கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 14,582 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

kalki1980-02-10_0035-picஅண்ணாவுக்கு ரசனை அதிகம். அதைப் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன் நான்.

ஒன்றுக்குப் பத்துக் கடை. ஏரீத் தான் சட்டைத்துணியோ, பாண்ட் துணியோ எடுப்பான். சட்டையைக் கன கச்சிதமான அளவில் தான் தைத்துக் கொள்வான்.

மோட்டார் பைக்கை அவன் துடைப்பதும், பாலிஷ் போடுவதும் அந்தக் காலனிக்கே வெளிச்சம்.. அத்தன பயபக்தி! “என் உருவம் அதில் தெரியணும்! போய் ஒரு டப்பா பாலிஷ் வாங்கிட்டு வா சேகர்!” என்று என்னை வேலை வாங்குவான் அண்ணா.

டில்லியிலிருந்து வந்திருந்தாள் அடுத்த வீட்டு ஜானி, “என் ஜானா! முகம் களையா இருக்கும் உனக்கு! முகத்தையே கோரமாக்கற அளவுக்கா அத்தனை பெரிய ஒரு தோடு போட்டுப்பா! உன் ஹஸ்பெண்ட் ரொம்பர் சகிப்புத் தன்மை உள்ளவர் போல் இருக்கு! பாவம், அவரை சோதிக்காதே! இதைக் கழட்டிட்டுப் பழையபடியே ரிங்கைப் போட்டுக்கோ. அதுதான் உனக்குப் பாந்தமாயிருந்தது

புறப்பட்டுப் போற போக்கில், அவளைப் பார்த்த ஒரு பார்வையில், ராஜா இப்படிச் சொல்லிலிட்டுச் சென்றான் என்றாலும், அவன் கூற்றில் உண்மை இருக்கும். அவன் ரசனை மாற்றுக் குறையாதது என்பதை உணர்ந்த ஜானா, அக்கணமே காதில் ‘ரிங்’ அணிந்து கொண்டாள்.

சாயந்திரம் அதைப் பாராட்டும் விதமாக, “குட்” என்று கூறிவைத்தான் ராஜா.

“நம்ப ராஜாவோட அழகுக்கும். ராசனைக்கும் ஏற்றவளாப் பெண் பார்க்கணும். நாம் போய் முதலில் பெண்ணைப் பார்த்துட்டுத்தான் அவனை அழைக்கணும்…” என்றெல்லாம் திட்டமிட்டு அம்மா, பல இடங்களில் பெண் பார்த்தாள்.

சென்ற வாரம் அம்மாவும் அப்பாவும் பார்த்துவிட்டு வந்த ஒரு பெண்ணைப் பற்றி வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தனர்.

“பெண் எலுமிச்சம்பழ நிறம். அவள் உதடுகள் ஆப்பிளைப் போல் சிவந்திருக்கும். உடம்பு தளதளன்னு அப்படி ஓர் அழகு. பி.ஏ. படிச்சுட்டுத் துடுக்குத்தனம் இல்லை. அடக்கம், ஒடுக்கப்ப குடும்பப் பாங்கு. நம்ப ராஜாவின் ரசனைக்கு ஏத்தவள்…”

மற்றவர்களின் விமரிசனங்கள் ராஜாவிடம் ஒரு கிளுகிளுப்பை கூட்டின. அவன் நிதானமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும், அந்தப் பெண்ணைப் பார்க்க ஆவலாக இருக்கிறான் என்பது புரிந்தது.

”என்ன ராஜா! நமக்கு இஷ்டமில்லேன்னு நினைச்சுடுவார் ரங்கநாதன், நாளைக்குப் போகலாமா? பெண்ணைப் பார்க்க?” என்று ஆரம்பித்தாள் அம்மா.

”நாளை சாயங்காலம் விசுவநாதன் வீட்டுக்குப் போகணுமே. நாலு நாலரைக்குப் பெண் பார்ப்பதாக ஏற்பாடு ” அப்பா ஞாபகப்படுத்தினர்.

“ரங்கநாதன் வீட்டுப் பெண் ராஜா முதலில் பார்க்கட்டும். அந்தப் பெண்ணை இவனுக்குப் பிடிச்சுடுங்கறதிலே சந்தேகமே இல்லை . ஆனாலும் திரும்பும்போது விசுவநாதன் வீட்டையும் பார்த்தாப் போச்சு”

ரசனை மன்னனை ராஜா கச்சிதமாக உடுத்திக் கொண்டு சிரிப்பு வழியும் முகத்தோடு புறப்பட்டான். ‘லட்சுமிகரமான பெண் வீட்டுக்கு நானும் ராஜாவுடன் சென்றிருந்தேன்.

அந்தப் பெண் வந்தாள்.

அம்மா சொன்னது அத்தனையும் மெய், இவன் ராஜான்னா, இவனுக்கேத்த லட்சுமி தான் அவள். நிறத்திலும், அழகிலும், அமைப்பிலும்.. ஓ! இவள் என் அண்ணியாக வர ரொம்பப் பொருத்தமானவள்!

அடக்கமாக எங்களோடு வந்து சகஜமா மட்கார்ந்தாள், கைகூப்பிவிட்டுப் போய் விட்டாள். அவள் எழுந்து போன பின்பும் வெகு நேரம் அந்த இருக்கையில் அவள் இருப்பதைப் போல ஒரு பிரமை என்னுள் தோன்றியது.

அண்ணாவின் முகத்தைப் பார்த்தேன். அவன் முகத்தில் ஒரு மலர்ச்சியும் குறு குறுப்பும் முற்றுகையிட்டிருந்தன.

“எப்படிடா சேகர்?” என்று மெல்ல என்னைக் கேட்டபோது, நான் வெட்கத்தோடு சொன்னேன். “எனக்குப் பிடிச்சிருக்கு, உனக்கு?”

அண்ணா நிறைவோடு சிரித்தான்.

kalki1980-02-10_0036-picஅடுத்து விசுவநாதன் வீட்டில் நுழைந்தோம். இந்தப் பெண் எங்களோடு சகஜமாக உரையாடினாள். நானப்படாமல், நம்பிக்கையோடு ராஜாவைப் பார்த்துச் சிரித்தாள்.

அவள் மேல் படிந்திருந்த வைரங்கள் அவளை மறைத்திருந்த பட்டாடைகள், அவள் பிம்பங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், சாண்ட் லியர்கள், எமல்ஷன் பெயிண்ட் சுவர்கள், அவள் காலடியில் நழுவும் பளிங்குத் தரை. அவள் வீட்டுக் குஷன் சோபாக்கள், மெத்தைகள், திரைச் சீலைகள், அபூர்வமான சித்திரச் சிற்பங்கள், கனிகளைக் குளிர்விக்கும் ஃப்ரிஜ்ஜம், காற்றைக் குளிர்விக்கும் ஏர் கண்டிஷன் யூனிட்டும்.. என்று எத்தனை எத்தனை கண்களுக்கு விருந்தாகத் தெரிந்தனவோ, அத்தனைக்கும் நேர்மாறாய்…

“எப்படிடா சேகர்?” ராதாவின் கேள்வி என்னை உசுப்பியது.

நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

“எனக்கு ‘இம்ப்ரஸ்’ ஆகலை அண்ணா!”

அவன் சிரித்துக் கொண்டான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா கேட்டாள். ”என்னடா ராஜா! முதலில் பார்த்த பெண்தானே உன் சாய்ஸ்?”

“இல்லையம்மா!” பளிச்சென், மறுப்பு அவன் குரலில் ஒலித்தது.

“என்னடா சொல்றே?” நம்ப முடியாத வளாகக் கேட்டாள் அம்மா.

“என் சாய்ஸ் ரெண்டாவது தானம்மா!”

“டேய்! டேய்! என்னடா ராஜா! நிஜமாத்தான் சொல்றியா?” அவன் சொற்களை ஜீரணிக்க முடியாமல் அம்மா விழித்தாள்.

“அண்ணா” என்று வெகு நேரம் கழித்து நிகழ் காலம் புரிந்தவனாக நான் பதறினேன்.

அண்ணா என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அந்தச் சிரிப்பு மாறாத முகத்துடனேயே அம்மாவைப் பார்த்து, ”ஆமாம்மா!” என்றான்.

“ஐயோ ராஜா! திடீர்னு புரிஞ்சுக்க முடியாதவனாயிட்டியே, எப்படிடா? அவள் அவலட்சணமும், திமிரடியான செயல்களும், செல்வச் செருக்கும்…”

“இங்கே காறை பெயர்ந்த வீடும், சுந்தல் உடைகளும், கழுநீர்க் காப்பியுமான சூழ்நிலையில் புறக்கண்களுக்கு அழகு தோற்றம் தரும் ஒரு பெண், அங்கே அவலட்சணம் என்ற முத்திரையோடு லட்சுமியையே கட்டியாளும் கோடீசுவரி, இரண்டுபேருமே என் முகத்தைப் பார்த்து நிற்கிறர்கள். தேர்ந்தெடுக்கும் சலுகை எனக்கு உண்டு. உரிமையாகப் போகிறவள் எனக்கல்லவா? இப்போது நான் நிதானமாக நினைத்துப் பார்க்கிறேன். வெறும் அழகைத் தேடினால் மட்டும் அதிர்ஷ்டம் வருமா? அஷ்ட ஐஸ்வர்யங்களையும் எனக்குத் தரப் போகிறவளுக்கு அழகு இல்லை என்றால் என்ன? அந்தச் செல்வாக்கில் வளர்ந்தவளுக்குத் திமிரும், மதர்ப்பும் இருந்தால் தான் என்ன?”.

அண்ணாவின் நிதான மொழிகள் எங்கள் செவிப் பறையில் இடி முழக்கமாக ஒலமிடுகிறது.

“ரசனைகளைக் குப்பைத் தொட்டியில் போடு! வெறும் ரசனைகள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தந்து விடுவதில்லை. அது மனமயக்கம். அதிலிருந்து நான் விடுபடவே விரும்புகிறேன்”.

நான் விக்கித்து நிற்கிறேன்.

செல்வமும், சீரும் சிறப்பும் கொண்ட விசுவநாதனின் வீட்டு மாப்பிள்ளையாகிய ராஜா அந்த மாளிகை வாசத்தின் சுக சொகுசுகளில் இரண்டறக் கலந்துகொண்டு கொஞ்ச மாதங்கள் ஓடிவிட்டன.

***

ராஜாவைப் பார்த்து நாளாகிவிட்டது. எப்போது போன் பண்ணினாலும் ராஜா இல்லை என்ற பாட்டுத்தான், ஒரு நாள் இரவு பத்து மணிக்கு ராஜாவிடம் ‘என் கேஜ்மெண்ட் பிக்ஸ்’ பண்ணிவிட்டு, அடுத்த நாள் காலை அவனைப் பார்க்கச் சென்றேன்.

முகப்பில் அண்ணாவின் காரை டிரைவர் பள பளவென்று துடைத்துக் கொண்டிருந்தான். ராஜா பரபரப்பாக வந்தான்.

ட்ரை வாஷின் மடிப்புக் குலையாத உடைகள் மேனியில் டாலடித்தன.

“வாங்க!” மரியாதைக்கு என்று புரியும் குரலோடு சொல்கிறாள் அண்ணி.

“பெண்கள்ன்னா கொஞ்சம் அழகா இருக்கணும்”கிற ராஜாவின் முந்தைய சொற்கள் என் மனத்தில் இரக்கத்தைச் சுரக்க வைக்கின்றன.

அவன் ரசனைகள் செல்லுபடியாகாத இடத்தில் அவர்களது ரசனைப் பொருளாக அல்லவா அவன் இருந்தான்? அவர்கள் மாளிகைக்கு அணிகலனான மாப்பிள்ளை அல்லவா? அவன் சிரிப்பும் கம்பீரமும், சுறுசுறுப்பும், அங்கு உயிரோட்டமுள்ள குரோட்டன்ஸ் செடிகளைப் போல் அலைபாய்ந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. விசுவநாதன் எவ்வளவு மகிழ்ச்சியில் திலைந்திருந்தால் ராஜாவுக்கு இரண்டு பங்களாக்கள், ரெண்டு கார்கள், பல ஷேர்கள் எல்லாம் வாங்கித் தந்திருப்பார்! .

அண்ணா நல்லவன். கிடைக்காத வாழ்க்கை கிடைத்ததினால் ஏற்காத ரசனையையும் ஏற்கப் பழகிக் கொண்டான்!

“நான் வரட்டுமா சேகர்!” என்று பறந்த ராஜா காரை அலட்சியமாகக் கிளப்பினான், “மறந்துட்டேனே சேகர்! வருகிறாயா டிராப் பண்ணிடறேன்.”

“டிபன் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே” அண்ணியின் குரலில் உரிமை பாவம் தொனிப்பது தெரிந்தது.

பலகார வகைகள் ஓர் ஆள் எடுத்து வந்தான். என் அருகே இருந்த நாற்காலியில் உட் கார்ந்தவாறே அண்ணி பரிமாறினாள்.

“அந்தப் பெண்ணேட உங்கண்ணாவுக்கு எத்தனை நாட்களாய்த் தொடர்பு?”

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அதுதான் என்னைப் பெண் பார்க்க வருவதற்கு முன், ஓர் ‘அழகான’ பெண்ணைப் போய்ப் பார்த்து வந்தீர்களாமே, அவளைப் பற்றித்தான் கேட்கிறேன்.”

“அண்ணாவுக்கு அவளை முன் பின் தெரியாதே…?”

என் சொற்களை இடை வெட்டினாள் அண்ணி, “இப்பொழுது முன் பின் மட்டுமல்ல, முழுக்கவே தெரியும்.”

நான் அதிர்வில் மௌனியானேன்.

“எனக்கேற்றவரை நான் தேடியிருக்கணும். என் பேராசை என் வாழ்க்கையை இரண்டாம் பட்சமாக்கி விட்டது… ஆமாம், முன்னுரிமை அவளுடையது….”

“என்ன சொல்கிறீர்கள் அண்ணி?”

“புரியவில்லையா சேகர். தம் அழகை வைத்து என் செல்வத்தை வென்றர். பின் செல்வத்தை வைத்துத் தமக்குரிய அழகிய பெண்ணை ஏற்றுக் கொண்டார். இதற்கு மேல் கேட்க வேண்டாம்”.

அண்ணி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்ளை. ராஜாவா இப்படி? செல்வ மயக்கத்தில் விழுந்து விட்டான் என்ற அதிர்ச்சியை விட எத்தனை பெரிய அடி? மணந்தவளை விட்டு மற்றவளை….சீ! ராஜாவும் இப்படியா? அவன் ரசனைகளுக்கு இப்படி ஒரு வாய்க்காலா? இப்படி ஒரு நயவஞ்சக நாடகமா?

நான் உறைந்து போனேன்.

– 10-02-1980

Print Friendly, PDF & Email

1 thought on “ரசனைகள்

  1. கோமகள் எழுதிய சிறுகதை, புதினங்கள் இருந்தால் பதிவிடுங்கள் ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *