ரெசிபி – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 2,863 
 

“நேத்து எங்க வீட்டுக்காரர் உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ எதோ தோசை சுட்டு கொடுத்தியாம். அது அவ்ளோ டேஸ்டா இருந்துசின்னு வந்ததுல இருந்து சொல்லிகிட்டே இருக்கார் …….’ நீயும் அதே மாதரி செய்யேன் ‘ன்னு கேக்குறார் . அதுக்கு ரெசிபி சொல்லேன் ” விமலாவிடம் போனில் கேட்டல் மாலதி ….

“ரெசிபியா? அந்த கொடுமைய ஏன் கேக்குற ? எங்க வீட்டுக்காரர் தீடிர்னு உங்க வீட்டுக்காரரை இங்க கூட்டிட்டு வந்துட்டார் . மாச கடைசி விட்டுல ஒரு மளிகை சாமானும் இல்ல . அவசரத்துக்கு வாங்க , வீட்டுப் பக்கம் பலசரக்குக் கடையும் கிடையாது .

என் பழக்கம் எந்தப் பொருளையும் சுத்தமா காலி செய்ய மாட்டேன் . ராவும் மைதா,கோதுமை , கடலை மாவு , ஊளுதம்மாவு , எல்லா டப்பாவிலும் கொஞ்சம் இருந்தது . அதெல்லாம் ஒன்ன கலந்து , புளிப்புக்கு மோர் ஊத்தினேன்” என்றாள் விமலா …

” சே…. சமையல்ல சில சமயம் இப்படி அவசர சமாளிப்பு கூட அருமையா வந்திடுது இல்ல ” என் வியந்தபடியே போனை வைத்தாள் மாலதி ….

விமலாவும் போனை வைத்த கையேடும் டீபாயில் இருந்த ‘ சுவையான தோசை ரெசிபிகள் ‘ புத்தகத்தை கவனமாக எடுத்து பீரோவுக்குள் மறைத்து வைத்தாள் ….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *