(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு அவன் கூடத்தில் நுழைந்தபோது அங்கே ஏக இரைச்சலும், சிரிப்புமாயிருந்தது. வீட்டில் இரண்டே பேர், ராதா, அவன் மகாவி; பாலு. அவன் தம்பி, கிரிக்கெட் வர்னனையை டிரான்ஸிஸ்டர் உச்ச ஸ்தாபியில் முழங்கிக் கொண்டிருக்க, அதுவும் போதாதென்று அதற்குள்ளேயே தலையை நுழைத்துக் கொள்கிற மாதிரி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த விதம், அவனுக்கு இலேசான எரிச்சல் கலத்த கோபத்தை கட்டியது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சோஃபாவில் உட்கார்ந்து ஷூவைக் கழற்றுகிறபோது, அதுவரை இருந்த கலகப்பு ‘சட்’ டென்று வடிந்து போய், ஒரு உம்மணா மூஞ்சித்தனம் தொற்றிக் கொண்ட மாதிரி அசாதாரணமாக ஒரு மௌனம் அங்கே நிலவஆரம்பித்தது.
“ஸ்கோர் என்னவாம் பாலு”
சூழ்நிலைக்கு உயிரூட்டுகிற முயற்சியாய் நினைத்துக் கொண்டு தான் கேட்ட கேள்வியின் செயற்கைத்தனம் அவனுக்கே உள்ளுறக் கொஞ்சம் உறைத்தது. பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான கேள்வியாய் அதை அவர்கள் பொருட்படுத்தாமல் இருந்ததை அவனும் கண்டு கொள்ளாமல் மேலே பேச ஆரம்பித்தான்.
“பாலு! கொஞ்சம் லாண்டரி வரைக்கும் போயிட்டு வந்துடறீயா? எல்லா டிரஸ்ஸும் அழுக்காய்ப் போச்சு. நாளைக்கு எதைப் போட்டுக்கிறதுன்னே தெரியலை!”
சட்டையை மாட்டிக் கொண்டு பாலு கிளம்பிப் போனதும் ராதாவும் டிரான்ஸிஸ்டரை ஆப் செய்துவிட்டு அவனுக்குக் காப்பி கலந்து எடுத்து வர உள்ளே போனாள்.
‘அதுபாட்டுக்கு இருத்துட்டுப் போறதே! ஏன் அணைக்கிறே?” அவன் பேசியது அவனுக்கே கேட்காததோடு, திரும்பப் போய் அதை ‘ஆன்’ செய்வதில் எந்தவித ஆர்வமும் காட்டாமல் பாத்ரூம் பக்கம் எழுந்து போனான். அவன் முகம் கழுவி, லுங்கிக்கு மாறி அவன் வந்தபோது டப்பாவில் சூடான காப்பி காத்திருந்தது. சுமார் முக்கால் மணி நேரம் கழித்து உள் வேலைகளை முடித்துவிட்டுப் புடயைத் தலைப்பில் ஈரம் கையைத் துடைத்தபடி அவள் ஹாலுக்குள் வந்து அவனுக்கு எதிரே உள்ள நாற்காலியில் அசதியுடன் உட்கார்த்தாள். அவன், டீப்பாயின் மீது காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு சிகரெட் பிடித்தபடி அதிலிருந்து வட்ட வட்டமாய் வெளியேறும் புகை வளையங்கள் ஏதும் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான். அவளது வருகை ஏற்படுத்திய சலனத்தால் ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் அந்த வளையங்களை வெறிக்க ஆரம்பித்தான். அவன் கை படாமல் அங்கே கிடந்த வாரப் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கிப் போனாள் அவள்.
“சாயங்காலத்திலிருந்து தொண்டை கம்மீப் போன மாதிரி இருக்கு ராதா! ஒரு டம்ளர் சூடா வெந்நீர் கொண்டு வாயோன்”.
வெந்நீர் போட்டுக் கொண்டு அவள் வருவதற்குள், பாலு திரும்பி யிருந்தான். அண்ணாவின் பீரோவைத் திறந்து சலவைத் துணிகள் வைத்துவிட்டுக் கையில் ஒரு பை நிறையக் காய்கறி கனக்க அவனிடம் வந்தான்.
“மன்னி! நல்ல பிஞ்சுக் கத்தரிக்காயா… சின்னதாய்ப் பொறுக்கி வாங்கிண்டு வந்திருக்கேன், நாளைக்குக் காலம்பற மொறு மொறுன்னு எண்ணெய்க் கறியாய்ப் பண்ணிடுங்கோ!”
பாலுவுக்கும் அவனுக்கும் தட்டலம்பி வைத்து அவள் பரிமாற ஆரம்பித்தாள். ரசம் சாதம் சாப்பிடும் போது,பாலு திடீரென்று நினைவுக்கு வந்தவனாய், “மன்னி! சொல்ல மறந்திட்டேனே. அந்தக் கல்யாணி வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிண்டுட்டா” என்றான். இவன் ஒரு லேசான திகைப்புடன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, “ஏண்டா நீ பண்ணிக்கிறதா இருந்தியா அவளை” என்று மெல்லிய கிண்டல் தொனிக்கச் கேட்டான்.
“இல்லேண்ண! இது ஒரு தொடர் கதையோட இந்த வார அத்தியாயம். மன்னிக்கும் எனக்கும் ஒரு சின்னப் பந்தயம், கல்யாணி ஹீரோவைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொன்னா மன்னி. நான் மாத்திச் சொன்னேன், கடைசியிலே ஜெயிச்சது நான்தான்”
“உனக்கும் உங்க மன்னிக்கும் எதிலேதான் பந்தயம் வைக்கிறதுன்னு விவஸ்தையே கிடையாது போலிருக்கு!” – சாப்பிட்ட தட்டிலேயே கையை அலம்பி எழுந்தான்.
***
படுக்கையில் சாய்ந்தபடி மேலோட்டமாய் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ‘படம்’ பார்த்துக் கொண்டிருந்த அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவள், தி.ஜானகிராமீனின் ‘மரப் பசு’வில் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்த்து கொண்டிருந்தாள். தலையைச் சுற்றிப் பத்திரிகையைச் சுழற்றி எறிந்தவன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சோம்பல் முறித்தபடி பெரிய கொட்டாவி ஒன்றை விட்டான். அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, “ஸோ!” என்றான். புத்தகத்திலிருந்து மெள்ளத் தலை நிமிர்த்திய அவளுக்கு இன்று அவன் ஏதோ ஒரு யுத்தத்துக்கு ஆயத்தமாகிற மாதிரி உள்ளுணர்வு குறு குறுத்தது.
“வர வர நீ என்னோட பேசறதே கொறைஞ்சு போச்சு.”
“அப்படியெல்லாம் ஒண்ணு மில்லையே” என்றாள் அவள்.
“தோ, நோ, நானும் கொஞ்ச நாளாவே கவனிச்சுண்டுதான் வரேன், யூ ஆர் கிராஜுவலி லூஸிங் இன்ட்ரஸ்ட் இன் மீ…”
“அஃப்கோர்ஸ், ஐ ஆம் கிரோயிங் ஓல்ட், பட் மைண்ட் யூ! யூடூ!”
அவன் படுக்கையிலிருந்து எழுந்து நின்று லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான்,
“நீங்க பேசுங்கோ, நானும் பேசறேன்னுதான் சொல்றேனே?”
“அந்தப் போலித்தன மெல்லாம் எதுக்கு இப்ப… பாலு பேசித்தான் அவன் இட்டே போசறியா? அவனோட பேசும்போது இருக்கிற ‘ஸ்பாண்டேனியஸ் ஃப்ளோ’ என்கிட்டே வரும் போது மட்டும் ஏன் வத்திப் போயிடற துன்னுதான் கேட்கிறேன்.”
என்றைக்கோ கெட்ட கனவாய் எண்ணி மறந்து போய்விட்டிருந்த சில விஷயங்களை அவன், அந்தக் கனத்தில் வலுக்கட்டாயமாக நினைவு படுத்திப் பார்த்தாள்.
“எப்பப் பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ் ஆபீஸ் புராணம் தானா? அங்க அது நடந்தது. அவ இப்படிச் சொன்னா. இவ இப்படி டிரஸ் பண்ணியிருந்தா. இதை விட்டாப் பேச வேறே விஷயமே இல்லையா ராதா உனக்கு? என்னை கல்யாணம் பண்ணிண்டதுக்குப் பதிலாப் பேசாமே ஆபீஸையே கல்யாணம் செஞ்சிண்டிருக்கலாம் நீ?”
கல்யாணமான புதிதில் அவன் வேடிக்கை செய்வதாய் நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரு புறம் அவளை ஆழமாகவும் பாதித்தன அந்த வார்த்தைகள்.
“இன்னிக்கு மியூசிக் அகாடமியிலே லால்குடி கச்சேரி இருக்கு போகலாமா?”
“இத பாரு ராதா! எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சங்கீத ஞானம் கெடையாது?”
“இதுக்கு ஞானம் தேவையில்லை…” – இன்னும் ஏதோ சொல்ல வந்தவளை அவன் இடைமறித்தான்.
“நான் இல்லாமே தனியாப்போக இஷ்டமானா நீ மட்டும் போயிட்டு வா!”
இவளிடம் எதைப் பற்றித்தான் பேசுவது என்பதே புரியாமல் போய்ப் படிப்படியாய்ப் பேச்சைக் குறைத்துக் கொண்டு ஜடமாக அவள் நடமாடத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்கள் ஒன்றில்… அவன் இன்று கேட்ட அதே கேள்வியைக் கொஞ்சம் வேறு விதமாய் மாற்றிக் கேட்டான்.
“ஏன் ராதா வந்தபோது இருந்த கலகலப்பையே உன்கிட்டக் காணோமே? இப்பல்லாம் ஏன் ரொம்பப் பேசறதே இல்லை! என்கிட்டே ஏதாவது கோபமா?”
அவள் வெகுளியாய்ச் சிரித்தாள். “பேசக் கூடாதுன்னு விரதமெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா, உங்ககிட்டே என்ன போசறது. எதைப் பத்திப் போசறதன்னு தெரியாமே தயக்கமா இருக்கு! நான் என்ன சப்ஜெக்ட் பேசினாலும் அது உங்களுக்குப் பிடிக்கலை. ‘ஸ்போர்ட்ஸ்’னாலே உங்களுக்கு அலர்ஜி! சரி, ஏதானும் ‘புக்’ஸைப் பத்தி ‘டிஸ்கஸ்” பண்ணலாம்னா ‘நியூஸ் பேப்பர்’ படிக்கிறது கூட உங்களுக்கு வேல்ட் ஆஃப் டைமாகத் தோன்றது!”
“அப்ப… இதைப் பத்தியெல்லாம் பேசிண்டிருக்கிறதுக்குத்தான் நம்பளைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கான்னு சொல்றியா? லுக் ராதா! அப்படி யெல்லாம் எதிர்பார்க்கிறதா இருந்தால் நீ ஒரு ஆல் ரவுண்ட குக்கு – சகலகலாவல்லவனுக்குக் கழுத்தை நீட்டியிருக்கணும். கணவன் – மனைவிக்குள்ளே போசறத்துக்கு எந்த சப்ஜெக்ட்டுமே தேவையில்லை. புற உலகத்தைப் பத்தியும், பொது விஷயங்களைப் பத்தியும் தான் நாம கம்யூனிக்கேட் செஞ்சிக்கணும்னு அவசியமில்லை! நம்மைப் பத்தியே நாம் பேசிப் புரிஞ்சுக்கலாம். ‘அன்லைஸ்’ பண்ணிக்கலாம். ஒருத்தர் இன்னொருத்தரோடே நிறை குறைகளைத் தெரிஞ்சி ‘ரெக்டிக்பை’ பண்ண முயற்சி எடுக்கலாம்!”
‘ஆயுசுக்கும் இதேயா? ‘மாசறு பொன்னே’ டயலாக்தான – மனத்துக்குள் இப்படி நினைத்தாலும், அவன் வட்டத்துக்குள் அன்று முதல் அவள் முடங்கிப் போக ஆரம்பித்த பிறகு, இத்தனை நாள் கழித்து, இப்பொழுது தான் – ஒரு ‘இண்டர்வது’. வேலை தேடல் நிமித்தமாய்ப் பாலு இங்கே வந்து தங்கி யிருக்கிற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்னை தலை தூக்கி யிருக்கிறது.
“என்ன? கனாக் காண்றியா? பாலுவையே கல்யாணம் பண்ணிண்டிருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்னு மனசிலே சினிமா ஓட்டிப் பார்த்திண்டிருக்கியா?”
முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் கூண்டிலிருந்து வெளியாக்கப்பட்ட பறவை யாக அவன் படபடத்தாள்,
“நிறுத்துங்கோ ! இத்தனை வருஷம் பழகினப்புறம் இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லே? ‘காமன் இண்ட்ரஸ்ட்’ உள்ள எல்லாரையும், எல்லாத்தையும் முடிச்சுப் போட ஆரம்பிச்சா இந்த உலகத்திலே சோரம் போறவாளைத் தவிர வேறே, யாருக்குமே இடமில்லேன்று ஆயிடும். மனசைத் திறந்து. பார்வையை விரிவு படுத்திண்டு விஷயங்களையும். மனுஷாளையும் பார்க்கவும், போசவும் பழகிக்கோங்கோ!”
ஒரே மூச்சில் இரைந்து விட்டுப் படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக் கொண்டாள். அவன், ஒரு பெட்ஷீட்டையும் தலையணையையும் உருவிக் கொண்டு பால்கனிப் பக்கம் படுப்பதற்கு எழுந்து போனான்.
மறுநாள் காலை அவன் சமையலறைக்குள் வந்தபோது, அவள் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். எதுவுமே நடக்காதது போல, அவள் அருகே வந்த அவன், ‘இன்னிக்கு எண்ணெய்க் கறி வேண்டாம். வயிறு சரியில்லே ! நறுக்கின காய் வீணாய்ப் போகாமே சாம்பாரிலே போட்டு விடு” என்றான்.
இதெல்லாம் ஒன்றுமே தெரியாத குழந்தைத்தனத்தோடு “ஏன் மன்னி, அவ்வளவு ஆசையாய்க் கேட்டும் கறி பண்ணலே?” என்று கேட்கப் போகும் மைத்துன்னுக்கு என்ன பதில் சொல்வது என்று கவலைப் பட்டாள்.
ஒரு வாரம் கழித்து ஆபீஸி லிருந்து திரும்பியதும், பாலுவைக் கூப்பிட்டு ஒரு கவரைக் கையில் கொடுத்தான் அவன்.
“என்னண்ண அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டர்’ தானே?” தன்னம்பிக்கையுடன் கவரைப் பிரித்துப் படித்த பாலுவின் முகம், ஒரு விநாடி இருண்டது.
“மெட்ராசிலேயே ஒரு பிராஞ்சிலே கிடைக்கும்னு அவ்வளவு ‘ஷ்யூரா’ இருந்தேனே. உங்க மானேஜர் கூடப் பிராமிஸ் பண்ணியிருந்தாரே! இப்போ ‘நார்த்’ துக்கு போஸ்ட்’ பண்ணியிருக்கானே!”
“என்ன செய்யறது பாலு! கடைசி நிமிஷத்திலே எங்க மானேஜிங் டைரக்டருக்கு வேண்டியவா ‘பிரஷர்’ கொண்டு வந்துட்டதாலே அந்தப் பையன் உள்ளூரிலே போட வேண்டியதாய்ப் போச்சு”
“பரவாயில்லேண்ணா! எப்படியோ ஒரு வேலைன்னு கிடைச்சுதே. அதுவே போறும்.”
தன் வட்டத்திலேயிருந்து பாலுவை விலக்கி வைத்துவிடுவதில் காட்டுகிற ஆர்வத்தைத் தான் அந்த வட்டத்திற்குள் நுழைவதை அவன் காட்டாமலிருப்பதையும் அதற்கெல்லாம் மேலாக என்றோ அவனுடைய பெரிய வட்டத்துக்குள் அவளும் அடைக்கலமாகிப் போனதை உணராத அவனுடைய பேதைமையையும் நினைத்து அந்த நிலையிலும் அவள் சிரித்துக் கொண்டாள். இனிமேல் அந்த வீட்டில் பழையபடி நிலவப்போகிற வெறுமையை எண்ணி ஒரு கணம் துணுக்குற்றாலும், தினந்தோறும் இனம் புரியாத சித்ரவதையினால் ரணப்படுகிற இரண்டு ஜீவன்களுக்குக் கிடைக்கப் போகிற விடுதலையை எண்ணும் போது, அலாதியான திருப்தியுடன் கூடிய ஆறுதல் ஒன்றும் அவளுள் பிறந்தது.
– 03-08-1980