கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 8,301 
 

முதல் இரவுஅனு மொத்த உடம்புக்கும் ஓய்வு கொடுத்துக் கட்டிலில் படுத்திருந்தாள்.உடம்பில் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது மணப்பெண் வாசனை. அறை எங்கும் கல்யாண வாசனையும் பரவி இருந்தது.

அட்டெண்டன்ஸ் நோட்டுகளில் மட்டுமே அழகேசன் என அழைக்கப்பட்டு ஊரெல்லாம் செல்லமாக அழகு என்று அழைக்கப்படும் அழகுக்கும், அனுவுக்கும் இன்று காலை 9:15 மணி முகூர்த்த நேரத்தில்தான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறைவேறியது.

கல்யாணத்துக்காக வந்து மத்தியானத்திலிருந்து ஓவராக சரக்கு அடித்து மட்டையான தன் நண்பனை பாதுகாப்பான ஒரு வீட்டில் படுக்க வைத்துவிட்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தான் அழகு. அனு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த டேபிளின் மேல் விலை உயர்ந்த பட்டுப் புடவையும், ஜாக்கெட்டும், நகையும், பூவும் ஒரு குப்பை மேட்டைப் போல குவிந்து கிடந்தன.

கால் முட்டி தெரியும்படி அனுவின் நைட்டி மேலே ஏறியிருந்தது. அனு உட்பட ஒழுங்கு இல்லாமல் கிடந்த அறையை சற்று நேரம் பார்த்துவிட்டு விளக்கை அணைத்த அழகு, கட்டிலில் மிச்சமிருந்த இடத்தில் படுத்தான். பழக்கப்படாத கட்டிலில் படுத்திருக்கும் அனுவுக்கும், இனிமேல், தான் பழகப் போகும் பெண்ணின் பக்கத்தில் படுத்த அழகுக்கும் இதுதான் முதல் ராத்திரி.

தூக்கம் வராததால் வெறு மனே கண்ணை மூடியபடி படுத்திருந்தான். அனு எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தாள். தண்ணீர் சலசலப்பு அடங்கியதும் திரும்பவும் வந்து கட்டிலில் ஒருக்களித்து படுத்தாள்.

இருட்டாக இருந்தாலும் புலப்படும் அளவுக்கான வெளிச்சம் இருந்தது. அனு சுவரைப் பார்த்தபடியும், அழகு விட்டத்தைப் பார்த்தபடியும் மௌனமாகப் படுத்திருந்தனர். மற்றபடி தூரத்திலிருந்து கேட்பதைப் போல கேட்கும் குறட்டை சத்தமும், ஃபேன் சத்தமும், கடிகாரத்தின் டிக் டிக் சத்தமும்தான் அந்த அறையின் மௌனத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது.

அனுவோடு பேசவேண்டுமே …அவளை எழுப்பலாமா? வேண்டாமா?

வெகுநேர யோசனைக்குப் பின் எழுப்பி விடலாம் என்னும் முடிவுக்கு வந்தான். தயங்கிய விரல்களால் அனுவை லேசாகத் தொட்டான். அனு ஏதோ தொடுதலுக்குக் காத்துக் கொண்டிருந்தவளைப் போல நேரத்தை வீணாக்காமல் அடுத்த கணமே அழகை நோக்கி திரும்பிப் பார்த்தாள். “உங்க கூட பேசணும்…” என்றான். அனு எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

“நான் உங்க கூட பேசணும். ஏன்னா என்னப்பத்தி நீங்க முழுசா தெரிஞ்சிக்கணும். எதையும் எனக்கு மனசில வச்சிக்கத் தெரியாது. உங்ககிட்ட நான் உண்மையாவும் நேர்மையாவும் இருக்கணும்னு நினைக்கிறேன்…” என்றபடி அழகு சொல்லத் தொடங்கினான்…நான் ஒரு பொண்ண காதலிச்சிட்டு இருந்தேன். அவ பேரு தீபிகா. கண்ணுதான் அவளோட பெரிய அழகே. எப்பவுமே கண்ணுக்கு மை தீட்டி யிருப்பா. எல்லா ட்ரெஸ்ஸும் கொஞ்சம் உடம்ப ஒட்டுன மாதிரிதான் போடுவா. தீபிகா மாதிரி என்னை யாருமே லவ் பண்ணியிருக்க மாட்டாங்க. எனக்கு ஒண்ணுனா அப்படியே துடிச்சிப் போயிடுவா.

அப்படித்தான் ஒரு நாள் எனக்கு நைட்ல திடீர்னு வயிறு வலி வந்துச்சு. என் நண்பன் அவளுக்கு போன் பண்ணி சொல்லிட்டான். அப்ப நான் பேசுற நிலமைல இல்ல. தீபிகா என் நண்பன்கிட்ட அழுதுகிட்டே சொன்னாளாம்… ‘மனோகர், அழக பார்த்துக்கோ. அவனால சின்ன வலியகூடத் தாங்கிக்க முடியாது’னு.

தீபிகா என்கிட்ட எதையும் மறைச்சதில்ல. எங்களுக்குள்ள அந்தரங்கம்னு எதுவும் இருந்ததில்ல. பீரியட்ஸ் நேரத்துல தாங்க முடியாத வலி அவளுக்கு இருக்கும். தொப்புளுக்குக் கீழ இழுத்துப் புடிக்குமாம். வலி தாங்க முடியாம என் ஆறுதலுக்காக எத்தனை மணி ஆனாலும் கால் பண்ணி பேசிருவா. விடிய விடிய போன்ல பேசிட்டு இருப்போம். அந்த இரவு முழுக்க எங்களுக்கு வெட்கம் இல்லாத இரவா கழியும்.

ஒரு நாள் ரெண்டு பேரும் பூங்கா போயிருந்தோம். வழக்கமா வெளியில போகும் போது நிறைய போட்டோ எடுத்துக்குவோம். இத உங்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியல… இருந்தாலும் சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கிட்டதையும் போட்டோ எடுத்துக்கிட்டோம்.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும். ரயில் ரோடு பக்கத்தில ஒரு இருட்டான பாதை. ஆள் நடமாட்டம் இல்லாத இடம். கொஞ்சம் பயமாதான் இருந்தது. நாங்க ரெண்டு பேரும் கையைக் கோர்த்து நடந்திட்டு இருந்தோம். தீபிகா அந்த நேரத்தில சொன்னா… ‘அழகு, சத்தியமா நான் உன்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…’

ரெண்டு பேருக்குமே எங்க வாழ்க்கைய பத்தி பெரிய கனவு இருந்தது. எங்களோட குழந்தைய எந்தப் பள்ளில சேர்க்கணும்… என்ன பேரு வைக்கணும்… வீட்டு வாசலுக்கு எந்த கலர்ல மிதியடி வாங்கணும்… மாசத்துக்கு ஒரு முறைதான் நான் பீர் குடிக்கணுமாம். கல்யாணத்துக்கு அப்புறம் சிகரெட் பிடிக்கக் கூடாதாம். இது மட்டும் முடியாத காரியம்னு அந்த நேரத்தில சொல்லியிருக்கேன்.

இப்படி வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களையும் பத்தி முன்கூட்டியே பேசி வைச்சிருந்தோம். ஒரு கட்டத்துல தீபிகாதான் என் வாழ்க்கை, தீபிகாவுக்கு நான்தான் வாழ்க்கைங்கிற முடிவுக்கு வந்திருந்தோம். எந்த அளவுக்கு அன்பா இருக்கமோ அந்த அளவுக்கு சண்டையும் வரும். சண்ட வரும் போது கெட்ட வார்த்தை எங்களுக்குள்ள சாதாரணமா வந்துட்டுப் போகும். அப்ப எல்லாம் சண்ட போடும்போது கெட்ட வார்த்தை சாதாரணமா வந்து போற மாதிரி அன்பும் சாதாரணமா வரணும்னு நினைச்சுப்பேன்.

நாங்க காதலிச்ச மூணு வருஷத்துல எவ்வளவோ இடங்களுக்குப் போயிருக்கோம். நாங்க போன ஒவ்வொரு இடத்துக்கும் பெரிய கதைகள் இருக்கு. அந்தக் கதைகள்ல சண்டைகளும், காதலும் நிரம்பியிருக்கும். நாங்க ரெண்டு பேரும் சந்திக்கிறபோதெல்லாம் புத்தகங்களையும், பரிசுப் பொருட்களையும் கொடுத்துக்குவோம். கூடவே அந்தப் பரிசுப் பொருட்களைப் போல ஓரிரு முத்தங்களையும் கொடுத்துக்குவோம்.

இப்படித்தான் ஒருநாள்னு தீபிகாவைப் பத்தி சொல்லும்போதெல்லாம் சொல்றேன் இல்லையா… அப்படித்தான் ஒவ்வொரு நாளும் எங்களுக்குள்ள வந்து போயிருக்கு.ஆனா, இப்ப நான் சொல்லப் போற ஒருநாள்தான் எங்கள் கடைசி நாள்னு நினைக்கிறேன். குளிரான அந்த மலை கிராமத்துக்கு தீபிகாவை வரச் சொல்லியிருந்தேன். அவளும் வந்தா. வழக்கம்போல நாங்க சந்திக்கிறப்ப என்னவெல்லாம் பேசுவோமோ அதையெல்லாம் பேசினோம். பசி எடுத்தது. மதிய உணவையும் சாப்பிட்டோம்.

அந்த நேரத்தில் எனக்கு அப்படி தோணியிருக்கக் கூடாது… ஆனாலும் கேட்டுட்டேன். ‘தீபிகா, நாம ரூம் எடுக்கலாமா?’

அவ முகம் மாறிடுச்சு. மவுனமா இருந்தவ… நான் கெஞ்சினதும் சம்மதிச்சா. பாதுகாப்பான இடத்துல ரூம் எடுத்தோம். அப்புறம்… எல்லாம் நடந்தது…
‘‘எல்லாம்னா…?’’ அனு கேட்டாள்.‘‘எல்லாம்தான் அனு…’’ சொன்ன அழகு சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு பெருமூச்சுடன் மீண்டும் சொல்லத் தொடங்கினான்.

‘‘மெல்ல மெல்ல தீபிகாவுக்கும் எனக்கும் சண்டையும் சந்தேகமும் அதிகரிச்சது. தீபிகா வீட்ல அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செஞ்சாங்க. அவளை திருமணம் செஞ்சுக்க என்னால முடிஞ்சவரை முயற்சி செஞ்சேன். ஆனா…

அவ குழந்தை மாதிரி. ரொம்ப நல்லவ. என்ன செய்ய… குடும்பச் சூழல். அவளால எதுவும் செய்ய முடியலை. தன் புருஷனோட சினிமாவுக்குப் போறப்ப, வண்டில போறப்ப, சாப்பிடறப்ப, அப்புறம்… எல்லா இடங்கள்லயும் என் நினைவு அவளுக்கு வருமானு அப்பப்ப யோசிப்பேன்…’’சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் அனுவை நோக்கித் திரும்பினான்.

‘‘என்னை மாதிரியே நீயும் வெளிப்படையா இருக்கணும்னு நினைக்கறேன். ஏன்னா எல்லாரையும் நான் சமமாதான் பார்க்கறேன். சொல்லு அனு… தீபிகாவுக்கு என் நினைவு வரும்னு சொன்னேனே… அப்படி உனக்கும் யாராவது நினைவுக்கு வர்றாங்களா..?’’ கேட்ட அழகுவை பளாரென கன்னத்தில் அறைந்துவிட்டு அனு கட்டிலில் படுத்தாள்!

ஆமாவா இல்லையா..?

இந்த வினாதான் பாலிவுட்டை குடைந்து கொண்டிருக்கிறது.இந்தித் திரையுலகின் தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான பர்ஹான் அக்தர், மாடலும் பாடகியுமான ஷிபானியைக் காதலிப்பதாக ஊர் முழுக்க பேச்சு.இருவரும் அப்படி எதுவும் இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்தார்கள்.இந்நிலையில் சமீபத்தில் இருவரும் மெக்சிகோவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் ‘சும்மா’ வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஓரளவு நாகரீகமாக இருக்கும் படம் இதுதான்!இப்பவாவது சொல்லுங்கப்பா… ஆமாவா இல்லையா..?!

– ஏப்ரல் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *