மூன்றாம் நாள் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 1,219 
 
 

 “சீக்கிரம் சீக்கிரம் மாலையெல்லாம் அந்தத் தூண்ல கட்டுங்க, சாப்பாடெல்லாம் ரெடி ஆயிருச்சா? மாப்பிள வீட்டுக்காரங்க வர நேரமாச்சி, வேலையெல்லாம் அவுங்க வர்ரதுக்குள்ள முடிங்க” என அப்பாவின் அதட்டலைக் கேட்டு வேலையாட்கள் தங்கள் வேலைகளைப் பரபரப்பாகச் செய்ய தொடங்கினர். அவர்களின் வேலைகளை முடிக்கும் வரை அப்பாவின் அதட்டல் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருந்தது.  

இதற்கிடையில் பக்கத்து வீட்டு சிறுமி மதியழகி எங்கள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடி ஆடி மற்ற சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்பாவின் அதட்டலின் கிடையில் இவளின் குறும்புதனமும் சிரிப்பும் வீட்டை அழகுற செய்தது. மதியழகி பக்கத்து வீடாக இருந்தாலும் எங்கள் வீட்டில்தான் அதிகமாக இருப்பாள். எனக்கும், அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இவளை மிகவும் பிடிக்கும். இவள் எங்கள் வீட்டிற்கு வந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும்.  

“அம்மா கவிதா கிளம்பிட்டியா மா, மாப்பிள வீட்டுக்காரங்க வர நேர்மாச்சி, சிரிச்ச முகத்தோடு இரு மா” என்று அறைக்குள் வந்து அன்புடன் சொல்லி விட்டு எனது நிச்சய வேளைகளைத் தொடர்ந்தார் அப்பா. 

பி. எச். டி. முடித்தவுடன் என் மருத்துவ பணிகளில் முழுதாக ஈடுபட்டிருந்ததால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. அப்பாவும் நிறைய மாப்பிளை படம் என்னிடம் காண்பிப்பார். எவரையும் எனக்குப் பிடிக்காது. கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.  

இறுதியாக, தனது பால்ய நண்பனின் மகனின் படத்தை என்னிடம் காண்பித்து “மா இது என்னோட ரொம்ப நெருக்கமான சின்ன வயசு கூட்டாளி, உனக்குக் கூட நல்ல தெரியுமே, அவன் பைய சிவா ஒரு இன்ஜினியர், எனக்கும் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கோ மா, அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கான், முடியாது மட்டும் சொல்லாத மா, அப்பாக்காக இந்தத் தடவ ஏத்துக்கோ” அப்பா அப்படி என்னிடம் கெஞ்சுவது என் மனதை வருத்தியது சரி என்று நானும் ஒத்துக்கொண்டேன். 

“மாப்பிள வீட்டுக்காரங்க வன்ட்டாங்க” என்ற கூச்சல் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டேன். அப்பாவின் விருப்பப்படியே நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்தது.  

எனக்கு வேலை பழு அதிகமாக இருந்ததாலும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதாலும் சிவாவும் நானும் ஒருவருக்கொருவர் பழகுவதற்குச் சரியான நேரம் கிடைக்கவில்லை. 

ஒருநாள், எனக்கு வேலை முடிந்த பிறகு என் மருத்துவமனை அருகே உள்ள ஓர் உணவகத்தில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். இருவருக்கிடையில் நல்ல தொடர்பாடல் இருந்தது. திடீரென்று ஒரு பெரிய பட்டாம்பூச்சி பறக்க முடியாமல் எங்கள் மேசையில் வந்து விழுந்தது. சிவா உடனே அதை எடுத்து சென்று உணவகத்தில் உள்ள செடியின் மேல் வைத்து விட்டு வந்தான். 

“நான் எந்த உயிராக இருந்தாலும் நேசிப்பேன். பூச்சீகள், அனிமல்ஸ், அப்றம் ஹுமன்ஸ் கூட அதுவும் எனக்கு சின்ன குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்”  

சிவா செய்த செயலும் அவரைப் பற்றி கூறவும் எனக்கு அவரைப் பிடிக்க ஆரம்பித்தது. அவருக்கும் என்னைப் பிடித்ததாகத் தெரிந்தது. 

ஒருவித புது உணர்வுடனும் மிகுந்த சந்தோஷத்துடனும் வீட்டிற்கு வந்தேன். இருந்தாலும் எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. உறங்க சென்றேன்.  

“ஆ..ஆ..என்ன விடு என்ன விடு நா வீட்டுக்கு போனோ.. காப்பாத்துங்க” 

“ஏய் கத்தாதிங்க.. வாய மூடுங்க எல்லாரும்..” 

“ஆஆ..” என்று சிறுமிகளின் அலறல் கேட்டு திடுக்கிட்டு தூக்கத்திலுருந்து சட்டென்று எழுந்தேன். உடம்பு முழுவதும் வேர்வையில் நினைந்தன. கை கால் நடுங்க ஆரம்பித்தன. அது கனவு என்பதை உணர்ந்தேன். இதுவரையில் வராத ஒரு புதுவித பயங்கர கனவு. சுமார் ஒரு பத்து சிறுமிகளின் கதறல். ஒரு கொலைகாரன் கையில் கத்தியுடன் அவர்களை மிரட்டி கொண்டிருந்தான். 

யாரது? ஏன் இந்த கனவு வந்தது? இல்லை இது வெறும் கனவுதான் என்று எனக்குள்ளே சாமாதானம் படுத்திவிட்டு மறுபடியும் உறங்கினேன். தூக்கம் வரவில்லை. மறுபடியும் அதே கனவு அதே சிறுமிகளின் கதறல். கண் விளித்தேன். மணி 4 ஐ எட்டியது. சிறிது அதைப் பற்றி யோசித்துக் கொண்டு அங்கும் இங்கும் உளாவினேன்.  

பின் என் வேலைக்கும் நேரமாகி விட்டது. எப்போதும் போல் வேளைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினேன். இரவில் தூங்குவதற்கு முன் அந்தக் கனவு பற்றிய நினைவாகவே இருந்தது. உறங்க சென்றேன். மறுபடியும் அதே கனவு இம்முறை கொலைகாரனின் அடையாளம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. முக மூடி அணிதிருந்தான். அடத்தியான புருவத்தில் ஒரு வெட்டு இருந்தது. தலையில் ஒரு கருப்பு நிற தொப்பி அணிதிருந்தான். பின்பு, அவன் கடத்தப்பட்ட சிறுமிகளைக் கொடூரமாகக் கொலை செய்வதும் கனவில் பார்த்தேன்.  

அதன் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. விளித்துக் கொண்டேன். மணி அதே 4 ஐ காட்டியது. காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன் அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  

“அம்மா ரெண்டு மூணு நாளா ஒரு கெட்ட கனவு வந்துட்டே இருக்கு மா. அதனால சரியா தூங்க கூட முடில. வேளையிலும் போகஸ் பண்ண முடில. யாரோ ஒரு கொலைகாரன் கிட்டத் தட்ட 10 சின்ன பொண்ணுங்கள கொடூரமா கொலை செய்யிற மாறி கனவு மா..எனக்குப் பயமா இருக்கு மா நெஞ்செல்லாம் பதறுது இந்தக் கனவு உண்மையா இருக்குமோனு” 

“அதெல்லாம் ஒன்னும் இருக்காது. அது வெறும் கனவாதான் இருக்கும். சும்மா கண்டதையும் போட்டு யோசிச்சி நீயே கெடுத்துக்காத” அம்மாவின் பேச்சு என் மனதை மேலும் வருத்தியது. 

“காணாமல் போன 10 சிறுமிகள் கொடூரமாகக் கொலை” என்று அப்பா சத்தமாக நாழிதலில் உள்ள செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டவுடன் வெடுக்கென்று அப்பாவிடமிருந்து நாழிதலை வாங்கி படித்தேன். நான் கனவில் கண்ட அதே சம்பவம். அந்தச் செய்தியைப் பார்த்தவுடன் சிறிது நேரம் மலைத்துப் போனேன். 

“கவிதா, கவிதா என்னடி ஆச்சி?” 

“ஐயோ அம்மா நா சொன்னல அந்தக் கனவு அதே மாரிதான் இந்த நியூஸ்லயும் போட்டுருக்கு எனக்கு எதுவும் சரியா படல. நா கண்டது கனவு இல்ல நிஜம் மா”  

அம்மாவும் அப்பாவும் ஒன்றும் புரியாதவாறு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். 

“சரி மா நீ மொத வேளைக்குப் போ.. மத்தத அப்றம் பேசிக்கலாம்..” என்று அப்பா கூறியதும் எதுவும் பதில் கூறாமல் வேளைக்குச் சென்றேன். 

அந்த நாளில் அப்பாவும் அம்மாவும் எனக்கு ஜாதகம் பார்க்க ஒரு சாமியாரிடம் சென்றனர். “கவிதாவின் வாழ்க்கையில் ஒரு கட்டம் நடக்க விருக்கும் சம்பவங்கள் கனவுகளாக வரும். இந்த அதிசயம் உலகில் உள்ள ஒரு சில பேருக்குதான் இருக்கும். நீங்க இருவரும் ரொம்ப நாட்கள் பிள்ளை இல்லாம இருந்து தவம் இருந்து பெற்ற பிள்ளை கவிதா அதனாலதா இப்படி.. அவள் சாமி பிள்ளை” என்று சாமியார் கூறினார். 

என் பெற்றோர்கள் ஜோதிடம் நிறைய பார்ப்பர். ஆனால், அனைத்தும் நம்ப மாட்டார்கள். இதுவும் அப்படிதான். இது எல்லாம் ஒரு பிரமை. நாளடைவில் நான் சரியாகிவிடுவேன் நான் கண்ட கனவையும் மறந்து விடுவேன் என்று என் பெற்றோர்கள் எண்ணி இதைப் பெரிது படுத்தாமல் ஜோதிடம் விஷயம் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டனர். 

என்னால் வேலை நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கனவில் வந்த அந்தச் சிறுமிகளின் அலறல் சத்தமும் கொலைகாரன் மிரட்டி கொலை செய்வதும் என் நினைவில் ஓடி கொண்டே இருந்தது.  

முதல் கனவில், சம்பவம் பற்றியும் அடுத்த கனவில் கொலைகாரனின் முக அடையாளம் என்று ஒவ்வொரு முறையும் கனவு மேம்படுகின்றது என்பதை அறிந்தேன். ஆகையால், இனி வரும் சிறுமிகளையும் கொலைகாரனையும் கண்டுபிடிக்க தூக்கத்திலே ஒரு வழி கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன். 

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உறங்க சென்றேன்.  

“ஆஆ..யாருடா நீ.. ஐயோ யாராவது என்ன காப்பாத்துங்க, காப்பாத்துங்க.. அம்மா..!!”  

மறுபடியும் அதே கனவு. ஆனால், இம்முறை கடத்தப்பட்டது என் பக்கத்து வீட்டு மதியழகி. அவளை ஒரு கருப்பு நிற வண்டியில் கடத்தி ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அந்த வண்டி சிட்டாய் பறந்தது. 

விளித்துக் கொண்டேன். கண்களில் கோபம் கலந்த பரிதாபத்துடன் கண்ணீர் தேங்கியது. மதியழகியையும் மற்ற சிறுமிகளையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் வந்தது. காவல்துறையிடம் கூறினால் பெற்றோருக்குத் தெரிந்து விடும். பெரிய பிரச்சனை ஆகி விடும். ஆதலால், நானே அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன். 

காலையில் எப்போதும் போல் வேளைக்குக் கிளம்பினேன். நேராகக் கடத்தப்பட்ட இடத்திற்குச் சென்றேன். சுற்றும் முற்றும் யாரும் தென்படவில்லை. ஒரே மயான அமைதி. திடீரென்று ஒரு அழும் குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தேன். அதே நேரத்தில் யாராவது இருக்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே மெல்ல உள்ளே அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தேன். 

உள்ளே 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். அவர்களின் வாயையும் கை கால்களையும் கட்டி போட்டு தரையில் வைத்திருந்தனர். அவர்களின் அந்தக் கவலை கிடமான நிலையைப் பார்த்தவுடன் என் மனம் பதறியது. உடனே சென்று அவர்களைக் காப்பாற்ற முயன்றேன். சுற்றி கொலைகாரன் இருக்கிறானா என்பதையும் கவனித்துக் கொண்டேன்.  

அவ்வமயம் யாரோ என் முதுகில் பட்டென்று அடிப்பது போல் உணர்ந்தேன். வலியில் அவதிப்பட்டேன். திரும்பி பார்த்தேன். கொலைகாரன் கையில் ஒரு கட்டையுடன் முகத்தில் முக மூடியுடன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

மறுபடியும் என்னை அடிக்க முயன்றான். பலம் கொண்டு அவனைத் தடுக்க முயன்றேன். பளார் என்று ஒரு அரை விட்டான். நான் கீழே விழுந்தேன். வலியால் துடித்துக் கொண்டிருந்தேன். கொலைகாரன் கீழே குனிந்து நான் மயங்கி விட்டேனா என்று பார்த்தான். 

நான் விழுந்த இடத்தில் அருகே ஒரு பெரிய கல் ஒன்று இருந்தது. அவன் கிழே குனிந்து என்னைப் பார்க்கும் பொழுது உடனே அந்தக் கல்லை எடுத்து கொலைகாரனின் தலையில் ஓங்கி அடித்தேன். கொலைகாரன் ஐயோ என்று கத்திக்கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு மயங்கி கீழே விழுந்தான். அவன் விழுந்ததில் அவன் அணிந்திருந்த முக மூடி கழண்டியது. 

நான் எழுந்து சென்று சிறுமிகளின் கயிறுகளை அவிழ்க்க ஆரம்பித்தேன். பிறகு, கொலைகாரனின் அருகே சென்று உயிரோடு இருக்கிறானா என்று அவன் மூக்கின் கீழ் கையை வைத்து பார்த்தேன். மூச்சி இருந்தது. ஆனால் மயங்கி இருந்தான். சிறுமிகளிடமிருந்து அவிழ்த்த கயிறை எடுத்து அவன் கை கால்களைக் கட்டி போட்டேன். அவன் முக மூடியை எடுத்து அவன் வாயை அடைத்தேன். 

அவனையும் காப்பாற்றிய சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறினேன். வெளியேறியவுடன் என் நண்பனுக்கு அழைப்புக் கொடுத்தேன். நாங்கள் இருவரும் காப்பாற்றிய சிறுமிகளையும் கொலைகாரனையும் காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டு மதியழகியை மட்டும் என்னுடன் அழைத்துச் சென்றேன்.  

“ரொம்ப தேங்க்ஸ் கா.. நா ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா கா.. அந்த முகமூடி அங்கில் எங்கள எல்லாரையும் கொல்ல வந்தாரு அப்றம் ஏதோ ஒரு கால் வந்து வெளியே போயிட்டாரு”  

“சரி மதி..விடு..இதுக்கு அப்றம் எதுவுமே நடக்காது.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அக்கா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தாரேன்..” 

அவர்களைக் காப்பாற்றி விட்ட சந்தோஷம் இருந்தாலும் மனதில் ஏதோ ஒன்று எனக்குச் சரியாகப் படவில்லை. அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. நான் கனவில் கண்ட கொலையாளியின் அடையாளம் யாவும் நான் காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்த கொலையாளியின் முகத்தில் இல்லை. அவன் இன்னும் பிடிப்படாமல் இருப்பதை நினைத்து வருந்தினேன். 

வீட்டிற்கு வந்தவுடன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறினேன். அடி வாங்கியதை மட்டும் சொல்லவில்லை. 

“நீ எதுக்கு அந்த இடத்துக்கு போன? போலீஸ் கிட்ட சொல்ல வேண்டியதுதானே. சரி விடு உனக்கு ஒன்னும் ஆகலல அது போதும்.” என்று கூரினார். 

மிகவும் களைப்பாக இருந்தததால் அன்றிரவு சீக்கிரமாக உறங்கினேன். 

அதே கனவு ஆனால் இம்முறை கொலைகாரனின் முகம் தெளிவாகத் தெரிந்தது.  

“சிவா?” என்று சட்டென்று முளித்து எழுந்தேன். கனவில் வந்த கொலைகாரனின் அடையாளம் அனைத்தும் பொருந்தி தான் மறுநாள் திருமணம் செய்ய போகும் சிவாவின் முகம் தெரிந்தது.  

சிவா வா அந்தக் கொலையாளி? என்று ஒரு கனம் ஒன்றும் புரியாமலும் நம்ப முடியாமலும் மனதில் குளம்பி கொண்டிருந்தேன்.  

“மா கவிதா, கதவு தொர மா, கல்யாணத்துக்கு நேரமாச்சி பிராய்டல் வந்துட்டாங்க உனக்கு மேக் அப் பண்ண” அம்மாவின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தேன். 

அம்மாவிடம் சொல்லிவிடலாமா.. இல்லை காவல்துறையிடம் புகார் செய்வதா.. என்று என்னுள் பல கேள்விகள் எழுந்தன.  

என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலும் பயத்திலும் மணமேடையில் கொலைகாரனின் பக்கத்தில் அமர்ந்தேன். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *