசுவத்தை நேரில் பார்த்திராவிட்டாலும் படத்தில் பார்த்திருக்கிறாள். நல்ல களை பொருந்திய கம் பீரமான முகம் அது என்பது ராஜத்தின் அபிப்பிராயம். ஜானகி சொன்னதை நம்பிக்கொண்டு தன் வீட்டார் விசுவின் வீட்டாருக்குக் கடித மெழுதியது அவளுக்குப் பிடிக்கவில்லை. பல காரணங்களினால், ஜானகி வம்புக் காரி யென்பதை அவள் அறிந்துவிட்டாள்.ற்றி ராஜத்தின் அத்தையோ ‘ஜானகி சொன்னது சரியாய்ப்” போயிற்று! சென்னையில் பலபேருக்கு எழுதிக் கேட்டேன்.அவள் சொன்னபடிதான் சொல்கிறார்கள். நல்ல வேளை கழுத் திலே தாலி ஏறுவதற்கு முன்பே சொன்னாளே, ஜானகி என்று ஜானகியைப் புகழ்ந்தாள். ராஜத்திற்கு மட்டும் உள்ளூர ஜானகியின் மீது வெறுப்புத் தட்டியது. ராஜத் தின் அத்தை தற்சமயம் திருச்சியில் இருந்தபடியால், ராஜமும் அங்கேதான் இருந்தாள். கல்யாணம் நின்று விட்ட படியால், சில புடவைகளைக் கடையில் திருப்பிக் கொடுத்துவிட ராஜத்துடன் ஜானகியைக் கூட்டி அனுப் பினாள் அத்தை. ராஜத்திற்கு இது இஷ்டமில்லை. வேறு வழியின்றி நடந்தாள் அவளுடன். அப்பொழுது திடீ ரென ஜானகி ”அதோ பார்! அந்த வீட்டு மாடியில்! அவன்தான் விசுவம் ” என்றாள்.விசுவம் இவர்களைக் கவனிக்கவில்லை. இந்த ஊருக்கு எதற்கு வந்தானோ தெரியவில்லை” எனத் தானாகவே கூறிக்கொண்டாள் ஜானகி. 

மறுநாள் மறுபடி அதே கடைக்குச் சென்றபோதும், ஜானகியின் திருஷ்டி மாடிமீது விழுந்தது. அப்போது அவள் உடம்பைக் குலுக்கிக்கொண்டு, ராஜம்! நான் உன் கல்யாணத்தை நிறுத்தினதில் உனக்கு என்மீது கொஞ்சம் மனஸ்தாபம் தானென்று எனக்குத் தெரியும். நல்ல வேளை சுவாமியாக இதையெல்லாம் உனக்கு காட்டுகிறார். நேற்று விசுவம் நின்ற இடத்தில் இன்றைக்கு யார் நிற்கிறார், பார்! அவள்தான் கமலு எனவும் பெண்களுக்குரிய ஆவலால் தூண்டப்பட்ட ராஜம் நிமிர்ந்து நோக்கினாள்.மறு நிமிஷம் ஆச்சர்யத்தால் வாயடைத் துப் போய்விட்டாள் அவள். எந்தக் கல்பகத்தைக் கற்பிற் சிறந்த உத்தமி என்று அவள் எண்ணியிருந்தாளோ, அவளையே அங்கு கண்டாள். அப்படியாயின், கல்பகம் இவ்வளவு கீழ்மையான ஸ்திதிக்கா வந்துவிட்டாள்? ‘கல்பக மாமீ!’ என்று இரைந்து கத்த ஆசைதான் அவளுக்கு. ஜானகி வீட்டில் போய் ஏதாவது உளறினால் என்ன செய்வது என்று பயப்பட்டாள். கல்பகத்தின் திருஷ்டி வேறெங்கோ இருந்தது. அவள் இவர்களைப் பார்க்கவே யில்லை. 


விசுவத்தின் மீது மோட்டார் நன்றாக மோதியிருக்கு மானால், அவன் உயிர் தப்பியிராது. டிரைவரின் சாமர்த்தி யத்தினால், காயம்கூட இல்லாது அவன் தப்பினான். ஆயி னும் அதிர்ச்சி அதிகமாய் இருந்தது. “வெறுமனே மயக்கத்தில் இருக்கிறார். ஆஸ்பத்திரிக்கு ஏன் போக வேண்டும்? நம் வீட்டிற்கே கொண்டுபோய், நாளைக்குத் திருப்பி அனுப்பிவிட்டால் என்ன, கமலு அம்மா?” என்று வண்டிக்குள் திகைத்து உட்கார்ந்திருந்த எஜமரனி யம்மாளைக் கேட்டான் டிரைவர். எப்படி உசிதமோ செய்!” என்று எஜமானி கீழே இறங்கினாள். “நல்ல வேளை தெருவில் நடமாட்டமில்லாம லிருக்கிறது. இவ் வழியே அதிகமாய் யாரும் வருவதில்லை என்னவோ ஹார்ன் போடப் போடக் கவனியாது வந்தார் இவர்!” எனக் கூறியவண்ணம் விசுவத்தைத் தூக்கிக் காரின் பின் ஸீட்டில் படுக்க வைத்தான் டிரைவர். “நீங்கள் எப்படி அம்மா வருவீர்கள்?” என்று கேட்டதற்கு எஜமானி, “நான் மெள்ள நடந்து வந்துவிடுவேன். இல்லாவிடில், வண்டி ஏதாவது வராதா? ஏறிக்கொள் கிறேன் ” என்றாள். “இல்லை யம்மா!” எனத் தயங்கினான் மோட்டாரோட்டி. “நீ பயப்படாதே, துரைசாமி ! மறு படி பழையபடி ஓடிவிடமாட்டேன்!” என்றாள் அவள். 

டிரைவர் மோட்டாரை வீட்டிற்குத் திருப்பினான். “இந்தச் சனியன் பிடித்த மோட்டார் பிரயாணம் போதும் நமக்கு! விற்றுத் தொலைத்துவிட வேண்டியது தான் இதை” என முணுமுணுத்தவாறு நடந்தாள் எஜமானி மோட்டார் காரி. 


துரைசாமி சொன்னதுபோல் அடுத்த நாளே விசுவத் திற்கு உடம்பு குணமாகிவிடவில்லை. அவனுக்கு வேண்டி யதை விமலா ரொம்ப அக்கரையாய்ச் செய்துகொண்டிருந்தாள். வீட்டு எஜமானி கல்பகம் அவ்வப்பொழுது “எப்படியிருக்கிறார்?” என்று கேட்பதோடு சரி. “பாவம்! யார் வீட்டுப் பிள்ளையோ, என்னவோ?” எனக் கல்பகம் வருந்தினாள்.விமலாவின் விஷயம் வேறு விதமாக இருந்தது, விசுவம் கண்ணயர்ந் திருக்கையில், பக்கத்தில் உட்கார்ந்து அவனையே கவனிக்கலானாள் அவள். ஆகவே, முதல் முதலாய் விசுவம் நல்ல நிலைமையில் பேச ஆரம்பிக்கையில் விமலாவைத்தான் கண்டான். “அம்மா? நீங்கள் யார்?” எனக் கேட்டான் அவளை. “ஐயா நான் இந்த வீட்டு எஜமானியின் தோழி. இது கமலு அம்மா ளின் வீடு…” என்றாள் விமலா. “என்ன?” என்று திடுக் கிட்டுக் கேட்டான் விசுவம். அவனுக்கிருந்த மன அதிர்ச் சியில், ‘கமலு’ என்றாலே, அவனுடைய பழைய காதலி கமலுவாகத்தான் தோன்றிற்று. அவளை விட்டுவிட்டு இவ்வளவு தூரம் வந்தும், கனவிலும், நனவிலும் தன்னை இம்சிக்கும் அந்தக் கமலு என்ன பேயா பிசாசா? பெண் உருவம் தாங்கி வந்த பிசாசாகத்தான் அவள் இருக்க வேண்டும். இல்லாவிடில் சென்னையிலும் இங்கும் ஒரே சமயத்தில் இருப்பாளா?” என்ற நினைப்பு எழவே மறுபடி மூர்ச்சையானான். 

அடுத்த தடவை அவன் கண் விழிக்கும்போது, எதி ரில் மாட்டியிருந்தது, கமலுவின் புகைப்படம்! அதே பெயருள்ள வேறு யாரோ என்று அவன் சந்தேகிக்கக் கூட இடமில்லை. சாக்ஷாத் அவள்தான்! ஹும்! இந்த இடத்தைவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான் என்று எழுந்தான். பலஹீனத்தால், மறுபடி படுக்கையில் சாய்ந்துவிட்டான். 

இதேமாதிரி நிலைமையில் ஒரு வாரமாயிற்று, அவன் சற்று எழுந்து நடமாட. இந்த ஒரு வாரத்தில், விமலு அவன்மேல் காதல் கனிந்த அன்பைக் கொட்டத் தொடங்கி விட்டாள். அப்பெண் தனக்குச் செய்யும் பணிவிடையைக் கண்டு ஆனந்தம் கொண்ட விசுவம் ”அம்மா! உன் பெயரென்ன? விமலுவா! நல்ல அழகான பெயர். உண்மையில் நீ எனக்காக வெகு கஷ்டப்பட் டிருப்பாய். என்னால் கூடுமானால் அதற்குப் பிரதியுபகார மாய்…” என்று முடிக்குமுன், 

அப்படி எல்லாம்” சொல்லாதீர்கள்” என்று தலை யைக் குனிந்தவாறு கூறினாள் அவள். 

“என் கையில் இப்போது இந்த மோதிரம்தான் இருக்கிறது.” 

விமலுவுக்கோ ஓர் ஆசை பிறந்தது. அவரது ஞாப கார்த்தமாய் அந்த மோதிரத்தை வாங்கிக்கொண்டால் என்ன?”இதோ! இதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கழற்றி வைத்தான் விசுவம். அப்போதே மாடி யறைக்கு வந்த கல்பகம் தூரத்திலிருந்து இதைப்பார்த்தும், பாராதவள்போல் இறங்கிப் போய்விட்டாள். 

மறுநாள் விசுவம் வெளித் தாழ்வாரத்தில், ஈஸிசேரில் சாய்ந்திருந்தவன், எழுந்து சிறிது நடமாடத் தொடங்கி னான். அச்சமயம்தான் ஜானகி அவனைப் பார்த்து, ராஜத் திற்கும் காட்டியது. அதற்கடுத்த நாள் விசுவம் அங் கிருந்து கிளம்பிவிட்டான். பின்பே கல்பகம் தைரியமாய் மாடி அறைக்கு வரத்தொடங்கினாள். ஆகவே ராஜம் கல்பகத்தை மாடியில் கண்டதில் ஆச்சரியமில்லை. 

விசுவம் அங்கிருந்தவரையில் எவ்வளவு முயன்றும், வீட்டு எஜமானியைக் காண முடியவில்லை. எஜமானி எல்லார் எதிரிலும் வரமாட்டார்கள்” என்று விமலு கூறும்போது விசுவத்திற்குச் சிரிப்புத்தான் வந்தது. “அடேயப்பா! எப்படிப்பட்ட பதிவிரதை!” என்று ஏளனமாய் எண்ணிக்கொண்டான். அவனுக்குக் கமலு இங்கே வந்து இருப்பது, மோட்டார் முதலிய தர்பாருடன் சீமாட்டி வேஷம் போடுவது, இவை யெல்லாம் என்ன வென்று புரியவில்லை. “இருக்கட்டும் நேரே ஊருக்குப் போவோம். அங்கே ஸேவாஸ்தனத்தில் கமலு இருக்கி றாளா யில்லையா என்று பார்த்து, அந்தக் கமலுவுடன் நேரே இங்கே வந்தால், விஷயம் தெரிந்துவிடும். ஆமாம், அப்படியானால் யார் கமலு, யார் கல்பகம்? இரண்டு பேரும் ஒன்றா? இல்லை, ஏதாவது மாய மந்திரமா என் றெல்லாம் சிந்தித்தவாறு சென்னைக்கு ரயில் ஏறினான் விசுவம். 

அத்தியாயம்-14

கல்பகத்தைக் கண்டு பேசினாலொழிய மனம் நிம்மதி யடையா தென்று தோன்றியது ராஜத்திற்கு. ஜானகி இவளைப் போய் கமலு என்கிறாளே? அப்படியானால் கல்பக மாமி பெயரை மாற்றிக்கொண்டுவிட்டாளா? பாவம்! அவளைப் பற்றி அப்படியெல்லாம் எண்ண மனம் துணியவில்லை. ‘சிறிசு! உனக்கென்ன தெரியும்?” என் கிறாள் அத்தை. “எது எப்படி ஆனாலும் இன்றைக்கு அவள் வீட்டுக்குப் போய் வந்துவிட வேண்டும் ” என்று தீர்மானித்துக் கொண்டு “அத்தை ! தெருக் கோடியிலே பத்மா அகத்திற்குப் போய் வருகிறேன்” எனத் தனியே கிளம்பினாள் ராஜம். “ஏண்டி! துணைக்கு வேண்டுமானால், ஜானகியை அழைத்துப் போயேன்!” என்றாள் அத்தை. “ஊஹும்! ஜானகி மாமி வெளியே போயிருக்கிறாள். இந்தக் கோடிவரையிலும் போக என்ன துணை, அத்தை!” என்று அத்தைக்குப் போக்குக் காட்டிவிட்டு நடந்தாள் ராஜம். 

ஒரு மைலுக் கப்பாலுள்ள கல்பகத்தின் வீட்டை எப்படித்தான் அவ்வளவு சீக்கிரம் போய் அடைந்தாளோ? அவர்கள் வீட்டிற்குச் சென்று படபடவெனக் கதவை யிடித்தாள்.விமலு வந்து கதவைத் திறக்கலும், இங்கே மாடியில் யார் குடியிருக்கிறார்கள்?” எனக் கேட்டாள் அவளை. “குடி ஒருத்தருமில்லை. இது எங்கள் சொந்த வீடு” என்று பெருமையாய்க் கூறினாள் விமலு. ராஜத்திற்குச் சந்தேகம் வந்துவிட்டது, எங்கேயாவது வீடு தப்பி வீடு நுழைந்துவிட்டோமா என்று. அச்சமயம் கல்பகமே மாடி இறங்கி வந்தவள், ராஜத்தைக் கண்டதும் ராஜம்! வா, வா! உன்னை எங்கெங்கோ தேடினேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது!” என்று சந்தோஷத்துடன் கூறிய வண்ணம் ராஜத்தைக் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள். 

படி ஏறுகையில் ராஜம், “ஊஹும்! மாமி! யாரா வது புருஷர்கள் இருப்பார்கள் நான் வரவில்லை” எனப் பிணங்கினாள். 

“புருஷர் யார் இங்கே? பைத்தியம்! கனாக் கண்டயா?” என்று கேட்டாள் கல்பகம். “அட! நேற்றுப் பார்த்த மனுஷன் எங்கே, பின்னே?” என்று எண்ணிக்கொண்டே மாடியறையை அடைந்தாள் ராஜம், சந்தேகத்துடன் ஒவ்வொரு அறையாகச் சுற்றிப்பார்த்த பின், “ஏன் கல்பக மாமி! எப்போது இந்த ஊருக்கு வந்தீர்கள்? எனக்கு எழுதவே யில்லையே” என்றாள். 

”ராஜம் ! நீ எந்த ஊரில் இருக்கிறா யென்று எனக் கெப்படித் தெரியும். உங்க மாமாவுக்கோ ஊரூராய் மாற்றலாகும் வேலை யென்று நீ முன்பே சொல்லியிருக்கிறாய் நீ இந்த ஊர் வந்து எத்தனை நாளாயிற்று?” என்று கேட்டாள் கல்பகம். 

“இப்போதுதான் ஒரு மாசம் ஆகிறது.” என்று சொல்லிவிட்டு ஏதோ எண்ணியவள் போல் “மாமி! பெரிய மாமி எங்கே?” எனக் கேட்டாள் ராஜம். 

”ராஜம் ! நீ ஊரைவிட்டுப் போனது முதற்கொண்டு நடந்ததை யெல்லாம் சொன்னால்தான் உனக்கு விளங் கும்” என்று கூறித் தனது விருத்தாந்தங்களை முழுவதும் உரைத்தாள். நேற்று இந்த மாடியில் யாரோ புருஷர் நின்றிருந்தாரே…” என்று சந்தேகம் தணியாமலேயே கேட்டாள் ராஜம். கல்பகம் அந்த விஷயங்களைப் பற்றி யும் ஒளியாது கூறிவிடவே, ராஜம் கண்களில் நீர் ததும்ப “மாமி! என்னை மன்னிப்பீர்களா?” என்று நாத் தழுதழுக் கக் கேட்டுக் கல்பகத்தின் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள். 

கல்பகத்திற்கு ஒன்றும் புரிபடவில்லை.”ஏன் ராஜம்? நீ என்ன தப்புச் செய்தாய்?” என்று கேட்டாள். ராஜம் தனக்கு ஜானகி சொன்ன விஷயங்களைச் சவிஸ்தாரமாய்க் கூறினாள். இதையெல்லாம் கேட்ட கல்பகம் புன்சிரிப் புடன் ‘சரி! இனிக் கமலுவைக் கண்டுபிடிப்பதற்கு அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. இந்த விஷயம் நேற்றே தெரிந்திருந்தால், இங்கு படுக்கையோடு கிடந்த அந்த மனுஷன் மூலமே நாம் கமலுவை யடைந்திருக்க லாம். ஆனால் ஒரு விஷயம். உனக்கு அந்த மனுஷன் கமலுவிடம் நேசமாய் இருந்ததும், அவர் பெயர் விசுவம் என்பதும் எப்படித் தெரியும் ?” என்றாள். ராஜம் வெட்கத் தால் சிறிது தயங்கிப் பின், தனக்கும் அவருக்கும் கல்யாணம் நிச்சயமாகி யிருந்ததும்,கமலு விஷயம் கேள்விப்பட்டு அதைத் தன் வீட்டார் நிறுத்தினதுமாகிய விஷயங்களைக் கூறினாள். “பாவம்! அப்போது என்னைப் பற்றி நீ என்ன எண்ணி யிருப்பாய்? வெட்கக்கேடு. ராஜம்! நான் சொல்வதைக் கேள். உனக்கு விசுவத்தின் விலாசம் தெரியு மல்லவா? நாம் அங்கு சென்றால் கமலு வைக் கண்டுபிடிப்பதோடு இவ்வளவு சந்தேகமும் தீர எல்லோருக்கும் வழிகாட்டியாவோம் என்றாள் கல்பகம். 

“அத்தை என்ன சொல்வாளோ? வாசலிலே போய் எட்டிப் பார்க்கக்கூட அந்தச் சனி ஜானகிதான் துணை வருகிறது. அதிருக்கட்டும், மாமீ ! எனக்கு ஒரு சந்தேகம்? அந்தக் கமலுவுக்கும் உங்களுக்கும் ஜாடை எப்படி வந்தது..? 

“ராஜம்! உன்னிடம் மறைக்கக் கூடிய ரகசியம் என்னிடம் ஏது! கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிடு. இது விஷயமாய் வனஜாக்ஷி பெட்டியிலுள்ள கடிதங்களைப் படி. பிறகு சொல்லு!” என்றாள் கல்பகம். அதே மாதிரிச் செய்த ராஜம் அக் கடிதங்களைப் படித்ததும், ஆச்சரியம் தாங்காது மூக்கில் விரலை வைத்தாள். “இந்த விஷயங்களை யாரிடமும் வெளியிடாதே, தற்சமயத்திற்கு” என்று ராஜத்திடம் பரிவுடன் கூறினாள் கல்பகம். “ஆகட்டும்” எனத் தலையசைத்தாள் அப் பெண். 


ஸேவாஸ்தனத் தலைவி எழுதின கடிதத்தைக் கண்டதிலிருந்து சரோஜாவிற்கு மன நிம்மதியில்லை. “கமலு யாரோ ஒரு கல்யாண மாகாத பெண். அவளைப் போய் நம் கணவன் தன் மனைவி என்க, தானும் யோசியாமல் அவளிடம் கோபங்கொண்டோமே… யென்றெண்ணி எண்ணி வருந்தினாள் அவள். இவர்கள் இப்படியெல்லாம் செய்யப்போக, கடைசியில் அவை விசுவத்தின் தலையிலா விழவேண்டும்? கமலுதான் கல்பகமென்று நினைத்து, மனக் கிலேசத்தில் அவன் ஊரைவிட்டே போய்விட் டானே! அவன் சங்கதியே தெரியவில்லை. கமலுவின் பிரச்னை தீரவாவது கல்பகத்தைக் கண்டு பிடித்துத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போதும், போதும். இவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணைக் கவனிக்காமல் விட்டதும் போதும், அவளைத் தேடப் போய், வந்துசேர்ந்த தொல்லைகளும் போதும்!” என்று சரோஜாவிற்குக் கல்பகத்தின் மீதும், தன் கணவனின் மீதும் கோபம் உண்டாயிற்று. ராமகிருஷ்ணனுக்கோ கமலுவைப் போய் “நீதான் என் மனைவி!” என்று முட் டாள் தனமாகக் கூறினோமே யென்று வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது. ஒரு விஷயம் என்னவோ நிச்சயம்; அவள் கல்பகத்தின் அச்சாகவே யிருக்கிறா ளென் பதில் சந்தேகமே கிடையாது. பின்…? 

 சில சமயங்களில் இது விஷயமாய் யோசிக்கையில், தான் தூங்குகிறோமா, விழித்திருக்கிறோமா என்று அவனுக்கே சந்தேகம் வந்துவிடும். இவர்கள் அவஸ்தை இப் படி யிருக்கையில், யாரோ ஒரு பணக்காரி வந்து தேடிப் போனதைப் பற்றிப் பக்கத்து வீட்டுப் பெண் சொன்ன விஷயம், சரோஜா காதில் ஏறவே யில்லை. ஏனோதானோ வென்றே அதைக் காதில் போட்டுக் கொண்டாள். இச் சமயம்தான் விசு திரும்பி வந்துவிட்டதாக சரோஜாவின் தாத்தா கடிதம் போட்டிருந்தார். “விசுவிற்குச் சொல்ல வேண்டிய சங்கதிகள் அநேகம் இருக்கின்றன. அவன் உடனே இங்கு கிளம்பி வந்தால் தேவலை ” என்று உடனே தாத்தாவிற்கு எழுதி விட்டாள் பேத்தி. 

ராமு கண்ணனிடம் எல்லா விஷயங்களையும் கூறி னான். ஏற்கெனவே கமலு அப்படிப் பொய் சொல்லக் கூடியவளா? அப்படிப் புளுகுவதில் அவளுக்கு என்ன லாபம்? கண்ணன் யோசனை செய்து பார்த்தான். ராமு சொன்ன வரலாறு அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அவன் ஸேவாஸதனத் தலைவிக்கு “உடனே கமலுவுடன் புறப்பட்டு வரும்படி கடிதம் போட்டு விட்டான். ஸேவா ஸதனத் தலைவி பெங்களூரில் தங்குமிடம் கண்ணனுக்குத் தெரியும். விசுவிற்கு ஏதோ காரணத்தால் கண்ணனிடம் மனத்தாங்கல் என்பதை யறிந்த ராமு, விசுவிடம் அதை நேரில் விசாரித்தான். 

அவன் கூறியதும் “பைத்தியம்! நான்தானே கண் ணனை விட்டுக் கல்பகத்தைப் பற்றி விசாரிக்கச் சொன் னேன். அது காரணமாகத்தான் அவன் அலைந்து கொண் டிருந்தான். அன்று இந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசுகையில் நீ எழுந்து ஓடிவிட்டாய். கண்ணன் மிகக் கண்யமானவன். அவனைப் பற்றித் தவறுதலாகக் கூடத் தவறாக எண்ணாதே!” என்றான் ராமு. 

அன்று மாலையில் கண்ணனைக் கண்டதும் சகஜமாகப் பேசினான் விசுவம். மெள்ள மெள்ளத் தான் திருச்சி சென்றதும், அங்கே கமலு என்ற ஒரு பெண்ணின் வீட் டில் தங்கினதும். அப் பெண்ணைத் தான் பார்க்க முடியா மல் படத்தை மட்டும் பார்த்ததையும்,படம் கமலுவின் படம்தா னென்பதையும். பிறகு சென்னையில் விசாரித்த தில், அதே தினம் கமலு ஸேவாஸதனத்தில் இருந்ததாகத் தெரிய வந்ததையும் விவரமாகக் கூறினான். 

இந்த வரலாறு ஆச்சரியமாகவும், புதுமையாகவு மிருந்தது என்று மட்டும் தெரியவந்தது. “கமலு என்ப வள் ஏதோ மந்திரவாதியாய் இருக்க வேண்டும். இல்லா விடில் அவர்களைப் போல் இருவரைக் கடவுள் சிருஷ்டித்து நம்மை வேடிக்கை பார்ப்பதாக இருக்க வேண்டும்” என்று எல்லாரும் தீர்மானித்தனர். இருவரும் கமலுவே தானா? அப்படியானால் கல்பகம் எங்கே! தேடிப் பார்த்து பிரயோசனமின்றி மற்றோர் கமலு கிடைத்தால் என்ன செய்வது? “அட ஈசுவரா!” என்று சொல்லிவிட்டுப் படுத்தான் ராமு. விசுவத்திற்கோ, “ அப்பாடா! எப் படியோ, நம் கமலு புனிதமானவள், கல்யாணமாகாதவள் என்று தெரிந்துவிட்டது. திரிச்சிக்குச் சென்று பார்த்தால் மற்ற விஷயங்கள் புலப்படுவது பிரமாதமல்ல” என்ற ஒரே எண்ணம் மேலோங்கி நின்றது. 

மறுநாள், திருச்சி செல்லும் ரயில், முதல் முறையாக ராமு, விசு, சரோஜா ஆகியவர்களையும் மறு முறையாகத் தங்கம்மாள், கண்ணன், கமலு இவர்களையும் தாங்கிப் போயிற்று. அவர்கள் செல்லும் காரியம், உத்வேகம், இவைகளைப் பற்றி ரயிலில் போகும் மற்றவர்களுக்கோ, ரயிலுக்கே என்ன கவலை? 


கல்பகத்தைக் கண்டு பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ராஜத்திற்கு மனச்சாந்தியே இல்லை. பாவம்! எந்த வழி போனாலும், கல்பக மாமிக்குச் சுகம் இல்லையே? ஆமாம்! இப்பொழுது இருக்க இடம் இருக்கிறது அவ ளுக்கு. அந்தக் கடிதங்களைப் பார்க்கையில், எவ்வளவு விஷயம் வெளிப்படுகிறது! ரங்கையன், கல்பகத்தின் வீட் டாருக்கே ஓர் துரோகியாய்த்தான் இருந்திருக்கிறான். மனித உருவெடுத்திருக்கும் பிசாசுதான் அவன். அப்பா! என்ன துணிச்சல்! அந்தக் கமலு கல்பகத்தைப் போலவே இருந்தால் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கும். தானும் கல்பக மாமியோடு கூடச் சென்னைக்குப் போக அத்தை விடமாட்டாளே! “ஹும்! என்ன இருந்தா லும் பெண் ஜன்மம்தானே? பெண்ணாய்ப் பிறந்த தோஷம் தானே, ஒரு குற்றமு மறியாத கல்பகத்திற்கு இவ்வளவு கெட்ட பெயர்? நானே அவளைத் தப்பிதமாக எண்ணும் படி நேர்ந்து விட்டதே? எல்லாம் ஜானகி செய்த வம்பு. இனி இவளுடன் பேசவே கூடாது” என்றெல்லாம் தன் புத்தியைக் குழப்பிக்கொண்டிருந்தாள் ராஜம். 

ஜானகி வலுவில் வந்து பேசிப்பார்த்தாள். ராஜம் கேட்ட கேள்விக்குப் பதில் கூறிவிட்டுப் போய்விட் டாள். சிறு வயது முதலே ராஜத்திற்கு வம்பு என்றால் பிடிக்காது. ஜானகிக்கும் அவர்கள் வீட்டில் அலுப்புத் தட்டியது. பம்பாயில் யாரோ அதிகச் சம்பளத்திற்கு கூப்பிடவே அவள் கிளம்பிப் போய்விட்டாள். ‘நச்சு’ ஒழிந்தது என்று இருந்தாள் ராஜம். ராஜத்தின் மனதுப் படி தற்செயலாய் அவள் மாமா விற்குச் சென்னைக்கே மாற்றலாகியது. 


ராஜம் சென்னைக்குச் செல்வதை யறிந்து கல்பகமும் விமலாவுடன் கிளம்பினாள். ராஜத்தின் யோசனைப்படி வனஜாக்ஷியின் பெட்டியில் அகப்பட்ட கடிதங்களைக் கல் பகம் கூடவே கொணர்ந்தாள். ராஜத்தின் அத்தைக்குக் கல்பகத்தைத் தெரியும். ஆனால், அதிகப் பரிச்சயமில்லை. 

சென்னைக்குக் கல்பகம் வந்ததில் விமலாவிற்குத்தான் அதிகச் சந்தோஷம். விசு சென்னையில் இருப்பதை அவன் மூலமே அறிந்திருந்தாள் அவள். ராஜத்திற்கும் அவனுக் கும் கல்யாணம் நிச்சயமானதோ, கமலுவின் விஷயமோ ஒன்றையும் விமலா அறியாள். அவள் மட்டில் கல்பகம் தான் கமலு. விசு தனக்கு மோதிரம் கொடுத்ததிலிருந்து அவனையே இரவு பகலாய் எண்ணி உருகினாள் அப் பெண் “என்று காண்போம் அவரை?” என்ற நினைப்பிலேயே, சதா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கல்பகத்திடம் அவள் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. 

விசு இவளுக்கு எதையோ கொடுத்ததைக் கல்பகம் நேரில் பார்த்தாளல்லவா? அதன் பிறகு புதிதான ஒரு மோதிரம் அவள் கையில் தென்படவே, “ஏது, விமலா! மோதிரம் பண்ணிக் கொண்டாயா?” என வினவினாள் அவளை. விமலா கூச்சப்பட்டுக் கொண்டு ஒன்றும் பதில் கூறவில்லை. விஷயத்தை ஒருவாறு புரிந்துகொண்ட கல் பகமும் பேசாமல் இருந்து விட்டாள். ராஜம்,பிறகு விசு வின் சங்கதிகளையெல்லாம் கூறவே, கல்பகத்திற்குச் சந்தேகம் தட்டியது. “ஓ! அந்த விசு திடமனது, உள்ளவ னல்ல போல் இருக்கிறது. கமலுவைக் காதலித்து, ராஜத்தை மணக்கச் சம்மதித்து, பின் விமலாவுக்கு மோதிரம் கொடுப்ப தென்றால்? நல்ல வேளை ராஜம் தப்பினாள்! விமலா நம் கூடவேயிருப்பதால், அவளைக் கவனித்துக் கொள்வது பிரமாதமல்ல. ஆம்! கமலு அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே? இது வரை அவளது கற்புக்குப் பங்கம் நேர்ந்திரா திருக்க வேண் டுமே? ஈசுவரா!” என்று வருந்தினாள் கல்பகம். ரங்கய் யனிடம் அகப்படாதிருக்கத் தான் ஓடிப்போனது ஞாப கம் வந்தது அவளுக்கு. ஆனால், வனஜாக்ஷி சொன்ன விஷயங்களிலிருந்து, கமலு மிகுந்த ரோஸக்காரி, மானி, வனஜாக்ஷியிடம் அவளுக்குச் சில விஷயங்களில், ஒற்றுமை யில்லாததினாலேயே வீட்டை விட்டுப் போய் விட்டாள் என்ற சங்கதிகளை அறிந்திருந்தாள் கல்பகம். தன்னையே கமலு என்றெண்ணி ‘அப்படிச் செய்தேனே, இப்படிச் செய்தேனே!” என்று வனஜாக்ஷி பிரலாபிக்கை யில் பல விஷயங்களைக் கல்பகம் அறிய நேர்ந்தது. ஆகவே அவ்வளவு கெட்டிக்காரியான கமலு விசுவத்தினிடம் ஏமாந்திருக்க முடியுமா! ஆனால் அப் பெண் உண்மை யிலேயே அவனை நேசித்தாளோ என்னவோ?…இருக்கட் டும்; அவன் மட்டும் கமலுவை ஏமாற்றப் பார்த்தா னென்று தெரிந்தால்… சே,சே! கமலுவிடம் நமக்கென்ன அவ்வளவு நம்பிக்கை! அவள் நம்மைப்பற்றி என்ன அபிப் பிராயங் கொள்வாளோ? என்று பலவிதச் சிந்தனைகள் ஓடிற்று அவள் மனத்தில். 

சென்னைக்குச் சென்ற மறுநாளே, விமலையுடன் விசு வத்தின் வீட்டிற்குச் சென்றாள். வெளியே யிருந்து அம்மா! அம்மா!” என்று அழைத்தாள். உள்ளே யிருந்து ஓர் குரல்… ஆம், பழகின குரல்தான் அது! “யார் அங்கே, அம்மா வெளியே போயிருக்கிறார்” என்றது. 

“விசு இல்லையா?” எனக் கேட்டாள் கல்பகம். 

“இல்லை என்று தான் சொல்லுகிறேனே!” என்று சொன்ன வண்ணம் வெளியே வந்தாள் ஒரு கிழவி. அக் கிழவியைக் கண்டு திகைத்து நின்றாள் கல்பகம். கிழவியோ. “என்னம்மா! கல்பகமா? எப்போது எங்கே வந்தாய்? உன்னைப் பார்த்து எத்தனையோ நாட்களாயிற்று. பாவி நான் செய்த தப்புக்கெல்லாம் நன்றாய் அனுபவிக்கிறேன். உன்னைப் பார்த்து, உன் வாயால் நீ என்னை மன்னித்தாய் என்று சொல்லிக் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. அந்தப் பாதகன் ரங்கய்யன் ‘உனக்கும் பெப்பே’ என்று என்னை ஊரை விட்டே ஓட்டிவிட்டான். ஏன் பேசமாட்டேனென்கிறாய்? என்னை மன்னிக்க மாட் டாயா?” என்று கத்திய வண்ணம் கல்பகத்தின் காலில் விழப் போனாள். 

அவள் தன் காலில் விழாதவாறு கல்பகம் அவளைத் தடுத்து விட்டு ‘பாட்டி! நீங்கள் என்ன செய்வீர்கள்? என் வினை கிடக்கிறது. தப்புச் செய்தாலும், கடைசியில் அதை உணர்ந்து கொண்டீர்களே, அதே போதும்; உங்களை மன்னிக்க நான் யார்? சரி, நான் போய் வரட்டுமா? ஆமாம், விசு வந்தால், இந்தக் கடிதத்தைக் கொடுத்து விடுங்கள் ” என்று கூறி ஒரு கவரைக் கொடுத்தாள். “என்னை நம்பியா கொடுக்கிறாய்?” என்றாள் கிழவி. “சே, சே! ஒருவரை ஒருவர் நம்பாவிட்டால்  பிறகு என்ன இருக்கிறது? மேலும், நீங்களே பச்சாதாபத்தால் வருந்தும்போது…” என்று புன்முறுவலுடன் கூறினாள் கல்பகம். 

பாட்டி அவள் போன திக்கையே பார்த்து நின்று விட்டாள் அயர்ந்து. “புண்ணியவதி” என்று அவள் வாய் தன்னை யறியாமல் முணுமுணுத்தது. 


அம்மணியம்மாள் வீட்டுக்குப் புதியதோர் சமையற் காரி வந்ததாக முந்திய அத்தியாயத்தில் கூறினோமல்லவா? அந்தச் சமையற்காரி குப்பிப் பாட்டிதான். ‘கெட்டும் பட்டணம் சேர்’ என்றபடி, சென்னைக்கு வந்துவிட்டாள் அவள். நாலு நாள், கையிலுள்ள காசை வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றினாள். பட்டணத்தில் வெறும் வம்பில் காலந்தள்ள வசதி யில்லை யென்பதை அறிந்து கொண்டாள். தான் எவ்வளவோ நம்பிய ரங்கய்யன் மூலமே தான் ஊரை விட்டு ஓட நேர்ந்ததை எண்ணி எண்ணிப் பாட்டியின் மனம் புழுங்கியது. நேரே கபாலீசுவரர் கோவிலுக்குப் போனாள். தன்னை யறியாது தான் செய்த பாபமெல்லாம் ஞாபகம் வந்தது அவளுக்கு. அன்று ஒருநாள்தான் பாட்டி மனதார ஈசனை எண்ணி உண்மையான ஜபம் செய்தாள். 

“பாட்டி! சமையலுக்கு யாராவது கிடைப்பாளோ?” என்று யாரோ, எங்கிருந்தோ இன்னொரு பாட்டியைக் கேட்டார்கள். சடாரென்று, குப்பிப் பாட்டியின் மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. பாட்டி வேலையில் ரொம்பக் கெட்டிக்காரி. அந்த இடத்தில் போய் நின்று பேச்சைக் கேட்டாள். “பதினைந்து ரூபாய் தருகிறோம். யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்று ஒரு புரோகிதர் விசாரித்துக் கொண்டிருந்தார். 

”யார் அகத்திற்கு?” என்று விசாரித்தாள் பாட்டி. ”பரமசிவய்யர் அகத்திற்கு. ஏன், யாராவது இருக்கிறாளா ?” என மீண்டும் விசாரித்தார் புரோகிதர். “நான் வேணுமானால் வருகிறேன்” என்றாள் பாட்டி. 

புரோகிதர் ஏற இறங்க ஒரு முறை பாட்டியைப் பார்த்தபின் “வாருங்கள் ” என்று அழைத்துப் போனார். தன்னூரில் பாட்டி பிறரை வைத்த கண் வாங்காது பார்ப் பாள். இங்கோ, எவரோ புரோகிதர் பாட்டியைக் கேட் டுப் பார்த்து அழைத்துப் போக நேர்ந்தது.பாட்டி பாவம், அசலூருக்குப் பூனையானாள்! குப்பிப் பாட்டி, அம்மணி யம்மாளிடம் சமையற்காரியாக அமர்ந்த வரலாறு இது தான். 

இங்கு, சமையல் வேளை போக, பாக்கி வேளை பாட் டிக்கு ஒழிவுதான். வம்புக்குக் குளக்கரை, ஆற்றங்கரை யெல்லாம் சென்னையில் ஏது? ‘இனிது இனிது ஏகாந்த மினிது’ என்று தெரியாமலா கூறியிருக்கிறார்கள் பெரி யோர். தனிமையில் உட்கார்ந்துகொண் டிருக்கையில், பாட்டி தான், முன்பு நடத்திய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பாள். கடைசியாக அந்த ஊரை விட்டு வருமுன், தன்னைப்போலவே ஊரை விட்டுப்போன கல்பகத்தின் ஞாபகம் அடிக்கடி பாட்டிக்கு வராமல் இருக்காது. “நான்தான் வயதானவள். எங்காவது சமையல் வேலை செய்தாவது வயிற்றை வளர்த்து விடுவேன். பாவம், கல்பகம் என்ன செய்வாள்?” என்று எண்ணுகையில் “அடி, பாவி!” என்று எங்கிருந்தோ கல்பகம் கூவுவது போல் பாட்டியின் காதில் விழும். 

ஆக, ஊரைவிட்டு வந்தது முதலே பாட்டியின் குணத் தில் மாறுதல் ஏற்பட்டது. இப்பொழுது இந்தத் தனிமை பாட்டிக்கு ஒரு குருமந்திரமே உபதேசித்தது எனலாம். கல்பகத்தைக் கண்டு அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணும் நிலைமைக்கு இப் பொழுது பாட்டி வந்து விட்டாள். இதுவரைக்கும் வீணாகத்தான் பொழுது போக்கியதை எண்ணி உண்மை யில் பச்சாத்தாபப்பட்டாள் பாட்டி. 

மறுபடி கல்பகத்தைப் பார்ப்போமென அவள் கன விலும் எண்ணவில்லை. நாம் எண்ணுகிற விஷயங்கள்தான் உலகில் நடப்பதில்லையே! அன்று தற்செயலாய் வீட்டில் ஒருவருமில்லாமற் போகவே, வாசலில் யாரோ கூப்பிட்ட தற்குப் பாட்டி பதில் கூறவந்தாள். கல்பகத்தை அங்கு கண்டு அவள் திகைத்ததில் வியப்பென்ன? மாலையில் அம்மணியம்மாளிடம் யாரோ கடிதம் கொடுத்ததைக் கூற எண்ணிக் கவரை சமயலறை பிறைக்குள் வைத்தாள். மாலையில் வீட்டில் நேர்ந்த அமர்க்களத்தில், கடிதத்தையே மறந்து விட்டாள் பாட்டி. 

அத்தியாயம்-15

கண்ணன் கூறிய பிறகுதான், தங்கம்மாள், கமலு முத லியவர்கள் திருச்சி வந்திருக்கிறார்களென்று விசுவத்திற்குத் தெரியும். தன்னைப் போலவே இன்னொரு பெண் இருக்கிறா ளென்பதை அறிந்தால், கமலு ஆச்சரியப்படுவதோடு, இந்த முக ஜாடையினால் ஏமாறிய ராமுவையும் நிந்திக்கமாட்டா ளல்லவா என்பது சரோஜாவின் எண்ணம்.  “நல்லதாய்ப் போயிற்று! அவளும் வரட்டும்! எல்லாருமாகப் போய் அந்த இன்னொரு கமலுவையோ, கல்பகத்தையோ, பிடிப்போம்” என்றாள் அவள். விசு விற்குத்தானே தெரியும், விமலாவின் வீடு? ஒரு வண்டியில் சரோஜா, அவள் கணவன், விசு ஆகியோரும் இன்னொரு வண்டியில் தங்கம்மாளும் கமலுவும் ஏறிக்கொண்டு சென்றனர். 

கமலுவுக் கென்னவோ விசுவைப் பார்க்கவே கூசிற்று. விசுவிற்கோ அவமானம் தாங்கவில்லை.”தப்புச் செய்யாதவர்கள்மீது குற்றங் கண்டோமே!” என்று தன்னையே நொந்துகொண்டான் அவன். 

முதல் முதல் திருச்சி ஸ்டேஷனைக் கண்டதுமே கமலு விற்குப் ‘பகீர்’ என்றது. தெருவோடு வண்டியில் போகும்போது, எங்கு வனஜாக்ஷியைக் கண்டு விடு வோமோ என்ற திகில்! ”பார்க்கட்டுமே? என்ன செய் வாள் நம்மை அவள்?” என்று எவ்வளவோ மனத்தைத் திடப் படுத்திக்கொண்டும் அவளுக்கு உள்ளூர ஏதோ கலக்கம். வண்டி எங்கே போகிறது என்பதைக்கூடக் கவனியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந் திருந்தாள் அவள். “சிந்தனை செய்வதில் பயனேது?” என்று, பிச்சைக்காரக் கும்பலொன்று அச் சமயம் தெரு. வில் பாடிக்கொண்டே வந்தது. அப்பா! அந்தப் பையனின் குரலில்தான் என்ன உருக்கம்! கமலு ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் அவர்களை. தனக்காகவே அந்தப் பாட்டு பாடப்பட்டதுபோல் தோன்றியது அவளுக்கு. 

ஒரு குலுங்குக் குலுங்கி வண்டி நின்றது. விசு முதலியவர்கள் கீழே இறங்கினர். தங்கம்மாளின் பின் னால் இறங்கிய கமலு, ”ஆ! இங்கே ஏன் வந்தீர்கள்?” என்று கத்த வாயைத் திறந்தவள் தன்னை அடக்கிக் கொண்டு, அம்மா! இது வனஜாக்ஷி அம்மாளின் வீடல்லவா? உங்களுக்கு விலாசம்கூடச் சொன்னேனே, மறந்து விட்டீர்களா?” என மெதுவாகக் கேட்டு விட்டு, மறுபடி வண்டிக்குள் ஒளிந்தாற்போல் ஏறி உட்கார்ந்து கொண்டாள். “எல்லாருமாகச் சேர்ந்து நம்மை வனஜாக்ஷியிடம் விட்டுவிடச் செய்த சதியோ இது? தங்கம்மா ளிடம் விஷய மெல்லாம் கூறினதின் விளைவோ?” என் றெல்லாம் பயந்தாள் அவள். தங்கம்மாளோ, “கமலு! உனக்குக் கெடுதலானதையோ, நீ விரும்பாததையோ நான் ஒருகாலும் செய்யேன். போன மாதம் விசு இந்த வீட்டிற்கு வந்தானாம். இங்கு வனஜாக்ஷியென்ற பெய ருள்ளவர்கள் யாரும் இல்லையாம். கமலு என்ற பெண் ணொருவள் உன்னைப் போலவே ஜாடையுள்ளவள் இருக்கிறாளாம். அதைக் கண்டுபிடிக்கத்தான் நாம் வந் திருக்கிறோம்.நீ கொஞ்சங்கூடப் பயப்பட வேண்டிய தில்லை” என்று தைரியம் சொன்னாள். 

கமலுவின் மார்பு படபட வென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது. இதற்குள் விசு, கண்ணன், ராமு எல்லாரும் உள்ளே போய்விட்டு வந்துவிட்டார் கள். வீட்டில் ஓர் அறையைத் தவிர மற்றவை யெல்லாம் பூட்டப்பட்டுக் கிடந்தது. அங்கு காவல் இருந்த கிழவி ஒருத்தி “கமலு அம்மா பட்டணம் போயிருக்காங்க. இப்போதான் முந்தாநாள் போனாங்க. எப்போ வருவாங் களோ, நம்மகிட்ட சொல்லிட்டாப் போனாங்க?” என்று தொடங்கினாள். எங்கு இறங்கியிருக்கிறாள் என்று ஒன் றும் கிழவியின் மூலம் அறிய முடியவில்லை அவர்களுக்கு. “தலை விதிதான் இது ! நாம் இங்கு வரும் சமயம் பார்த்து அவள் அங்கு தொலைவானேன்? என முணுமுணுத்துக் கொண்டனர் அம் மூவரும். 

விஷயத்தைக் கேட்ட கமலுவிற்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. கல்பகம் என்பவளைத் தேடி இவர்கள் அலைய இன்னுமொரு கமலுவா? அதுவும் வனஜாக்ஷி வீட்டிலா? என்ன வேடிக்கை! வனஜாக்ஷி வீட்டை விற்று விட் டாளா? ஒரே சந்தேகமும் குழப்பமுமாய்த் திணறினாள் கமலு. வண்டி சிறிது தூரம் சென்றதும், தங்கம்மா ளிடம் “ அம்மா! அந்த மூலைக் கடையில் இறங்கி விசாரிக் கச் சொல்லுங்கள், வனஜாக்ஷி என்ன ஆனாள் என்று என்றுரைத்தாள் கமலு. தங்கம்மாள் கண்ணனிடம் கூறவே கண்ணன் இறங்கி விசாரித்தான். கடைக்காரன் மூலம் வனஜாக்ஷி இறந்துபோனது தெரியவந்தது. 

“என்னைப் பிரிந்து இருக்க முடியாமல் இறந்துவிட் டாள் போலும்! கட்டாயம், இப்பொழுது அங்கிருப் பவள் யாரோ ஒரு போலி வேஷதாரியே. சும்மா விட்டு விடக்கூடாது அந்த வேஷதாரிக் கமலுவை!” என்று ஆத்திரத்துடன் கூறினாள் கமலு. தங்கம்மாள் யோசனையி லாழ்ந்து விட்டாள். 

வீட்டிற்குச் சென்ற விசுவுக்கு ஒரு தந்தி காத்திருந்தது. “தாத்தாவின் நிலைமை அபாயம். உடனே வரவும்…” 

ஒன்றும் புரியாமல் நின்றான் விசு. “நல்ல வேளையாய், இந்த ஊருக்கு இந்த இடத்தில் வந்து தங்கியிருக்கிறோமென்று பாட்டிக்கு எழுதினோமே! இல்லாவிடில் தந்தி பெங்களூரில் கிடக்க வேண்டியதுதானே!” என் றான் ராமு. “ஆம்! எங்கு போனாலும் அண்ணா முன் கூட்டிச் சொல்லாமல் போக மாட்டான். என்னவோ ஒரு முறை முன்பு போனான் ….ஆமாம்…… இனி இந்தச் சள்ளையைப் பார்த்திருக்க முடியாது. எல்லாரும் கிளம்ப வேண்டியதுதான் சென்னைக்கு!” என்றாள் சரோஜா. “எத்தனை செலவு! எவ்வளவு ஹிம்ஸை! என்று முணு முணுத்தான் ராமு. அச் சமயம் அங்கு வந்த கண்ணனுக்கும் விஷயத்தைத் தெரிவித்தார்கள். 

“நம் காரியத்தைப் பற்றி நாம் அலையவே சிணுங்குகிறோமே, பிறருக்காக உடம்பை அலட்டிக் கொள்ளும் இந்தக் கண்ணன் மட்டும் முகம் சுணுங்க வில்லையே? இவன் என்ன சாக்ஷாத் கண்ணப்பிரானா?” என்று எண்ணிக் கொண்டான் விசு. ஆரம்பத்தில், கண்ணனிடம் எவ்வள வுக் கெவ்வளவு வெறுப்புக் கொண்டானோ அவ்வளவுக் கவ்வளவு அவனிடம் மதிப் புண்டாயிற்று விசுவிற்கு. 


வழக்கமாக உலாவப்போவது போல்தான் அன்றும் போனார் பரமசிவய்யர். என்னவோ தெரியவில்லை திரும்பி வரும் போதே, மயக்கமாய் இருக்கிற தென்று சொல்லிக் கொண்டு வந்தார். உடனே டாக்டர் வந்தார். “இருத யம் பலஹீனமாய் இருக்கிறது. ஒரு நாள் பூரா இந்த மருந்தைக் கொடுங்கள். எதற்கும் விசுவைத் தந்தி யடித்து வர வழையுங்கள்! எனக் கூறிச் சென்றார். குடும்ப வைத்தியர் அவர். அவர் சொன்னால், உண்மை யில் அதில் ஏதாவது ஆபத்து இருக்கும் என்று பயந்து அம்மணியம்மாள் விசுவிற்குத் தந்தி கொடுத்துவிட்டாள். 

விசு சமயத்தில் இல்லாமற் போனது அவளுக்கு மிகுந்த விசாரமாய் இருந்தது. கல்பகத்தைத் தேட எல்லாரும் போகிறார்கள் என்ற விஷயமே அம்மணியம்மா ளுக்குத் தெரியாது. எப்படித் தெரியும்? தெரிந்தால் விடு வாளா? எந்த அசட்டுப் பெண்ணாவது சக்களத்தியைத் தேடி அழைக்குமோ? சரோஜா, விசு முதலானவர்கள் வந்து இறங்கியதும் “தாத்தாவிற்கு என்னவோ வந்து விட்டதடா, விசு!” என்று பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள் பாட்டி. நல்ல வேளையாய் மறுநாளே தாத்தா வின் நிலைமை சிறிது குணத்திற்கு வந்தது. 

இந்த அமர்க்களங்களை யெல்லாம் கண்டு, கடிதத் தையே மறந்திருந்த குப்பிப் பாட்டி, கிழவருக்குச் சிறிது தேவலை யென்றதும், குடுகுடு வென்று ஓடிப்போய் கடி தத்தை எடுத்து வந்து விசுவிடம் கொடுத்தாள். கடிதத் தைப் படித்த விசு,”சரோஜா! சரோஜா!” எனக் கூவி அவளிடம் கடிதத்தைக் கொடுத்தான். “அப்பாடா! நாளைய தினம் வருகிறாளாமே? தேடிப் போன மருந்து காலிலேயே சிக்கியது!” என்று கூவினாள் சரோஜா. 

ஸேவாஸதனத்திற்கும் இந்த விஷயம் பறந்தது. கடி தத்தில் சில வரிகளே காணப்பட்டன. ஒரு முக்கிய மான விஷயம் குறித்து எங்கள் எஜமானி கமலு தங்களைக் காண வேண்டுமாம்.- 1ம் தேதி வர சௌகரியப்படுமா? விமலா.'” விமலையைப் பற்றி ஏற்கெனவே விசு சரோஜா விடம் கூறி யிருந்தான்.”ஆனால், விமலை தன் எஜமானி யைக் கமலு என்பானேன்? கமலுதான் ஏதோ வேடிக் கைக்காகத் தன்னைக் கல்பகம் என்று கூறிக்கொண்டாள். அதே மாதிரிக் கல்பகமும் தன்னைக் கமலு என்று கூறிக் கொள்ளக் காரணம்? இவர்கள் இருவரும் முன்பே அறி முகமாகி, ஏதோ உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் போல் அல்லவா நடந்திருக்கிறார்கள்? இருக்கட்டும் எல்லா ரகசியமும் வெளிவரும் நாள் வந்துவிட்டது ” என்று ராமு விசு, சரோஜா மூவருமாய்ப் பேசிக்கொண்டனர். 

கண்ணன் வாயைத் திறக்கவில்லை. இந்தமாதிரி நெருக் கடியான சமயங்களில் மௌனத்திற்குச் சமானம் கிடை யாது என்பது அவனுடைய அபிப்பிராயம். குப்பிப் பாட்டியை “யார் வந்தார்கள்?” என்று ஒருவரும் கேட்கவில்லை. அவள் புதிய சமையற்காரி. குப்பிப் பாட் டிக்கும் இவர்கள் கல்பகத்தைத் தேடும் விவரம் தெரியாது. ராமுவை மாயவரத்தில் ஒரு நிமிஷம் பார்த்தது. அவளுக்கு அவனை ஞாபகம் வரவில்லை. இந்த வீட்டாருக்கும் கல்பகத் திற்கும் சம்பந்தம் இருக்கு மென்று அவள் நினைக்கவே யில்லை. “மறுநாள் பொழுது எப்போது விடியப்போகி றது?” என்று கார்த்திருந்தனர் எல்லாரும். கீழே கொஞ்சம் வேடிக்கை நடக்கும் பாட்டி! நீ மாடியை விட்டு வரக்கூடாது ” என்று முன்பாகவே அம்மணியம் மாளுக்கு எச்சரிக்கை செய்து வைத்தாள் சரோஜா. “ஏண்டியம்மா! நானும் அந்த வேடிக்கையைப் பார்க் கிறேனே!” எனக் கேட்டாள் பாட்டி. “பாட்டி! உன்னிடம் சொல்லாமல் நாங்கள் சில காரியங்கள் செய்தோம். அதன் பலன்கள் எத்தனையோ” என்று இழுத்தாள் சரோஜா. 

“என்னடி புதிர் போடுகிறாய்?” என்று அதட்டினாள் பாட்டி. 

“கெடுதலாக ஒன்றுமில்லை, நல்ல முடிவுதான்.நாங் கள் எல்லாருமாகச் சேர்ந்து என் மூத்தாளைத் தேடின தில்……” என்றதும், பாட்டி “இதென்ன, புதிய விஷயமா யிருக்கிறது?” என்று கேட்டாள். சரோஜா விவரமாய் எல்லாவற்றையும் சொன்னாள். “அழகு, அழகு! இத்தனை கஷ்டப்பட்டா உன் சக்களத்தியைத் தேடுகிறாய்? சமத்து வழிகிறது, போ!” என்று கடிந்தாள் அம்மணியம்மாள். தான் சக்களத்தியைத் தேடுவதை யறிந்தால் பாட்டி தடுத்து விடுவாள் என்று தெரிந்துதான் சரோஜாவும் இது வரையில் அதைக் கூறவில்லை. திடீரென இரு கமலு, இரு கல்பகம், என்று கேட்டுப் பாட்டியின் மூளை அதிர்ச்சி யடையாமல் இருக்கவே, இப்பொழுது விஷயங்களைக் கூறினாள் அவள். 

குறிப்பிட்ட சமயத்தில் ஓர் அறையில் தங்கம்மாளும், கமலுவும் அமர, இன்னொரு அறையில், ராமு, சரோஜா, கண்ணன் மூவரும் காத்திருந்தனர், கல்பகத்தின் வரவை எதிர் பார்த்து. கமலுவுக்கு வரப்போகிறவளின் எதிரில் வர இஷ்டமில்லை. அவள் தன்னைப்பற்றி என்ன சொல்லிக் கொள்கிறாள் என்று மறைவில் இருந்தே பார்க்கத் தீர் மானித்தாள் அவள். ‘டாங், டாங், டாங்’ என மணி நான்கு அடித்தது. வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. மறு நிமிஷம் விமலா முன்வர, பின்னால் அவள் எஜமானி வந்தாள்.சரோஜா “வாருங்கள்” என்று அவர்களை அழைத்தாள். அங்கு அமர்ந்திருந்த ஆண்பிள்ளைகள் ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை கல்பகம்.உங்கள் பெயர் சரோஜா அல்லவா எனக் கேட்டாள்.” 

“ஆமாம்! தங்கள் பெயர்?” 

“என் பெயர் தற்சமயம் கமலு. ஆனால்,என் தாய் தந்தையர் இட்ட பெயர் கல்பகம். 

“ஆ! கல்பகம்!” எனக் கத்தினான் ராமு. நிமிர்ந்து அவனை நோக்கினாள் கல்பகம். ஆனால் அவள் கண்களில் ஒரு வித உணர்ச்சியும் இல்லை. 

ஆம், உணர்ச்சி வற்றிப் போயிருந்தது அக் கண்களில்!- 

இச் சமயம் கமலு தன்னறைப் படுதா வழியே நோக்கினாள். என்ன ஆச்சரியம்! அவளுடைய பிரதிபிம் பம்தான இந்தக் கல்பகம்? பார்க்கலாம், என்ன சொல்லு கிறாளென்று. “அம்மா! உங்களை நான் தேடிவரக் காரணமில்லாம லில்லை. முதலாவது, உங்கள் வீட்டில் கமலு என் ம் ஒரு பெண் இருப்பதாக அறிந்தேன்…” 

ஒ! இவளைப் பற்றி நாம் கேள்விப் பட்டது போலவே நம்மைப் பற்றி இவளும் கேள்விப்பட் டிருக்கிறாள் போலும் என்று எண்ணிக் கொண்டாள் கமலு. 

”அவளை நான் பார்க்க வேண்டும். அவளுடைய முக ஜாடையும் என் முக ஜாடையை ஒத்திருந்ததால், நான் சொல்லச் சொல்லக் கேட்காமல், கமலுவின் வளர்ப்புத் தாய் வனஜாக்ஷி என்னை அழைத்துப் போய்விட்டாள். அந்தக் கமலுவின் இருப்பிடம் தற்செயலாய் என் சிநே கிதி ராஜலக்ஷ்மியின் மூலம் தெரிந்தது. ஆம், உங்கள் அண்ணா விசுவத்திற்குக் கொடுப்பதாகத் தீர்மானித்து நிறுத்தப்பட்ட அதே ராஜலக்ஷ்மி மூலம்தான். வண்டி யோசை கேட்கிறது. அவளும் இந்த ஊரில்தான் இருக் கிறாள். இதோ வருகிறாள் பாருங்கள்…” 

ராஜலக்ஷ்மி அச் சமயம் தன் அத்தையுடன் வந்து சேர்ந்தாள்.சரோஜா ஆச்சரியத்துடன் வரவேற்றாள் அவர்களை. கமலு! ஏன் உள்ளேயே இருக்கிறாய்? வாயேன் வெளியில்!” என்று சரோஜா கூப்பிடக் கமலு வெளியே வந்தாள். ஆம்! புடவையின் நிறபேதம் தவிர வேறு பேதம் இல்லை, கமலுவுக்கும் கல்பகத்துக்கும்! 

கமலுவைச் சிறிது நேரம் அன்பு ததும்பப் பார்த் தாள் கல்பகம். மறு நிமிஷம் எழுந்து ‘உன்னுடைய வளர்ப்புத் தாய் என்னை நீ என்று எண்ணி இந்தச் சில கடி தங்களைத் தான் இறப்பதற்குமுன் என்னிடம் அளித்தாள். இதோ அவைகள்” என்று அவளிடம் கொடுத்தாள். எல்லாரையும் பேச விட்டு விட்டுக் கடிதங்களைத் தனக் குள் படித்துக் கொண்ட கமலு, திடீரென்று ஐயோ! அக்கா!” என்று உரக்கக் கூவிக்கொண்டே வந்து கட் டிக் கொண்டாள் கல்பகத்தை. ஹாலில் இருந்த அனைவரும் ஒன்றும் தோன்றாது பார்த்து மலைத்தனர் இக் காட்சியை. 

“அக்காவா? இது என்ன? ரகசியத்திற்குமேல் ரக சியமா?” என்ற குரல்கள் சரோஜா முதலானவர்களிட மிருந்து எழும்பிற்று. கல்பகம் ஆனந்தக் கண்ணீர் வடித் தாள். பேசவே முடியவில்லை அவளுக்கு. கமலுவோ, “ஆம்! என் கூடப்பிறந்த சகோதரி கல்பகம்.எனது பெயரைத் தாங்கி, வனஜாக்ஷியின் சொத்தை அநியாயமாக அனுபவிக்கும் வேஷதாரி என்று நான் சந்தேகித்தவள் எனதருமை சகோதரியாக மாறினாள். இதற்கு அத்தாக்ஷி யான கடிதங்கள் இதோ! இனி நான் அனாதையில்லை. உங்களுக்கெல்லாம் இருப்பதுபோல் எனக்கும் ஓர் உடன் பிறப்பு இருக்கிறது!” என்று கூறி விசுவத்தை விஷம் மாக நோக்கினாள். 

அப்பொழுதே தனது பிறப்பை எண்ணியவன்போல் விசுவம் “கமலு! நீ எண்ணியது தப்பு! சரோஜாவை என் தங்கைக்கு மேலாகவே நான் கருதுகிறபோதிலும், உடன் பிறந்த சகோதரி எனக்குக் கிடையாது.” கமலுவிடம் இவ்வளவு நாள் கழித்து இன்றே நேரிடப் பேசினான் விசு. அப்படியானால், நீங்கள் பரமசிவய்யரின் பேரன் இல்லையா? பின்?” 

“சொல்லட்டுமா, சரோஜ் ?” 

”ஓ ! பேஷாகச் சொல் அண்ணா! எது எப்படியானா லும் எனக்கு நீ அண்ணாதான். இதைவிட உயர்ந்த முள்ள அண்ணா கூடப் பிறந்தவனானாலும் இருக்க முடியாது” என்று பெருமையுடன் கூறினாள் சரோஜா. 

விசு தொடங்கினான்: “எனக்கே சில வருஷங்களுக்கு முன்புதான் தெரியும். எனது தகப்பனார் ‘அக்கௌண் டண்ட் ஜெனரல்’ ஆத்மநாதய்யர் பம்பாயில் ப்ளேக் பரவியபோது இறந்தாராம். 

“எந்த ஆத்மநாதய்யர்? ஆர்.வி.ஆத்மநாதய்யரா? எனக் கத்தினாள் இதுவரையிலும் பேசாதிருந்த ராஜ லக்ஷ்மியின் அத்தை. ஆம்! ஆம்!” என்று உரைத் தான் விசு. 

ஏற்கெனவே கல்யாணம் நிச்சயமாகி முறிந்துபோன வீட்டிற்கு, முக்கியமான காரணங்காட்டி, கல்பகம் அழைத்திருந்ததால், எண் சாண் உடம்பையும் ஒரு சாண் ஆக்கிக்கொண்டு வந்திருந்தாள். ராஜலக்ஷ்மியின் அத்தை. ஆகவே, இதுவரையிலும் வாயைத் திறக்காமல், வெட்கத் தால் தலை குனிந்திருந்தவள், நேரே விசுவத்தையே கேள்வி கேட்கவும், எல்லாரும் அவளையே பார்த்தனர். ஈசுவரனின் திருவிளையாடல்தான் இது. ஆத்மநாதய்யரின் மைத்துனிதான் ராஜத்தின் தாயார். ஆத்மநாதய்யர் ப்ளேக்கில் இறந்த விஷயம் கேட்டு அவள் ரொம்பவும் மனக்கிலேசப் பட்டாள். ‘அவருக்கு ஒரு பெண்ணும், பிள்ளையும் இருந்தார்களே! என்னவாயிற்றோ?’ என்று அழுதாள். ஹும்! கடைசியில், ராஜத்திற்கு நீ ஒன்று விட்ட சகோதரனாடா,அப்பா,விசு! பெரிய பாவத்தி லிருந்து தப்பினோம். முறைப்படி ராஜம் உனக்குத் தங்கையாக வேண்டும்.” 

ராஜத்திற்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன்னையறியாது விசுவத்தின் மீது அவளுக்கு நம்பிக்கை விழுந்ததன் காரணத்தை இப்பொழுதே யறிந்தாள் அவள். அவளும் நமக்குக் கல்யாணத்திற்கு நிச்சயம் செய்தவனாயிற்றே இவன், என்ற எண்ணத்தால் இதுவரையிலும் அவனைப் பாராது உட்கார்ந்திருந்தவள், நிமிர்ந்து அவனை நோக்கி னாள். விசு அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். “உனக்கென்ன அண்ணா இனிமேல் குறை! புதிதாய் ஒரு தங்கை அகப்பட்டாள்” என்று பரிகாசம் செய்தாள் சரோஜா. 

“புதிய சக்களத்தியைக்கண்டே வயிற்றெரிச்சல்படாத நீ தங்கையைக் கண்டா ஆத்திரப் படுகிறாய்?” எனக் கேட்டான் விசு. எல்லாரும் கைத்தட்டிச் சிரித்தனர். 

”சரி! மர்மம் எல்லாம்தான் வெளியாகிவிட்டதே! வாயேன் கமலு, போவோம்! வனஜாக்ஷி உனக்கு வைத்த சொத்துக்களை ஒப்புக்கொள்! எனக்கு வேறு ஜோலி இருக்கிறது! ” என்று அழைத்தாள் கல்பகம். 

“ஆம், அக்கா! கமலுவுக்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்தபின் வந்துவிடுங்கள் இங்கே! நாமெல்லாரும் பெங்களூருக்குப் போவோம்” என்றழைத்தாள் சரோஜா. ராமுவோ, “கல்பகம்! என்மேல் ஆயிரம் தப்பு இருக்கலாம்! அவைகளை யெல்லாம் மறந்து……” என்று ஆரம்பித்தான். கல்பகம் பேசாமல் தலை குனிந்தாள்; பதில் ஒன்றும் பகரவில்லை. ஒவ்வொருவராய் வாங்கிப் வார்த்தனர் வனஜாக்ஷியின் கடிதங்களை. இதுதான் அதில் கண்ட முக்கியமான விஷயம்: 

“கமலு! உனது பிறப்பு வளர்ப்பைப்பற்றி அறிய நீ ஆசைப்படுவது சகஜம். உன்னை என்னிடம் கொண்டு வந்து விற்றவன் மூலமே அதை நான் அறிந்தேன். அவன் அதை லேசில் கூற இசையவில்லை. நல்ல தொகையளித்த பின்பு, நான் உன்னிடம் இதைக் கூறுவதில்லை என்ற வாக் குறுதி பெற்றே இதை எனக்குக் கூறினான். ஆயினும் நான் இறப்பதற்கு முன்பு இதை உனக்குச் சொல்லி விடுவதென்றே நான் தீர்மானித்தேன். உயர் குடியில் பிறந்த உனக்குத் தகப்பனார் மாயவரம் கிருஷ்ணய்யர்; தாயார் அலமேலு அம்மாள். உன்னுடன் பிறந்த இரட் டைச் சகோதரி கல்பகம் என்பவள் இருக்கிறாளாம். இந்தமட்டிலுமே நான் அறிந்தது. உனது மூன்றாவது வயதில் உன்னைக் கொண்டுவந்து விற்றவன், மாயவரம் ரங்கய்யன் என்பவன்.” 

“அந்தப் பாவி ரங்கய்யனா?” என்று, கடிதத்தில் இந்த விஷயத்தைப் படிக்கையில் ராஜலக்ஷ்மி சீறினாள். பிறகு, எல்லாருக்கும் கல்பகம் சிறு வயதிலேயே தன்னி டம் அன்பு காட்டியதை ராஜம் கூறினாள். “என் சகோ தரி கமலுவை நீங்கள் காப்பாற்றினது போல், உங்கள் சகோதரி ராஜம் என்னைக் காப்பாற்றினாள், பலமுறை அந்தக் கொடிய கூட்டத்தாரிடமிருந்து ” என்று விசுவை நோக்கிக் கூறினாள் கல்ஙகம். அவள் குரலில் என்று மில்லாத சாந்தியும் வைராக்கியமும் தொனித்தது. இருபது வயது மங்கைதான் அவள் என்றாலும், இந்தச் சில கால அனுபவத்தில் ஓர் முதியவளைப் போன்ற அறிவு பெற்றுவிட்டாள். “போய் வருகிறேன் மற்றொருநாள் சந்திப்போம்!” என்று கல்பகம் கிளம்புகையில், அது வரையில் பக்கத்து அறையில் விஷயங்களை கேட்டுக்கொண் டிருந்த குப்பிப் பாட்டி ஒடோடியும் வந்து அவள் தடுப்ப தற்குமுன் காலில் விழுந்துவிட்டாள். “பாட்டி! இதென்ன பைத்தியக்காரத்தனம்! தாங்கள் பெரியவர்கள் இல்லையா ?” என்று பாட்டியைப் பிடித்துத் தூக்கினாள் கல்பகம். பாட்டியின் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகிற்று.

“ஐயோ! பாட்டி இங்கும் வந்துவிட்டாளா?” என் றாள் ராஜம். பாட்டிமீது இருந்த வெறுப்பு அவளுக்குக் குறையவில்லை. ”ராஜம்! குற்றம் செய்வது சகஜம்! அதை அவர் உணர்ந்ததே போதும்!” என்றாள் கல்பகம். “நல்ல சகஜம்! இவள் உணரவில்லை யென்று யார் அழுதார்கள்? அதன் பலனை அனுபவித்தவர்களுக்கல்லவா கஷ்டம்?” 

“இருக்கட்டும்! இதற்குக் காரணம் அவள் மட்டு மல்ல, நமது வினையும் ஒரு காரணம்தான், ராஜம்!” 

ராஜத்திற்குக் கல்பகத்தின் மனநிலை புரியவில்லை. பாட்டியை முறைத்துப் பார்த்துவிட்டு வண்டியில் ஏறினாள் அவள். “அகத்திற்கு வராமல் இருக்காதே அண்ணா!” என் றாள் விசுவத்திடம். “கட்டாயம்! உனக்கு ஒரு மாப்பிள்ளை யையும் தேடிக்கொண்டு வருகிறேன்!” என்றான் அவன். 

இத்தனை அமர்க்களத்திலும் கமலு தங்கம்மாளை மறக்க வில்லை. அவளை ஸேவாஸதனத்தில் விட்டுவிட்டுக் கல்பகத் துடன் அவள் இறங்கியிருந்த விடுதிக்குப் போனாள் கமலு. இரவு முழுவதும் ஓயாமல் பேசினர் சோதரிகளிருவரும். 

”அக்கா! இனிமேல் என்ன ‘பிளான்’ சொல்லு!” என்று அவசரப்பட்டாள் கமலு. 

“முன்பே அதைப் பற்றியோசித் தாயிற்று கமலு!”

“ஹும்! அத்திம்பேருடனும், சரோஜாவுடனும் போகப்போகிறாய்! அதுதானே?”…

உன் அக்காவை நீ அறிந்தது அவ்வளவுதான்; என் னைக் கேட்டாயே, உன் சொத்துக்களை நீ என்ன செய்யப் போகிறாய் ?” எனப் பதில் கேள்வி போட்டாள் கல்பகம் 

“எனக்கென்ன தெரியும்? உன் உத்திரவு.” 

அழகுதான்! “நீதான் கமலு என்றுதானே அதை வனஜாக்ஷி உனக்களித்தாள்? வாய் பிராணன் போகும் போதுகூட நான் வளர்த்தவளுக்கு அருகில் இல்லாது போனேனே? அந்தச் சொத்தை எடுத்தால் பாவம் எனக்கு!” 

” கமலு! எனக்கு எதற்கடி சொத்து? உனக்குத் தான் கல்யாணமாக வேண்டும். ஆமாம் உன்னை ஒரு நல்ல இடத்தில் பிடித்துக்கொடுக்க வேண்டுமே?” 

”போரும்! நான் என்ன மாடா நீ பிடித்துக் கொடுப்பதற்கு?” 

“எனக்குப் பதினைந்து வயதில் கல்யாணம் நடந்தது. தெரியுமா உனக்கு?” 

“அப்படிச் செய்துகொண்ட கல்யாணத்தின் பலன் எப்படியாயிற்று, பார்த்தாயா? இவ்வளவு பேச்சு இப்போது பேசுகிறாயே, அக்கா! அப்போது பேசத் தெரியாமல் போனதினால்தானே…”

”சீ ! பேசாமலிரு! அப்படி யெல்லாம் என் வாழ்க்கை திரும்பியதும் ஒரு நன்மைக்கே!” 

“நன்மைக்கா?” என்று ஆச்சரியம் ததும்பக் கேட்டாள் கமலு. ஆனால், கல்பகம் பதில் கூறவில்லை. 

சிறிது நேரத்தில் கமலு அயர்ந்து தூங்கிவிட்டாள். கல்பகத்திற்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஏதேதோ சிந்தனைகள் மனத்தைக் கலக்கின. அவள் மனத்தைத் திடம் செய்துகொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர இரவு வெகுநேரமாயிற்று 

அத்தியாயம்-16

மிகுந்த பிரயாசையின் மீதே ஸேவாஸ்தனத்தை நடத்தி வந்தாள் தங்கம்மாள். அனாதைப் பெண்களின் வரவு அதிகரித்தது. ஆனால், அதற்கேற்ற வருவாய் வரவில்லை. கண்ணன் போன்ற தொண்டர்கள் பலர் நிதி சேகரித்துக் கொடுத்தும் ஸேவாஸதனத்தின் செலவை ஒப்பேற்ற முடியவில்லை. பாவம், தங்கம்மாள் தன் கையிருப்பையும் அதில் போட்டுவிட்டாள். இனி ஒன்று வெளியில் இருந்து வருபவர்களை ஏற்க மறுக்கவேண்டும், அல்லது பெரும் நிதி திரட்டவேண்டும்! எங்குபோவது? தங்கம்மாளின் உடல் நிலையும் வரவர நன்றாக இல்லை. 

இதே ஏக்கத்தில் ஒருநாள் தங்கம்மாள் தனியே உட்கார்ந்து மேஜைமீது கை ஊன்றி நெற்றியை அதன் மீது அழுத்திப் பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள். “அம்மா!” என்று அழைத்தவண்ணம் கமலு முன்னால் வரப் பின்னால் கல்பகமும் நுழைந்தாள். இரு பெண்மணிகளையும் அன் புடன் அழைத்தாள் தலைவி. 

“அம்மா ! ஒரு விண்ணப்பம்!” என்றாள் கமலு. 

”ஊம்! சொல்லேன்!” 66 இப்பொழுது நமது ஸேவா ஸதனத்திற்குச் சிறிது பணம் தேவையாக இருப்பதை நானறிவேன். என் சகோதரி, வனஜாக்ஷியின் பணத்தை நல்ல விதத்தில் செலவழிக்க விரும்புகிறாள். ஆகவே நீங்கள் உத்தரவு அளிக்கும் பக்ஷத்தில் தங்களுக்கு உதவியாக நின்று, இந்த ஸேவாஸதனத்திற்குகை கொடுத்து உதவலா மென்று, கல்பகம் திட்டம் போட்டிருக்கிறாள்….” 

தங்கம்மாளின் முகம் மலர்ந்தது. எதைப்பற்றி அவள் சிந்தித்து மனதை வாட்டிக்கொண் டிருந்தாளோ, அதே விஷயமாக வந்திருக்கிறாளே இப் பெண்! பெண்களுக்கு ஒத்தாசை செய்யப் பெண்களே வருவது மிக மிகச் சிலாக்கியமே! இதுவரையில் நன்கொடை அளித்தோர் யாவரும் ஆண்கள்!” ஒரு கை என்ன? நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். கல்பகமே நடத் தட்டும் இந்த ஸ்தாபனத்தை !” என்றாள். 

ஆனால் ! இந்தச் சென்னையில் அதை நடத்த அக்கா விரும்பவில்லை. ஸேவாஸதனம் வேண்டுமானால், இங்கே ஒரு கிளை ஸ்தாபனமாக இருக்கட்டும். வனஜாக்ஷி வசித்த திருச்சிக்குப் பக்கத்திலேயே கிராமாந்திரமான இடத்தில், ஒரு பெரிய கட்டடம் கட்டி, சித்திரம், கைத் தொழில், சிற்பம், தையல், பாட்டு ஆகிய சகலவிதமான கலைகளும்……” 

“பேஷ்! அற்புதமான எண்ணம்!” என்று சொல் மக்களின் லிக் கை தட்டினாள் தங்கம்மாள். பெண் உயர்வைக் கேட்டாலே பூரித்துவிடுவாள் அவள்!” 

“ஆனால் ஒரு சந்தேகம்!” என்று சிறிது சிந்தனைக் குப்பின் கூறினாள் தலைவி. ” என்ன என்ன?” என்று கேட்டனர் சகோதரிகள் இருவரும். 

“ஒன்றுமில்லை! கல்பகம் அவள் கணவனுடன் போய்விட்டால்?” 

“அதைப்பற்றி நான் தீர்மானம் செய்தாகிவிட்டது. கமலு தன் சொத்து விஷயத்தில் இவ்வளவு தாராளமாய் இருப்பாளென்று நான் நினைக்கவேயில்லை.  அவள் அதைப் பூராவும் தர்ம கைங்கரியத்திற் கென்று என்னிடம் அளித்துவிட்டாள். நானும் கமலுவும், அனாதையாகப் பல கஷ்டங்களுக்கு உட்பட்டோம். அனாதையான அவளை வனஜாக்ஷி வளர்த்தாள். அந்தப் பணத்தை அனாதை களுக்காகச் செலவழிப்பதே சரியான மார்க்கமாகும். என் விஷயம் கேட்டீர்கள். இனி, கணவருடன் போய் நான் குடித்தனம் செய்யப் போவதில்லை. அதைப்பற்றி முடிவு செய்துவிட்டேன். என் தங்கைக்கு இடமளித்துக் காத்த சரோஜாவைச் சக்களத்தியாக எண்ணக்கூட என்னால் முடியாது…”

“சக்களத்தியாக ஏன் எண்ணவேண்டும்? இன் னொரு தங்கையாக நினைக்கக்கூடாதா?” என்று தேட்ட வண்ணம் அச் சமயம் உள்ளே நுழைந்தாள் சரோஜா, கூட விசுவமும் வந்திருந்தான். “வா வா விசு! வா, சரோஜா!” என்று அழைத்தாள் தலைவி. 

விசுவத்தைக் கண்டதும் கமலுவிற்கு வெட்கம் வந்து ஆண்டுகொண்டது. கல்பகத்திற்குமட்டும் விசுவத்தின் மீது சிறிது கோபம். எப்படி அவன் தன் தங்கையின் மீது காதல் கொண்டதாக நடித்து, விமலாவிற்கு மோதிரங் கொடுக்கலாம் என்பதே அது. ராஜத்தின் கல்யாணத்துக் காவது ‘வற்புறுத்தல்’ என்று சாக்குச் சொல்லலாம். மேலும், தற்சமயம் அவள் விசுவத்தின் தங்கையாகி விட்டாள்! பாவம்,கமலு அவன் பால் கொண்ட அன்பு அவள் அவனைப் பார்க்கும் பார்வையிலேயே தெரிகிறதே! துரோகி! விசுவத்தைப் பார்த்து கமலு புன்னகை புரிந் தாள். கல்பகமோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தங்கையிடம் தனியாக விமலாவைப் பற்றிக் கூறிவிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவள் மனத்தில். 

கல்பகத்தின் முகத்தில் கோபக்குறியைக் கண்ட விசுவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன தப்புச் செய் தோம் நாம், என்ற சந்தேகம் வலுத்தது அவன் உள்ளத்தில். 


விமலாவிற்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. விசுவைக் காண எவ்வளவு ஆவலுடன் வந்தாள் அவள். அவனைப்பற்றி எத்தனை விஷயங்கள் தெரிகிறது இப்போது! கல்பகத்தின் பக்கத்தில் தான் நிற்கையில், அவன் கமலுவையே ஊடுருவிப் பார்க்கிறானே? அவ்வளவு சொத்தும் அழகும் நிறைந்த அவளை விட்டு விட்டுக் கேவலம் ஒரு பணிப் பெண்ணை மணப்பானா அவன்? ஹும்! இப்படிப் பட்டவன் தனக்கு ஏன் மோதிர மளிக்க வேண்டும்? ஏன் தன் பேதை உள்ளத்தில் அன்புப் பெருக்கை உண் டாக்க வேண்டும்?”இருக்கட்டும்; இவனுக்குப் பணம் இருந்தால் எனக்கென்ன? கமலுவை அவன் மணக்கப் போவது மட்டும் நிச்சயமாகட்டும், மோதிர விஷயத்தை அம்பலப்படுத்தி விடுகிறேன்!” என்றெல்லாம் தனியே சிந்தித்துக்கொண் டிருந்தாள் அவள். 

வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கல்பகமும், கமலுவும் ‘பீச்சு’க்குப் போயிருந்தார்கள். “அதற்குள் வரமாட்டார்களே!” என்ற எண்ணத்தோடு போய்க் கதவைத் திறந்தாள். கும்பிடப்போன தெய்வம் மாதிரி விசுவம் நிலைப்படியில் நின்றான். 

“ஒருத்தரும் இல்லையா?” எனக் கேட்டான் அவன். ஒரு நிமிஷம் யோசித்த பிறகு, ” இருக்கிறார்கள், வாருங் கள்!” என்று உள்ளே அழைத்தாள். விசு மாடி ஏறிப் போனான். மெள்ள, மெள்ள, வெற்றிக் குறியுடன் பின் லேயே சென்றாள் விமலா. 

“காப்பி சாப்பிடுகிறீர்களா?”

“வேண்டாம்! அவர்கள் இல்லை?” 

“அடேயப்பா! என்ன துடிப்பு அவர்களைப் பார்க்க!”

“விமலா! என்ன இது? இந்த வீட்டு எஜமானிகள் எங்கே என்று கேட்கிறேன்?” 

ஏற்கெனவே விமலாவின் மனத்தில் குமுறிக்கொண் டிருந்த துக்கமும், ரோஷமும் பீறிக்கொண்டு கிளம்பிற்று. “கேட்பது புரியாமல் இல்லை. இந்த விமலாவின் மீது மோகப்பட்டு மோதிரம் அளித்தீர்களே, அதன் கதி என்னவென்று நான் கேட்கிறேன்!” என்றாள். 

பாவம்! விசு அவளுக்கு மோதிரம் கொடுத்ததையே மறந்து விட்டான்! “மோதிரமா?” என்றான் ஆச்சரியத் துடன். 

“ஆமாம்! மோதிரமேதான்! இதோ பாருங்கள்! உங்கள் பெயர்கூடச் செதுக்கி யிருக்கிறது இதில்! ” 

“விமலா!உனக்கிது அழகல்ல! இப்போதுதான் ஞாபகம் வருகிறது! நீ எனக்குப் புரிந்த பணிவிடையின் பரிசு அது. இனி அதற்குத் தரவேண்டிய பணத்தைத் தந்து விடுகிறேன். தயவு செய்து மோதிரத்தைக் கொடுத்து விடு.” 

விமலா விகாரமான சிரிப்பு ஒன்று சிரித்தாள். “தேவலை! வெகு நன்றாய் இருக்கிறது! பணம் ! பணத்தில் புரள்பவர்களுக்கு அது பிரமாதமாய்த் தோன்றலாம். எனக்கு அப்படி அல்ல. ஓர் ஆடவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணிற்கு மோதிரம் ஏன் அளிக்க வேண்டும்! இதை எல்லாரும் அறிவார்கள்…ஒரு வார்த்தை! என்னையே மணம் புரிவதாகக் கூறுங்கள்! போதும்!” என்றாள். 

“என்ன தைரியம்! உனக்கு வெட்கமில்லையா ?” 

“வெட்கம் யாருக்கு இல்லை யென்பதை நான் நிரூபிப் பேன். உங்கள் காதலி கமலுவிடம் இதைக் காட்டி, ‘இம் மோதிரம் விசுவால் எனக்கு அளிக்கப்பட்டது!’ என்று ஒரு வார்த்தை கூறினால் போதும்.” 

”சே ! நீ ஒரு பெண்ணா! கற்புக் கரசி கல்பகத்துடன் பழகியும் உனக்கு இந்தப் புத்தி போகவில்லையே? உன்னை மணப்பதைக் காட்டிலும், உயிரையே விட்டு விடலாம்!” 

இதைக் கேட்டதும் பாம்புபோல் சீறினாள் விமலா. “என்னை மணக்காதவர் வேறு எவரையும் மணக்கா திருக்கச் செய்யும் முறை எனக்குத் தெரியும்!” என்று கத்தினாள். மாடிப் படியில் நின்று ஒரு வார்த்தை பாக்கியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த கல்பகமும், கமலுவும் “என்ன பெரிய நாடகம் நடக்கிறது இங்கே!” எனக் கூறிக்கொண்டே அவ் வறையில் நுழைந்தார்கள். விசு “எல்லாம் கல்பகம் ஏதோ கூறத் தொடங்கினான். கேட்டுக் கொண்டேதான் இருந்தேன். நல்ல வேளை பர்ஸை மறந்துவிட்டபடியால் திரும்பினேன். போகிறது, விமலா! ஒரு விஷயம் சொல்கிறேன். உன்மீது ஆசை யில்லாதவரைக் கட்டாய மணம் புரிவதில் உனக் கென்ன லாபம்? நான் உன் ஹிதயத்தை நாடுபவள். என்னிடம் சொல் இவர் உன்னிடம் ஆசைப்பட்டு மோதிரங் கொடுத் தாரா? அல்லது அவர் சொல்வதுபோல், உன் பணிக்குப் பரிசா?” என்று கேட்டாள். ஆனால் விமலா குனிந்த, தலை நிமிரவில்லை. 

”விமலா! என் னறைக்கு வா! என்னிடம் கூறு நீ கல்யாண மாகாதவள் அல்ல, கணவனால் புறக்கணிக்கப் பட்டவள். உன் கணவன் இருக்கு மிடத்தை வனஜாக்ஷி அறிந்திருந்ததும் எனக்குத் தெரியும்! அவள் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு பேசிய வார்த்தைகள் மூலம் இவ் விஷ யங்களை நான் அறிந்தேன்” என்றாள் கல்பகம். 

“அம்மா! போதும், என் மானத்தை வாங்காதீர்கள்!” என்று அழுதாள் விமலு. ‘சிறிது நேரத்துக்கு முன் துள்ளிக் குதித்த அதே விமலாவா இவள்?” என்று அதிசயித்தார்கள் கமலுவும், விசுவும். விமலா தானே மரியாதையாக மோதிரத்தைக் கழற்றி விசுவிடம் அளித் தாள். விசு கல்பகத்தை நன்றியறிதலுடன் நோக்கினான். 

விசுவிற்குக் கமலுவின்மேல் உள்ள அன்பை நன்றாக அறிந்திருந்தவள் சரோஜாதான் எனலாம். அவன் பொருட்டுப் பாட்டியிடம் தர்க்கம் செய்தாள் அவள். “நீ என்னதான் சொல்லு! தேவடியாள் வீட்டில் வளர்ந்த பெண்தானே கமலு? நமக்கு அது தாழ்வு இல்லையா? விசு என் பேரனென்றுதான் உலகம் பூராவாய் நினைத்திருக். கிறது. இப்போதுதானே ராஜலக்ஷ்மி வீட்டாரே அறிந் தார்கள்? இல்லை, பிறத்தியார் பிள்ளை என்றறிந்தவர்கள் கூட என்ன சொல்லுவார்கள்? ‘தன் பேரனானால், அம்மணி இப்படிப் பெண் பார்ப்பாளா, பிறத்தியார் வீட்டுப் பையன் ஆனதினால்தானே ஏனோதானோ’ என்று பண்ணிவிட்டாள்?’ என்றுதான் ஏசுவார்கள்.” 

“பாட்டி! பிறத்தியார், பிறத்தியார் என்று ஏன் அடித்துக்கொள்கிறாய்? நாம் வாழ்வதே பிறத்தியாரின் பேச்சுக்காகத்தானா? உன் மட்டில் கமலுவின் குணம் உனக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா? மலர்ந்த முகம்; அடங்கிய சுபாவம், பாட்டு, படிப்பு; நல்ல குலம்; வேறென்ன வேண்டும்? விசுவுக்கோ அவள் மீது பிரா ணன். இந்தக் காலத்து ரீதியையும் பார்க்கவேண்டும். பிறத்தியாரைப் பற்றி இவ்வளவு பயப்படுகிறாயே? விசு- என்ன எண்ணுவான் என்று நீ நினைக்கவேயில்லையே பாட்டி! ஒருதரம்,உனக்குச் செய்யவேண்டிய கடமைக் காகத் தனக்குப் பிடிக்காத பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள ஒத்துக் கொண்டானே? என்னவாயிற்று? சுவாமியே பார்த்து நிறுத்தினது போல் நின்றது அந்தக் கல்யாணம். ஒருவருக்காக யோசனை செய்யாதே? உனக்கு இந்த வயசுக்குமேல் யார் என்ன சொன்னால் என்ன? விசுவின் சந்தோஷம்தானே உனக்குப் பெரிது?” 

பாட்டியின் மனம் இளகிக்கொண்டே வந்தது. சரோஜாவிற்கு இவ்வளவு அழகாய்ப் பேசத் தெரியு மென்று அவள் நினைக்கவே யில்லை! ” ஆகட்டுமடி கண்ணே ! நீ சொல்லும்போது நான் மறுப்பேனா” என்று கூறி, பேத்தியின் நெற்றிமீது கைவைத்துத் திருஷ்டி கழித்தாள் பாட்டி. 

நல்ல முகூர்த்தத்தில், சிரஞ்சீவி விசுவநாதனுக்கும் செளபாக்கியவதி கமலுவுக்கும் விவாகம் நடந்தேறியது. கல்பகம் விசுவை நோக்கி “இப்பொழுது கூறுங்கள் கமலு தன் சொத்தை தர்மத்திற்கு அர்ப்பணஞ் செய்ததில் ளுக்கு இஷ்டம் இருக்கிறதா, இல்லையா என்று ” எனக் கேட்டாள் விசுவம் ” ஓஹோ! என் மனத்தை யறியப் பார்க்கிறீர்களா! கமலு ஊர் பேர் தெரியாத அனாதை என்று கேட்டபொழுதே அவளை விரும்பினவன்தானே நான். இப்பொழுது மட்டும் என்ன? என்றான். ‘சரி கமலு தன் சொத்தை யெல்லாம் எனக்குக் கொடுத்து விட்டாள். இனி அது என்னுடையது. ஆகவே, அதில் கால்பாகத்தை நான் ஸ்திரீ தனமாக அவளுக்கு அளிக்கிறேன்” என்று கூறி நகைத்தாள் கல்பகம். 

ஐந்தாறு நாட்கள் வெகு வேடிக்கையாகக் கழிந்தன. கடைசியில் சரோஜா ஊர் கிளம்பும் நாளும் வந்தது. காலில் விழ மாட்டாக் குறையாய் கல்பகத்தைத் தன் னுடன் வரும்படி சரோஜா வேண்டினாள். ”இது விஷயத் தில் தயவு செய்து என் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள் என்று ஒரேயடியாய் மறுத்து விட்டாள் அவள். 

அவள் அப்படி மறுக்கும் காரணம் என்ன வென்று கமலுவைக் கேட்டாள் சரோஜா. ‘கல்பகத்திற்கு ஒரு விதத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகவும், அனா தைப் பெண்களுக்குத் தன்னாலான சேவை செய்து, தன் வாழ்க்கையை கழிப்பதற்கே அவள் விரும்புவதாகவும் கூறினாள் கமலு. “சரி, கொஞ்சநாள் விட்டுப் பிடிக்கலாம்’ என்ற எண்ணத்துடன், பெங்களூருக்குப் பிரிய மன மில்லாது பிரிந்து சென்றாள் சரோஜா. 


இவை யெல்லாம் நடந்து ஒரு வருஷமாயிற்று. தற் சமயம், திருச்சினாப்பள்ளிக் கருகே ஸ்ரீமதி கல்பகவல்லியால் நடத்தப்படும் ‘வனிதாலய’த்தை அறியாதார் கிடையா தெனலாம். ஆலயத்தின் முன் ஹாலில் வனஜாக்ஷியின் பெரிய படம். அதற்குப் பக்கத்தில் அலமேலு அம்மாள். 

கண்ணன் இன்றும் தொண்டனே! ஆனால் கல்பகத் தின் முயற்சியால் கால் கட்டு ஒன்றும் ஏற்பட்டு விட்டது அவனுக்கு. ஆம் ! ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி தேவிதான் அவள். விமலாவின் கணவன் எங்கெங்கோ போய், சீரழிந்து விட்டு வந்து சேர்ந்தான். கல்பகம் அளித்த பண உதவி யைக் கொண்டு கணவனுடன் குடித்தனம் செய்கிறாள் அவள். 

ஊரெல்லாம் புகழ வனிதாலயத்தை நடத்தினாள் கல்ப கம். ஆனால், பிறர் புகழுவதினால், அவளுக்கு கொஞ்ச மேனும் சந்தோஷம் ஏற்பட்டதா? இல்லை யென்றுதான் கூற வேண்டும். உள்ளூர ஓர் ஏக்கம், ஒரு குறை இருக் கத்தான் செய்தது. கமலு, சரோஜா எல்லோரும் அடிக் கடி வருகிறார்கள். நாளுக்கு நாள் விருத்தியடைந்து வரும் வனிதாலயத்தைக் கண்டு களிக்கிறார்கள். ஸ்தாபனத்தின் பாதி வேலை ராஜலக்ஷ்மி செய்கிறாள். தொண்டனை மணந்தவள் அல்லவா அவள்? 

ஓர் நாள் வனிதாலயத்தின் தோட்டத்தில், ராஜலக்ஷ்மி, கமலு, சரோஜா, கல்பகம் எல்லாருமாகக் கூடிப் பேசி யிருந்தனர்.”அக்கா! சரோஜாவிற்கு ஒரு சந்தேகம்!” என்றாள் கமலு. 

“என்ன அம்மா அது!” என வினவினாள் கல்பகம். 

“உங்கள் தங்கை கமலுவை மூன்றாவது வயதில், மாயவரத்தில் துலா ஸ்தானத்தன்று, கூட்டத்தில் திருடி, விற்ற அந்த ரங்கய்யனை நீங்கள் அறிவீர்கள் என்று ராஜம் சொல்கிறாள். அப்படி யிருக்க அப் பாபியைத் தேடி நீங்கள் ஏன் தண்டிக்கலாகாது? அவன்தான் இவரிடமும் உங்களைப் பற்றி அவதூறாகச் சொன்னானாம் என்று உணர்ச்சி ததும்பக் கேட்டாள் சரோஜா. 

கல்பகம் அதற்குப் பதில் சொல்வதற்குள் “ஐயோ! பைத்தியம்! பைத்தியம்!” என்று கூவிக் கொண்டே சில சிறுமிகள் ஓடி வந்தனர். “என்னடி அது?” என்று கேட்ட வண்ணம் அந்தப் பக்கம் பார்த்தனர் பெண்மணி கள் நால்வரும். ஐயோ பாவம்! ஆள் உரு தெரியாமல் போய் விட்டானே!” என்றாள் அந்த கிழிசல் உடை யணிந்த மனிதனைப் பார்த்துக் கல்பகம். 

“அடாடா! அது ரங்கய்யன் அல்லவா? நூறு வயசு தான் அவனுக்கு. பேர் சொல்லும் போதே வந்து விடு கிறானே!’ என்று சிரித்தாள் ராஜம். “என் கிழிசல் துணியைப் பரர்த்து பைத்தியம் என்கிறார்கள். ஐயோ! நான் பைத்தியம் இல்லை. பஞ்சம், பட்டினி இவைகளால் உருமாறிவிட்டேன்!” என்று கத்திக் கொண்டே வந்து விழுந்தான் அவன். 

ஹும்! வினைக்குப் பலன்! யாரையாவது கூப்பிட்டு இந்த ஆளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகச் சொல்லுங் கள்!” என்றாள் கமலு. வனிதாலயத்தில் புருஷர்களுக்கு இடமேது? இருந்தால், அவன் துஷ்டனாயினும் பராமரித் திருப்பாள் கல்பகம். ஆஸ்பத்திரியில் அவனைப் போய் பார்த்தார்கள். கல்பகத்தை அங்கு அடையாளம் கண்டு கொண்டான் அவன். அம்மா! கல்பகம்! என் கெடு மதியே என்னை இக்கதி வரையிலும் கொண்டு வந்து தள்ளி விட்டது. ஒரு விஷயம்… உனக்கு ஒரு தங்கை…”என்றான். 

“எல்லாம் அறிவேன்! இதோ அவள்!” 

“அம்மாடி” என்றான் ரங்கய்யன். 

பெண்மணிகள் நால்வரும் மாலை பூஜைக்காக ஆலயத் தில் நுழைந்தனர். வனிதாலயத்தில் ‘டிங்! டிங்! டிங்!’ என ஆறு மணி அடித்தது. 

வனிதாலயம் வாழ்க பெண் குலமே! வனிதாலயம் வாழியர், மகோன்னதமே! என்று, பாட்டின் கனத்த ஓசை காற்றினூடே மிதந்து வந்தது.

(முற்றும்)

– வனிதாலயம் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 1946, பவானி பிரசுரம், ராயவரம், புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *