கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,796 
 

ஊரிலிருந்து அத்தையைக் கூட்டிக்கொண்டு வரப்போகிாரா?

பாலகோபாலனிடமிருந்து கெஞ்சலாக வந்த அந்தக் கோரிக்கையைக் கேட்டு மஞ்சுளா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனாள். மனிதருக்கு ஏதாவது கிறுக்குப் பிடித்திருக்கிதோ என்று தோன்றியது. பிகு “”உங்கள் விருப்பம்” என்று தலையை ஆட்டினாள்.

ஏமண்டி மீரு.. என்று உரத்த குரலில் ஏதோ சொல்லிக்கொண்டே வந்த தனலட்சுமி (ஹைதராபாத்தில் கால் நூற்ாண்டு வாசம்) மாப்பிள்ளையை நோக்கிக் கிண்டலாக புது அடுப்பைப் பார்த்தாரா அவரு ! சொல்லுடி உன் புருசன் கிட்ட.. வெளியே ஓர் இடத்துக்குப் போக தைரியம் இல்லை.. ஒரு சாமான் வாங்கிவரத் துப்பு இல்லே.. என்று பொரிந்து தள்ளினாள்.

பாலகோபால் ஏதும் பேசவில்லை. மவுனமாக மாமியார்க் காரியை ஏஇங்கப் பார்த்துவிட்டு உள்ளே போனான். அவர் செய்கி கிண்டல், மனைவியின் அர்த்தமுள்ள மவுனம்.. எல்லாமே அவனுக்குப் புதிது இல்லை. பழகிப்போனது. கல்யாணமான நாலாவது வருஷம் மனைவி தரப்பில் மளமளவென்று பிரமிக்கத்தக்க பணக்காரத்தனமான மாறுதல்கள் நியை வந்தவுடன் எல்லாவற்ûயும் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டான்.

படித்தவள்.. பண்பு நியை இருக்குமென்று எண்ணித்தான் அவன் மஞ்சுளாவைþ அந்தஸ்து வித்தியாசம் தெரிந்தும்þ கைப்பிடித்தான். அவர்கள் அந்தஸ்தையும், அபரிமிதமான ஆசைகளையும், தன் உத்தியோகம் ஈடுகட்டிச் சமனப்படுத்தி விடுமென்று எதிர்பார்த்ததுதான் கானல் நீராகப் போயிற்று.

அதுவும், மஞ்சுளாவின் தங்கை தன்கணவனுடன் சான்பிரான்சிஸ்கோ சென் ஒன்ரை ஆண்டிலேயே நியை சம்பாதித்துக்கொண்டு வந்தவுடன்þ

“”ஏங்க? நீங்களும் ட்ரை பண்ணலாமே?”

“”சொல்லு..சொல்லு உன் புருஷன்கிட்ட. தங்கமாகவே கொண்டு வருவார்.”

“”உங்க படிப்புக்கெல்லாம் நியை ஸ்கோப் இருக்காமே!”

பாலகோபாலுக்கு ஏனோ விருப்பமில்லை. இங்கு, பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் கெüரவமாக இருப்பது, அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. கண் முன்னால சினேகிதர்கள் சிலர் சட்டென்று உடுப்பைக் களைந்து மாற்றிக்கொள்வது போல வேலையைவிட்டு வெளிநாட்டுக்குச் செல்வதைக் கண்டிருக்கிான். மஞ்சுளாவின் தாயாருக்கு அந்த வெறி போலிருக்கிது.

“”என்னங்க.. உங்களைத்தானே? உங்க மாதிரி படிப்பு, வேலை அனுபவம் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருச்சாமே?” மஞ்சு சொன்னாள்.

“”கனகா(மைத்துனி) ஒரு வாக்யூம் கிளினர் வாங்கிட்டு வந்திருக்காளே, பார்த்தீங்களா?”

“முபாங்கிலே லோன் போட்டு வாங்கித் தரனே.’

எதுக்கு லோன் போடது? நீங்க படிச்ச படிப்புக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போகலாமே! என்ாள் தனலட்சுமி. “”மஞ்சு தனியா இருப்பா.. ஏன், எவன் கூடவாவது ஓடிப்போயிடுவாள்னு பயமா?””

அவன் காதைப் பொத்திக்கொண்டான். குழாய்ச் சண்டை போடும் பெண்மணிகளைப்போல், சிலசமயம் மாமியார்க்காரி பேசுவாள், ஆனால் இப்படியா.

பார்க்கிúன் என்ான் அரை மனசுடன். அன்றிரவே ஏதோ ஒரு விளம்பரத்தை முழுசாகக் கத்தரித்து விண்ணப்பித்தான், வற்புறுத்தல் தாங்காமல். வேலை கிடைக்கவில்லை, அவன் எண்ணம் போல. ஆனால் சில மாசத்துக்குள் வேùாரு சகலை வெளிநாட்டுக்குப் போனார். துபாய் பக்கம்.

சொல்லுடி உன் புருசன்கிட்டே! படிச்சு படிச்சு சொல்லு, யார் கை, காலையாவது பிடிச்சு டெபுடேசன் போகச் சொல். ஏ..யப்பா, ஒரு டாலர் நாப்பது ரூபாய்க்கும் மேலே! என்று தனலட்சுமி மாய்ந்து போனாள்.

பாலகோபாலனுக்கு ஐந்துவருட மண வாழ்க்கை இந்த அலைவரிசை ஒத்து வருவது கடினம் என்பதைப் புரிய வைத்தது. அதுவும் கண் முன்னாடிப் பலர் மஞ்சுளாவைத் தூண்டிக்கொண்டே இருப்பது, மனவிரிசல் அதிகரிக்கக் காரணமாயிருந்தது.

இத்தனைக்கும் எந்தக் குûயுமில்லை. ஓர் ஆண் குழந்தை.. ஆபீஸ் கார்.. டெலிபோன். குவார்ட்டர்ஸ் என்று சகல வசதிகளையும் கொண்ட உத்தியோகம்.. இருந்தாலும் மஞ்சுளாவுக்கு நிம்மதி இல்லை. அதுவும் அவள் தம்பி (சித்தி பிள்ளை) லண்டன் சென்று, பேசுகி பொம்மை, கூவுகி கடிகாரம் என்று விதவிதமான பொருட்களைப் பெருமையுடன் காண்பித்த அன்று.

சொல்லு தம்பி.. விளங்கச் சொல்லு.. கடல் தாண்டிப்போனால் தங்கம் வெட்டிக் கொண்டாரலாம்னு சொல்லு, என்ாள் தனலட்சுமி.

பாலகோபாலன் புன்னகை செய்தான். பிகு மெதுவாக, “”இப்ப இங்கே என்ன குûச்சல்?”

போங்க அப்பா ! என் ப்ரெண்டோட அப்பா கூட நியூசிலாண்ட் போயிருக்காரு என்ான் பையன், மழலை மாாத குரலில்.

அவன் திடுக்கிட்டான். இத்தனை சின்னவயசில இந்த நினைப்பு ஆழப் பதிந்துவிட்டதே!

அந்த வேளை பார்த்து அவன் ஆபீஸ் சினேகிதன் (டெபுடேஷன் சென்வன்) வந்து சேர்ந்தான். ஹல்லோ என்று கூறிக்கொண்டே, இயல்பாக விருந்தில் பங்குகொண்டான். அவனும் ஒத்து ஊதினான். கோபாலா உனக்குத் திமை இருக்கு. பட் யு வுட் மஸ் ஹவ் கரேஜ்..

அதுதானே இல்லை போதுமென் மனசாம்.. கோபாலானந்த சாமியார்.

கலகலவென் சிரிப்பு அûயெங்கும் அலை மோதியது. திடீரென்று தான் ஒதுக்கப்பட்டவன்போல் உணர்ந்தான். ஓரமாக இருந்த வாக்யூம் க்ளீனர் சமையல் உள்ளில் உள்ள நவீன அடுப்பு, துல்லியமான இசைதரும் ஸி.டி.þ எல்லா புது சாதனங்களுமே, பொருட்களுமே தன்னை ஒதுக்குவதுபோல் தோன்றியது.

பாதிச் சாப்பாட்டில் கையலம்பிக்கொண்டு எழுந்தான். பசி இல்லையென்று சாக்குச் சொன்னான். மறுதினம் மஞ்சுளாவிடம் நான் எளம்பிள்ளை போயிட்டு வரலாம்னு பார்க்கிúன் என்ான்.

அவள் புருவத்தை உயர்த்தினாள், என்ன அங்கு அதிசயம் என்று கேட்பது போல.

உங்க ஊர் எளம்பிள்ளைக்கா? போங்க.. போயிட்டு வாங்க! அங்கேருந்து கூட ரொம்ப பேர் சவுதிக்கும், சிங்கப்பூருக்கும் போாங்களே? சம்பாதிச்சுட்டு வராங்களே! போயிட்டு வாங்க..

மறுபடி சிரிப்பு.. ஏளனப் புன்னகை..

பாலகோபால் எழுந்தான். சொன்னபடி, சேலத்துக்கு அருகிலுள்ள தன் கிராமத்துக்குப் போய் விட்டுத் திரும்பினான்.

ஆனால், ஊருக்குப் போனவன் இதுபோல் உடனே செய்வானென்று மஞ்சுளா எதிர்பார்க்கவில்லை.. கிராமத்திலிருந்து அத்தையை வரச்சொல்லியிருக்கிானாம். தனியே இருந்து கஷ்டப்படுகிாளாம்.

சரி.. இருந்துவிட்டுப்போகட்டும்.. காலம் இருக்கி இருப்பில் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே போவது சங்கடமாகத்தானிருக்கிது. இந்த வயதிலும் உடல் தளர்ந்து போனாலும், அத்தைக் கிழவிக்குக் கண்ணும், காதும் திடமாகத்தானிருக்கிது என்று சொல்லியிருக்கிார்.

தனலட்சுமி என்னா இது? எந்துரு இக்கட ராவையா? என்று முகம் சுளித்தாள்.

என்னவோ அவரைச் சின்ன குழந்தையிலேர்ந்து எடுத்து வளர்த்தவராம்.. மெட்ராஸ் பார்க்கணுமாம்..

சரி வந்துட்டுப் போகட்டும்.. நாமும் அடிக்கடி வெளியே போúாம்.. வீட்டிலே பாதுகாப்பா இருப்பாங்க.

அத்தைக்காரி மற் விஷயங்களில் எப்படியோ தெரியாது.. சொன்னாள்.. சொன்னபடி வந்து சேர்ந்துவிட்டாள். அழகுணர்வுடன் காட்சி தந்த வீடு, கார் போன் வசதி, நூதனமான நவீன சாதனங்கள் போன்வற்ûக் கண்டு சற்று வியந்துதான் போனாள். “”ஏண்டாப்பா கோபாலு.. அதெப்படிடா சீக்கிரம் சாதம், கறி வெந்துடது?”

உங்க வீட்டுப் பிள்ளை மந்திரம் போடாரு.. சோறு ஆகி விடது.. அட போங்க அத்தை நீங்க! என்று கேலி செய்தாள் மஞ்சுளா. இந்த அடுப்பு என் தங்கை கொண்டு வந்தது.. அறுநூறு டாலர்.. ஒரு டாலர் வந்து..

சீப்பா இருக்கே, என்ாள். அத்தைக் காரி பாதி விஷயம் காதில் போட்டுக்கொண்டு..

ரூபாய மாத்தினால் எவ்வளவு ஆகும் தெரியுமா? என்று தனலட்சுமி கணக்கு போட்டுச் சொன்னாள்.

அடேயப்பா! என்று வாயைப் பிளந்தாள் அத்தை.

உங்க பிள்ளையையும் புத்திசாலியா இருக்கச் சொல்லுங்க..

சம்பாஷணையில் குறுக்கிடாமல் மவுனமாகக் கேட்டு வந்தான் பாலகோபால்..

ஆனால் மஞ்சுளா கவனித்துக்கொண்டுதானிருந்தாள். கணவர் போக்கில் முளைத்த மாறுதல்களை சுள்ளென்று சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் அத்தையிடம் எரிந்து விழுந்தான். அழைப்பு மணி கேட்டவுடன், உடனே கதவு திக்கப்படாவிட்டால்.. சமையலில் உப்பு, புளி கூடவோ, குûவாகவோ இருந்தால் அநியாயத்துக்குக் கோபித்தான்.

என்னது? ரசமா இல்லை புளித் தண்ணீரா?

உடம்பு முடியலைடாப்பா.. தலை சுத்துதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே?

பிடிச்சு தள்ளினா உலகமே சுத்தும்! சே.. வர வர.. தட்டை வீசி எறிந்தான்.

மஞ்சுளாவுக்கு ரொம்ப ஆச்சரியம். வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்ாலும் உடனேயே டாக்டரை அழைத்துக்கொண்டு வருவார்.. ஏன் அம்மா தனத்துக்கு ஒருநாள் சாதாரண வயிற்று வலி வந்தபோது, மழையையும் பொருட்டாக எண்ணாது காரில் சென்று டாக்டருன் திரும்பினாரே!

அவரா இதுபோல் மாறியிருக்கிார்?

மாசக் கடைசி.. வெள்ளிக்கிழமையன்று சோஷல் கிளப்புக்குச் சென்று வருவாள் மஞ்சுளா. அன்று அப்படித்தான் கொஞ்சம் ஆடல், பாடல், அரட்டை என்று நிகழ்ச்சி முடிய தாமதமாகிவிட்டது..

வீட்டில் நுழைந்தால், அவள் பார்த்த காட்சி!

ஓர் ஓரமாக உட்கார்ந்து, வயிற்ûப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் அத்தைக்காரி.

காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே? டாக்டர்கிட்டே கூட்டிகிட்டு போயிருப்பேனே என்று எரிந்து விழுந்தான் பாலகோபால். சனியனே இந்த மாதிரி அசிங்கப்படுத்திட்டியே!

அய்யோ..சாயந்தரம் அந்த ஜிலேபி ஒண்ணு எடுத்து போட்டுகிட்டேன்.. மறுபடி ஒக்காளம்.

சனியனே..சனியனே முதல்லே இதைத் துடை.

அய்யோ..முடியலியே.. என்னை விட்டுடு.. நான் ஊருக்கே போயிடúன்.

ஊருக்கா.. சே என்று பாய்ந்து போய் அத்தைக்காரி முதுகில் கை வைத்தான் பாலகோபால். அவள் கையில் ஓர் அழுக்குத் துணியைத் திணித்தான். துடைச்சுடு.. துடை இங்கே எல்லாமே சுத்தமா இருக்கணும். எல்லா மெஷினும் நல்லபடியா இருக்கணும். தெரிஞ்சுதா? உன்னை.. அடிக்க வருவதுபோல தன் கையை ஓங்கினான்.

வேண்டாண்டா.. வேண்டாம்.. என்னை விட்டுடு.. இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்று அத்தைக்காரி வீறிட்டு அலறியது, கூடத்தில் தெளிவாகக் கேட்டது.

தனலட்சுமிþசுவாரஸ்யமாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தவள் ஒடி வந்து, என்னடி ஆச்சு உன் புருஷனுக்கு? மிருகம் மாதிரி நடந்துக்கார் என்று மஞ்சுளாவிடம் கேட்டாள்.

மஞ்சுளா அமைதியாய்த் தாயாரை நோக்கினாள். ஏன்? ஏன்னா கேட்கி.. நாம யாருமே இங்கே அவரை மனுசனா மதிக்கலை.. அதுதான்.. தன்னையுமறியாமல், வார்த்தைகள் கோர்வையாகத் தெறித்து விழுந்தது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

உண்மைதான். யார் இங்கே பாலகோபாலை, ஒரு மனிதனாக ரத்தமும் சதையும், படிப்பும் மானமும் உள்ள ஜீவனாகக் கருதியிருக்கிார்கள்? சம்பாதித்துப்போடும் கருவி.. அப்பும், ரத்தம் சொட்டச் சொட்ட குத்திக் காட்டப்படும் வார்த்தைகளை மவுனமாகக் கேட்டு ஏற்கும் மெஷின்.

அதனால்தான், தனது சினத்துக்கு ஒரு வெளியீடாக, உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக அத்தை மீது பாய்கிாரோ? அதற்காகத்தான் அவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிாரோ?

மஞ்சுளாவுக்குள் மளமளவென்று இரக்கம் சுரந்தது.

இரவு, தனி அûயில், மெல்லிய வெளிச்சம் தெரிய படுக்கையில் கணவனை அணைத்துக்கொண்டு உங்களைப் புரிஞ்சுகிட்டேங்க! அத்தையை வேணுமானால் ஊருக்கு அனுப்பிச்சுடுங்க என்ாள் மென்மையான குரலில்.

பாலகோபால் கண்களில் மலர்ச்சி ஒளிர, அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

– ஜனவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *