கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 4,891 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

ஜென்னி அவள் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை.அவள் சின்ன வயதில் இருந்தே மிகவும் புத்திசாலியாகவும்,ரொம்ப ஒழுக்கம் உள்ளவளாகவும் இருந்து வந்தாள்.வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் கொண்டவளாயும் இருந்தாள்.ஒவ்வோரு ஞாயித்துக் கிழமையும் தன் பெற்றோர்களுடன் அருகில் இருந்த சர்ச்சுக்குப் போய் வந்தாள்.பள்ளி கூடத்தில் மிகவு நன்றாக படித்துக் கொண்டு இருந்தாள்.

பெற்றோர்களின் சம்மத்தின் போ¢ல் ஜென்னி நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ‘கம்யூட்டர் ஸயன்ச்சில்’ MS,Ph.D, பட்டங்கள் வாங்கினாள்.ஜென்னியின் பெற்றோர்கள் அவளை மிகவும் புகழ்ந்தார்கள்.

ஜென்னி ஒரு கம்ப்யூட்டர் கமபனியில் வேலைக்கு சேர்ந்தாள்.அந்த வேலையை மிகவும் இஷடப் பட்டு சந்தோஷமாய் செய்து வந்தாள்.

வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவிலை ஜென்னியின் பெற்றோர்கள் ஒரு கார் விபத்தில் இறந்து போய் விட்டார்கள்.ஜென்னி ஆடி போனாள்.வாழக்கையில் துணை யாரும் இல்லாமல் தனி மரம் ஆனாள்.வருத்தத்தில் ஒரு வாரம் வரை ஜென்னி வேலைக்குப் போகவில்லை.பிறகு மெல்ல தன் மனதை தேற்றிக் கொண்டு வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

ஜென்னிக்கு தனிமை மிகவும் வாட்டியது.

அவன் ‘ஏன் நாம் ஒரு நல்ல கம்ப்யூட்டர் வேலையில் இருக்கும் ஒருவரை date பண்ணி இருவருக்கும் மனம் ஒத்து இருந்தால் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது’ என்று நினைத்தாள். அந்த எண்ணத்தில் ஜென்னி இருந்து வந்த தன்னுடைய ஆபீஸில் வேலை,வேறே ஒரு செகஷனில் வேலை செய்து வரும் ஒரு ஜான் என்பவரை வேலை விஷயமாக சந்திக்க நேர்ந்தது.ஜென்னிக்கு ஜானை மிகவும் பிடித்து இருந்தது.’நாம் இவரை சந்தித்துப் பேசி, இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடித்தி இருந்தால் கல்யாணம் பணிக் கொள்ளலாம்’என்று முடிவு பண்ணீனாள்.

அன்று வெள்ளிக் கிழமை சாயங்காலம்.நியூயார்க்கில் வெளியில் மிகவும் குளிராக இருந்தது. ஜென்னி தன் “ஸ்வெட்டரை’ப் போட்டுக் கொண்டு ஜென்னி தன் ‘லாப் டாப்’ கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு, ஆபீஸை விட்டு வெளியே வந்து,தன் Honda Accord காரை எடுத்துக் கொண்டு, பக்கத்திலெ இருந்த Star Bucksக்கு வந்து,காலியாக இருந்த ஒரு ‘டேபிள்’ மேலே தன் ‘லாப் டாப் கம்ப்ய்யூட்டரை’ வைத்து விட்டு கவுண்டருக்குப் போய் தனக்குப் பிடித்த சுவை உள்ள ‘காபி’யை வாங்கி கொண்டு வந்தாள்.ஒரு வாய் குடித்து விட்டு,பிறகு தன் ‘லாப் டாப்பை’ டேபிள் மேலே வைத்துக் கொண்டு தன் மீதி வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

ஜென்னி திடீரென்று ஜான் ஞாபகம் வரவே ஜானுக்குப் போன் பண்ணி “ஜான்,இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆனதாலே,என் ஆபீஸில் எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போய் விட்டாங்க.நான் பக்கத்திலெ இருக்கும் Star Bucks கடையிலே உனக்காக காத்து கிட்டு இருக்கேன்.நீ அங்கே வர முடியுமா, ப்லீஸ்” என்று கேட்டாள்.உடனே ஜான் “ஸூர் ஹனி,நான் இன்னும் அரை மணி நேரத்தில் உன்னை அங்கே வந்து மீட் பண்றேன். பை” என்று சொல்லி விட்டு போனை ‘கட்’ பண்ணினான்.

சொன்னது போல ஜான் அரை மணி நேரத்தில் வரவில்லை.ஜென்னி தன் பொறுமையை இழந்தாள்.அவன் வரட்டும் அவனைப் பார்த்து கோவமாக ‘ஏன் இப்படி லேட்டா வந்து இருக்கே’ன்னு கேக்கணும்’ என்று நினைத்தாள்.

ரெண்டு மணி நேரம் கழித்து அவள் குனிந்து வேலை செய்து கொண்டு இருக்கும் போது எதிரில் இருந்த காலியாக இருந்த டேபிளில் தன் ‘காபி’யை வைத்து விட்டு,ஜென்னி கவனிக்காமல் இருக்கும் போது அவள் பின் பக்கம் போய் “ஹாய்’ என்று குரல் கொடுத்தான்.ஜென்னி தன் தலையை நிமிர்ந்து பார்த்து”என்ன ஜான்,இவ்வளவு லேட்டா வந்து இருக்கே.நான் உனக்காக எத்தனை நேரம் காத்துக் கிட்டு இருக்கிறது” என்று கோவத்தில் கேட்டாள்.ஜான் ஒன்று சொல்லாமல் எதிர் ‘டேபிளீல்’ வைத்து இருந்த ‘காபி’யை கையில் எடுத்துக் கொண்டு வந்து ஜென்னி உட்கார்ந்துக் கொண்டு இருந்த டேபிளில் வந்துக் கொண்டு உட்கார்ந்தான்.

தன் ‘காபி’யை ஒரு வாய் குடித்து விட்டு ஜான் என்ன சொல்ல போறான் என்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.“ஜென்னி,உனக்கு என்ன.உன்னுடைய boss ரொம்ப நல்லவர்.ஆனா என் boss அப்படி இல்லியே.அவர் என்னைப் பாத்து ‘ஜான்,நீ வீட்டுக்குப் போவரதுக்கு முன்னால் எல்லா வேலைங்களையும் முடிச்சி விட்டுப் போகணும்’ என்று கண்டிஷன் போட்டு விட்டார்.எல்லாம் வேலைங்களையும் நான் முடிச்சுட்டு வர லேட்டாயிடுச்சி.தயவு செஞ்சு கோவிச்சு க்காதே ஜென்னி” என்று கெஞ்சினான் ஜான்.

இருவரும் மூனு மணி நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டு விட்டு இருந்து விட்டு, கிளம்பும் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் ‘பை’ சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பிப் போனார்கள்.

ஒரு வருஷம் இருவரும் date பண்ணி விட்டு,இருவர் மனமும் ஒத்து இருந்ததால் கல்யாணம் பண்ணிக் கொள்ள தீர்மானித்து கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். அவர்கள் மண வாழ்க்கை மிகவும் இனிமையாகப் போய் கொண்டு இருந்தது.இருவரும் ஒரே ஆபீஸில் வேலை செய்து வந்த தால்,ஒரு ‘ப்லாட்டை’ வாடகைக்கு எடுத்துக் கொண்டு,ஒன்றாக வேலைக்கு போய் ஒன்றாக வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.

இரண்டு வருஷம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ரோஸி என்று பெயர் வைத்து இருவரும் அந்த குழந்தையை சந்தோஷமாக வளர்த்து வந்தார்கள்.

நாளாக நாளாக ஜான் மிகவும் சோம்பேறியாகி வந்தான்.தன் வேலையில் கவனம் இல்லாமல் சதா டீ.வி பார்த்தும்,ஸ்டேடியத்துக்குப் போய் NFL games ம் பார்த்தும் பொழுதை கழித்து வந்தான். ஜென்னி அவனை சரி செய்ய மிகவும் பிரயத்தனப் பட்டாள்.ஆனால் ஜான் மாறுவதாய் இல்லை. அவன் போக்கிலேயே அவன் இருந்து வந்தான்.அந்த வருஷம் ஜென்னிக்கு பிரமோஷனும் சம்பள உய்ர்வும் கிடைத்தது. ஆனால் ஜானுக்கு ரெண்டும் கிடைக்கவில்லை.

ஜென்னி கோவத்தோடு ஜானைப் பார்த்து” ஜான்,நீ வேலையிலெ கவனம் இல்லாம இருக்கே. உனக்கு இந்த வருஷம் பிரமோஷனும் கிடைக்கலே,சம்பள உயர்வும் கிடைக்கலே.என் ‘ஹஸ்பெண்ட்’ இந்த மாதிரி சோம்பேறியாக இருந்து வருவது எனக்கு சுத்தமா பிடிக்கலே.நீ இந்த மாதிரியா இருந்து வந்தா,உன்னை திருத்த எனக்கு ஒரு வழியும் தெரியலே.இந்த நிலைமை இப்படியே போனா நான் கூடிய சீக்கிரமா ‘டைவர்ஸ்’ பண்ண வேண்டி இருக்கும்” என்று சொல்லி பயமுறுத்திப் பார்த்தாள் அந்த பயமுத்தலுக்கு ஜான் பயப் படவில்லை.அவன் போக்கையும் அவன் மாற்றிக் கொள்ளவிலை. அவன் இஷடபடியே அவன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தான்.

ஒரு நாள் ஜென்னி ‘தன்னை ‘டைவர்ஸ்’ பண்ணி விடுவாளோ’ என்று பயத்தால் ஜான் அவள் முன் மண்டி இட்டுக் கொண்டு “ஜென்,தயவு செஞ்சி என்னை விட்டுப் போகாதே.நான் என்னை மாத்திக் கொள்ள முயற்சி பண்றேன்”என்று கெஞ்சினான்.“சரி,உனக்கு கடைசியா ஒரு ‘சான்ஸ்’ நான் தறேன்.நீ உன்னை இன்னும் ரெண்டு மாசத்திலே மாத்திக் கொ¡ள்ளா விட்டா, நான் உன்னை நிச்சியமா ‘டைவர்ஸ்’ பண்ணி விடுவேன்”என்று தீர்மானமாக சொல்லி விட்டாள்.

ஜென்னி இதை பல தடவை சொல்லியும் ஜான் திருந்தாதலால் ஒரு நாள் ஜென்னி தான் அவனை நிச்சியமா ‘டைவர்ஸ்’ பண்ணப் போவதாக சொன்னாள்.

ஜென்னி பிடிவாதத்தைப் பார்த்து வெறுப்படைந்த ஜான். “OK ஜென்னி If that is your wish, go ahead and do it.I don’t mind.I will live with Rosy, and bring her up.It is my duty” என்று சொல்லி விட்டான்.

அடுத்த நாளே ஜென்னி தன் துணிமணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஜானைப் பார்த்து “ஜான்,நான் உன்னை விட்டு போறேன்.’பை’ “ என்று சொல்லி விட்டு அந்த வீட்டை விட்டு வெளி யேறி விட்டாள்.ஜான் கவலையுடன் ஜென்னி போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான். அடுத்த வாரமே ஜென்னி தன் ‘லாயரை’ அழைத்து ஜானுக்கு விவாக ரத்து பத்திரத்தை அனுப்பினாள்.

விவாகரத்து பத்திரம் தன் கைக்கு வந்தவுடன் ஜான் வருத்தப்பட்டுக் கொண்டே அதில் தன் கையெழுத்தை போட்டு ஜென்னிக்குஅனுப்பிவிட்டான்.

ஜென்னிக்கு தன் வாழக்கை இப்படி பாழ் ஆகும் என்று கனவிலும் நினைக்க விலை.ஜானை ‘டைவர்ஸ்’ பண்ணி விட்ட ஜென்னி மனம் உடைந்துப் போனாள்.அவள் யோசனைப் பண்ணினாள் ‘நாம பெற்றோர்களை இங்கே இழந்துட்டோம்.நம் கல்யாண வாழ்க்கையும் இங்கே சரியா அமையலே. இனிமே நான் நியூயாக்கில் இருந்து என்ன பண்ணப் போறேன்.ஏன் இந்த இடத்தை விட்டு நாம வேறே எங்காவது போய் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடாது’ என்று நினைத்தாள்.இந்த எண்ணமே ஜென்னியில் ஒரு உத்வேகம் கொடுத்தது.உடனே ஜென்னி நியூயார்க்கை விட்டு விட்டு ‘சான்டியாகோ’ போய் ‘க்வால்கோம்’ கம்பனியில் ஒரு வேலை தேடிக் கொண்டாள்.

அவள் ‘நாம் இப்போ ஒரு சுதந்திர பறவை.இனி நம் இஷ்டம் போல வாழ்ந்து வரலாம்’ என்று நினைத்து ஒரு ‘ப்ளாட்டை’ வாடகைக்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.ஜென்னியின் boss ஜார்ஜ் ஜென்னியின் புத்திசாலித்தனத்தையும்,அவளுக்கு வேலையில் இருந்த ஈடுபாட்டையும் வெகுவாக புகழ்ந்து வந்தான்.அவளுடன் வேலை செய்து வருவதை மிகவும் விரும்பினான். ஜென்னிக்கு இது மிகவும் பிடித்து இருந்தது.

ஒரு நாள் ஜார்ஜ் ஜென்னியை Olive Garden ரெஸ்டாரன்டுக்கு ‘டின்னருக்கு’ அழைத்தான். ஜென்னிக்கும் அவன் அழைப்பு மிகவும் பிடித்து இருந்தது. உடனே அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு Olive Garden ‘ரெஸ்டாரன்டுக்கு’’‘டின்னருக்கு’ப் போனாள்.ஜென்னி தன்னை மிகவும் அழகாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ஜார்ஜ் சொன்ன நேரத்திற்கு கொஞ்சம் முன்னதாகவே போய் அவனுக்காக ‘ரெஸ்டாரண்ட்டில்’ காத்து இருந்தாள். ஜார்ஜ் அழகாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு Olive Garden க்குள் நுழைந்தான்.

ஜார்ஜ் ‘ரெஸ்டரண்ட்டில்’ நுழைவதைப் பார்த்த ஜென்னி,அவனுக்கு தன் கையை உயர்த்தி காட்டினாள்.உடனே ஜார்ஜ் ஜென்னி உட்கார்ந்துக் கொண்டு இருந்த ‘டேபிளு’க்குப் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான்.‘பேரர்’ வந்ததும் ஜார்ஜ் நிறைய ஐட்டங்கள் எல்லாம் ஆர்டர் பண்ணினான்.ஜென்னி ஜார்ஜ்ஜைப் பார்த்து” ஜார்ஜ்,ஏன் இவ்வளவு ஐட்டங்கள் ஆர்டர் பண்ணி இருக்கே.நம்ப ரெண்டு பேருக்கும் ரொம்ப அதிகமா இருக்குமே”என்று கேட்டதற்கு ஜார்ஜ் “ஜென், இது தானே நாம இருவரும் தனியே சந்திக்கும் முதல் தடவை.அது ரொம்ப முக்கியமான ‘மீட்டிங்க்’. இல்லையா சொல்லு” என்று சொல்லி விட்டு ஒரு ‘ரொமானிடிக்’ சிரிப்பு சிரித்தான்.

ஜென்னிக்கு ஜார்ஜ் சொன்னது மிகவும் பிடித்து இருந்தது.ஜார்ஜ் ‘டின்னர்’ சரியாகவே சாப்பிட விலை.ஜென்னி எப்போ சாப்பிட்டு முடிப்பாள் என்று காத்துக் கொண்டு இருந்த ஜார்ஜ்.பிறகு ஜார்ஜ் மெல்ல தன் உள் ஆசையை ஜென்னிக்கு வெளிப் படுத்தினான்.முதலில் ஜார்ஜ் சொன்னது ஜென்னி க்கு ‘ஷாக்காக’ இருந்தாலும் கொஞ்ச நேரம் கழித்து அவள் ஒத்துக் கொண்டாள்.ஜார்ஜ் மிகவும் சந்தோஷப் பட்டு, ஜென்னியை ‘தாங்க்’ பண்ணினாள்.

ஆறு மாதம் இருவரும் date பண்ண பிறகு இருவருக்கும் ஒருதரை மிகவும் பிடித்து இருந்தால் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தீர்மானம் பண்ணி ,அடுத்த மாசமே சர்ச்சுக்குப் போய் மோதிரம் மாற்றிக் கொண்டு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள்.

ஜார்ஜும் ஜென்னியும் தங்கள் கல்யாண வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வந்தார்கள். ரெண்டு வருஷம் போனதும் ஜென்னிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ஜார்ஜும் ஜென்னியும் அந்த குழந்தையை ரொம்ப ஆசையாய் வளர்ந்து வந்தார்கள்.

ஜார்ஜ் ‘ஜிம்’முக்கு தவறாம போய் வந்து தன் உடலை ரொம்ப அழகாகவும்,‘ஸ்லிம்மாகவும்’ வைத்துக் கொண்டு வந்தான்.ஆனால் ஜென்னி குழந்தை பிறந்த பிறகு தன் உடம்பை சரியாக கவனித்துக் கொண்டு வராமல் நாளுக்கு நாள் பருமனாக ஆகி வந்தாள்.

ஜார்ஜின் மேனேஜர் பார்பரா ஜார்ஜுடன் நெருக்கமாக பழகி வந்தாள்.ஜார்ஜு பார்பராவின் அழகையும்,கம்பூட்டர் அறிவையும்,மிகவும் ரசித்து வந்தான்.பார்பரா ஜார்ஜ்ஜை அடிக்கடி தன் ரூமுக்கு அழைத்து கம்பனி விஷங்களைப் பேசும் போது,மெதுவாக தன் ஆசையை வெளிப் படுத்த ஆரம்பித்தாள். ஜார்ஜ் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு அவள் ரூமை விட்டு வெளியே வந்து தன் ‘சீட்டில்’ உட்கார்ந்துக் கொண்டான்.ஜார்ஜுக்கு பார்பரா சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்து.

‘நாம ஜென்னியை கல்யாணம் பண்ணிக் கிட்டு நமக்கு ஒரு குழந்தையும் இருக்கே.என்ன பண்ணலாம்.இதே எப்படி பார்பரா கிட்டே சொல்றது’ என்று யோஜனைப் பண்ணினான் ஜார்ஜ். ஆனால் கூடவே ‘பார்பரா தன் மேனேஜர் ஆச்சே,எப்படி அவ ஆசையை நிராகா¢ப்பது’ என்று புரியாமல் தவித்தான்.ஜென்னி உடல் பருமனை நினைக்கும் போது அவனுக்கு ஜென்னி மேல் இருந்த ஆசை நாளுக்கு நாள் குறைந்து வந்தது ஜார்ஜுக்கு.

பார்பரா அழகு அவனை மயக்கியது.பார்பராவை கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் அழகையும் அனுபவிக்கலாம்,நமக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பும் இருக்கிறதே’ என்று நினைத்து அவன் உள் மனதில் சந்தோஷப் பட்டான் ஜார்ஜ்.

ஜென்னி எப்போதும் ‘வேலை’ ‘வேலை’ என்று நிறைய வேலை செய்து வந்தாள்.அவளுக்கு தன் வேலையில் சீக்கிரமா முன்னுக்கு வர வேண்டும் என்கிற துடிப்பு இருந்து வந்தததை கவனித் தான் ஜார்ஜ்.அதனால் அவள் தன் உடல் பருமனைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் நிறைய நேரம் ‘ஆபீஸில்’ வேலை செய்து வந்தாள்.

ஜென்னிக்கு தன் குழந்தை ஒரு நாலு வயது ஆகும் வரை அடுத்த குழந்தை வேண்டாம் என்று முடிவு பண்ணி ‘உடல் உறவில்’ அவ்வளவு அக்கறை காட்டாமல் இருந்து வந்தாள்.ஆனால் ஜார்ஜு க்கு ‘உடல் உறவில்’ அதிக நாட்டம் இருந்து வந்தது.இந்த விஷயத்தில் ஜென்னிக்கும் ஜார்ஜுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருந்தது.இந்த மன பேதம் கொஞ்ச கொஞ்சமாக பார்பரா மீது ஜார்ஜுக்கு ஆசையை அதிகா¢க்க வைத்தது.அவனுக்கு தன் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்ற துடிப்பும் இருந்தது.

அவன் வாழ்ந்து வந்த ‘சன்னியாசி’ வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை.

ஜார்ஜ் ஒரு நாள் ஜென்னியுடன் தனியாக இருக்கும் போது “ஜென்,உன் போக்கே எனக்குப் பிடிக்கலே.எனக்கு ‘உடல் உறவில்’ அதிக ஆசை இருக்கு.ஆனா உனக்கோ அதில் கொஞ்சம் கூட நாட்டமே இல்லே.என் மேனேஜர் பார்பரா பாக்க ரொம்ப அழகா,மாடல் மாதிரி இருப்பா.நிறைய கம்ப்யூட்டர் ‘நாலெட்ஜ்’ உள்ளவ அவ.அவளே ஒரு நாள் என்னை பாத்து,அவ ஆசையை என் கிட்டே வெளிப் படுத்தினா.எனக்கும் அவளை ரொம்ப பிடிச்சு..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஜென்னி “என்ன பேசறே ஜார்ஜ்.உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா என்ன.நாம ரெண்டு பேரும் date பண்ணி,ஒருவரை ஒருவர் நல்லாப் புரிஞ்சுக் கிட்டு கல்யாணம் பண்ணிக் கிட்டு,இப்போ நமக்கு ஒரு குழந்தையும் பொறந்து இருக்கு என்பதை நீ மறந்துட்டயா.இந்த நிலையில் நம் வாழ்க்கையிலே அழகு,அறிவு,என்கிற பேரில் இன்னொரு பெண்ணை கொண்டு வராதே.வெறும் ‘உடல் உறவையும், ’அழகையும்’ முக்கியமா மனசிலெ நினைச்சு காரியம் பண்ணாதே.நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்று சற்று கோவத்துடன் சொன்னாள்.

“ஜென்னி நான் என்ன செய்யறேனு எனக்கு நல்லாத் தெரியும்.நீ எனக்கு ஒரு அறிவுறையும் தர வேணாம்.உன் வேலையை கவனிச்சு கிட்டு போ” என்று பதிலுக்கு கத்தினான் ஜார்ஜ்.

ஜார்ஜ் நாளாக,நாளாக,ஜென்னியுடன் வாழ்ந்து வருவதை வெறுத்து வந்தான்.

பல நாட்கள் அவன் வீட்டுக்கு வராமல் பார்பராவுடனே வெளியிலே நேரத்தை கழித்து வந்தான் ஜார்ஜ்.இதை கவனித்தாள் ஜென்னி.அவள் மனம் வேதனைப் பட்டது.ஜென்னி மனம் உடைந்துப் போனாள்.

ஜென்னி ஜார்ஜிடம் அவன் செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை என்று பல முறை சொல்லி வந்தாள்.

ஒரு மாசம் ஆனது.

ஜார்ஜ் தன்னை மாற்றிக் கொண்டு வீட்டுக்கு சிக்கிரமாக வருவான் என்று எதிர் பார்த்த ஜென்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.ஜார்ஜ் அவன் இஷ்டம் போல வாழ்ந்து வரட்டும் என்று நினைத்து ஜென்னி அவனை விட்டு நிரந்ததரமாக விலக தீர்மானம் பண்ணினாள்.

அடுத்த நாளே ஜென்னி தன் துணிமணிகளை எல்லாம் ரெண்டு சூட் கேஸில் ‘பாக்’ பண்ணி கொண்டு எங்காவது போய் தனி மனுஷியாக வாழ்ந்து வருவது என்று தீர்மானம் பண்ணி, ஜார்ஜ்ஜை போனில் கூப்பிட்டு “ஜார்ஜ்,இனி ஒரு நிமிஷம் கூட எனக்கு உன்னுடன் வாழ்ந்து வர எனக்கு பிடிக்க லே.நான் இனிமே ஒரு ‘தனி மனுஷி’யாக வாழ்ந்து வர ஆசைப் படறேன்.தயவு செஞ்சி வீட்டுக்கு சீக்கிரமா வந்து ராபினை கவனிச்சுக்கோ.நான் உனக்கு குடுக்காத சந்தோஷத்தை பார்பரா உனக்கு குடுப்பான்னு நமபறேன். நீ அவ கூட சந்தோஷமா வாழ்ந்து வா.’குட் பை’ என்று சொல்லி விட்டு தன் ரெண்டு ‘சூட் கேஸ்களையும்’ எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ஹோட்டலில் தங்கினாள்.

ஜென்னி மறுபடியும் ஒரு தனி மரம் ஆனாள்.

மனம் வெறுப்பு அடைந்த ஜென்னி,மன ஆறுதல் பெற ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சர்ச்சுக்குப் போய் ஜீஸஸை வேண்டி வந்தாள்.கூடவே ‘பாதர் சுப்பீரியரை’ சந்தித்து தன் வாழ்க்கை யிலெ ஏற்பட்ட ஏமாற்றங்களை எல்லாம் சொல்லி அழுதாள்.‘பாதர்’ அழும் ஜென்னியைப் பார்த்து ஆறுதலாக “அழாதே ஜென்னி.கவலைப் படாதே.கர்த்த்ர் உனக்கு நிச்சியமா அறுள் புரிவார்.உன் கவலைகள் எல்லாம் தீர்ந்து, மறுபடியும் நீ சந்தோஷமா வாழ்ந்து வருவே.உனக்காக நான் கர்த்தரை தினமும் வேண்டி வறேன்”என்று தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த சிலுவையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.

கொஞ்சம் மன அமைதி பெற்ற ஜென்னி ‘பாதரை’ மனமார ‘தாங்க்’ பண்ணி விட்டு,‘பாதர்’ சொன்னது போல தன் வாழ்க்கையில் ஒரு மறு மலர்ச்சி ஏற்படும் என்று நம்பினாள். மனதில் கொஞ்சம் தெம்பு வந்ததும்,ஜென்னி தினமும் ‘ஜிம்’முக்குப் போய் உடல் பயிற்சி பண்ணி வந்தாள்.

நாலு வருஷம் தனியாக இருந்து வந்த ஜென்னி இப்போது உடல் பருமன் எல்லாம் குறைந்து பார்க்க நன்றாய் இருந்தாள்.தனக்கு ஏற்பட்ட ரெண்டு மண வாழ்க்கையும் ஏமாற்றமாக ஆனதால்,இனி கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் தனி மனுஷியாக இருந்து வரலாம் என்று முடிவு பண்ணினாள் ஜென்னி.தான் செய்து வரும் வேலையில் நல்ல கவனம் செலுத்தி ஜென்னி,மெல்ல, மெல்ல,உயர் பதவியை அடைந்துக் கொண்டு வந்தாள்.

பதினைந்து வருடங்கள் ஓடி விட்டது.ஒரு நாள் ‘க்வால்காம்’ கம்பனி ஜென்னிக்கு ‘வைஸ் பிரஸிடென்ட்டாக’ பதவி உயர்வு கொடுத்தார்கள்.கம்பனி ஜென்னிக்கு பணக்காரர்கள் பலர் வசித்து வரும் ‘கவுண்டியில்’ ஐந்து ‘பெட் ரூம்கள்’ கொண்ட ஒரு பொ¢ய ஒரு பொ¢ய வீட்டையும் கொடுத்து, நல்ல சம்பளமும்,நிறைய சலுகைகளும் கொடுத்தார்கள்.வீட்டில் சமையல் பண்ண,வீட்டில் இருந்த பொ¢ய தோட்டதை கவனித்து வர என்று ஆட்களை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்கள்.ஜென்னி அந்த மாளிகையில் மிக சந்தோஷமாக இருந்து வந்தாள்.

ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.

‘மனதில் சந்தோஷம் இருந்தாலும் பெண்ணாக பிறந்த தனக்கு ஒரு குழந்தையை கூட பேணி வளக்க முடியலையே’ என்கிற ஏக்கம் இருந்து வந்தது.அந்த ஞயிற்றுக் கிழ¨யே ஜென்னி சர்ச்சுக்குப் போய் ‘பாதா¢டம்’ தன் ஏக்கத்தை சொல்லி வருத்தப் பட்டாள்.அவள் ஏக்கத்தை பொறுமையாக கேட்ட ‘பாதர்’ ஜெனியைப் பார்த்து” ஜென்னி,உனக்கு இப்போ என வயசு ஆவுது” என்று கேட்டார். ஜென்னி பாதரைப் பார்த்து “எனக்கு இப்போ ஐம்பத்தி ஒன்னு வயசு ஆவுது ‘பாதர்’ ”என்றாள்.

‘பாதர்’ ஜென்னியைப் பார்த்து” ஜென்னி,உன் வயசில் இருக்கிறவங்களுக்கு இன்னும் ஒரு குழந்தையோ,இல்லெ ரெண்டு குழந்தையோ பொறக்க வாய்ப்பு இருக்கு.ஏன் நீ உன் வயசுக்கு ஏத்தாற் போல் இருக்கும் ஒரு நல்லவனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடது” என்று சொன்ன தும் “அப்படியா ‘பாதர்’”என்று சொல்லி முடிப்பதற்குள் பாதர் “ஜென்னி,நீ முயற்சி பண்ணிப் பார். கர்த்தர் உனக்கு நிச்சியமா அருள் புரிவார்”என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன ‘பாதர்’ “எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கார்.நான் அவருடன் பேசி விட்டு உனக்கு சொல்றேன்”என்று சொன்னார்.ஒரு வித மன அமைதியுடன் ஜென்னி ‘சர்ச்சை’ விட்டு தன் மாளிகைக்கு வந்தாள்.

அடுத்த நாளே ‘பாதர்’ தனியாக வசித்து வந்த வில்லியம்மை போனில் கூப்பிட்டு ஜென்னியின் பூரா கதையையும் சொல்லி,கூடவே அவள் ஆசையையும் சொல்லி நீ அவளை மணந்துக் கொள்ள முடியுமா” என்று கேட்டார்.“’பாதர்’,இவ்வளவு பணக்கார ஒரு அம்மாவை,மிகவும் சாதாரண வேலையில் இருக்கும் நான் எப்படி மணந்து கொள்றதுன்னு எனக்கு பயமா இருக்கு”என்று தன் பயத்தை சொன்னான் வில்லியம்.மெல்ல வில்லியம்மின் பயத்தைப் போக்கி “நீ அடுத்த வாரம் ஞாயிற் றுக் கிழமை சாயங்காலம் ஒரு நாலு மணிக்கு ‘சர்ச்சுக்கு’ வா.நான் ஜென்னியையும் வரச் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசிப் பாருங்க.இருவருக்கும் மன ஒத்துமை இருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க” என்று சொன்னதும் வில்லியம் ‘பாதர்’சொன்னது போல சர்ச்சுக்கு வர சம்மதித்தான்.

உடனே.‘பாதர்’ ஜென்னிக்குப் போன் பண்ணி வில்லியம்மை பத்தி சொல்லி எல்லா விவரங்க ளையும் சொல்லி,அடுத்த ஞாயிற்று கிழமை பண்ணி இருக்கும் ஏற்பாட்டையும் சொன்னார். உடனே ஜென்னி ‘பாதரை’ தாங்க் பண்ணி விட்டு,அவர் சொன்ன நேரத்தை ஒத்துக் கொண்டு,சர்ச்ச்சுக்கு வந்து விடுவதாய் சொல்லி போனை ‘கட்’ பண்ணினாள்.

அடுத்த ஞாயிற்று கிழமை ஜென்னியும் வில்லியமும் சர்ச்சில் சந்தித்து இருவரும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் வாழ்க்கையிலே நடந்த எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் வில்லியம் ஜென்னயிடம் தன் பயத்தை சொன்னான்.ஜென்னி வில்லியத்திடம் தன் ஆசையை சொன்னாள்.இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.பிறகு இருவரும் யோஜனை பண்ணி விட்டு தங்கள் முடிவை சொல்வதாய் சொல்லி விட்டு ‘சர்ச்சை’ விட்டு வெளியே வந்து தங்கள் வீட்டுக்கு போனர்கள்.

தன் வீட்டுக்கு வந்த ஜென்னிக்கு வில்லியம் ‘தன்னுடன அவன வயதான அம்மாவும், அவனு க்கும் ஒரு கருப்பு பெண்மணீக்கும் பிறந்த ஒரு குழந்தையும் இருப்பதாகவும்,கருப்பு மணைவி ஒரு கார் விபத்தில் இறந்து விட்டதாயும்’ சொன்னதை பற்றி யோசனைப் பண்ணீனாள்.கூடவே வில்லியம் மின் நல்ல குணத்தையும் நினைத்து பார்த்தாள்.‘அவன் மூலமாக நாம் ஒரு குழந்தையை பெற்று கொண்டு,அந்த குழந்தையை நாம ஆசையுடன் வளத்து வருவோம்.நமக்கும் இந்த வயசு காலத்திலே ஒரு ஆண் துணையும் இருக்கும்.அவன் முதல் மணைவிக்குப் பொறந்த கருப்பு குழந்தையை அவன் அம்மா வளத்து வரட்டுமே’ என்று எண்ணினாள்.

பிறகு இருவரும் ஒரு ஆறு மாதத்திற்கு date பண்ணி விட்டு,கல்யாணம் செய்து கொள்ள முடிவு பண்ணினார்கள்.

ஜென்னி வில்லியத்தை கல்யாணம் பண்ணிக் கொண்டு,அவன் அம்மாவையும்,குழந்தை யையும் தன் மாளிகையில் இருந்து வரச் சொன்னாள்.வில்லியத்துக்கும்,அவன் அம்மாவுக்கும், அவர்களுக்கு ‘திடீர்’ என்று வந்த பணக்கார வாழ்க்கை மிகவும் பிடித்து இருந்ததால் இருவரும் ஜென்னியுடன் மிகவும் ஆசையாக பழகி வந்தார்கள்.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.

ஜென்னிக்கு குழந்தை பிறக்கவிலை.

இருவரும் மூன்று டாக்டர்களை பார்த்து தங்களை நன்றாக ‘செக் அப்’ பண்ணிக் கொண்டார் கள்.மூன்று டாக்டர்களும் ‘இருவரிடமும் எந்த வித கோளாறும் இல்லை,சீக்கிரமே குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்லி அனுப்பி விட்டாகள்

டாக்டர்கள் சொன்னதை கேட்ட ஜென்னிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.’சரி, நமக்கு நிச்சியமா ஒரு குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தாள் ஜென்னி.

தனக்கு ஐம்பத்து நாலு வயது ஆகி விடவே ‘தனக்கு இனிமேல் குழந்தை பிறக்காது’ என்று தீர்மானம் பண்ணி விட்டாள்.இனி வில்லியத்துடன் இருந்து கொண்டு வருவது வீண் என்கிற முடிவு க்கு வந்து ஜென்னி வில்லியத்தையும்,அவன அம்மாவையும்,குழந்தையையும் ஒரு பொ¢ய ஐந்து நக்ஷத்திர ஹோட்டலுக்கு அழைத்துப் போய் ஒரு விலை உயர்ந்த ‘டின்னருக்கு ஆர்டர்’ பண்ணினாள்.

வில்லியமும் அவன் அம்மாவும் அந்த ஹோட்டலையும்,டின்னரையும் பார்த்து மலைத்துப் போனார்கள்.வில்லியமும் அவன் அம்மாவும் டின்னரை மிகவும் ரசித்து சாப்பீட்டார்கள்.இது போன்ற ஒரு ‘ஹோட்டலையும்’’ டின்னரை’யும் அவர்கள் வாழ்க்கையிலே இது வரை பார்த்த்தே இல்லை. ‘ஹோட்டலையும்’ ‘டின்னரை’யும் மிகவும் ரசித்தார்கள் இருவரும்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *