கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,908 
 
 

அவங்க வரதா சொல்லியிருக்காங்க. நீங்க இன்னும் ஒரு முடிவும் எடுக்காம இருக்கீங்க? வரும்போதே சொல்லிடலாமா? இல்ல இப்ப மறைச்சுட்டு, அப்புறம் சொல்றதா? எப்படியும் நிச்சயம் பண்ணுவாங்க. இந்த பார்க்க வரதெல்லாம் ஃபார்மாலிட்டின்னு தான் சம்பந்தம் சொன்னார்.

ஏன் ஜானகி கவலைப் படறே. இரு யோசிக்கிறேன். சாயங்காலம் தானே! பாத்துக்கலாம். அவ கிட்ட நான் இன்னும் பேசணும்.

அப்பா, இந்த சாரீ நல்லா இருக்குமா? அவங்க வரும்போது கட்ட?

ம்ம் நல்லா இருக்கும்மா! உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே!

சொல்லுங்கப்பா… அம்மா சொன்னத தான் கேட்டுட்டேனே.

இல்லம்மா… இன்னிக்கே விஷயத்த சொல்லிடலாமா?… என்னன்னு….

வேணாம்பா. அவங்க வரதுக்கு முன்னாடியே ராஜனும் வைதேகியும் வந்து கூட்டிட்டு போயிடுவாங்க. எப்ப அப்டி பேசினாங்களோ அப்ப அவங்களுக்கு காட்ட வேணாம்னு எனக்கு தோணிடுச்சுப்பா.

சரிம்மா உன்னிஷ்டம்.

…..

ஹலோ! சொல்லு ரம்யா அம்மா பேசினாங்களா? அவங்க என்ன சொன்னாங்க?

அவங்களுக்கு போட்டோ ரொம்ப புடிச்சுடுச்சு. நேர பார்த்துட்டா தேவலாம்னு சொல்றாங்க சாந்தி.

வீடியோ பார்த்தாங்க இல்ல?

ம்ம். ஆனாலும் நேர பாக்கணுமாம் உன்னையும் சேர்த்து.

நானா? எப்டி? கஷ்டம் டீ

இருக்கட்டும். உனக்கும் தெரியணும். அவங்களுக்கும் உன்னப் பாக்கணும். ஒத்துக்கோ. இது ரெண்டு நன்மை தரும். ஒண்ணு நீயும் நல்லா இருப்பே, இன்னொண்ணு அவளும்.

சரி ட்ரைவ் இன் ல மீட் பண்ணுவோம். சொல்லிடு.

நாளைக்கே. அழைச்சிட்டு வந்துடறேன்.

ஹலோ! ஆங்க் ஆமா. ப்ளூ சாரீ.. கை ஆட்டறேன் பாருங்க.

ஆங்க் ஆங்க் கண்டு புடிச்சுட்டோம். இதோ வரோம்.

ரம்யா நம்பர் ரீச் ஆகல. அதான் உங்களுக்கு அடிச்சுட்டோம்

பரவாயில்ல. வாங்க சாப்டுட்டே பேசலாம்.

ரம்யா ரசிகாவக் கொஞ்சம் எங்கேஜ் பண்றியா? பேசணும்? ப்ளீஸ்

ம்ம் நீங்க பேசுங்க, வாங்க குட்டி நாம செடி பாப்போமா??

..

..

ரொம்ப தேங்க்ஸ்

நான் தான் சொல்லணும். நீங்க செய்யறது உதவிக்கும் மேல.

அப்டி இல்ல, எங்களுக்கு ஒரு பிடிமானம் கிடைக்காம இத்தன வருஷம் ஓடிப்போச்சு. இப்போ எனக்கே 50 வயசாகுது. என் ஃப்ரெண்ட்ஸ் இன்னும் சொந்தக்காரங்க எல்லாரும் வேணாம்னு சொல்றாங்க. ஆனா எங்களுக்குன்னு இனிமே வாய்ப்பில்ல. அப்போ இத விட்டா வேற வழியும் தெரியல.

இருந்தாலும், என் பொக்கிஷம். விட முடியலன்னாலும், எனக்கும் வேற வழியில்ல இப்போ. இந்த முடிவே கூட அவளுக்காக தான் எடுக்கறேன்.

கவலைப் படாதீங்க ரசிகா நல்லா இருப்பா. எங்க பொருப்பு. லீகல் பேப்பர்ஸ் ரெடி பண்ணிடறேன். ரெண்டு நாள்ல ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சிக்கலாம். உங்கள என்னிக்கு பார்க்க வர்றாங்க?

ஞாயிறு. நீங்க அன்னிக்கே கூட்டிட்டும் போகலாம். இன்னும் அஞ்சு நாள் இருக்கு, கை அனிச்சையாய் கண்துடைத்தது அவளுக்கு.

…….

கைலாஷ் பேசறேன்.

ம்ம் சொல்லுங்க. ஏற்பாடு பண்ணியாச்சு. நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன்.

ஏன் கொஞ்சம் கோவமா பேசறே?

அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்க வீட்ல சொல்லிடுங்க. ஞாயிறு வருவாங்க இல்ல? எத்தன பேர் வர்றீங்க?

5 பேர். எங்க அம்மா, மாமா, அண்ணன் அண்ணி, நான். கொஞ்சம் சாதாரணமா பேசேன்

நான் மெஷின் இல்ல இல்லையா? என் மனசுக்கும் ஆஸ்வாசம் ஆகட்டும். அப்புறம் சாதாரணமா பேசறேன்.

இப்போதைக்கு வெக்கறேன்.

……

எங்களுக்கு ஒண்ணும் ப்ரச்சினையில்ல. நீங்க மேட்ரிமோனியில குடித்ததால தான் அப்ளை பண்ணோம். பையனுக்கும் டைவர்ஸ் ஆனத நாங்களும் சொல்லியிருந்தோம். நீங்களும் விவரமெல்லாம் சொல்லித்தான் இருந்தீங்க. ஆனா, பாப்பாவ கூட்டிட்டு போனா சரிப்படாது. ஏற்கெனவே எங்களுக்கு ரொம்ப மனக்கஷ்டம் இருக்கு. அது கொஞ்சம் சரியாகி தான் இப்ப இந்த ஏற்பாட்ட பண்றோம். கொஞ்ச காலம் அவங்களும் வாழணும்னு தான் நான் சொல்றேன். கைலாஷின் அம்மா சாந்தியின் அம்மாவிடம் போனில் சொல்லிக்கொண்டிருந்தாள். சாந்திக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்த்து. இது என்ன புது ப்ரச்சனை. ரசிகா வேண்டாம்னா!!!

அம்மா, எனக்கு இந்த கல்யாணம் அவசியமா? நீயே சொல்லு? இது தர்ம்மா? பெத்த குழந்தை முக்கியமா, ஆண் துணை அவசியமா? சொல்லும்மா?

இதோ பாரும்மா, ரெண்டும் வேணும். இப்படியே நீ கேட்டுட்டே இருந்தா இருக்கற ஆயுசு வரைக்கும் தான் நானும் அப்பாவும் உன்னோட துணையா இருக்க முடியும். ஆனா அதுக்கு அப்புறம், பொண் குழந்தைய வெச்சிட்டு நீ தனியா கஷ்டப்படறது தவிர்க்க முடியாத்தாகிடும். ரசிகாவுக்கு நான் சொன்னபடி செய். நீ இந்த புது வாழ்க்கைய ஏத்துக்கோ. ஒரே மாசத்துல வந்துட்ட. இந்த புள்ளையோட வயித்துல. இப்பிடி போவாருன்னு யாரு நெனச்சோம்.ஹ்ம்ம்ம்

மனசு ஒப்பல மா! உடம்பு சுகம் தவிர வேற என்னம்மா பெரிசா கெடைக்கும் இந்த பந்தத்துல இப்போ?

இப்போ சந்தோஷமா இருக்கியா? சொல்லு? ஆபீஸ் வேலையும் ரொம்ப டைட்டா இருக்கு. அடிக்கடி டூரிங்க் ட்யூட்டி. ஒவ்வொரு முறையும் பாஸ்ஸோட போகும் போதும் அவன் நல்லவனா இருந்தாலும் அனிச்சையா ஒரு பயம், எங்க உன் நிலமைய உபயோகப்படுத்திடுவானோன்னு. உன் பொண்ண எப்படி வளர்ப்பே?

யாரையும் நம்பாதே, இந்த உலகம் பயங்கரமானது, எனக்கு எதுவும் நல்லதே நடக்கல. உனக்கும் எந்த கெட்டது வேணாலும் வரலாம், வாழ்க்கை கடினமானது, இப்டியெல்லாம் தானே சொல்லி வளர்ப்பே?

அது அவளுக்கு ஒரு ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்லித்தானேம்மா வளர்க்கணும்? அப்பா இல்லாத பொண்ணு, ஆம்பள இல்லாத வளர்ப்புன்னு சொல்லி நாளைக்கு அவ என்ன பண்ணாலும் என்னையும் சேர்த்து தானேம்மா குறை சொல்லுவாங்க?

அதனால தான் சொல்றேன், 21/2 வயசுக் குழந்தைக்கு, இவ்வளவு பயங்கரமான உலக அறிமுகம் வேண்டாம். கொஞ்ச நாள் மனசு கஷ்டமா இருக்கும். அவங்க வீட்ல ஆரம்பத்துலேயே எதிர்ப்போட அங்கேயும் அன்பில்லாம, இங்கேயும் அன்பில்லாம அது திண்டாட வேண்டாம்.

ராஜனும் வைதேகியும், நல்லவங்க. என் கூட வேல பண்ணவங்க. நான் 10 வயசு மூத்தவ. அதனால ரிடையர் ஆயிட்டேன். அவங்க ரெண்டு பேரும் இத்தன நாள் பார்த்துட்டு இப்ப வேற வழி தெரியாம இந்த முடிவு எடுத்திருக்காங்க. என் தம்பி மாதிரி தான். தைரியமா ஒப்படைச்சுட்டு உன் வாழ்க்கைய வாழு.

நல்ல நேர்மறையான எண்ணங்கள் குழந்தைக்கு வரணும்னா, ஒரு அம்மாவா நான் இந்த கடமைய செய்யறேன். நீயும் அம்மா தானே? உன் கடமைய செய்.

…..

எங்களுக்கு எல்லாம் சரிதான். கல்யாணம் இன்னும் 15 நாள்ல வெச்சுக்கலாம். ஏன்னா கைலாஷ் ஆஸ்ட்ரேலியா போறான், சாந்தியும் போகணும். ஏற்பாடெல்லாம் பண்ணிடுங்க. பாப்பாவ என்ன பண்ணபோறீங்க?

சாந்தியின் அம்மா, அவ பத்திரமா சந்தோஷமா இருப்பா. என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *