முட்டையின் நிறம் கருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 3,278 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கெண்டாங் கர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பலவண்ணக் கனவுகளைச் சுமந்த பெண்கள் வண்ணத்துப் பூச்சிகளாகக் காத்திருக்க, அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற கடமையுணர்வோடு தாதியர்கள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார்கள்..

டாக்டர். சத்தியநாராயணன் எனப் பெயர் தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பவ்வியமாக அமர்ந்திருந்தனர். ரம்யாவுக்குச் சிறிது கலக்கமாகவே இருந்தது. மருத்துவரின்மேல் பதித்த கண்களை நகர்த்தி அம்மா இருக்கும் பக்கம் திருப்பினாள். அம்மாவின் விழிகள் மருத்துவருக்குப் பின்னால் இருந்த மேசையில் விளையாடிக்கொண்டிருந்தன. மேசையின் நடுவில் கண்ணாடிப் பேழைக்குள் அழகான வேலைப்பாடுகள் கொண்ட முட்டை பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. மகப்பேறு மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய அரிய சாதனைகளுக்காகவும், ஆய்வுகளுக்காகவும் தென் கிழக்கு ஆசியாவின் செயற்கைக் கருத்தரித்தல் ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டிருந்தது.

“காங்கிராட்ஸ்! இட்ஸ் பாசிட்டிவ்” தெற்றுப்பல் தெரிய வெற்றிச் சிரிப்போடு இரத்தப் பரிசோதனை முடிவுகள் அச்சடித்த அறிக்கையை ரம்யாவிடம் நீட்டினார் டாக்டர் சத்தியநாராயணன்.

சட்டெனப் பொழிந்த மழையில் ஈரமான உச்சி மரக்கிளையைப்போல உணர்ந்தாள் ராம்யா. அம்மாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள். அம்மாவின் கைச் சூடு, நடுங்கும் அவளது இதயத்துக்குக் கதகதப்பாக இருந்தது.

தனது கணினியில் சில குறிப்புகளைப் பொறுமையாகத் தட்டச்சு செய்து, உடனே அதை அச்சு எடுத்து, அறையின் ஓரத்தில் அம்மா, பெண் இருவரையும் குறுகுறுவென்றுப் பார்த்துக்கொண்டிருந்த தனது உதவி தாதி கிரேசியிடம் நீட்டினார்.

“மிஸஸ் ரம்யா, உங்கள் கணவரிடம் என் வாழ்த்துகளைக் கூறுங்கள், அடுத்தமுறை வரும்போது மேலும் சில பிரத்யேகப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் வரவேற்பறையில் காத்திருங்கள், கிரேஸ் மற்ற விவரங்களை உங்களுக்கு விளக்குவார்”

புன்னகையுடன் விடைகொடுத்த மருத்துவர் அவர்கள் இருவர் கண்களுக்கும் எம்பெருமான் சத்திய நாராயண மூர்த்தியைப்போல் காட்சியளித்தார்.

மருத்துவமனை மருந்தகத்தில் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் குமாருடன் தொடர்புகொண்டாள்.

“குமார், ‘ரிசல்ட் ஈஸ் பாசிட்டிவ்.’ டாக்டர் இப்போதான் உறுதிப் படுத்தினார்” குரலைத் தாழ்த்தி கீச், கீச்சென்று உற்சாகத்தோடு பேசும் ரம்யாவைப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இரசித்துக்கொண்டிருந்தாள் கௌரி.

“காட்! உண்மையாகவா, அம்மா என்ன சொன்னார்?”

“எஸ், எஸ்! உண்மைதான், அம்மா இங்கேதான் இருக்கார், நீங்களே பேசுங்க…” கௌரி மறுப்பு தெரிவிக்கும்முன்பே டக்கென்று கைப்பேசியை அவளிடம் நீட்டினாள்

“சொல்லுங்க மாப்பிள்ளை” அம்மா பூரிப்போடு பேசிக்கொண்டே போனார்.

ஒரு குழந்தைக்காக ஏங்கிய நாட்கள் நினைவுத்திரையில் வழுக்கிக் கொண்டு வந்தது ரம்யாவுக்கு. மாதவிலக்குத் தள்ளிப் போகும்போதெல்லாம் கர்ப்பம் தங்கியிருக்குமா என்ற சந்தேகத்தோடு வராத வாந்தியையெல்லாம் கற்பனை செய்வாள். வருவதுபோல ஆவலோடு மருந்தகத்திலிருந்து ‘செல்ப் பிரேக்னன்சி டெஸ்ட் கிட்’ (Self Pregnancy Test Kitn) வாங்கி, சுய பரிசோதனை செய்துகொள்வாள், வழக்கமான ஒற்றைக் கோட்டுக் குறியீட்டைப் பார்த்து உடைந்து போவாள். ஏமாற்றத்தை மறைக்க ஷவரைத் திறந்து அதனடியில் பலமணிநேரம் நிற்பாள். ஷவரின் தண்ணீரோடு அவளது கண்ணீரும் கரைந்துபோகும்.

அவர்கள் இருவருக்கும் மருத்துவ ரீதியாக எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலே கருத்தரிக்க இட்டுச்செல்லும் என்றும் அறிவுறுத்தி நம்பிக்கையும் அளித்த மருத்துவர்களின் வாக்கும் பொய்த்துப்போனது. எல்லாவிதப் பரிசோதனைக்கும் தன்னையும் குமாரையும் உட்படுத்தி பணம் விரயமானதுதான் மிச்சம்.

சில வருடங்களுக்குப் பிறகு காய்க்காத மரத்தில் பூத்ததுபோல ரம்யா கருவுற்றாள். வழக்கத்துக்குமாறாக அன்றைய சுய பரிசோதனையில் இரண்டு ரண்டு கோடுகள் காண்பித்து அவளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. மறுநாளே குமாரையும் அழைத்துக்கொண்டு மருத்துவரைச் சென்று பார்த்தாள்.

கர்ப்பம் உறுதி என்பது தெரிந்ததும் தெரிந்ததும் இருவரும் ஆனந்தக் கடலில் மிதக்கலாயினர். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடுவதற்குக் குமார், ரம்யாவை சிங்கப்பூர் ஃப்ளை ஓவருக்கு அழைத்துச் சென்றான். இரவு உணவு, பூங்கொத்து மற்றும் அவளுக்குப் பிடித்த உயர்தர சாக்லேட்ஸ் என வாங்கிக்கொடுத்து அவளைக் கொண்டாடினான்.

கர்ப்பம் உறுதிப்படுத்திய இரண்டு வாரங்களும் கற்பனைகளிலும், கனவுகளிலும் ஆனந்தமாகக் கழிந்தன. அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றில் ஒரு பக்கமாக வலி இருப்பதை உணர்ந்தாள். ஒருவேளை சூட்டு வலியாக இருக்கும் என்று அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குளியலறையில் நுழைந்தபோதுதான் உள்ளாடையில் இரத்தக் கசிவு இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள். கணநேரமும் தாமதிக்காமல் குமாரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.

இவர்கள் மகிழ்ச்சியில் யார் கண் பட்டதோ, ‘இது ‘எட்டோப்பிக் பிரக்னன்சி’ (Ectopic Pregnancy), கரு கர்ப்பப்பைக்கு வெளியே (fallopian tube) இருக்கிறது என்றும், உடனடியாக கருவை அகற்றவேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார். லெபரஸ்கோபிக் என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் ரம்யாவின் உயிரைக் காப்பற்ற முடிந்த மருத்துவரால் அவளது சேதமடைந்திருந்த உற்பத்திப்பைகளில் (Ovary) ஒன்றைக் காப்பாற்ற முடியாமல் போனது.

உடைந்துபோன ரம்யாவைத் தேற்றுவதற்குக் குமாரும் கௌரியும் மிகவும் சிரமப்பட்டனர். கருமுட்டை கர்ப்பத்திற்கு வெளியே, அதாவது பாலோப்பியன் டுயூப்பில் எப்படி வளரும் என்ற அவளது கேள்விகளுக்கு மருத்துவர்களிடம் தெளிவான பதிலில்லை. கூகிளில் இதைப் பற்றிய விவரங்களைத் தேடிப் படிக்கலானாள். இதுதான் காரணம் என்று எந்த இணையத்தளங்களாலும் குறிப்பிட்டுக் கூறமுடியவில்லை. குழம்பிய மனநிலையில் அவளால் தெளிவாகச் சிந்திக்கவும் முடியவில்லை.

உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று வந்தால் அன்றைக்கு வீட்டில் பீங்கான் பொருட்கள் உடைந்து போகும். “வேண்டுமென்றே சாங்கியம் செய்யவிடாமல் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்” என்று விம்முவாள், பிறகு அருகில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அவற்றைத் தூக்கி எறிவாள்.

அவளை அமைதிப்படுத்தும் முயற்சியில் தொடர் தோல்விகளைச் சந்தித்த குமார் ஒருமுறை பொறுமையிழந்து, அவளது சிண்டைப் பிடித்து ஓங்கி அறையவும் செய்தான். அவர்கள் இருவருக்கும் சண்டைகளுக்குக் நடக்கும் கௌரிதான் பஞ்சாயத்து. எப்படியாயினும் ரம்யாவின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும் என்ற முயற்சியில் கௌரி அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக விடுமுறைக்கு அனுப்பி வைத்தாள்.

சுற்றுப்பயணம் முடித்து வந்ததும் ரம்யா இயல்பான சிறிது காலம் புதிய நிலைக்குத் திரும்பியிருந்தாள். வண்டியைப்போல நாட்கள் தடையில்லாமல் ஓடின. அவள் சும்மா இருந்தாலும் அவளைச் சுற்றி இருப்பவர்கள் அவளைச் சும்மா இருக்கவிடவில்லை. எம்.பி.பி.எஸ். படிக்காதவர்க ளெல்லாம் வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார்கள். இதைச் செய், அதைச் செய், இப்படிச் செய், அப்படிச் செய் என்று நண்பர்கள் சொன்ன எல்லாவற்றையும் முயற்சித்தும் பலனில்லை.

குமார் ஆரம்பத்தில் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தாலும், நாள் ஆக ஆக அவளது செய்கைகள் அவனுக்கு அத்துமீறுவதாகத் தெரிந்தன. அவனும் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானான்.

“அடச்சீ, ஒரு குழந்தைக்காக எவ்வளவு அவமானங்கள், பேசாம ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கோ, என்னை விட்டுரு” முடிவாகக் கூறிவிட்டான் குமார். அவளைத் தவிர்ப்பதற்காகப் பணியிடத்தில் வழங்கிய புதிய இந்தோனீசியா ‘புரோஜெக்ட்டை’ ஏற்றுக்கொண்டான். அதனால் அவன் அடிக்கடி இந்தோனீசியா சென்று வர வேண்டியிருந்தது. சிலநேரங்களில் மாதக்கணக்கில் அங்கேயே தங்கியும் விடுவான்.

“ரம்யா, ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததலிருந்து ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” அம்மாவின் கேள்வி ரம்யாவை நினைவுப் புத்தகத்தை மூடச் செய்தது.

“அம்மா, கடவுள் கருணையானவருதான்னு நிரூபிச்சுட்டார். பதினைஞ்சு வருஷத்திற்குப் பிறகு, இப்போதான்…”

“பழசையெல்லாம் மறந்துடு. அடுத்து, ஆரோக்கியமான சாப்பாடு, மத்தபடி வீட்டைச் சுத்தப்படுத்தி குழந்தைக்கான அறையைத் தயார் பண்ணணும், இதுலதான் நாம கவனம் செலுத்தணும், என்ன சரியா?”

“மம்மி சொன்னா சரியாத்தான் இருக்கும், ‘லவ் யூ’ அம்மா” ரம்யா அம்மாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து

அம்மாவின் கன்னத்தில் மூக்கை உரசி, தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

கௌரி இளவயதில் ளவயதில் கணவனை இழந்தபோதுகூட தைரியமாக இருந்து ரம்யாவை வளர்த்தாள். ஆனால் ரம்யா ஒரு குழந்தைக்காக அவளையும் அவள் உடலையும் வருத்திக்கொண்டது மட்டுமல்லாமல் அவளுடைய காதல் திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியபோது பயந்துபோனாள். குமாருடன் நடந்த சண்டையின்போது ஒருமுறை ரம்யா பழம் வெட்டும் கத்தியால் தனது இடது மணிக்கட்டைக் கீறிக்கொண்டபோதுதான் வேறு வழியே இல்லாமல் ரம்யாவுக்குத் துணையாக அவர்கள் வீட்டுக்கே குடிவந்துவிட்டாள். குமார் இந்தோனீசியாவிலிருந்து திரும்பி வரும் நாட்களில் மட்டும் கௌரி தன் வீட்டிற்குச் சென்றுவிடுவாள். ஏனைய நாட்களிலெல்லாம் ரம்யாவுடன்தான் செலவழிப்பாள்.

“வாங்கம்மா, என்.டி.யு.சிக்குப் போய்ச் சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம்” துள்ளலோடு கதவைத் திறக்கும் மகளின் வாழ்க்கை, வழக்கத்திற்கு மாறும் நாட்களை எண்ணிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தாள் கௌரி.

“அம்மா! இங்கே பாருங்க, கைக்குழந்தையோட குட்டிச் சட்டை, எவ்வளவு கியூட்டா இருக்கு. அட! இதப் பாருங்க, எவ்வளவு குட்டி சோக்ஸ், அம்மம்மா, மாறிவிட்டிருந்த குழந்தையாகவே வாங்குவோமா?” ரம்யாவைப் பார்க்க கௌரிக்குச் சிரிப்பு வந்தது.

“பாரு ரம்யா, குழந்தை பிறக்கட்டும், அப்புறம் வாங்குவோம்.”

“அம்மா, இந்தப் பால் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது என்று படிச்சு இருக்கிறேன் இரண்டு பேக்கட் வாங்கட்டுமா?”

“ரம்யா, விலையைப் பார்த்தியா? இது வெறும் விளம்பரத்துக்காகச் சொல்றது, அந்தக் காலத்துல ஏது இந்த மாதிரியான ‘ஸ்பெஷல்’ பால்? சாதாரணப் பால் குடிச்சுதான் நீ பிறந்தே, மறந்திடாத..”

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுங்க, சரி, இதைப்பாருங்க, ‘ஸ்ட்ரெச் மார்க் கிரீம்’, வயிற்றுக்குத் தேய்ப்பது, அப்போதான் ‘பேபி’ பிறந்து வயிறு சுருங்கும்போது ரொம்ப கோடுகள் தெரியாது” அம்மா சொல்லச் சொல்லக் கேட்காமல் கர்ப்பவதிகளுக்குத் தேவையான பொருட்களை ஒரு கூடையில் அடுக்கி, பணம் செலுத்தப் போனாள்.

“நீங்கள் இருவரும் சிஸ்டர்சா?” ‘கேஷியர் பில்’ கொடுக்கும்போது கேட்டதை நினைத்து வீட்டுக்கு வந்தும் இருவரும் விழுந்து விழுந்துச் சிரித்தனர்.

“உங்களை என்னோட தங்கச்சியான்னு கேட்டது கொஞ்சம் ஓவரா இருந்தது” என்று வாய்விட்டுச் சிரித்தாள் ரம்யா. வெகு நாட்களுக்குப் பிறகு அவள் இப்படிச் சிரிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டாள் கெளரி.

“அம்மா, என் கண்ணே பட்டுடும்போல இருக்கு, இருங்க, உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடுறேன்” ரம்யா உடனே சமையலறைக்குப் போனாள். போனவேகத்தில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து அம்மாவுக்குத் திருஷ்டி கழித்தாள்.

ரம்யாவின் குறும்பை இரசித்துவிட்டு சமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டே சமையலறைக்குள் செல்லும் அம்மாவை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. அப்போது, அவளுக்குக் குமாரின் ஞாபகம் வந்தது. குமாருக்குத் தன்னால் எவ்வளவு தொல்லை என்று நினைத்து வேதனைப்பட்டாள். கண்ணில் திரண்ட நீர்த்துளிகள் தரையைத் தொடுமுன், கைப்பேசியை எடுத்து குமாரின் எண்களைச் சுழற்றினாள். மறுமுனையில் குமாரின் குரல் அவரசமாக ஒலித்தது.

“சாரி குமார், ‘பிஸியா’ இருக்கற நேரத்திலே கூப்பிட்டுவிட்டேனா?”

“அவசரமா ஒரு மீட்டிங்குக்குப் போய்ட்டு இருக்குறேன். என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு, அங்கே எல்லாம் ‘ஓகே’ தானே?”

“இங்கே ஒரு பிரச்சனையும் இல்லே, உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

மறுமுனையில் மௌனம்.

“ஐ ஐ லவ் யு குமார், ரொம்ப உங்க மனச நோகடிச்சுட்டேன், வெரி சாரி குமார்” ரம்யா விசும்புவது குமாரின் இதயத்தையும் பிசைந்தது.

“ஏய், லூசு மாதிரிப் பேசாத, ‘ஐ டூ லவ் யுடா’, இந்த மாதிரி நேரத்திலதான் நீ தைரியமா இருக்கணும்…”

“டியூ டேட் செப்டம்பர் ஏழுன்னு சொல்லியிருக்கிறார் டாக்டர், ஆகஸ்ட் கடைசிக்குள்ளே வந்துருங்க, ‘பேபி’ பிறக்கும்போது நீங்களும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.”

“ஒரு மாசத்துக்கு முன்னாடியே லீவு போட்டுட்டேன். ஆகஸ்ட் பதினைஞ்சுல சிங்கப்பூர்ல இருப்பேன் ரம்யா. இப்போ அவசரமா போகணும், ராத்திரி கூப்பிடுறேன்” குமார் தொடர்பைத் துண்டித்தும் ரம்யா கைப்பேசியை காதிலேயே வைத்திருந்தாள். பெருமூச்சு ஒன்றே அப்போது அவளுக்குத் துணையாக இருந்தது..

உருளும் காலத்தோடு கருவும் குழந்தையாக உருமாறி நெருங்க நாள் நெருங்க வளர்ந்துகொண்டிருந்தது. ரம்யாவுக்கும் கௌரிக்கும் சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், ‘டாக்டர் ஸ்கேன்’ படங்களைக் காண்பித்து “உங்க ‘பேபி’யோட கன்னம் பெரிசா புசுபுசுன்னு இருக்கு” என்று கூறி, கருமை படர்ந்த வெண்புகையைக் காட்டியபோது அவர்கள் பூரித்துப் போனார்கள்.

“முப்பத்தைந்து வாரங்கள் முடியப்போகிறது, னிமேல் வாரம் ஒருமுறை பரிசோதனைக்கு வாங்க, ‘பேபி’யோட தலை இன்னும் கீழ் நோக்கி இறங்கல, அடுத்த வாரங்களில் ‘பொஸிஸன்’ மாறுதான்னு பார்ப்போம். மற்றபடி எல்லாம் ‘நார்மலா’ இருக்கு” மருத்துவரின் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் அவர்களுக்கு ஊட்டமருந்தாக இருந்தன.

இதற்கிடையில் குமார் ஒருமுறை சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது வலுக்கட்டாயமாக அவனை அழைத்துக் கொண்டுபோய், குழந்தை படுப்பதற்காகத் தொட்டில், பால்புட்டி, பவுடர், குளிக்கும் சோப், ஷாம்பூ என்று கண்ணுக்குத் தெரிந்த பொருட்களை எல்லாம் வாங்கி குழைந்தைக்கான அறையைத் தயார் செய்துவிட்டாள்.

அவன் இந்தோனீசியாவிற்குத் திரும்பிய பின்னும் அவள் குழந்தையின் அறையை அலங்கரிப்பதில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவழித்தாள்.

“ரம்யா, அலங்கரித்தது போதும், வந்து ஒரு வாய் சாப்பிடு” அறைக்குள் வந்து ரம்யாவின் பின்னால் நின்று மகளின் கைத்திறமையைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தாள் கௌரி.

“அம்மா, சட்டையெல்லாம் தண்ணீர், தரையெல்லாம் தண்ணீர், எப்படி வந்தது?” திடுக்கிட்டு வினவினாள் ரம்யா. கௌரியும் தரையெல்லாம் வழிந்துகிடக்கும் நீரைப் பார்த்து பயந்துவிட்டாள்.

“எனக்கும் தெரியல ரம்யா, ஒருவேளை பனிக்குடம் உடைஞ்சிருக்குமோ? வா, நாம உடனே ஆஸ்பத்திரிக்குப் போவோம்” பதற்றத்தோடு இருவரும் கே.கே. மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனை கண்ணுக்குத் தெரியும்வரை ரம்யா கைப்பேசியில் கலவரமாகக் காணப்பட்டாள். இணையத்தைத் தட்டிவிட்டுப் பனிக்குடம் எதனால் உடைகிறது, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன என்ற விளக்கங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கத் தொடங்கினாள்.

“பயப்படாதே ரம்யா, பனிக்குடம் உடைவது இப்போது சகஜமான நிகழ்வுதான், உடனே மருத்துவ மனைக்குப் போய்ட்டோம்னா பிரச்சனைகள் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்” கௌரி கூறிய விளக்கம் ரம்யாவின் காதுகளை எட்டவில்லை.

மருத்துவமனையில் கருப்பைக் கழுத்து விரிவடைந்தி ருந்தாலும் குழந்தையின் தலை மேல்நோக்கி இருப்பதால் உடனே ‘சிசேரியனுக்குத்’ தயாராகும்படிக் கூறி தன் பணியைச் செய்யக் கிளம்பினார் டாக்டர் சத்தியநாராயணன்.

தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஏசியின் உதவியால் அந்த அறை சிலுசிலுவென்று இருந்தது. வியர்த்துக் கொட்டியது. இருந்தும் ரம்யாவுக்கு மனதுக்குள்ளேயே ராமநாமம் ஜெபிக்க ஆரம்பித்தாள். கனமான இமைகளைத் திறக்க முயற்சித்துத் தோல்வியைத் எவ்வளவு நேரம் தழுவினாள். பிரக்ஞையற்றவளாக இருந்தாள் என்று தெரியவில்லை, யாரோ அழைக்கும் குரல் கேட்ட பிறகுதான் கண்களைத் திறந்தாள்.

‘வாழ்த்துகள், ‘ஆபரேஷன் சக்சஸ்’, பெண் குழந்தை பிறந்திருக்கிறது” தேவதையைப்போலச் சொல்லிச் சென்ற தாதிக்கு நன்றி சொல்லக்கூடத் தோன்றாமல் கண்ணீர்த் திரைக்குப் பின் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே குமாரின் நினைவு வந்தது. தானிருந்த குழப்பத்தில் குமாருக்குத் தகவல் சொல்ல மறந்துபோனது நினைவுக்கு வந்தது. கைப்பேசியை எடுத்துக் குமாருடன் தொடர்புகொண்டாள்.

“குமார்….நீ அப்பாவாயிட்டே, நமக்கு ‘பேபி கேர்ள்’ பிறந்திருக்கு”

“என்ன சொல்றே, ‘டேட்’ இன்னும் இருக்குல்ல?” பதறிய குமாருக்கு ரம்யா நடந்த விவரங்களை விரிவாகக் கூறினாள்.

“அம்மா?” குமார் தயக்கத்துடன் கேட்டான்

“இன்னும் ஆபரேஷன் தியேட்டரில்தான் மயக்கமா இருக்காங்க, ஒருமணி நேரத்தில் அவங்களுக்கு மயக்கம் தெளிந்ததும் பார்க்கலாம்னு ‘நர்ஸ்’ சொன்னாங்க” மறுமுனையில் அமைதி.

அவரது உடலை வருத்தி, தனக்கென ஒரு வாரிசைப் பரிசாக அளித்திருக்கும் அம்மாவின் தியாகத்திற்கு முன்னால் வேறெதுவும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குமாரின் விந்தைப் பாதுகாத்து, சரியான நேரத்தில் அம்மாவின் கர்ப்பப்பையில் செலுத்தி, வெற்றிகரமாக இன்னொரு டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கித் தந்த மருத்துவர் சத்யநாராயணனின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்போல் இருந்தது. அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. மெல்லிய விசும்பல்கள் கரை தொடும் சிறு அலைகளென மேலெழுந்து மௌனத்தில் கரைந்து போயின.

இந்தப்பக்கத்தில் மௌனமாகக் கைப்பேசியை அணைத்த குமார் தன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராகுலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்தான்.

“உனக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா பிறந்திருக்கா” என்று குழந்தையின் காதுக்குள்ளே கிசுகிசுத்த குமாரிடமிருந்து பால்புட்டியுடன் தன்னை நோக்கி வரும் தாயிடம் தாவினான் குழந்தை ராகுல்.

– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *